Saturday, July 15, 2006

செந்தூரப்பூவே - பாரதிராஜா முத்திரைகள்! (எனை ஆண்ட அரிதாரம்!)

என்ன 16 வயதினிலே அறிமுக வீடியோ கிளிப்பு விளக்கம் பார்த்தீங்களா?

சரி இப்ப இந்த செந்தூரப்பூவே பாட்டை பாருங்க! பாரதிராஜா பாடல் காட்சிகளை இப்படி தான் பிடிக்கனும்னு நிறைய இலக்கணம் வச்சிருந்தாரு! அந்த இலக்கணம் இப்ப வரை மாறல, கடைசியா நான் பார்த்த் கடல் பூக்கள் வரை அதை தொடர்ந்தாரு! இன்னுமும் நிறைய டைரக்டர்கள் அதையே கடைபிடிக்கிறாங்க! சரி அந்த முத பாட்ல அவரு என்ன தான் அப்படி இலக்கணத்தை கடைபிடிச்சாருன்னு கேட்கிறீங்களா? சரி வாங்க பார்ப்போம்!

முதல்ல இந்த வெள்ளை உடை போட்டுவுடுறது, அது கதாநாயகியிலேருந்து ஆரம்பிச்சிச்சு, அப்பறம் கூட வர்ற பொண்ணுங்களுக்கு தேவதைகள் போல அந்த வெள்ளை உடை அணிவப்பது, அது அவருடய ட்ரேட் மார்க்!

பிறகு கீழ்வானத்திலே உதிக்கும் சூரியன் பேக்ரவுண்ட்ல வர வச்சு,அடிவானத்தையும் அதன் சூரிய சுற்றொளியையும் காமிச்சு, கதாநாயாகிகளை குதிக்கவச்சு, இந்த ஆரம்ப பல்லவியிலே காமிக்கிறது அவருடய அடுத்த வழக்கம். இந்த பாட்லயும் பார்க்கலாம், அப்பறம் கிழக்கே போகும் ரயில், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லைன்னு, எல்லா படத்திலேயும் இந்த கதாநாயகி சோலோவா, அதாவது தனியா பாடுற கதாநாயகிகளை பார்க்கலாம். இதுக்கு உதராணமா மத்த பட கிளிப்புகளை அப்பறம் போடறேன், தொடர்ந்து வந்து பதிவை படிங்க!

அடுத்து ரொம்ப லோ ஆங்கிள்ல நிலபரப்பு, வயல்வெளி, பூத்துக் குழுங்கும் பூக்கள், அப்பறம் மரத்திலே ஒய்யாரமா கதாநாயகிகளை சாயவச்சு ஒத்தக் கையாலா ஒய்யாரமா தலைக்கு கை கொடுத்து பாட வைக்கிறது, அதை அப்படியே ட்ராலி ஷாட்ல சுத்தி வந்து படம் புடிக்கிறது! இதே மாதிரி 'புதிய வார்ப்புகள்' படத்திலே ரத்தியை மரத்தில சாய்ச்சு வர 'வான் மேகங்களே' பாட்டு வரும், கிடைச்சா பாருங்க! ஊஞ்சல்ல ஆடுறது, மரத்தை பிடிச்சிக்கிட்டு தொங்குறமாதிரி ஷாட்!

அடுத்து சின்ன சின்ன ஷாட்கள்ல போஸ் கொடுக்க வச்சு, அடுத்த அடுத்து கட்ஸ்ஸா வர்றது. இதிலே ஸ்ரீதேவி, பூவோட கண்ணம் உரசுறது, ஒன்னு மஞ்சப்பூ, அப்பறம் வெள்ளைப்பூன்னு, அதே மாதிரி கட்ஸ் வச்சு வர்றது! இதுக்கு ஸ்டில் போஸ் சீக்வுன்ஸ்னு சொல்லுவாங்க! இது பொதுவா எல்லா பாடல்கள்லயும் வர்றக்கூடியது. கவனிச்சு பார்த்தீங்கன்னா தெரியும்!

