Sunday, April 23, 2006

மனிதனின் மச்சாவதாரம் - பரிணாம வளர்ச்சி!!

இந்த பதிவோட தலைப்பை 'மனிதனின் மச்சாவதாரம் - பரிணாம வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்பு!' ன்னு படிங்க. இவ்வளவு பெரிய தலைப்பு வச்சா, ப்ளாக்கர் டேட்டே பேஸ் அதை கடிச்சு துப்பிடுச்சு! சரி விஷயத்துக்கு வருவோம். நமக்கு ரொம்ப காலமா தெரிஞ்ச ஒன்னு 'குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்!' சமீபத்தில இதை பத்தி பதிவுகள் ரொம்ப சுவாரசியமா தமிழ் மணத்தில மக்கள் எழுதி 'அறிவியலா, ஆன்மீகமா' ஒரு பட்டி மன்றமே நடத்தினாங்க! இந்த பதிவுகளை படிக்காதவங்களுக்கு கீழே சில சுட்டிகளை தரேன். நம்ம பதிவை படிக்கும் முன்னே முன்னோட்டமா கொஞ்சம் என்னதான் எழுதி இருக்காங்கன்னு படிச்சிட்டு மேற்கொண்டு நம்ம பதிவை படிச்சா நல்லாயிருக்கும்!

முதல்ல இந்த கவனப்பிரியன், சாரி சுவனப்பிரியன் எழுதிய பதிவு 'மனிதன் குரங்கிலிருந்தா பிறந்தான்?' இது அவரா போட்டதா, இல்ல சுட்டதான்னு தெரியல்லை, ஏன்னா அதே பதிவு முதல்லயே வந்தது அபு உமர்ங்கிறவரு எழுதிய 'மனிதன் குரங்கிலிருந்து தோன்றினானா?' பதிவிலருந்து! அப்புறம் இதுக்கு பின்னோட்டம் போட்டு பதிலடி கொடுத்திட்டு, பிறகு தனியா பதிவு போட்டாரு நம்ம தெக்கிகாட்டான், அவரு எழுதின '*பரிணாமம்,* சுவனப்ரியன், மற்றும் தெகா...' பதிவையும் பார்த்துட்டு வாங்க. இதன்னில, நம்ம சூப்பர் சுப்ரா எழுதிய 'இந்து மதத்தில் அறிவியல் (1)- பரிணாம வளர்ச்சி' பதிவையும் பார்த்திட்டு மேலே படிக்க வாங்க!(நீங்க கொஞ்சம் சந்தோஷப் பட்டுக்கலாம், நீங்க சொன்ன பரிணாம வளர்ச்சியின் தசவதாரத்தின் முதல் அவதாரம் உண்மைன்னு அஞ்ஞானம் சொன்னதை விஞ்ஞானம் நிரூபிடிச்சிடுச்சி!)

ஆக மொத்தத்திலே இதை எல்லாம் படிச்சிட்டு நமக்கு மண்டையே கொஞ்சம் கிர்ன்னு சுத்துச்சு. எப்படின்னு கேளுங்க. அந்த காலத்தில மனிதனோட பரிணாம வளர்ச்சியை பத்தி கண்டுபிடிச்ச தத்துவம் சொன்ன சார்லஸ் டார்வின் வாழ்ந்த காலம், அறிவியல் முன்னேறாத, மதங்களின் ஆளுமைக்குட்பட்ட காலகட்டம், அதை ஆங்கிலத்தில அழகா, 'Christian evangelical fervor' காலகட்டம்னு சொல்றது. அப்ப இந்த மாதிரி தத்துவங்களை சொன்னா, பைத்தியக்காரன்னு அடிக்கவந்த மதத்தலைவர்கள் அதிகம். ஆனா இந்த விஞ்ஞானம் வளர்ந்த இந்த 21ம் நூற்றாண்டுல, அதுவும் எல்லா தத்துவங்களையும் உண்மை, பொய்யின்ன்னு நிரூபிக்க வழிமுறைகள் வந்துக்கிட்டிருக்கிற இந்த காலகட்டத்திலே, இப்படியும் பைத்திக்காரத்தனமா இந்த தத்துவம் தப்பு, 'எங்கே சொல்லு, மனுச ரத்தமும் குரங்கு ரத்தமும் ஒன்னா ஒத்து போவுதான்னு' சொல்லிக்கிட்டு திரியற கும்பல பார்க்க ஒரே நகைச்சுவையா இருக்கு போங்க!

