Saturday, March 03, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!

தொடர்ந்து இந்த ராகங்கள் குணப்படுத்தும் விஷேஷத்தை பார்க்கும் பொழூது, இந்த தடவை எடுத்துக்கிட்ட ராகம் ஷண்முகப்ரியா! இந்த ஷண்முகப்ரியா ராகம் கேட்பவர்களையும் பாடுபவர்களையும் அறிவுபூர்வமாக இணைக்கக்கூடிய ராகம்! அது மட்டுமில்லாமல், மனதிலே ஒரு தையரியத்தை உண்டாக்கி, உடல் முழுக்க ஒரு புதுவித சக்தியை ஏற்படுத்தக்கூடிய ராகம.


இந்த ராகம் இசை அமைப்பாளர்களுக்கு ரொம்ப பிடிச்ச ஒன்னு, அதிலே நிறைய பாடல்களை இசை அமைப்பாளர்கள் போட்டு இருக்காங்க! அதிலே எனக்கு ரொம்ப புடிச்சது, மீண்டும், பாரதிராஜா படமான 'புதியவார்ப்புகள்' படத்திலே வரும் ஒரு பாட்டு, இந்த படம் இப்ப பார்த்தப்பக்கூட, நான அந்த காலத்திலே எப்படி சிலாகிச்சு ரசிச்சேன்னோ, அதே ரசனையோட இதை இப்ப பார்த்தேன். என்னுடய ரசிப்பு தன்மை இன்னும் இருக்கா, இல்ல அது ராஜாக்களோடமேஜிக்கான்னு தெரியல்லை, இருந்தாலும் அதை பத்தி அப்பறமா எழுதுறேன்!

அப்பறம் இந்த ராகம் மைத்தியலாஜிக்கலா பார்த்தீங்கங்கன்னா, சிவண்டிக்கு சொந்தமான ராகம், அதாவது அவருடய் நெற்றிகண்ணிலிருந்து பிறந்த ராகம்னு சொல்வாங்க!

இந்த ராகத்திலே அமந்த மற்றொரு பாடல் இடம் பெற்ற பாரதிராஜா படம் 'வேதம் புதிது'! அதில் வரும் கண்ணுக்குள் நூறு நிலவா என்ற பாட்டு. இந்த வேதம் புதிது படம் 87ல வந்தப்ப இதை ரொம்பவே கொண்டாடினாங்க, ஏன்னா, இதில வரும் ஷார்ப்பான வசங்கள், அதாவது பாலு உங்க பேரு அதுக்குப்பின்னாடி இருக்கும் தேவங்கிற பேற பத்து வருஷம் படிச்சு பட்டம் வாங்கினீங்களான்னு ஒரு சின்ன பிராமணப் பையன் கேட்கிற மாதிரி எல்லாம் வரும். அதாவது வழக்கமா வர்ற பாரதிராஜா படக்கதை ட்விஸ்ட் மாதிரி, தேவர் வீட்டு பையன் பிராமணப்பொண்ணை காதிலிக்கற மாதிரியும், அப்பறம் அவஙக இரண்டு பேரும் இறந்து போயி, அவன் காதலி தோப்பனாரும் செத்து போயி, அனாதையான பிராமணப்பையனை தேவர் எடுத்து வளர்த்து, இந்த சாதியங்கிறதை ஒழிக்கிற மாதிரி கதை போகும், அப்ப இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்திச்சு!


அது மாதிரி இந்த ராகத்திலே வந்த ஏகப்பட்ட பாடல்கள் இருக்கு, தெரிஞ்சுக்கணும்னா, கீழே பாட்காஸ்ட்டை கேளுங்க!தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

இந்த பாட்காஸ்ட்டை கேட்கும் போதே, நான் எழுதின இரண்டு பழைய பதிவுகளை குறிப்பிட்டிருப்பேன். அதன் வீடியோ பதிவிற்கான சுட்டி!

ஷ்ணமுகப்ரியா ராகத்தில் வந்த பாடலின் ஒரு பதிவு!

அதே ராகத்தில் வந்த இன்னொரு பாடலின் பதிவு!

தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!

14 comments:

said...

அடுத்து எழுதப்போற கல்யாணி ராகத்தில் அமைந்த பலப்பாடலகள் இருக்கு. உங்களுக்கு தெரிஞ்ச எதாவது ஒரு பாட்டை சொல்லுங்களேன் பார்க்கலாம்!

said...

