Tuesday, September 12, 2006

செப்டம்பர், 11, 2001 சம்பவங்கள்- அமெரிக்க சதித்திட்டம்!

நேற்று செப்டம்பர் 11, அமெரிக்காவில் நியுயார்க் மாநிலத்தில் நியுயார்க் நகரில் இருந்த உலக வர்த்தக் மையத்தை தகர்த்த பொழுது, இறந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்திய நாள்! உலகின் மறுபக்கமான இந்த அமெரிக்க கண்டம் என்றமட்டுமில்லாது, உலகில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த நினைவு நாளில், இந்த சம்பவங்களில் இறந்த மக்களை நினைத்து பார்த்து இரங்கல் தெரிவித்தது! இந்த கொடூர சம்பவத்தின் போது இறந்தவர்கள் வெறும் அமெரிக்க நாட்டவர் மட்டுமில்லை, மொத்தம் 115 மற்ற நாட்டை சேர்ந்தவர்களும் தான்! இதில் நம் இந்தியர் ஒருவரும் உண்டு, அது போல் இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்க குடியுரிமைப்பெற்ற நம் தமிழ் நெஞ்சங்களும் உண்டு! அவர்கள் அனைவருக்கும் முதலில் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பதிவை சமர்ப்பிக்கிறேன்!

இந்த செபடம்பர் 11,2001 சம்பவம், தீவிரவாதத்தின் உச்சமாய், அல்கொய்தா தீவிரவாதிகளால் திட்டமிட்டு செயல்படுத்த பட்ட ஒன்று என்று உலகிற்கு பறை சாற்றப்பட்டது. ஆனால் இந்த மொத்த சம்பவங்களும் அமெரிக்கா சதி திட்டமிட்டு, மிகவும் சரியான முறையில் நடந்தேறிய ஒன்று என்று இப்பொழுது புதிய தகவல்கள் வர ஆரம்பித்துள்ளன! அதுவும் இந்த சதி திட்டத்தின் நோக்கம், எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளை ஆக்கிரமித்து, தன் ஆட்சி செலுத்தவே, இதை அமெரிக்க தொலை நோக்குத்திட்டத்துடன் செயல்படுத்தப்பட்ட ஒன்று என்றும், அது மட்டுமில்லாமல், மிகப்பெரிய காப்பு மேசடி ஊழல் செய்யவும், நிலுவையில் நிற்கும் முக்கியமான சில மோசடி வழக்குகளின் தாஸ்த்திவேஜாக்களை அழிக்கவும், அமெரிக்க அரசாங்கத்தில் செல்வாக்குடன் உள்ள ஒரு சில பேரால், இப்பொழுதைய அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள சில முக்கியமானவர்களுடன்,திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதல், நம் தமிழ் படங்களில் அரசியல்வாதிகளால் தூண்டபட்டு அப்பாவி பொது மக்களை அழிக்கும் சம்பங்கள் போல! (குறிப்பாக ஷங்கரின், இந்தியன் படத்தை ஞாபகம் படுத்திக் கொள்ளுங்கள், அதாவது வேண்டுமென்றே முதலமைச்சர் கலவரைத்தை தூண்டிவிட்டு, அப்பாவி மாணவர், மற்றும் பொது மக்களை கொல்லும் காட்சியை மனதில் கொள்ளுங்கள்!) இப்பொழுது இணையத்திலே, இன்றைய தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் வலம் வந்து கொண்டிருக்கிறது! இணையத்திலேயே சஞ்சரிக்கும் என் நண்பர்களே, உங்களில் எத்தனை பேருக்கு இது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு என எனக்குத்தெரியாது! ஆனால் அதை பற்றி என்ன என்று விளக்கவே இந்தப் பதிவு!

"Loose Change" என்கிற டாக்குமெண்டரி படம், இணையத்திலேயே கிடைக்கக்கூடிய வீடியோ கிளிப்புகளை கொண்டு, நடந்த ஒவ்வொரு சம்பங்களின் பின்னனனியையும் ஆராய்ந்து, அலசி, நடக்கப்பட்ட அத்தனை சம்பங்களும் சதித்திட்டத்தின் கீழ் நடக்கப்பெற்ற ஒன்று என்று கூறுகிறது இந்த திரைப்படம்! இந்த படத்தை இயக்கியவர் 'டைலன் ஏவரி'( Dylan Avery) என்ற 22 வயது நிரம்பிய ஒரு மாணவர்! இந்தப்படம் நடந்த அத்தனைச் சம்பவங்களுக்கும் ஒரு மாற்று நோக்கத்தையும், சதியின் ஆழத்தையும் திறம்பட விளக்குகிறது! அதாவது நம் நாட்டிலே அமைக்கப்படும் விசாரணை கமிஷன்ங்கள் போல், இந்த 9/11 சம்பங்களை ஆராய்ந்து உண்மையை வெளிக்கொணற இங்கும் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் அந்த கமிஷன் ஆராய்ந்து கண்டறியாத சில உண்மைகளை மாற்று விளக்கத்துடன் இது விளக்குகிறது! இந்த தாக்குதல், தீவிரவாதத் தால் உண்டான ஒன்றல்ல! இந்த தாக்குதலின் நோக்கமே வேறு என்றும், அதை மிக சாமர்த்தியமாக அமெரிக்க அரசாங்கம் நடத்தி முடித்திருக்கிறது என்று எடுத்துரைக்கிறது!

