Monday, November 21, 2005

எனை ஆண்ட அரிதாரம்- முதல் பகுதி

எல்லாருக்குமே ஏதாவது ஒரு அசாத்திய திறமை இருக்கும். அதை வெளிய கொண்டு வர்துக்கு நிறைய பேருக்கு சில பேரு துணையிருப்பாங்க, இந்த 7G ரெயின்போ காலனி பட ஹீரோயின் மாதிரி. சில பேருக்கு யாரும் துணையிருக்க மாட்டங்க, ஆனா தம்மை தாமே எதிலயாவது ஈடுபடுத்திக்கிட்டு, அந்த திறமைய வளர்த்துக்குவாங்க, அந்த திறமையை வச்சு மிகப் பெரிய ஆளா வருவாங்க. சில சமயம் அது ஒரு குறிப்பிட்ட சமயம் வரக்கும் அவங்க கிட்ட இருந்து ஒளி வீசும், அப்புறம் மங்கி போயிடும். வாழ்க்கையில வேற வழி தேடிக்கிட்டு போய்டுவாங்க. இதுக்கு பல உதாரணங்கள் இருக்கு. ஏன் நம்ம தருமி மாதிரி, அப்புறம் என்னோட ஃபிரண்ட் ஜெயராமன்னு, கிரிக்கெட்ல பெரிய பேட்ஸ்மேன். நாங்க காலேஜ்ல படிச்ச காலத்தில ரொம்ப நல்ல விளையாடுவான். அப்ப கோயம்புத்தூர்ல லீக் மேட்ச்ல எல்லாம் பூந்து விளாசுவான். எங்க காலேஜ் நட்சத்திரம். அவனை கபில்தேவ்வோட கம்பேர் பண்ணிதான் பேசுவோம். அவனை சுத்தி எப்பவும் ஒரு கூட்டம் இருக்கும். எல்லாம் இந்த கிரிக்கெட் விளயாடுற கும்பலு தான். அதே மாதிரி லான் டென்னீஸ்ஸும் நல்ல விளயாடுவான். எங்க காலேஜ்ல இருக்கிற கோர்ட்ல அவன் தான் மாணவங்கிற முறையில விளையாடிக்கிட்டு இருக்கிறது. மத்தது அவனோட விளையாடுறவங்க காலேஜ் பி ஏ டு பிரின்ஸ்பலு, அப்புறம் எங்க காலேஜ் பிரின்ஸ்பாலு பசங்க.(பிரின்ஸ்பலு மகன் யாருன்னா, ரொம்ப பேமஸ் ஆன ஆளு, அந்த காலத்திலயே ஜெயபிரதாவோட சுத்துனவங்கன்னு ஒரு பேச்சு, நீலகிரி தொகுதில எம் பி யா இருந்தவரு), அப்புறம் ரெண்டு புரபசர்ங்க. நம்மல்லாம் கபடி கும்பலுங்க, எங்கத்த டென்னிஸ் ஆடுறது போங்க!.

நான் முதல்லேயே சொன்ன மாதிரி அவன் கூட சுத்துற ஃபிரண்ட்ஸ்ங்க கும்பலு கொஞ்சம் அல்டாப் ரகம். நுனி நாக்கு இன்கிலீஸ் பேசர கும்பலு, பொதுவா அவங்க எல்லாம் மெட்ராஸ் பசங்க. நாங்க படிச்சப்ப ஹாஸ்டல்ல மாவட்ட வாரிய கும்பலுங்க உண்டு. எம் டி கே ன்னு ஒரு மக்கா கும்பலு, அதாவது மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டம், அப்புறம் திருச்சி, தஞ்சாவூரு, கும்போகோணம்னு சோத்து கும்பலு, அப்புறம் ஈரோடு, சேலம், வேலூர்னு கவுண்டர் கும்பலு. அப்படி அப்படியே செட் சேர்ந்தரும், அப்புறம் அம்பேத்கார் கும்பலு. ஆன ஜெயராமுக்கு எந்த பாகுபாடு இல்லாம ஆதரவு இருக்கும். கபில்தேவ் மாதிரியேயும் மீசையும் நல்லா கரு கருன்னு வச்சுக்கிட்டு இருப்பான். நாங்கல்லாம் ஃப்ர்ஸ்ட் யியர்லருந்தே ஃபிரண்ட்ஸ். செமஸ்டர் எக்ஸாமுக்குன்னு வுட்ட லீவுல ரெண்டு மாசம் சீட்டு விளாயாடிட்டு கடைசி ஒரு மாசங்கல படிச்சு பாஸாவர கேஸ்ஸுங்க. ராத்திரி மூணு நாலு மணி வரை விளாயாடிக்கிட்டு இருப்போம், அப்புறம் தூங்கி மத்தியான சோத்துக்குத்தான் எந்திரிக்கிறது. அப்புறம் இருக்கவே இருக்கு டவுண் ஹாலு, ஏதாவது நூன் ஷோ படம் பாத்துட்டு சாய்ந்திரம் ஹாஸ்டலு திரும்பி ராத்திரி மெஸ்ல சாப்பிட்டுடு புறவு சீட்டு கச்சேரி, ராத்திரி மூணு, நாலு வரை.

