Friday, December 08, 2006

இன்பமே உந்தன் பேர் வள்ளலோ!

சிற்றின்ப சந்தோஷம் என்பது விளக்குகள் அனைந்தப் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கும் மறைவினிலேயா வாழ்ந்துக் கொண்டிருக்கிறது? இல்லை! இல்லை! அதனை நுண்ணர்வுகளுடன் கலந்து வெளிக் கொணற ஆயிரம் வழிகள் உள்ளன!

காலையில் படுக்கையை விட்டு எழுந்து, சற்றே நீண்ட மூச்சை உள்ளிழுத்து திரைச்சீலை விலக்கி, ஜன்னலின் வழியே, ஆகாயத்தைப் பார்க்கும் பொழுது, தெரியும் நீலவானம், அழகிய ஓசை எழுப்பி சிறகை விரித்து பறந்து செல்லும் ஆயிரம் பறவைகளை பார்க்கும் பொழுது உள்ளம் சிலிர்க்கும் அந்த சிற்றின்பத்தை கண்டுணர்ந்ததுண்டா பெண்ணே! அதுவும் காலை வேளையிலே தட்டு தழுவிச்செல்லும், சருமைத்தை வருடிச் செல்லும் தென்றல் தரும் சுகம் நேற்றிரவு நீ கண்ட சுகத்தை விடப் பெரிதா அது?

இளங்காலையின் இன்பச்சுகமறியா உன் கணவன், மூக்குத் துவாரமின்றி உணவுக்குழல் மூலம் மூச்சு காற்றை உள்வாங்கி வெளியிடுவதால் எழுப்பும் குறட்டைச் சத்தத்தையும், அவன் சரும உராய்வில் அந்த மூச்சுக் காற்றின் இளஞ்சூட்டு வெப்பத்தினையும், அவன் தேகம் தரும் கஸ்தூரி மணத்தை முகர்ந்து பார்ப்பதையும் கொண்டாடி மகிழ்ந்துணரும் உணர்வுகள் தான் நீ விரும்பும் சிற்றின்பமா? இல்லை, இல்லை, இல்லவே இல்லை!

அன்றாட பணிகளை செய்து முடித்திட உனது பாதி மன வலிமையும் உடல் வலிமையும் செலுத்துவதில் முனைப்பாய்கிறாய்! உனக்கான கடமைகளும், அதனை தொடர்ந்து வாழ பயணிக்கும் மணித்துளிகளும், எங்கே உன்னுள் கொண்டிருக்கும் நுண்ணர்வுகளால் உந்தப்படும் சிற்றின்பத்தை முழுமையாக அநுபவிக்க வழி வகுக்கிறது? உனக்கான சிற்றின்ப சந்தோஷங்களை எப்படி பேணி வளர்த்து அபிவிருத்தி செய்ய நீ முற்பட வேண்டும் என நான் எடுத்துரைத்தால் முட்டாளாகிவிடுவேன்! ஆனால், இந்த பாழய்போகும் அன்றாட வாழ்க்கைப் பளுவின் ஆளுமையிலே எங்கே நீ சிற்றின்பம் காண்பது!

நான் ஒரு உண்மையைச் சொன்னால் நீ ஆச்சிரியப் படுவாய்! சிற்றின்பம் காண வழி சொல்ல மூயலும் இந்த ஜென்மம் என்ன ஜென்மமிது என எனை பார்த்து கேலிப் பேசுவது தெரிகிறது! ஆனால் வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்வதிலும் துணி மணிகளை மடித்து வைப்பதிலும், கணவனுக்கு பொங்கிப் போடுவதிலும், குழந்தை பராமரிப்பதிலும், அலுவகத்தில் கொடுத்த பணிகளை திறம்படச் செய்வதிலும் மட்டுமே நீ உன் சிற்றின்பத்தை பெறுவாய் என நான் கூறினால் அதைவிட நகைப்புக்குறியது வேறொன்றுமில்லை!

