என்னோட திறமை என்னான்னு தெரிஞ்சுக்க எனக்கு ஒன்னும் அதிகம் நேரம் எடுக்கல்லை. படிப்புன்னு பாத்தா, கொஞ்சம் நல்லா படிக்கிற ஆளுதான். இந்த சின்ன வயசில இருந்த துறுதுறுப்பு, சூட்டிகை, சேட்டை, வாலுத்தனம் எல்லாமே எனக்கு எதிலையும் ஆர்வமா, துணிச்சலா செஞ்சு பார்க்கணும்னு தோணும். சரி படிப்பைப் பொருத்தவரை ரொம்ப எக்ஸ்ட்ராடினரி இல்லானாலும், முதல் மூணு ராங்க் குள்ள வர ஆளுதான். மத்தபடி, இருக்கிற எனர்ஜிய வேற எதிலயாவது திருப்பனும்னா ஸ்போர்ட்ஸ், கேம்ஸ், விளையாட்டு, இல்ல மற்ற இயல், இசை கலைகள்ல தான் திருப்பியாகனும். ஸ்போர்ட்ஸ்னு எடுத்துக்கிட்டா, ஸ்கூல்ல ஸ்போர்ட்ஸ் டேயிலே, வாயில கரெண்டியில எழும்பிச்சை பழம் வச்சிகிட்டு ஒடறதுல தான் இரெண்டாவதோ, இல்ல மூணாவதோ வருவேன். மற்றபடி ஓட்டப்பந்தயம், ரேஸ் இதல்லாம் நமக்கு எமகாதக தூரம். சாக்குமூட்டையில ஒடி ஜெயிக்கிறேன் போர்வழின்னு காலை சிராச்சிக்கிட்டது தான் ஜாஸ்தி.ங்.. இந்த பலேம் பால் நல்லா விளையாடுவேன். இது எத்தனை பேருக்கு தெரிஞ்சுரிக்கும்னு தெரியலை. அடுத்தவன் முதுகைப் பாத்து அடிச்சு விளையாடினும். அப்புறம் அடி வாங்கினவன் பாலை எடுத்து அடுத்தவனை குறி பாத்து அடிக்கணும். இதில நான் அடுத்தவனை அடிச்சதை விட நான் அடி வாங்கினதுதான் அதிகம். அப்புறம் கொஞ்சம் பெரிசானோன, கபடி விளையாட்டுல நம்ம கிங். கில்லி விஜய் மாதிரி டீம் ஹீரோ. எதிரி அணியை ஏறி அடிச்சிட்டு வரதல கில்லாடி. என்னை பிடிக்கிறதுக்கு கஷ்டபடுவாங்க, ஏன்னா நான் கொஞ்சம் பாரியான ஆளு, அதனால பிடிக்க முடியாம, தன்னை காப்பாத்திக்க அவங்க கோட்டை தாண்டி அவுட் ஆகிறது சகஜம்.
