Wednesday, September 06, 2006

வேட்டையாடு விளையாடு- புலன்விசாரணை (Forensic Science) சறுக்கல்கள்!

போன தடவை நான் எழுதிய World Trade Center-சமீபத்தில் பார்த்த படங்கள்! பதிவிலே பின்னோட்டமிட்ட பெத்தராயுடு, 'என்ன வேட்டையாடு விளையாடு படம் பார்த்திட்டீங்களா, அதை பத்தி ஒரு விமரிசனப் பதிவுப்போட்டு தாக்குங்கன்னு சொல்லியிருந்தாரு'! படத்தை எதாவது தியோட்டர்ல போய் பார்த்து எழுதலாம்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்! நம்ம பாஸ்டன் பாலாவும் நிறைய விளம்பரம்லாம் கொடுத்து படம் வர்றதுக்கு முன்னடியே நம்மலை தயார் படுத்திட்டாரு, அப்புறம் படம் வந்து சூட்டோட விமரிசனமும் எழுதி, சுஜாதாவோட நைலான் கயிறு கதை எல்லாம் எழுதி நம்ம ஆர்வத்தையும் தூண்டி விட்டாரு. ஆனா வேலை அதிகம் இருந்ததாலே படத்தை தியோட்டர்ல போய் பார்க்கமா, வழக்கமா இணையம் தரும் உதவியின் பேரில் பார்ப்பது போல படம் பார்த்தாச்சு! நிறைய பேரு விமரிசனம் எழுதி போட்டுட்டாங்க! ஆனா ஒன்னு தெரியுமா, இந்த படம் மசலாவா, கமல் நடிச்சி வந்திருந்தாலும், இந்த படத்தோட முக்கியமான ஒரு சங்கதி என்னான்னா, அதான் போலீஸ்காரங்க பண்ணும் புலன் விசாரணை, அதாவது இதை இங்கிலீஷ்ல 'Forensic'ன்னு சொல்லுவாங்க! அதாவது இந்த 'Forensic Science'ங்கிறது ஒரு பெரிய விஞ்ஞானம்! ஆனா இந்த படத்திலே படு தமாஷா சில விசயங்களை சித்தரிச்சு படம் புடிச்சிருந்தாங்க! இந்த புலன்விசாரணை செஞ்சு ஆராஞ்சு கொலைகாரனை கண்டுபிடிக்கிறது அவ்வளவு லேசுப்பட்ட காரியமில்லை, அதுக்குப் பின்னாடி இருக்கும் கஷ்ட நஷ்டங்களை பத்தி உங்கள்ல எத்தனை பேருக்கு தெரியுமோ தெரியாதோ, இதோ அதைப் பத்தி கொஞ்சம் பார்ப்போமா!

இந்த படத்திலே விஷேசமானது என்னான்னா, நாய்க்கு இருக்கிற மோப்ப சக்தி மாதிரி, கமலுக்கு இருக்குமாம், அதாவது முதக்கொலையை, கீரனூர்ல கண்டுபிடிச்சிலும் சரி, அடுத்து நியூ ஜெர்சியிலே, பூட்டை உடைச்சிக்கிட்டு அடுத்தவன் வீட்டு பங்களா வளாகத்திலே போய் நோண்டி நாலு டெட் பாடியை கண்டுபிடிக்கிறதிலேயாகட்டும் சரி நாயைவிட மோப்ப சக்தி அதிகம் போங்க நம்ம கமலுக்கு! முதல்ல க்ரைம் சீன் ரெஸ்பான்ஸ் கைட்லைன்ஸ்னு ஒன்னு இருக்கு, அதை கடை பிடிச்சதா படத்திலே காட்டல, சினிமான்னா சுழுவா கொலையாளியை கண்டுபிடிக்கிற மாதிரி இல்லை நிஜத்திலே! அதுக்குன்னு சில கோட்பாடுகள் இருக்கு! அதாவது க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷன்'ங்கிறது ஒரு முக்கியமான தடயங்கள் சேகரிக்கும் தருணம்!

