Thursday, April 06, 2006

நேனோ டெக்னாலஜி- ஓர் அறிமுகம்

வணக்கம் தோழர்களே! நம்ம நாட்ல இப்ப சூடுபறக்கிற விஷயம் என்னான்னா, இந்த தேர்தல் தான், அம்மா, கருணாநிதி, விஜயகாந்த், அப்புறம் கட்சி, கொடி, இத்யாதின்னு எவ்வளவோ இருக்கு நீங்க மேய்றதுக்கு. நடுவில நான் வேறே வந்து புதுசா எதுவும் அந்த கதை சொல்லவேணாமேன்னுதான், இந்த நேனோ டெக்னாலஜியை பத்தி சொல்ல வந்தேன். இதுவரைக்கும் ஆராய்ச்சியில மட்டும் இருந்த இந்த விஷயம் சீக்கிரமா, நடைமுறைக்கு வரப்போகுது. அதனால உண்டாகும் பலன்கள் பல கோடி. அத்ததான் என்னான்னு சற்று பார்போமா?

இது ஒரு புதுவிஞ்ஞானம். எப்படின்னா, எந்த வஸ்துக்களையுமே, அணு அளவில அனுகிபார்த்தீங்கன்னா, அதிலருந்து உண்டாகிற பொருட்கள், அது ஆர்கானிக்காவோ இல்ல இனார்கானிக்காவோ எப்படி பட்ட வஸ்துவையும் அதன் அணு அமைப்பில போயி மடக்கி புடிச்சாச்சினா, அதான் இந்த நேனோ டெக்னாலஜி. மிகச்சிறிய குட்டி சாமன்கள், நம்ம பேசற செல்போன்லருந்து, ரேடியோ, கம்ப்யூட்டர், இத்யாதிகள் எல்லாம் நம் கையடக்கத்துக்குள் வரும் சமாச்சாரம்.

முதல்ல இந்த நேனோன்னா என்னா அப்படின்னு நீங்க கேட்கிறது புரியுது. அதாவது அளக்கிற சமாச்சாரம். ஒரு மீட்டர் நீளத்தை எவ்வளவு சின்ன சின்னதா கூறு போடமுடியுமோ அவ்வளவு கூறு போடுங்க, அதாவது ஒரு பில்லியன் கூறு, என்ன மில்லியன் பில்லியன்னு அமெரிக்கா காரன் மாதிரி பேசறேன்னு பார்க்கிறீங்களா, பில்லியன்னா, ஒன்னுக்கு அப்புறம் ஒரு ஒன்பது சைபர் போட்டு வரும் தொகை தான் அது, அவ்வளவு கூறு , அதாவது நம்ம ஊரு கணக்குக்கு 100 கோடி. ஆக ஒரு மீட்டர் நீளத்தை 100 கோடியால வகுத்தா, அதாவது 100 கோடி பாகத்தில ஒரு பங்குத்தான் நேனோன்னு சொல்றது. அந்த நீளத்திலதான் இனி எல்லாம். இந்த நீளத்தில தான் அணுக்கள் இருக்குது. அதாவது ஒரு 10 ஹைட்ரஜன் அணுக்களை வரிசையா அடுக்கினா வரக்கூடிய நீளம் தான் அந்த நேனோ நீளம். ம்.. இப்ப புரிஞ்சுதா, எங்கப்பாரு சொலறமாதிரி ஒரு படி பாலு குடிக்குனும் போல, இத்த விளக்கிறதுக்குள்ள!

ஆக இனி வரும் செய்பொருட்கள் எல்லாம் இந்த நீள அகலத்தில வரபோகுது. அந்த மாதிரி கொண்டுவர தொழில்நுட்பம் தான் இந்த நேனோ டெக்னாலஜி. இந்த டெக்னாலஜியால வரக்கூடிய புரட்சி, அந்த காலத்தில நடந்த தொழில் புரட்சிக்கு சமமா வரப்போவதா எல்லாரும் பேசிக்கிறாங்க! 'இனி ஜகம் அகம் எல்லாம் நம் உள்ளங்கை அளவில்' ன்னு நம்மாளுங்க மாதிரி கவிதை எழுத வேண்டியதுதான். இந்த தொழில் புரட்சி, எப்படி இன்னய தேதிக்கு எல்லா துறைகளிலும் வரபோகுதுங்கிறதை கொஞ்சம் விளக்கமா பார்க்கலாமா?