சிற்றன்பமென்றால் என்ன என்பதற்கு விளக்கம் அளிக்க முற்படும்பொழுது இவ்வாறு ஒரு விடைத் தெரிகிறது! நம் ஐம்புலன்களால் என்ன என்ன உணர்கின்றோமோ, அவை அனைத்தும் சிற்றின்பமே! ஆனால் பெரும்பாலோரால் வகுக்கப்பட்ட பொருள்விளக்கம் என்னவென்றால், இச்சிற்றின்பம் இப்பூவுலகிலிருந்து விலகியது அல்ல என்பதே! எனக்கு இதில் சிறுதும் உடன்பாடில்லை! அதாவது இது மனம் சம்பந்தப்பட்டது அல்ல எனக்கூறுவது முற்றிலும் தவறு! வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு புலன்களால் அறியப்படுவது அல்ல இந்த சிற்றின்பம் என்பது. ஏனென்றால் இது பொதுவான வாழ்க்கை அம்சத்திலிருந்து மாறுபட்ட கண்ணோட்டத்தின் கருத்து! ஆனால் அதுவே உண்மை! பொதுவாக உடலின் எந்தப் பகுதி பாழ்படுகிறதோ அந்தப் பகுதிக்கு மட்டும் மருத்துவம் பார்த்து உறுப்புகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றெண்ணி, பாதிக்கப்பட்ட பகுதியை சரி செய்யும் லாவகம் போல் வாழ்க்கையின் அத்தனை அம்சங்களையும் அதற்குண்டான எல்லைகுள்ளாகவே அதை அனுசரித்து ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வாழுவதால் உணரப்போவதில்லை இந்த சிற்றின்பத்தினை! ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு, ஆக எல்லாவற்றிற்குமே தொடர்புண்டு! அப்படி ஒன்றுக்கொன்று தொடர்பின்றி வகுக்கப்படும் கண்ணேட்டங்கள் சமநிலைப்பாடற்ற கருத்தாகவே ஏற்று கொள்ளவேண்டும்!

ஆற்றுபடுகையிலே இரைந்துக் கிடக்கும் கூழாங்கற்களை பார்த்தால் என்ன தோன்றுகிறது, நீரோடு உருண்டோடி வரும் பாறைகளின் வடிவத்தை பார்க்கும் பொழுது என்னத்தோன்றுகிறது! வாதமின்றி பிரதிவாதமில்லை, காரணமின்றி காரியமில்லை, அசைவின்றி விளைவில்லை! ஆக நான் மேலே கூறிய பொருள் விளக்கம் எதை தெளிவுபடுத்துகிறது என்றால் சிற்றின்பத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமுண்டு என்பதைத்தான்!

எல்லை வகுக்கப்பட்ட, தொடர்பின்றி நிர்ணயிக்கும் எண்ணங்களே நம்முள் உண்டாகும் துன்பங்களுக்கும் தீங்குகளுக்கும் மூலக்கராணம், அதுவே தொடர்பற்ற அர்த்தம் காணுவதில் உண்டாகும் கஷ்டங்களை பிரதிபலிக்கும் சமூகம் உருவாகவும் காரணமாகிறது! புரியவில்லையா? இதோ ஒவ்வொரு சிற்றின்ப மனிதனையும் வெளிகொணர்ந்து அதனைச் சுற்றிய மற்ற அம்சங்களும் எப்படி ஒன்றுக்கொன்று எவ்வாறு தொடர்புடயது என்பதை விளக்குகிறேன்!

