Tuesday, January 02, 2007

ஷண்முகசுந்தரமும் மோகனாம்பாளும்!

வணக்கம் என் இனிய இணைய, தமிழ்மண மக்களே! உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! என்னடா ரொம்ப நாளா வெளிகண்ட நாதர் கடையை விரிக்க காணோமேன்னு பார்த்தீங்களா, அதான் ஊருக்கு தவுந்த மொட்டை அடிக்க வேணும்ல, கிறிஸ்மஸ், நியூ யியர் கொண்டாட போயாச்சு! லீவு வுட்டாச்சுன்னு ஜாலியா சுத்த போயாச்சு! புது வருஷம் ஆரம்பிச்சோன தான் இப்ப ஜாகை இந்த இணையத்திலே! சரி விஷயத்துக்கு வர்றேன், புது வருஷ ஆரம்பத்திலே மங்களகரமா பாட்டுப் போட்டு ஆரம்பிப்போமுன்னு தான்! போன வாரம் தில்லானா மோகனாம்பாள் படம் பார்த்தேன்! அப்படியே எங்கயோ கொண்டி விட்டிடுச்சு! அதான் உங்க கிட்ட பகிர்ந்துக்கிலாம்ன்னு இந்த பதிவு! இந்த படத்திலே நடிச்ச சிவாஜி கணேசன், பத்மினி, இவங்க இரண்டு பேருமே நம்மகிட்ட இல்லை இப்போ, ஆனா அவங்க விட்டு போன இந்த ஒடும் நிழல்பட பதிவு தனி முத்திரை!

இப்ப எல்லாம் நல்லா நடிச்சிக்கிட்டிருக்கிற நடிகைகள், காலா காலத்திலே கல்யாணம் பண்ணிக்கிட்டா மார்க்கெட்டு கிடையாது அப்படியே முடங்க வேண்டியது தான் ஒரு கருத்து இருக்கு, ஆனா அப்ப கல்யாணம் பண்ணி போனாலும் நடிச்சு முத்திரை பதிச்ச பத்மினியை என்னான்னு சொல்றது! சரியா கல்யாணம் ஆகி நாலு வருஷம் கழிச்சி நடிச்சி வெளிவந்த இந்த 'தில்லானா மோகனாம்பாள்' பெரிய வெற்றி பெற்றதோட இல்லாம, காலத்தால் அழியாத காவியமானது! இது ஏன் இப்ப வெற்றி நடிகைகளா வலம் வரும் பெரும்பாலான நடிகைகளால முடியாம போகுது! ஏன்னா அதுக்கு காரணம் இருக்கு. வெறும் இடுப்பையும், தொப்புள்ள பம்பரம் விட்டு, இஷ்டம் போல கோணங்கித்தனமா டான்ஸ் ஆடி நடிச்சா அப்படி தான்! அதுக்குன்னு இருக்கும் கலைகள் எல்லாம் முறைப்படி காட்டி ஆடிப்பாடி நடிச்ச பழய நடிகைகள் கல்யாணம் ஆகியும் பேரும் புகழோட இருந்தாங்க! அப்படி இருந்த சாவித்திரி, பத்மினி மாதிரி நடிகைகள் இருந்த இந்த தமிழ் பட உலகை அதிகம் தெரியாத இந்த கால இளசுகளுக்கு அருமையான பாவமும், அபிநயமும் கூடிய இந்த காட்சிகள் பார்த்தா உண்மை விளங்கும்!

