Monday, September 26, 2005

உலக இரட்சகர் பள்ளி

தனபாலா! சும்மா கல்ல எடுத்து அடிச்சி மண்டைய உடச்சது ஞாபகம் இருக்கா! சும்மா தாண்டா நின்னு வேடிக்க பர்த்துட்டு இருந்தேன். நீதான் என்னை சண்டைக்கி வரீயான்னு கேட்ட! பிறவு சண்டைக்கு வந்த்தும், என்னை கீழ தள்ளி வுட்ட. எனக்கு மண்ணுல உழுந்ததும் ஒரே கோவம் வந்ததால் கல்ல எடுத்து உன்னை அடிச்சிட்டு, நான் எங்க பெரியம்மா வீட்டுக்கு ஒடிட்டேன். அதோட எல்லாம் முடிஞ்சி போச்சிடுச்சினு நான் மாடியிலே போயி மூலையில உட்கார்ந்துட்டு இருந்தா, நீ என்னடான, உங்க பெரிம்மா வீட்டு அண்ணனை கூட்டிட்டு வந்து ஒரே ரகளை பண்ணிட்டே. அதுவும் தலையில ஒரே ரத்தத்தோட வந்து ஒரே களபரம் பண்ணே! எதுக்குடா உங்க அண்ணண கூட்டுட்டு வரல. அப்பறம் ந்ம்ம ஃப்ரண்ட்ஸ் ஆனது ஒரு பெரிய கதே! இது நடந்தது நாம ஒன்னாங் கிளாஸ் படிச்சப்பன்னு நினெக்கிறேன். ரெண்டாவ்வுது கிளாஸ்ல இருந்து ந்ம்ம எல்லாம் ஃபிரண்ட்ஸ், நீ, இப்ராகிமு, நான் எல்லாம் ஒன்னா இருக்கிற நம்ம மூணங்கிளாஸ் போட்டவைத் தான் அப்பப்ப பாத்துக்குவேன். நீ கூட கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு இருந்ததை ஞாபகம் வச்சிருக்கியா! அந்த இப்ராஹிம் பயக் கூடத்தான் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு ரொம்ப ஸ்டல்லா நின்னுக்கிட்டு இருப்பான். எனக்கு தான் ஒன்னும் இல்ல அப்போ.

அப்பறம், நாம வீட்டுக்குத் தெரியாம சிஐடி சங்கர் படம் பார்த்துட்டு அப்பறம் வீட்டுல உதை வாங்கினது ஞாபகம் இருக்கா!, அத அப்புறம் ஒருவாட்டி சொல்லுறேன்.

2 comments:

said...

ஹலோ தம்பீ

பாலக்கரை ன்னா திருச்சிலே இருக்கே அதான ,

வலைப்பூவிற்கு வருக வருக என வரவேற்கிறேன்

எப்பயோ டைரியில் எழுத மறந்ததை
இங்க வந்து எழுதுறிகளோ ?

said...

ப்ளாக்கர் ஆரம்பிச்சோன எதையாவது எழுதனுமுனு தோணுச்சி, ஆனா என்ன எழுதறதுன்னு தெரியல. சரி அந்தக் கதை இந்தக் கதை பேசறதவிட நம்ம கதை பேசுவோமுனுட்டுதான். இதோ ஆச்சி பாதி வாழ்க்கை வாழ்ந்தாச்சி, திருச்சி பாலக்கரையிலிருந்து இந்த லாஸ் ஏஞ்சலஸ் வரைக்கும் வந்தது வராதது, போனது, போவாதது, உண்டது, கழிஞ்சதுன்னு எவ்வளவோ இருக்கு. எதை எடுப்பது எதை விடுவது. இதை வேணா மறந்த கதைன்னு வச்சிக்கலாமா? (டைரியில் எழுத) வரணும், அண்ணன் வரணும் இந்த பாலக்கரை பாலன் பார்வையை பார்த்து ரசிக்கணும்!