முதல்ல, நமக்கு பூமியிலருந்து கிடைக்கிற இந்த கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு, அவ்வளவு சுலபமா வெளியில கொண்டுவரமுடியற சமாச்சாரமில்ல. பூமி குள்ள எல்லாம் மண்ணுடேயும், தண்ணியோடயும் தான் இந்த எண்ணைய் வளங்க கலந்து கிடக்கு. அத சாமார்த்தியமா பிரிச்சு, தனியா எண்ணெய்ய பிரிச்சு பிறகு சுத்திகரிப்பு ஆலைகளுக்கு அனுப்ப ஏகப்பட்ட செலவு. அதத்தான் நம்ம ஊரு ONGC, OIL ங்கிற கம்பெனிங்க செஞ்சுக்கிட்டுருக்கு. ஆனா இந்த நேனோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த எண்ணெய்களை பிரிச்செடுக்கிற வித்தை வந்திருச்சு, இதுனால என்ன புண்ணியம்னு கேட்கிறீங்களா, இன்னெக்கு கச்சா எண்ணெய் ஒரு பேரல் 60 டாலருக்கு மேலே விக்குது, இந்த தொழில்நுட்ப புண்ணியத்தால, இந்த எண்ணெய் உற்பத்தி பண்ணக்கூடிய விலை குறைஞ்சு, நாலைக்கு நீங்க பெட்ரோல் ஸ்கூட்டருக்கு போட லிட்டர் 25-30 ரூவா குள்ள வர வாய்ப்பிருக்கு. ஏன்னா, அணு அளவில தண்ணி, மண்ணு எல்லாம் சமம்மா பிரிக்க கூடிய சாமான்கள் இந்த நேனோ டெக்னாலாஜியால கண்டுபிடிக்கபட்ட பொருட்களால செய்யப்பட்டு, அதை சுலுவா பிரிச்சி போட உதவபோவது. இதுக்கு மேலே இதை பத்தி தெரிஞ்சுக்குணும்னா, இணையத்தில நிறைய ஞான சுரங்கமே இருக்கு! போய் கூகளை உட்டு ஒரு தட்டு தட்டுங்க, வந்து கொட்டும்!

அடுத்தது மருத்துவத்தில எப்படி உபயோகம்னு பார்க்கலாமா! நீங்க சயின்ஸ் ஃபிக்ஸன் மூவி பார்க்கிற ஆளா இருந்தா, அந்த காலத்தில படம் பார்த்திருப்பீங்க, சிலபல டாக்டருங்க, தங்களை சின்ன உருவமாக்கிக்கிட்டு, வியாதியஸ்தன் உடம்புல ஒடற ரத்தக்குழாய்குள்ள புகுந்து, ரத்த தேங்கி அடச்சிருக்கிறதை திறந்துவிட்டு, அவனை குணமாக்கி, அவங்க வெளியில வந்து பழயபடி தங்க உருவத்துக்கு வந்துடுவாங்க. என்ன, எஸ்ஜே சூர்யா மாதிரி நியூ படக்கதை சொல்றேன்னு நினைக்காதீங்க. இது இப்ப உண்மையாலுமே நடக்க போகுது. இந்த நேனோ டெக்னாலஜியால செய்யப்பட்ட சின்ன ரோபோட்டுகளை உடம்புகுள்ள புகுத்தி, அது எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்துடும், வெளியில இருந்து நம்ம ரிமோட் கன்ட்ரோல்ல இயங்கி, அத்தனையும் கச்சிதமா முடிச்சிடும். இந்த ஓபன் ஹார்ட் சர்ஜரின்னு சொல்றாங்கள்ள, அதெல்லாம், நிமிஷத்தில, நெஞ்ச கிழிக்காம இதயத்தில அடைப்பு எல்லாம் நீக்கவும், அப்புறம் இந்த கேன்சர் வந்தா, அந்த கேசர் செள்ளுங்களை மட்டும் அழிச்சிட்டு வரத்துக்கும் இது பயன்பட போகுது, அப்படியே புல்லரிக்கிதில்லை! இதுதான் அந்த நேனோ டெக்னாலஜியின் மகிமை! இப்ப உடனடியா, 'LabNow Inc'ங்கிற கம்பெனி ஒன்னை கண்டுபிடிச்சிருக்காங்க இந்த தொழில் நுட்பத்தை உபயோகிச்சு, அது என்னான்னா, சும்மா விஷிட்டிங் கார்ட் மாதிரி இருக்கிற சென்சர்ல ஒரு துளி ரத்ததை வச்சிட்டா, அது ரீடர்ல போட்டு எடுத்த ஒரு நிமிஷத்தில உங்க ரத்ததில இருக்கிற வெள்ளை அணுக்கள் அளவை கரக்டா சொல்லிடும் . அதவச்சு மேற்கொண்டு மத்த ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க டாக்டர்ங்களுக்கு உதவும் ஒரு டெஸ்ட் இது. இப்ப வழக்கமா செய்ற மாதிரி லேப்ல கொடுத்து செய்ய குறைஞ்சது பல வாரங்கள் ஆகலாம். (டாக்டர் அம்மா, அய்யாங்க யாராவது, இதெ கன்ஃபார்ம் பண்ணி பின்னோட்டம் போடுங்க!, ம்.. அப்படியாவது இத்த படிச்சு பின்னோட்டம் போடறாகளான்னு பார்ப்போம்!)