இந்த படத்திலே சிவாஜியின் கதாபாத்திரம் பேரு ஷண்முகசுந்திரம், பத்மினியோட கதாபாத்திரம் பேரு மோகனாம்பாள், இப்ப புரியுதா நம்ம பதிவுக்கு உண்டான டைட்டிலு! (இந்த 'மோகனாம்பாள்' என்ற பேரை கேட்டாலே ஒரு மயக்கம் தான் நமக்கு, ஏன்னா விவரம் தெரிஞ்சு காதல்ன்னு ஆரம்பிச்ச பெண்மணியின் பேரு!ரொம்ப காலம் கிறக்கம இந்த பேரை கேட்டாலே கனவுலேயே வாழ்ந்த நாட்கள் பல! ம்.. இப்ப அது எதுக்கு! பேரை கேட்டவுடனே ஒரு கிறக்கம் வந்து..ம்.., ஆகற வேலையை பாரு நினைப்பு தான் பொழப்பை கெடுக்குதுன்னு நீங்க சொல்றது கேட்குது!) ஷண்முகசுந்திரம் ஒரு பெரிய நாதஸ்வர வித்துவான், மோகனாம்பாள் ஒரு பெரிய பரதக் கலைஞர்! அவங்களுக்கிடையே இருக்கும் இந்த கலைப்போட்டியே பிறகு இருவரையும் காதல் கொள்ள செய்கிறது, அப்பறம் வழக்கம்போல முடிச்சுகளோட கட்டவிழ்ந்து இருவரும் கடைசியில் திருமணம் செய்து சுபம் என்று முடியும்! இது அறுபதுகளில் கொத்தமங்கலம் சுப்பு என்பவர் தொடர்கதையா ஆனந்த விகடனில எழுதிய கதைதான் பிறகு திரைப்படமா பல புராணப்படங்களை எடுத்த ஏபி நாகராஜன் என்பவரால் இயற்றப்பட்டு வெளிவந்தது!(ஆக, ஒரு முக்கியமான ஒரு செய்தி! கொத்தமங்கலம் சுப்புவின் மகள் வயித்து பேத்தியின் கணவர் நம்ம கூட தான் வேலை செய்கிறார்!) இதுக்கு இசை அமைத்தவர் கே வி மகாதேவன்! எல்லா பாட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்! அதுலயும் இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' பாட்டும், 'நலந்தானா நலந்தானா' பாட்டும் அப்ப ரொம்ப பாப்புலாரான் ஒன்னு!

அதாவது பாடல்களிலேயே அபிநயம் புடிச்சு பாதி கதை சொல்லிடுவாங்க அப்ப! எத்தனை தடவை பார்த்தாலும் திகட்டாது! அதுவும் இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' பாட்டுக்கு பத்மினி தரும் அபிநயங்களும் அதுக்கு கணேசன் தரும் முகபாவங்களும் கலக்கல்! அதிலெ சில அபிநயங்கள் நான் சிலகாகிச்சது இதோ!

அதாவது நாட்டிய தாரகை மோகனாம்பாள் நாதஸ்வர வித்வான் ஷண்முக சுந்திரத்தோட தில்லானாவுக்கு ஈடு கொடுத்து ஆடி போட்டி போட்டு கடைசியிலே 'தில்லானா'ங்கிற பட்டம் வாங்கிரது படத்தோட ஹைலைட்! அதுக்கு முன்னே அவங்க இரண்டு பேரும் ஊடல் கொண்டு, இந்த 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?' பாட்டுல காட்டுற பாவங்களும் முகஅசைவும், இப்ப எந்த நடிகை நடிகயருக்கும் சுட்டு போட்டாலும் வராது (இந்த கதை மாதிரி காப்பி அடிச்சி பிற்பாடு வந்த கரகாட்டகாரன், சங்கமம், எல்லாம் இதுக்கு முன்னே நிக்க முடியலே, என்ன தான் பாடல்கள் நல்லா இருந்தாலும் அதில நடிப்பவர்கள் தான் அதை காவியமாக்க முடியும்!)

முதல்ல பத்மினி காட்டும் அபிநயத்திலே

'அழகர் மலையழகா
இல்லை இந்த சிலையழகா'
ன்னு

கேட்டு பிடிக்கும் பாவம் பாருங்க, ஊடல் கொண்ட காதலரின் உணர்ச்சியை அப்படியே பரதத்திலே கொண்டு வரும் தன்மை திருப்பி திருப்பி ரிவைண்ட் பண்ணி பார்க்க வேண்டிய ஒன்னு! அடுத்து நவரசத்தையும் காண்பிச்சு, அதை அழகா பாட்டுல சொல்லி,

'நவரசமும், மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்!
செக்க சிவந்திருக்கும் இதழில் கனிரசமும்'
ன்னு

மோகனாம்பாள், சொல்லி காட்டும் பாவங்கள்ல நீங்க தஞ்சாவூரையே எழுதி கொடுக்கலாம் போங்க, என்ன ஒன்னு, நீங்க மிட்டா மிராசுதாரா இருக்கணும் அதுக்கு!

