Thursday, October 27, 2005

நான் கொண்டாடிய தீபாவளிகள்

தீபாவளி வந்துட்டுதுன்னா மனசெல்லாம் ஒரு மத்தப்பு மாதிரி ஆயிடும். புது சட்டை போடலாம் வெடி வெடிக்கலாம், முறுக்கு, சோமாசா, உருண்டை, அதிர்சம் திங்கலாம், புதுசா ரிலீஸான எம்ஜியார் படத்துக்கு போகலாமுன்னு அந்த வரப்போற தருணங்களை நினச்சு ஏங்கினது அந்தக்காலம். சின்ன வயசுலே ஊசி பட்டாஸ் தான் வெடிச்சு தள்ளுவேன். சங்கு சக்கரம், புஸ்வானம், கம்பி மத்தாப்பு, அப்புறம் அந்த பாம்பு. இதுதான் நம்ம பட்டாஸ்ங்க. அதுவும் காலயிலே ஊசிப்பட்டசு வெடிச்சுட்டு, சாய்ங்காலம் தான் மத்ததை எல்லாம் கொளுத்தறது. எப்பவும் பட்டாஸ் எல்லாம் ஒரு பையில போட்டு வச்சிருப்பேன். தீபாவளிக்கு வாங்கற்துல பாதி தான் வெடிக்க முடியும், மீதியை எடுத்து பத்திரமா மேல தூக்கி வச்சுருவாங்க எங்க அம்மா, ஏன்ன கார்த்திகை தீபத்துக்கு வெடிக்குனுமில்ல. இந்த ஊசி பட்டாஸ்ல பாதி தான் வெடிக்கும், மீதி எல்லாம் புஸ் புஸ் தான். சமயத்தில்லே என்னடா வெடிக்கிலேயேன்னு போய் எடுத்து பாத்துட்டு கை, காலை கொளுத்திக்கிட்டுருந்திருக்கிறேன்.

கொஞ்சம் வளர்ந்த்தோன்ன நானே பட்டாஸ் வாங்க போவேன். லக்ஷ்மி வெடி, சர வெடி, அனுகுண்டுன்னு ஒரே டபால், டபாலுன்னு வெடிக்கறதை வாங்கிட்டு வரதுல தான் இஷ்டம். அப்புறம் இந்த துப்பாக்கி கதை சொல்ல மறந்து போய்டுச்சு, துப்பாக்கி சுடுதறதுன்னா பொட்டு கேப்பை வச்சி தான், இந்த ரோல் கேப் பட் பட்ன்னு சீக்கிரம் வெடிச்சி முடிஞ்சிடுமே. அதான். அப்பெல்லாம் பிரபாத் தியேட்டர்லருந்து காந்தி மார்க்கட் வரைக்கும் ரெண்டு பக்கமும் ஒரே பட்டாஸ் கடைங்காதான் போட்டிருப்பாங்க. இரும்புக் கடைங்க எல்லாம் கொஞ்ச நாளைக்கு பட்டாஸ் கடைங்களா மாறி இருக்கும். நான் நடந்தே போயி கடையிலே எங்க ஞாயினா கிட்ட பைசா வாங்கிகிட்டு பட்டாஸ் எல்லாம் வாங்கிட்டு வ்ருவேன். என்ன மிஞ்சி போன அஞ்சு ரூவா கொடுப்பார், அதெல்ல தான் தீபாவளிக்கான மொத்த பட்டாஸும் வாங்கிட்டு வரணும். அப்ப சிங்கம் மார்க், குயில் மார்க் பட்டாஸ் தான் பேமஸு, மத்ததெல்லாம் அவ்வுளவு நல்லா வெடிக்காது. சில சமயத்திலே நமத்து போயிருக்கும். ஆனா அஞ்சு ரூவாக்கி அள்ளிட்டு போனும்னா, இந்த நமத்து போனதை எடுத்துட்டு போயி ஏமாந்த தீபாவளிங்க நெறய உண்டு.

சமயத்திலே லைசன்ஸ் கிடைச்சிடுச்சினா, எங்க பெரியப்பாவும் பட்டாஸ் கடை போடுவார். நானும் போய் உட்கார்ந்து யாவாரம் எல்லாம் பண்ணி இருக்கேன். அதுவும் தீபாவளிக்கு மொதநாள் சாய்ந்திரத்திலருந்து அடுத்த நாள் விடியக் காலம்பற வரைதான் எல்லா பட்டாஸும் வித்து தீரும். நம்ம கடையில சாய்ந்திரம் போயி உட்கார்ந்துட்டு ராத்திரி 12 மணிக்கு பட்டாஸெல்லாம் எடுத்து போட்டுக்கிட்டு வீடு போய் சேர்ந்துடுவேன். ஏன்னா சீக்கிரம் தூங்கி சீக்கிரம் முழிச்சாதானே காலையில பட்டாஸுவுடமுடியும். காலங்காத்தலே 5 மணிக்கே எழுப்பி விட்டுருவாங்க. தலைக்கு எண்ணை வச்சு குளிச்சு புது டிரெஸ் போட்டுட்டு போயி வெடி வெடிக்கறதுலே இருக்கிற் ஆனந்தம் வேறே எதுலயும் இருக்காது.