அதாவது கவனமாய், மிகவும் பொறுப்புடன் அனைத்து தடயங்களையும் சேகரித்து அதை சரியான முறையில் விசாரணைக்கு எடுத்து சென்று குற்றவாளியை கண்டு பிடித்து தண்டனை வாங்கி கொடுக்க உதவும் இந்த முதல் கட்ட புலன் விசாரணை அவ்வளவு சுலபமான காரியமில்லை, நம் தமிழ் மற்றும் ஆங்கில படங்களில் வருவது போல்! அதாவது புலன் விசாரணை செய்பவர் உடனடியாக எந்த ஒரு தீர்க்கத்திலும் குதித்து விடக்கூடாது! தெளிந்த சிந்தனையோடும், கிடைக்கும் மிகக்குறைந்த தடயங்களும், விஷயங்களையும் கொண்டு அனைத்து கோணங்களிலும் ஆராய்ந்து பலவாறாக குற்றங்களின் தன்மையை அறிந்து அதை முறையாக, சம்பவம் நடந்த இடத்தில் உள்ள எந்த ஒரு சிறு விசயங்களையும் விட்டுவிடாமல் அனைத்தையும் பதிவு செய்து குற்ற பத்திரிக்கை செய்வது என்பது மிகவும் கடினமான ஒன்று! இக்குற்ற பத்திரிக்கையின் சாரத்தில் சம்பவம் நிகழ்ந்த அனைத்து விஷயங்களையும், குற்றம் நடந்து முடிந்து பின் மாறும் அமசங்களை, அதாவது எரிய்ம் விளக்கினையோ இல்லை அனைந்த விளக்கினையோ, திரைச்சீலையின் மூடபட்டிருந்த நிலையையோ, இல்லை திறந்திருந்த நிலையையோ, நகர்த்தப்பட்ட தட்டுமுட்டு சாமன்கள், மற்றும் மரச்சாம்னகள் அனைத்தையும் சரியான முறையில் பதிவு செய்ய வேண்டும்!

சில தடயங்கள், அதாவது காலடி தடயம், துப்பாக்கியால் சுடப்பட்ட அந்த அச்சுகள், என மிகச்சுலபமாக அழியக்கூடிய தடையங்களை முதலில், முக்கியமாக, பத்திரமாக சேகரிக்க வேண்டும்! அது போல இது தற்கொலையா, இல்லை தன்னை காத்துக்க் கொள்ள செய்யப்பட்ட கொலையா, இல்லை திட்டமிட்ட கொலையா என பலகோணங்களில் விவாதிக்க கூடிய அனைத்து விஷயங்கள் பொருட்கள், விவாதத்திற்கு ஆதரவாகவோ, இல்லை மறுத்து வாதிடவோ உண்டாகக்கூடிய அத்தனை தடயங்கலையும் சேகரிப்பது இந்த க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷனின் ஒரு அங்கமாகும்! அது மட்டுமின்றி பலியானவரின் தடயங்கள் மட்டுமின்றி, அதாவது அவரின் மணிபர்ஸ், அவர் வந்த வாகனம் என்றல்லாமல் கொலையாளி விட்டு சென்ற தடயங்களான அவனது முகமூடி,இல்லை அவன் அணிந்திருந்த அணிகலனகள் என ஒன்றையும் விட்டு வைக்கக்கூடாது, அனைத்தையும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்க வேண்டும்! இந்த படத்தில் வரும் ருத்திராட்ச கொட்டை போல் நான் மேலே கூறியது! இந்த படத்தில் கமல் முதல் கொலையை கண்டு பிடிப்பது போல் கொலை நடந்த இடம் என்பது வெறும் கொலையுண்ட உடல் கிடைக்கும் இடமாக கருதாமல், கொலையாளி அங்கு நடத்திய அத்தனை செய்கைகளுக்குண்டான ஆதாரத்தையும், அவன் அங்கு வந்து குற்றம் நிகழ்த்திவிட்டு தப்பி சென்ற வழித்தடம்,வாகன ஊர்தி என அனைத்தையும் இனம் கண்டு கொள்ளுவது மிகமுக்கியம்! பொதுவாக நீங்கள் படங்களில் பார்ப்பது போல் அடிக்கடி சேகரிக்கப்படும் தடையங்களாகிய ஃபிங்கர்பிரிண்ட்ஸ், ஃபூட்பிரிண்ட்ஸ், இரத்தக்கறைகள் மட்டுமின்றி, கையில்கிடைக்கும் எந்த பொருளும் ஆதார தடையங்களாக கண்டு கொண்டு எடுத்து செல்லப்படவேண்டும்! எல்லா பொருட்களும், எந்த தடையமும் குற்றவாளியையும், பலியானவரையும் மிக அருகில் இணைக்கும்படி இருந்தால், அததனையும் திரட்டி எடுக்கப்படவேண்டும்! சில சமயம் ஷாப்பிங் லிஸ்ட் மாதிரி வெறும் ஃபிங்கர் பிரிண்ட்ஸ், இரத்தக்கறை மட்டும் ஆதார தடங்களாக சேகரிப்பதில் எந்த புண்ணியமில்லை! கொலையுண்டவரின் அருகில் கிடக்கும் ஒரு சிறு தீக்குச்சி மிக சிறந்த சாட்சியமாக வாய்ப்பிருக்கிறது சந்தேகப்படும் கொலையாளி வைத்திருக்கும் மேட்ச்பாக்ஸ்டுடன் சம்பந்தபடுத்தி முடிச்சவிழ்க்கையில்! குற்றவாளிபயன்படுத்தும் ஆயுதங்கள் சிறந்த தடையங்கள், ஆனால் அவற்றை அவர்கள் அழித்துவிட வாய்ப்புண்டு, ஆனால் தலை முடி, நகம், என சில மைக்ரோஸோக்பிக் ஆதாரங்கள் முக்கிய தடயங்களாக மாற வாய்ப்பிருக்கிறது! அவற்றை திரட்ட தடையில்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். சிலசமயம் கொலையுண்டவரின் உடலிலிருந்து துணிகளை அகற்றி நிர்வாணமாக எடுத்து செல்லப்படும் வேலையில் அதற்குண்டான் சரியான அணுகுமுறையை கடைப்பிடிப்பது மிக முக்கியம்!

