Tuesday, January 23, 2007

நிழல்கள்- 'ராஜா'க்கள் படைத்த அற்புதம்!

நிழல்கள், இது என் வாழ்க்கையிலே மறக்க முடியாத படம், இந்த படத்தை பத்தி நாள் கணக்கா பேசிக்கிட்டு இருந்திருக்கோம் அப்ப, இது என்னோட இஞ்சினிரியங் காலேஜ் மூணாவது வருஷம் படிச்சப்ப அப்ப தீபாவளிக்கு ரிலீஸ் ஆச்சு, அப்ப பாரதிராஜா மேலே ஒரு கிறுக்கா இருந்த நேரம், ஏன்னா முத அஞ்சாறு படங்கள்ல அவரு செஞ்சு காமிச்ச வித்தைகள்ல மயங்கி போய் அவரு படம்னா முத நாள் தியேட்டர்ல போய் உட்கார்ந்துடுவேன்! அப்ப தான் பாலசந்தோரோட வறுமையின் நிறம் சிகப்பும் வந்தது, இரண்டுமே வேலையில்லா திண்டாட்டத்தை கருவா வச்சு வந்தது தான் ஆனா வ.நி.சி ஜனங்களுக்கு இந்த படத்தை விட பிடிச்சிருந்திச்சு, காரணம் ஏன்னா அதிலே கொஞ்சம் எல்லாருக்கும் தெரிஞ்ச கமல், ஸ்ரீதேவி நடிச்சிருந்தது தான், எஸ் வி சேகர், திலீப்புன்னு புதுசா ஆள போட்டு எடுத்திருந்தாலும் தெரிஞ்ச முகங்கங்கள்ங்கிறதாலே தியேட்டர்ங்கள்ல கூட்டம் அலை மோதிச்சு, ஆனா நிழல்கள் அவ்வளவா போகல்ல! ஆனா பாட்டுகள் எல்லாம் மக்களுக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, இதிலே தான் வைரமுத்து அறிமுகம்! 'இது ஒரு பொன்மாலை பொழுது' பாட்டை இப்பையும் கேட்டா, உண்மையிலே கஞ்சா அடிச்சிட்டு எல்லாத்தை மறந்திட்டு வேற உலகத்தை நினைச்சு மருகிறவன் மாதிரி தான் உங்களுக்கு தோணும், அது வைரமுத்தோட வரிகளுக்கும் இளையராஜாவோட ம்யூசிக் கம்போசிசனுக்கும் கிடைச்ச வெற்றி! ஆனா பார்த்தீங்கன்னா இந்த படம் டெக்னிக்கல்லா ஒரு பிரில்லியெண்ட்! இந்த படத்தை சென்னைத் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு படம் எடுக்கறதுன்னா எப்படி எடுக்கணும்னு அத்தனை டிப்பார்ட்மெண்ட்லேயும் போட்டு காமிப்பாங்கன்னு என்னோட ஃபிரண்டு சொல்ல கேட்டுருக்கேன்! நம்ம ஃபிரண்டு படிச்ச நேரத்திலே தான் சுஹாசினியும் படிச்சாங்க, அந்த காலகட்டத்திலே அளப்பரை பண்ணிக்கிட்ட திரிஞ்ச அம்மணி அவங்க! அதை பத்தி வேறெ ஒரு வாட்டி அப்பறமா எழுதுறேன்! இந்த படத்தை அக்குவேறே ஆறு வேறே அலசி ஆராஞ்சி திரும்ப திரும்ப பார்த்து சிலாகிச்சிருக்கோம்!