இதுல இன்னெரு சோகம் என்னான்ன, நான் தீபாவளிக்கு அடுத்த நாள் வர்ர அம்மாவாசைதான். என்னான்னு கேட்கிறிங்களா, தீபாவளி அடுத்த நாள் எல்லாரும் நோம்பு எடுக்கிற நாளு. அதுனால நோம்பு யாவரத்துக்கு உதவியா இருக்க தீபாவளின்னக்கு என்னை கடைக்குக் கூட்டிட்டு போயிடுவாங்க. ஊர்ல என்ன ஒத்த வயசில உள்ளவனெல்லாம் பட்டாஸுவுட்டுகிட்டு ரொம்ப ஜாலியா இருப்பாங்க, நம்மலாலே முடியலையேன்னு வருத்தமா இருக்கும். அதுக்காகவே தீபாவளின்னைக்கே அம்மாவாசையும் வரணுமுனு சாமிக்கிட்ட வேண்டிக்குவேன். அது எப்பவும் தீபாவளிக்கு அடுத்த நாள் தான் வந்து தீரும், எப்பாவாச்சும் ஒருவாட்டி தீபாவளின்னக்கே வந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும். ஏன்னா தீபாவளின்னக்கு கடைக்கு போகவேனமே, அது தான். ம் .. கொஞ்ச நாளைக்கப்பறம் இப்பெல்லாம் தீபாவளி இன்னக்கான்னு கேட்டு தெரிஞ்சுக்கிறதோட சரி.

7 comments:

said...
This comment has been removed by a blog administrator.
said...

//**கொஞ்ச நாளைக்கப்பறம் இப்பெல்லாம் தீபாவளி இன்னக்கான்னு கேட்டு தெரிஞ்சுக்கிறதோட சரி.**// இது ஏனோ?. உங்கள் மற்ற பதிவுகளை கொஞ்சம் பத்தி பத்தியா பிரிச்சி போடுங்க. வாசிக்க நல்லா இருக்கும்.

said...

இருந்த ஊரு, நெருங்கண சொந்தம், கூடபொறந்ததுக, பழகனதுக, அந்த விகல்பம் இல்லாத சின்னஞ்சிறு வயசுல கொண்டாட்டம்னு நினச்சுது எல்லாம் விட்டுபுட்டு, புழைக்க வழி தேடி கடல் தேசம் கண்டு புது உறவு, நட்பு, சொந்தம், பந்தம், வயசானதாலே பண்டிகை, திருவிழா அப்படின்னு அதிகமான ஈடுபாடு இல்லாத காரணமோ என்னமோ!! பதிவுகளை பத்தியும் பாராவுமா எழுதினா ரசிக்காலாமுனு சீர்செய்யம்படி கூறி ஊக்கம் தந்ததுக்கு நன்றி.

said...

// தீபாவளின்னைக்கே அம்மாவாசையும் வரணுமுனு சாமிக்கிட்ட வேண்டிக்குவேன். அது எப்பவும் தீபாவளிக்கு அடுத்த நாள் தான் வந்து தீரும்,//

:-)))))))

எப்பவுமே இப்படித்தான் வரும்.

நல்லா எழுதியிருக்கீங்க உதயகுமார்.

தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

லீஃப் வருஷங்கள்ள இந்த மாதிரி முன்னாடி வரும்னு நினைக்கிறேன். சரியா தெரியல்ல, ஆனா இந்த தமிழ் மாசங்கள் முழுசாவும், பாதியாவும் 60 வருஷ சைக்கிள்ள வருகிறப்ப, சில தீபாவளி அம்மாவாசை தீபாவளி அன்னெக்கே வந்ததுண்டு. பஞ்சாங்கம் பாத்தா தெரியும் உங்களுக்கு.

said...

பஞ்சாங்கம் பாத்து சொல்லுங்க் துளசி கோபால்!

தீபாவளி வாழ்த்துக்கள்.

said...

தீபாவளி வாழ்த்துகள் வெளிகண்ட நாதர்/பாலக்கரை பாலன். நீங்க சொன்ன மாதிரி தீபாவளி அன்னைக்கே அமாவாசையும் வருவது உண்டு. அரைநாள் தீபாவளி, அரைநாள் அமாவாசை. அப்படி வந்தா மட்டும் எங்க வீட்டுல கறி சமைக்க மாட்டாங்க. அதனால தெரியும்.