'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம் போங்க! அதாவது எம்ஜிஆர் மக்கள் மனதிலே இடம் பெற்ற நடிகர், அதற்காக அவர் ஆரம்ப காலத்திலேருந்து வகுத்த இலக்கணங்கள் ரீல் லைஃப்க்கு மட்டுமில்லை, ரியல் லைஃப்க்கும் சேர்த்து தான். இதுல்ல ஒரு சோகம் என்னான்னா அவருடய இளமை காலங்கள் தான், அதாவது அவருடய பிறந்த தேதி குறித்து நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதாவது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலே இலங்கைக்கு பொழைக்க இடம் பெயர்ந்த தம்பதிகள் கோபால மேனன், மற்றும் சத்தியபாமா ஈன்றெடுத்த இரண்டாவது புத்திரன் தான் இந்த எம்ஜிஆர். அதாவது அந்த காலத்திலே அப்பா பேரை இனிஷியலா போடோற மாதிரி ஊரு பேரையும் போட்டுக்கிறது வழக்கம். அந்த காலத்திலே நிறைய பிரபலங்கள் பேரை பார்த்தாலே தெரியும், கரெக்டா ஊரு பேரு முன்னாடி நிக்கும்! உதாரணத்துக்கு, குன்னக்குடி வைத்தியநாதன், செம்மாங்குடி சீனிவாச அய்யர், லால்குடி சீனிவாசன், திண்டிவனம் ராமமூர்த்தி, அப்படின்னுட்டு போகும்! அந்த பழக்கம் ரொம்ப நாளாவே இருந்தது, அப்பறம் 60,70க்கு அப்பறம் இந்த ஊரு பேரை முன்னாடி போட்டுக்கிற பழக்கம் நம்மக்கிட்ட இருந்து போயிடுச்சு! இப்பயும் என்னோட ஒரு ஃபிரண்டு, டிஜி மோகன்னு, முதல்ல ஏதோ அவங்க அப்பா பேரு தான் இரண்டு எழுத்திலே வருதுன்னு நான் ரொம்ப நாளா நினைச்சிக்கிட்டிருந்தா, அந்த முதல் எழுத்து 'டி'(T) குறிக்கிறது திருச்சியை! அப்படி எம்ஜிஆர் பேரு மருதூர் கோபல மேனன் ராமசந்திரன்! அவரு பொறந்தது இலங்கையிலே கண்டியிலே! முன்னாடி இருக்கிற ஊரு பேரு மருதூர்ங்கிறது கேரளாவிலே இருக்கிற ஊரு, அவருடய மூதாதையர்கள் வசித்தது, அந்த காலத்திலே!

ஆக அந்த காலத்திலே தேயிலை தோட்டத்திலே வேலைப் பார்க்க போனவங்க இவரு குடும்பம்! (எனக்கு இந்த இலைங்கைக்கு இடம் பெயர்ந்த தமிழர்கள் சரித்திரம் கொஞ்ச தெரிஞ்சிக்க ஆசைப்படுகிறேன், அதுவும் தேயிலை, காப்பித்தோட்டங்களுக்கு! எங்காயவது இணையத்திலே எழுதி இருந்த சங்கதி இருந்தா, தெரிஞ்சவங்க சொல்லுங்க!) அதாவது அந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி இல்லாத நேரத்திலே பொறந்த இவரை வளர்க்க படாத பாடு பட்டுட்டாங்களாம்! அப்ப எல்லாம் குழந்தைங்க சரியா பொழைச்சு ஒரு பத்து வயசுவரை வந்தா உண்டு, இல்லை பொசுக்குன்னு ஆயுள் முடிஞ்சிடும். இதை நான் என்னோட வாழ்க்கையிலும் பார்த்திருக்கேன்! இந்த 50,60 கள்ல கூட குழந்தைகளை பேணி காப்பதுங்கிறது குதிரைக் கொம்பு தான். எங்க வீட்டிலேயே எனக்கு மூத்தவங்க இரண்டு பேரு தங்கலை, நான் தான் மூணாவது! அதனால என்னையை மத்தவங்களுக்கு தானம் கொடுத்து, அப்பறம் பிச்சையா கேட்டு வாங்கி வளர்த்தாங்கண்ணு சொல்வாங்க! அதுக்காகவே அந்த குழந்தைகளுக்கு மூக்கன், பிச்சை ன்னு பேரு வக்கிறது வழக்கம், ஆனா நம்ம பெரியம்மா வூட்டு அக்காமாருங்க கொஞ்சம் படிச்சவங்க, அதெல்லாம் வேணாமுன்னு கொஞ்சம் ஸ்டைலா நம்ம பேரை வச்சதா கேள்வி! இதை எதுக்கு சொல்றேன்னா எம்ஜிஆரோட உண்மையான வயது யாருக்கும் சரியா தெரியாது! அஃபிஷியல் ரெக்கார்டு எல்லாத்திலேயும் 1917ன்னு போட்டிருந்தாலும், அவரு ஒரு ஆறு ஏழு வருஷத்துக்கு முன்ன பொறந்தவருன்னு சொல்றாங்க!