வேற விளையாட்டுகள்னு எடுத்துகிட்டா கால்பந்தாட்டத்தில கொஞ்சம் ஆர்வம் இருந்திச்சு, ஏன்னா, சின்ன பிள்ளையில திருச்சியில இந்த மதுரம் கால்பந்து டோர்னமென்ட் நடக்கும். அது கோடையில ஒரு மாசமோ, இரண்டு மாசமோ தொடர்ந்து நடக்கும். வட இந்தியாலருந்தெல்லாம் வந்து டீம்ங்க விளையாடும். இந்த கால்பந்தாட்டம் திருச்சி மாநகரிலே ஒரு பெரிய பொழுதுபோக்கு. படிச்ச கும்பல விட , வியாபாரம் செய்ற முதலாளி கும்பலுங்க ஜாஸ்தி போய் பார்க்கிற்துண்டு. திருச்சின்னு எடுத்துகிட்டா, அது ஒரு பெரிய வர்த்தக நகரம், சுத்துபக்கத்து கிராமங்கள், அரியலூர், பெரம்பலூர், துறையூர்,மணப்பாறை, நாமக்கல், முசிறி இங்கிருந்தெல்லாம் விவசாயிங்க விளஞ்ச பொருள்களை எடுத்து வந்து மொத்த கொள்முதல் யாவாரம் செய்யும் டிஸ்டிரிபூசன் சென்டர். ரீட்டைல் வியாபரம் லோக்கல் ஆளுங்க செய்றது. 60 க்கப்பறம் தான் காமராஜர் BHEL, கனரக தொழிற்சாலை, கொண்டுவந்ததுக்கப்பறம் ஒரு மாதிரி மார்டன் ஆன ஊரு. அதனால இந்த வியாபாரிங்க அதிகம் உள்ள ஊரு. அவங்க எல்லாத்துக்குமே இந்த கால்பந்தாட்ட தொடர் ஒரு பெரிய என்டர்டெயின்மென்ட். ஆக, நான் எங்க கடைக்குப் போறப்பல்லாம் இந்த மேட்சுக்கு போறதுண்டு. பார்த்து ரசிக்கிறதோட மட்டும் தான். விளயாட ஆசை இருக்கும், ஆன விளயாடறேன் பேர்வளின்னு கால் நகம் பேத்தது தான் மிச்சம். மற்றபடி கிரிக்கெட்ல்லாம் பத்தி அதிகம் தெரிஞ்சுக்கிட்டது இஞ்சினியரிங் காலேஜ் போயிதான்.
இப்படி விளையாட்ட விட்டுட்டா, அடுத்து இயல், இசை, நாடகம் தான். ஐயரு வீட்டுங்கள்ள வளர்ந்திருந்தாலும், பாட்டு பாடவோ, ஏதாவது இசைக் கருவி கத்துக்கவோ ஏற்பாடு பண்ணி இருந்திருப்பாங்க! ரொம்ப அதிகமா ஆர்வத்தோட ஆம்பளை பசங்களுக்கும் பரதநாட்டியமும் கத்துக் கொடுத்துருப்பாங்க, நம்ம கமலஹாசன் மாதிரி. நமக்கு ஏது அந்த கொடுப்பினை! அதனால தன்னிச்சையா வந்த நடிப்பு, கூத்து, பாட்டுல எல்லாம் ஆர்வத்தை வளர்த்துகிட்டேன். ஆக அதிகமா அடுத்த பொழுது போக்க நான் எடுத்துக்கிட்டது சினிமா பார்க்கிறத தான். வாரங்கள் ஞாயிறு இல்லாம வேணா கழிஞ்சிருக்கலாம், ஆனா, ஞாயித்துக்கிழமைகள்ல நான் சினிமா பார்க்கிறது தவறாது. முதல்ல சண்டை படங்கள் பார்க்கத்தன் அதிகம் பிடிக்கும். பொறவு நகைச்சுவை படங்கள், அப்புறம் தான் அழுகை படங்கள். இப்படி கழிஞ்சது சில நாட்கள், அப்புறம் என்னேட சின்னபிள்ள வா..ராஜா..வா கதை தான் உங்களுக்குத் தெரியுமே! அந்த கட்டத்தில தான், முதல்ல வெத்தயா சாம்ரம் வீசற மாதிரி தான் கேரக்டர்கள். பொறவு, கொஞ்சம் பெரிசா நாலு,அஞ்சு பக்கங்களோட ஏசு நாதர் சீடர்கள் ஒன்னு அப்புடின்னு. ஆறாவது, ஏழாவது படிக்கயில்ல தான், என்னோட நாடக வாத்தியார், அமல்ராஜ், என்னோட திறமைய கண்டுகிட்டு ஒரு லீடிங் கேரக்டருக்கு இணையான ஒரு ரோல் கொடுத்திருந்தார், அவரு எழுதிய சமூக நாடகத்துக்கு. மெயின் ரோல இன்னொரு பையனுக்கு கொடுத்திருந்தார். அப்பங்கே, அவன் அம்மை போட்டு நடிக்க முடியாம போக, பொறவு அந்த கேரக்டர நான் செய்ற மாதிரி ஆயிடுச்சி. நானும் நல்லா நடிச்சு எல்லாருகிட்ட இருந்தும் பாராட்டு வாங்கினேன்.
