Friday, March 23, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (மூன்றாம் பகுதி)

இந்த கல்யாணி நம்மலை விட மாட்டேங்கிது! சிலபேருக்கு கல்யாணின்னதும் பீர் ஞாபகம் தான் வரும்! அது நல்ல ப்ராண்ட் இல்லை! அப்ப இந்த கல்யாணி பீர் அடிக்க 5 கிமீனாலும் நடந்து போய் அடிச்சுட்டு வந்த காலங்களை மறக்க முடியலை, ம்.. அதெல்லாம் அறியா பருவம்! திரும்பி வருமா! சரி இந்த ராகங்கள் கதைக்கு வருவோம்! நோய் தீர்க்கும் குணாதிசியங்களை முதல் பகுதியிலே சொல்லிட்டேன். இருந்தாலும் இந்த ராகத்திலே அமைந்த திரைப்பட பாடல்கள் எக்கசக்கமா ஆகிபோனதாலே இந்த மூணாவது பகுதி வரைக்கும் வந்திடுச்சி! பரவாயில்லை இதோட கல்யாணிக்கு மங்களம் பாடியாச்சு. இனி இந்த ராகத்திலே வராது, வேற ராகத்துக்கு வண்டி போயிடும். சரி போன வாரம் ஒரு கேள்வி கேட்டேன் இல்லை, அதுக்கு பதிலு யாருமே பின்னோட்டத்தில போடலை! அப்ப நிறைய பேருக்கு இந்த சங்கீதம் ஞானமில்லையா, இல்லை அதை பத்தி என்னத்தை சொல்றதுன்னு விட்டுட்டீங்களா, இருந்தாலும் நானே சொல்றேன்!

நான் போனவாரம் கேட்ட கேள்வி சுருதி பேதத்திற்கும், கிரக பேதத்திற்கும் உள்ள வித்யாசம் என்ன என்பது. இந்த சொற்றொடர் சங்கீத கச்சேரிகள், திரைப்பட இசை அமைப்பாளர்கள் பேசிக்கிற ஒன்னு தான்! சில திறமைகள், கலை ஆர்வம் என்பது நமக்குள்ள தானாக பிறப்பதில்லை, அதை சின்ன வயசிலே கத்துக்ககூடிய சூழ்நிலை இல்லேன்னாலும், வளர்ந்து மனமுதிர்ச்சி அடைந்த பின், இன்னைக்கு இருக்கும் இந்த இணைய தொழில்நுட்பத்திலே அதை பத்தி என்னான்னு தெரிஞ்சிக்க செலவழிச்சாலே போதும் கத்துக்கிடலாம்! என்னா அதுக்குன்னு கொஞ்சம் காலவிரயம் செஞ்சா போதும்! நம்ம ஏன் அதை அப்படி செய்றதில்லைன்னு தெரியல்லை! ம்.. அதை விடுங்க, நம்ம அடிக்கும் தாரை தப்பட்டையைக் கூட அதன் சூட்சமங்கள் தெரிஞ்சிக்கவோமான்னா அதுவும் கிடையாது!அப்பறம் விடை எப்படி சொல்றது! சரி இப்ப விஷயத்துக்கு வருவோம்!

சுருதி என்பது சுவரங்களின் அடிப்பட்டை சப்தம், அதாவது நம்ம சொல்ற ஒவ்வொரு அடிப்படை சுவரத்தின் சப்த எழுப்பலை சுருதி என்பது! அப்படி அடிப்படையாக கொண்ட அந்த சப்த நாதங்களிலிருந்து பிறக்கும் இந்த சுவரங்களால் அமைக்கப்படும் ராகங்களை பாடி கொண்டிருக்கும் பொழுது, சுவரம் மாற்றாமல், சப்த அலைகளை மாற்றி வேறு ராகத்தின் சாயலை கொண்டு வருவதே சுருதி பேதம்! கிரக பேதம் என்பது பாடிக்கொண்டிருக்கும் ராகத்தையோ, இசைத்துக்கொண்டிருக்கும் ராகத்தையோ தொடர்ச்சியாக சுவரம் மாற்றி அடுத்த ராகத்தினை இசைத்து காட்டியோ செய்வது கிரக பேதம்!

இப்ப ஒரு வீடியோ கிளிப், இது சங்கராபரணம் என்ற தெலுங்கு படத்தில் வந்த ஒருகாட்சி, முதல்லை இதை பாருங்க!என்ன பார்த்தாச்சா, பாட்டு முடிஞ்சு தெலுங்கு டைலாக் உங்களுக்கு புரியலைன்னா இதோ கீழே:

சாஸ்திரிகாரு:... சாரதா, நீ பாடின ராகம் என்ன அதில வந்த சுவரம் என்னா? சுத்தமான ஹிந்தோல ராகத்திலே ரிஷபம் எதுக்கு வந்தது? சொல்லு ஹிந்தோலத்துக்கு ஆரோகணம் என்னா?..

சாரதா:..சகமதநிச

சாஸ்திரிகாரு:..அவரோகணம்..

சாரதா:..சநிதமகச

சாஸ்திரிகாரு:..அப்பறம் ரிஷபமமெதுக்கு வந்துச்சு, சுவரசங்கரம் செய்றதுக்கு புத்தி இல்லையா?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..பரவாயில்லை, அது ஒன்னுமில்லை, புருஷபம் வந்த மாதிரி!!

