Sunday, March 11, 2007

மீண்டும் கோகிலா- இடுப்பை கிள்ளும் கமல்!

ரொம்ப நாளா இந்த ராகங்களின் பின்னே போய்ட்டதாலே மத்த எழுத நினைச்ச பதிவுகள் அப்படியே தங்கி போச்சு! அதிலே போன வாரம் பார்த்த ஓங்கி நடித்தவனை அடக்கி ஆண்டவரின் படம் பத்தி எழுதனும்னு நினைச்சேன், எதுன்னு தெரிஞ்சா மறுமொழி போடுங்க பார்க்கலாம், என்னோட கிசுகிசு பாணி சிலேடை உங்களுக்குப் புரியுதான்னு பார்ப்போம்! அப்படி எழுதனும்னு தோணுனதிலே முதல்ல இந்த மீண்டும் கோகிலா பத்தி கொஞ்சம் பார்ப்போம்! இந்த படம் ஆரம்பிச்சப்ப ஏகப்பட்ட அமர்க்களத்தோட இதிலே நம்ம ஜெமினி மாமா பொண்ணு ரேகா நடிக்கறதா இருந்தது. அப்ப கமலுக்கு வாணியோட கல்யாணமாயிருந்த நேரம்! அப்ப ரேகாவுக்கு கமலு மேலே கொஞ்சம் கிக்கு தான்! எங்க ஆம்புடையான் கையை வுட்டு போயிடுவானோன்னு வாணி மூக்கு சிந்துனதாலே, அந்த ஐடியா அப்படியே ட்ராப் ஆயி கடைசியிலே இந்த படத்துக்கு ரேகா பண்ண வேண்டிய ரோலை, அப்ப நான் ஏற்கனவே சொன்ன மாதிரி அப்ப வயசுக்கு மீறின வளர்ச்சியோட பார்க்க லட்சணமா இருந்த தீபாவும் ஏற்கனவே பாப்புலரா இருந்த கமல் ஸ்ரீதேவி ஜோடி அமர்க்களமா நடிச்சு 80களில் வெளி வந்தப்படம்.

மொத்தமா இது அக்ரஹாரத்து கதை,

'ஸ்ரீதேவி மாமி சமத்தா ஆக்கி போட்டுண்டு நல்ல வளைய வர்ற மாமி போங்கோ, அசித்திருப்பா. சட்டம் படிச்ச நம்மண்ணா கமலுக்கு சபலம் கொஞ்சூண்டு ஜாஸ்தி போங்கோ! அதினால குடும்பத்திலே வந்த குழப்பத்தை வச்சுண்டு ஒரே ஏக ரகளையா படம் போயிண்டிருக்கும் போங்கோ, நான் என்ன சொல்றது படம் கிடைச்சா வாங்கி போட்டு கொஞ்சம் பார்கிறேளா, நா சொல்றது உங்களு புரியும்! ஐயராத்து கதை சொல்றப்ப அவா மாதிரி பேசறது சகஜம் தானேண்ணா!

ஓகே வந்த விஷயத்துக்கு வருவோம். அப்ப நம்ம ராஜாவின் ஆரம்ப கால பருவம். ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம், புதுமைன்னு கொடுத்துண்டிருந்தார்,..ச்சீ பழக்க தோஷம், விடமாட்டேங்கிது! அப்படி இந்த படத்திலே போட்ட ஒரு அருமையான பாட்டு 'சின்னஞ்சிறு வயதில்' என்கிற பாட்டு. இதிலே அப்ப வித்தியாசக்குரல் வேணும்னு எஸ் பி சைலஜாவை வச்சு பாடவச்சார், கூட நம்ம தேன் மதுரகுரலுக்கு சொந்தக்காரான ஜேசுதாஸ் அவர்கள்,கேட்கணுமா, பின்னி எடுத்திருப்பாங்க. அதோட வீடியோ கிளிப்ஸ் இன்னக்கு உங்கள் சாய்ஸ்! கீழே பாருங்க!

இதிலே ரொம்ப முக்கியமான சமாச்சாரம் கமல் அடிக்கடி ஸ்ரீதேவி மாமி இடுப்பை கிள்றது தான்! அது தான் படத்தோட ஹைலைட். அந்த காலத்திலே நான் ரசிச்ச ஸ்ரீதேவி, பாவம் இடுப்பை வச்சுண்டு, நம்ம கமலண்ணாட்ட படதா பாடு பட்டிண்டிருப்பார்! எத்தனையோ கமல் ஸ்ரீதேவி ஜோடி போட்டு படங்கள் வந்திருந்தாலும், ஒரு சில படங்கள் மனசை விட்டு அகல்வதில்லை, அப்படி தான் இந்த படமும். அப்பறம் மூன்றாம் பிறை, ஆனா அந்த படத்தை பத்தி சொல்னும்னா, பதிவுக்கு 'பொன்மேனி உருகுதே' காத்துக்கிட்டிருக்கு! அது வேற விஷயம்!

