Wednesday, December 06, 2006

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஜோடி!

நம்ம டோண்டு தமிழ் சினிமாவிலே தவிர்க்க முடியாத ஜோடிகள்னு ஒரு பதிவு போட்டார், அதிலே பியூ சின்னப்பா, தியகராஜ பாகவதர் ஜோடி, அப்பறம் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் ஜோடி, கடைசியிலே கமல் ரஜினி ஜோடின்னு எல்லா கதாநாயகர்கள் எதிர்மறை ஜோடிகளை பத்தி எழுதி யாருக்கு நடிப்பு, அப்பறம் யாருக்கு கரிஷ்மான்னு எழுதி போட்டதை எல்லாரும் படிச்சிருப்பீங்க! ஆனா நான் இங்கே எழுதப் போற தவிர்க்கமுடியாத ஜோடி யாருன்னா 80க்கு அப்பறம் காமிடி பண்ணிக்கிட்டு இருந்த கவுண்டமணி, செந்திலைப்பத்தி தான்!

இவங்கதான் அந்த 80, 90களில் காமிடி கலக்கல் பண்ணிக்கிட்டு திரிஞ்சவங்க!அதுவும் ஆரம்பகாலத்திலே கவுண்டமணி தனிஆவர்த்தனமா நுழைஞ்சது பாரதிராஜாவோட முதப்படமான 16 வயதினிலே தான்! அதிலே ரஜினிக் கூட வர்ற வெட்டி கிராமத்தான் கேரக்டர்! ரஜினிக்கு "இது எப்படி இருக்கு" டைலாக் அவரு பேசினதை எவ்வளவு ரசிச்சு பேமஸா மக்கள் பேசி காட்டினங்களே, அதே மாதிரி கவுண்டமணி பேசின "பத்த வச்சிட்டியே பரட்டை" டைலாக்கும் அப்ப ரொம்ப பேமஸா பேசி மக்கள் ரசிச்ச ஒன்னு! அப்பறம் அந்த டாக்டர் கிராமத்திலே பேசிறப்ப கவுண்டமணி இங்கிலீஷ்ல பேசினதை ரஜினிக்கு தமிழ்ல மொழி பெயர்த்து சொல்லும் அந்த அழகு டைலாக்கு, 'இப்ப என்ன சொல்றாருன்னு' ரஜினி கேட்க 'ம்..உச்சி வெயில் மண்டையை பொளக்குது'ன்னு சொல்ற காமடி கலக்கலா இருக்கும்! அதே மாதிரி 'கிழக்கே போகும் ரயில்', 'சிகப்புரோஜாக்கள்'னு தொடர்ந்து அவரு காமடி பண்ணி நடிச்சது ரொம்ப பாப்புலர் அப்ப! அதிகமா நான் அதை மிமிக்கிரி பண்ணி நடிச்சு காலேஜ் காட்டினப்ப ஏகத்தும் கைத்தட்டல் வாங்கினேன், அதை நான் என்னோட எனை ஆண்ட அரிதாரத் தொடர்ல சொல்லி இருக்கேன்!

அது மாதிரி செந்தில் முதல்ல நடிக்க ஆரம்பிச்சப் படம் பாக்யராஜோட 'தூறல் நின்னுப் போச்சு'ன்னு நினைக்கிறேன்! அதிலே சும்மா சோப்பளாங்கியா நம்பியார் குஸ்தி போடற பள்ளிக்கூடத்திலே வந்து பண்ண காமிடி கலக்கலா இருக்கும். அப்பறம் கவுண்டமணி, செந்தில் ஜோடி மெள்ள மெள்ள வந்து, அப்புறம் அவங்களுக்கு காமடி டிராக்கு எழுத தனியாவே ஒரு ஆளு இருந்தாரு, அவரு பேரு வீரப்பன்! அப்படி அவங்க பண்ணுன காமடி ரொம்ப தூக்கலா இருக்கும்! சமயத்திலே அவங்க பண்ற காமிடி காம நெடியாவும் இருக்கும்! கவுண்டமணி ஸ்பெஷலா செந்திலை கூப்பிடற பாஷையே தனி, 'ஆப்பத்தலையா', 'சட்டித்தலையா', 'கடல்பன்னி'ன்னு ஆரம்பிச்சு அவரு கூப்பிடாத வசுவு வார்த்தையே இல்லைங்களாம்! அத்தனையையும் ஜனங்க ரசிச்சாங்க! அதே மாதிரி அவரோட இன்னொரு ஸ்டைல் என்னான்னா, தகப்பன், மகன், அம்மா, மகள், அண்ணன், தம்பி, அரசியல்வாதின்னு யாரா இருந்தாலும் போடா, வாடான்னுட்டு ஏதாவது ஒரு ஸ்பெஷல் வார்த்தையிலே திட்டி பண்ற காமடி அசத்தலா இருக்கும், அதை தமிழ்நாட்டு ஜனமே சிரிச்சு ரசிச்சு!