எம்ஜிஆர் பொறந்த இரண்டு வருஷத்திலே அவரு அப்பா இறந்ததாலே, அவருடய விதவைத்தாயார், தன் மக்களை கூட்டிக்கிட்டு தமிழ்நாடு வந்து கும்போகோணத்திலே வந்து குடியேறினாங்க! அப்பறம் குழந்தை நடிகனா இருந்து படிப்படியா முன்னேறி, தன்னிகரில்லா நடிகர்னு ஒரு முப்பது ஆண்டுகள் தலைசிறந்த நடிகனா ஆட்சி புரிந்து, கடைசி பத்து வருஷம் தமிழக முதல்வரா இருந்து போய் சேர்ந்தாரு! ஆனா அவரு விட்டு போனது எத்தனையோ! கண்ணதாசன் அவருக்குன்னு எழுதனமாதிரி, 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்தபின்னாலும் என் பேச்சிருக்கும்னு' இன்னைக்கும் அவரு பேரின் ம்ந்திரசக்தி எப்படிங்கிறதை சமீபத்தில திருப்பி ரீலீஸ் பண்ணின 'நாடோடி மன்னன்' படம் பதினாலு வாரங்கள் தொடர்ந்து ஓடினதே சாட்சி! அவ்ர் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொண், இறந்தாலும் ஆயிரம் பொண், ஆயிரத்தில் ஒருவன்!
சரி உலகம் சுற்றும் வாலிபனுக்கு வருவோம்! இந்த படத்திலே அவரோட அந்த காலத்திலே சக வில்லன்களா ஆக்ட் பண்ண எல்லாருமே நடிச்சிருந்தாங்க, அதாவது அசோகன், நம்பியார், ஆர்எஸ் மனோகர், ராமதாஸ், ஜஸ்டின் அப்படின்னு. அவரோட சண்டை காட்சிகள் எப்பவுமே பிரமாதமா இருக்கும்! அதாவது இப்பவும் படங்கள் வருது, அதிலே எதிரியை தாக்கறேன்னு ரத்தகளோபரமா இருக்கு, வன்முறைகளை தூண்டிவிடுகிற மாதிரி தான் வருது! அதாவது ஒருத்தன் எதிரின்னா அடிச்சி காலிப்பண்ணு, அப்படிங்கிற ரீதியிலே, பயங்கர ஆயுதங்களோட ஒரே ராசாபாசமா இருக்குது! ஆனா எம்ஜிஆர் படங்கள் எல்லாமே பாருங்க! அப்படி ராசாபாசம் எதுவும் தெரியாது! சண்டைங்கிறது ஆபத்தான வேளைகளில் தன்னை தற்காத்து கொள்ள வைத்திருக்கும் இன்னொரு கலை மாதிரி இருக்கும். அதிலே சண்டை போட அவரு எடுத்து வைக்கும் ஸ்டெப்பு, ஸ்டைல், ஆக்ஷன் எல்லாமே பார்க்க சந்தோஷமா இருக்கும். அதாவது குதுகூலமா சின்ன பசங்க கண்ணை மூடாம, பெரியவங்களும், சின்னவங்களும் சேர்ந்து பார்த்து மகிழ்ச்சியா பார்த்து ரசிக்கும் வண்ணம் இருக்கும்! அது தான் அவருடய படங்களுக்கு கிடைச்ச வெற்றி!
அப்படிதான் இந்த படத்திலே முதல்ல ஆர்எஸ் மனோகரோட போடற சண்டையிலே, எம்ஜிஆரை லதா துப்பாக்கியாலே சுட்டு தப்பிக்க வச்சிட்டு,
8 comments:
இதனுடய இன்னொரு தொடர் பகுதியில் 'உலகம் சுற்றும் வாலிபன்' நிறைவு பெறும்!
"தங்கத்தோணியிலே தவழும் பெண்ணழகே" என்று திருத்தலாமா ?
:-)
பதிவை இன்னும் படிக்கவில்லை. அதற்குள் தலைப்பில் உள்ள ஒரு சிறு பிழை காண நேர்ந்தது. அத்தான் ஒரு உடனடி பின்னூட்டம்.
தங்க தோணியில் தவழும் பெண்ணழகே
:-)))
இதோ திருத்திவிட்டேன் பாலராஜன்கீதா அவர்களே, எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்!
ஸ்ரீதர் வெங்கட், இதோ மேலே கூறியது போல, திருத்திவிட்டேன், நீங்க மெய் எழுத்தை விட்டுட்டீங்க-:)
அந்த மெய்யெழுத்து இருக்கிறது... ஆனால் இடம் மாறி இருக்கிறது. வெளியில் கிளம்பும் அவசரத்தில் இட்டதால் பிழை திருத்தும் பின்னூட்டத்தில் பிழைகள். :-)))
//அத்தான் ஒரு உடனடி பின்னூட்டம்.
தங்க தோணியில் தவழும் பெண்ணழகே//
படிக்கிறவர்கள் என்னடா உதய்குமார் ஸ்ரீதருக்கு அத்தான் முறையா என்று குழம்பாமல் இருக்க -
அதான் ஒரு உடனடி பின்னூட்டம்.
தங்கத் தோணியிலே தவழும் பெண்ணழகே
//படிக்கிறவர்கள் என்னடா உதய்குமார் ஸ்ரீதருக்கு அத்தான் முறையா என்று குழம்பாமல் இருக்க // பார்த்தீங்களா, மெயெழுத்தை இடம் மாத்தி அர்த்ததை மாத்திட்டீங்களே! ஆமா நீங்களே குழப்பத்தை தீர்த்து வச்சதுக்கு நன்றி! நல்லவேளை வீட்ல அதுக்கு முன்னாடி ஏதும் பார்க்கல்ல இங்கே-:)
என்ன ஸ்ரீதர், இன்னும் பதிவை பத்தி ஒன்னும் சொல்லலையே? படிச்சாச்சா?
Post a Comment