Wednesday, April 19, 2006

சின்னபயலேயும் திருட்டுபயலேயும்!

'சின்னபயலே சின்னபயலே சேதி கேளடா'ங்கிற பட்டுகோட்டை கல்யாணசுந்தரத்தோட பாட்டை உல்ட்டா பண்ணி வைரமுத்து எழுதிய 'திருட்டுபயலே திருட்டுபயலே'ங்கிற பாட்டோட ஆரம்பம் ஆகிறது இந்த திருட்டுபயலே படம். எம்ஜீஆருக்கு நல்லா சின்னபிள்ளைங்களுக்கு புத்திமதி சொல்லி அழகா எழுதிகொடுத்த பாட்டை குட்டிசுவரு பண்ணி இப்படி ஒரு பாட்டு, என்ன விழிப்புணர்ச்சி ஏற்படுத்தன்னு தெரியல்லை! இந்த ரீமிக்ஸ்ல தொட்டால் பூமலரும்ங்கிற வாலியோட பாட்டை திருப்பி போட்டு இந்த எஸ்ஜே சூர்யா பண்ண கருமத்தை தான் இவெங்களும் பண்ணி இருக்காங்க! அந்த காலத்தில நயத்தோட காதலை சொல்லியும், அறிவுரைகள் சொல்லியும் அழகா வந்த தமிழ் பாட்டுகளின் லட்சணம் இப்ப இப்படி இருக்கு! சரி பாட்டு தான் இந்த கந்தரகோலம்னாலும், படம் என்னான்னு பார்க்கலாமுன்னு உட்கார்ந்தா, ம்.. எல்லாம் கலிகாலம்!

படத்தோட ஹீரோவை அவரு அஞ்சாம் கிளாஸ் படிக்கிறப்பவே, அவங்க அப்பா தனக்கு வரும் லஞ்சப் பணத்தை வாங்கி வர அனுப்பி, சின்னபிஞ்சு மனசுல நஞ்சை விதச்சிடுறாரு! நல்லா படிச்ச பையன் காசு கொடுத்தா எல்லாம் கிடைக்கும்னும், லஞ்ச காசை திருடி கெட்டுப் போயி ஊதாரி ஆயி போய்ட்டானாம். பிறகு பெரியவனா வளர்ந்து, ஒரு தோசை கிடைக்கிலன்னு தம்பிய அடிச்சு போட்டுட்டு அவன் மாமா வீட்டுக்கு மெட்ராஸ் வந்து, அங்க திருட்டுத்தனமா ஒரு பணக்காரன் பொண்டாட்டியை அவ எசகுபிசகா கோல்ஃப் விளையாடினதை, அதாங்க புருஷன் ஃபிரண்டோட சல்சா பண்ணதை நம்ம டாக்டர் பிரகாஷ் மாதிரி படம் எடுத்து, அத வச்சி பிளாக்மெயில் பண்றான். அவள் செலவில ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல மஜா பண்ணிக்கிட்டு அப்படியே ஆஸ்திரேலையா சுத்தி பார்க்கவும் புறப்பட்டு போறான்! அங்கனதான் கதைக்கு முடிச்சு. அப்படி ஆஸ்திரேலியா போனப்ப, வெறும் வெள்ளக்காரிங்களை பார்த்து போரடிச்சு, நம்மூரை பொண்ணை தேடறப்பதான், நம்ம சோனியா அகர்வால் வந்து பீச்சுல குளிக்க, நம்ம ஹீரோ துரத்தி துரத்தி அவளை காதலிக்கிறாராம். அப்புறம் சோனியாவை அந்த பணக்காரிதான் செட்டப் பண்ணி அனுப்பி வச்சாளாம். அதாவது ஹீரோவை காதல் வலையில விழவச்சு, அவனை வழிக்கி கொண்டுவர பார்க்கிறாளாம். எப்படி கதை பாருங்க!

கடைசியில ஹீரோ சோனியா ஒரு வேலைக்காரி பொண்ணுன்னு தெரிஞ்சும், அந்த பணக்காரி செட்டப் பண்ண ஆளும் தெரிஞ்சும் விடாம காதிலிக்கிறாராம். ஹீரோ தொடர்ந்து பிளாக்மெயில் பண்ணி காசை கறக்கிறாராம். அந்த வேலைக்காரி மகளையும் தொடர்ந்து காதலிக்கிறராம்.பிறகு காதலி சொல்லி திருந்தி அந்த அஜால் குஜால் கேசட்டை அந்த பணக்காரிக்கிட்டேயே திருப்பி கொடுத்துட்டு உழச்சு வாழ தயாரானப்ப, எல்லா விஷயமும் அந்த பணக்காரனுக்கு தெரிஞ்சு, பொண்டாட்டியை மன்னிச்சுட்டு, ஹீரோவை போட்டு தள்ளுறான், குடும்பம் விஷயம் தெரிஞ்சுப் போச்சேன்னு. அப்புறம் சுபம்! கரும்மம்டா சாமி!