முதல்ல விஞ்ஞானம்னா என்னா? உண்மைகளை தொடர்ந்து தேடுவதே!அதுவும் இயற்கை அளித்த உண்மைகள் என்னா, இயற்கையாக இது உண்டாக காரணமுன்னு சொன்ன அத்தனை தத்துவங்களையும் தகுந்த ஆதாரங்களோடு அதன் தத்துவக்குறிக்கோள்களை நோக்கி ஆராய்ந்து உண்மை அறிவதே! இந்த தத்துவங்கள் தகுந்த ஆதரங்களோடு நிரூபிக்க படாவிடில், தொடர்ந்து தேடல்கள் இருந்து கொண்டே இருக்கும், அந்த தொடர் தேடலில் ஏற்கனவே கூறப்பட்ட தத்துவங்கள் மாற்றபடலாம் இல்லை மறுக்கப்படலாம், ஆனால் தேடல் தொடரும்! இப்படியாக விஞ்ஞான அறிவும், புரிதலும் தொடர்ந்து பரிணாமிக்கக்கூடிய ஒன்று. ஆனால் அஞ்ஞானம், ஆன்மீகம் ஏதோ ஒரு நம்பிக்கையின் பேரில் கூறபட்ட கூற்று, அதை தொடர்ந்து தேடி யாரும் பொய்யாக்கப்போவதில்லை! ஆகவே தான் விஞ்ஞான வழியே தேடலுக்கு உட்பட்டது. அஞ்ஞானம், ஆன்மீகம் சொல்வது விஞ்ஞானமாகாது, வேண்டுமானல் அவை கூறிய தத்துவங்களின் மதிநுட்ப செயல்திட்டம் பற்றிய ஆராய்வு செய்து அண்டசராசரங்களின் புரிதல்களை தெரிந்துக் கொள்ளலாம், அவ்வளவே! இந்த கோட்பாடுடன் பரிணாம வளர்ச்சியை பற்றி அறிய முற்படுவோம்!

நான் சொன்ன அந்த தேடல் காரணமா, இப்ப புதுசா ஒரு 375 மில்லியன் வருஷத்துக்கு முன்னாடி வாழ்ந்த மீன் இனம் ஒன்னை கண்டுபிடிச்சிருக்காங்க. அதுவும் சிககோ பல்கலைகழக விஞ்ஞானிகள், மண்ணிய புரதான உயிரின கண்டுபிடிப்பாளர்கள் (இந்த 'Paleontologist' ன்கிற ஆங்கில பதத்துக்கு நான் செய்த மொழி மாற்றம், சரியா, தப்பான்னு சொல்லுங்க நண்பர்களே!) அதாவது கனடா நாட்டின் வடபாகத்திலருக்கிற 'Bird Fjord'பகுதியில் இருக்கும் 'Ellesmere Island'ங்கிற தீவில் ஒரு பழமையான சிகப்பு கற்படிகங்களை('Red slitstone') பார்த்துவிட்டு, இது என்னாதுன்னு ஆராய்ந்த பொழுது அது ஒரு மீனின் மீதம் ('Fishapod'), அதாவது ஒரு 375 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மீன் இனம். இது ஒரு முக்கிய கண்டுபிடிப்பாக குறிப்படபடுகிறது. அதாவது டார்வின் தத்துவத்துக்கு ஒரு தொடர்பு கிடைத்ததாக அறிவியல் உலகம் முழக்கமிடுகிறது!