இந்த படத்தில் வெறும் கமல் மட்டும், இல்லை அந்த நியுயார்க் போலீஸ்காரர் ஒருத்தரை கூட்டி சென்று க்ரைம் சீன் இன்வெஸ்டிகேஷன் செய்வதாக காண்பிப்பார்கள். ஆனால் உண்மையில் இதற்கென ஒரு டீம்மே இருக்கிறது, அதாவது டீம் லீடர், போட்டோகிராபர், இல்லை போட்டொகிராபிக் லாக் ரெக்கார்டர், செக்ட்ச் போடுபவர், தடயங்களை பதிவு செய்பவர், தடயங்களை மீட்டு எடுப்பவர் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் என ஒரு பெரிய டீமே இருக்கிறது. இந்த படத்தில் அதை எல்லாம் இருக்கிறமாதிரி காமித்தார்களா என்று தெரியவில்லை!

இந்த சர்ச்சு ஆப்ரேஷன் காமிப்பது படு வேடிக்கையாக இருக்கும் இந்த படத்தில். அதுவும் அமெரிக்காவில் கமலும் அந்த ஆன்டர்ஷன் என்கிற அமெரிக்க போலீஸ்காரரும் போய் பொணத்தை நோண்டி எடுப்பது படு வேடிக்கை! இந்த சர்ச் ஆப்ரேஷன் எனபது முதலில் தயார் படுத்திக் கொள்வது, அதாவது சட்டபடி தயார்படுத்திக் கொள்வது (Evaluate the current legal ramifications of crime scene searches (e.g., obtaining of search warrants) இதெல்லாம் காதுல பூசுத்திட்டு நம்ம கமல் பூட்ட உடைச்சி 'வழிபோக்கர்கள் தண்டிக்கப்படுவார்கள்' ன்னு பெரிசா கொட்டை எழுத்திலே ஆங்கிலத்திலே எழுதி வச்சதையும் காமிச்சிட்டு, கமல் பூட்டை உடச்சி உள்ளே நுழைவது படு தாமஷ்! அடுத்து ஆப்ரேஷன் ஆவறதுக்கு முன்னே சமபந்த பட்டவஙககிட்டே பேசறது, சரியான உடுப்பு, தொடர்பு சாதனங்கள், லைட்டிங், ஷெல்டர், வாகனம், மருத்தவ உதவி, பாதுகாப்பு, மற்ற சாதனங்கள் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம், இதை எல்லாம் தயார் பண்ணிட்டு ஆரம்பிக்கணும்!

