Sunday, October 08, 2006

கருணாநிதியும் ராஜாத்தி அம்மாளும்! (தமிழ் காதல்!)

நேத்து 'இருவர்' படம் பார்த்தேன். 'இது உண்மைக் கதை அல்ல' என்ற டைட்டிலோட படம் ஆரம்பிக்கிது, ஆனா படத்தில் வரும் பல காட்சிகள் நடந்த உண்மை சம்பவங்களோட ஒட்டியே இருக்குது, அதிலேயும் நமக்கு தெரிந்தவரை, முக்கியமா எம்ஜிஆருக்கு, நடிக்க வர்ற புதுசுலே சைக்கிள் ஓட்ட தெரியாதுங்கிற உண்மையிலேருந்து, அண்ணா, எம்ஜிஆரை கட்சியிலே சேர்த்துக்கிறப்ப எழுந்த சர்ச்சை, அவரால கட்சிக்கு லாபம் உண்டா, இல்லை கட்சியாலே அவருக்கு லாபமாங்கிற சர்ச்சையிலேருந்து வெகுவா நிறைய சம்பவங்கள், படத்திலே வரும் காட்சிகளோட ஒத்து போயிருக்கு! இருந்தாலும் இது உண்மைக் கதை இல்லை என்ற ஆரம்பத்தோட படம் நகருது! இப்படி இந்த சம்பவங்கள் மட்டும், நமக்கு தெரிஞ்ச ஒன்னு, அதுவும் ஆணித்தரமா! தெரியாத சில சம்பங்களும், அப்படியே அரசல் புரசலா நம்ம காதுக்குப் பட்ட சில விஷயங்களயும் நச்சுன்னு படம் புடிச்சு சொல்லி இருக்கிறாரு நம்ம மணி!

எம்ஜிஆரின் முதல் மனைவி மேலே அளவு கடந்த பாசம், காதல், அன்பு அவர் வச்சிருந்தாருங்கிறது தெரிஞ்ச ஒன்னு, ஆனா பிறகு நடிக்க வந்த ஜெயலலிதா அம்மா, தன்னுடய முதல் மனைவியின் சாயல்ல இருந்தவங்களான்னு தெரியாது! எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் நெருக்கமா இருந்தாங்ககிறது தெரிஞ்ச ஒன்னு, அவங்களை கல்யாணம் பண்ணிக்காம செல்வியாவே விட்டுட்டு போனதுக்கு, அப்ப அவரு ஆரம்பிச்ச புது கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்னு கொஞ்சம் அரசல் புரசலா தெரிஞ்ச ஒன்னு! அதுவும் அவரு கல்யாணம் பண்ணிக்கலேன்னு சில காலம் நடிக்காம, யாருக்கும் தெரியாம, அந்த நாடகள்ல ஹைதராபாத் திராட்சைத் தோட்டத்திலே காலம் கழிச்சதா செய்திகள் பத்திரிக்கையிலே படிச்ச ஒன்னு தான்! அதை அப்படியே சொல்லி இருந்தாலும் பச்சக்குன்னு ஜெயலலிதா கேரக்டரை ஆக்ஸிடண்டிலே மறைய வச்சி அப்படியே முழுங்கிட்டது, அதை பத்தி இன்னும் விரிவா திரைக்கதை அமைச்சிருந்தா, திருப்பி யாராவது வந்து தான் வீட்டிலே குண்டு போட்டுடலாமுன்னு விட்டுட்டாரோ என்னமோ தெரியலே, நம்ம மணி!