அதிலேயும் இந்த கவுண்டமணி, செந்தில் ஜோடியின் மிகச்சிறப்பான காமடி காட்சிகள் வந்தப்படம் 'வைதேகி காத்திருந்தாள்', பிறகு 'கரகாட்டக்காரன்' அதுவும் அந்த வாழப்பழம் ஜோக்கு, அப்புறம் அப்பாவியா அவரை கேள்விக்கேட்டு கொள்றது, அதுவும் அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டு லாந்தரு புசுக்குன்னு புடிச்சி, 'இது என்னாண்ணே'ன்னு க் கேட்டு நசுக்கி போடும் காட்சிகள், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! எப்படி இளையராஜா பாட்டுக்காக படங்கள் ஓடிச்சோ, அது மாதிரி இவங்க காமடிக்காவே ஓடுன படங்கள் நிறைய! அதுவும் பெரிய சிட்டியிலேன்னு இல்லாம, பட்டி தொட்டிகள்ளே எல்லாம் பட்டையை கிளிப்பிக்கிட்டு ஓடுனிச்சு!

டோண்டு பதிவு பார்த்தோன இந்த தவிர்க்க முடியாத ஜோடியை பத்தி எழுதனும்னு தோணுச்சு, அதான்! அதோட கரகாட்டக்காரன் படத்திலேருந்து கவுண்டமணி, செந்தில் நடிச்ச காட்சிகளை இங்கே நீங்கள் கண்டு களிக்கனும்னு போட்டு இருக்கேன், பாருங்களேன், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமிடி ஜோடிகளை!

13 comments:

said...

காமெடி உலகிலும் ஜோடிகள் உண்டு. நாகேஷ்-சோ, நாகேஷ்-வீரப்பன் (நீங்க குறிப்பிட்டவர்தான்), பார்த்திபன்-வடிவேலு இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இவர்கள் ஒரே படத்தில் ஜோடியாக நடிப்பவர்கள்.

ஆனால் நான் சொன்ன ஜோடிகள் விஷயம் பாப்புலாரிட்டி சம்பந்தப்பட்டது. அவர்கள் சாதாரணமாக ஒரே படத்தில் நடிக்க மாட்டார்கள். அப்படியே நடித்திருந்தாலும் அது அவர்கள் இம்மாதிரி ஜோடிகளாக பிரபலமாவதற்கு முன்னால் இருந்திருக்கும். உதாரணம் கூண்டுக்கிளி. கமலும் ரஜனியும் பல படங்களில் ஒன்றாக நடித்ததும் அவ்வண்ணமே. தியாகராஜ பாகவதர் மற்றும் பி.யூ. சின்னப்பா ஒன்றாக நடித்தார்களா என்பது தெரியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

கலக்கல் ஜோடிதான் இது!

லாரல்-ஹார்டி ஜோடி போல வரலாற்றில் இடம் பெற்ற ஜோடி.

said...

வாங்க டோண்டு, நீங்க சொன்ன மாதிரி அந்த ஜோடிகள் அவ்வளவா மக்கள் கிட்ட பாப்புலரா இருந்ததில்லை!