மிடில் ஸ்கூல்ல படிக்கிறவரை நிறைய நாடகங்கள்ல நடிச்சு, நல்ல நடிகர்னு கேடயம் எல்லாம் வாங்கினாலும், பிறகு ஹை ஸ்கூல் படிச்சப்ப அவ்வளவா ஏதும் நாடகங்கள்னு நேரம் செலவழிச்சதில்லை. ஆனா சினிமாவோட தாக்கம் இருந்தது. நடிக்கிற நடிகர்கள போல உடுப்ப மாட்டிக்கிணும், ஹேர் ஸ்டல் வச்சுக்கணும்னு. எம்ஜிஆர், சிவாஜி வச்சிக்கிட்டு வர மாதிரி நம்மலால முடி வச்சுக்க முடியாது. ஏன்னா அவுங்க ஒவ்வொரு படத்துக்கும் ஒரு டோப்பா முடி வச்சுவுகுவாங்க, நம்மகிட்ட இருக்கிற கோரமுடிய என்னத்த எழவு போட்டு சீவுனாலும் முன்னாடி தொங்கிற சுருளு முடி தான் வக்க முடியுமா, இல்ல பஃப் முடி தான் வக்க முடியுமா? ரொம்ப கஷ்ட பட்டுருக்கேன், தேங்கா எண்ணெயும் தண்ணியும் கலந்து தனியா பாட்டில வீட்ல ஒளிச்சு வச்சு, அத தடவி, பண்ணாதக் கூத்தே கிடையாது போங்க! கடைசியில நம்ம கூடசேர்ந்தவன்,'டேய், அதெல்லாம் டோப்பாடா, உனக்கு வராது' சொன்னவுட்டிதான் அத வுட்டதே. அப்ப சொந்தமா முடிவச்சு ஆடி பாடி நடிச்ச நடிகரு சிவகுமாரு தான். அதானால அந்த முன்னால அவரு எடுத்து வைக்கிற பஃப் மாதிரி நமக்கும் கொஞ்சம் வச்சா நல்லாதான் இருந்தது. இதை எல்லாம் உடச்சிட்டு பிறகு வந்தாரய்யா நம்ம பரட்டை. ஆகா, என்ன மாதிரி ஒருத்தன் வந்தாண்டான்னு கோரமுடியோட, முன்னால விழும் கற்றையோட, வைரமுத்து பாட்டு கட்ட ஒரு 20 வருஷம் ஆனாலும், அப்பவே நான் அவன் அழகு பாடி, அவன் படங்களை வெறியோட பார்க்க ஆரம்பிச்சேன். இப்பவும் அந்த காலத்தில அவரு வச்சிருந்த முன்னாடி விழும் அழகு ஸ்டல்ல தான் தலை சீவி வச்சிக்கிட்டுருக்கேன், அவரு நடுவில மாத்திகிட்டாக்கூட. வேணும்னா ரஜனி ராம்கி பிளாக்ல இருக்கிற போட்டவை பாருங்க, அந்த சிரிப்புதான்யா என்ன மயக்கிச்சு.
