Saturday, December 15, 2007

வாங்கோண்ணா.. வாங்கோண்ணா..!

வணக்கம் என் இனிய தமிழ் மக்களே! இதோ புத்தாண்டு வர தயாராகிவிட்டது! இந்த புது வருஷத்துக்கு நீங்க எங்கேயும் போகப்பேறீங்களா, இல்லை வீட்டிலே உட்கார்ந்து டிவி பார்த்துட்டு பொழுதை கழிக்க போறீங்களா! நமக்கு கொஞ்சம் வெளியூரு பயணம் இருக்கு, அதனாலே உங்களை பார்க்க முடியுமோ என்னமோன்னு தான் இப்ப இந்த பதிவு! அதாவது அந்த காலத்து ராஜா பாட்டுக்கு இருந்த மொவுஸ்ஸே வேறே! அதாவது அவரு ம்யூசிக் போட ஆரம்பிச்ச முத ரொண்டொரு வருசத்திலே வந்த பத்ரகாளிங்கிற படம் நீங்க எத்தனை பேரு பார்த்திருப்பீங்கன்னு எனக்குத் தெரியாது! அப்ப என்ன தான் நல்ல இனிமையான பாடல்களை அப்ப கொடுத்தாலும் அவரு டப்பாங்குத்து பாட்டு தான் போடத் தெரியும்னு சொல்லிக்கிட்டிருந்த காலம் அது! அதை ஊர்ஜிதம் பண்ற மாதிரி இந்த மாதிரி பாடல்கள் வந்துக்கிட்டு இருந்தது! ஏன்னா, அவரு தன்னை இண்டெஸ்ட்ரியுலே ஸ்டெடி பண்ணிக்கிறத்துக்கு இந்த மாதிரி பாட்டுக்கள் தேவை படத்தான் செஞ்சுச்சு, அதானாலே அவரும் இப்படி பாட்டு போட்டுக்கிட்டே இருந்தாரு!

ஆனா ஒரு Irony பாருங்க, இந்த படத்திலே அவரு போட்ட அத்தனை பாடல்களும் அருமையா இருந்து படம் நல்லா ஓடினாலும், இந்த படம் ஓடினதுக்கு பப்ளிசிட்டி என்னமோ இந்த படத்திலே நடிச்சிருந்த நடிகை ராணிச்சந்திரா, படம் பாதி எடுத்துக்கிட்டிருந்தப்பவே தூக்கு போட்டு செத்து போனதாலே, அந்தம்மாவுக்கு ஏற்பட்ட அனுதாப அலையாலே படம் என்னமோ ஓடிச்சின்னு சொல்லி மொத்த கிரடிட்டையும் ராஜாக்கிட்டே இருந்து புடிங்கிட்டாங்க! அந்த அம்மாவும் கொஞ்சம் நல்லா தான் நடிச்சிருந்தது! இல்லேன்னு சொல்றதிக்கில்லை!

ரொம்ப நாளளக்கப்பறம் அந்த படம் பார்க்க ஒரு சான்ஸ் கிடைச்சிது, அதான் அப்ப பட்டி தொட்டி எல்லாம் கிளப்பிக்கிட்டிருந்த வாங்கோண்ணா.. வாங்கோண்ணா.. பாட்டு கொஞ்ச்ம் நீங்க எல்லாம் ரிவைஸ் பண்ணிக்கிறதுக்காக இதோ அந்த பாட்டு!

சரி உங்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!, நம்ம மற்ற கிருத்தவ நண்பர்களுக்கு மெரி கிறிஸ்துமஸ்! வர்ட்டா!

6 comments:

said...

சார்,

வணக்கம்.

ரொம்ப நாள் ஆகிவிட்டது, உங்க பதிவு பார்த்து..!

பாடலிற்கும் பதிவுக்கும் நன்றி!

said...

ஆமாம் சிவபாலன், இப்ப டைம்மே கிடைக்கிறதில்லே, அதான் அதிகம் பதிவு போடறதில்லை!

என்னுடய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

//ராணிச்சந்திரா, படம் பாதி எடுத்துக்கிட்டிருந்தப்பவே தூக்கு போட்டு செத்து போனதாலே,//

நாட்டாமை தீர்ப்பை மாத்துங்க ;-)

ரானி சந்திரா இறந்தது விமான விபத்தில். நடிகர் சிவகுமார் எழுதிய "இது ராஜபாட்டை அல்ல" எடுத்துப் படியுங்கள். தனசினிமா அனுபவங்களை நேர்மையுடன் எழுதியிருக்கின்றார். அதில் ராணி சந்திரா எத்தனை விட்டுக்கொடுப்புக்களோடு (!) திரையுலகத்தில் முன்னணிக்கு வந்தார் என்றும் பத்ரகாளி ஷூட்டிங் நடக்கும் போது அவர் விமான விபத்தில் இறந்ததையும் பதிவாக்கியிருக்கின்றார்.

said...

ஆமாம், அந்த அம்மா இறந்தது விமான விபத்திலே! எல்லாம் வயசானாலே ஞாபக மறதி அதிகம் வந்திடுது பிரபா! அதுவும் அந்த கால நடிகைகள் தூக்கு பட்டியல் அதிக்கம் அதான் இந்தம்மாவையும் அதிலே சேர்த்திட்டேன். பரவாயில்லை சரியா வந்து சரியான தீர்ப்பு கொடுக்க நீங்க இருக்க என்ன கவலை-;) உங்களுக்கும் என்னுடய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

வெ.நாதர்,

ரொம்ப நாளா உங்க கொசு வர்த்திப்பதிவுகளே காணோமே என்று பார்த்தால் "டைட்" ஆகிட்டிங்க போல!

உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்!

நானும் ராணி சந்திரா துர்மரணம் தூக்கு பத்தி சொல்லலாம்னு பார்த்தா , அதுக்கு முன்ன தல கானா சொல்லிட்டார்!(ஆனால் அந்தம்மாவும் பார்க்க நச்சுனு தான் இருப்பாங்க!)

மீண்டும் வாங்கண்ணானு உங்களுக்கே இந்த பாடல் சமர்ப்பணம்! :-))

said...

வவ்வால், ரொம்ப ஆர்வமா நம்ம பதிவை தேடிக்கிட்டிருக்கிற ஆளுங்கள்ள நீங்களும் ஒருத்தர்! ஆனாலும் இப்பெல்லாம் அதிகம் பதிவு போட முடியறதில்லை! இருந்தாலும் புத்தாண்டிலிருந்து முயற்சிக்கிறேன்

கொசுவர்த்திப் பதிவுகள் மீண்டும் தொடரும்-;)