அடுத்து கேலியும் கிண்டலுமா,

'எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்!
உன்னை என்னையல்லால் வேறு யார் அறிவார்!'
ன்னு

சொல்லி போடும் சதிராட்டம் இருக்கு பாருங்க, அப்படி நமக்காக ஒருத்தி சொல்லி ஆடும் அழகை பார்த்தீங்கன்னா சொக்கீடமாட்டிங்க நீங்க, அந்த நிலையிலே தான் ஷண்முகசுந்திரமும்! அப்பறம் நாணத்தோட,

'பாவையின் பதம் காண நாணமா?
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா?'
ன்னு

சொல்லி தன்னுடய ஆவலை வெளிப்படுத்தும் அந்த அபிநயங்கள் இன்னைக்கு பரதம் ஆடுறேன்னு சொல்லும் எத்தனை நடிகைகளுக்கு வரும்! அப்பறம் இவ்வளவும் சொல்லிட்டு குறியால தான் யாருக்காக பாட்டு பாடி ஆடறேன்னு சொல்ல,

மாலவா, வேலவா!
மாயவா, ஷண்முகா!
ன்னு

சொல்லி காண்பிக்கும் பொழுது, நம்ம ஷண்முகசுந்திரம் அப்படி உதட்டை கடிச்சு 'அடிக்கழுதை'ன்னு வசனம் சொல்லாம சொல்லி காதலோட ஊடலின் உச்சமா சொல்லி காட்டும் அந்த நடிப்பின் நவரசம், நம்ம கணேசனை விட்டா யாருக்கு வரும்! நம்மலும் நடிக்க தெரியாம பலமாதிரி உடலை வருத்தி, தன்னை அடையாளம் வேறு கொண்டு, அஷ்டவதனியாக, இல்லை தசவதாரமாக்க முயற்சிக்கும் நடிகர்களை தூக்கி கொண்டாடுறோம்.

அப்பறம்,

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்!
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்!
ன்னு

சொல்லி அவரின் நாதத்தின் ஆளுமை எப்படி தன்னை கட்டி போட வைக்கிறதுன்னு சொல்லி அபிநயம் பிடிச்சி கடைசியிலே தன்னோட விரகதாபத்தை,

மோகத்திலே என்னை மூழ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்ற கள்வனைப் போல்!
ன்னு

சொல்லி தான் கிறங்கும் அழகை அபிநயம் பிடிச்சு காண்பிக்க இனி கல்யாணம் பண்ணிக்கிட்ட எந்த நடிகையும் வரப் போறதில்லை! இது மாதிரி நடிப்பு, ஆடல், பாடல், கேளிக்கை எல்லாம் ஒருமுறை வருவது போலத் தான்! இனி யாரும் நம்மை கொண்டாட செய்யப்போவதில்லை!

நான் சொன்ன அத்தனையையும் கொஞ்சம் இந்த கிளிப்புலே கண்டுகளியுங்கள்! மறுபடியும் பத்மினி பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவை, நாடு திரும்பும் நாட்டியப் பேரொளி! வேணும்னா கொஞ்சம் படிச்சிட்டு வாங்க! சமீபத்தில் மறைந்த பத்மினிக்கு இப்பதிவின் மூலம் என் அஞ்சலி! அதே போல் என்றும் மனதைவிட்டு அகலாத நம் நடிகர் திலகத்திற்கும் இப்பதிவு ஒரு சமர்ப்பணம்!

29 comments:

said...

நல்ல இடுகை.

தில்லானா மோகனாம்பாள் படத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து அலசிப்போடலாமே.. அந்தளவுக்கு விஷயம் இருக்கில்லையா?

படத்தில் நடித்த நடிகர்பட்டாளத்தையே எடுத்துக்கொண்டால் பாலையாவிலிருந்து (குளுருது... டயலாக்), வில்லத்தனமான நாகேஷ், ஒத்து நாயனம் வாசிக்கும் ஏவிஎம் ராஜன், அப்புறமா பத்மினிக்கு அம்மாவா வந்தவங்க. ஜில்ஜில்லைச் சொல்லாம முடிக்க முடியுமா?

பிட்டுபிட்டு வையுங்களேன்.

எங்க வீட்டில எல்லாருக்கும் பிடித்த படம். பொதுவாகவே ஈழத்தவருக்குப் பிடித படமென்றே சொல்லிவிடலாம்.

படத்தின் நாதஸ்வர இசையைப்பற்றித் தனியாகப் பேசிக்கொண்டே போகலாம். காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரம் அட்டகாசம் இல்ல!