ஆரம்பக் காட்சிகள்ல நல்ல கவனம் செலுத்தி, ரொம்ப டீட்டைய்லா ஆராஞ்சி, எம்ஜிஆர் நடிக்க பட்ட கஷ்டங்களை விளக்கி இருந்தாலும், பின்னாடி வி என் ஜானகி அம்மாவை கல்யாணம் பண்ணிக்கிட்ட கதையை வேற மாதிரி புடிச்சி எம்ஜிஆர் மேலே பரிதாபம், பச்சாதாபம் வர்ற மாதிரி செஞ்சது கொஞ்சம் அதிகம் தான்! இந்த படத்திலே அவங்க வீட்டார் கவுதமியை அடிச்சி துன்புறுத்தி கஷ்டபடுத்தினதாலே அவர் வாழ்க்கை கொடுக்கிற மாதிரி காமிச்சிருந்தாலும், உண்மையிலே கதை வேறே! எங்க கடை பெரிசு சொல்ல கேட்டிருக்கேன்! ஜானகி அம்மா கல்யாணம் பண்ணிக்கிட்ட முத ஐயிரு புருஷனை அம்போன்னு விட்டுட்டு வந்தாங்கன்னும், எம்ஜிஆரு தான் வலுக்கட்டாயமா கூட்டி வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டாருன்னு, நம்ம பெரிசு அப்ப கதை சொல்லும், இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியல்லை!

ஆனா ஒன்னு சரியா புரிஞ்சிக்க முடிஞ்சது, அந்த காலத்திலே புதுசா வந்த சினிமாங்கிற விஞ்ஞான வளர்ச்சியை கொண்டு எப்படி அரசியல்ல முன்னேற முடியும்ங்கிற புது யுக்தியை வளர்த்தது எம்ஜிஆரும், கருணாநிதியும் தான்! அதுக்கு அப்ப பெரியார்க்கிட்ட இருந்து விலகி திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பிச்ச அண்ணாவின் ஆதரவு ஏகபோகமா இருந்தது கண்கூடா பார்த்த ஒன்னு! அதுவும் அடுக்கு மொழியில் மயக்கும் தமிழை நம்மிடையே கொண்டு வந்ததிலே, இவர்களோட பங்களிப்பு மிக முக்கியம்! அதுவும் இவங்க ரெண்டு பேரோட கேம்பிளான் பக்கவா இருந்தது ஆச்சிரியபடவைக்கிது! என்ன ஒரு திட்டமிட்ட வளர்ச்சி! உண்மையிலே பல கசப்பான சம்பங்கள் நடந்தாலும், எதிரிகளான நண்பர்களை காட்டி இருக்கும் விதம் ரொம்ப அருமை!

இதுலே முக்கியமா சொல்லுனும்னா, நம்ம கலைஞருக்கு அந்த காலத்திலே இருந்த வெறி, அதாவது தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் அனைவரும் ஆட்சியில் பங்களிப்பு ஏற்க வேண்டும், அவர்கள் முன்னேற்றத்துக்கு கல்வியிலேருந்து எல்லாத்துறைகளிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அன்று அவர் போராடிய அந்த கல்லக்குடி ரயில் நிறுத்தப் போரட்டத்தின் பலனை இன்னைக்கு நாம் எல்லாரும் கடல் கடந்து அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்! அவரு எத்தனயோ ஊழல்கள் செஞ்சு இருந்தாலும், இந்த அஸ்த்திவார உழைப்பை தமிழன் என்ற அனைவரும் மறக்க முடியாது, உண்மையிலே இதில் மட்டும் திராவிடர்களை முன்னேற்றிய கழகம் தான்! (அதுக்குன்னு, எம்ஜிஆர் செய்த நல்ல காரியங்களையும் நான் மறக்கவில்லை! அவரும் என்னை பொறுத்த மட்டில், இந்த கடல் கடந்த முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் தான்! )