அது மாதிரி நமக்கு கிரிக்கெட்ல்லாம் ஆட வராது. வேடிக்கை பார்க்கறதோட சரி. அதுவும் ஞாயித்துக் கிழமைங்கள்ள எங்க காலேஜ்க்கும் மத்த காலெஜ்க்கும் லீக் மேட்சு இருக்கும். காலையில மெஸ்ல போடற அந்த வீண போன பிரட்டும் ஜாமும் திங்க நம்க்கு பிடிக்காது. அதானால மத்தியான்ம் போடற கோழி பிரியாணிக்கு நாக்க தொங்க போட்டுகிட்டு மேட்சு பாத்து தொலைச்சுகிட்டு இருப்பேன். சமயத்தில இந்த கோழி வர லேட்டாயிடும், அப்புறம் சாப்பிட மணி ஒன்னு ஆயிடும், மெஸ் டைம் படி பன்னிரெண்டு மணிக்கு ஆரம்பிக்கணும். ஆனா ஒரு மணிக்கு தான் மெஸ்ஸையே தொறப்பானுங்க. சரியா மேட்சோட ஒரு செஸ்சன் முடிஞ்சு பிரேக்ல சாப்பிட வர சரியா இருக்கும். அப்ப கூடி நிக்கிற கும்பலு கூப்பாடும், கூத்தும் என்னமோ இந்தியா பாகிஸ்தான் மேட்சு மாதிரி தான் போங்க. நம்ம ஜெயராம் தான் எப்பவமே ராஜா, டாப் ஸ்கோரர். அந்த அசாத்திய திறமையால யூனிவர்சிட்டி வரைக்கும் ரெப்ரஷன்டேசன் பண்ணியவென். அப்ப எதிர்பாத்தது என்னான்னா ரஞ்சி வரக்கும் போய்டுவான் அப்புறம் இந்திய டீம்ல வர வரக்கும் கனவு தான்.

என்னதான் நுனி நாக்கு பேசற இங்கிலீஸ் கும்பல்ல சுத்தினாலும் ஜெயரமானுக்கு நம்மகிட்ட கொஞ்சம் வாஞ்சை தான். என்னா ஒன்னு அவன் ஊரு மெட்ராஸ் கிடையாது, இந்தோ தெக்கால இருக்கிற கோவில்பட்டி தான். அவங்க அப்பா பி டபிள்யூ ல இஞ்சினியருன்கிறதலா ஊர் ஊரா சுத்தி படிச்சிட்டு, பெரும்பாலும் தென் மாவட்டங்கள் தான், பிறவு இன்ஞ்சினியரிங் பண்ண கோயம்புத்தூர் வந்தவன். அவ்வளவா தாட்டு பூட்டுன்னு இங்கிலீஸ்லாம் பேசலனாலும் ரொம்ப ஸ்டைலா நடந்துக்கிறவன். நம்மகிட்ட ஏன் ஒட்டுனான்னா, இருக்கே நம்மகிட்டையும் திறமை, அதுதான் அந்த நடிப்பு, மிமிக்கிரி எல்லாம். அதானால அவனுக்கு சமமா காலேஜல ஒரு ஹீரோ அந்தஸ்துல பேசபட்ட ஆளு, எப்படிங்கிறீங்களா, அதப்பத்தி தானே இனி வரபோர் பதிவுகள்!