அடுத்து இந்த தொழில்நுட்பத்தால செய்யப்பட்ட ஸ்ட்ரக்சரல் பொருட்கள், அதாவது மூல பொருட்கள். இந்த மூல பொருட்களை வச்ச இனி செய்ய போற காருங்க, ஆட்டோமொபைல், லேப்டாப் கம்ப்யூட்ருங்க எல்லாம், கனம் கம்மியாவும் அதிக சக்திவாயந்ததாகவும் இருக்கும், அதுனால இந்த கார், மற்றும் ஆட்டோமொபைல் தொழில்ல ஒரு புது புரட்சியே வரப்போகுது.

அடுத்தது நம்ம அன்றாடம் உபயோகபடுத்த போற எலெக்ட்ரானிக்ஸ்ல எப்படின்னு பார்ப்போம். மொத்த எலெக்ட்ரானிக்ஸ்க்கும் மூலப் பொருள், செமிகண்டக்டர்னு, அந்த பொருளை இந்த நேனோ டெக்னாலாஜியில உருவாக்கப்பட்ட பொருட்களால செஞ்சு, அதிசியக்ககூடிய சக்தி வாய்ந்த கம்ப்யூட்டர், மற்றும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக்ஸ் எல்லாத்திலயும் புரட்சி வரப்போகுது. எப்படின்னா, இப்ப உள்ள பொருட்கள் எல்லாம் எலக்ட்ரான்களை அதிவேகமா அனுப்புனாலும் அந்த வேகம் ஒளியின் வேகம், அதாவது வேகத்தின் எல்லை 'wavelength of light' வரத்தான். ஆனா இந்த எல்லையை உடச்சிக்கிட்டு, வேகமா போகக்கூடிய 'quantum mechanics'ல வர 'quantum dots' கணக்கான பொருட்களால செஞ்சு போடறதால, வேகம் அதிகமாகும். இந்த வேகம் கூடினா, இப்ப இருக்கிற கம்ப்யூட்டரை விட பல மடங்கு அதி வேகம் செயல்படக்கூடியது, ஆனா உருவம் சிறுத்திருக்கும்.( எப்பா, கணணி படிச்ச புண்ணியவான்களா, கொஞ்சம் உதவிக்கு வந்து, மில்லியன், ட்ரில்லியன் இன்ஸ்ட்ரக்ஸன் பர் செகண்டு, கணக்கில, பொதுஜனங்களுக்கு இத பத்தி விளக்குங்கப்பா, உங்க பின்னோட்டத்தை போட்டு! இல்லேன்னா, கவுண்டமணிகனக்கா, அய்யா இப்ப என்ன சொல்றர்னு கேட்க, உச்சி வெயில் மண்டையை பொளக்குதுங்கிறாருங்கிற கதையா போயிடும்!)