முதலில் என்னவோ டைலன் ஏவரி ஒரு ஃபிக்ஸன் படம் போல இந்த செப்டம்பர் 11 சம்பவங்களை கொண்டு படம் எடுக்க தீர்மானித்தார். ஆனால் உள்ளே தோண்டி தோண்டி அராய்ச்சி செய்ய இறங்கிய போது பல உண்மைகள் புலப்பட்டன. அதாவது இந்த சம்பங்களின் உள் நோக்கம் தீவிரவாதமில்லை! இது முழுதும் அமெரிக்க அராசாங்கத்தின் சதித்திட்டமே என்று! அதாவது எந்த காரணமின்றி எண்ணைய் வளம் கொண்ட அரபு நாடுகளான ஈராக் மீதோ, மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க முடியாது! சரியான, வலுவான காரணமின்றி அந்நாடுகள் மீது படையெடுக்க உலக நாடுகளின் ஆதரவு வேண்டுமென்றால் தம் நாட்டு மக்கள் சிலரைக் கொன்று தான் அக்காரியத்தை நிறைவேற்ற முடியும் என்ற திட்டமிட்ட சதியால் விளைந்தது தான் இந்த செப்டம்பர் 11ல் நடந்தேறிய நிகழ்ச்சிகள்! ஆனால் தம் நாட்டினரை மற்றும் பலி கொள்ளாமல், பல உலக நாட்டு குடிமகன்களையும் கொன்று குவித்து இக்காரியத்தை நிறைவேற்றி இருக்கிறது அமெரிக்கா என்று இத்திரைப்படம் அறைகூவல் விடுக்கிறது!

இப்படம் அந்த காலகட்டத்தில் அமெரிக்கா க்யூபா மீது போர் தொடுக்க கையாண்ட ராஜதந்திர சதி திட்டங்களை விளக்கும் ஆரம்பத்தோடு தொடர்கிறது! பிறகு ஏற்பட்ட தாக்குதல் சம்பவங்களை ஒவ்வொன்றாக ஆராய்கிறது. முதலில் அமெரிக்க ராணுவ தலைமை பீடமான பெண்டகனை தாக்கிய விமானத்தை ஆராய்ந்து, அது உண்மையிலேயே பயணிகள் சென்ற போயிங் விமானம் தானா, இல்லை அமெரிக்கா தன் மீது ஏவிக்கொண்ட ஏவுகனைகளா என்பதை ஆராய்கிறது! அதை விஞ்ஞான பூர்வமாகவும், சிதலமைடந்த விமான பாகங்கள் அனத்தும் போயிங் விமானத்துடன் ஒன்றாத தன்மையும் விளக்குகிறது. ஆக இது திட்ட மிட்ட சதியே என்று கூறுகிறது!

இரண்டாவதாக "World Trade Center" என்கிற உலக வர்த்தக மைய கட்டிடங்கள், விமானத் தாக்குதலால் எப்படி அடுக்கிவைத்த சீட்டு கட்டுகள் கீழ் (அவர்கள் சொல்லும் உதாரணம், அடுக்கி வைத்த 'பேன் கேக்' போல என்று) விழுவது போல் விழும், அதை முறையாக வெடி வைத்து தகர்க்காவிடில் என சர்ச்சையை கிளப்பி இருக்கிறது! இடிந்து விழுந்த WTC டவர்கள் 1, 2, மற்றும் 7 (இந்த WTC கட்டிட வளாகம் பற்றி என்னுடய முந்தைய பதிவான 'World Trade Center-சமீபத்தில் பார்த்த படங்கள்!' என்ற பதிவை படிக்கவும்!) ஆகியவை முறையாக இடித்து தள்ளிய நிகழ்ச்சி போல் தான் இருக்கிறதே தவிர, தீவிரவாதிகளால் ஓட்டி சென்ற விமானம் மோதி தீப்பிடித்ததால் அவைகள், வெப்பம் தாங்காமல் விழவில்லை என கர்ஜிக்கிறது! இந்த கட்டிடம் கட்டுவதற்கான பொருட்களுக்கு சான்று வழங்கிய தரகட்டுப்பாட்டு நிறுவனங்களை அதிலும் துணைக்கழைத்து, விஞ்ஞான, பொறியல் தொழில்நுட்ப காரணங்களோடு விளக்குகிறது( நான் பெரிய எண்ணைய் சுத்திகரிப்பு ஆலை கட்டுமான தொழில் துறையில் இருப்பதால், இந்த அமெரிக்காவில் இருக்கும் தரக்கட்டுபாட்டு நிறுவனங்களின் நிர்ணயம், அங்கீகாரம் பற்றி தெரியும். இது மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று, கட்டுமான பொருட்கள் தயாரிப்பாளர்கள், உலக அளவில் அனைவராலும் பின்பற்றி வரப்படுவது, உதாரணத்துக்கு ASTM, ASME, API, NIST, ISA போன்றவற்றின் தரக்கட்டுபாடுகளின் நெறிமுறைகள் தெரியவில்லை என்றால் நீங்கள் இந்த கட்டுமான பொறியல் துறையில் காலம் தள்ள முடியாது, ஆதாலால், இப்படம் எடுத்துரைக்கும் சில உண்மைகள் நம்ப மறுக்க இயலாது!)

அடுத்து யுனைட்டட் ஏர்லைன்ஸ் விமானம் 93 வின் விபத்து பற்றி கூறுகிறது!(இது பற்றி ஒரு ஆங்கில படமும் வந்துள்ளது, வேண்டுமானால் அப்படம் பார்க்கவும், இச்சம்பவம் அனைத்தும் நீங்கள் அழகாக திரைப்படத்தில் பார்க்கலாம்!) அந்த விமானம் 93வால் விபத்தே நிகழவில்லை என சாதிக்கிறது! இது அமெரிக்க ராணுவத்தினரால் நடத்தப்பட்ட திட்டமிட்ட சதி. இந்த விமான விபத்தில் சிதிலமடைந்த பாகங்கள் எதுவும் மிஞ்சவில்லை என்பது ஆச்சிர்யத்திற்குண்டான ஒன்று என கேள்வி எழுப்புகிறது! விபத்துகளை பற்றி காண்பிக்கப்பட்ட அத்தனை புகைப்படங்களும் ஜோடிக்கப்பட்டவை, விமானத்திலிருந்து, அதுவும் முப்பதாயிரம் அடிக்கு மேல் பறக்கும் பொழுது செல் போனால் பேசுவது சாத்தியமில்லை! ஆக இந்த விமானம் தாக்குதலுக்குள்ளனா போது பயணம் செய்து பயணியர் செல்போன் கொண்டு தத்தம் உறவினர்களை அழைத்து விமானம் கடத்தப்படுவதை சொன்னதாக கூறியது எல்லாம் ஜோடிக்கப் பட்ட கதை என்று கூறுகிறது! (அவர்கள் கூறுவதோ என்னவோ வாஸ்தவமே, நானும் முப்பதாயிரம் அடிக்கு மேலே பறக்கும் பொழுது என் செல் போனை நோண்டி பார்த்திருக்கிறேன், சிக்னல் இருக்கிறது என காண்பிக்கும், ஆனால் பேச முற்பட்டு தொடர்பு கொள்ள முயன்று பலமுறை தோல்வியுற்றிருக்கிறேன்!)