அந்த மெட்ராஸ் கும்பல்ல ரெண்டு இருந்தது. ஒன்னு நான் சொன்ன அந்த நுனி நாக்கு ஆங்கிலயேர்கள், இன்னொன்னு நம்ம சூளை கும்பலு, நமக்கு சரி சமமா கபடி விளாயாடிகிட்டு, நம்மலோடையே சுத்தினது. அதாவது மெட்ராஸ் A, அப்புறம் மெட்ராஸ் B. நம்மது மெட்ராஸ் B. திருவல்லிக்கேணி, அப்புறம் மொண்ட் ரோடு, சூளை அப்புறம் ஆழ்வார் பேட்டை இது தான் நம்மாலுங்களோட ஜாகை.(நம்ம கூட இருந்த டாக்டர் கொன்னை, அங்குராஜ்ங்கிற அழகான பேரு தான் டாக்டர் கொன்னையா மாறுச்சு, ஆழ்வார் பேட்டையில சாருஹாசன், கமல்ஹாசன் வீட்டுக்கு பின்னாடி வீடு, அப்ப கேட்டா நான் சுஹாசினி தங்கச்சியே சைட் அடிக்கிறேன்னு பீலா வுட்டுகிட்டு இருப்பான்) அந்த மெட்ராஸ் A கும்பலு கொஞ்சம் நம்மகிட்ட டக்கர் அடிக்கும், இருந்தாலும், நம்ம பலுவையும் நம்ம மெட்ராஸ் B கும்பல வச்சு காண்பிச்சு அடக்கி வச்சுருந்தோம். ஆன் ஜெயராமன் இதெல்லாம் கண்டுக்கிடமாட்டான். அவன் ரெண்டு கும்பலுங்கிட்டேயும் பதிவிசா போய்க்குவான். ஏன்னா அவன் எந்த பக்கமும் சாய வேணாம் அது அவனேட பாப்லாரிட்டியே பாதிக்கும்ங்கிறத்தினாலே.

நம்ம கொஞ்சம் நாடகம், கூத்து, ஸ்கிட்டு, மிமிக்ரி இதெல்லாம் கலக்கிக்கிட்டு இருந்த நேரம். வெறும் நடிப்புங்கிறது மட்டுமில்லாம, தமிழ் மன்றம், நாடக மன்றம், இதிலெல்லாம் ஆக்டிவா மன்ற பணிகளையும் செஞ்சுக்கிட்டு இருப்பேன். பத்திரிக்கை வக்கிறதிலருந்து, கொடி கட்டறதுலருந்து, கஸ்ட்ங்களை இன்வைட் பண்றதிலருந்து, பதிப்புகள் போடறதிலருந்து எல்லா வேலையும் செய்வேன். அது மாதிரி மத்த காலேஜ்ங்கள்ள போய் பேச்சு போட்டி , கவிதை, நாடகப்போட்டி, அப்படின்னு செஞ்சிக்கிட்டு இருந்தேன். அதனால மற்ற கல்லூரில நமக்கு நிறைய நண்பர்கள் உண்டு. அதுல்லயும் பெண் நண்பிகளும் உண்டு. பெண்கள் கல்லூரியில பேச்சு போட்டிக்கு போறப்ப நானும் என்னுடய சீனியர் இராமநாதனும் ரொம்பவே கலகலப்பா பேசி பெண் மாணவிகள் உள்ளங்களை கொள்ளை கொண்டவர்கள், அதனாலேயே நமக்கு ரோஜாக்கூட்டம் அதிகம் உண்டு. அதிலேயும், அந்தப்புரம், தடாகம், தாமரைக்குளம், ரோஜா மலர் தெளித்த திரவியக்கடல், தலை காயவைத்து நீரில் மிதக்கும் கன்னிமீன் போன்று, துடுப்பென கையை அசைக்கும் லாவகம், புரவிலே ஒடி வந்த மன்னன் கொண்டான் விழிப்பார்வை, நனைந்த தேகம், மெல்லிய வெண்மை உடையில குலுங்கிய வதனம், பொங்கி சிரித்தன கண்கள்..., இது போதும் அந்த சொல்லும் நடையில ஹாப் சாரியோட சேர்ந்து, முழு சாரிங்க கூட்டத்திலருந்து, அதாங்க டீச்சர் மேடங்க, வரும் கை தட்டல் பாருங்க, நண்பிகள் கூட்டம் ஏராளம், ஏராளம்!

