Wednesday, April 04, 2007

புதிய வார்ப்புகள்- கிராமத்து யதார்த்தமும், காதல்காட்சிகளின் ஆளுமையும்!

புதிய வார்ப்புகள்- இந்த படத்தை பத்தி சின்னதா பாரதிராஜாவின் ஐந்து நட்சத்திரங்கள்னு நான் ஏற்கனவே பதிவு எழுதியிருந்தாலும், சமீபத்திலே இந்த படத்தை இன்னொருவாட்டி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது! ஆஹா இப்ப எதார்த்தம்னு சேரன் எடுத்த தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப் னு இப்ப சிலாகிச்சு சொல்லிக்கிட்டிருக்கோம், ஆனா அந்த காலத்திலே, அதாவது ஒரு 25 வருஷத்துக்கு முன்னேயே இவங்களுக்கு வழிகாட்டியா அழகா படம் புடிச்ச பாரதிராஜாவை இன்னொரு தடவை என்னால திரும்ப நினைச்சு சிலிர்க்காம இருக்க முடியிலே, அதானல இந்த படத்தி ஒரு பாட்காஸ்ட் போட்டேன்! அங்கு அதை ரிலீஸ் ஆக்கிட்டு, இப்ப தான் பதிவு எழுத வந்தேன். அதாவது படத்தை A,B சென்டர்ல முதல்ல ரிலீஸ் பண்ணிட்டு, C சென்டர், அதான் பதிவு போட இப்ப தான் வந்தேன்!

சரி படம் பத்தி சொல்லலாம்! இந்த படம் இப்ப இருக்கிற இளசுங்களுக்கு ரொம்ப பழையப்படம்! ஆனா அந்த காலத்திலே தமிழ் சினிமாவை புரட்டி போட்ட படம். இதனுடய அழகு என்னான்னா இந்த படத்து பாரதிராஜா அமைச்ச திரைக்கதை! அப்பறம் தன்னுடய கோஷ்டியிலே இருந்த பாக்யராஜ்க்கு இதிலே பெரிய லிஃப்ட் கொடுத்த படம், அதாவது பாரதிராஜா 'ஹீரோவா யாரபோட்டு நான் படமெடுத்தாலும் ஒடும்னு' நிரூபிச்ச படம். அப்பறம் வழக்கம் போல பாரதிராஜாவுக்கு கை கொடுத்தது நம்ம ராஜாவோட ம்யூசிக்! அதுவும் சண்முகப்ரியா ராகத்திலே போட்ட பாட்டு, கீழே வீடியோ கிளிப் பாருங்க, சும்மா கலக்கலா இருக்கும்! இந்த பாட்டை தம்பி கங்கை அமரன் எழுதி கொடுத்து ம்யூசிக் போட்டிருந்தாலும், அதுக்கு நல்ல கனவு காட்சியா ரத்தியை ரொம்ப அழகா காமிச்சிருப்பாங்க! இந்த பாட்டை பாடினது அப்ப ராஜா, சும்மா அழகான பாடல்கலை அள்ளி தந்து பாட வச்ச ஜென்ஸி பாடினது, கூட வசந்தா ன்னு இன்னொரு அம்மாவும் பாடி இருப்பாங்க!


இந்த பாட்கஸ்டல சீன் பை சீன் நல்லா பேசி காமிச்சிருக்கேன் அதை போட்டுக் கேளுங்க! அதுவும் பாக்யராஜ் பாரதிராஜா கோஷ்டியிலே சேர்ந்த கதை, கிராமத்து காட்சிகளின் யதார்த்தம், அப்பறம் எப்படி காதல் காட்சிகள்ல அவரின் ஆளுமை இருந்ததுன்னு இரண்டு பகுதியா பாட்காஸ்ட் போட்டிருக்கேன்! இந்த ஈஸ்டர் லீவுக்கு சும்மா கீழே தரவிறக்கம் பண்ணி மெதுவா கேளுங்க! அப்படி டைம் இல்லேன்னா பாட்டை வீடியோல பாருங்க! ஒரு சாம்பிளுக்கு இந்த வசனம் எப்ப எங்க வ்ரும்னு சொல்லுங்க, தெரியலைன்னா பாட்காஸ்ட் கேளூங்க!

"நேரம் ஆக ஆக இருட்டிக்கொண்டே வந்தது!
கானகத்தின் நடுவே நின்றிருந்த அந்த கன்னிப்பெண்ணை தென்றல் தாலாட்ட ஆரம்பித்தது!
ஜில்லென்ற பருவக்காற்று அவள் பருவத்தின் வனப்புகளை தொட்டு எழுப்ப ஆரம்பத்ததும் அவளுடய கண்கள் சற்றே சொருக தொடங்கன!
ஆஹா என்ன அற்புதமான காட்சி, அவள் மேலாடை சற்றே......."

புதிய வார்ப்புகள்-பாரதிராஜாவின் கிராமத்து யதார்த்தம்!


தரவிறக்கம் செய்து கொள்ள இதோ

புதிய வார்ப்புகள்-பாரதிராஜா கையாண்ட காதல் காட்சிகளின் ஆளுமை!



தரவிறக்கம் செய்து கொள்ள இதோ

பாடலை பார்க்க,கேட்க இதோ!

8 comments:

said...

அடுத்து 'முள்ளும் மலரும்' விரைவில்!

said...

வணக்கம்..
உங்களைக் கண்டுபிடிக்கிறதே கஷ்டமாய் இருக்கு..!
நலம் நலமறிய அவா ..!
ஞாபகம் இருக்குத்தானே..?

நான் தான் பதிவுகள்..தாமதமாகப் போடுகிறேன் என்றால்
நீங்களுமா?? :-)


நேசமுடன்..
-நித்தியா

said...

வாங்க நித்தியா, நானும் மற்ற வேலைகளில் மூழ்கியதால் பதிவு எழுத முடிவதில்லை. இதோ இன்னும் சில தினங்களில் பதிவு வெளி வரும். ஆமா நீங்க எங்க திடீர்னு ஆளை காணோம். மயிலிறகாய் வருடும் உங்கள் நினைவுகளை காணோமே!

said...

நான் வந்து விட்டேன்.. இதோ.. வருகிறேன் என்ற உங்களைத்தான்
காணவில்லை.. நலம் நலமறிய அவா..
நேசமடன்..
-நித்தியா

said...

முள்ளும் மலரும்க்காக வெயிட்டிங்..

said...

நான் இந்த படத்தை திருச்சியில் பார்த்த போது எனக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை.அப்ப ரசனை வேறு மாதிரி இருந்ததோ என்னவோ!
ஆனால் பாட்டுகள் மிகவும் அருமையாக கோர்த்து இருப்பார் நமது ராஜா.
நம்ம ராஜா எப்படி கோர்க்கிறார் என்பதை யூடூபில் ஜெ டிவிக்காக பல வீடியோக்களில் உள்ளன்.சிலிர்த்துவிடும்.

said...

அப்பா ரொம்ப நாள் கழிச்சு ஒரு நிகழ்ச்சியை அளித்தமைக்கு நன்றி. ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மாதிரியே இருந்துச்சுங்க. வாழ்த்துக்கள்

said...

ரொம்ப நாளாச்சு...
கொடுத்த பாட்காஸ்ட்டுகளைப் பார்த்திட்டு வர்ரேன்