அடுத்து இச்சம்பவங்களால் அடிக்கப்பட்ட கொள்ளைகள், அதாவது முன்பே கூறியது போல காப்பு மோசடி ஊழல்கள் போன்றவற்றால் அடித்த கொள்ளைகள்! அதாவது இச்சம்பவம் நடைபெற சில ஆறு வாரங்களுக்கு முன்னே தான் 'Larry A. Silverstein' என்கிற ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்யும் தொழிலதிபர் இந்த "World Trade Center" கட்டிடங்களை குத்தகைக்கு எடுத்து, இது போன்ற தீவிர வாத கட்டிட விமான தாக்குதலுக்கு எதிரான காப்புரிமை எடுத்தார். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு குத்தகை எடுத்து காப்புரிமை அதன் பேரில் எடுத்து, இச்சம்பவத்தின் மூலம் பல பில்லியன் டாலர்களை வருமானமாக ஈட்டினார் என்ற குற்றச்சாட்டுடன் திரைப்படம், இச்சம்பவத்துடன் இணைந்த அத்தனை ஊழல்களையும் காண்பிக்கிறது!

ஆக இவை அனைத்தும், சுமார் ஒன்றாரை மணி நேரம் ஓடக்கூடிய இத்திரைப்படத்தில் நீங்கள் காணலாம். இந்த டாக்குமெண்டரி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விமரிசனம் செய்தும் கண்டன வெப்சைட்களும், இந்த டாக்குமெண்டரி படத்தில் கூறப்பட்ட ஒவ்வொரு விளக்கத்திற்கும் எதிர் விளக்க பதில்களும் சொல்லி தரநிர்ணய கட்டுபாட்டு துறையும் விளக்கி இருக்கும் பக்கங்களையும் நீங்கள் இணையத்தில் காணலாம்! ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளக்க உண்மைகளை அமெரிக்க மற்றும் கனடா வாழ் மக்கள் நம்ம ஆரம்பித்துள்ளனர். ஆக மாறி வரும் உலக அரசியலில் நடந்து முடிந்த இந்த சம்பவங்களினால் நம் கண்ணதாசன் பாடியது போல 'யாரைத்தான் நம்புவதோ இந்த புண்ணிய பூமியிலே என புலம்பத்தான் வேண்டும்! இங்கு நடந்து முடிந்த அனைத்து சதித்திட்ட அரசியலும் நமக்கொன்றும் புதிதல்ல! நம் நாட்டில் அன்றாடம் நடப்பது தான்! படிப்பறியா நம் மக்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்பு விளக்கத் திரைப்படங்கள் ஒன்றும் ஆச்சிரியமில்லை! ஆனால் படித்து முன்னேறிய இந்த பக்க பூமியில், இது போன்ற விளக்க திரைப்படங்கள் பெரும் சர்ச்சையுடன் மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது! ஆனால் நான் கூறியது போல வளர்ந்த தொழில்நுடபத்தினால், சராசரி மனிதனும் திரைப்படமெடுத்து கலக்கலாம்! வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல், ஏவிஎம் போன்ற பெரும் திரைப்பட நிறுவனங்கள் தேவையில்லை!

இத்திரைப்படம் எந்த திரையிலும் வெளியிடப்படவில்லை! நீங்கள் இணையத்தில் மட்டும் கண்டு களிக்கலாம்! இந்த திரைப்படம் உலக மக்களால் அதிகமாக பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. உங்களுக்காக இதோ கீழே!

31 comments:

said...

Nadhar, just google for images of Fight 93 wreckage.You must be able to find hundreds of pictures.

A lie gets halfway around the world before the truth has a chance to get its pants on - Churchill

said...

உதயகுமார்,

என்னங்க பயங்கரமா ஒரு குண்டு போட்டுட்டீங்க?

said...

வெளிகண்டநாதர்,
எமது CBC தொலைக்காட்சியிலும் இந்த 9/11 பற்றி ஒரு விவரணப்படம் போட்டார்கள் என அறிந்தேன். நான் பார்க்கவில்லை. அதில் 1/5 அமெரிக்கர்கள் தமது அரசாங்கம்தான் இத் தாக்குதலுக்குப் பின்னால் செயற்பட்டது என்று நம்புகிறார்கள் எனத் தெரிவிக்கப்பட்டதாம்.

said...

"ஒரு நாயைக் கொல்ல வேண்டுமென்றால் அதற்கு வெறி பிடித்திருக்கிறது என்று முதலில் ஊராரை நம்பவை" என்று ஒரு ஆங்கில பழமொழி கேள்விப்பட்டுள்ளேன். இந்தப் பதிவைப் படித்தபின் அமெரிக்கேகாதிபத்யம் அதன்படிதான் செயல்படுகிறது என்று நினைக்கிறேன்.

said...

சார்

மிக அருமையாக தொகுத்து எழுதியுள்ளீர்கள்.. இங்கே Right Wing / Left Wing Radio கேட்கும் போது இந்த 9/11 எவ்வாறு அரசியல் செய்கிறார்கள் என்பதை நன்கு உணரமுடியும்.

இப்பொழுதுகூட ல் 9/11 பற்றி 5 மணி நேர சினிமா ஒன்று ABC TV தானே தயாரித்து விளம்பரங்களே இல்லாமல் ஒளிப்பரப்பினார்கள். காரணம் வரும் நவம்பரில் நடக்கும் செனட் தேர்தலுக்காக..