அப்புறம் சர்ச் ஆப்ரேஷனை எப்படி அப்ரோச் பண்றது, சர்ச் பவுண்டரி, அதான் எல்லையை நிர்மானிக்கிறது, ஃபிஸிக்கல் எவிடன்ஸ் என்னென்னான்னு ஆராய்றது அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! அப்புறம் போட்டோகிராபிக் டெபிக்ஷன், சீனை செக்ட்ச் போட்டு வரையறது, டீட்டையில் சர்ச் நடத்துறது, ஃபிஸிக்கல் எவிடன்ஸ் எல்லாத்தயும் ரெக்கார்ட் பண்றது, அப்புறம் ஃபனைல் சர்வே, அப்பறம் கடைசியா க்ரைம் சீன்னை ரிலீஸ் பண்றது அப்படின்னு ஏகப்பட்டது இருக்கு! நம்ம கமலுக்கு அதெல்லாம் என்னாத்தை தெரியப்போவுது, போனமா, பொணத்தை தோண்டுனமா, அதுவும் 'ராகவன் ஹன்ச்'ன்னு சும்மா டைலாக் வுட்டுக்கிட்டு பொணத்தை தோண்டி எடுக்கிறது எல்லாம், நம்ம தமிழ் நாட்டு தமிழ் மக்கள்ன்னு இல்லை, அனைத்துலக தமிழ் மக்களையும் கேனயங்கன்னு நினச்சா, நீங்களும் நானும் என்ன பண்ண முடியும்!

சரி இந்த லாஜிக் எல்லாம் பார்க்காம படம் பார்த்தோமோ, போனோமான்னு இல்லாம என்னத்தை போங்கன்னு நீங்க சொல்றது கேட்குது. இருந்தாலும் இந்த தடயவியில் விஞ்ஞானம் எப்படின்னு இன்னும் நிறைய தெரிஞ்சுக்குனும்னு ஆசைப்பட்டாலும் , செக்ஸ் கேஸ்ல விந்து எப்படி எடுத்து கற்பழிச்சவனை கண்டு புடிக்கிறாங்கன்னும் தெரிஞ்சுக்கிட ஆசைப்பட்டாலும் நிறைய தகவல் தளங்கள் இருக்கு! பார்த்து படிங்க! இல்லே, ஆகா, இயக்குநர் கெளதம் இந்த தடயவியலை கரைச்சுக்குடிச்சு, மேல்நாட்டுக்காரனைவிட அம்சமா படம் எடுத்து அசத்திட்டாருன்னு விசலடிச்சாங் குஞ்சுங்க மாதிரி சொல்லிக்கிட்டுத் திரிய வேண்டியது தான்!

14 comments:

said...

//கெளதம் இந்த தடவியலை கரைச்சுக்குடிச்ச//

தடவியலா, தடயவியலா?

எது எப்படியோ, ரொம்ம CSI பாக்காதீங்க :-)

said...

நாதரே நீங்க சொல்ற பாணியிலே கமலை வைச்சு வேண M.S Forensic Science படிக்கிறவங்களுக்கு ஒரு Documentary படம் எடுக்கலாம்.

அடுத்தவன் பணத்தைப் போட்டு திருமணஞ்சேரியில இருக்கிற ஒருத்தருக்கு இதெல்லாம் விளக்கிறதுகுள்ள பொழுது பொக்குன்னு விடிஞ்சுரும்.

நாம சரக்கெல்லாம் படத்தில காமிக்க முடியுமா...? என்னமோ சொல்றீங்க... சில படங்கள்லெ லாஜிக்கே இல்லாம வருது... அதெல்லாம் எங்க போயி சொல்றது.

நீங்கள் சொல்லும் படி நான் Law and Order மற்றும் Life Channel ஷோக்களில் பார்த்திருக்கிறேன்... அது போன்று சினிமாக்களில் சாத்தியமா?

said...