சாஸ்திரிகாரு:.. என்னது புருஷபமா ரிஷபமா?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..ரிஷபமே அது ரிஷபமே எதோ குழப்பமாயிட்டேன், அதான்னே ரிஷபம் எப்படி ஹிந்தோலத்தில வரும், அது..சாருகேசியிலே வரும்..

சாஸ்திரிகாரு:.. சாரு?

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..இல்லைங்க சாருகேசியிலை எப்படி வரும், காபி அது காபி ராகத்திலே வரும்!

சாஸ்திரிகாரு:.. நீ எந்திருச்சி வெளியிலே போ.. எந்திரி! ரிஷப பத்தின வார்த்தை என்னான்னு தெரியாம சங்கீதத்தை குறித்து பேசறதுக்கு என்ன யோக்கிதை இருக்கு! தெரிஞ்சா தெரிஞ்ச மாதிரி இருக்கணும் இல்லைன்னா வாயை மூடிக்கிட்டு உட்கார்ந்து இருக்கணும்..

பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை:..அதில்லைங்க...

சாஸ்திரிகாரு:..ம்...

மாப்பிள்ளை அம்மா:.. சம்பந்தம் பத்தி அப்பறம் சொல்லி அனுப்புறோம்.. (பையனைக் கூட்டிக்கொண்டு வெளியே செல்கிறார்..)

சாஸ்திரிகாரு:..அவசரம் ஏதுமில்லை..

ஆக மொத்த தெலுங்கு படம் கிளிப் போட்டாலும் டைலாக்கை தமிழ்லை உங்களுக்கு சொல்லியாச்சு!

இப்ப உங்களுக்கு ஒரு கேள்வி, சாரதா செஞ்சது சுவரபேதமா, கிரகபேதமா சொல்லுங்க பார்க்கலாம்?

ஒன்னும் புரியல்லைன்னா, பேசமா இந்த கல்யாணியின் நோய் தீர்க்கும் ராகங்கள் மூணாவது பகுதி பாட்காஸ்ட்டை கேளுங்க!தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)

நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (இரண்டாம் பகுதி)

7 comments:

said...

ஐயா,

தாங்கள் ஸ்ருதிபேதம், க்ருஹ பேதம் ஆகியவற்றிற்கு அளித்துள்ள விளக்கம் சரிதானா? இல்லை என்று நினைக்கிறேன். தயவு செய்து சற்று விரிவான விளக்கம் தருமாறு வேண்டுகிறேன்.


சுவரம் மாற்றாமல், சப்த அலைகளை மாற்றி - இதெப்படி சாத்தியம் என்று விளக்குவீர்களா?

இசைத்துக்கொண்டிருக்கும் ராகத்தையோ தொடர்ச்சியாக சுவரம் மாற்றி அடுத்த ராகத்தினை இசைத்து காட்டி- இதுவும் சரியான விளக்கமல்ல.

சங்கீதத்தின் ஒரு மிகப்பெரிய விஷயத்தை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதியதாகவே உணர்கிறேன்.

தாங்கள் தயைகூர்ந்து இதுபற்றி விளக்கமாக எழுதுமாறு வேண்டுகிறேன்.

said...

ஒரு சிறிய மொழிபெயர்ப்புத் திருத்தம்:

//சாஸ்திரிகாரு:..அவசரம் ஏதுமில்லை..//

"சாஸ்திரிகாரு: தேவையில்லை" என்று இருக்க வேண்டும். தெலுங்கில்,
'அவசரம்', 'அக்கறை' போன்ற பதங்கள் 'தேவை' என்ற பொருளில் வரும்.

தமிழ் 'அவசரத்திற்கு' நிகரான தெலுங்குச் சொல் 'தொந்தர'. உ-ம்,
"தொந்தர படகூ" -> "அவசரப்படாதே".

said...

திரு ஸுஸர்ல ராமசந்த்ர ஸர்மா அவர்களே,
இதில் எனக்கு தெரிந்த வரையில் நான் கேட்ட படித்தவற்றின் அடிப்படையிலே இந்த வித்யாசத்தை எழுதி உள்ளேன். சங்கீத வித்வ ஞானம் எனக்கில்லை, ஒத்து கொள்கிரேன். இதை முன்னமே சொல்லி இருக்கிறேன். எனக்குள் எழுந்த ஒரு ஆவலால் அறிந்த விஷ்யங்களை பகிரவே இந்த பதிவு. இதில் முழுமையான ஞானம் நீங்கள் கொண்டிருந்தால் சற்று நீங்களே விளக்கம் அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!

said...

//"சாஸ்திரிகாரு: தேவையில்லை" என்று இருக்க வேண்டும்.// இதை படத்தில் கவனித்தீர்களானால் (தொடர்ந்து வரும் காட்சியை நான் காட்டவில்லை) இந்த"அவசரம் லேது" என்பதை வைத்தே தொடர் வசனங்கள் வரும்! இது சுத்தமான் தெலுகா இல்லையா என்பதை 'தெலுகு தெலிசினவாலுதான' செப்ப வேண்டும்

said...

தெலுகு தெலிசினவாலு லேதுகா?? யாராவது பதில் போடுங்கப்பா!

said...

நமக்குத் தெலுங்கும் தெரியாது.. நீங்கல்லாம் பேசிக்கிறதும் புரியலை :-( அப்றம் வரேன்!

said...

The song was so melodious. Whatever the Shasthrikaru said could someone tell me what she was singing about?