//நாகேஷ்-வீரப்பன் (நீங்க குறிப்பிட்டவர்தான்)// கரெக்டா சொல்லிட்டீங்க! இந்த வீடியோ கிளிப்பிலக் கூட அவரு நடிச்சிருக்காரு, பார்த்தீங்களா? அந்த முத காட்சியிலே செந்திலை பாராட்டி அப்புறம் கவுண்டமணிக்கிட்டே அடிவாங்கி கிட்டு இருக்காரே!

said...

//லாரல்-ஹார்டி ஜோடி போல வரலாற்றில் இடம் பெற்ற ஜோடி// சரியா சொன்னீங்க எஸ் கே!

said...

எனக்கு பார்த்தீ + வடிவேலு சேர்ந்தா ரொம்ப்ப பிடிக்கும்...அவங்க காம்பினேஷன் சூப்பரா ஒர்க் அவுட் ஆகி நிக்குது...

said...

//எனக்கு பார்த்தீ + வடிவேலு சேர்ந்தா ரொம்ப்ப பிடிக்கும்...//ரவி, அவங்க ஜோடியும் கலக்குமே! அதிகமா அவங்க காமிடிக்குன்னு தனியா நடிக்க்லையே! பார்த்திபன் படத்திலே வடிவேலௌ வந்தா உண்டு!

said...

மேலே கவனீச்சீங்களா மரத் தடி! உங்களை விட அதிகமா திட்டி தீர்த்த ஆளு நான்! இந்த நம்மங்கிறதுக்கு அர்த்தம் என்னான்னா, ஒரே இடத்திலே கூடி பேசி பழகறதாலே வர்ற சாவ்காச சந்தம்! இது எப்படின்னா அந்த காலத்திலே விட்டு பக்கத்திலே இருந்த பிரபாத் தியேட்டர்ல பொழுதை கழிக்க போய், ஊரு பேரு தெரியாத நிறைய ரசிகர்கள் ஸ்டில் பார்க்க வந்து சிவாஜி நடிப்பையோ, மத்தவங்க நடிச்சதையோ கூடி பேசுவாங்க, நானும் கூட நின்னு ப்ராக்கு பார்த்து, அங்க வர்றவங்க கிட்ட பேசி, பழகி, சும்மா பேரு தெரிஞ்சுக்குவோம், அப்பறம் எப்பயாச்சும் அந்த மாதிரி யாரையாவது பத்தி பேச்சு எடுக்கறப்ப இந்த "நம்ம" போட்டு பேசறது வழக்கம், அது மாதிரி இந்த தமிழ்மணம்ங்கிறது பொது மேடை எத்தனையோ பேரு முகம், ஆளு எப்படி இருப்பான்னு தெரியாம, சும்மா, கழுதை அவங்க எழுதி போடறதை படிச்சி, நம்மளும் எழுதி பொழுது போக்கிக் கிட்டு இருக்கோம், அப்படி எழுதுனது குறிப்பிட இந்த நம்ம போட்டு பேசறது ஒன்னும் தப்பில்லைன்னு நினக்கிறேன், பழக்க தோஷமில்லையா, வந்துடுது! இதுக்கு சரியா அர்த்தம் தெரிஞ்சிக்காமா மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடறீங்க! பாருங்க எவ்வளவு பேரு, சீ நான் வர்றலை இந்த ஆட்டத்துக்கு ஓடிப்போறாங்க இந்த பொது மேடையை விட்டு, அதுவா உங்க நோக்கம்! இல்லையே, நம்ம மக்கே முன்னேறுனும்னா அவங்களை வழியேத்த வேற எத்தனையோ விதமிருக்கு! தெரிஞ்சிக்கிட்டீங்களா, வாஸ்த்தவந்தான், நம்ம பாட்டன் முப்பாட்டனை ஏமாத்தி ஒன்னுமில்லைமா ஆக்கிப்புட்டாங்கே அப்ப, ஏன்ன நம்ம பாட்டன் பூட்டங்கிட்டே படிப்புச்சுகம் ஒன்னுமில்லையே, அதெல்லாம் புரிஞ்சு அப்பவே குரலு குடுக்க! இப்பதான் நம்ம படிச்சி குரலுவுடுறமில்லை, அத உடவேண்டிய இடத்திலே உட்டு, நம்ம சாதி சனங்களை முன்னேத்துங்க! நான் அதிகமா இந்த விளங்காம போற சண்டைக்கு போனதில்லை,ஆனா இது கொஞ்சம் ஜாஸ்தி ஆயிடுச்சு இப்ப அதான் நம்ம மரத் தடி தானே பதிலு குடுப்போமுன்னு குடுக்கிறேன்! என் எழுத்தை தொடர்ந்து படிச்சீங்கன்னா விளங்கும்!