இப்படி போயிட்டருந்தப்பதான் திடீர்ன்னு அவனுக்கு ஒரு ஆசை வந்தது, அதாவது அந்த வயசுலே உண்டாகிற காதல் மயக்கம் தான். அவனுக்கு தெரிஞ்ச ஒரு உறவுக்காரப் பொண்ணு நிர்மலா காலேஜ்ல படிச்சிகிட்டு இருந்துச்சு. அதெ எப்படியும் பாத்து பேசிடனும் அவனுக்கு ஒரு ஆசை. நமக்கு தான் அத்தனை காலேஜ்லேயும் நண்பர்கள், நண்பிகள் உண்டாச்சே, ஆனா அவனுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம், அதனாலே என்னை நாடினான். நீ எப்படியாவது கனெக்ஷன் கொடுத்துடு, அப்புறம் நான் பாத்துக்கிறேன்னான். சரி சும்மா தொந்திரவு பண்னிகிட்டுருக்கானே, போலாம் ஒரு நாளைக்கின்னேன். இப்படியே ஒரு ரெண்டு மாசம் போயிடுச்சு. நான் அதிகமா பூ சா கோ மகளிர் கல்லூரிக்குத்தான் போட்டிக்குன்னு போய்ருந்தேன். நிர்மலா காலேஜ்க்கு போட்டிக்குன்னு போனதில்லை. அது ஒரு சாமி காலேஜ். கோயம்புத்தூர்ல கலகல்ப்பா இருந்த பெண்கல் கல்லூரி PSG பெண்கள் கல்லூரி அப்புறம் home science காலேஜ். ஆனா அந்த கல்லூரியிலருந்து வந்து கலந்துக்கிட்ட ரெண்டு பெண்களை தெரியும். ஆனா அவ்வளவு பழக்கம் இல்லை. சரி போய் பாத்துடுவோமுன்னு காலேஜ் போயி பாத்தோம். கடைசியிலா அதுங்க என்னை அடையாளம் கண்டுகிட்டதனால, விஷயத்தை மெல்ல சொன்னோம். இவன் உறவுக்கார பொண்ணு படிக்குது உங்க காலேஜ்லே, பாத்து பேசணும்னு ஆசைபடறான்னேன். அதுங்களும் சரி நாங்க கூப்பிட்டு வரோம்னு போச்சுங்க. கடைசியில ஒல்லியா ஒரு பொண்ணை கூப்பிட்டு வந்ததுங்க. அப்புறம் நான் அவங்க ரெண்டு பேரையும் பேச சொல்லிட்டு அந்த பக்கம் நகர்ந்தேன். கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா அந்த பொண்ணு ஓன்னு அழுதுக்கிட்டு நின்னுது. என்னடா என்ன பண்ணுனே கேட்டப்ப, நான் ஒன்னும் பண்ணல்ல, நான் தூரத்து உறவு முறை, ஒரு தடவை ஒரு விஷேசத்தில பாத்திருக்கேன்னு தான் சொன்னேன் அதுக்கு இந்த அழுவை அழுகுதுன்னான். அதுக்குள்ள அந்த பொண்ணுங்க வந்து என்னாச்சு எதாச்சின்னு பதறி போயி, நீங்க போயிடுங்கன்னு சொன்னோன்ன தப்பிச்சோம் பொழச்சோமுன்னு ஓடி வந்துட்டோம். அப்புறம் இவன் வீட்ல எல்லாம் தெரிஞ்சு போச்சு. கடைசியில என்னான்னு பாத்தா, ஏதோ அவங்க ஊர்ல அவங்களுக்கு பகையாம், அதனால யாரு வந்து சொந்தம் கொண்டாடினாலும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி கூட்டம் போட்டுட்டு இல்லான உனக்கு ஏதாவது ஆபத்து வரும்னு சொல்லி வச்சிருந்திருக்காங்க, அதுக்குத்தான் அந்த ஒப்பாரியான். நல்ல கூத்துடா, உனக்கு உதவப்போயி நான் மாட்டப்பாத்தேன்னு, அவனோட கடைசியல் சண்டை. ஆனா கடைசியில சரியானக் கூத்து ஒன்னு நடந்துச்சு தெரியும்ங்களா, என்னான்னா, கடைசியில அந்த பொண்னையே கல்யாணம் பண்ணிக்கிட்டான் நம்ம ஜெயராமு. படிச்சி முடிச்சு, இப்ப அவனும் பி டபிள்யூல தான் வொர்க் பண்றான். ஆனா கிரிக்கெட்ல அவனிடம் இருந்த அந்த அசாத்திய திறமை, இன்னொரு துறையில பெரிய ஆளா வரனும்ங்கிற்தெல்லாம் ஒரு கனவாவே போயிடுச்சு போங்க கடைசியில!