நிரைய கல்யாணி ராக பாடல்கள் இருக்கு.....சட்டுனு நினைவுக்கு வருவது உதிரிபூக்கள் படத்துல ஜானகி ஆலாபனையோட ஆரம்பிக்கர பாட்டு.... அதோட வரிகள் சரியா தெரியல "நீ பாட வருவாய்ன்னு ஆரம்பிக்கும்ன்னு நினக்கரேன். சரியான்னு சொல்லுங்க.....

said...

வாங்க ராதா ஸ்ரீராம்! சரியா ஒரு பாட்டை கண்டுபிடிச்சி சொல்லிட்டீங்க! அதே அதே, கல்யாணியிலே இளையராஜா அப்ப அசத்தலா போட்ட பாட்டு. இதனுடய பிக்ஸரைஷேஷன், அசோக்குமார் காமிரா, அப்புறம் அதுக்கு பாடி நடிக்கும் அந்த கதாநாயகி பொண்ணு, ஆத்துல போற குடத்தைக்கூட கண்டுக்காமா கொட்டமடிக்கும் இளமங்கைகளின் கும்மாளம், அந்த சீன் மொத்ததிலே ஒரு கவிதை!

said...

இப்போதைக்குப் பாதி தான் கேட்கமுடிஞ்சுது. அழகான ராகம். நல்ல விவரிப்பு... மீதி நாளை!

said...

//நல்ல விவரிப்பு... மீதி நாளை!//நான் ஒரு மெகா சீரியல் மாதிரி எழுதிகிட்டுப்போனா, அதிலே நீங்க கேட்கிறதையும் சீரியல் மாதிரி நாளைக்கு கொஞ்சம் கொஞ்சம் கேட்கிறீங்க! சரி மீதியை கேட்டுட்டு எப்படிருந்துச்சுன்னு சொல்லுங்க!

said...

வெளிகண்டநாதரே..

தயவு செய்து உங்கள் தொடரில் ஒவ்வொரு ராகங்களைச் சொல்லும் போது எப்படி இந்த திரைப்பாடல்கள் ஒரே ராகத்தை ஒத்து வருகிறது என்பதை சொன்னால் இன்னும் சுவை கூடும்..
அதாவது ஷண்முகப்பிரியாவை எடுத்துக் கொண்டால் தந்ததனம் தந்ததனம்,கண்ணுக்குள் நூறு நிலவா,பழனியப்பா ,மறைந்து இருக்கும் பார்க்கும் இந்த பாடல்களில் எதாவது ஒரு இடத்தில் ஒரு சாயல் கண்டிப்பாக இருக்க வேண்டும்..உங்கள் உரையில் அந்த இடங்களையும் குற்ப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.
இந்த தொடர் கர்நாடக இசையைச் சார்ந்தது என்பதால் இந்த கோரிக்கையை வைக்கிறேன்..ஏனென்றால் தமிழ் திரை இசையில் ராகங்கள் பற்றி நிறைய இனையத்தில் உள்ளன..எப்படி அது ஒத்து வருகிறது என்பதை சொல்வதற்கு ஆள் இல்லை..
நான் ஏற்கனேவே உங்களது போன பதிவில் ரத்பதிப்பிரியா மேளகர்த்தா ராகம் இல்லை..கரகரப்பிரியாவிலிருந்து பிறந்த ராகம் என்று comment போட்டேன் ஏனோ பிரசுரம் ஆகவில்லை..

அன்புடன்
மாயக்கூத்தன் கிருஷ்ணன்

said...

வாங்க மாயக்கூத்தன், உங்கள் கருத்துக்கு நன்றி, பாடல்களில் ராகத்துக்குண்டான ஸ்வரங்கள் வரும் அந்த சப்த அலையை அங்கேயே நிறுத்தி அதை சாஸ்திரிய கீர்த்தனை ஒன்றோடு ஒப்பிட்டு அந்த ராகம் எப்படி பாட்டிலே வருகிறது என்பதி சொல்ல வேண்டும், அடுத்த முறையிலிருந்து என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,அதை சொல்லிவிட்டீர்கள். இதில் நமக்கு கேள்வி ஞானம் மட்டுமே! அதை கொண்டு செய்யும் பொழுது பிழை எழ வாய்ப்பிருக்கிறது! அதனால் வந்த தயக்கம்! இருந்தாலும் முயற்சிக்கிறேன்!

said...