நம் உணர்வுகளே கொழுந்து விட்டு எரியும் உணர்ச்சிகளை தூண்ட காரணம்! திறந்த புல்வெளியில் பாதம் பதித்து நடக்கும் போது, இந்த வாழும் வாழ்க்கையின் உயிர் துடிப்பும், அந்த புல்பரப்பில் நடந்து வரும் மென்மையை கண்டு பெருமிதம் அடையக்கூடும்! ஒன்று தெரிய வருகிறதா இந்த புல்வெளி சமபரப்பினை கொண்ட இந்த உலகம் எவ்வளவு அற்பதமானது, அதனுடன் கொண்டிருக்கும் நம் தொடர்பு எத்தனை சுகமானது! இன்னும் சொல்லப்போனால், பனித்துளி கொண்டிருக்கும் அந்த ஈரமான புல்வெளி சமபரப்பு நம்முடன் உறவாடும் உணர்ச்சிகள் எத்தனை ஏகாந்தமானவை! இது போன்ற உணர்வுகளின் மேல் கொண்ட அபரிதமான தொடர்பு அதிகமாக விரிவுபடுத்தி உன்னை நீயே ஏன் நேசிக்கக் கூடாது! இது போன்ற சிற்றினபங்களை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் நீ ஏன் கண்டுணரக்கூடாது! அப்படி கண்டுணர்ந்து நீ கொள்ளும் சமநிலைப்பாட்டுடன் வாழும் வாழ்க்கை எவ்வளவு அற்புதமானது! அப்படி கொண்டுணரும் இன்பத்தினால் அடையும் சிறு சந்தோசங்களும், அழகை ஆராதிக்கும் உன்னத நிலையையும் நீ இந்த பரபரப்பான வாழ்க்கை தொடரிலே எங்கணம் இழக்கிறாய் என்பதை நீ அறிவாயா?

உனது சிறிய பிஞ்சுகுழந்தையின் மிருதுவான கேசத்தை உனது அன்போடு வருடும் சுகத்தில் அடையும் இன்பம், மகிழ்ச்சி மட்டற்றதாயிற்றே! அந்த மட்டற்ற மகிழ்ச்சியானது, சூரிய ஒளியினால் அடையும் இளஞ்சூட்டு வெப்பத்தினை உணரும் உன் தோட்டத்து மல்லிகை கொண்ட உணர்வினை போன்று உனது பிஞ்சு உள்ளத்தின் சந்தோஷ சங்கேதத்தை கண்ட மகிழ்ச்சியினை நீ அனுபவித்துப்பார் அது என்ன இன்பமென்று! சற்றே நேரமெடுத்து அழ்கடலிலோ, இல்லை ஆற்று முகத்துவாரத்திலோ மூழ்கி கொண்டாடி பூமித்தாயின் நீர்பிள்ளைகளோட விளையாடுவதில் இன்பம் கண்டுணர்ந்து கொள், அப்பொழுது தெரியும் அவ்வின்பம் எத்தகையது என்பது! அதிரும் வாழ்க்கையின் விசைகளோடு ஆடிப்பாடி அது அனைக்க ஆர்ப்பரிக்கும் துடிப்புகளை கண்டுணர்ந்து இன்பம் கொள்! அடைப்பட்டுக் கொண்டிருக்கும் உன்னை நீயே வெளியேற்று, உனது உணர்வுகள் உன் உணர்ச்சியினை எழுப்பட்டும்! அந்த உணர்வின் உணர்ச்சிகள் முழு வாழ்க்கையின் அனைத்து இன்பத்தையும் ஆட்பரிக்க துணைக் கொள்ளட்டும்!

14 comments:

said...

நல்ல பதிவு. நம் ஒவ்வொரு கணத்திலும் நிகழும் சிற்றின்ப வாய்ப்புகளை பறிகொடுத்துவிட்டு இன்பமில்லா வாழ்விதனை என்று புலம்புகிறோம். Wineஐ சுவைக்க ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்கள் என்றால் நாம் தினமும் உண்ணும் உணவை ஒவ்வொரு கவளத்தையும் அதன் நிறம், வாசனை,சுவை என அனுபவித்து உண்கிறோமா ? அவசர அவசரமாக 'உள்ளே' தள்ளுகிறோம். வழியில் காணும் கள்ளமில்லா குழந்தைகளின் புன்சிரிப்பை ஏற்று இரசிக்கிறோமா ?

said...

