இப்ப தான் போன பதிவுல நிழல்கள் படத்தை பத்தி பதிவு போட்டிருந்தேன், அது எழுத்து, ஆனா கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து உலவியை தட்டி பக்க பதிவுகளை படிக்க சோம்பேறியா இருக்கிறவங்களுக்கு இப்ப இணையத்திலே ஒரு வசதி இருக்கு, அதாவது படிச்சு தெரிஞ்சிக்கிறதை, அறிஞ்சிக்கிறதை கேட்டு தெரிஞ்சுக்கிலாம்! அதுவும் நம்ம வசதியை போல நின்னுக்கிட்டோ, ஓடிக்கிட்டோ, படுத்துக்கிட்டோ, இல்லை என்னமாது காரியம் பண்ணிக்கிட்டே நீங்க கேட்டு மகிழலாம். அதுக்கு பேரு தான் 'Podcasting'!
ஒரு காலத்திலே கேளிக்கைன்னு நமக்கு இருந்தது இந்த ரேடியோ தான். சினிமான்னு கொட்டைகைக்கு போய் பார்த்துட்டு வந்தாலும் அதை திருப்பி பார்க்கணும்னா திரும்ப கொட்டாய்க்கு தான் போயாகனும், அப்ப டிவி ஏதும் வராத நேரம், அப்ப இந்த ரேடியோ தான் ஒரு பெரிய பொழுது போக்கு சாதனம், ஏன் இன்னைக்கும் அதுவே சிறந்த பொழுது போக்கு சாதனம் நம்ம கிராமங்கள்ல! நீங்க அப்படி பெரிய டவுண்லருந்து சின்ன சின்ன கிராம ஊருகளுக்கு போனா இப்பவும் மக்கள் டிரான்ஸிஸ்டரை கையிலே வச்சுக்கிட்டு பாட்டை கேட்டு மகிழுவாங்க! அப்பறம் நகரங்கள்ல டிவி வந்து அவங்க எப்ப எப்ப பார்த்த படங்களை போட்டா ஆசையா பொட்டி முன்னே உட்கார்ந்து பார்ப்போம்! பிறகு அதுவே இணைய தொழில்நுட்பம் வளர்ந்தோன்ன, இப்ப பார்க்கிறதுக்கு, கேட்டு மகிழறதுக்கு நிறைய வீடியோ கிளிப்புகள் இருக்கு! ஆனா அந்த காலங்கள்ல ரேடியோவிலே கேட்டு ரசிச்ச பாடல்கள் மாதிரி வராது, ஏன் இலங்கை வானொலி நிலையம் நம்ம காதுகள்ல ரீங்காரமிட்டதை இன்னைக்கும் மறக்க முடியுமா, பாடல்களை விட அதை அழகா ஒலிபரப்பும் ஒலிபரப்பாளர்கள், அப்துல் ஹமீது போன்றோரை மறக்க முடியுமா?
ஆக அந்த மாதிரி பழைய ரேடியோ கேட்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமா நம்மகிட்ட இருந்து போனாலும் அது திரும்ப வந்து சேர்ந்துடுச்சு, அதான் எல்லாமே சில காலகட்டங்கள் நம்மகிட்ட தங்கும், அப்பறம் மறையும், திரும்ப வந்துடும்! இந்த பெல்பாட்டம் பேண்ட்டு பிறகு பேகியா வந்த மாதிரி! இந்த 'IPOD' வந்ததுக்கு அப்பறம் நம்ம ம்யூசிக் கேட்கிற தன்மையும் மாறிடுச்சு, அதான் எங்க போனாலும் காதுல மாட்டிக்கிட்டு பிடிச்ச பாட்டை கேட்டுகிட்டு காலம் கழிக்கிறோம், அது மாதிரி பாடல்கள்னு இல்லாம, கேட்டு மகிழ எவ்வளவோ விஷயங்கள், ஏன் கதை புத்தகங்களே ஒலி வடிவில் வந்து அதை இணையத்திலேருந்து தரவிறக்கம் செஞ்சு அப்பறம் வேணுங்கிறப்ப நம்ம வசதிக்கு ஏற்ப கேட்கும் ஒரு செளகரியம் சுகம் தான்!