முதல்ல அந்த டைட்டில் சீக்குவன்ஸ், அதாவது இளம் பட்டதாரிகள் பட்டம் வாங்கிட்டு அப்படியே கிராஜிவேஷன் சர்டிபிகேட்டை எடுத்துக்கிட்டு கடற்கரையிலே ஒடறமாதிரி காட்சி வரும், அதுக்கு நம்ம ராஜா பேக்ரவுண்டு ம்யூசிக் பட்டையை கிளப்பும், அப்ப ராஜா பாரதிராஜா படத்துக்குன்னா துள்ளலோட ம்யூசிக் போட்ட நேரம், வெறும் பாட்டுகள் தான் அதிகமா வெகுஜனங்களுக்கு பிடிச்சி தெரிஞ்சிருக்கும் ஆனா இந்த பேக்ரவுண்ட் ம்யூசிக் யாராவது இப்படிதான்னு சொல்லிக்கேட்டா உங்களுக்கு திருப்பிக் கேட்கப் பிடிக்கும்!ஆரம்பத்திலே 'Congratulations' ன்னு சொல்லிட்டு அப்பறம் வர மெலோடியஸான ஹம்மிங், அதுக்கப்பறம் வர சின்ன கிடார் லூப்பு, அப்பறமா ஒரு வயலினோட சேர்ந்த 'haunting flute bit', பிறகு ஒரு 'freewheeling fast beat', அதை அப்படியே கட் பண்ணிட்டு பிச்சைக்காரர்கள், 'அம்மா பிச்சை போடுங்கம்மான்னு' ஒரு அழுகையோட கூடிய சப்தம், அப்பறம் திருப்பி கொண்டாட்டம் அமர்க்களம்னு திரும்பும் காட்சிகள் அப்படின்னு வாழ்க்கையிலே தான் எத்தனை நிழல்கள் (shades) இருக்குங்கிறதை காமிச்சிட்டு கடைசியிலே ஒரு நையாண்டி தாளத்தோட 'We want job, we want job' ன்னு வர்ற அந்த கோரஸ், பாரதிராஜாவும் இளையராஜாவும் கலக்கி இருப்பாங்க! வேணும்னா அந்த விஷுவல்ஸை பாருங்க!

அடுத்த கிளிப்லே இளைஞர்களுக்கே உண்டான வீம்பு, எதையும் வளைஞ்சு கொடுத்து வாழ்க்கையிலே முன்னேறமா, பஞ்சமா, பட்டினியா போறது, வேலை வெட்டி இல்லாம ஒரு கிளாஸ் டீ தண்ணிக்கு வழி இல்லாம கடஞ்சொல்லி காலம் கழிக்கிறதை அழகா சின்ன சீக்வுன்ஸ்ல எடுத்திருப்பாரு! இந்த கிளிப்பிலே பாரதிராஜாவும் வந்து நடிச்சிட்டு போயிருப்பாரு! இதிலே இன்னொரு கலக்கலான பேக்ரெவுண்டு ம்யூசிக் என்னான்னா, நிழல்கள் ரவி கைத்தட்டி டீக்கடைக்காரனை கூப்பிடறதை தப்பா நம்மலை தான் டாவு வுடறான்னு காமிக்கும் அந்த காட்சியின் பிண்ணனி, சும்மா சொல்லக்கூடாது இளையராஜ பின்னியிருப்பாரு, பாருங்களேன்!