கடைசியா சொல்ல வந்த விஷயம் என்னான்னா, படத்திலே காமிச்சிருக்கிற ராஜாத்தி அம்மாள் கதை, செந்தாமரை, மணிமேகலைன்னு மாதிக்கிட்டாலும், ராஜாத்தி அம்மாளும், கணிமொழியும் தான் கண்ணு முன்னாடி வந்து நிக்கிறாங்க! அதுவும் மதுரையிலே இருந்த தமிழ் டீச்சரா, கவிதைக்கு மயங்கி வந்த ராஜாத்தி அம்மாள் கதைபத்தி படத்தின் காட்சிகள் பத்தி நான் கேள்வி பட்டதில்லை, இது உண்மையான்னு தெரிஞ்சவங்க எழுதுங்களேன்! கருணாநிதியின் இன்பகேளிக்கைகள் பற்றி அதிகமான செய்திகள் வேறமாதிரி வந்தாலும் (ஏன் நான் எஸ் எஸ் ஆர் சம்சாரம், விஜயகுமாரியையும் தான் சேர்த்துதான் சொல்றேன்!) இந்த படத்திலே காமிச்சிருக்கிறது ஒரு அழகான கவிதை! இதுக்காகவே கருணாநிதிக்கு வயசு கம்மி ஆகி, திரும்ப இளமை அடைந்து ராஜாத்தி அம்மாவோட அழகு தமிழ் காதல் கவிதை படிச்சா எப்படி இருக்கும்னு தோணுது, அதுவும் வைரமுத்து துணையில்லாம! உண்மையிலே வைரமுத்து அனுபவிச்ச எழுதின ஒன்னுன்னு நினைக்கிறேன், அதுவும் பச்சையப்பாவிலே, அவரோட பொன்மணிக்கு அந்த காலத்தில எழுதி கொடுத்த ஒன்னா இருக்கும்னு நினைக்கிறேன்! அவ்வளவு காதல் உண்மை இருக்கு!

'உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்!
மரணப்படுக்கையிலும் மறக்காது கண்மணியே!
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டணைத்த காலம் தான்!
எண்ணூரு ஆண்டுகளாய் இதயத்தில் கணக்குதடி!'

மேற்கொண்டு, பார்த்து, கேட்டு மகிழ உங்களுக்கு தேண்கிண்ணம் படைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

19 comments:

said...

//அவர்கள் முன்னேற்றத்துக்கு கல்வியிலேருந்து எல்லாத்துறைகளிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அன்று அவர் போராடிய அந்த கல்லக்குடி ரயில் நிறுத்தப் போரட்டத்தின் பலனை இன்னைக்கு நாம் எல்லாரும் கடல் கடந்து அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்! //

கல்லக்குடி போராட்டம் 'டால்மியாபுரம்' பெயர் மாற்றத்தை எதிர்த்து நடந்ததாக நினைவு.

said...

வாங்க பெத்த ராயுடு, நீங்க சொல்றது சரிதான்! படத்திலே அந்த காட்சி அப்படி எடுத்துருந்த கற்பனையை சொன்னேன். உண்மையிலே நீங்க சொன்னது தான் க்ரெக்ட். நான் சொன்ன மாதிரி போராட்டம், கூட்டம் எல்லாம் போட்டு நடத்தி, அவர் முதலமைச்சர் ஆனோன்ன சென்ஞ்ச காரியத்தை தான் நான் சொன்னேன்! இப்ப இந்தியா முழுக்க கடைபிடிப்பதற்கு அடிப்படை நம்ம தமிழகம் தான், அதன் வெற்றிக்கு கழகங்கள் பங்கு ரொம்ப முக்கியம்!

said...

நல்ல அலசல்.

said...

நல்லா எழுதியிருக்கீங்க. துண்டுப்படத்துக்கும் நன்றி. நிதானமா ஒரு நாள் இருவர் பார்க்கணும் என்கிற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை. நீங்கள் இன்னும் தூண்டி விட்டிருக்கிறீர்கள்.

said...