இந்த பதிவில் பல முக திறைகளை கிழிந்ததைப் பற்றி நன்றாக எழுதியுள்ளீர்கள்.

அருமை.

நன்றி

said...

ஏன் விட்டுட்டீங்க?

அப்படியே கொஞ்சம் மேல போயி, ஒஸாமா கொக்கரித்தது, இன்னும் கொக்கரிப்பது, இதை நடத்திய தீவிரவாதிகளை 'தியாகிகள்' என இன்னும் வர்ணிப்பது, எல்லாமே கூட அமெரிக்காவின் சதிதான்; ஒஸாமாவும் ஒரு அமெரிக்க கைக்கூலிதான் என சொல்லாமல் விட்டுட்டிங்களே!

கென்னெடி கொலையைப் பற்றிக் கூடத்தான் ஒரு படம் வந்தது.

இது சுதந்திர நாடு என்பதால் மட்டுமே இதெல்லாம் இங்கு இப்படிப் பேசவும், எழுதவும் முடிகிறது.

அதை நீங்களும் பின்னுட்டம் இட்ட சிலரும் நன்றாகவே பயன்படுத்தி இருக்கிறீர்கள்!

ஹோம்லேண்ட் செக்யூரிடிக்கு இப்பதிவின் நகலை அனுப்பலாம் நீங்கள்!

said...

வெளிகண்ட நாதர்,

உங்கள் தொகுப்பு அருமை. மிக நல்ல பதிவு, புக்மார்க் செய்து வைத்துக்கோண்டேன்.

படத்தைப் பற்றி: முழுவதும் பார்த்துவிட்டேன். ஒவ்வொரு கேள்வியும் மிக ஆணித்தரமாக இருப்பதை மறுக்கவே முடியாது. குறிப்பாக, implosion செய்ய்ப்பட்ட கட்டிடங்களையும் ட்வின் டவர்களையும் ஒப்பீடு செய்யும் காட்சிகள், பெண்டகனில் விழுந்த ஓட்டை, செல்போனின் செயல்திறன்..அம்மாவிடம் பேசுபவன் முழுப்பெயரையும் சொல்லிவிட்டு, "do you believe me?" என்று மூன்றுமுறை கேட்பானா என்ற லாஜிக்; பங்கு வர்த்தக முன்னறிந்ததுபோன்ற செயல்பாடுகள் - Strength of Materials.... கேள்விகள்...கேள்விகள்..

பயமாக இருக்கிறது!

said...

நாதர்,

சுதந்திர உலகத்தில் இந்த மாதிரி இரண்டு புறங்களைப் பற்றி பேசுவது சகஜம்.
NBC ஓளிபரப்பிய Path to 9/11 பாருங்கள் இன்னோரு உண்மை புரியும்.

இரண்டு ஏஜென்ஸிகளின் (FBI and CIA) ஈகோ பிரச்னையால் ஏற்பட்ட சரிவுதான் இந்த நிகழ்ச்சி

//எந்த காரணமின்றி எண்ணைய் வளம் கொண்ட அரபு நாடுகளான ஈராக் மீதோ, மற்ற நாடுகள் மீது போர் தொடுக்க முடியாது! சரியான, வலுவான காரணமின்றி அந்நாடுகள் மீது படையெடுக்க உலக நாடுகளின் ஆதரவு வேண்டுமென்றால் தம் நாட்டு மக்கள் சிலரைக் கொன்று தான் அக்காரியத்தை நிறைவேற்ற முடியும் என்ற திட்டமிட்ட சதியால் விளைந்தது தான் இந்த செப்டம்பர் 11ல் நடந்தேறிய நிகழ்ச்சிகள்! //

மத்திய கிழக்கு நாடுகளை பிடிக்க அமெரிக்காவில் குண்டு வைப்பது கொக்குத் தலையில் வெண்ணை வைப்பது போலாகும். இந்த வாதம் சுத்த அபத்தம். இந்த கட்டிடங்கள் விழுந்தவுடன் அமெரிக்கா களிமண் கட்டிடங்கள் கொண்ட ஆப்கானிஸ்தானை தாக்கியதே தவிர ஈராக்கை தாக்கவில்லை.

ஈராக்கை தாக்க காரணம் எதுவும் தேவை இல்லாமல் பொய் சொல்லியே தாக்கியது அமெரிக்கா.


இந்த மாபெரும் சதி நடத்த அமெரிக்க அரசாங்கத்திற்கு சில ஆயிரம் பேர்களின் சேவை தேவைப் பட்டிருக்கும் அவர்களில் ஒருவர் கூடவா இது நடக்கும் முன் வாய் திறக்க
வில்லை அதுவும் ஓட்டை வாய் அமெரிக்கர்கள். என்னால் நம்ப முடியவில்லை.


மேலும் இதை ஆதரித்தும் எதிர்த்தும் புத்தகங்கள் எழுதி படங்கள் எடுத்து இதனால் ஏற்பட்ட இழப்பை விட அதிகம் சம்பாதித்தது அமெரிக்கர்கள் தான். அது கூட சதியோ என வாதம் வரும்.

உண்மை வெளிவரும் புஷ் வெளியேறிய பிறகு 2 வருடங்கள் இருக்கிறது அதற்கு

said...

//ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளக்க உண்மைகளை அமெரிக்க மற்றும் கனடா வாழ் மக்கள் நம்ம ஆரம்பித்துள்ளனர்.//

ஆம் ஒரே பொய்யை திரும்ப திரும்ப வெவ்வேறு விதங்களில் சொன்னால் நம்பத்தான் நம்புவார்கள்

said...

நண்பரே,

இது பற்றிய அறிவியல்பூர்வமான விளக்கங்களுடன் இணையத்தில் பல ஒளிப்படங்கள் இருக்கின்றன.

நல்ல அலசல் கட்டுரை! அமெரிக்கா இதை திட்டமிட்டு செய்திருக்ககூடாது அல்லது செய்யாது என எண்ணுபவர்களுக்கு இந்த ஆய்வுகளை பார்க்காமலே நிராகரிப்பது எளிது. அமெரிக்க மக்களின் அறியாமையில் அரசியல் நடத்துகிறார்கள் சிலர்!