இந்த தொழில்நுட்பத்தை உபயோகிச்சு, 'சாம்சங்'கிற கொரிய நாட்டு கம்பெனி, 2006ல ஒரு டிவி ஒன்னு தயாரிச்சு வெளியில வர இருக்கு. அது இந்த நேனோ ட்யூப்ல செஞ்சது. அதல பார்த்தா, சிம்ரனும், ஜோதிகாவும் சும்மா பளிச்னு தெரிவாங்க! அப்படி. இப்பவே, எல்சிடி, பிளாஸ்மான்னு, ஹை டெபனிஷன் டிவின்னு, கண்ணை கவரும் கலர்கள்ல பெரிய பெரிய டிவி வந்து கலக்குது. ஆனா இந்த டிவி வந்த அவ்வளவு தான்.. எல்லாமே கண்ணை பறிக்கும்!

ஆக இந்த நேனோ டெக்னாலஜி இது வரை ஆராய்ச்சிக்கூடத்தில தான் இருந்து வந்தது. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா வெளி வரத்தொடங்கிருக்கு. இது ஒரு பெரிய விஸ்வரூபம் எடுத்து, புது உலகத்தை நமக்கு காண்பிக்க போகுது. அதை பார்க்கும் தூராம் நமக்கு வெகு தொலைவில்லை!

34 comments:

said...

நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள்.

said...

வெளிகண்ட நாதர்
மிக பயனுள்ள பதிவு. இந்த நானோ டெக்னாலஜி குறித்து மூன்று வருடத்தற்கு முன் மாசாசூட் பல்கலைக் கழகம் அடுத்த உருவாகப்போகிற 10 டெக்னாலஜி என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தது. அப்போதுதான் முதன் முதலாக அதைப்பற்றி தெரிந்து கொண்டேன், அதற்கடுத்து 2008இல் சீனாவில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்த நானோ டெக்னாலஜியை உபயோகிக்கப்போவதாக கூறியிருந்தார்கள். அப்படியிருந்தும் இதுபற்றிய போதுமான விவரங்களை சமீபகாலம் வரை அறியாமல் இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன் சுஜாதா விகடனில் இது குறித்து நல்ல முறையில் எழுதியிருந்தார். தங்களுடைய பதிவு மிக அருஐமயாக உள்ளது. எந்த, எந்த துறைகளில் பயன்படப்போகிறது, எப்படி பயன்படப்போகிறது என்று விரிவாக கூறியிருந்திருர்கள். நன்றி.

சரிங்க! வெளிகண்ட நாதர், மக்களுக்கு துரோகம் செய்யுற அரசியல்வாதிகளை இந்த நானோ டெக்னாலஜி மூலம் வழிக்கு கொண்டுவர முடியுமா?

said...

மிகவும் நல்ல பதிவு.

said...

நேனோ தொழில்நுட்ப்பம் உண்மையிலேயே, அறிவியல் கண்டுபிடிப்பில் ஒரு மாபெரும் சாதனை தான்.

said...

//'quantum mechanics'ல வர 'quantum dots' கணக்கான பொருட்களால செஞ்சு போடறதால, வேகம் அதிகமாகும். //

பின்னிட்டீங்க போங்க, நான் ரோசா வசந்த் வெங்கட் கொஞ்சம் இதைப்பற்றி கதைத்திருக்கிறோம் (ரோசா அவருக்கே உரிய பாணியில்) ஏதோ என்னாலான விளம்பரம்.

http://rozavasanth.blogspot.com/2005/12/blog-post_22.html
http://www.domesticatedonion.net/blog/?item=676
http://imohandoss.blogspot.com/2005/12/blog-post_20.html

said...

பொதுவா இப்படி நான் சொல்றதில்லையென்றாலும், இதைப்பற்றி நான் எழுத நினைத்திருந்தேன். ஆனால் சில பல காரணங்களால் விட்டுவிட்டேன். உங்களின் பதிவை இன்னும் நிறைய நேரம் கிடைக்கும் பொழுது ஆர அமர படித்துவிடுகிறேன்.

said...

நல்ல பதிவு. தொடருங்கள்.

said...

வெளிகண்டநாதரே,

நானோ டெக் படிக்க ஏதாவது பாச்சலர்ஸ் அல்லது மாஸ்டர்ஸ் டிகிரி உள்ளதா. இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும்

said...

Good Blog.

Nanotechnology will hit big way in all industries irrespective, it is inevitable.