நான் என்னமோ அரிதாரம் பூச ஆரம்பிச்சது அஞ்சாவதோ, ஆறவதோ படிக்கிறப்பவே. ஆனா நல்ல திறமயான நடிகனா பரிமளிக்க எனக்கு வாய்ப்பளித்தது இந்த கோவை மாநகரமே! இஞ்சினியரிங் காலேஜ் சேர்ந்த முத வருஷம், இந்த ராக்கிங் எல்லாம் ஜனவரி வர நடக்கிற துண்டு. ஆகஸ்ட், செப்டம்பர்ல சேர்ந்தா, அது ஆறு மாசம் கண்டிப்பா உண்டு. அப்புறம் சீனியர்ஸ் எல்லாம் ப்ரண்ட்ஸ். எங்க பயமெல்ல்லாம் நீக்க ஃப்ர்ஸ்ட் யியருக்கு ஒரு கலை நிகிழ்ச்சி போட்டி வப்பாங்க, அதல முத வருஷ ஸ்டூன்ட்ஸ் வந்து பாட்டு பாடலாம், கவிதை வாசிக்கலாம், மிமிக்ரி பண்ணலாம், அப்புறம் வசனம் பேசி நடிச்சி காட்டலாம். ஆனா உருப்படியா யாரையும் பண்ண விட மாட்டங்க. மாட்டு கத்து கத்தி ஸ்டெஜ்ல விட்டு கீழே இறக்கி விட்டுடு வாங்க. அது எங்களுக்கு எல்லாம் தெரியாது. ஆனா இந்த கலை நிகழ்ச்சி போட்டிக்கு ஆர்வதோட பேரு கொடுத்து, அவனவன் சிவாஜி பேசன வசனத்தை, வீரபாண்டிய கட்ட பொம்மன், மனோகரா, தேசிங்குராஜா, அப்புறம் பராசக்தி, அப்படின்னு பக்கம் பக்கமா படிச்சு தயார் பண்ணிகிட்டு இருந்தானுங்க. நானும் ஸ்கூல்ல எல்லாம் இந்த வசனங்களை பேசுனவன் தான், அதுவும் 30 பக்கமானாலும் அசரமா படிச்சு உணர்ச்சி வசமால்லாம் பேசி நடிச்சவன் தான். ஆனா பாருங்க, இந்த கலைப்போட்டில இதை எல்லாம் பேச எனக்குப் பிடிக்கல்ல. வேற வசனங்கள் தயார் பண்ணி பேசுவோம்னு நினைச்சேன். அப்படி ராஜவசனம் தயார் பண்ணிட்டு போனவன் கதிய பாத்திங்கன்னா, அவன் 'என் புஜபல பராக்கிரம் பார்த்துள்ளாயா?', 'என் தோள்கள் தினவெடுக்கின்றன' அப்படில்லாம் ஆரம்பிச்சானா , அடுத்த வார்த்தை அவன் என்ன பேசுரான்னு கேட்க முடியாது. அவனை ஸ்டேஜ் வுட்டு இறக்கிட்டு தான் மறு வேலை பார்ப்பானுங்க நம்ம சீனியருங்க, அடுத்த வந்த வருஷங்கள்ள நாமும் அப்படிதான். ஏன்னா இது ஒரு மறக்க முடியாத் நிகழ்ச்சி சீனியருக்கும் சரி, ஜூனியருக்கும் சரி. அப்ப தான், நம்ம ஏறுனோம் ஸ்டேஜ். ஆரம்பிச்சேன் என்னோட வசனங்களை, பின் ட்ராப் ஸ்லென்ஸ், அரை மணி நேரம், மொத்த கூட்டமும் ரசிச்சு, கைத்தட்டலோட கேட்டுச்சு நான் பேசற வசனங்களை. மேடை விட்டு இறங்கி வர்ப்ப ஒரே உற்சாகம், கைத்தட்டல், ஊக்கமளிப்பு, பாராட்டுக்கள், எனக்கு ஒன்னும் ஓடல. நமக்கு இவ்வளோ பாராட்டுக்களா, நம்ம திறமைக்கு இத்தனை அங்கிகாரமான்னு, ஒரே ஆச்சரியம்!
என்ன அப்படி வசனம் பேசுனேன்னு கேட்கிறீங்களா, அதத்தானே விவரமா சொல்லப்போறேன் அடுத்த பதிவுல, புறவு சந்திப்போம?
