Monday, December 04, 2006

"உதிரிப்பூக்கள்" பதிவுப் பற்றி ஓர் அறிவிப்பு!

இன்று காலையில் தான் உதிரிப்பூக்கள்-மகேந்திரனின் மகுடம்! என்ற பதிவை வலை ஏற்றினேன்! உங்களின் ஏகோபித்த ஆதரவால் அது பெருவாரியாக அனைத்து தமிழ்மண மக்களிடமும் சென்றடைந்தது! அந்த வீடியோ கிளிப்பினை பெருவாரியான மக்கள் கண்டு ரசித்தனர்! இருந்தும் இன்று மதியம் 3:30 மணி PST க்கு மேல் அந்த வீடியோ சேவை உங்களை வந்தடையவில்லை! காரணம் அதை கண்டு மகிழ அனைவரும் விருப்ப பட்டதால், ஹிட் அதிகம் காரணமாகவோ ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அதை தொடர்ந்து ஒளிபரப்ப முடியததால், மாற்று வழியாக இந்த பதிவினில் அது "Youtube" சேவையில் உங்களை வந்தடைகிறது! எனினும் முதல் டைட்டில் சாங்கும், அழகிய கண்ணே பாடலும் மட்டும் இங்கு இரண்டு கிளிப்புகாளாக வழங்கப்படுகிறது! கடைசி காட்சியை, இன்னும் நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த காட்சியை ஒளிபரப்ப சற்று நேரம் எடுத்துக் கொண்டு விரைவில் உங்களை வந்தடையும்! தடங்கலுக்கு வருந்துகிறேன்!

இது போன்ற காலாத்தால் அழியாத திரை ஓவியங்களுக்கு என்றுமே வரவேற்பு உண்டு என்பது இப்பொழுது கண்கூடாகத் தெரிகிறது, வீடியோ காட்சிகளை கண்டு மகிழுங்கள்!

என்றும் உங்கள் வெளிகண்ட நாதர்!

முதல் வீடியோ கிளிப்


இரண்டாம் வீடியோ கிளிப் :


நன்றி: பிரகாஷ் பதிவு

8 comments:

said...

சார்

கலக்கல் வீடியோ.. மிக அருமை..

உங்கள் விளக்கமும் அருமை..

அலுவகத்தில் ஆடியோ வேலை செய்யவில்லை..

ஆனால் வீட்டில் ஆடியோ& விடியோ பார்த்தேன்.. இரசித்தேன்.. அருமை..

நன்றி! நன்றி!! நன்றி!!

said...

அன்பின் வெளிகண்டநாதர்,
நான் இன்னும் ஒரு முறை கூட இந்தப் படம் பார்த்ததில்லை. சின்ன வயதில் A சர்ட்டிபிகேட் வாங்கிய படங்களை அம்மா பார்க்க விடமாட்டார்கள். இன்னும் பார்க்கவில்லை. நீங்கள் எழுதிய பின்னர் பார்க்க வேண்டும் போலிருக்கிறது..
ஆமாம், குமுதத்தில் மகேந்திரனின் சமீபத்திய வீடியோ பேட்டியைப் பார்த்தீர்களா? ரொம்ப எதார்த்தமாகப் பேசியிருப்பார்.. அவசியம் பாருங்கள்..
குமுதம்.காம் தளத்தில் உள்ளது...

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

said...

அடடா, அழகிய கண்ணே வழங்கிய உங்களுக்கு மிக்க நன்றி.
ஜானகியும், ராஜாவும் மறக்க முடியுமா நம்மால்.
ஹ்ம். இந்த மாதிரி மனதை ஈர்க்கும் பாடல்கள் வந்து பல வருடங்கள் ஆயிற்று.

ரொம்ப நன்றி!

said...

சிவா, கடைசி காட்சி கிளாஸ், அதை நீங்க பார்க்க முடியாமல் போகிவிட்டது! அது தான் மகேந்திரனின் மாஸ்டர்பீஸிற்கு ஒரு முத்திரை, விரைவில் எதிர்பாருங்கள்!

said...

இந்த படத்திலே "A" சர்டிபிகேட்டுக்கு ஒரு மண்ணுமில்லை சீமாச்சு, ஹா.. கடைசிலே விஜயன் மச்சினிச்சி சேலையை உருவி போடுவாரு, அது ஒன்னுமே இல்லை, இப்ப வர்ற படத்துக்கெல்லாம், என்னா பண்றது அப்ப நீங்க சின்னவரா இருந்திருப்பீங்க! பரவாயில்லை, படம் கிடைச்சா போட்டு பாருங்க, படக்கதை விளக்கத்தை அருமையா பிரகாஷ் எழுதி இருப்பாரு. அதையும் படிச்சிடுங்க!

said...

அப்படி மறக்கமுடியாமதானே நெஞ்சுக்குழியிலே வச்சுக்கமுடியாம உங்களுக்கு படம் போட்டுகாட்டினேன் பேட்நியூஸ்!

said...

அழகிய வீடியோக்களுக்கு நன்றி வெளிகண்டநாதர். இவற்றை எப்படி சேமிப்பது என்று சொல்லித் தர முடியுமா ?

said...

மணியன், இந்த வீடியோக்களை சேமிக்க நீங்கள் இணையத்திலிருக்கும், 'Flash player
saving' என்ற புரோகிராம் மூலமாக நீங்கள் சேமித்து கொள்ளலாம்.