Sunday, November 19, 2006

ராஜாவின் ராஜாங்கம்!

நேத்து இளையராஜா பாட்டுக்கச்சேரி கேசட் ஒன்னு கிடைச்சது, போட்டு வீடியோ பார்த்தப்ப, ஒரே மலைப்பு! அவரு ஆரம்பத்திலே வந்தப்ப, போட்ட பாடல்கள்ல இருந்த குதுகூலம் மாதிரி, இன்னைக்கும் மேடையிலே ஏறி ஒரே பாடலுக்கு பல ராகங்களை பாடி காட்டறப்ப அதே குதுகூலம் அவரிடம் தென்பட்டது. நம்முடைய இளவயது ஞாபகங்கள், நிகழ்ச்சிகள் எப்படி மனசிலே மறக்க முடியாம இருக்கோ, அதே மாதிரி இந்த ராஜாவோட அந்த காலப் பாடல்கள் கேட்ட மாத்திரத்திலே அதோட ஒட்டி நிகழ்ந்த நிகழ்வுகளை மனக்கண் முன்னே அப்படியே சட்டுன்னு கொண்டு வந்து நிறுத்தும்! அவருடய பாடல்கள்ல அப்படி ஒரு தாக்கம் இருந்தது.

அதாவது 74 இல்லை 75ன்னு நினைக்கிறேன், இளையராஜா அறிமுகமாகி, முதப்படமான அன்னக்கிளி பாட்டுகள் வந்து பட்டையை கிளப்பிக்கிட்டிருந்த நேரம் அது! அதுவரை ஒரு மூணு, நாளு வருஷம் இந்தி பாடல்கள் தமிழ் நாடு முழுக்க சக்கை போடு போட்டுக்கிட்டிருந்த நேரம், எம் எஸ்வி அண்ணே, மெல்லிசையை கொஞ்ச மறந்துருந்த நேரம், அதே ஸ்டைலுல, ஒரே மாதிரி ஸ்டிரியோ டைப்பிலே பாட்டு போட்டுக்கிட்டு, பின்னாடி டாங்கோ பீட்டுலயே எல்லா தமிழ் பாட்டுகளும் வந்து போரடிச்சிக்கிட்டிருந்த நேரம்(அப்புறம் இளையராஜா பாட்டை கேட்டு கொஞ்சம் துள்ளலோட நிறைய ம்யூசிக் போட்டாரு எம் எஸ் வி அண்ணே, பிறகு வந்த நினைத்தாலே இனிக்கும், சிம்லா ஸ்பெஷல் மாதிரி சில படங்களுக்கு, சும்மா நச்சின்னு அடிச்சி பட்டையை கிளப்புனாறு, அது வேறே விஷயம், சம்போ.. சிவசம்போ!), கொஞ்சம் இனிமையா ஹிந்தி பாடல்கள், பாபி, கபி கபி, ரோட்டி கபடா ஒவுர் மக்கான், ஷோலே, டான், அமர் அக்பர் ஆண்டோனி, அப்படின்னு ஆக்ஷன் பட்ங்களும் காதல் படங்களுமா வந்து படங்களும் தாக்கத்தை உண்டு பண்ணுச்சி, பாடல்களும் தான். அதுக்கு முன்னே, ஒரு பத்து வருஷ முன்னே தான் ஹிந்தியே இந்த பக்கம் மூச்சுக் காட்டக் கூடாதுன்னு ரொம்ப ஆக்ரோஷமா தினா, முனா, கானா ஆளுங்க போட்ட சத்தம் கொஞ்சம் ஓஞ்ச நேரத்திலே, சத்தம் போடமா இப்படி ஹிந்திப் பாடல்கள் தமிழ் நாட்டு மக்கள்கள் கிட்டே வந்து சந்து பாடிகிட்டு இருந்த நேரம்! அப்படியே உட்டுருந்த, இப்பவும் தமிழ்நாட்ல பாதி தியேட்டருக்கு மேலே ஹிந்தி படம் தான் ஓடிக்கிட்டிருக்கும், பெங்களூர், ஹைதராபாத் மாதிரி, ஆனா, அதை அப்படி வராம தடுத்து தனிமனுஷனா தன்னுடய இசையாலே எல்லாத்தையும் வடக்கு பக்கம் ஓட வச்சது அப்ப நம்ம ராஜா தான்!

நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரம்-ஆறாம் பகுதியிலே எழுதின மாதிரி, அந்த காலகட்டங்கள், அதாவது, அந்த காலக்கட்டங்கள்னு நான் சொல்றது 1978, 79 கள், அப்பதான் ரஜினிங்கிற காந்தம் கொஞ்ச கொஞ்சமா புயலாயிகிட்டு இருந்த நேரம். வில்லன்லருந்து புரமோஷன் ஆயி பைரவியில ஹீரோவாயிருந்த நேரம். பாரதிராஜா, எங்க கிராமத்து படம் தான் இவனுக்கு எடுக்கத்தெரியும்னு முத்திரை குத்திருவாங்களோன்னு பயந்து சிகப்பு ரோஜக்களை எடுத்து விட்டருந்த நேரம். பிறகு அதிலேயும் கிராம உபக்கதையை தான் நல்லா காட்டிருந்தாரு, அதுலாதான் அவரு டச் இருக்கு, மத்ததெல்லாம் இங்கிலீஷ் பட காப்பி அப்படின்னு சரியா ஒத்துக்காததால திரும்ப கிராமம் போயி புதிய வார்ப்புகள் எடுத்திருந்த நேரம். பாலசந்தர் பெண்களை மையமா வச்சி வரிசையா அவள் ஒரு தொடர்கதை, அவர்கள், நிழல் நிஜமாகிறதுன்னு அரங்கேற்ற தொடக்கத்தை தொடர்ந்த நேரம் அப்பறம் எல்லாரும் வெளி நாடு போய் படம் பிடிக்க போட்டி போட்டு, நினைத்தாலே இனிக்கும், ப்ரியான்னு வந்திருந்த நேரம். ஸ்ரீதர் மாதிரி ஆளுங்க புதுசா ஆடிக்கிட்டு இருந்த ரஜினி கமல் ஆடுபுலி ஆட்டத்தை பார்த்துட்டு இளமை சொட்ட இளமை உஞ்சலாடுகிறதுன்னு எடுத்திட்டு, பிறகு அவர் பானியிலே அழகை ஆராதிக்க போயிருந்த நேரம். இளையராஜா தான் அந்த காலக்கட்டத்தில வந்த படங்கள் அத்தனைக்கும் ம்யூசிக் போட்டு அசத்திக்கிட்டு இருந்தப்ப, சிவாஜி படங்களூம் அவரு ம்யூசிக்ல பழைய டிஎம்ஸ்ச பாடவச்சி அற்புதம்மா நான் வாழவப்பேன், தீபம், தியாகம், கவரிமான், பூந்தளிர்ன்னு பாட்டுகள் பட்டைய கிளப்பிக் கொண்டிருந்த நேரம் அது!

இந்த காலகட்டங்கள்ல அவரு அமைச்ச ராகங்கள் தாளங்கள் அப்படியே ஒரு சுகம் கேட்கறதுக்கு, அதிலேயும் சில ம்யீசிக்கல் இன்ஸ்ட்ருமெண்டு இந்த மாதிரி காட்சிகளுக்குத்தான்னு சட்டமா இருந்த நேரம் அப்ப, ஆனா ராஜாதான் அதை வேறே மாதிரி கையாண்டு அதிலே ராகம் காட்டி கிராமங்கள்ன்னா, நகர வாழ்க்கை வாழ்ந்தவங்களுக்கு, அந்த பேக்ரவுண்டு ம்யூசிக்ல பச்சை வரப்பு, புல்வெளி, நீர் நிலை, ஓடைகளை பார்த்தா தான் கிராமமா தோணும், அதாவது அந்த இசை சப்தம் ஆட்டோமேட்டிக்கா காதிலே ரீங்காரமிடும்!

முக்கியமா நான் சொல்ல வேண்டிய இன்ஸ்ட்ரூமெண்ட், ஷெனாய், இது வடக்கத்திய வாத்தியம், ஆனா தமிழ் பாடல்கள்ல ஒரு புது வடிவம் கொடுத்து, அதை திரையிலே வரவைக்கும் பொழுது ஸ்லோமேஷன்ல காமிச்சு, நம்மலை கிளு கிளுப்பாக்கி விட்டதுல பெரும் பங்கு இளையராஜாவுக்கும், பாரதிராஜாவுக்கும் உண்டு. அதே மாதிரி காதலை எப்படி இந்த வாத்தியத்தாலே இசைமைச்சு சொன்னாரோ, அப்படி காமிடி பண்ணவும், கிண்டல் பண்ணவும் இந்த வாத்தியத்தை அதிகம் உபயோகிச்சிருப்பாரு, நம்ம ராஜா! மத்த எல்லா இசையமைப்பாளர்களும் சோகத்துக்குன்னு அங்கொன்னு, இங்கொன்னுன்னு உபயோகிப்பாங்க, ஆனா அந்த சோகத்தையும் அழகா சொல்ல இந்த ஷெனாய் தான் உபயோகிச்சாரு நம்ம ராஜா எல்லா படங்கள்லயும்! கொஞ்சம் உத்து கவனிச்சி பார்த்தீங்கன்னா தெரியும், அதுவும் 16 வயதினிலே, ரோசாப்பூ ரவிக்கைக்காரி மாதிரி படங்களை கொஞ்சம் மனசை செலுத்தி பாருங்கப் புரியும், இந்த ஷெனாயோட மகிமை!