இத்தோட நான் நிறுட்த்ஹிக்கிறேன். நீங்க தொடருங்க. :)

ஜோ வருவார் பாருங்களேன். ;)

இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் வெளிகண்ட நாதர்.

-மதி

said...

வாங்க மதி, என்னுடய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை பிடிங்க!

நீங்க சொன்ன மாதிரி இந்த படத்தை பத்தி எழுதனும்னா ஒரு தொடர் தான் எழுதனும், அவ்வளவு விஷயங்கள் இருக்கு!

நடிச்ச எல்லா நடிகர்களுமே சிறப்பா நடிச்சிருப்பாங்க, வைத்தியா நடிச்ச நாகேஷ் பத்தி தனியா பதிவு போடாலாம்! சிகே சரஸ்வதியின் ஜில்லு கேரக்டர்தனி தான்! பாலையாவை பத்தி அப்பறம் ஒரு தனிப்பதிவு போடறேன்!

//ஜோ வருவார் பாருங்களேன். ;)// ஆமா நீங்க 'ஸ்ரீவித்யா, ரஜினி, கமல்-அபூர்வ ராகங்கள்!' பதிவு பார்க்க்லையா, அப்பவே களை கட்டிடுச்சி! இன்னும் நிறைய வேடிக்கை இருக்கு பாருங்களேன்!

said...

ம்ம்.. கொசுவத்தியை கொளுத்திவிட்டீர்கள். இது வெல்லாம் ஒரு கிளாசிக். திரைத்துறையில் பயில்வோருக்கு ஒரு பெட்டகம்.

நலம்தானா.. பாடலை இவ்வளவு அலசினீர்கள், எழுதியவரின் பெயர் சொல்லவில்லையே :(

said...

வாங்க ம்ணியன், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

//நலம்தானா.. பாடலை இவ்வளவு அலசினீர்கள், எழுதியவரின் பெயர் சொல்லவில்லையே :( // இந்த படத்துக்கு பாடல்கள் அனைத்தும் கவிஞர் கண்ணதாசன் தான்!

said...

//நலம்தானா.. //என்னை கேட்கிறீங்களா, இல்லை பாட்டை சொல்றீங்களா, நான் அலசினது, 'மறைந்து இருந்து பார்க்கும் மர்மம் என்ன' பாட்டுல்ல!

said...

//சிகே சரஸ்வதியின் ஜில்லு கேரக்டர்தனி தான்!//

என்னங்க இது ஜில்ஜில்லை இப்படிக் குழப்பிட்டீங்களே. :)

சிகே சரஸ்வதி, மோகனாம்பாளின் அம்மா இல்லையா.

ஜில்ஜில், நம்ம மனோரமா இல்ல?

-மதி

said...

ஆமா ஆமா ஜில்ஜில் கேரெக்டர் மனோரமா தான், சற்றே குழம்பிட்டேன்:(

said...

புத்தாண்டு வாழ்த்துகள் வெளிகண்ட நாதர், பாபா, உதயகுமார் ஐயா.

போன வாரம் நாங்களும் இந்தப் படத்தை பத்தாவது முறையாகவோ இருபதாவது முறையாகவோ பார்த்தோம். :-)

படம் முடிந்த பிறகு அன்னைக்கு சாயந்தரத்தில இருந்து ஒரு நாலு நாளைக்கு நான் 'நலம் தானா' பாட்டைப் பாட என் மகள் (4 வயது) பபபாபா பபபாபா என்று வாயாலேயே நாதஸ்வரம் ஊத நல்ல விளையாட்டு விளையாடினோம். :-)

said...

என்னங்க மதி, இப்படி பெருமையை இன்னொருத்தர்க்கு தூக்கி கொடுத்தீட்டீங்க?

நாதஸ்வரம் வாசிச்சது மதுரை சேதுராமன் - பொன்னுசாமி சகோதரர்களுங்க!
காருக்குறிச்சியார் இல்லை!

அது கொஞ்சும் சலங்கை படத்துல!
:))

மிக மிக அருமையான அலசல், வெளிகண்டநாதரே!!
அதுவும் நான் சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கையில், Medical Fans of Sivaji என ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு, அதன் தலைவராக லெட்டெர் பேடைக் கிழித்து நண்பர்களுக்கு சாந்தி தியேட்டரில் டிக்கட் கிடைக்க சிபாரிசு கடிதம் கொடுத்தது, அலட்டலாக மானேஜர் ரூமுக்குள் நுழைவது எல்லாவற்றையும் நினைவு படுத்தி விட்டீர்கள்!
:))
சரி, சரி, இப்ப உன் சுய புராணம் யார் கேட்டாங்க? ந்னு ரசிகர்கள் எல்லாம் கல்லெறிய வராங்க!

