ராகங்களைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் இத்தொடரில் மறுபடியும் கல்யாணிராகத்தை பத்தி தொடர்ச்சியா வெளியிட்ட இந்த பாட்காஸ்ட்டை நீங்கள் அனைவரும் கேட்க வேண்டுமெனெ தான் இந்த பதிவு! இந்த பாட்காஸ்ட்டை கண்டிப்பா கேளுங்க! வெறுமன சினிமா பாட்டை மட்டும் கேட்காம, இந்த கல்யாணி ராகத்திலே அமைந்த அந்த தியாகராய்யர் கீர்த்தனை பாட்டு, அதை நம்ம கொத்ஸ்ஸும் கரெக்ட் பண்ணுனாரில்லே, அதையும் நீங்க கேட்கலாம்!
அப்பறம் இந்த கர்நாடக சங்கீதங்கள் நீங்கள் கேட்காவிட்டாலும, அந்த சர்ககிள்ல இரண்டு பதம், அடிக்கடி பேசிக்கிற ஒன்னு, அதாவது கிரகபேதம், சுருதிபேதம் ன்னு! அது உங்கள்ல எத்தனை பேருக்கு அது என்னான்னு விளக்கமா தெரியும்ங்கிறதை நீங்க வேணும்னா உங்க பின்னோட்டம் போட்டு சொல்லுங்களேன் பார்க்கலாம்! இல்லேன்னா, அதை பத்தி அடுத்த பதிவுல விளக்கமா எழுதிறேன்!
இந்த சுருதி பேதம்ங்கிற டைட்டிலோட தான் ரஜினியோட எண்ட்ரி அபூர்வராகங்கள்ல வரும், அதாவது அதை பேக்ரவுண்டல சொல்ற குரல் இப்படி சொல்லும், 'தாளமும் ராகமும் இணையபோகிறதே என்ற சந்தோஷம் அவனுக்கு, ஆனால் அது நடக்க வேண்டுமே'ன்னு சொல்லிட்டு இந்த 'சுருதி பேதம்' ங்கிற டைட்டில் வரும்! அதாவது கதையின் போக்கிற்கு வந்த சுருதிபேதம்! சும்மா வெட்டியா ஆன்னு வாய பொளந்துட்டு ஆடுற உருவங்களை மட்டும் வெறுமன சினிமா பார்த்து பொழுதை போக்கிறதை விட இப்படி எதாவது விஷ்ய ஞானம் ஏதும் தெரிஞ்சிக்கலாமில்லை! அப்ப சினிமாவை வெட்டியான பொழுது போக்குன்னு யாரும் சொல்ல மாட்டங்கல்ல, இதுன்னு இல்லை, எவ்வளவோ விஷயங்களை கத்துக்கினும்னா கத்திகிடலாம், என்ன புரிஞ்சதுதா! சரி இப்ப பாட்காஸ்ட்டை கேளுங்க!
தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!
தொடரின் பழைய ராகங்களின் நோய் தீர்க்கும் குணங்களை படிக்க:
நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!
நோய் தீர்க்கும் ராகங்கள்! - ரதிப்பதிப்ரியா ராகம்!
நோய் தீர்க்கும் ராகங்கள்! - ஷண்முகப்ரியா ராகம்!
நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி! (முதல் பகுதி)
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
உள்ளேன்! (ஆனா இப்போதைக்குக் கேட்கமுடியவில்லை :-( )
வழக்கம் போல உள்ளேன் ஐயா சொல்லிட்டு போய்ட்டா எப்படி? கேட்டுட்டு எப்படி இருந்ததுன்னு சொல்ல வேணாமா? ஹிந்தி பாட்டு ஒன்னு போட்டிருக்கேன், உங்கள் விருப்பத்திற்காக!
நான் இப்ப வெளியூர்ல இருக்கேன்.. அடுத்த வாரம் முழுக்க பிசி :( சரி, ஒரு அறிவிப்பு... நீங்க கவிதை எழுதுவீங்களான்னு எனக்குத் தெரியாது.. எழுதாட்டினா உங்க நண்பர்களுக்கு சொல்லுங்க :)
அன்புடன் கவிதைப் போட்டி
ப்ரியன் வலைப்பதிவில் தகவல்கள்
பங்கேற்று வெற்றி பெற வாழ்த்துக்கள்.
கிருஹபேதம்ன்னா ஒருராகத்திலேயே ஒன்று அல்லது இரண்டு ஸ்வரங்களை மாற்றி வேறு ரகத்தின் சாயலைக் கொண்டுவந்து பிறகு பழைய ராகத்திற்கே போய்ய்விடுவது.
ஸ்ருதிபேதம்ன்னா ஒருஸ்ருதிய்ல் பாடிகொண்டு இருக்கும் போதே ஸ்ருதியை ஏற்றியோ இறக்கியோ மாற்றிவிட்டு மருபடியும் அதே ஸ்ருதிக்கு வருவது
Post a Comment