//நான் ஏற்கனேவே உங்களது போன பதிவில் ரத்பதிப்பிரியா மேளகர்த்தா ராகம் இல்லை..கரகரப்பிரியாவிலிருந்து பிறந்த ராகம் என்று comment போட்டேன் ஏனோ பிரசுரம் ஆகவில்லை..//என் மட்டுறுத்தலுக்கு வரவில்லை ஏனோ! நீங்கள் போட்டிருக்கும் கமென்டிற்கு எந்த தடையுமில்லையே பிரசரிக்க!

said...

செல்லியின் பதிவு
கேட்டு மகிழ -சண்முகப்பிரியா...புத்துணர்ச்சி தரும்

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்

சேதுக்கரசி உங்க இந்தபதிவுக்கான தொடுப்பைத் தந்தார்.
ஆகா, அந்தமாதிரி என்ன என்ன உதாரணங்கள் காட்டி, ரசனையோடு அருமையாக விளக்கி உள்ளீர்கள்!
தொடருங்கள் இந்தப் பணியை!நன்றி.
சேதுக்கரசிக்கும் நன்றி சொல்லவேண்டும்.

said...

என்னுடய பப்ளிசிட்டி மேனேஜர் சேதுக்கரசிக்கு நன்றிகள் பல-:))
என்னா புதுசா போட்ட கல்யாணியை கேட்கலையா???

said...

வாங்க செல்லி, மத்த ராகங்களையும் நீங்க பாட்காஸ்ட்ல கேளுங்க! தொடுப்ப இதோ!

said...

//என்னுடய பப்ளிசிட்டி மேனேஜர் சேதுக்கரசிக்கு நன்றிகள் பல-:))//

கொஞ்ச நாள் வெளியூர் போனோமா நிம்மதியா இருந்தோமான்னு திரும்பி வந்தா... அதுக்குள்ள பதவி குடுத்துட்டீங்களாக்கும்.

said...

Aaraaro Aararo - Anand
Adhisaya Nadam Idum Abhinaya Saraswathiyo- Sirayil Pootha Chinna Malar
Akkuthikkuthaana Vaayo- Kaliyoonjal (Malayalam)
Amma Endrazhaikkatha - Mannan
Arul Thavazhum- Guru Ramana Geetham
Chamber Welcomes Thiyagaraja- How to Name It
Charanam Bhava Karunamayi - Sedhu (some deviations in charanams)
Dhevan Thandha Veenai - Unnai Naan Sandhithen (few anya swaras in Ist para)
Ennai Oruvan Paada Sonnan - Kumbakarai Thangaiyya
ila Vattam Kaetkattum - My Dear Maarthaandan (vintage raja number)
Janani Janani - Thai Moogambigai (bet there isn't a better kalyani song)
Kaatril Varum Geedhamae- Oru Naal Oru Kanavu (! Yet another massive kalyani)
Kalaivaaniye - Sindhu Bhairavi
Kottaara Pettiya- Friends (Malayalam)
Malayoram Mayile - Oruvar Vaazhum Aalayam
Manjal Veyil - Nandu
Naan Enbathu Nee Allavo - Soorasamhaaram
Naan Paada Varuvaai - Udiri Pookal
Nadhiyil Aadum - Kaadhal Oviyam
Nirpathuve Nadapathuve - Bharathi
Om Namo Nama- Surya IPS (Telugu)
Poonkattinodum - Poomukhappadiyil Ninneyum Kaathu (Malayalam)
Poonkaatrilae Kaalai (see the charanams)- Paattu Paadava (staggering chord progression)
Radha Azhaikiral- Therkkathi Kallan
Siru Kootula Ulla Kuyilukku - Paandi Naatu Thangam
Sundari Kannal Oru Seidhi- Thalabadhi (Blends raga Kosalam - R3 usage)
Suramodhamu- Aditya-369 (Telugu)
Thalaatum Kaatre- Devan
Unnai Naan Parkaiyil- Kannukoru Vannakili (shows many janya characteristics)
Va Kathirukka Neramillai - Kathirukka Neramillai
Vaidhehi Raman - Ilamai Kolangal
Vandhal Mahalaxmiye - Uyarndha Ullam
Vellai Pura Ondru - Pudhu Kavidhai
Vizhigal Meeno Mozhigal Theno - Raagangal Maaruvadhillai