நாடகம் போடறது ஒரு கூட்டு முயற்சி. இதில எனக்கு அதிகமா உதவனது என்னுடய குளோஸ் பிரண்டு மனோகர், அப்புறம் ஜெயக்குமார், பிறகு வந்த வருடங்கள்ள திருவேங்கடம். இதுல ஜெயக்குமார், நானும் முத வருஷத்திலருங்தே தோஸ்த்து. அதாவது மத்தியானம் சோத்தை தின்னுட்டு பெரும்பாலும் பஸ் புடிச்சு டவுண் ஹால்லு போயி, சினிமா பார்க்க நாங்க ரெண்டு பேரும் போயிடுவோம்.

முக்காவாசி படங்கள் மலையாளப் படங்கள், அதில்லயும் ஜெயபாரதி நடிச்ச படங்கள் அதிகம். 'இதோ இவிட வர', அப்புறம் பரதன் இயக்கிய நிறைய படங்கள். சாம்ப்ளுக்கு ஒரு போஸ்டர் பாருங்க இங்கே, படம் பேரு ரதிநிர்வேதம்னு நினைக்கிறேன், அதில வர ஒரு பாட்டு இப்பவும் மனசுல இருக்கு, 'குஞ்சு மனசில் சஞ்சரமென்னும் சாயம் பூட்டி' அப்படின்னு தொடங்கற பாட்டு, இது அந்த படத்தோட போஸ்டர் தான்னு நினைக்கிறேன். இந்த படத்தில விடல பையன் எப்படி காமம் கொண்டு தன்னைவிட மூத்த பக்கத்து வீட்டு பெண்ணை அடைய முயற்சிக்கிறான்ங்கிறது ரொம்ப அழகா படத்தை பரதன் பண்ணியிருப்பாரு தெரியுமா? அப்புறம் ப்ரதாப் போத்தன் நடிச்ச 'தகர' ன்னு ஒரு படம், அதுக்கூட அப்புறம் தமிழ்ல கவுண்டமணி, ரோஜாரமணி பையன் நடிச்சு வந்துச்சுன்னு நினைக்கிறேன். அப்ப வந்த மலையாள படங்கள், கொஞ்சம் கிக்காவும் இருக்கும், கதைகளும் நல்லா இருக்கும். கேரளாவில்ல வர அத்தனை படமும் கோயம்புத்தூருக்கு வரும். விரும்பி அத்தனை படங்களையும் பார்க்கிறதுண்டு. அப்பதான் சீமா நடிச்சு வந்த 'அவளோட ராவுகள்' படம் தமிழ்நாடு முழுக்க பிச்சிக்கிட்டு போச்சு. அப்ப நம்மக்கு சீமாவை புடிக்கும், எது புடிக்குதோ இல்லையோ, அந்த உதடு புடிக்கும், அதோட அழகு ஒரு தனி அழகு தான்.
இப்படி ஜாலியா போயிட்டுருந்தப்ப தான் அந்த முதவருஷ நாடகம் போட்டோம். நாடகம்னு பாத்தா, எந்த பிரமாதமம் இல்ல, ஆனா கதை சொன்ன விதம், விறு விறுப்பு இது தான் மக்களை கட்டி போடவச்சுச்சு. அப்பெல்லாம் சீன்களுக்கு இடையில அடுத்த சீன் ஆரம்பிக்கிற வரை சபா நாடகங்கள்னா ஆர்மோனியம் வாசிப்பாங்க, ஏன்னா, சீன் செட்டிங் செஞ்சாவனுமே, அதுக்கு டைம் எடுக்கும். நாங்க என்ன பண்ணுனோம், இன்ட்ர்லுயூட் மியூசிக்குன்னு, பாடல்கள் வரது, அப்புறம் தீம் மியூசிக்னு ரெக்கார்டிங் பண்ணி அதப்போடுவோம். பின்னாடி வருடங்களில் தத்ரூபமாக sound effect வரணும்னு, நடு ஜாமத்தில ஹைவேஸ்ல போயி லாரிங்க ஒடிறப்ப தூரத்தில வர அந்த ரோட்ல டயர் உராயம் போது வெளிப்படும் சப்தம், பிறகு ஆறு மணிக்கு அந்த ஆகாஸ வாணில வர அந்த ஆரம்ப மியூசிக்னு, நிறைய கஷ்டபட்டுருக்கோம். எங்க ஹாஸ்டல்ல தனியா மியூசிக் பிளே பண்ற ரூம் இருக்கு, அப்புறம் அங்கிருந்து பி.ஏ. சிஸ்டத்தில காலேஜ் முழுக்க பிராட்காஸ்ட் பண்ணுவாங்க. நாங்க ரெக்கார்ட் ரூம்மு சாவியை வாங்கி வச்சுக்கிட்டு ராத்திரியிலே போயி ரெக்கார்ட் பண்ணுவோம். அப்ப டேப் ரெக்கார்டர் புதுசா வந்த நேரம். இப்ப மாதிரி டேப், சிடி எல்லாம் கிடயாது. எல்லாம் எல் பி ரெக்கார்ட்ஸ், கிராமபோன் தான். அதனால நிறைய ராத்திரிகள் இந்த ரெக்கார்டிங்ல கழிஞ்சிருக்கு. ராஜப்பார்வையில வர தீம் மியூசிக், அப்புறம் ஹிந்தி பட மியூசிக்னு எல்லாம் ரிக்கார்ட் பண்ணுவோம். அந்த தீம் மியூசிக்கதான் கேட்டு பாருங்களேன்.
5 comments:
உதயகுமார்,
ம்யூஸிக் ஒரே அட்டகாசமா இருக்கே!
நகைச்சுவை நாடகம் எதாவது போட்டீங்களா? ஸ்கிட்ஸ் எதாவது?
அந்த நடிகர்தான் நாசரா?
துளசி, நான்காம் பாகம் படிக்கலையா ? :(
பூரா கதை எழுதி இருந்தேனே, அந்த நடிகர் நாசர் இல்லை, ஒரு க்ளூ கொடுக்கிறேன் கண்டுப் பிடிக்கிறீங்களான்னு பார்க்கிறேன், அவரு ரத்தக் கண்ணீர் வாரிசு, இப்ப கண்டு பிடிங்க:-)
நாலாம் பாகம் படிச்சுட்டுத்தானே இங்கே வந்தேன்.
'ரத்தக்கண்ணீருக்கு' தெரிஞ்சும் தெரியாமலும் ஏகப்பட்ட வாரிசுகள் இருக்காமே. நான் யாரைன்னு கண்டு பிடிப்பேன்?
ரவியா?
பரவாயில்லை கண்டுப் பிடிச்சீட்டீங்க, சாட்சாத் ராதா ரவி தான்! அவரு மெட்ராஸ்ல லா காலேஜ் படிச்சப்ப கோயம்புத்தூருக்கு வந்து பண்ண அலம்பல அடுத்த பதிவில எழுதேறேன்!
தீம் Music மிக அருமை.
படிக்க மிக ஆர்வமாக உள்ளது!
நல்ல பதிவு!!
Post a Comment