அடுத்து நம்ம ராஜசேகர், கஞ்சா அடிச்சிட்டு அவரோட உலகமே தனின்னு இருக்கிற ஆளு! இது மாதிரி எனக்கொரு ஃபிரண்ட் இருந்தான், அவன் அப்படியே டிட்டோ, அவன் பேசறதுக்கும், அவன் இருக்கிற ஆள் நிலமையை பார்க்கிறதுக்கும் சம்பந்தமே இருக்காது, இது மாதிரி கவித்துமா எதாவது சொல்லிக்கிட்டு அலைவான், ஆனா ராத்திரி எட்டு மணிக்கு மேலே பொட்டணத்தை சுருட்டிட்டார்னா, அதுக்கப்பறம் அவரு உலகமே தனி, ஆனா அப்பேர்பட்ட ஆளு இன்னைக்கு எங்கருக்கிறான்னு கேட்டா ஆச்சிரியப்படுவீங்க, இப்போ 'Intel' கம்பெனியில்ல டைரக்டர், இங்க தான் அமெரிக்காவிலே குப்பை கொட்டிக்கிட்டிருக்கான்! சரி இந்த 'பொன்மாலைப்பொழுது' வைரமுத்தோட வைரம்! அப்ப எங்க காலேஜ் சர்க்கிள்ல 'மு மேத்தா' இருந்த அளவுக்கு வைரமுத்து அவ்வளவு பிரபலமில்லை, ஆனா இந்த ஒரே பாட்டு அவரு அடுத்த நாளே எங்கேயோ கொண்டி உட்கார வச்சிடுச்சு! பாரதிராஜா, இளையராஜாவின் அற்புத கண்டுபிடிப்பு தமிழ் திரை உலகத்துக்கு, அப்பறம் உன் சத்ததாலே என் சிந்து போச்சுன்னும், உன் சிந்தாலே என் சந்தம் போச்சுன்னும் சண்டை போட்டுக்கிட்டாங்க! ஆனா இரண்டு பேரும் சேர்ந்து போட்ட பல பாடல்கள், அதுவும் கிராமிய மணம் கமழும் பாடல்கள் இன்னைக்கும் நீங்க கேடுக்கிட்டே இருக்கலாம். இந்த ஜோடி பிரிஞ்சதாலே நமக்கு தான் பெரிய இழப்பு!

அடுத்த ஒரு கிளிப்பு ராஜசேகர் கேரெக்டரை சித்தரிச்சிருக்கும் விதம், அப்பறம் அவருக்கும் ரோகிணிக்கும் ஏற்படும் ஒரு சிநேகிதம், அழகா கவிதை மாதிரி சொல்லி இருப்பாங்க! ஜென்ரலா இந்த மாதிரி கேரெக்டர் எப்பவுமே ஒரு அலாதி தான், இது மாதிரி ஆழமா நல்ல சிந்தனைகள் இருக்கும், ஆனா அதை வெளியிலே சொல்லும் போது அதுக்கு தகுந்த வரவேற்பு இருக்காது, அதனாலே மனசு ஒடிஞ்சு போவாங்க! அந்த சிந்தனை மற்றும் எண்ணங்களை யாரும் உற்சாகபடுத்தாத போது நொடிஞ்சிடுவாங்க! அப்ப தன்னை பாராட்டி நெருங்கி வர்றவங்கள்ட்ட நட்பு பாராட்டி அதை வேறே பல ரூபத்திலே உறவாக்கிக்க ஆசைப்படுவாங்க, இது போன்ற உணர்வுகளோட போராடி அதற்கிடையிலே ஏற்படும் சிக்கல்கள் நிறைய மலையாளப் படங்கள்ல நல்லா சொல்லி வந்திருக்கும், ஆனா இதுலே வேறெ மாதிரி சிந்திக்கிறவனை, பெண் சிநேகத்தை காதல்னு பட்டுன்னு எடுத்துக்கிற சராசரி மனிதனா ராஜசேகர் கேரெக்டரை சித்தரிச்சது கொஞ்சம் வலுக்கல்! ஆனா இதிலே நம்ம இளையராஜா பிண்ணனியிலே பட்டையை கிளப்பி இருப்பாரு! பாருங்களேன்!