பார்த்தா, பிழை திருத்தம் செய்து விட்டேன், சுட்டி காட்டியதற்கு நன்றி!

இந்த இங்கிலீஷ்ல பேசிக்கிட்டே, டைப் அடிச்சு தமிழ் எழுத்தை கொண்டு வர்றதுல கொஞ்சம் பிராபளம் தான்! இந்த இகலப்பை கண்டு பிடிச்ச மாதிரி தானே தமிழ் பிழைத்திருத்தம் செய்ற மாதிரி மென்பொருள் விற்பண்ணர்கள் யாராச்சும் கண்டுபிடிச்சா, எங்களை மாதிரி இங்கலீஷ் கைநாட்டுங்களுக்கு உதவியா இருக்கும்-;)

said...

வாங்க தெக்கி, இது ரொம்ப ஒன்னும் கம்பசூத்திரமில்லை, காட்சி அமைப்புகளை கொஞ்சம் புத்திசாலித்தனமா வச்சாலே போதும்! திருமணஞ்சேரியிலே இருக்கிற நம்மாளுங்க உங்களுக்கு விளக்கம் சொல்லுவான்! தப்பா எடை போட வேணாம்! மொத்தத்திலே குறை சொல்லுல, இந்த விஞ்ஞானத் தத்துவங்களோட ஒட்டி எடுக்க கூடாதாங்கிறது தான் என் ஆதங்கம். நம்ம் நாட்ல இருக்கிறவரைக்கும், அமெரிக்காவிலே இருக்கிறவன், அதுவும் இங்கிலீஷ் பேசினா அதி புத்திசாலின்னு நம்பிக்கிட்டிருந்தோமே, இங்க வந்து பார்த்தாலே தெரியுது, மக்குபிளாஸ்த்திரி இருக்கானுங்க, நம்ம திருமணஞ்சேரி ஆளு, இதை விட விளைஞ்சவனா இருப்பான்! அப்படி இருக்கிற சமூதாயத்திலே தெளிவா புரியும் படி கொஞசம் லாஜிக்கோட விஞ்ஞானத்தையும் கலந்து எடுக்கலை! ஏன் மேட்ரிக்ஸ் மாதிரி கம்ப்யூட்டர்குள்ள பூந்து ஆச்சிரியமா கதை தொகுப்பு பண்ணி, கொஞ்சம் கற்பனை அதிகம்னாலும், புரிஞ்சா, அடி இப்படியும் சாத்தியமாகும்னு நம்ம நினைக்கத் தோணல! ஏன் நம்ம இன்னும் அது மாதிரி எடுக்க மாட்டோங்கிரறது தான் என் கேள்வி! தொழில்நுட்பத்திலே எல்லாம் தெரிஞ்சுவச்சுக்கிட்டு கடைசியிலே கதைன்னு வர்றப்ப ஷிபான் சேலை கட்டிக்கிட்டு மரத்தை சுத்தி ஓடறததான் அழகா எடுக்கிறோம்!

said...

நல்ல பதிவு நாரதரே,
//திருமணஞ்சேரியிலே இருக்கிற நம்மாளுங்க உங்களுக்கு விளக்கம் சொல்லுவான்! தப்பா எடை போட வேணாம்!//
வழிமொழிகிறேன். படம் ரொம்ப சொதப்பல். :(( நல்ல பாட்டு எல்லாம் வேஸ்டு ஆயிடிச்சி. முக்கியமா நம்ம கமலினியை வேஸ்டு பண்ணிட்டாங்கப்பா..

said...

nalla padhivu valthukkal

said...

//ஆகா, இயக்குநர் கெளதம் இந்த தடயவியலை கரைச்சுக்குடிச்சு, மேல்நாட்டுக்காரனைவிட அம்சமா படம் எடுத்து அசத்திட்டாருன்னு விசலடிச்சாங் குஞ்சுங்க மாதிரி சொல்லிக்கிட்டுத் திரிய வேண்டியது தான்!//

your argument seems to be absurd! Basically, this is not a documentary film. I beilieve this film is a part of its genre presenting a new dimension to tamil cinema. To appreciate Gautam and his team, one need not be a விசலடிச்சாங் குஞ்சு! he needs to be an unprejudiced viewerl thats all!....if you could not appreciate the cinematography, editing, music and the acting (especially, Kamal and Prakash Raj)....i am sorry, there no point in discussing on the subject any further....

said...