நான் ஜூட்!

said...

தில்லானா மோகனாம்பாள்!
இந்தப் பெயருக்கு என்ன ஒரு மகிமையோ.
ஒரு ஒரு வரியையும் நாங்கள் மனப்பாடம் செய்துவிடுவோம்.
''இல்லைடா பரதா''னு ஒரு வரி பத்மினி பேசுவார். அதற்கு டி.ஆர்.ராமச்சந்திரன் ஆமாம் போடுவார்.
அதென்ன கண்.மூக்கு, காது எல்லாமே பேசுமா என்ன!சிவாஜி சார் கேக்கவே வேண்டாம்.
சரஸ்வதிஅம்மா நொடிப்பு கண்ணிலே மிளிரும் பேராசை, ஏன் ஜமீந்தார் பெண்டாட்டி,அவர் மாமனார் எல்லோரும் பாத்திரங்களாகவே வாழ்வார்கள்.
ஹ்ம்ம்ம்ம்.
சரியாப் போச்சு இன்னிக்கு நான் வேலை செய்தாப்போல தான். நன்றி மிக்க நன்றி.

said...

நாதர், மிக நல்ல பதிவு.

//'மோகனாம்பாள்' என்ற பேரை கேட்டாலே ஒரு மயக்கம் தான் நமக்குச்//

வீட்லே உங்க பதிவை படிக்க மாட்டாங்களா இல்லை வாட்டர் ஸ்ப்ரிங்கிள்டா

//கொத்தமங்கலம் சுப்புவின் மகள் வயித்து பேத்தியின் கணவர் நம்ம கூட தான் வேலை செய்கிறார்//

எங்கிட்டே சொல்லவே இல்லே யாருங்க அது.


//நம்மலும் நடிக்க தெரியாம பலமாதிரி உடலை வருத்தி, தன்னை அடையாளம் வேறு கொண்டு, அஷ்டவதனியாக, இல்லை தசவதாரமாக்க முயற்சிக்கும் நடிகர்களை தூக்கி கொண்டாடுறோம்//

கமலுக்கும் உங்களுக்கும் என்னாங்க தகறாறு

//மாலவா, வேலவா!
மாயவா, ஷண்முகா!ன்னு
//

இதைப் பாடிய பி சுசீலா அவர்களின் குரல் வளத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே

said...

அடடா.. உங்க காட்சி விவரிப்பு இருக்கே, பாட்டுக்கு நிகர் போங்க! :-) அப்படியே, அந்த ரயில்ல நடக்கிற நகைச்சுவைக் காட்சி இருந்தாலும் கிளிப் போடுங்களேன், சூப்பர் காட்சி அது.

said...

வெளிகண்டநாதர்,
நல்ல பதிவு. ரொம்பவே அநுபவிச்சு எழுதிருக்கீங்க. அந்தப்படம் எப்ப டிவியில போட்டாலும் பாத்துடுவேன். நிஜமாகவே திகட்டாத படம். இது கந்தன் கருணை, திருவிளையாடல், திருவருட்செல்வர்னு ஏபிஎனனின் படங்கள் எல்லாமே எப்ப பார்த்தாலும் அலுக்காதவை.

அவருக்கு அப்புறம் பக்திப்படம் எடுக்கவே ஆளில்லாமல் போயிற்று. இராமநாராயணன் வகையறா வந்து 'ஷாம்லி-பாம்பு-குரங்கு-நாய்' என்று எடுத்து தமிழ் பக்திப்படங்களை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் மேல் கொடுமை என்று என்னைக்கேட்டால் கேப்டன் சிவனாகவும் ராதிகா மீனாட்சியாகவும் நடித்துவந்த படம் தான். பேர் நினைவில் இல்லை.

//ஏன்னா அதுக்கு காரணம் இருக்கு. வெறும் இடுப்பையும், தொப்புள்ள பம்பரம் விட்டு, இஷ்டம் போல கோணங்கித்தனமா டான்ஸ் ஆடி நடிச்சா அப்படி தான்!//
உண்மைதான். நேத்திக்கு சிம்ரன் இடுப்பு. இன்னிக்கு அசினோடது. நாளைக்கு பாவ்னா அப்படின்னு மாறிகிட்டே இருப்போமில்ல.. பாஸ்டனாரின் விரிவான பதிலை எதிர்பாருங்கள் இதைக்குறித்து. :P

said...