அடுத்து நிழல்கள் ரவிக்கும் ரோகிணிக்கும் ஏற்படும் காதல், எவ்வளவோ படங்கள்ல பாரதிராஜா காதல் பிறக்கும் விதம் பத்தி சொல்லி இருந்தாலும் இந்த படத்திலே சித்திரிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு! ரோமியோ ஜீலியட் கதை சொல்லி, சோலோலிக்கி(Soliloquy) டைலாக், இந்த ஆங்கில இலக்கியம் படிச்சிவங்க லயிச்சு போற ஷேக்ஸ்பியர் காதல் கதைகள் வச்சு காதலை பில்டப் பண்ணறது கொஞ்சம் ரசனையோட இருக்கும்! டீக்கடை பையனை கைத்தட்டி கூப்பிட்டதை தப்ப புரிஞ்சிக்கிட்டோமுன்னு பிறகு தெரிஞ்சுக்கிட்டு அவருக்கிட்ட பரிவா காதல் சிநேகம் கொள்ள முயற்சிக்கும் ரோகினி அதை தொடர்ந்து வரும் பேக்ரெண்ட் கம்மிங், முக்கியமான ஒரு பீஸு, அதை நல்லா கேளுங்க! அப்பறம் வர்ற 'பூங்கதவே தாழ் திறவாய்' பாட்டு ஒரு கிளாஸ்! என்ன அந்த புது முகம் ரோகிணி அவ்வளவு சிறப்பா செய்யலை, வேற யாராவது செஞ்சிருந்தா கிளாஸா இருந்திருக்கும், பாவம் எவ்வளவு கஷ்டபட்டும் பாரதிராஜா ஒரு ராதாவையோ, இல்லை ரேவதியையோ இந்த படத்திலே உண்டு பண்ண முடியல்லை, அதுவே படத்துக்கு பெரிய அடி,ஆனா டெக்னிக்லா திரைக்கதை, எடிட்டிங், பேக்ரவுண்டு ம்யூசிக்னு சும்மா கிச்சுன்னு நின்னப்படம் இது!

அடுத்தது இந்த 'பூங்கதவே தாழ்திறவாய்' பாட்டு, இதை பாடுனது தீபன் சக்கரவர்த்தியும், உமா ரமணனும்! உமா ரமணனுக்கு இது முதப்படம். அப்ப 70 களின் கடைசியிலே மெட்ராஸ்ல கலக்கிக்கிட்டு இருந்து ஆர்ச்சஸ்ட்ரா குழுவிலே இரண்டு பேரோடது ரொம்ப பாப்புலர், ஒன்னு அபஸ்வரம் ராம்ஜியோடது, இன்னொன்னு ஏ வி ரமணன் குழுவோடது, அதான் சன் டிவியிலே சப்தஸ்வரங்கள் நடத்துவார்ல்ல, அவருதான், அப்ப அவர் குழுவிலே பாட வந்த உமாவை அப்பறம் லவ் பண்ணி அவர் கல்யாணம் பண்ணிகிட்டது எல்லாருக்கும் தெரியும்! அப்ப கச்சேரிகள்ல ரமணன் பாடி பட்டையை கிளப்புவாரு, ஆனா அவருக்கு சினிமாவிலே சான்ஸ் கிடைக்கல்ல! ஆனா உமா ரமணனை வச்சு பல அற்புதமான பாடல்களை இளையராஜா கொடுத்திருக்கிறார். இன்னைக்கும் அன்னைக்கு பாடினமாதிரி அமைதியா பாடிக்கிட்டு இருக்காங்க கச்சேரியிலே எல்லாம், அதான் வீடியோ பார்க்கிறேன்ல்ல! அப்ப ஜென்சி கல்யாணமாயி கேரளா போனதுக்கப்பறம் இளையராஜாக்கு ரெகுலரா பாடிக்கிட்டிருக்கிற சிங்கர்ல இருந்து ஒரு மாறு பட்ட குரல் கொண்ட ஆளுங்க தேவைப்பட்டாங்க, ஏன்னா தன் பாடலகளை தனியா காமிக்க அது தேவை பட்டுச்சு, அது ராஜான்னு இல்ல, இப்ப வந்த ரஹமானும் இதே உத்தியைத் தான் பண்ணுனார். அதனாலே தான் ஜானகியை பொதுவா எல்லா பாடல்கள்லயும் உபயோகிச்சாலும், சசிரேகா, எஸ்பி சைலஜா, சாருலதான்னு வேறே ஆளுங்கல வச்சு புது சப்தத்தை கொடுத்தாரு அப்ப! தீபன் சக்கரவர்த்தி, நம்ம திருச்சி லோகநாதனோட புதல்வன், நல்ல பாடல்களை பாடுனார், அப்பறம் என்ன ஆச்சோ அளையே கானோம்! இந்த பாட்ல பாரதிராஜா, வழக்கம் போல தாமரைக்குளம், முழ்கி எந்திருக்கிறதுன்னு கவர்ச்சியா காமிச்சாலும், அலைகள் ஓய்வதில்லை கார்த்திக், ராதாவை கவர்ச்சியா ரோஜா பூக்கள் உடை உடுத்தி காமிச்சு அளவுக்கு கிக் இல்லை!