அடுத்து, புல்லாங்குழல், இதை வச்சி அவரு பண்ணாத அட்டகாசமே இல்லை,அத்தனை ராகத்தையும் கொண்டு வந்தாரு! கிராமத்து சப்த சங்கதி இப்படிதான்னு சொன்னது புல்லாங்குழல் தான்! ஆக புது புது மெலேடி பாட்டுகளுக்கு அவருடைய தனி முத்திரையை குத்தினாரு. கண்ட கருமாந்திரங்க நடிச்சிருந்தாலும், இவரு பாட்டுக்குன்னே அதிக நாட்கள் ஓடிய படங்கள் எத்தனையோ! ஏன் நம்ம ராமராஜன் ஒரு வெற்றி ஹீரோவா வலம் வந்ததுக்கு முக்காவாசி காரணம் இளையராஜா தான், அதே மாதிரி என்ன மந்திரம் பண்ணுவாரோ தெரியாது, ராஜ்கிரண் படத்துக்குன்னு தனி அம்சமா இவரு ம்யூசிக்கு வரும்!

அது மட்டுமில்லை அத்தனை ராகங்களும் அவருடய பாட்டிலே பேஸ் பண்ணி இருக்கும், இது பத்தி நிறைய இசை விற்பண்ணர்கள் நிறைய எழுதி இருக்காங்க, வேணும்னா இணயத்திலே தேடி படிச்சி பாருங்க! ஏன் சிந்து பைரவி படத்திலே 'மரி மரி நின்னே' பாட்டை 'பாடறியேன் படிப்பறியேனா'க்கி எப்படி கர்நாடகத்தையும் நம்ம தெம்மாங்கோட கலந்தடிச்சாரு! அப்புறம் அவருக்கே உண்டானக் குரல், ஆரமபத்திலே வெறும் டைட்டில் சாங்ன்னு ஆரம்பச்சி(இவரு டைட்டில் சாங் பாடுனா, படம் நூறு நாள்ங்கிற ஹோஸ்யம் சினிமாக்காரங்க மத்தியிலே உண்டு, அதை அருமையா பாடி காட்டியிருப்பாரு ஆண்பாவம் படத்திலே!), பின்னே சோகம் மட்டும் பாடி, அப்பறம் காதல், ஜனனின்னு பக்தி பரவசப்படுத்தி, மற்றும் வாடி எங்கப்பங்கிழங்கேன்னு ரவுசு பண்ணி, நிலாவை கையிலே புடிச்சியும் ஓடத்து மேலே பாத்தும், இருக்கிற அனைத்து காட்சிக்கும் பாடி, இன்னைக்கு அவருடய தனிப்பாடல்களை கேட்டுக்கிட்டே இருக்கலாம், அத்தனையும் தேன்!

இப்படி தனி மனிதனா ஒன்மேன் ஷோ நடத்தின இந்த கச்சேரியை கேசட்ல பார்க்க நேர்ந்து, அதிலே எப்படி எல்லாம் ட்யூன் போடுவாருன்னு விவரமா சொல்லி, அதுவும் அவசரம் அவசரமா அப்ப அவரு போட்ட ட்யூன்ங்கள் எல்லாம் அந்த காலத்திலே சூப்பர் டூப்பர் ஹிட், அந்த வீடியோ கிளிப்பை பாருங்க, உங்களுக்கே தெரியும்!



அபஸ்வரம் ராம்ஜி கேட்ட கேள்விக்கு, 'எப்படி வேறு மாதிரி ஒரே பாட்டுக்கு ட்யூன் போடுவீங்கன்னு' கேட்டப்ப, அதை வேற வேற ட்யூன்ல அசத்திக்காட்டி, கடைசியிலே இந்த காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி அவரு புள்ள யுவன் ஷங்கர் ராஜா அவரு இசை அமைச்ச ஒரு பழைய பாடலுக்கு இப்ப ட்யூன் போட்டா எப்படின்னு பாடிக்காட்டி, ஒரே வேடிக்கை தான் போங்க! என்ன இருந்தாலும் ராஜாவின் ராஜாங்கம் இன்னைக்கும் நடந்துக்கிட்டு இருக்கு, வெறும் சினிமான்னு இல்லாம தேவாரம், திருவாசகம்னு நிறைய தமிழை பாட்டாலே தமிழர்களுக்கு சொல்லி காமிக்கிறாரு! அவரு ராஜாப் பாட்டை தான் போங்க, இருந்தாலும் இப்ப என்னமோ பெரியர் படத்துக்கு ம்யூசிக் போட மறுத்துட்டாருன்னு ஒரே அரசியல் சாக்கடையா இருந்துக்கிட்டிருக்கு! நம்ம நல்ல இசைகளை ரசிக்கிறதோட சரி, போட்டா கேட்கிறதோட சரி, இந்த படத்துக்கு ஏன் போடலை, அந்த படத்துக்கு ம்யூசிக் ஏன் போடலைங்கிற விஷயங்கள்ல அவ்வளவு ஆர்வமில்லை, இதோ நான் ரசிச்ச அந்த விடியோ கிளிப்புகளை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