இது ஒருவிதத்திலே கமலோட சொந்தபடம் மாதிரி, ஹாசன் பிரதர்ஸ் கதை இலாகா, கதை பண்ணியிருப்பாங்க! அப்பறம் உடைகள் 'வாணி கமலஹாசன்'ன்னு போட்டு வரும், இந்தம்மா அப்ப ஏபிஎன் எடுத்த 'மேல்நாட்டு மருமகள்'ல கமலோட ஜோடி போட்டு அப்பறம் கல்யானம் கட்டிண்டா! அப்பறம் சரிகாவை கமல் ஆராஞ்சதாலே விட்டுட்டு போயிட்டா, ஆனா பாருங்க, அவரு விட்டு போன டிப்பார்ட்மெண்ட், இந்த காஸ்ட்யூம்ஸ் தான், அப்பறம் கமல் சொந்த படங்களுக்கு சரிகா கமலஹாசன்னு போட்டு வரும், இப்ப யாரு அதை கவனிக்கிறாங்க, கெளதமியா??

இந்த பாட்டுல ஒரு வித்தியாச சங்கீத சப்தம், பாக்கு உரல்ல இடிக்கிறதை, காரி துப்புறமாதிரி வர்ற சப்தத்தை எல்லாம் கலவை செஞ்சு கேட்க சுகமா ஒரு ராகம் நம்ம ராஜா போட்டிருப்பார். கேட்டுக்கிட்டே இருக்கலாம். இது மாதிரி பாடல்கள் சுத்தமா நம்ம மறந்துட்டுமோன்னு படுது எனக்கு, நீங்க என்ன நினனைககிறேள்? அப்படி எதுவும் நினைக்கிலேன்னா நீங்க பொண்ணு பார்த்த படலத்தை ஞாபகபடுத்திண்டு சந்தோஷமாயிருங்கோ! சரி இப்ப ஒலியும் ஒலியும் பாருங்கோ! நான் சித்த போயிட்டு வந்துடுறேன்!

7 comments:

said...

எங்க அந்த உரலை சொல்ல மறந்திடுவீங்களோ என்ற் நினைத்தேன்,கடைசியிலே போட்டுட்டீங்க.
அந்த பாடலுக்கு அது தான் கிக்.

said...

//எங்க அந்த உரலை சொல்ல மறந்திடுவீங்களோ என்ற் நினைத்தேன்,கடைசியிலே போட்டுட்டீங்க.
அந்த பாடலுக்கு அது தான் கிக்.//சரியா சொன்னீங்க! அப்பறம் இடுப்பை கிள்ளும் காட்சி போடலையே, வருத்தமா இல்லையா??

said...

அலுவலகத்தில் யுடூப் பார்க்க அனுமதியில்லை.
கேட்கலாம் தான்!
ஆனா நான் தனியாக வேறு இருக்கிறேன் பாருங்கள்,அதெல்லாம் நினைக்கக்கூடாது.;-))

said...

சூப்பர் போங்கோ!
அப்புறம்.. வடுவூரார் சும்மா தானே இருந்தார்.. அவரை ஏன் வெறுப்பேத்துறீங்க? :-D

said...

//ஆனா நான் தனியாக வேறு இருக்கிறேன் பாருங்கள்,அதெல்லாம் நினைக்கக்கூடாது.;-))//ஓ அப்படி சொல்றேளா, நினைக்கப்படாதுன்னா படாதுதான்! இருந்தாலும் இந்த பதிவை படிச்சிட்டு ஏதாச்சும் பொம்னாட்டி இடுப்பை கிடுப்பை பார்த்திடபோறேள்! எதினாச்சும் தோணிடபோது! சமத்தா இருங்கோ!

said...

//அப்புறம்.. வடுவூரார் சும்மா தானே இருந்தார்.. அவரை ஏன் வெறுப்பேத்துறீங்க? :-D// முதல்ல போகட்டும் விட்டுப்டலாம்னு தான் இருந்தேன் உங்க கமெண்டை பார்த்தேனோ இல்லையா, கொஞ்சம் சீண்டிதான் பார்ப்போமேன்னு தோணிடுச்சு! இது சரின்றேளா, தப்புன்றேளா?

said...

சரியோ தப்போ.. தலைப்பு வைக்கறச்சேயே உம்ம குசும்பை வெளிப்படுத்திட்டேள் போங்கோ!