அடுத்தது சந்திரசேகர் கேரெக்டர், அதாவது ஆரம்பகாலங்கள்ல எப்படி இளையராஜா கஷ்டபட்டு ம்யூசிக் டைரக்டரா வந்திருப்பாருங்கிறதை பாட்டு கட்டியே நடிச்சி காமிச்சிருப்பாரு இந்த படத்திலே, பேசமா அவரே நடிச்சிருக்கிலாம், அவரு அப்ப அப்ப சந்திரசேகர் மூலம் போட்டு காட்டும் ஹம்மிங் எல்லாம் சூப்பர், அதோட உச்சகட்டமா இந்த 'மடைதிறந்து தாவும் நதி அலை நான்' பாட்டு ரொம்ப துள்ளலோட ம்யூசிக் போட்டிருப்பார். வழக்கம் போல நம்ம பாரதிராஜா, பீச்சிலே கன்னிகளோட ஆடிப்பாடி, என்னா வெள்ளை உடை தேவதைகள் மஞ்சள், ஊதான்னு கலர் கலரா கவுனு மாட்டி கிடார் எல்லாம் வாசிச்சிக்கிட்டு அளப்பரை பண்ணி எடுத்திருப்பாரு, அதே மாதிரி இளையராஜாவும் வெள்ளையா அவர் போடற வழக்கமான சட்டை பேண்ட்ல வந்து பாடி கலக்கிருப்பாரு! சும்மா மொட்டை போட்டு பார்த்த இளையராஜாவை பார்த்தவங்க இதிலே ஸ்டைலா பாடற இளைய இளையராஜாவை பாருங்க!

சந்திரசேகர் இசை அமைக்கும் படத்துக்கு 'நிஜங்களின் தரிசனம்'னு டைட்டில் வச்சு இன்விடேஷன் எல்லாம் அடிச்சு, ரெக்கார்டிங் பண்ண போறப்ப அது நின்னு போயிடும்! கடைசியிலே வழக்கம் போல சோகமா அவரை படத்திலேருந்து தூக்கிடுவாங்க, புது ம்யூசிக் டைரக்டர்லாம் போட்டு எடுத்தா ஃபைனான்ஸ் கிடைக்காதுன்னு! அதுக்கு இளையராஜா பின்னனி ம்யூசிக் அருமையா போட்டிருப்பார், பாருங்களேன்! அதுக்கப்பறம் எல்லாமே மெலோடிரமாட்டிக்கா எல்லாமே சோகமா முடிஞ்சி, மக்கள் இது என்னாடா அழுமூஞ்சி படமா இருக்குன்னு சரியா ஓடவைக்கல, பின்ன ரோகிணி, ரவியை கொலைகாரனாக்கி, அப்பறம் சந்திரசேகரை பைத்திக்காரனாக்கி, ராஜசேகரை குளோஸ் பண்ணி, ஒன்னு பின்னாடி ஓன்னு கொலை, சாவுன்னு அந்த கடைசி 20 நிமிஷ ஃபூட்டேஜ் மொத்த படத்தையும் ஜீரோ பண்ணிடுச்சு, ரொம்ப ஸ்ட்ராங்கா மெலோடிரமாட்டிக்கா போனா அப்படி தான்! ஆனா இந்த படம் மற்ற எல்லா விதத்திலேயும் நல்லப்படம்னு கொண்டாடின ஒன்னு. நானும் துண்டு துண்டா முழுப்படம் காமிச்சிட்டேன், ஆனா மொத்தமா முழு படத்தையும் பாருங்க, நான் சொன்னதை வச்சு நீங்க ரசிக்க முடியும்!