வாங்க குமரன், பார்த்தீங்களா படத்தில் நடித்தவர்களின் ஆளுமை சின்ன பிள்ளைகளையும் எப்படி ஆட்கொள்ளுகிறதென்று, இது போன்று நடிக்க நம்மிடையே இப்பொழுது அது போன்ற நடிகர் நடிகையர் இப்போ யாரும் இல்லை!

said...

வாங்க எஸ் கே, புத்தாண்டு வாழ்த்துக்கள், நாதஸ்வர வித்வான்களை சரியாக சொன்னதற்கு நன்றி, அப்பறம் பார்த்தீங்களா உங்க இளைமையை ஊஞ்சலாட வச்சாச்சு!

said...

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்! புத்தாண்டு வாழ்த்துக்கள்!

//சரியாப் போச்சு இன்னிக்கு நான் வேலை செய்தாப்போல தான்.// ஒரு நாள் எல்லாத்தையும் ஆற போடுங்க! தில்லானவுல திளைத்து எழுங்க!

said...

//வீட்லே உங்க பதிவை படிக்க மாட்டாங்களா இல்லை வாட்டர் ஸ்ப்ரிங்கிள்டா//சிவா, சும்மா இருக்கிர சங்கை ஊதி கெடுக்கணுமா?

//எங்கிட்டே சொல்லவே இல்லே யாருங்க அது.// எங்க அலுவலகத்திலே வேலை செய்றார், இப்பதான் வந்து சேர்ந்தார்!

//கமலுக்கும் உங்களுக்கும் என்னாங்க தகறாறு// என் ஃபிரண்டு சாருஹாசன் சின்ன பொண்ணை டாவு வுட்டுக்கிட்டு இருக்கேன்னு ஜவடாலு அடிச்சான், நமக்கு அப்படி கூட ஒன்னுமிலலை! நாம எங்க போய் தகராறு பண்றது! மொத்ததிலே உண்மை விளம்பி நானு!

//இதைப் பாடிய பி சுசீலா அவர்களின் குரல் வளத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே// சுசீலாவுக்கு அப்பறமா ஒரு தனி பதிவு உண்டு!

said...

வருகைக்கு நன்றி சேதுக்கரசி!

//அப்படியே, அந்த ரயில்ல நடக்கிற நகைச்சுவைக் காட்சி இருந்தாலும் கிளிப் போடுங்களேன்// போட்டுட்டா போச்சு, ஏற்கனவே உங்க விண்ணப்பம் நிறைய இருக்கு!

said...

//அவருக்கு அப்புறம் பக்திப்படம் எடுக்கவே ஆளில்லாமல் போயிற்று. இராமநாராயணன் வகையறா வந்து 'ஷாம்லி-பாம்பு-குரங்கு-நாய்' என்று எடுத்து தமிழ் பக்திப்படங்களை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றாகிவிட்டது.// வாங்க இராமநாதன், நீங்க சொன்னதை நான் ஏற்கனவே ஒரு பதிவிலே சொல்லி இருந்தேன்! 'தமிழ்கடவுளும் ஒளவைப்பாட்டியும்'ங்கிற பதிவு, படிச்சி பாருங்க!

said...

//நம்மலும் நடிக்க தெரியாம பலமாதிரி உடலை வருத்தி, தன்னை அடையாளம் வேறு கொண்டு, அஷ்டவதனியாக, இல்லை தசவதாரமாக்க முயற்சிக்கும் நடிகர்களை தூக்கி கொண்டாடுறோம்.//

வெ.க.நாதரே. உங்களுக்கு சிவாஜி பிடிக்கும் சரி. பத்மினி பிடிக்கும் சரி. அவங்க நடிப்பை சிலாகிச்சி பதிவு போடறீங்க, அதுவும் சரி. நடுவில இது எதுக்கு? இந்த மாதிரி ஒரு கம்பேரிசன் அவசியமா? எனக்கு பிடிச்சவந்தான் உலகத்திலேயே உசத்தின்னு சொல்லணுமா? அவர் கிட்ட இருக்கிற திறமையையும் இவரு கிட்ட இருக்கிற திறமையையும் எந்த விதத்தில் சீர்தூக்கிப் பார்க்க முடியும்? ஆப்பிள்களையும் ஆரஞ்சுகளையும் அல்லவா ஒரே தட்டில் தூக்கிப் பார்க்கறோம்? ஒரு நல்ல பதிவுக்கு நடுவில் இது போன்ற வரிகள் நாராசமாக ஒலிக்கின்றதே.