வாங்க மணியன், இந்த பதிவு எழுத ஒரு விஷேஷ காரணம் இருந்தது! 'பதிவுலகில் பெண்கள்'னு வந்த பதிவிலேயும் அது விளக்கம் கொடுக்க வந்த பதிவிலேயும், ரெளத்திரம், ரணகள்ம்னு ஆயிட்டு கோபதாபம இருந்தப்ப, பெண்களின் நுண்ணர்வுகளுக்கு சரியான புரிதல் இல்லையோன்னு தோணுச்சு! சரி அது என்னான்னு ஆராய வந்தது தான் இந்த பதிவு! ஆனா நீங்க சரியா கண்டுணர்ந்து எழுதிட்டீங்க! ரொம்ப நன்றி!

நீங்களும் 'நாளொரு சினிமான்னு' பொடி வச்சதாலே வந்த விளைவு! ஆனா சினிமா தான் அதிக வாசகர்களை சென்றடைகிறது! இனி வெரும் படம் தான் காட்டப்போறேன்-:)

said...

//நம் உணர்வுகளே கொழுந்து விட்டு எரியும் உணர்ச்சிகளை தூண்ட காரணம்//

ரொம்ப நல்லா இருக்கு... நான் போட்ட படங்களுடன் இந்த விளக்கம் ஒத்து போகுது...

நன்றி

said...

ஆமா, உங்க படங்கள் கொண்ட வாழ்க்கை இதோ இதோ....." என்ற பதிவோட ஒத்து தான் போகுது! நீங்க படம் போட்டதை நான் பாடமாக்கிட்டேன் -:)

said...

வெ.நா,
படித்தேன். இன்னும் ஒரு தடவை வாசித்துவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.

said...

வெற்றி, புரிதலில் அப்படி என்ன கஷ்டமா? எதுக்கும் இன்னொரு முறை படித்து விட்டு கருத்து கூறவும்!

said...

//நான் மேலே கூறிய பொருள் விளக்கம் எதை தெளிவுபடுத்துகிறது என்றால் சிற்றின்பத்திற்கும் ஆன்மீகத்திற்கும் சம்பந்தமுண்டு என்பதைத்தான்! //

இந்த உண்மையை கூடுதல் தீவிரத்துடன் விடுதலை செய்து தினம் பார்க்கும் நமது சமூகச்சீரழிவினைச் சுட்டி எனது பதிவில் சொல்லியிருக்கிறேன்!

said...

உதயகுமார்,
பதிவு கொஞ்சம் நீளமாக இருக்கிறது :))) இருப்பினும், படித்துவிட்டேன்..
என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியுது. ஆனால், அது எப்படி பெண்களுக்கான நுண்ணுணர்வுகளுடன் பொருந்திப் போகிறதென்று புரியலை.

புல்வெளியில் நடப்பதும், தான் பெற்ற, அல்லது பார்த்த குழந்தைகளின் குறும்புகளை ரசிப்பதும், தண்ணீரில் ஆடுவதும், எல்லாம் ஆண்களுக்கும் பிடித்தமான, ரசிக்கக் கூடிய விஷயமென்றே நான் நம்புகிறேன். அப்படி இல்லைங்கிறீங்களா?

நுண்ணுணர்வுகள் பெண்களுக்கு மட்டுமே உரியவை என்ற பொருளுடனான உங்கள் பின்னூட்டத்தினைத் தொடர்ந்த விவாதங்களுக்கான புரிதல் பதிவாக நீங்கள் இதை முன்வைத்திருப்பதால், இந்த கேள்வி அவசியமாகிறது...

said...

//நீங்களும் 'நாளொரு சினிமான்னு' பொடி வச்சதாலே வந்த விளைவு!//
நான் பொடி போடறதுமில்லேங்கோ, வைக்கறதும் இல்லைங்கோ. நெசமாலுமே உங்க துண்டுப் படங்களின் விசிறிங்கோ. கலையில்லாத இலக்கியமா ?

said...

ஹரிஹரன், உங்க பதிவை பார்த்துட்டுத்தான் நீங்க சொன்ன, தொட்ட விஷயங்களையே நானும் எழுதினதாலேயே உங்களை இங்கே வந்து பார்க்கச் சொன்னேன்!

said...