ஒலி வடிவில் கேட்டு மகிழ இதோ!

25 comments:

said...

உபயோகமாக இருந்தது ;-)

இன்னும் சில உப குறிப்புக்கள். மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்.

இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)

said...

hi sir eppadi irukeenga...romba nala achu unga blog pakkm vandhu..

nalla eludhi irukeenga ,..nilalgal enakum romba pidicha padam..but manivannanoda kadhainu ippo than theriyum..

valthukal

and indha you tube vidoes eppdi add panradhunnu enaku sonnengana konjam use ful a irukum.. en email id gkpstar@yahoo.com..or en blogil adhai comment a ga podavum..ungala padhiluku kathirukum

karthick

said...

//மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்//வாங்க பிரபா, அதான் இளைய இளையராஜாவை பத்தி சொல்லி இருக்கேனே!

//இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)// ஆமா ஆமா, அப்ப மணிவண்ணன்கிட்டே இருந்த வெறியை கிட்டே இருந்து பார்த்தவன், நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரத்திலே சொன்ன மாதிரி, மணிவண்ணன் எங்க சீனியரோட தோஸ்த், எங்க மெஸ்ல நிறைய நாளு எங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்காரு!

said...

//மடை திறந்து பாடல் எஸ்.பி.பி பாடியது படத்தில் இளையராஜா பாடுவது போல் ஒரு காட்சி வரும்//வாங்க பிரபா, அதான் இளைய இளையராஜாவை பத்தி சொல்லி இருக்கேனே!

//இந்தப் படம் மணிவண்ணன் கதையில் முதன்முதலாக பாரதிராஜா பண்ணியது. இப்படத்தின் தோல்வியால் ஒரு வெற்றி குடுப்பேன்னு சபதம் செய்து மணிவண்ணன் தயார் செய்த கதை "அலைகள் ஓய்வதில்லை" (குருதட்சணை??)// ஆமா ஆமா, அப்ப மணிவண்ணன்கிட்டே இருந்த வெறியை கிட்டே இருந்து பார்த்தவன், நான் ஏற்கனவே எனை ஆண்ட அரிதாரத்திலே சொன்ன மாதிரி, மணிவண்ணன் எங்க சீனியரோட தோஸ்த், எங்க மெஸ்ல நிறைய நாளு எங்களோட சேர்ந்து சாப்பிட்டிருக்காரு!

said...

நல்லதொரு நினைவுகூர்தல்...நன்றி

said...

வருகைக்கு நன்றி கார்த்திக்! அப்பப்ப நம்ம ப்ளாக் பக்கம் வந்து போய்ட்டு இருங்க!

இந்த யூ ட்யூப்ல போடறது ஈஸி, முதல்ல உங்களுக்கு ஒரு அக்கவுண்டை கிரியேட் பண்ணுங்க அங்க, அப்பறம் உங்க வீடியோவை அப்லோட் பண்ணுங்க, அளவு 10 நிமிஷத்துக்குள்ள ஓடும் துண்டுப்படம், அப்பறம் ஃபைல் சைஸ் 100 MBக்கு மேலே போகக்கூடாது! பிறகு அதிலே embedded code கிடைக்கும், அதை கட் பண்ணி உங்க ப்ளாக்ல பேஸ்ட் பண்ணுங்க அவ்வளவு தான்!

said...

வருகைக்கு நன்றி முகில்!

said...

நல்லா எழுதி இருக்கீங்க. இந்த படத்தோட பாடல்களை எப்ப கேட்டாலும் இனிமைதான்...

அது சரி அந்த சுகாசினி matter எப்ப எழுதப்போறீங்க, ஆவலோட எதிர் பார்க்கிறோம்:-)

said...

வருகைக்கு நன்றி திருமாவளவன்!