நீங்கள் நடிக்கத் தெரியாமல் என்று சொல்கிறீர்கள் அதற்கு பதிலாக நடிப்பெனத் தெரியாமல் நடிக்கும் வித்தை என நான் இவரைத் தூக்கி நிறுத்தி நீங்கள் சிலாகிக்கும் சிவாஜியை ஓவராக்டிங் மன்னன் எனச் சொல்ல எவ்வளவு நேரமாகும்? அதனை ஆமோதிக்கவும் எத்தனையோ பேர் வருவார்கள். தயவு செய்து இது போன்ற நல்ல பதிவுகள் தரும் பொழுது இந்த மாதிரி தேவையில்லாத பரபரப்பு வரிகளை விட்டு விடுங்கள்.

said...

வாங்க கொத்தனாரே! பார்த்தீங்களா, ஆரம்பிச்சிட்டீங்க! நான் இதுக்கு கொஞ்சம் விளக்கமா பதிவு போட்டாகணும்! அப்பறம் போடுறேன்!

//எனக்கு பிடிச்சவந்தான் உலகத்திலேயே உசத்தின்னு சொல்லணுமா?// நான் அப்படி சொல்லலியே!

//அவர் கிட்ட இருக்கிற திறமையையும் இவரு கிட்ட இருக்கிற திறமையையும் எந்த விதத்தில் சீர்தூக்கிப் பார்க்க முடியும்?// நடிப்புன்னு வந்தா அதற்குன்னு இருக்கும் அம்சங்கள் தான் வெளிப்படணும்! ஆனா நாம முக்காவாசி ஆளை வச்சு எடை போடுறோம்! இது தவறு! இதை பத்தியும் கொஞ்சம் விளக்கமா அப்பறம் எழுதுறேன்! இதிலே எனக்குன்னு உண்டான அனுபவும் கொஞ்சம் இருக்கு! ஏன்னா அரிதாரம் பூசுனவன் இல்லையா!

//ஒரு நல்ல பதிவுக்கு நடுவில் இது போன்ற வரிகள் நாராசமாக ஒலிக்கின்றதே// ஐயா, இதை நான் சொல்ல வந்ததுக்கு காரணம் இன்றைய அநேக நடிகர்கள் நடிக்கும் நிலைமை! இன்னைக்கு எந்த ஒரு ஹீரோவுக்கும் ஒரு 200 அடி குளோசப் காட்சியிலே முக அசைவை காட்டி நடிக்கும் தைரியம் இல்லைங்கிறது தான் நிதர்சன உண்மை! அதிலே உங்க நம்மவரையும் சேர்த்து தான் சொல்றேன்!

//நீங்கள் நடிக்கத் தெரியாமல் என்று சொல்கிறீர்கள் அதற்கு பதிலாக நடிப்பெனத் தெரியாமல் நடிக்கும் வித்தை என நான் இவரைத் தூக்கி நிறுத்தி நீங்கள் சிலாகிக்கும் சிவாஜியை ஓவராக்டிங் மன்னன் எனச் சொல்ல எவ்வளவு நேரமாகும்? // அப்படி போடு அருவாளை! 'நடிப்பெனத் தெரியாமல் நடிக்கும் வித்தை', யாரை சொல்றீங்க! மீசையை சரியாக்கூட ஒதுக்காம நடிச்சி கேரக்டரை பலப்படுத்தும் சில நடிகர்கள் நடித்த படங்கள் கொஞ்சம் பாருங்கள்! பிறகு சற்றே கொஞ்சம் பொறுங்கள் இது பத்தி ஒரு விரிவான பதிவு எழுதி விளக்கம் சொல்லுகிறேன்!

//தயவு செய்து இது போன்ற நல்ல பதிவுகள் தரும் பொழுது இந்த மாதிரி தேவையில்லாத பரபரப்பு வரிகளை விட்டு விடுங்கள்// சத்தியமா நான் 'தெஹல்கா' விரும்பி இல்லை! அப்படி சர்ச்சை கொண்டு பரபரப்பு தேட இந்த ஊர்ல டாப்பிக்கா இல்லை, உங்களுக்கு தெரியாததா-:)

said...