பின்லேடனின் தீவிரவாதத்தை இந்த படம் எந்த விதத்திலும் ஆதரிப்பதாக தெரியவில்லை. ஆகவே உள்நோக்கம் இருக்கிறதா என எண்ணவும் தோன்றவில்லை.

உண்மை அழுத்த அழுத்த என்றாவது ஒரு நாள் மேலெழும்பும்!

//ஹோம்லேண்ட் செக்யூரிடிக்கு இப்பதிவின் நகலை அனுப்பலாம் நீங்கள்!//

நண்பர் SK இதன் பொருள் என்ன? சும்மா தெரிஞ்சுக்க தானுங்க!

said...

Conspiracy theories do sell.

said...

எஸ் கே ஐயா, கொதிச்சுப் போகாதீங்க!
பின்லேடன் தீவிரவாதியாக இருக்கலாம் என்பதை யாரும் மறுக்கவில்லை.
அமெரிக்கா செய்தது நியாயமா? இந்த கேள்விகள் கேட்கப்படவே கூடாதா?
(ரஷ்யனுக்கு அதே பின் லேடன் எதிரியாக இருந்தபோது அவன் ஒரு 'போர்வீரன்' தானாம். ஏனெனில் அவன் அப்போது அமெரிக்காவின் கையாள். அமெரிக்காவின் எதிரியாகும் போது தான் எவெரும் எளிதில் 'தீவிரவாதி'யாகிவிடுகிறார்கள்.)

said...

Check this out...

http://www.msnbc.msn.com/id/14723997/

said...

கொதிப்பெல்லாம் ஒண்ணும் இல்லீங்க, திரு. கருத்து!

இங்கு வாதத்திற்கு வைத்திருப்பது 9/11 தாக்குதல் பற்றி மட்டுமே.

அது அமெரிக்க சதி என்றால், ஒஸாமா யார்?

இதுதான் நான் கேட்டிருந்தேன்.

திரு, தனி மடல் இடுங்கள், நீங்கள் 'சும்மா' கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன்.

said...

//1/5 அமெரிக்கர்கள் தமது அரசாங்கம்தான் இத் தாக்குதலுக்குப் பின்னால் செயற்பட்டது என்று நம்புகிறார்கள்//
ஐந்தில் ஒருபங்கு அமெரிக்கர்களை அவமானப்படுத்தும் விதமாக //ஒரே பொய்யை திரும்ப திரும்ப வெவ்வேறு விதங்களில் சொன்னால் நம்பத்தான் நம்புவார்கள் // என்று சொன்னாலும் சொல்வோமே தவிர, எத்தனை ஆதாரம் தந்தாலும் அமெரிக்காவை சந்தேகப்படமாட்டோம். ஏன்னா, அமெரிக்கன் பொய்யை திரும்பத் திரும்ப சொல்லி உண்மையாக்க மாட்டான். ஐ.நாவுல சொன்னாலே உலகமே நம்பிடும்.

said...

//ஈராக்கை தாக்க காரணம் எதுவும் தேவை இல்லாமல் பொய் சொல்லியே தாக்கியது அமெரிக்கா.//

'ஆஃப்கானிஸ்தான அழிக்கப் போட்ட அஸ்திவாரத்துலயே ஈராக்குக்கும் சமாதி 'கட்ட' முடியும்னு அங்கிள் சாமுக்கு தெரிந்தது தான். அவரோட சொந்தகாரங்களுக்கு ஒருவேள தெரியாம இருக்கலாம்.

said...

கருத்து, அதாவது 20% அமெரிக்கர்கள் தன் அரசாங்கம் செய்திருக்கும் என நம்புகிறார்கள் 80% நம்ப வில்லை.

ஆகையால் அந்த 20% நல்லவர்கள் 80% பொய்யர்கள் என சொல்லவருகிறீர்கள்.

நல்ல கருத்து ஐயா.

said...

கடந்த வாரம் al-jazeera ஒரு வீடியோவை ஒளிப்பரப்பியது.அதில் 9/11 சம்பவத்தில் பங்கேற்ற இரு தீவிரவாதிகளான Hamza al-Ramdi மற்றும் Wael el-Shemari, ஒசாமா பின் லாடனையும் சில சீனியர் அல்-காய்டா பெருசுகளையும் சந்தித்து பேசிருக்கின்றனர்.

பிறகு பின் லாடன், இஸ்லாமியர்கள் அனைவரும் விமானத்தை கடத்த போகும் ஜிஹாத் வீரர்களுக்கு(தீவிரவாதிகள்)ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்.

ஆதாரம்:http://english.aljazeera.net/NR/exeres/1B135B31-508F-4E0C-93E9-5077551D1B9D.htm

said...

//அந்த 20% நல்லவர்கள் 80% பொய்யர்கள் என சொல்லவருகிறீர்கள்.

நல்ல கருத்து ஐயா. //கால்கரி,
திரித்தே புரிந்துக்கொள்கிறீர்கள்.
எத்தனை சதம் நல்லவர் எத்தனை சதம் பொய்யர் என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை. நல்லவனாக இருப்பதற்கும் ஆராயமல் நம்புவதற்கும் தொட்ர்பிருக்கிறதா?
வேறுபட்ட கோணங்களிலும் சிந்தித்துப்பார்த்தால் மைனாரிட்டிக்கள் சொல்வதும் உண்மையாக இருக்கலாம் என்பதைத்தான் சொன்னேன்.

பெரும்பான்மையானவர்கள் நம்புவது தான் உண்மை என்று வலியுறுத்தும் உங்கள் கருத்து தான் சூ..ப்பர்மா!

said...

//அது அமெரிக்க சதி என்றால், ஒஸாமா யார்?//

ஒசாமா அமெரிக்காவின் பழைய நெருங்கிய நண்பர். குறிப்பாக புஷ் குடும்பத்தின் குடும்ப நண்பர்.

ரஷ்யாவை தோற்கடிக்க அமெரிக்கா பயன்படுத்திய ஆயுதம்.