//அது சரி அந்த சுகாசினி matter எப்ப எழுதப்போறீங்க, ஆவலோட எதிர் பார்க்கிறோம்:-)//ரொம்ப ஆவலா இருக்கிங்கீங்க சீக்கிரமே பதிவு போட்டுடுவோம்-;)

said...

இந்த படத்தின் பாடல்கள் இன்றும் கிறங்கடிக்கும்.

said...

என்ன சொல்றதுன்னே தெரியலை .... அருமையா எழுதியிருக்கீங்க ....

said...

//இந்த படத்தின் பாடல்கள் இன்றும் கிறங்கடிக்கும// வருகைக்கு நன்றி குமார், இப்பன்னு இல்லை எப்பவுமே!

said...

வாங்க ஊசி! உங்களுக்கு பிடிச்ச படமா இது? அப்படின்னா நீங்க ரசிச்ச காட்சியை பத்தி சொல்லுங்களேன்!

said...

adhu ok sir aana enkite endha videos m illai..how did u get the nilagal filsm videos??

said...

ம்ம்...ம்..
அணு அணுவா ரசிக்கிறதுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி இது ஃப்ரேம் ஃப்ரேமா ரசிக்கிறதா? நல்ல ரசிகருக்கு இன்னொரு ரசிகனின் 'நேயர் விருப்பம்' - பா.ராஜாவையும், மணி ரத்தினத்தையும் ஒப்பிட்டு ஒரு பதிவு எழுதுங்களேன்.நான் அப்படி ஒன்று எழுத நெடுநாள் நினைப்பில் நாட்கள் செல்கின்றன. நானென்ன எழுத...நீங்கள் எழுதினால் நல்லா இருக்கும்.

said...

கார்த்திக், எங்கிட்ட நிறைய வீடியோ கலெக்ஷன் இருக்கு! பிறகு கொஞ்சம் வீடியோ எடிட்டிங் மென்பொருள் வேணும், 'Virtualdub'ஐ முயற்சி பண்ணி பாருங்க, அது free! இணையத்திலே நிறைய தமிழ் படங்கள் கிடைக்கும்!

said...

//அணு அணுவா ரசிக்கிறதுன்னு சொல்லுவாங்களே.. அது மாதிரி இது ஃப்ரேம் ஃப்ரேமா ரசிக்கிறதா? // வாங்க தருமி, அதே அதே அப்ப நான் ரசிச்சு இதையே முழு நேரமும் யோசிச்சுக்கிட்டிருந்த கால கட்டம். அப்ப நான் ரசிச்சு சிலாகிச்சதிலே ஒரு பத்து சதவீதத்தை தான் பதிவா எழுதி இருக்கேன்,ரசிச்சதை எழுதணும்னா தொடரா தான் எழுதணும். அப்பறம் ரொம்ப நாளாவே நீங்க கேட்ட அந்த மணி, பாரதியை பத்தி ஒரு க்ம்பேரிடிவ் ஸ்டடி அப்பறமும் எழுதிறேன். அதிலேபாருங்க மேம்போக்கா எழுத விரும்பலை, கொஞ்சம் எல்லா படத்திலேயும் ஃபூட்டேஜ்களை கொஞ்சம் கிளியரா அப்ஸர்வ் பண்ணி,மொத்தத்திலே கொஞ்சம் உழைக்கணும், சீக்கிரம் எழுதுறேன்!

said...

கடந்த ஜனவரியிலேயே இந்த பதிவை படித்து விட்டாலும் கூட, இன்று தான் "மடை திறந்து " பாடலின் ஒலி வடிவத்தை கூகிளில் தேடிய போது உங்களின் போட்கேஸ்டிங் ஒலிபரப்பை முழுமமயாக தரவிறக்கம் செய்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மிக்க நன்றி வெளிகண்டநாதர் சார். கலக்கலா இருக்கு சார்

said...

திரைப்பட ஆர்வலர்களுக்கு உதவிகரமாக இருக்கின்ற அளவுக்கு ரீல் பை ரீலாக விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள் ஸார்..