அடுத்து நான் 'சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!' பதிவிலே எழுதின மாதிரி அந்த 'Depth of field and focus' டெக்னிக்ல எடுத்த ஷாட்டுகள், அதாவது ஸ்ரீதேவி, செந்தூரப்பூ இது இரண்டும் ஆப்ஜக்ட், அதை டெப்த் குறைச்சு, கூட்டி ஒன்னு ஒன்னா போக்கஸ் பண்ணி பூவையும் ஸ்ரீதேவியையும் மாத்தி மாத்தி காமிக்கிறது, இது பாரதிராஜா அந்த காலத்திலே நிவாஸ்கூட சேர்ந்து கொண்டு வந்த இந்த டெக்னிக் எல்லா டைரக்டர்களும் விட்டு வைக்காம கடைபிடிச்சாங்க!

அடுத்து மலைச்சரிவுகள்லருந்து ஆடுகளோ, மாடுகளோ மந்தை மந்தையா கீழே இறங்கி வர்றது, அதுக்கு பக்கத்திலே கதாநாயகிகளை சந்தோஷமா ஆடவிட்டு படம் எடுப்பாரு. சந்தோஷம்னு இல்லை சோகமான பாட்டுகளுக்கும் இதே பிக்ச்சரைஷேஷன் தான். புதிய வார்ப்புகள்ல 'இதயம் போகுதே'ன்னு ஒரு பாட்ல ரத்தி பாக்யராஜ்ஜை தேடி பஸ் பின்னாடி வர்றப்பையும் இந்த டெக்னிக் தான். இது அதிகமா எல்லா பட்ங்களலயும் வரும்! இந்த காட்சிகள் பார்க்கறதுக்கு அச்சு கிராம வாசனையோட இருக்கும்! இந்த மாதிரி உணர்வை உண்டு பண்ணதிலே பாரதிராஜாவுக்கு பாதி வெற்றின்னா, அதில பாதி இளையராஜா போட்ட ம்யூசிக் தான், அந்த இண்ட்ர்லுயூட் ('interlude') தான்!

அப்பறம் இந்த மாதிரி பாடல் காட்சிகளுக்கு செலக்ட் பண்ற இடங்கள், ஆற்று படிகை, பாதியில நிக்கற மண்டபம், அதன் மண்டப கால்களுக்கிடையே ஓடிவரும் கதாநாயகி, அதை ஒட்டன நதி, அப்பறம் சின்ன மலை, மலைக்குகைகள் அதுக்குள்ள ஓடி வர்ற மாதிரி கதநாயகியோ, இல்ல டூயட் பாடிக்கிட்டு கதநாயகன், கதநாயகியோ ஓடி வர்ற மாதிரி! இதிலே ஸ்ரீதேவி ஓடி வர்ற அந்த மலைக்குகை காட்சிகள் மாதிரியே அலைகள் ஓயவதில்லையிலே ராதாவும் கார்த்திக்கும் ஓடி வரும் காட்சி அமைப்புகள், பார்த்திருக்கீங்களா! அப்பறம் நதி, நதியை ஒட்டின ஆற்று படுகை, மண்டபங்கள், இந்த பாட்ல வர்ற மாதிரியே காட்சி அமைப்புகளை நீங்க காதல் ஓவியம் படத்திலேயும் பார்க்கலாம்!

அப்பறம் புகை மூட்டங்களுக்கு நடுவே ஓடி வரும் கதாநாயகன், கதாநாயகிகள் இன்னொரு ட்ரேட் மார்க்! இதில்லாம் இந்த 16 வயதினிலேக்கு முன்னாடி அதிகம் வந்தது கிடையாது எல்லாமே அதுக்கப்பறம் பாரதிராஜா முத்திரைகளை காப்பி அடிச்சே அவர் அதிகம் தன் படங்கள்ளயே செஞ்சு காமிச்சார். அதே மாதிரி எல்லாரும் காப்பி அடிச்சாங்க!