நான் சொல்ல வந்ததை இன்னும் சொல்ல ஆரம்பிக்கவே இல்லை, எல்லாருக்கிட்டேயும் ஒரு திறமை இருக்குன்னு சொன்னேன்ல்ல, அது என்னுடய உதாரணத்தில எப்படின்னு அடுத்த பதிவில பார்க்கலாமா?

24 comments:

said...

தொடரா? பேஷ் பேஷ்.

நல்லாத்தான் இருக்கு.
அப்புறம் என்னாச்சுன்னு சொல்லுங்க.

அதுசரி. கோவையிலா படிச்சீங்க?

எந்த வருசமோ?

said...

அக்கா,
//எந்த வருசமோ?//
உதயகுமார் சின்னப் பையன்.. எப்படியும் ஹோமோ சேபியன்ஸ் தோன்றினதுக்கப்புறம் தான் படிச்சிருப்பாருன்னு நினைக்கிறேன்.

உங்க காலேஜ் அனுபவத்துக்கு கொசுவத்தி வாங்கனும்னா அங்கிளை நினச்சு பாவமா இருக்கு. விட்டுடுங்களேன்.

said...

அப்புறம் வெளிகண்ட நாதர், நல்ல பதிவு.

ஆனா தொடர் கோப்பிரைட் உரிமையாளர்களான என்னையும் அக்காவையும் கவனிச்சீங்கன்னா, பின்னாடி லீகல் பிரச்சனை எதுவும் வராது. :))

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஆமா தொடர் தான், ஒரு பதிவுல போட முடியாது, நிறைய சமாச்சாரம் இருக்கு, விறு விறுப்பா இருக்கும்னு நம்புறேன்.

கோவையில தான் நம்ம இஞ்சினியரிங் படிப்பு, 70களின் கடைசி, 80 களின் தொடக்கம். நாங்க படிச்சது அஞ்சு வருஷம்.

said...

இராமநாதன், வணக்கம், வந்தனம், மகிழ்ச்சி! ஹோமோ இல்லை ஹோம் சயின்ஸ், அர்த்தமே.. மாறி போச்சுங்களே!

தொடர்கள் எழுதருதல ஜாம்பவான்களை அடிச்சிக்க முடியுமா? ஏதோ நம்மாலான முயற்சி!, கண்டிப்பா உங்களையும், அக்காவையும் கவனிச்சிக்கிறேன் -:)

said...

வெளிகண்டநாதரே,
நான் சொன்னது ஹோமோ சேபியன்ஸ் (Homo sapiens)

நீங்க என்னடான்னா, அப்பன் குதிருக்குள்ள இல்லேங்கற மாதிரி வேறெதுவோ சொல்ற மாதிரி இருக்கு???? :)))))

said...

இராமநாதன், அதெ கொஞ்சம் மனித ஜாதின்னு தோன்றினதுக்கப்புறமுன்னு சொல்லிருக்க கூடாதா?

