எத்தனையோ படம் பார்க்கிறோம், ஆனா அத்தனை படங்கள்லயும் பேசும் எல்லா வசனங்களும் நம்ம மனசிலே நிக்கறதில்லை! ஆனா பாருங்க சில வசனங்கள் காலத்தால் அழியாத வசனங்களா நம்ம மனசிலே நிலைச்சு நிக்கும். அப்படிப் பட்ட தலைசிறந்த பத்து வசனங்கள் என்னான்னு பார்க்கலாமேன்னு தான் இந்த பதிவு.
10) "மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி" - இது பி எஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், மகாதேவி என்ற படத்தில்! மகாதேவியாக சாவித்திரி நடித்து, இந்த படம் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்தப்படம். இது ஒரு டிரேட் மார்க் வசனம். இந்த வசனம் பத்தி நினைக்கிறப்ப பிஎஸ் வீரப்பா உடனே நினைவில் வந்து நிறபது என்னவோ உணமை தான்!
9)"சபாஷ் சரியான போட்டி" - மறுபடியும் பிஎஸ் வீரப்பா பேசி நடிச்ச வசனம், வஞ்சிக்கோட்டை வாலிபன் என்ர படத்தில்! அந்த கால டான்ஸிங் சென்ஷேஷன்ஸ்னு சொல்லி புகழப்பட்ட வைஜெயந்தி மாலாவும், பத்மினியும் பரதநாட்டிய போட்டி நடனம் ஆடி கலக்குவாங்க! அப்ப பிஎஸ் வீரப்பா இந்த வசனத்தை சொல்லி உசுப்பேத்துவார். இந்த வசனம் நம்மகிட்ட நிலைச்ச ஒன்னு. இப்பயும் இரண்டு பெண்கள் எதாவது ஒரு விஷயத்திலே சண்டை போட்டு வாக்குவாதம் பண்ணிகிட்டு இருக்கிறப்ப, நம்ம எல்லாரும் இந்த வசனத்தை பிரயோகிச்சு உசுப்பேத்தி விடறது வழக்கம்! அதாவது ஆண்கள் விசலடிச்சு கொண்டாடும் இந்த தருணத்தில் உபயோகிக்கும் வசனம், எத்தனை காலமானாலும் மறக்க மாட்டாங்க!
8) "நெற்றி கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே!" - இது திருவிளையாடல் படத்தில் ஏபி என் நகாரஜன் பேசி நடிச்ச வசனம்! அதாவது மொழிப்புலமையிலே வரும் சண்டையிலே பரமசிவனுடன் சண்டை போடும் நக்கீரனாக நடிச்சி அசத்தி இருப்பார். இந்த வசனம் தான் 'நக்கீரன்'னு பத்திரிக்கை எல்லாம் பின்னாடி ஆரம்பிக்க ஏதுகோல இருந்தது! இது ஒரு மறக்க முடியாத வசனம்!
7)"நீ முந்திண்டா நோக்கு, நா முந்திண்டா நேக்கு" - இது 'வியட்நாம் வீடு' என்ற படத்திலே ப்ரிஸ்டிஜ் பத்மனாபனா நடிச்ச சிவாஜி கணேசன் பேசற வசனம்! அதாவது தன்னுடய பதவிகாலம் முடிஞ்சு ரிடெயர்மெண்ட் காலத்திலே தன்னை ஒதுக்கி வச்ச பிள்ளைகளை நினைச்சு, தனது மனைவியாக நடிச்ச பத்மினியிடம் பேசும் வசனம்! இந்த காட்சியை பார்த்து கண்ணை கசக்கும் பெண்களின்கூட்டம் அதிகமாக தியேட்டரில் அலை மோதியது ஒரு சரித்தரம்!
6)"பரட்டை பத்தவச்சிட்டியே பரட்டை"- இது நான் அடிக்கடி சிலாகிக்கும் பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' யிலே வர்ற ஒரு வசனம்! தமிழ் சினிமாவையே புரட்டி போட்ட படம்! மக்கள் எதை வேணும்னாலும் மறந்திருக்கிலாம், ஆனா இந்த கவுண்டமனி பேசிற இந்த டைலாக்கை மக்கள் மறக்க மாட்டாங்க. இந்த படத்திலே இன்னொரு முக்கியமான டைலாக, கமல் பேசற "ஆத்தா ஆடு வளத்துச்சு, கோழி வளத்துச்சு, ஆனா நாயி வளக்கல்ல, என்னத்தானே வளத்துச்சு" ன்னு உருக்கமா பேசும் இந்த டைலாக் பாப்புலரா இருந்தாலும், "இது எப்படி இருக்கு"ன்னு வசனம் பேசின நம்ம தலைவர் ரஜினி இழுத்த கூட்டம் தான் அப்ப அதிகம்! இருந்தாலும் கவுண்டமணிங்கிற நகைச்சுவை சகாப்தம், செந்தில் கூட சேர்ந்து ஜோடி போட்ட இந்த மறக்கமுடியாத தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜோடிகள்ல ஒருத்தரை அடையாளம் காட்டி கொடுத்த இந்த வசனம் மக்கள் மனதை விட்ட அகலாத ஒன்னு!