சார்,

//தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கும் அனைவரும் ஆட்சியில் பங்களிப்பு ஏற்க வேண்டும், அவர்கள் முன்னேற்றத்துக்கு கல்வியிலேருந்து எல்லாத்துறைகளிலும் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று அன்று அவர் போராடிய அந்த கல்லக்குடி ரயில் நிறுத்தப் போரட்டத்தின் பலனை இன்னைக்கு நாம் எல்லாரும் கடல் கடந்து அனுபவிச்சிக்கிட்டிருக்கோம்! //


மிக அருமையாக சொண்ணீங்க...

நல்ல பதிவு.

நன்றி

said...

வருகைக்கு நன்றி ஓசை!

said...

வருகைக்கு நன்றி செல்வராஜ்!

//நிதானமா ஒரு நாள் இருவர் பார்க்கணும் என்கிற என் ஆசை இன்னும் நிறைவேறவில்லை// சீக்கிரமா பார்த்துடுங்க, நல்லப்படம்!

said...

//மிக அருமையாக சொண்ணீங்க// அதானே உண்மை சிவபாலன்!

said...

/*
வருகைக்கு நன்றி ஓசை! */

என் பேர் ஓசை இல்லை ஊசி :-)

என்னுடைய இந்த Cheeeeeeeeeeeee ... பதிவை பாத்தீங்களா?

said...

//ஆனா பிறகு நடிக்க வந்த ஜெயலலிதா அம்மா, தன்னுடய முதல் மனைவியின் சாயல்ல இருந்தவங்களான்னு தெரியாது//

எம்ஜியாரின் முதல் மனைவி கேரளாவை சேர்ந்தவர் என்பதும், ஜெயலலிதா எம்ஜியாரின் முதல் மனைவியை போல் இருந்தது உண்மை தான். சமீபத்தில் ஆனந்தவிகடன் பத்திரிக்கையில் எம்ஜியாரின் முதல் மனைவியின் போட்டோ பார்த்தேன்.. பெரும்பாலும் ஜெயலலிதவை ஒட்டியே இருந்தது..

வெளிகண்ட நாதரே, பதிவு ரொம்ப அருமையா இருந்தது

said...

வெ.நா,
வழமைபோல படிக்கச் சுவையாக நன்றாக எழுதியுள்ளீர்கள். நான் இப்படம் வெளியான உடனேயே திரைஅரங்கில் பல வருடங்களுக்கு முன்னர் பார்த்துவிட்டேன். இப் படம் கலைஞர் ஆட்சியில் இருந்த போது வெளியானதால் கலைஞர் பற்றிய காட்சிகள் வெட்டப்பட்டும் , மாற்றியமைக்கப்பட்டதென்றும் நான் கேள்விப்பட்டேன். உண்மையா தெரியவில்லை.

/* உண்மையிலே வைரமுத்து அனுபவிச்ச எழுதின ஒன்னுன்னு நினைக்கிறேன், */

இப் படத்திற்கு வசன் எழுதியது சுகாசினி இல்லையா? நீங்கள் குறிப்பிட்ட கவிதை வைரமுத்துவினுடையதா அல்லது சுகாசினியினுடையதா?

said...

ஓ.. ஊசியை ஓசையாக்கிட்டனோ! ஊசி கீழே விழுந்த சத்தமே இல்லை, ஆனா ஓசை! உங்க இரண்டு பொண்டாட்டிக்காரன் கதை படிச்ச்சிட்டேன்!

said...

வாங்க கார்த்திகேயன், அந்த ஆனந்த விகடன் பதிவு எப்ப வந்ததுன்னு சொல்ல முடியுமா??

said...

வெற்றி நீங்க சொன்ன மாதிரி இந்த படத்துக்கு வசனம் சுஹாசினி தான், ஆனா பாடல்கள் அனைத்தும் வைரமுத்து! அதுவும் அந்த தொண்ணூறு நிமிட ஸ்பரிசக் கவிதையை எழுதியது வைரமுத்துவே தான்!

said...

அருமையான பதிவு. திரைப்படங்களையும், காட்சிகளையும் மிக அழகாக திறனாய்வு செய்கிறீர்கள்.