எனக்கு சந்தேகம் இப்போதும் ஒசாமா அமெரிக்காவின் நல்ல நண்பராகவே இருக்கிறாரோ என்று.

said...

முடிவாகச் சொல்வதென்றால்,
இந்த விசயத்தில் அக்னெர்களும் கால்கரிகளும் 'பின்லேடன்' சொல்வதை நம்புகிறார்கள்.
மற்ற அனைவரும் அங்கிள் சாமையும் பின் லேடனை சந்தேகப் படுவது போலவே சந்தேகப்படுகிறோம். இது தான் இங்கு உணர்த்தப்படுகிறது

said...

//முடிவாகச் சொல்வதென்றால்,
இந்த விசயத்தில் XXXXXm XXXXXm 'பின்லேடன்' சொல்வதை (மட்டுமே) விசுவாசிக்கிறார்கள்.//

முஸ்லிம்களை ஓரங்கட்ட உதவுகிற அங்கிள் சாம் மீது சந்தேகப்படுவதா? அபச்சாரம், அபச்சாரம். (No Joke, it is well understood in their 'Politics').

said...

கருத்து, மைனாரிட்டிகள் எதை சொன்னாலும் அதை கண்மூடி நம்புவதும் முட்டாள் தனம் உங்கள் கருத்துபடி


எல்லாரும் பார்க்க தவறிய ஒரு டாகுமெண்டரியை நான் பார்க்க நேர்ந்தது.

அது சவூதி அரச குடும்பத்தைப் பற்றியது.

1970 களில் காலித் மன்னராக இருந்த போது கம்யூனிச சோவியத் ஆப்கானிஸ்தானை பிடித்தது. காலித் இஸ்லாமிய மரபுகளை உண்மையாக பின்பற்றுபவர். அவர்க்கு ஒரு முஸ்லிம் நாட்டை இறை மறுக்கும் கம்யூனிஸ்ட்கள் ஆக்கிரமித்தை பிடிக்கவில்லை. அதே நேரம் அமெரிக்காவிற்கு எங்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் போகிறார்களோ அங்கேல்லாம் அவர்களும் போகவேண்டும்.

(இந்த பனி போர்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் அதிகம்)


நேரடியாக போராடி வியட்னாமில் சூடு பட்டுகொண்டிருந்த/பட்ட அமெரிக்கா சவூதி மன்னர் உதவியுடன் அங்கிருந்த இஸ்லாமிய வாதிகளை தவறாக போதித்து ஆப்கானில் உள்ளவர்களுடன் போராட அனுப்பினார்கள்.

அமெரிக்கா லாஜிஸ்டிக்ஸ் சவூதி பணம் (இதில் அமெரிக்கர் கொள்ளை லாபம் அடைந்தார்கள்)

போராளிகள் 'வெற்றி' பெற்று சவூதிக்கு திரும்பிய நேரம். மன்னர் ஃபாத் பதவி ஏற்றியிருந்தார்.

இவர் ஒரு மைனர். வெளியே இஸ்லாமிய மத வேஷம் ஆனால் மைனர் வேலைகள அதிகம். இவரின் ஆடம்பர வாழ்க்கைகள் இவரின் அமெரிக்க நட்பு ஆகியவைகள் இந்த போராளிகளை வெறுப்படைய செய்தது.
அமெரிக்காவும் சவூதியும் இவர்களின் தியாகத்தை மறந்தது.

அதனால் போராளிகள் சவூதி அரச குடும்பம் அவர்களின் நண்பர் அமெரிக்காவிற்கும் எதிராக திரும்பினர்.

அந்த நேரம் சதாம் குவைத்தில் உள்ளே வர அமெரிக்காவின் தேவை சவூதிக்கு நிறையவே தேவைப் பட்டது.

அப்போதே ஒசாமா அமெரிக்காவின் படைகள் சவூதியில் வருவதை எதிர்த்தான்.

குவைத் சண்டையில் சதாம் தோற்கடிக்கபட்டார். அப்போதே அவரை பிடித்து "தண்டணை" தந்திருக்கலாம்.

ஆனால் அவரை பிடித்தால் ஸியாக்களின் ஆதிக்கம் ஈராக்கில்(சதாம் தோற்றவுடன் தெற்கு ஈராக்கில் ஸியாகளின் எழுச்சி பற்றி அறிவோம். பின்னர் அவர்கள் சதமால் "அடக்க"ப்பட்டதையும் அறிவோம். அதனால்தான் இரண்டாவது வளைகுடா போரில் ஸியாக்களின் ஆதரவு அமெரிக்கர்களுக்கு கிடைக்கவில்லை) அதிகமாய் விடும் என அஞ்சிய மன்னர் ஃபாத் பெரிய புஷ்ஷிற்கு அப்போதைக்கு விட்டு விடும் படி "கட்டளை" யிட அவனை என் மகன் பார்த்துக் கொள்ளட்டும் என பெரிய புஷ் விட்டுவிட்டார். அப்போதைய தளபதி நார்மன் ஸ்வார்கஃப் சதாமை பிடிக்க மிக எளிது என பேட்டி அளித்தது எல்லாருக்கும் நினைவிருக்கும்.
இந்த பேட்டிக்காக அவர் ஒரங்கட்டப் பட்டு இன்று அவர மறக்கடிக்க பட்டுள்ளார்.

ஆக இந்த ப்ரச்னைகள் சவூதி மன்னராட்சிக்கும் அவர் எதிரிகளுக்கும் மற்றும் மன்னர் குடும்பத்தின்
நண்பர்களான அமெரிக்கருக்கும் நடக்கும் போராட்டம்.

இதில் உலகம் தவிக்கிறது (அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் தவறான பாதையில் திசை திருப்ப படுகிறார்கள். அவர்களின் வேதத்தை மேற்கோள் காட்டி அவர்களின் மதத்தை அவர்களே இழிவு செய்கிறார்கள்)
அப்பாவிகள் அழிகிறார்கள்

சவூதியில் மக்களாட்சி வந்தால் இந்த ப்ரச்னைகள் தீர்ந்துவிடும். வருமா.....