பொன்ஸ், இந்த நுண்ணர்வுகள் எல்லாருக்குமே இருக்கக் கூடியது தான், அதிலே விஷேஷமா அதற்கு பலவகையில் உணர்ந்து செயல்படும் திறன் அதிகம் பெண்களிடையே உண்டு! அதன் முக்கியத்துவத்திற்கு அதிகமா ஆண்கள் மதிப்பு கொடுப்பதில்லை! ஏன்னா இந்த சின்ன சின்ன ஆசைகள், சந்தோஷங்கள்ல அதிகம் திளைப்பவள் பெண் தான்! ஆனா இயந்திரமாகிவிட்ட இப்போதைய வாழ்க்கைத் தொடரிலே இந்த முக்கியமான அம்சங்களை அவங்க விட்டுட்டு எதையோ நோக்கி ஓடுவது இப்ப சகஜமாயிக்கிட்டு வர்து, அதனாலேயே அந்த மென்மையான உணர்வுகளை அவங்க தொலைச்சிட்டாங்களோன்னு ஒரு சந்தேகம் வந்தடுச்சி, அதுவும் பதிவு மற்றும் பின்னோட்ட சங்கதிகளை பார்த்த்ப்ப! மற்ற சந்தோஷங்கள் எவ்வளவோ இருக்குது, அதை கொண்டாட மறந்துவிடாதிங்கன்னு சொல்ல தான் இந்த பதிவு! மற்றபடி நான் சொல்ற இந்த சின்ன சின்ன இன்பம், சந்தோஷம் இருபாலருக்கும் உண்டானது தான்!

said...

//நெசமாலுமே உங்க துண்டுப் படங்களின் விசிறிங்கோ.// அப்படியா, அப்ப சீக்கிரமா நிறைய துண்டுப்படம் காட்றேன்!

said...

அடடா பொன்ஸ் எல்லாம் சொல்லிட்டாப்புல :-) ரசனையில் ஆண் என்ன பெண் என்ன? இயற்கையை ரசிக்க மனசு இருந்தா போதும். என்ன வேலை இருந்தாலும், அந்த மனசு உள்ளவங்க, ஒரு நொடி நின்னு ரசித்துவிட்டுப்போவாங்க.
வெளிகண்டரே, நீங்க சொல்லுகிறாமாதிரி பொண்ணுங்க என்ன சீரியலில் அல்லது அந்தக்கால
ஈரோயினி மாதிரி எப்பொழுதும் குடும்பத்துக்கு உழைக்கும் தியாக பிம்பமா என்ன? யதார்த்த உலக
பெண்கள் நான் பார்த்தவரையில் சின்ன சின்ன சந்தோஷ கணங்களில் வாழ்வை ரசிப்பவள்தான்.
பதிவுலகிலேயே தொட்டார்சிணுங்கி, கோபக்கார பிரகஸ்பதி, ஆரோக்கிய நகைச்சுவையையும் சீரியசாய்
பார்ப்பவர்கள், சணடைக்கு அலைபவர்கள் என்று ஆண்கள் லிஸ்ட் இல்லையா என்ன :-))))))))))))))))

said...

//அடடா பொன்ஸ் எல்லாம் சொல்லிட்டாப்புல :-) //ஆகா, எல்லாரும் கூட்டு சேர்ந்திட்டீங்களா-:)

//யதார்த்த உலக
பெண்கள் நான் பார்த்தவரையில் சின்ன சின்ன சந்தோஷ கணங்களில் வாழ்வை ரசிப்பவள்தான்.// அப்படி இருந்தா ரொம்ப மகிழ்ச்சி தான்!

//பதிவுலகிலேயே தொட்டார்சிணுங்கி, கோபக்கார பிரகஸ்பதி, ஆரோக்கிய நகைச்சுவையையும் சீரியசாய்
பார்ப்பவர்கள், சணடைக்கு அலைபவர்கள் என்று ஆண்கள் லிஸ்ட் இல்லையா என்ன// சபாஷ், இது சரியான போட்டி-:)