said...

கவுண்டமணி செந்தில் ஜோடியைப் பிடிக்காம இருக்குமா?

செந்திலோட மொதப் படம் பொய்சாட்சீன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன். அப்பாவியா இருப்பாரு. அவர பாக்கியராஜ் கூட்டிக்கிட்டு போய் ஓட்டல்ல நல்லா சாப்பிட்டுட்டு ஓடீருவாரு. இவரு மாட்டிக்கிட்டு அடி வாங்குவாரு. அப்பயே அவருக்கு அடி வாங்குற யோகம்.

ராமன் எத்தனை ராமனடி படத்துலயே (சிவாஜி, கே.ஆர்.விஜயா) கவுண்டமணி வருவாரு. பஸ் டிரைவரா.

said...

//செந்திலோட மொதப் படம் பொய்சாட்சீன்னு நெனச்சுக்கிட்டிருந்தேன்// அப்படியா ராகவன், எனக்கு தெரிஞ்சு தூறல் நின்னுப்போச்சு தான், பொய்சாட்சி அதுக்கப்பறம் வந்ததா இல்லே முன்ன வந்ததா, சரியா ஞாபகம் இல்லை!

//ராமன் எத்தனை ராமனடி படத்துலயே (சிவாஜி, கே.ஆர்.விஜயா) கவுண்டமணி வருவாரு. பஸ் டிரைவரா.//இதுவும் புதுத் தகவல், எனக்கு தெரிஞ்சு அவ்ரு பாரதிராஜா கோஷ்டியோட தான் முதல்ல வந்தது, ஒரு வேளை இருக்கலாம்! ராமன் எத்தனை ராமனடி படம் திருப்பி பார்த்தா தெரியவரும்!

said...

தமிழ் திரைஉலகில் குறிப்பிடத் தகுந்த முதல் காமெடி ஜோடி இவர்கள் தான். முன்னவர்கள் எதேச்சையாக சேர்ந்தாலும் ஒரு ஜோடியாக பார்க்கப் பட்டவர்கள் இல்லை.

நாளொரு சினிமா என உங்கள் பதிவிற்கு வந்தால் பொழுது போகிறது :)

said...

//நாளொரு சினிமா என உங்கள் பதிவிற்கு வந்தால் பொழுது போகிறது :)//கனமா பதிவு படிச்சி என்ன பண்ண போறோம் மணியன் சார்! பொழுதுபோக்கு வாழ்க்கையோட முக்கிய அம்சமில்லையா! அப்புறம் சினிமாவைத்தவிர வேறெதுவும் மக்களுக்கு சுவரசியமா எங்க இருக்கு? தண்ணியை பத்தி எழுதுனாலும் சினிமாவை டச்சு பண்ணாம எழுத முடியல்லையே சார், ஒரு கிறுக்குதான் போங்க-:)

said...

உண்மை தான்.. பொருத்தமான ஜோடி. வாழைப்பழ ஜோக் வீடியோ போட்டிருப்பீங்கன்னு நினைச்சிட்டேன்.. ஆனா இந்த வீடியோவும் நல்லா இருந்தது.

said...

//வாழைப்பழ ஜோக் வீடியோ போட்டிருப்பீங்கன்னு நினைச்சிட்டேன்.. //அதுக்கென்னா, போட்டுட்டா போச்சு, சேதுக்கரசி!