இருவர் வெகுநிச்சயமாக தமிழ் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று. எம்ஜிஆர்,கருணாநிதி பற்றிய நினைவுகள் தவிர்த்து விட்டு திரைப்படம் பார்க்க முயலும்போது அதில் உள்ள அப்பட்டமான அழகியல் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும்.

இன்னும் இது போன்ற பதிவுகள் நிறைய இடுவீர்கள் என நம்புகிறேன்.

நன்றி.

said...

Good post.

A Good film. A Good piece of work from ManiRatnam. ManiRatnam had packed the whole history of Tamilnadu from the day of independence to mid of 1980's. It is a very tough job to pack all these in a 2 & half hour movie.

If u can note one scene, in the protest for கல்லக்குடி, PrakashRaj will be raising slogans against the Government, at the same time he will be looking keenly towards Tabu.

So, what does ManiRatnam try to say?

said...

வாங்க சிவராமன்!
//இருவர் வெகுநிச்சயமாக தமிழ் திரைப்படங்களில் முக்கியமான ஒன்று. எம்ஜிஆர்,கருணாநிதி பற்றிய நினைவுகள் தவிர்த்து விட்டு திரைப்படம் பார்க்க முயலும்போது அதில் உள்ள அப்பட்டமான அழகியல் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும்.//கதையின் ஆரம்பமே அப்படிதான், எந்த ஒரு காட்சியையும் அவர்கள் நினைவின்றி பார்த்து ஜீரணிப்பது கஷ்டமான காரியம்!

//இன்னும் இது போன்ற பதிவுகள் நிறைய இடுவீர்கள் என நம்புகிறேன்// கண்டிப்பாக..!

said...

ஆமாம் ஹரி, இரண்டரை மணி நேரத்தில் எல்லாவற்றையும் அடக்க முடியாது தான். ஆனால் மணி இதில் கெட்டிக்காரர், அவரைப்போல் திரைக் கதை அமைப்பவர் மிகக்குறைவு, பாரதிராஜாவை மட்டும் கொஞ்சம் போல சொல்லலாம். இந்த திரைக்கதை உத்தியை பத்தி நான் ரொம்பவே அலசி இருக்கிறேன், பிறகு ஒரு முறை நேரம் கிடைக்கும் போது ரோஜா படம் பற்றி எழுது கிறேன், அதுவே மணியின் மாஸ்டர்பீஸ்!

said...

நல்லா எழுதி இருக்கீங்க சார்.
மணிரத்தினம் நமக்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் என்பதில் சந்தேகமே இல்லை.
சமீபத்தில் வந்த ஆயுத எழுத்து சமூக அக்கறை உள்ள நல்ல படைப்பு. ஆனால் படம் முடிந்ததும் நம்மாளு சமூகமாவது மண்ணாவதுன்னு கருத்துக்களை மறந்து விடுகிறான்.

இருவரில் கருணாநிதிக்கும், எம்.ஜி.ஆர் கும் இருக்கும் நட்பை கவிதையாக சொல்லி இருப்பார் இயக்குநர். ஒரு ஷேக்ஸ்பியர் கதையை படிப்பது போன்ற உணர்வை தரும் படைப்பு.

திராவிட கழகங்கள் ஆரம்பத்தில் அடிமட்ட மக்களுக்கு நன்மை செய்திருந்தாலும், overall Karunanidhi and M.G.R has failed us. மக்கள் அவர்களுக்கு அளித்த அதிகாரத்தையும், நம்பிக்கையையும் பல சுய லாபத்திர்க்காக வீணடித்து மக்களை ஏமாற்றியவர்கள்.

Basic problem is most of our damned politicians do not have a good vision to make progress. படித்த அறிவு ஜீவிகள் வந்தால் தான் நாட்டை தேற்ற முடியும். பிசா வுக்கும், டிஸ்கோவுக்குமே அவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. வேறு என்னத்தைச் சொல்ல.