அப்படி வந்த ஒரு வசதியிலே நான் சிலாகிச்சு ரசிச்ச நிழல்கள் படத்தை பத்தி ஒலி வடிவிலே சொல்லி இருக்கிறேன், அதோட இணைப்பு இதோ, Nizhalgal-'Raja's' Excellent work during 80's அதை இங்கேயே கேட்டு மகிழனும்னா இதோ!
இதை அப்படியே தறவிறக்கம் செஞ்சு பிறகு உங்க Ipodலேயோ இல்லை mp3 ப்ளேயர்லயோ கேட்கணும்னா, இதோ தொடுப்பு!
கேட்டு பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்களேன், இங்கே சொன்னாலும் சரி இல்லை PodBazzarலே சொன்னாலும் சரி! வர்றட்டா!
Subscribe to:
Post Comments (Atom)
13 comments:
//இலங்கை வானொலி நிலையம் நம்ம காதுகள்ல ரீங்காரமிட்டதை இன்னைக்கும் மறக்க முடியுமா, பாடல்களை விட அதை அழகா ஒலிபரப்பும் ஒலிபரப்பாளர்கள், அப்துல் ஹமீது போன்றோரை மறக்க முடியுமா?//
சரியாச் சொன்னீங்க. கல்லூரியிலிருந்து வந்ததும் முதல்ல போய் வானொலிப் பெட்டியில் இலங்கை வானொலியை ஆன் பண்ணிவிட்டுட்டுத் தான் அடுத்த வேலை! எங்க ஊர்ல இலங்கை வானொலி அவ்வளவு சரியாக் கேட்காது, ஆனா கிராமத்துக்குப் போறப்ப கேட்டு மகிழலாம்... அங்கே நல்லா எடுக்கும். விவித்பாரதியும் தான்.
பாட்காஸ்ட் தரவிறக்கம் செஞ்சு கேட்டுட்டு வரேன். நம்ம ஐபாடுக்கு தமிழ் பாட்காஸ்டுகள் தரவிறக்கம் செய்யறதுக்கு சுட்டிகள் இருந்தா கொடுங்க. நன்றி...
அன்பரே!
நிழல்கள் படத்தில் "இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலை மிகப்பிடிக்கும்; அதலால் இந்தப் படம் பார்க்கும் ஆவல் வந்தது;
எங்கள் வானொலியுடன் நீங்கள் ஒன்றி வாழ்ந்ததை; எண்ணிப் பார்க்க ஈழத்தவன் என்றதால்; பெருமையாக உள்ளது.
அதற்கு எங்கள் அறிவிப்பாளர்கள்;தயாரிப்பாளர்களின் ரசனையும் உங்களைப் போன்றோரின் வற்றாத ஆதரவும் தான் காரணம்.
யோகன் பாரிஸ்
ஆமாம் சேதுக்கரசி, ஒரு காலத்தில் இலங்கை வானொலி, விவத் பாரதியில் வரும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு காத்து கிடந்ததுண்டு, அதுவும் உங்கள் விருப்பம், நீங்கள் கேட்டவை, தேன்கிண்ணம் போன்றவற்றை மறக்க முடியுமா? இதே பெயரில் சித்ரா மஹால் கிருஷ்ணமூர்த்தி தயாரித்த படங்களை நீங்கள் பார்த்ததுண்டா??
//காஸ்ட் தரவிறக்கம் செஞ்சு கேட்டுட்டு வரேன். நம்ம ஐபாடுக்கு தமிழ் பாட்காஸ்டுகள் தரவிறக்கம் செய்யறதுக்கு சுட்டிகள் இருந்தா கொடுங்க. நன்றி...//தரவிறக்கம் செஞ்சு கேட்டீங்களா? நீங்க podbazaar site போனாலே நிறைய பாட்காஸ்ட்கள் தமிழில் கிடைக்கும்!