Wednesday, November 23, 2005
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
'நிறைவேறா ஆசைகள்', எங்களின் முதல் வருட நாடகப்பெயரும் அதுவே, அது பற்றி விரைவில் சொல்ல இருக்கிறேன். வாஸ்தவம் தான் ஒவ்வொரு கால கட்டத்திலும் பல திறமைகள் வெளிபட வாய்ப்புண்டு. இந்த பதிவுகளின் முன்னேற்றம் பற்றி தெரிந்து ஊக்கமளித்தமைக்கு நண்றிகள்!
அப்படி என்னத்தான் வசனம் பேசுனீங்கன்னு இதுலேயே சொன்னா ஆகாதா? க்ர்ர்.. அடுத்த பதிவு வரைக்கும் காத்திருக்கணுமா?? :)
--
இந்த ஒரு காரணத்துக்காகவே அஃபிஷியலாக உங்களை மெகாத்தொடர் சங்கத்தில சேத்துக்கரோம்.
ம்ம்ம்ம்ம்ம்ம் அப்புறம்?
சீக்கிரம் சொல்லுமையா.
எதாவது 'ரஜனிகாந்த்'பட வசனமா?
தம்பி ராமநாதன் சொன்னதை வ(லி)ழிமொழிகின்றேன்.
இராமநாதா, தொடர்களின் முடிச்சே கடைசியில கொண்டாந்து விடறது தானே, பொறுங்க அடுத்த பதிவில அவுத்துடலாம்-:)
//எதாவது 'ரஜனிகாந்த்'பட வசனமா?// இல்லை ஆனா ரஜினிகாந்த் படத்தில இருக்காரு-:)
நன்றாக இருந்தது உங்கள் அனுபவங்கள். விளையாடுகிறேன் என்று போய் கால் சிராய்ப்புடன் வீடு வந்த நாள்கள்தான் எனக்கு அதிகம். பழைய நினைவுகளைக் கிளறி இருக்கிறீர்கள்.
பல்லாங்குழி, பம்பரம் சுத்துறது, சில்லி(ரைட்டாதப்பா), கபாடி, கிரிக்கெட்டு, பந்து விளையாட்டு... இப்படி பல.
//பல்லாங்குழி, பம்பரம் சுத்துறது, சில்லி(ரைட்டாதப்பா), கபாடி, கிரிக்கெட்டு, பந்து விளையாட்டு... இப்படி பல.//
பல்லாங்குழி பொம்பளபுள்ளங்க விளையாட்டுன்னு அவ்வளவா ஆடறதில்லை, சில்லி(ரைட்டாதப்பா), பொம்புள்ளங்களோட சேர்ந்து விளாயாடறதில்ல ஒரு குஷி தான் போங்க!
ரொம்ப சஸ்பென்ஸ் எல்லாம் வைக்காதீங்கங்க, நம்மலுக்கெல்லாம் தாங்காது
திறமை --> தேடல் தொடர்கிறது.
அனுபவப் பதிவு, பலசை எல்லாம் நினைவு படுத்துகிறது ... தொடருங்கள் அன்பரே ...
மோகன் தாஸ், சஸ்பென்ஸ் இல்லாம எப்படி தொடர் இருக்க முடியும், இதோ அடுத்த பதிவில தெரிஞ்சுடப்போறது!
நம்ம பக்கம் வந்த மதுவிற்கு நன்றி, தொடர்ந்து வரவும்:-)
ஓ... நீங்களுமா? நாட்டுல நிறைய பேருக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்!
அதென்ன அப்படி சொல்லிட்டீங்க ராம்கி, உங்களுக்கு பலமும் பலவீனமும் எப்படியோ, அதே மாதிரி தான் நமக்கும் ஒரு காலத்தில, போக போக கேளுங்க நம்ம கதைய, வர்ட்டா? (வேறென்ன நம்ம ரஜினி ஸ்டைல் தான்)
//நல்ல திறமயான நடிகனா பரிமளிக்க எனக்கு வாய்ப்பளித்தது இந்த கோவை மாநகரமே! //
ஒரு ஜாலியான பதிவு!!
நன்றி!!
Post a Comment