(ஈராக்கிலேயே வரவில்லை. ஈராக் மக்கள் மத்திய கிழக்கின் மிக நாகரீகம் அடைந்தவர்கள்)

நாளைக்கு ஒசாமாவே சவூதிக்கு மன்னரானால் அமெரிக்கா ஒசாமாவின் நண்பர் ஆகிவிடும்
ஏனென்றால் அமெரிக்கவிற்கு எண்ணை தேவை சவூதிக்கு அமெரிக்க தொழில் நுட்பமும் எண்ணை விற்க சந்தையும் தேவை

said...

//'ஆஃப்கானிஸ்தான அழிக்கப் போட்ட அஸ்திவாரத்துலயே ஈராக்குக்கும் சமாதி 'கட்ட' முடியும்னு அங்கிள் சாமுக்கு தெரிந்தது தான். அவரோட சொந்தகாரங்களுக்கு ஒருவேள தெரியாம இருக்கலாம்.
//

கருத்து, ஆப்கானிஸ்தானில் அடைந்த வெற்றி ஈராக்கை தாக்க தூண்டியதா. தவறு கருத்து.

ஆப்கானிஸ்தானில் விழுந்தது குண்டடி

ஈராக்கில் விழுந்தது பணத்தடி.

இராண்டாம் வளைகுடா போரில் பாக்தாதில் அமெரிக்க படைகள் அதிக எதிர்ப்பின்றி நுழைந்தன.

சதாமின் மிக புகழப்பட்ட Elite Republican guards குறைந்த பட்ச எதிர்ப்பைக்கூட காட்டவில்லை.

ஆளுக்கு $5000 டாலர் வாங்கி கொண்டு uniform ஐ களைந்து விட்டு மக்களுடன் மக்களாக கலந்தனர்.

இதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள். என்னுடன் வேலைப் பார்த்த ஈராக்கிய நண்பர்கள் சொன்னது.

முதலாம் வளைகுடா போரில் குவைத்தில் நுழைந்த ஈராக்கிய படைவீரர்கள் பொதுமக்களிடம் கேட்டது என்ன தெரியுமா?

சாப்பாடு...ஆம் படைவீரர்களுக்கு சரியாக சாப்பாடு கூட போடமுடியாத நிலையில் தான் சதாமின் ஆட்சி இருந்தது.


இதற்கு ஆதாரம் இதோ: அந்த காலகட்டத்தில் குவைத்தில் ஈராக்கிய படைவீரர்களுக்கு கபூஸ் அளித்த தர்ம பிரபு என் அருமில் அமர்ந்துள்ள என் நண்பர்.


இந்த மாதிரி படைகளை வெல்ல அஸ்திவாரம் எல்லாம் தேவையில்லை அதுவும் அமெரிக்காவிற்கு

இரண்டும் இருவித போர் யுக்திகள். அந்த போர்தந்திர முறைகளை நன்றாக பயன் படுத்திய பெருமை குள்ளநரி கிழம் டொனால்ட் ரம்ஸ்பீல்டுக்கே

said...

நீங்கள் விளக்கி இருப்பதுபோல், WTC கட்டிடங்கள் இடிந்ததில் எப்படி நிறைய புரளிகள் இருக்கின்றனவொ அதேபோல்தான் அமெரிகர்கள் நிலவுக்கு போனதிலும், ஆம்ஸ்டராங் கால் பதித்தாக காட்டப்படங்கள் அத்தனையும் சுத்த பொய் என பேசிக்கொள்ளப்படுகிறது. ஒரு சில வாதங்கள் த்குந்த ஆதாரங்களுடன் விளக்கப்பட்டும் இருக்கிறது. அது உங்களுக்கு தெரியுமா?
எனக்கு செய்திகள் கிடைத்ததும் வலைஞர்களுடன் பகிர்வோம்!

said...

////'ஆஃப்கானிஸ்தான அழிக்கப் போட்ட அஸ்திவாரத்துலயே ஈராக்குக்கும் சமாதி 'கட்ட' முடியும்னு அங்கிள் சாமுக்கு தெரிந்தது தான். அவரோட சொந்தகாரங்களுக்கு ஒருவேள தெரியாம இருக்கலாம்.
//

கருத்து, ஆப்கானிஸ்தானில் அடைந்த வெற்றி ஈராக்கை தாக்க தூண்டியதா. தவறு கருத்து.////

மறுபடியும் புரிதலில் தவறு இருக்கிறது. அல்லது தவறாகத் திரிக்கப்படுகிறது. நான் சொல்ல வந்தது ஒரே ஒரு காரியத்தில் பலப்பல பலன்களுக்கான விதை என்பதை.

//நாளைக்கு ஒசாமாவே சவூதிக்கு மன்னரானால் அமெரிக்கா ஒசாமாவின் நண்பர் ஆகிவிடும்//

உண்மை.

//கருத்து, மைனாரிட்டிகள் எதை சொன்னாலும் அதை கண்மூடி நம்புவதும் முட்டாள் தனம் உங்கள் கருத்துபடி//
மைனாரிட்டியோ, மெஜாரிட்டியோ எதையும் கண்மூடித்தனமாக நம்பவேண்டாமே!
ஆராயப்படவேண்டும் என்று சொல்லப்படுகிற ஒரு விஷயத்தை, "அதெல்லாம் தேவையில்லை" என்கிற ரீதியில் பின் ஏன் பின்னூட்டங்கள்?

said...

ஹிட்லர் நடத்திய ஹேலோக்காஸ்ட் என்கிற விஷயமே நடைபெறவில்லை என்கிற கதைகளை கேட்டுள்ளீர்களா? இது எந்த அளவு உண்மை என்று தெரியாது. ஆனால் கீழேயுள்ள விஷயம் மட்டும் உண்மை என்பது தெரியும்.

ம்யூஸ் என்ற பெயரில் எழுதுபவரும் நல்லடியார் என்ற பெயரில் எழுதுபவரும் ஒருவரே.

said...