Nanotechnology could lead to "new productive processes " with greater energy efficiency, better output, a reduced use of natural raw materials and less waste generation.

Nanotechnology is predicted to reach $1 trillion by 2015.

said...

வெளிகண்ட நாதர், நீங்கள் நானோடெக்னாலஜியால் என்னென்னவெல்லாம் நடக்கும் என்று பிரமிப்பூட்டுகிறீர்கள். ரத்தக்குழாயடைப்பைச் சுரண்டுவது, கச்சாவிலிருந்து பெட்ரோலைப் பிரிப்பது முதல் சிம்ரனையும் ஜோதிகாவையும் இன்னும் பளிச் சென்று திரையில் பார்ப்பதுவரை இதில் சாத்தியம் என்று மாத்திரம் சொல்வது சோதிடம்.

ஒரு சின்ன வேண்டுகோள்; இப்படி வெற்றாக ஆரூடங்களை அடுக்கிக்கொண்டு போவதும் கூகிளில் இருந்து படம் சுட்டுப்போடுவதும் அறிவியலும் நுட்பமும் இல்லை. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகியிருக்கிறது (அல்லது அதற்கான துவக்கங்கள் எப்படி நடக்கின்றன) என்பதைப் பற்றியும் கொஞ்சம் எழுதவேண்டும். போகிற போக்கில் name-dropping சொல்லி படிப்பவர்களை மிரட்டுவது அந்தக் காலத்து ஆசாமிகள் பாணி் - sooo outdated. அப்படி மிரண்டவர்கள் ஒருக்காலத்திலும் நானோடெக்கை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள். இந்தமாதிரி ஜக்கம்மா குறிசொல்பவற்களையும் பசித்த புலிகள் தின்னத் தொடங்கியிருக்கின்றன. இன்றைக்குத் தேவை புரியவைப்பது அல்லது ஆர்வமூட்டுவது. ரத்தக்குழாயில் அடைப்பு நீங்கப்போகிறது என்று சொல்லும்பொழுது கொஞ்சம் கொழுப்பு, அதைக் கரைக்கும் விதங்கள் போன்ற சமாச்சாரங்களையும் விரிவாகச் சொன்னால்தான் புண்ணியமாக இருக்கும்.

உங்கள் ஆர்வத்திற்குப் பாராட்டு (கில்லியிலும் பரிந்துரைத்திருக்கிறேன்), ஆனால் அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியது முக்கியம்.

அதெல்லாம் கிடக்கட்டும்; அறிவியல் சமாச்சாரத்தை எழுதும்பொழுது கிளுகிளுப்பு வேண்டுமென்றால் அதற்கு இப்பொழுது சிம்ரனையும் ஜோதிகாவையும் நம்பிப் பிரயோசனமில்லை; இது அஸின் காலம். :)

said...

//போகிற போக்கில் name-dropping சொல்லி படிப்பவர்களை மிரட்டுவது அந்தக் காலத்து ஆசாமிகள் பாணி் - sooo outdated. அப்படி மிரண்டவர்கள் ஒருக்காலத்திலும் நானோடெக்கை புரிந்துகொள்ள முயற்சிக்க மாட்டார்கள். இந்தமாதிரி ஜக்கம்மா குறிசொல்பவற்களையும் பசித்த புலிகள் தின்னத் தொடங்கியிருக்கின்றன. //

உங்கள் அரசியலில் பாவம் ஏன் அந்த பசித்த புலியை இழுக்கிறீர்கள். இந்த சாதாரண மேட்டரில் எங்கிருந்து பசித்த புலி வந்தது. அந்தாளை கொஞ்சம் விட்டுடுங்கப்பா. யாரைன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்.

said...

தேவையான தொடர்

said...

வருகை தந்த அனைவருக்கும் நன்றி!

said...