5)"நீங்க நல்லவரா கெட்டவரா" - இது நாயகன் படத்திலே கடைசி காட்சியிலே கமலோட பேரன் அவருகிட்ட கேட்கும் கேள்வி! இது படத்திலே சின்னபையன் பெரியவர் நாயக்கரை பார்த்து கேட்டாலும் கடைசியிலே மக்கள் முன்னே தத்வார்த்த்மா, டைரக்டர் வைக்கும் கேள்வி! இந்த இரண்டு ஷேட்ஸ்லயும் வர்றக் கூடிய வில்லன் கலந்த கதநாயகன் ஆரம்பத்தை மணி தொடங்கி வச்சது இந்த படத்திலே தான்! அது இப்ப வந்த குரு படம் வரை தொடருது! ஆக இந்த வசனமும் மறக்க முடியாத ஒன்னு!
4) "கடவுளே.. கடவுளே" - இது மறக்க முடியாத ரஜினியின் நகைச்சுவை உணர்வான நடிப்பினை வெளிபடுத்திய படம், 'அண்ணாமலை'! இதுல ரஜினி குஷ்புவை பார்க்ககூடாத கோலத்திலே பார்த்திட்டு அதை பாம்பை பார்த்து நடுங்கும் கோலத்தோட இணைச்சு அடிக்கும் இந்த காமடி டைலாக் சும்மா கிளாஸ்!
3) "மன்னிப்பு, தமிழ்ல எனக்குப் புடிக்காத வார்த்தை!" - இது நம்ம விஜயகாந்து ரமணாவிலே ஊழல் பண்ணும் போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள், அரசாங்க அதிகாரிகளை சுளுக்க எடுக்க பேசி நடிச்ச வசனம், மறக்க முடியாத ஒன்னு! அவரு கண்ணு சிவக்க பக்கம் பக்கமா அறிவுரை வசனம் பேசி நடிச்ச பல படங்கள் இருந்தாலும் இந்த ஒரு சிம்பிள் வசனம் அனைவரையும் கவர்ந்த ஒன்னு! இதை மக்கள் அடிக்கடி பொதுவிலே தான் பேசும் போது சேர்த்துக்கிட்டு பேசன ஒன்னு! அவ்வளவு பாப்புலர்!
2) "மாப்பு..வச்சிட்டான்யா ஆப்பு" - இது காமடி டைலாக்ல ஒரு சிகரம்! அதாவது அப்ப வந்த அபூர்வ சகோதரர்கள்ல ஜனகராஜ் பேசிற ஒன் லைன் டைலாக், 'சார் நீங்க எங்கயோ போய்ட்டீங்க' அப்படின்னு சொல்லும் அந்த ஒன் லைன் டைலாக்ல தியேட்டரே அதிரும். அப்படி தியேட்டரை அதிரவச்ச இந்த டைலாக்கை, வடிவேலு பேசி நடிச்ச சந்திரமுகியை, யாரும் மறக்க முடியாது!
1) "நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" - இது பஞ்ச் டைலாக்குகளின் சிகரம். அதாவது ரஜினி பாட்ஷாவிலே பேசி நடிச்ச இந்த பஞ்ச் டைலாக் தான் அடுத்தடுத்து வந்த படங்களில் வரும் பஞ்ச் டைலாக்குகளுக்கு எல்லாம் தாய் பஞ்ச் டைலாக்! அதாவது இது "Mother of all panch Dailogue"! இந்த வசனத்தோட வீரியம் எவ்வளவு சக்தி வாய்ந்ததுன்னு ரஜினி படத்திலே பேசி நடிச்சப்பக் கூட நினைச்சு பார்த்துருக்க மாட்டாரு! ஆனா இதன் மந்திர சக்தி அப்படியே எல்லாரையும் கட்டி போட வச்சது! இதை வச்சு, சோகம், காமடி அப்படின்னு ஏகப்பட்ட வர்சன்ஸ் மக்கள் மத்தியிலே வந்து பிரயோகம் பட்டது! ஆக இது மறக்கவே முடியாத ஏன் மறக்கக் கூடாத, ஏன் எத்தனை காலம் மறினாலும் மக்கள் மனதில் நினைத்து நிற்க கூடிய ஒரு தலைசிறந்த வசனம்!
Sunday, March 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
1. வாடா என் தேவன் மவனே வா!!!
2. உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க சிங்கம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு. அத தட்டி எழுப்பிடாத...
3. நான் தனி ஆள் இல்லை
4. நாங்களாவது உங்ககிட்ட சொல்லிட்டு வந்தோம். நீங்க எங்ககிட்ட சொல்லிட்டா வந்தீங்க?
5. கிளிக்கு ரெக்கை முளைச்சிடுச்சி. அதான் பறந்து போயிடுச்சு
6. எழுந்திரி அஞ்சலி எழுந்திரி
7. ஏன்???
தேவா!!!
8. குத்துங்க எஜமான் குத்துங்க...