இதுல என்ன ஆச்சிரியம்னு கேட்கிறீங்களா! அதாவது மனித பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்றப்ப, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு உலகம் தோன்றி, உயிரினங்கள் தோன்ற ஆரம்பிச்சதிலருந்து ஓவ்வொரு உருவமா பரிணாம வளர்ச்சி அடைந்ததிலே இடைப்பட்ட காலத்திலே எப்படி நீரில் நீந்தும் உயிரினம் நிலத்துக்கு வர ஆரம்பித்ததுங்கிறது சில பிரச்சனைகள் இருந்தது. அதாவது சரியாக நிரூபிக்கப்படாத தொடர்ச்சி, இந்த தொடர்ச்சியை ஆங்கிலத்திலே 'Traits' ன்னு சொல்வாங்க! அது தான், கடல், நீர் நிலைகளில் நீந்தி வாழ்ந்த உயிரணம் நிலங்களில் தாவி ஊர்ந்து, நடந்து,ஓடி,பறக்கும் இனங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்தது, மனிதனின் கடைசி உருவத்துக்கும், அதுக்கும் மேலே இன்னும் அந்த பரிணாம வளர்ச்சி தொடர்ந்து வரக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதை கண்கூடாக நிரூபணம் செய்ய உதவும் ஒரு அரிய கண்டுபிடிப்பு!

இதைபத்தி தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னே, இன்றய கால கட்டத்திலருந்து ஒரு 50 இல்லை 60 கோடி வருஷத்துக்கு முன்னே உயிரினம் தோன்றி இருக்கும், அப்படின்னு விஞ்ஞானம் சொல்லுது. அதாவது 60 கோடியிலருந்து 50 கோடி வருஷத்துக்கு முன்னே இடைப்பட்ட கால கட்டம் 'ProteroZoic' 'Cambrian' period, அதாவது முதன்முதலா சிப்பி மீன்களும்,முத்துக்களும் (Shell Fish, Corals)தோன்றிய காலக்கட்டம், பிறகு 50 கோடியிலருந்து 40 கோடி வருட்ங்களுக்கு முன்னே இடைப்பட்டக்காலம் 'Ordovician', 'Silurian' Period, அதாவது முதல் மீன்கள் மற்றும் நிலத்தடி செடிகொடிகளும் முளைத்த காலகட்டம், பிறகு 40 கோடியிலருந்து 30 கோடி வருஷத்துக்கு இடைப்பட்டக்காலம் 'Devonian' 'Carbonferous' Period, அதாவது முதல் முதலாக நாலுகால் உருவங்கள் தோன்றிய காலகட்டம், ஊர்வன, பாலூட்டிபோன்ற பல்லினங்கள் தோன்றிய காலக்கட்டம், அதாவது ஆங்கிலத்தில் tetrapods, First Reptiles, First Mammal-like Reptiles ன்னு சொல்லுவாங்க. இந்த 'Devonian' காலக்கட்டத்தில் தோன்றிய இந்த மீன் இனம் தான் இப்பொழுது கனடா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒன்னு. அதுக்கு பேரு 'Tiktaalik roseae'. இந்த மீன் இன சுவட்டிலருந்து கண்டுபிடிக்க பட்ட துடுப்பின் பாகத்தில் இருக்கும் விரல்கள், மணிகட்டு போன்ற அமைப்புகள், பிற்காலத்தில் உருமாறி நிலத்தில் தவழ்ந்து செல்ல ஏதுவாக உருவாக்கபட காரணமாய் இருக்கும் மூல அதாரம்! அதாவது இந்த 'Tiktaalik roseae' மீன் இனம் தோன்றுவதற்கு முன் உண்டான மீன் இனத்திற்கு இது போன்ற துடுப்பமைப்பு கிடையாது. அதற்கு இருந்த துடுப்பு காதமைப்பை உடயவை (Lobe Fins), அவை நீரில் நீந்தி செல்ல ஏதுவானவையே ஒழிய நிலத்தில் தவழ்ந்து செல்ல உவவாது! ஆக இது தான் அந்த பரிணாம வளர்ச்சியின் விஞ்ஞான பூர்வமான ஆதாரம்!