//ஹோமோ இல்லை ஹோம் சயின்ஸ், அர்த்தமே.. மாறி போச்சுங்களே!// சும்மா ரகளை வுட தான் :-)

said...

பல்லவி, ரொம்ப பேசனா அடி விழும்னுட்டிங்க இனி அடக்கியே வாசிக்கிறேன் போதுமா? :-)

said...

தொடரின் ஆரம்பமே நல்லாருக்கு உதயகுமார்.

நடத்துங்க!

-மதி

பி.கு.: துளசி கண்ணில படாம செய்யுங்கன்னு சொல்லலாம்னு வந்தேன். பார்த்தா துளசியே முதல் பின்னூட்டம். :)

said...

அப்பாடி! சொல்லி ரொம்ப நாள் ஆச்சேன்னு பார்த்தேன். நல்லாவே ஆரம்பிச்சிருக்கீங்க..gear மாத்துங்க சீக்கிரம்...

said...

நம்ம பதிவுக்கு வந்ததுக்கு சந்தோஷம், நன்றிகள் மதி!

said...

அடுத்து டாப் கியர் தான், தருமி அவர்களே!

said...

ம்ம்ம்ம்... அப்புறம்?

said...

இதோ அடுத்த கட்டம் வந்திரும்... உஷா!

said...

நல்லா எழுதியிருக்கீங்க உதயகுமார்.... அடுத்த பகுதியை சீக்கிரம் போடுங்கள்.

said...

நம் பதிவுக்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி சுரேஷ் பாபு, அடுத்த பதிவு இதோ விரைவில் ஆரம்பம்

said...

ஆகா, அட்டகாசமான நினைவலைகளாக இருக்கிறதே.

தொடர்ந்து எழுதுங்க, படிக்க சுவாரஸ்யமாக இருக்குது.

said...

வருகைக்கு நன்றி பரஞ்சோதி! தாங்கள் மீண்டும் மீண்டும் வரவேண்டும் இந்த நினைவலை தொடருக்கு! நீங்கள் மிகவும் ரசிக்கக் கூடியதாய் இருக்கும் என நம்புகிறேன்!

said...

ஆஹா...70களின் கடைசி, 80களின் தொடக்கமா...இந்த இணையத்துல யாரு சின்னப்பசங்க யாரு மூத்தவங்கன்னு தெரியவே மாட்டேங்குதே....பாபா அண்ணா...எப்பவாவது மரியாதை குறைச்சலாப் பேசியிருந்தா மன்னிச்சு விட்றுங்கண்ணா...

அப்புறம் தொடர் நல்லா வந்துருக்குண்ணா...இன்னும் நெறைய எழுதுங்கண்ணா...மத்தவங்களுக்கு குடுக்குற பின்னோட்டங்கள்ள வர்றமாதிரி செந்தமிழ்ல ஏண்ணா உங்க பதிவுல எழுதுறதில்ல?

said...

குமரன், நான் தான் அப்பவே சொன்னேன்னே, சிறிசு பெருசாவும், பெருசு சிறிசாவும் இணையத்தில தெரிவாங்கன்னு, இதல்லாம் இங்க சகஜமப்பா! செந்தமிழ்ல எழுத நிறய சிரமம் எடுத்துக்குணும். மேலும் சொந்த கதை சோக கதையை சொல்லு தமிழ்ல எழுதுனாதனே ஒரு அழகு!

said...

கரெக்டுங்கண்ணா...

said...

சர் தான் குமரன்!

said...

//நிர்மலா காலேஜ்க்கு போட்டிக்குன்னு போனதில்லை. அது ஒரு சாமி காலேஜ் //
சார், அது நீங்க படிக்கும்போது !! இப்போ?? பயங்கரம்!!

ஏன்னா, நம்ம சொந்த ஊர் கோவை!!
சுத்திருக்கறமல்ல!!


சார், CIT கிடைத்து, போய் Anna University சேர்ந்தேன் (ME), hmmm


நல்ல பதிவு!!

ரொம்ப சுவாரசியமான தொடர்!!