9. ஒரு பழம் இங்க இருக்கு அந்த இன்னோரு பழம் எங்க?
அந்த இன்னோனு தாண்ணே இது
10. மனோகரா! பொறுத்தது போதும் பொங்கி எழு!!!
என் காரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே - சத்தியராஜ்
ஆத்தா நான் பாஸாயிட்டேன் -
என்ன கொடுமை சரவணன்:-)
//துளசி கோபால் said...
என்ன கொடுமை சரவணன்:-) //
எனக்கு தெரிஞ்சு இதுதான் டாப்பூ :))
சென்ஷி
"இங்க பார்ரா"
அண்ணே அவங்க வரல......
இதுல எப்படிண்ணே எரியும்....
யாருமே இல்லாத டீக்கடையில யாருக்காகடா டீ ஆத்தற....
ஆணியைப் புடுங்க வேணாம்....
பேரு என்ன? சங்கீதா. ம்க்கும். சங்கு ஊதற வயசுல சங்கீஈஈஈதா.....
அடடடா இந்த ரெண்டு ஜோடியயும் பார்த்தா அப்படியே தில்லனா மோகனாம்பாள் சிவாஜியையும் பத்மினியையும் பார்க்கற மாதிரியே இருக்கு.
உக்காந்து யோசிப்பாங்களோ!
Iniku Setha Nalaiku paal
இன்னைக்கி செத்தா நாளைக்கு பால்.
"என்னைப் பாத்துச் சொல்லு
என் கண்ணைப் பாத்துச் சொல்லு"
என்ன வச்சு எதுவும் காமெடி கீமெடி பண்ணலியே?
சூர்யா சார்...உரசாதீங்க..
தொட்ரா பார்ப்போம்..தொட்ரா பார்ப்போம்..
வந்துட்டான்யா..... வந்துட்டான்யா!
நான் மாது வந்திருக்கேன்!
ஃபடாஃபட்!
அத்....து
அவனுக்கும் ஒனக்கும் ஒரே வித்தியாசம்தான்
"அவன் கருப்பா அசிங்கமா இருந்தான்
நீ அசிங்கமா கருப்பா இருக்க"
சென்னை என்னை போடா வெண்ணை என்றது
I Know.. I Know.. I Know.. I Know.. I Know...
உன் பாட்டை கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றி விடாதே.. பாடு சாந்தா பாடு
பிகரை பாத்தா பிரண்டை கட் பண்ணிடறாங்களே..
என் இனிய கிராமத்து தமிழ் மக்களே...
ஆத்தா ஆடு வளத்தா.. கோழி வளத்தா, ஆனா நாய் மட்டும் வளக்கல
ஷாமீ... எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்...
வாடி என் மச்சி.. வாழக்கா பஜ்ஜி
கமென்டில் உள்ளதெல்லாம் தொகுத்து இன்னொரு போஸ்ட் போடலாமே. அதில் ஏதாவது ஒரு வசனத்துக்க்த்தான் ஓட்டு போடலாம்னு ஒரு கணிப்பும் நடத்தலாம்..
நான் பார்த்தா பக்கா வில்லானாட்டம் இருப்பேன் , ஆனா நாந்தான் கண்ணு ஹீரோ (புத்தம் புது பயணம் - கே.எஸ்.ரவிகுமார்)
ஐ நோ ஐநோ ஐ...நோ (புரியாத புதிர்)
என்னக் கொடுமை சார் இது
"நாட்டாமை! தீர்ப்பை மாத்தி சொல்லு"
"இன்னும் தீர்ப்பே சொல்லல்டா வெண்ணெய்"
சாத்தான்குளத்தான்
1. தகடுமா தகடு! தகடு!
2. இது எப்படி இருக்கு!
3. சட்டை மேல எவ்வளோ பட்டன்ஸ்!
4. அங்க பார் நாய் கொறைக்கிது!
5. ஸ்டார்ட் மியுசிக்
வெ.நாதர் , வணக்கம்,
இது போன்ற ஒற்றை வரி குத்து வசனங்களுக்கென தனிப்பதிவா. பலே , பலே ...
காதலிக்க நேரமில்லைல வர ஒகோ ப்ரொடக்ஷன்ஸ் ,நாகேஷ் வசனம் எல்லம் தமிழ் சினிமாவின் தீர்க்க தரிசன வசனங்கள் ஆயிற்றே!
தமிழ் சரியா தெரியாதா வெரிகுட் அப்போ நீ தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோயினா வருவே!
கதை என்ன? நான் என்ன எடுக்கிரோனோ அதான் கதை அதை பார்க்கிறது தான் மக்களோட தலை விதி.!( இன்று வரை அப்படி தானே இருக்கு)
இப்படிலாம் சிம்பிளா தமிழ் சினிமாவின் எதிர்காலத்தை சொல்லி இருப்பார் ஷ்ரிதர்.
ஆனாலும் இப்போ ஒரு வசனம் இருக்கு அது தான் "சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல...
சரோஜா சாமான் நிக்காலோ !...
Post a Comment