வருகைக்கு நன்றி கார்த்திக் பிரபு!

said...

சந்தோஷ, அப்படி சொதப்பலா எடுக்கல,ஆனா சில லாஜிக் இடிக்குது, அவ்வளவே! மற்றபடி நல்ல பொழுது போக்கு அம்சம் உள்ள படம் தான்! ஆன் சில பேரு புலன்விசாரணை பாடம் எல்லாம் கரச்சி குடிச்சி என்னமோ மேதாவி தனமா படம் எடுத்திருக்காருன்னு புலம்புனதாலே தான் அந்த விஞ்ஞானம் என்னான்னு சொல்லலாம்முன்னு எழுதின பதிவு தான், வேறொன்னமில்லை!

said...

வாஙக பாரதிய நவீன இளவரசரே! நான் டாக்குமென்ட்ரி படம் எடுன்னு சொல்லலியே, படம் எடுக்கறப்ப உண்மையான விஞஞானம் கலந்து எடுங்கன்னு தானே சொல்றேன், சும்மா கீரோத்தனமா கன்ச்ன்னு எல்லாம் சொல்லி டெட்பாடியை கண்டு பிடிக்கிரது காதிலே பூ சுத்திர வேலை தானே! நீங்க சொல்ற புது டைமன்ஸன் என்னான்னு தெரியல்லை! 'ரகசிய போலீஸ்', 'ராஜா'ன்னு அந்த காலத்திலேயே துப்பு துலக்கற, தேடல், வேட்டையாடல் போனறபடங்கள் ஜனரஞ்சகமா பொழுது போக்கா வந்துருக்கு! அப்புறம் சினிமெட்டோகிராபி, பிக்சரைஷேஷன் பத்தி நான் நிறைய எழுதி இருக்கேன், வேணும்னா என்னோட பதிவுகள்ல சிலதை படிங்க! நீங்க சொல்ற அளவுக்கு இதிலே கை நாட்டு இல்லை, இதே கதின்னு கிடந்து நிறைய காலம், வேணும்னா என்னோட அரிதாரம் தொடர் படிச்சுப் பாருங்க, விளங்கும்!

said...

சூப்பரா எழுதியிருக்கீங்க....

நாற்பது, நாற்பத்தைந்து நிமிடம் ஓடுகிற எண்ணற்ற தொலைக்காட்சி தொடர்களிலேயே சிறப்பாக விற்விறுப்பாக காட்டுகிறார்கள். நைலான் கயிற்றில் கூட சுஜாதா எளிமையாக முதல் அத்தியாயத்திலேயே தேவைக்கேற்ப விளக்குகிறார். நான் பார்த்த சிலவற்றில் மேலோட்டமான அலசலுக்கு ப்ராக்டிஸ், ஜஸ்டிஸ், லா & ஆர்டர். விலாவாரியாக அலச சி.எஸ்.ஐ. இன்னும் நிறைய இருக்கும்.

said...

சார்,

அருமையாக எழுதியுள்ளீர்கள்..

//அனைத்துலக தமிழ் மக்களையும் கேனயங்கன்னு நினச்சா, நீங்களும் நானும் என்ன பண்ண முடியும்!//

நல்லா சொன்னீங்க...

பதிவுக்கு நன்றி

said...

வருகைக்கு நன்றி பாலா! நீங்க சொல்ற மாதிரி நாற்பது நிமிஷ சீரியல்கள்ல எவ்வளவு அழகா சொல்றாங்க! ஆனா நம்ம சினிமாக்கள் இந்த ஃபார்முலாக்களை வீட்டு வெளியே வர்றதே இல்லை!

said...

வாங்க சிவபால, என்ன ஆளை காணோமேன்னு பார்த்தேன்! உங்க பதிவுகள் முன்னே மாதிரி அதிகன் வர்றதில்லையே ஏன்??