14 comments:

said...

அதாங்க, என்ன செஞ்சு என்ன, கடைசியில் தமிழ் துரோகி அப்படின்னு பட்டம் குடுத்துட்டாங்க நம்மாளுங்க. :(

said...

விடியோக்கள் அபாரம். அதுவும் அந்த மாங்குயிலே பாட்டுக்கு அவர் போட்ட ட்யூன்கள் பத்தி என்ன சொல்ல. நம்ம இயக்குனர்களிடம்தான் சொல்லணும் - இன்னும் என்னென்னவோ இருக்கு சாமி இவருகிட்ட, விட்டுறாதீங்க.

அப்புறம் அந்த சாதனா சர்க்கம் ஒரு திருஷ்டின்னு நினைக்கிறேன். தமிழும் கொலை, குரலும் கீச் கீச்சுன்னு. தமிழ் ஒழுங்கா கத்துக்கிட்டு வான்னு அனுப்பணும்.

said...

//இன்னும் என்னென்னவோ இருக்கு சாமி இவருகிட்ட, விட்டுறாதீங்க//சரியா சொன்னீங்க கொத்தனாரே! சரக்கு எவ்வளவோ இருக்கு இன்னும் அவருக்கிட்டே, அதான் இன்னைக்கும் நிலைச்சு நிக்கிறாரு! நம்ம வயசு காலத்திலே இந்த மாதிரி ஒரு இசை மேதை வாழ்ந்து, நம்ம கனவுகளுக்கு பின்னனி கொடுத்த இசை அமைப்பாளர் இவரு ஒருத்தரா தான் இருக்க முடியும்!

said...

2வது வீடியோ கலக்கல்! பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

said...

நல்ல பதிவு !!! நன்றி !!!

said...

2வது வீடியோ அருமையோ அருமை...

said...

2nd video பகிர்ந்தமைக்கு நன்றி. அருமை.
நம் இன்ப துன்பத்துக்கு பின்னிசை அமைத்த/அமைத்துக் கொண்டிருக்கும், ராஜா நமக்கு கிடைத்த பொக்கிஷம்.
அவரின் பாடல்கள் ஒவ்வொன்றும் கேட்டாலே பரவசம், இன்றும், என்றும்.
நினைவெல்லாம் நித்யா பாடல்கள் என்னை மிகவும் கவர்ந்தவை.

மனுஷன சந்தோஷமா வச்சுக்கிட்டா இன்னும் நிறைய பொக்கிஷம் தருவாரு. வீணா politics பண்ணி, இந்த படத்துக்கு ஏன் போடல அத ஏன் செய்யலன்னு tension கொடுக்காம இருந்தா சரி.

said...

வருகைக்கு நன்றி சேதுக்கரசி!

said...

பதிவை பார்வையிட்ட ஊசி அவர்களுக்கு நன்றி!

said...

வீடியோ கண்டு மகிழ்ந்த உதயகுமார் அவர்களுக்கு நன்றி!

said...

//மனுஷன சந்தோஷமா வச்சுக்கிட்டா இன்னும் நிறைய பொக்கிஷம் தருவாரு.// சரியாக சொன்னீங்க பேட்நியூஸ்!

said...

அட...

இன்னாபா இந்த மக்களோட ஒரே தொல்லையாகீது...
படத்துக்கு ம்யூசிக்க போட ஒத்துக்கிறதும்...இல்லை அப்பீட் ஆகிக்கிறதும் அவரோட இஸ்டம்...இதுலே என்னாத்துக்கு மத்தவனுங்க மூக்கை நுழைக்கிறானுவ...

அவரைக் கொஞ்சம் ப்ரீயா வுடுங்கபா...

said...

இன்னிக்குத்தான் பார்த்தேன்& கேட்டேன்.

ராஜா, ராஜாதான்.

said...

Very good posting. Raja is THE genius. No one else is on par with him.