படத்திலே விவேக் இலங்கை தமிழரா பண்ற காமடி கொஞ்சம் பரவாயில்லை. அப்புறம் அந்த திருட்டு வீடியோ புடிச்சு, நானும் காசு சம்பாரிக்கப்போறேன்னு, சீரியல் எடுக்கறவங்களையும், இப்ப எடுக்கற சீரியலுங்களையும் நக்கலடிச்சு வர காமடி ரசிக்கும் படியா இருக்கு. இதுல வர சில டைலாக்கு, சொல்லவேணாம், உதாரணத்துக்கு, 'ஒரு தடவை பண்ண தப்பு, அதை தொடர்ந்து பண்ணா அது ஸ்டைல்'.

இந்த சோனியா பொண்ணு, இந்த மாதிரி முரட்டுதனமா, வெட்டியா திரியற ஆம்பளை பசங்களை திருத்தி நல்லவழியில வாழவைக்க முயற்சி செய்யும் காதலியா நல்லாவே நடிக்குது. அந்த பொண்ணுக்கு இயற்கையாவே இந்த மாதிரி லவ்வர் கேரக்கெடர், அதுவும் புத்தி சொல்லி திருத்தும் அந்த கேரக்டர் ரொம்ப சாதரணமா வருது. நான் ஏற்கனவே 7 ரெயின்போ காலனியிலயும், காதல் கொண்டேன்லயும், அதே சேட்ல வர கேரக்டர்ஸ்ஸ அழகா பண்ணுது இந்த பொண்ணு! இது மாதிரி வாழ கத்து கொடுக்கும் காதல் எவ்வளவோ மேல், வெட்டியா பீச்சு, சினிமான்னு சுத்தி வந்து அந்த வாலிப வயசுக்கே உண்டான கவர்ச்சி, காமத்தால அனுபிவிக்கும் உடல்சுகத்தை விட ஒருத்தி ஒருத்தனை திருத்தி நல்ல வழியில வாழ்க்கை வாழவச்சு, கடைசியா இந்த சுகத்தை அவனுக்கு கொடுப்போமுன்னு ஒரு போல்டா சொன்ன செல்வராகவன் அப்ரோச், அட இது புதுசா, பார்க்க நல்லா இருக்கேன்னு தோணுச்சு!

அப்படி ஏதாவது கதை பண்ணி சொல்லி இருந்தா நல்லா இருந்திருக்கும், ஆனா இந்த திருட்டுபயலே, ம்.. என்னமோ இந்த டைரக்டர் சுசி நம்ம மணிக்கிட்ட வேலை செஞ்ச ஆளாமே. அந்தாளும் படத்தில ஒரு டிடெக்டிவா நடிச்சிருக்காரு! சுவாராசியாமா கதை பண்ணனும்னா எப்படி வேணும்னாலும் பண்ணலாம் போலருக்கு!

8 comments:

said...

நாரதரே,
எனக்கு என்னமே அந்த படம் நீங்க செல்கிற அளவிற்கு அவ்வளவு மோசமாக தெரியவில்லை. கொஞ்சம் விரசமும் ஆபாசமும் தவிர்த்து இருக்கலாம். படம் போறதே தெரியவில்லை, கதை இருக்கிறது, நல்ல திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள், முக்கியமாக ஹீரோயிசம் இல்லாத சவுண்டு விட்டுட்டு திரியாத படம்.

said...

ஹீரோயிசம் இல்லாம வேணும்னா இருக்கலாம். படத்துக்குண்டான கதை எப்படி? இந்த கலாபக்காதலன் மாதிரி தான். நீங்கள் எல்லாம் விரும்பி பார்க்கறீங்கன்னு தான் இந்த மாதிரியே படங்கள் வருது போல!

said...

//கொஞ்சம் விரசமும் ஆபாசமும் தவிர்த்து இருக்கலாம். //

எனக்கு தெரிஞ்சு இது கத்தி மேலே நடக்குற கதை. இந்த அளவு கோடு தாண்டாமல் எடுத்ததே நல்ல விடயம்.

said...

அஞ்சாம் கிளாஸ் படிக்கிற பையன்களுக்கு கொஞ்சம் காசு கிடைச்சா எப்பிடி ஒரு குத்தாட்டம் பார்க்கணும் என்று தோன்றும்?