//ஆராயப்படவேண்டும் என்று சொல்லப்படுகிற ஒரு விஷயத்தை, "அதெல்லாம் தேவையில்லை" என்கிற ரீதியில் பின் ஏன் பின்னூட்டங்கள்? //

கருத்து,

இந்த பதிவில் முதல் பின்னூட்டம் என்னுடையது.

இந்த conspiracy theoryயின் மிக பெரிய குற்றச்சாட்டாடு பிளைட் 93 கீழ விழுந்து இருந்தால் அதன் பாகங்கள் எப்படி யாருமே பார்க்கவில்லை என்பது.

அட சும்மா கூக்கிள் செஞ்சு பார்த்த நூத்துகனக்குல கிடைக்குமுன்னு நான் சொல்லியிருக்கேன்.

கூக்கிள் செஞ்சு பார்த்தீங்களா?

இதே மாதிரி தான் யூதர்கள் யாருமே 9/11 அன்று சாகவில்லை என்று சிலர் கிளப்பிவிட இரட்டை கோபுரங்களில் இறந்த ~100 யூதர்களின் பெயரை நான் எடுத்து காட்டினேன் ஒருமுறை.

ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பதற்க்கு எல்லாம் ஆதாரம் கேட்டு கொண்டு இருக்கும் இந்த Conspiracy theoryகளை இந்த அளவுக்கு தான் மதிக்க முடியும்.

said...

கருத்து,

எந்த உண்மையும் பொய் என்று திரித்து கூறலாம் எந்த பொய்யையும் உண்மை என்று திரித்து கூறலாம். இரண்டு தரப்பிலும் கேட்க ஆட்கள் இருப்பார்கள்.

கட்டிடங்களை விழுந்ததை காட்டி அதன் காரண கர்த்த ஒசாமாவை ஒப்படைக்க கெடு வைத்து ஆப்கானை தாக்கியது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும்.

ஈராக்கை தாக்கியது அமெரிக்கா மட்டும்தான் அதுவும் புஷ் என்ற லூசின் பிடிவாதத்தால் மட்டும்தான்
அதுவும் சவூதிக்கு மாற்றாக ஈராக் இருக்கும் என்பதால்

அமெரிக்காவிற்கு மலிவான எண்ணை வேண்டும். அது சவூதியாகவோ அல்லது ஈராக் ஆகவோ இருந்தால் என்ன
ஆனால் சவூதிக்கு அமெரிக்கா வேண்டும். சவூதி மன்னர் குடும்பம் அமெரிக்க ஆதரவு இல்லையென்றால் அழிந்துவிடும் அவர்களுடைய சொந்த மக்களால். சவூதியில் உள்ளூர் மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் இருப்பது தெரியுமா உங்களுக்கு? அவர்கள் கடின வேலைகளை செய்ய விருப்பமில்லை என்பது வேறு விஷயம்


இந்த மாதிரி எதிர் விவாதங்கள் செய்து புத்தகம். படம் இவற்றின் மூலம் காசு பார்ப்பது அமெரிக்கர்களின் கை வந்த கலை.

ஒரே ஒரு அடிப்படை கேள்வி

அந்த கட்டிடங்களை இரவோடு இரவாக controlled implode செய்து அந்த பழியை தீவிரவாதிகளின் மீது போட்டு அவர்களை பழிவாங்க ஆப்கானிஸ்தான், ஈராக் மீது படை எடுத்திருக்கலாமே?

அதைவிட்டு விமானங்களை கடத்தி அதை மோதவிட்டு பார்த்து இந்த உலகமே பார்த்து கொண்டிருக்கும் வேளையில் சதி செய்வார்களா? சினிமாவில் வரும் வேடிக்கை வில்லன்கள் தான் செய்வார்கள். ஒரு அரசு அதுவும் ஜனநாயக அரசு செய்யும் என்பது நம்பமுடியவில்லை. இது அரசு தான் செய்தது என்ரு சொல்லி விளம்பரங்கள் பணமும் சேர்க்கலாம் மற்றபடி உபயோகமில்லை

said...

மாசிலா,


நிலவைப் பற்றி நாசா அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளித்துவிட்டது

இன்னும் சில நம்பிக்கைகள் உள்ளன

1. பூமி தட்டை. சூரியனும் சந்திரனும் அதனை சுற்றி வருகின்றன

2. எண்ணை இன்னும் 50 ஆண்டுகளில் தீர்ந்துவிடும். (இதனை தவறு என்று உறுதி படுத்திய வெளிகண்ட நாதரின் "எண்ணை என்பது எதுவரை" என்ற பதிவை பார்க்கவும்)

மேலும் சில "நம்பிக்கை"கள் உள்ளன அதை நம்பும் கூட்டமும் உள்ளது

said...

//அந்த கட்டிடங்களை இரவோடு இரவாக controlled implode செய்து அந்த பழியை தீவிரவாதிகளின் மீது போட்டு அவர்களை பழிவாங்க ஆப்கானிஸ்தான், ஈராக் மீது படை எடுத்திருக்கலாமே?//

அதுக்குத்தான் முதலிலேயே பதில் சொல்லியிருக்காரே திரு உதயகுமார்.

//அமெரிக்க அரசாங்கத்தில் செல்வாக்குடன் உள்ள ஒரு சில பேரால், இப்பொழுதைய அமெரிக்க அரசாங்கத்தில் உள்ள சில முக்கியமானவர்களுடன்,திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதல், நம் தமிழ் படங்களில் அரசியல்வாதிகளால் தூண்டபட்டு அப்பாவி பொது மக்களை அழிக்கும் சம்பங்கள் போல! (குறிப்பாக ஷங்கரின், இந்தியன் படத்தை ஞாபகம் படுத்திக் கொள்ளுங்கள், அதாவது வேண்டுமென்றே முதலமைச்சர் கலவரைத்தை தூண்டிவிட்டு, அப்பாவி மாணவர், மற்றும் பொது மக்களை கொல்லும் காட்சியை மனதில் கொள்ளுங்கள்!)//

உங்கள் நம்பிக்கைகள் லிஸ்டில் அமெரிக்கா ரொம்ப நல்ல பிள்ளை என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் சிவா.