வெங்கட், உங்கள் கில்லி பரிந்துரைக்கு நன்றி. நான் நேனோ டெக்னாலஜி பற்றி ஆரூடம் கூற முயலவில்லை, பரவலாக வரும் நிலையான விஞ்ஞானச் செய்திகளை தான் தொகுத்துக் கூறி உள்ளேன். வெறும் name-dropping பாணி எழுத்துக்கள் போல அல்லாமல் அந்தந்த துறையில் எவ்வாறு இந்த தொழில்நுட்ப சாத்தியங்கள் பெறுகின்றன என்பதற்கு சில உதாரணங்களை கூறி உள்ளேன். நான் வேலை செய்து கொண்டிருக்கும் OIL Sands Project தொழில்நுட்பத்தில் இதன் சாத்தியக் கூறுகளை எழுத வேண்டுமானால், தனி தொடர் தேவைப்படும். மேற்கொண்டு இந்த Blog என்பது ஒரு பொதுஜன தொடர்பு சாதனம். அதில் புது தொழில்நுட்ப வளர்ச்சிகளை வழிமொழிந்து, அத்துறை வல்லுநர்கள் மேற்கொண்டு ஆராய்ந்து விவாதம் நடத்தி பல விஷயங்களை பொதுஜனம் புரியும் படி ஆற்பறித்தல் மிக்க நன்று. அதைத்தான் செய்ய முயற்சித்தேன். நான் ஏற்கனேவே கூறியது போல, எனை தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை பதிவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல, என் பதிவு புரியவைக்க முயற்சிக்காவிடினும் ஆர்வமூட்டமாவதை செய்ததே, மிக்க நன்றி.

மேற்கொண்டு, இந்த ரத்தக்குழாய் அடைப்பை பற்றி சொல்லும் பொழுது, கொழுப்பு, கரைக்கும் விதம் பற்றி கூற சொல்லி இருக்கிறீர்கள், ஆஞ்சியோகிராம் செய்து, அடைப்பு எதும் இல்லை, அப்பாடா என்று இருக்கும் போது, இதை எழுதி வேதனை படச் சொல்லுகிறீர்களே!
நிறைய டாக்டர்ங்க, பெரிசுங்க இந்த blog உலகத்தில இருக்குங்களே! அதை சொல்ல.

அப்புறம், அஸினையும் விவரமா சேர்த்துக்கிறேன் இனிமே:-)

said...

சிவா, அனேகமா 'University of Calgay'யே இந்த நேனோ டெக்னாலஜி கோர்ஸ் நடத்தும் என்று நினைக்கிறேன்!

said...

கிறுக்கன், இன்னும் நேனோ டெக்னாலஜி மூலபொருள், இல்ல படிமங்களை வச்சு கம்ப்யூட்டர் சிப்பு செய்ய ஆரம்பிக்கலை, எல்லாமே செமிக்கண்டக்டர்ஸ் தான். அதில பல லட்சம், இல்ல கோடி டிரான்ஸிஸ்டர்களை மிக மெல்லிய வேஃபர்கள்ல பதிச்சு செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. இதில பெரிய சேலெஞ்சுங்கிரது உஷ்ணம் தணிக்கும் முறைகள் தான். அதுக்கு பலகோடி செலவழிச்சு இன்டெல் நிறுவனம் 'Heat dissipation' முறைகளை செயல்படுத்தி அதை வெற்றிகரமா செய்ய ஆரம்பிச்சிட்டாங்க. இந்த நேனோ மெட்டீர்யல்ஸ் இந்த சிப்புங்களுக்கு தேவையானது, ஆராய்ச்சிக்கூடத்தில கடைசி கட்டத்தில இருக்குது.

said...

வெங்கட், உங்க இளையராஜாவின் மூன்று அன்னங்கள் மற்றூம் இப்போ எழுதினீங்களே அந்த வெளிநாட்டு பாட்டோட analysis, படிச்சேன். நீங்க படிச்சது கோயம்புத்தூரா? ஏன் கேட்கிறேனா, எனக்கு ஜீனியரா இருந்த வெங்கட்னு ஒருத்தனும், இந்த இளையராஜா பாட்டை சாஸ்திரிய சங்கீத சாயல்ல இருக்கிறதை அவங்க அப்பா விவரிச்சு சொல்ற்தை கேட்டிருக்கேன். அதனால, கொஞ்சம் ஊர்ஜித படுத்திக்கத்தான் கேட்டேன்!

said...