மனசும் மனசும் கலக்கிற காதல்லதான் சுகம் என்றெல்லா ஜீவன் சொன்னவர் தாத்ஸ் அதான் மாளவிகா அனுப்பின ஆள் என்று தெரிஞ்சும் தொடர்ந்து லவ் பண்றாரு.

விவேக்குக்கு எப்பிடித்தான் யோகராசான்னு தேடிப் பேர் வைச்சினமோ தெரியேல்ல:-)

தாத்ஸ் பாட்டுகளைப் பற்றி சொல்லக்காணோம்?? காசு காசு என்றொரு பாட்டிருந்திச்சே பிடிக்கலையோ உங்களுக்கு?

said...

//அஞ்சாம் கிளாஸ் படிக்கிற பையன்களுக்கு கொஞ்சம் காசு கிடைச்சா எப்பிடி ஒரு குத்தாட்டம் பார்க்கணும் என்று தோன்றும்? //
சின்ன பொண்ணு உனக்கு சரியா கேள்விகேட்க தோணுது பாரு, சரியான் ஆளு தான் நீ!

//விவேக்குக்கு எப்பிடித்தான் யோகராசான்னு தேடிப் பேர் வைச்சினமோ தெரியேல்ல//ஆமா உங்கண்ட தமிழுதானே யோகராசன் பேசிறாரு, பேரு புடிக்கலையா இல்ல சோக்கு புடிக்கலையா?

பாட்டு அப்படி ஒன்னும் பிரமாதமில்ல கண்ணு!

said...

அய்யா நாதரே, படம் இப்பதான் பாத்து முடிச்சு தமிழ்மணத்த திறந்த நீங்க எழுதி இருக்கீங்க...
சொல்ற அளவுக்கு மோசமில்லையே...தவறுகள் எப்படி ஆரம்பிக்குதுன்னு சரியா தான சொல்லிருக்காரு. 100 ருபா திருட்டுல ஆரம்பிச்சு கொலை வரைக்கும் கொண்டு வந்து விட்டுதுல்ல.
திருட்டு பயலே பாடல் சரிய பயன் படுத்த பட்டிருக்கு. நீர் ஜீனோம், ஐஸ் பாறைன்னு மூளைய உபயோக படுத்தற மாதிரி எழுதும்.
சினிமாவெல்லாம் எங்கள மாதிரி ஆளுகளுக்கு தான் லாயக்கு. உமக்கில்ல

said...

என் பார்வையிலும் இப்படம் பராவாயில்லை ரகம் தான்.
சினேகிதி கேட்ட கேள்வி நியாயம். அது வலிந்து திணிக்கப்பட்ட காட்சி.
அதேபோல் ஒழுங்காகப் படிக்காத ஒருவன் எப்படி பெரிய பணக்காரப் பந்தா காட்டுகிறான் என்பதும், அவனது ஆங்கிலமும் நெருடலே.

தனிப்பட்ட அளவில் எந்த Re-Mix உம் எனக்குப் பிடிக்காதவை. அந்தவகையில்தான் திருட்டுப் பயலே பாட்டும். மற்றும்படி அது சொல்லும் கருத்தையோ சொற்களையோ வைத்துப் பாடலைக் குறைசொல்லும் நிலையை தமிழ்ச்சினிமா தாண்டி வந்து நீண்டகாலம் ஆகிவிட்டது. (சின்னப்பயலே காலத்திலிருந்தே)

திரைக்கதையமைப்பு, இயக்கம் எல்லாம் நன்றாகவே வந்துள்ளன. இன்றைய முன்னணி நடிகர்கள் பலரால் ஒழுங்காகச் செய்ய முடியாத பாத்திரம் அல்லது அவர்கள் நடிக்க விரும்பாத பாத்திரம்.
ஒப்பிட்டுத்தானே எதையும் எடைபோட முடியும்?
ஒரே வாய்ச்சவடாலுக்கும் அரிவாள் ரத்தங்களுக்குமிடையில் இப்படி நிதானமாக ரசிக்கத்தக்கதாக சில படங்கள் வருவதால் கடுமையாகத் திட்டத்தோன்றவில்லை.
ஒரே பரிதாபம், எப்படி இருந்த அப்பாஸ் இப்படி ஆயிட்டாரே?

said...

யோகராசா என்பது மிகமிகப் பொருத்தமான பெயர்.
அதைத்தான் சினேகிதியும் சொல்லியிருக்கிறா எண்டு நினைக்கிறன்.
(ஆனா பேச்சு முழுப்பொருத்தமில்லையெண்டது என்ர கருத்து)