வாருங்கள் யோகன் பாரீஸ், வருகைக்கு நன்றி, இலங்க வானொலியின் தமிழ் ஒலிபரப்பு ஈழத்தவருக்குமட்டுமில்லை மொத்த தமிழனத்திற்கே பெருமை பரப்பிய ஒன்று! அது மங்கி இருக்கும் இன்றய போர் சுழலால், அதன் சிறந்த வானொலி அனுபங்களை இன்றைய தமிழ் இளைஞர்கள் இழந்திருக்கிறார்கள். அது போன்ற சிறந்த அனுபவங்களை புலம் பெயர்ந்து உலகெமங்கும் வியாபித்திருக்கும் நமது ஈழத்து நண்பர்கள் அதனை இந்த Podcast முறையில் ஒலி பரப்ப முயற்சிக்கலாமே! இன்றைய இணையம் அதற்குண்டான வசதியை செய்து கொடுத்திருக்கிறதே!
Vanakam thaths!
nalama?
enga uni laum sila lecture calls la intha podcasting a use panukirarkal.ilankai vanoliku ivalo varavetpa?
வாம்மா சின்ன பொண்ணு, எங்க இத்த்னை நாளா ஆளே காணோம்! ஆமா பாட்காஸ்ட் கேட்டியாம்மா? அது பத்தி ஒன்னும் சொல்லவில்லையே! ஆமா அந்த காலத்திலே இலங்கை வானொலி நிலையம்னு கதியா கிடந்து ரசிச்ச நாட்கள், மறக்க முடியுமா? எப்பவுமே அப்ப இலங்கை வானொலி நிலையம் தான் தமிழ் நாட்ல ஃபர்ஸ்ட், அப்பறம் தான் மத்த ஸ்டேஷன் எல்லாம், அது என்னா இப்படி கேட்டுட்ட வரவேற்பான்னு!
//தரவிறக்கம் செஞ்சு கேட்டீங்களா?//
அன்னிக்கே தரவிறக்கம் செஞ்சிட்டேன். ஆனா... ஒரு மணிநேரம் பேசியிருக்கீங்களா.. நேரம் ஒதுக்கிக் கேட்கமுடியல இன்னும் :( நண்பர் ஒருவருக்கு லிங்க் அனுப்பினேன். கேட்டு மகிழ்ந்து லயிச்சுப் போயிட்டாராம் உங்க வர்ணனையில்!! :)
முழுவதும் கேட்டேன்.
மிக அருமையாக இருந்தது.
நல்ல தெளிவான ஒலிப்பதிவு.
என்ன மென்பொருள் பயன்படுத்தினீர்கள்?
தொடரவும்.
//நேரம் ஒதுக்கிக் கேட்கமுடியல//தூங்கறதுக்கு முன்னே கொஞ்சம் கொஞ்சம் கேட்டுட்டு தூங்குங்க, முடிச்சிடலாம்!
வாங்க வசந்தன், நான் உபயோகபடுத்தும் மென்பெருள், AVS Media editor, அப்பறம் கம்பைல் பண்ணுனது, audacityன்னு ஒரு portable audio editor இருக்கு, அது free தான்!
//தூங்கறதுக்கு முன்னே கொஞ்சம் கொஞ்சம் கேட்டுட்டு தூங்குங்க//
அதுவும் சரிதான்.. உங்க குரலே அப்படித்தான்.. தாலாட்டித் தூங்கவச்சிடும் போலிருக்கு :)
\\Anonymous said...
Vanakam thaths!
nalama?
enga uni laum sila lecture calls la intha podcasting a use panukirarkal.ilankai vanoliku ivalo varavetpa?\\
Nijajama tharmama adukuma?? enai poi athuvum enai pooooooi Anonymous endu sollutha blogger? grrrrr.
வாம்மா சின்ன பொண்ணு, ஆமா முதல்ல கமெண்ட் போட்டப்ப, உன் பேரை வச்சு தானே login பண்ணுனே!
இல்லேன்னா அப்படி ஆகாதே, எப்படி??
Post a Comment