நா வரலைபா வெள்ளாட்டுக்கு :-)
(வெளி, விருப்பமான படம், ஆரம்பிக்க பயமாய் இருக்கு. வேலையும் இருக்கு, அதைவிட மற்ற யோசனைகளும் இருக்கு)

said...

//(வெளி, விருப்பமான படம், ஆரம்பிக்க பயமாய் இருக்கு. வேலையும் இருக்கு, அதைவிட மற்ற யோசனைகளும் இருக்கு)//உஷா, அதெல்லாம் பார்த்தா முடியுமா, ஆரம்பிங்க சீக்கிரம் ஆரம்பிங்க!

said...

வெ.நா,
மிகவும் அருமையான பதிவு.
கர்ணன்
திருவிளையாடல்
வீர பாண்டிய கட்டப்பொம்மன்
தில்லானா மோகனாம்பாள்
இராஜ இராஜ சோழன்

இப் படங்கள் எல்லாம் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்கள். இந்த தில்லானா மோகனாம்பள் படத்தின் வெற்றியில் நடிகர் திலகம், நாட்டியப் பேரொளி ஆகியோரின் நடிப்பு மட்டுமல்ல கவியரசின் அற்புதமான பாடல்களும் காரணம் என்பது என் தாழ்மையான கருத்து.

said...

என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? நான் சின்னப்புள்ளையா இருக்கிறப்ப ரஜினின்னா 90% குழந்தைகளுக்கு பிடிக்கும். இப்ப அது விஜய்.

said...

இப்பதான் படிச்சேன். கண்பட்டதால் உந்தன் மேனியிலே புண்பட்டதோ என்பதற்கான முக மொழிகள் அற்புதம். எங்க வீட்டிலயும் அடிக்கடி பார்க்கிற படம்.

said...

//ஜோ வருவார் பாருங்களேன். ;)//

ரொம்ப லேட்டா வந்துட்டேன் .கொஞ்ச நாளா வேலைப்பளு.

வெளிகண்ட நாதர்,
இந்த முறை உங்க கிட்ட சண்டை போட முடியாது..ஹி..ஹி .

ரொம்ப நல்லா அலசியிருக்கீங்க .ஆனாலும் நம்ம நடிகர் திலகத்தின் நடிப்பு பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாம் .சூரியனுக்கே டார்ச் லைட்டா! நடிகர் திலகத்தின் நடிப்பு பற்றி தனியா வேற சொல்லணுமா-ன்னு நினைச்சிருப்பீங்கண்னு அனுமானித்து விட்டுடுறேன்..

நன்றி!

said...

வாங்க ஜோ, அதனாலே என்னா எல்லாமே ஒரு அன்பின் மிகுதியால் போடப்படும் சண்டை தானே! ஆமா உங்க கணக்கு பாக்கி இருக்குது! கமலை பத்தி எழுத வேண்டிய எபிசோடைத் தான் சொல்றேன்! சீக்கிரமா டைம் கிடைச்சோன எழுதுறேன்!

said...

வெளிகண்டநாதரே, கமல் -ஸ்ரீதேவி நடித்த "மீண்டும் கோகிலா" படத்திலிருந்து ஒரு அருமையான பாடலை youtubeல் இணைத்த உங்களுக்கு கமல் மேல் கோபம் இருக்கவே முடியாது.

"தில்லானா மோக்னாம்பாள்' பற்றிய உங்கள் குறிப்பை மிகவும் ரசித்து வாசித்தேன்.

நான் கூட இத்திரைக் காவியத்திலிருந்து ஒரு காட்சியை youtubeல் இணைத்திருக்கிறேன்.
http://www.youtube.com/watch?v=R9y_lUYYvRA

இக்காட்சியில் ஒரு சிறப்பு.
வெவ்வேறு காலகட்டத்தில் சினிமாவில் கதாநாயகர்களாக நடித்த பலர் இக்காட்சியில் தோன்றுகிறார்கள்.
டி. எஸ்.பாலையா
சாரங்கபாணி
டி. ஆர். ராமச்சந்திரன்
தங்கவேலு
ஏ.வி.எம்.ராஜன்
எஸ்.வி. சகஸ்ரநாமம்
இவர்களுடன் எங்கள் நடிகர் திலகம்.

நன்றி