Friday, April 14, 2006

சித்திரை பொறந்திடுச்சு!

பள்ளி நாட்களில் இந்த சித்திரை பொறப்புங்கிறது நான் ரொம்ப பெரிசா எதிர் பார்க்கிற ஒன்னு. ஏன்னா, பொதுவா அந்த வருஷ படிப்பு முதல்ல முடிஞ்சு, பள்ளிக்கூடம் லீவு விட்டு விடும். படிப்பில்ல இனி, 'கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவுன்னு' பாட்டு பாடிகிட்டு ஒரே ஜாலியா இரண்டு மாசம் சுத்தலாங்கிறதால ஒரே மகிழ்ச்சி! அப்புறம் எங்க மாரியம்மன் கோவில் திருவிழா ஆரம்பம். கரகம், ஆட்டம் பாட்டம்னு ரொம்ப ஜாலியா இருக்கும். தினம் சாய்ந்திரம் கோவில்ல சிங்காரிச்சு சாமிசிலை வச்சு கூட்டம் கூட்டமா வர ஜனத்தை பார்க்கிறதில ஒரு ஆனந்தம். தினம் சாயந்திரம் பாட்டு, கச்சேரி அமர்க்களமா இருக்கும்!

அப்புறம் தமிழ் வருஷபொறப்பு.நல்ல வடை பாயசத்தோட சாப்பாடு வீட்ல போடுவாங்க. காலையிலே எல்லாம் நல்ல விளையாடிட்டு, மத்தியான சாப்பாடு செஞ்சு சாமி கும்புட்டுட்டு, சாப்பிட உட்காரனும். ஆனா அதுக்கு முன்னே ஒரு சோகம். சாமிக்கு எல்லா சாப்பாட்டையும் வச்சு கும்பிட்டு விட்டு, அதை கொஞ்சம் எடுத்து முதல்ல காக்காய்க்கு வச்சிட்டுத் தான் பிறகே நமக்கு சாப்பாடு. ஆனா அப்பதான் காக்கா சட்டுன்னு வந்து சாப்பிட்டுட்டு போகாது. சும்மா தொண்டகிழிய கா..கா..ன்னு கூப்பிட்டாலும் துரை ரொம்ப லேட்டாதான் வருவார். நமக்கோ பசி வயத்தை கிள்ளும்! மத்த நாள்ல வடகம் போட்டு காயவச்சா எந்நேரமும் ஐயா அங்கே உட்கார்ந்து தின்னுகிட்டு இருப்பார். அப்பெல்லாம் அவரை விரட்டு விரட்டுன்னு விரட்டிட்டு, ஆனா பாருங்க சித்திரை பொறப்பன்னைக்கு தேவுடு காத்துக்கிட்டு இருக்கணும். ராஜா கடைசியிலே எங்கிருந்தோ வந்து ஜம்முன்னு ரெண்டு பருக்கை எடுத்து திண்ணுட்டு பறந்து போயிடுவார். நம்ம அதான் சமயம்னு உள்ள போய் வடையை லபக்குன்னு எடுத்து போட்டுகிட்டு, பிறகு இலையிலே உட்காருவோம்!

ஆக இன்னைக்கு சித்திரப் பொறப்பு, தமிழ் புத்தாண்டு தொடங்குது. இனி ரெண்டு மாசம் ஒரே வெயில் தான். அக்னி நட்சத்திரம், முன்னேழு, பின்னேழு எல்லாம் பார்க்கப் போறீங்க! அப்புறம் வெயில், மழை, குளிர் எல்லாம் வரநேரத்தில வர்றதுதானே! ஆக தமிழ் மணத்தில வரும் அனைத்து நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். வீட்ல வடை பாயசதோட சாப்பிடுங்க நல்லா!

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

9 comments:

said...

நல்ல பசியோடு உட்கார்ந்து கொண்டு இருக்கையில் இப்படி விருந்து சாப்பாடு படம் போட்டிருக்கிறீர்கள்.:-)

said...

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்! வெளிகண்ட நாதரே

said...

விஜயன், உங்களுக்கும் என் மனம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

said...

மோகன்தாஸ், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கிட்டு வடை பாயசத்தோட சாப்பிடுங்க!

said...

Excellent!!

This blog makes me to remember my childhood!!!

said...

சிறப்பான பதிவு
தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆரோக்கியம்

http://ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it.

said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.

said...

இலை சாப்பாட்ட காமிச்சி என் வயிற்றெரிச்சல கொட்டிகிறதுல உங்களுக்கு சந்தோஷமா நண்பரே!

தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

said...

செயகுமார்,
தலைவாழை இலைப் போட்டு விருந்து வைப்பேன்
மன்னா உன் வருகைக்கு தவம் இருப்பேன்

அப்படின்னு யாரும் இன்னும் சிந்து பாடலையா உங்க கிட்ட!