எப்பா மோகன்தாஸு, quanatum mechanics ல வந்த புலி கதையை படிச்சேன்! வெங்கட்டோட பீடிகை என்னான்னு புரிஞ்சு போச்சு,
ஆனா, இது காலைல படிச்சு சாய்ந்திரம் போட்ட பதிவில்ல அப்பு. இந்த டெக்னாலஜியை என் பொண்ணு ஒம்பதாம் கிளாஸ் படிக்கிறப்பவே, ஏதோ செமினார் போட மெட்டீரியல் வேணும்னு என்னை தொந்தரவு பண்ணப்ப, மூணு வருஷம் முன்னாடி தேடி அலஞ்ச சங்கதி தான், ஆமா சொல்லிப்புட்டேன்!

said...

வெளிகண்ட நாதரே, இந்த மாதிரி தலைப்புகள்ல நீங்க எழுதினா படிக்க இன்னும் ஆர்வமா இருக்கேன். தொடருங்கள். உங்கள் OIL Sands Project பற்றி எழுதினா இன்னும் பொருத்தமாகவும் நிரைவாகவும் இருக்கும். இந்த மாதிரி ஆர்வமுட்டும் பதிவுகளும் தாக்கம் ஏற்படுத்தும் பதிவுகளும் பாதியில் இதோட நின்றுவிடுகிறது. நான் இதை முதல் பாகமாக எடுத்துக்கறேன். மேற்கொண்டு விரைவில் எழுதவும்.

said...

could you pls write more about this //OIL Sands Project // and also abt alberta?

-Mathy

said...

//எனை தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்களை பதிவதில் எனக்கு மகிழ்ச்சி. நீங்கள் கூறியது போல, என் பதிவு புரியவைக்க முயற்சிக்காவிடினும் ஆர்வமூட்டமாவதை செய்ததே, மிக்க நன்றி.//
மிகச் சரி. வலைப்பதிவு என்பதே நம்மைப் பாதித்த நிகழ்வுகளையும் செய்திகளையும் பகிர்ந்து கொள்வதே. ஒரு துறை வல்லுனர்கள்(Subject Matter Experts) விஞ்ஞான சஞ்சிகையில் வேண்டுமானால் ஆதாரத்துடன் எழுதலாம். பொது தளத்தில் மேலோட்டமாக அறிமுகம் செய்விப்பது வரவேற்கப் பட வேண்டியதே.நீங்கள் கற்றவரை பின்னூட்டத்தில் விவரிக்க அழைத்தபிறகும் name dropping பாணியென்று சாடுவது தவறு.

said...

யங்கா, வருகைக்கு நன்றி, கண்டிப்பா, Oil Sands project பற்றி எழுதுகிறேன்!

said...

கண்டிப்பா எழுதுறேன் மதி! இப்ப கருப்பு பொண்ணு விளையும் பூமி இந்த அல்பர்ட்டா மாகாணம், எண்ணைய் பொருளாதாரத்தில உச்சத்தில இருக்கு. கனடா இப்ப கிழக்க விட்டுட்டு மேற்கு பார்க்க ஆரம்பிச்சிருக்கு! விரிவா இந்த மண்ணுல புதைஞ்ச எண்ணையை பற்றியும், இந்த வடாமெரிக்காவின் குவெய்த் பற்றியும் பதிவு கண்டிப்பா எழுதறேன்!

said...

வாங்க மணியன், நம் பாதிப்புகளை பதிவாக்கிறதிலே ஒரு தனி சுகம் தான். கொஞ்சம் ஜாஸ்தி விஞ்ஞானம் எழுதிட்டா படிக்க போரடிச்சுடும்தான், தட்டிவிட்டுட்டு நிபுணர்கள் கையில கொடுத்திடலாமுன்னு. வெங்கட்டு சொன்ன மாதிரி இன்னுமும் கொஞ்சம் நிறைய எழுதி புரியவைக்கலாம்!

said...

ஆகா இது என்ன புது உள்குத்து. //இது காலைல படிச்சு சாய்ந்திரம் போட்ட பதிவில்ல அப்பு. //

என்னை சொல்றீங்கன்னா ஒரு விஷயம் நானும் காலையில் படித்து சாயந்திரம் போடலை. அடுத்த நாள் போட்டேன். :-) இல்லை வாத்தியாரை சொல்றீங்கன்னா நீங்க இன்னுமொறுதரம் திருத்திகிறது நல்லது.

said...