இளையராஜா-வைரமுத்து-பாரதிராஜா கூட்டணி என்பது தமிழ்ச் சினிமாவுக்குக் கிடைத்த பொற்காலம்..

மீண்டும் ஏங்க வைக்கும் பாடல்களை தந்த இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வேண்டும்.. தமிழுக்காக..

இவ்வளவு பொறுமையாக இவ்வளவு எழுதியிருக்கும் தங்களது கைகளுக்கு எனது அன்பு முத்தங்கள்..

said...

வெ.நாதர்,

எங்கே நீண்ட நாட்களாக காணோம் அஞ்ஞாத வாசமா? பழைய பதிவென்றாலும் இப்போது தான் பார்க்கிறேன், அருமையாக இருக்கிறது. நான் சில பழைய படங்களைப்பார்க்கும் போது அட அந்த காலத்தில் இவர் கூட இப்படிலாம் எடுத்திருக்கிறாரே என ஆச்சரியப்படுவேன் ,அப்படி பட்ட ஒரு படம் தான் நிழல்கள் நான் பெரும்பாலும் நினைத்தது போலவே நீங்களும் ரசித்து எழுதியுள்ளீர்கள், அதுவும் அந்த சந்திர சேகர் , ராஜாவின் பிரதி போல வருவது.

said...

உன் கால காட்டு சார்.

அடேங்கப்பா பின்னியிருக்க சாரு.

:)

said...

உங்கள் ரசனையே ரசிக்க வைககிறது
அருமை அருமை

said...

மடை திறந்து பாடலை உங்களது போட்கேஸ்டிங்கிலிருந்து "cut" செய்து தனி mp3 கோப்பாக்கி,இது வரை 100 முறைக்கு மேல் கேட்டுவிட்டேன். நண்பர்களுக்கும் மின்னஞ்சலில் அனுப்பியாகிவ்ட்டது.
(உங்ளது போட்கேஸ்டிங் லின்கும் தான்) மீண்டும் நன்றி

said...

நி௯ழல்கள் - ஒரு அற்புதமான படம் தான், அருமையாக எழுதியுள்ளீர்கள், நீங்கள் எழுதியிருப்பது போல் இறுதி கட்ட காட்சி சரியான சொதப்பல், நிழல்கள் ரவிக்கும் ரோகினிக்கும் காதல் மலரும் காட்சி மிகவும் சுவாரசியமானது, வழக்கமாக தவறாக புரிந்து கொண்டு பிறகு நல்லவன் என்றதும் அவன் மீது காதல் மலர்வதும் தமிழ் சினிமாவில் காதல் மலரும் காரணிகள் ஆகும், மௌன ராகம் கார்த்திக் ரேவதி காதல் கூட இந்த வகையை சேர்ந்தது தான், ராஜ பார்வை படத்தில் மின் தூக்கியில் கண் தெரியாத கமலை அரை குறை ஆடை அணிந்திருந்த மாதவி தவறாக தன்னை தான் நோக்குகிறான் என்று நினைத்து கூச்சலிட ஒரு கூட்டம் கமலை அடிக்க கமல் கண்ணிலிருந்து கீழே விழுந்த கண்ணாடியை தேடுவதற்கும் மின் தூக்கி மூடுவதற்கும் சரியாக இருக்கும், மின் தூக்கியின் வெ௯ளியே இருந்து இதை கவனித்து விட அங்கு மலர்கிறது அழகிய கவிதை அல்லது காதல், இதே வகையை சேர்ந்தது தான் நிழல்களின் காதலும், அழகிய கவிதை - நாகூர் இஸ்மாயில்

said...

வெ.நா,
என்ன நீண்ட நாட்களாகக் காணவில்லை? அஞ்ஞாதவாசமோ?!

மீண்டும் உங்களைத் தமிழ்மணத்தில் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

மாதத்திற்கு ஒரு பதிவாவது எழுதுங்கள்.