அடுத்தது மலர் படுக்கை, மலர் தூவி தெளிச்சு கதாநாயகி ஆடி பாடுவது, இது இன்னொரு டெக்னிக்! இதை வச்சு அலைகள் ஓயவதில்லை படத்திலே எடுத்த 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாட்டு ரொம்ப பேஸ்! கொஞ்சம் கிளாமரா இருக்கட்டுமுன்னு ராதாவுக்கும், கார்த்திக்கும் மலர் உடை அணிவிச்சு கிளுகிளுப்பா எடுத்திருப்பாரு! இதிலெ ஸ்ரீதேவி பூ அள்ளி இரைத்துக் கொள்வதிலேருந்து தான் அதுவும் ஆரம்பம்!

இப்படி எத்தனையோ முத்திரைகள், இன்னைக்கும் நீங்க மத்த படத்திலே பார்க்கிறீங்கன்னா எல்லாமே பாரதிராஜா கத்துக் கொடுத்தது தான். அதவச்சு தான் பின்ன வந்த எல்லா டைரக்டர்களும் பாட்டுகளில் பிக்ச்சரஸை பண்ணுனாங்க! இதிலே சில டெக்னிக் கொஞ்சம் வித்தியாசமா விக்ரமன படத்தோட பாடல்கள்ல இருக்கும், அதை பத்தி அப்பறம் ஒரு தடவை எழுதுறேன்!

வெறுமன பாட்டு கேட்டோ இல்ல ஒளி ஓலி பார்த்தோ, அப்படியே அசால்டா நீங்க விட்டுட்டீங்கன்னா, உங்களுக்கு இதை பத்தி ஒன்னும் தெரியாது. அதை கோர்வையா யாராவது எடுத்து சொன்னா, ஆமா இது சரி தாம்பீங்க! அதே தான்! சும்மா பாட்டு போட்டு வீடியோ கிளிப் போடறதோட இப்படி நான் அந்த காலத்திலே ஆராஞ்ச விஷயங்கள் எவ்வளவோ இருக்கு, அதை தனியா பதிவா போடுறேன்! அதிலேயும் பாரதிராஜாங்கிற இயக்குநர் இமயத்தை, காட்சிகளோட விவரிச்சு 'நிழல்கள்' படத்தை அப்பறமா எழுதுறேன். அதுவரைக்கும் நான் மேலே சொன்ன அத்தனையும் வர்தான்னு கீழே வீடியோல பாருங்க!அறிமுக 16 வயதினிலே வீடியோ கிளிப் விளக்கம் பார்க்க, எனை ஆண்ட அரிதாரம் - ஒலி, ஒளி (ப்) பதிவு! செல்க!

3 comments:

said...

அதை கோர்வையா யாராவது எடுத்து சொன்னா, ஆமா இது சரி தாம்பீங்க! //

ஆமா, இது சரிதான் தம்பீ!

அடுத்து பாட்டுக்களுக்கு மணியோட picturisation பத்திச் சொல்லி, ஒரு comparative பதிவு வருமில்ல...?

said...

கண்டிப்பா உண்டு தருமி சார், மணின்னு இல்லை, வேறே சில டைரக்டர்கள், நடிகர், நடிகைகள் ச்மபந்த பட்ட காட்சிகள், அதிலே வர டைரக்ஷன்லருந்து, அபிநயத்திலேருந்து, காட்சி அமைப்புகள்ல இருந்து பிடிச்சது, ரசிச்சதுன்னு எவ்வளவோ இருக்கே! அந்த காலத்திலே சுவாசிச்சதே மொத்தமும் சினிமா தானே! அதை பத்தி சொல்லி பகிர்ந்துக்கல்லன்னா எப்படி, போங்க!

said...

This is a good article about the bharathi raja's song picturation in his earlier films.