வெளிகண்டநாதரே,


எண்ணை மணலைப் பற்றி எழுதும்போது என்னையும் அழைத்துக் கொள்ளுங்கள். என்னால் முடிந்த வரை உதவுகிறேன். நான் எண்ணை மணலில் விளையாடுபவன்.

சத்தியமா சொல்றேன் "என் அல்பெர்ட்டா அனுபவுங்கள்" என பிற்காலத்தில் எழுதி உங்களைத் திட்டமாட்டேன், ஏன்னா நானும் அப்போ அல்பெர்ட்டன் ஆயிருப்பேன்.


ஹி..ஹி..ஹி


அன்புடன்

கால்கரி சிவா

said...

எப்பா தாஸூ, நீர் தானே எல்லாத்தையும் படிக்க சொல்லி உரல் கொடுத்தீரு! இப்ப உள்குத்துன்னா, எப்படி?

said...

சிவா, எண்ணைய் மணலை சேர்ந்தே எழுதுவோம். அல்பெர்ட்டா அனுபவங்கள் இனிப்பாதானே இருக்கும்??

said...

விஞ்ஞான சாத்தியக்கூறுகளை கூறுவது சோதிடம் அல்லது குறி சொல்வது போல என்று கூறுவது நன்று அன்று... அந்த சோதிடம் அடுத்த வருடமே நிஜமாகக்கூடும் என்பதை மறுக்கக்கூடாது...

கொஞ்ச நாளைக்கு அதாவது ஒரு நான்கு வருடங்களுக்குமுன் எஸ்.எம்.எஸ் இவ்வளவு பிரபலமடையும் என்று யாரும் கணித்திருக்கக்கூட மாட்டார்கள்... ஆனால் பாருங்கள்...புறாக்காலில் தகவலை அனுப்பிய காலம்போய் காற்றின்காலில் எக்கச்சக்க தகவலை கட்டியனுப்பிக்கொண்டிருக்கிறோம்...:-) (காதலுக்குக்கூட உதவுகிறது)

ஆராய்ச்சி அளவிலேயே உள்ள ஒரு தொழில்நுட்பத்தை பற்றி ஒரு முன்னுரை எழுதியமைக்காக குமாருக்கு என் நன்றி...

அன்புடன்
கார்த்திகேயன்

said...

சரியாக சொன்னீர்கள் கார்த்திகேயன், புறா விடு தூது போய் இன்று காற்று விடு தூதாகிவிட்ட காலகட்டத்திற்கு இது போன்ற தொழில் நுட்பங்களே உதவி. இனி எப்படி நம் வாழ்க்கை முறை, இந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் மாறபோகிறதென்பதை பற்றி தெரிந்து கொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருந்தால் நன்று. இதை வெறும் ஆருடம் என்றோ, ஜோதிடம் என்றோ இன்று கூறினாலும், அது நடந்தேறும் காலகட்டங்களை நம் வாழ்நாளுக்குள் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது!

said...

மாதாமாதம் வரும் டிஸ்கவர் மாத இதழில் நேனோ டெக்னாலஜி பற்றி படித்தது தான். அப்புறம் இணையத்தில் தேடிப் படிக்க வேண்டும் என்று எண்ணினாலும் விருப்பத்துடன் படிப்பதற்கு இதுபோல் ஆயிரம் இருப்பதால் இதனை இன்னும் படிக்கவில்லை. உங்கள் பதிவில் நல்ல அறிமுகம் கொடுத்திருக்கிறீர்கள். வெங்கட் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை. புரிவதற்கு அவர் பதிவுகளைப் படிக்கவேண்டுமோ என்னவோ? நேரம் கிடைக்கும் போது படிக்கிறேன். :-)

said...

கார்த்திகேயன், காதலுக்கு கூட உதவுகிறது என்று சொல்கிறீர்கள்? எனக்குத் தெரிந்த வரை எஸ். எம். எஸ். காதலுக்கு உதவுவது போல் மற்ற எந்த விஷயத்துக்கும் உதவுவதில்லை. :-)

said...

குமரன், எஸ்.எம்.எஸ் விடு தூது பண்ணி காதல் ஏதும் உண்டா, கரெக்டா சொல்றீங்களே-:)

said...

A news in The Hindu about Nanotechnology. "Nanotechnology may find disease before it starts "

http://www.hindu.com/thehindu/holnus/008200604251440.htm