சரி அடுத்த காலக்கட்டங்கள் என்னான்னு பார்ப்போமா? சுமார் 30 கோடியிலருந்து 20 கோடி வருஷத்துக்கு முன்னே இடைப்பட்ட காலம் தான் 'permian', 'Triassic' period, இந்த இடைப்பட்ட காலத்தில தான் முதல் டைனோசர் மற்றும் பாலூட்டிகள் தோன்றின. பிறகு 20 கோடியிலருந்து 10 கோடி வருடங்களுக்கு இடைப்பட்டக்காலக்கட்டங்கள் தான் 'Jurassic' 'Cretaceous' period, இந்த காலக்கட்டத்தில தொடர்ந்து டைனோசர்களும், முதல்முதல்லா பறைவகளும், செடி கொடியில் பூக்களும் பூத்துக்குலுங்கிய கால கட்டங்கள். இப்போதிலருந்து ஒரு 10 கோடி வருஷசம் இடைப்பட்டக் காலகட்டம் தான் 'Cenozoic' period ங்கிறது. இந்த இடைபட்ட காலக்கட்டமே முதன்முதலாக குதிரை, மற்றும் குரங்கு, சிம்பென்ஸி, மற்றும் மனிதன் தோன்றிய காலகட்டங்கள்! இப்ப புரிஞ்சதா இந்த புதியதாக கண்டுபிடிச்ச மீன் இனம் நம் மனித வளர்ச்சிக்கு எப்படி தொடர்புன்னு!

இந்த மீனின் சுவடுகளை ('fossil') கண்டுபிடிக்கிறதுக்கு முன்னே கண்டுபிடிச்சது காதமைப்போடுக்கூடிய 'Panderichthys'ங்கிற மீன் இனம். இதன் சுவடுகளை கிரீன்லேண்ட்ல 1920ல கண்டுபிடிச்சப்ப, எப்படி நீரில் வாழ்ந்த உயிரினம் நிலத்தில் வாழ ஏதுவாய் உருமாறிச்சுன்னு மண்டையை பிச்சிக்கிட்டப்ப தான் இந்த கண்டுபிடிப்பு அதற்கு வழி வகுத்துது. ஏன்னா, அந்த 'Panderichthys'ங்கிற மீன் இனம் நீர்ல மட்டும் வாழ தகுதி பெற்ற உடலமைப்பு கொண்டது. நிலத்தில் நகர உருவமைப்பு ஏற்றதா இல்லை. அதனால தான் அத்தனை சுலபமா அந்த பரிணாம வளர்ச்சியின் தொடர்பை விளக்கமுடியவில்லை!

இந்த கண்டுபிடிக்கப்பட்ட மீன்கள் தான் அப்போது முதன்மையாக உருவாக்கப்பட்ட உயிரின வளர்ச்சியின் ஆரம்பம், தன்னை சுற்றுபுற சுழலுக்கு தக்க மாற்றி கொள்ளும் வழி பெற்றவையா இருந்தது. ஏன்னா, அந்த காலக்கட்டம் தான் பூமியில் நீர்நிலைகள் தோன்றி பெரும் ஆறுகள் தோன்றிய காலக்கட்டம், மீன்களின் காலம் ('Age of Fishes'). அதற்கு முன்னே இருந்த கற்காலம், வெறும் கற்களும் பாறைகளும் அதற்கிடையே தோன்றிய சிறு செடி கொடிகளே, அதுவும் நம் கணுக்காலளவே வளர்ந்தவை! அதற்கு பிறகு ஆற்று படிகையிலே தோன்றிய காய், கறி, மரம் செடி கொடிகளின் வளர்ச்சியே நாலுகால் பிராணி உருவாகக் காரணம். இந்த சிறு தாவரங்களே நீர்வாழும் உயிரினத்துக்கு ஆகாரம், மேலும் உயிர் வாழத்தேவையான ஆக்ஸிஜனை பூமியின் காற்றுவழிமண்டல வெளிவிடுத்து பலதரப்பட்ட உயிரினங்கள் தோன்ற ஏதுவாக்கியது! பிறகு அந்த தாவர கரிம சிதைவுகளே பாக்டீரியா, பங்கஸ், மற்றும் சிறு பூச்சிகள் போன்ற சிறு உயிரின ஆதாரங்கள் தோன்ற வழி வகுத்தது. இந்த தாவர கரிம சிதைவுகளில் ஊர்ந்த பூச்சிகளை உட்கொண்டு உயிர் வாழ்ந்த சிறுமீன்கள், சிறுமீன்களை உட்கொண்ட பெருமீன்கள் என இந்த உணவு வழி தொடர்பு (food chain) முறையை உண்டாக்கி கொடுத்தது.

இந்த மீன் சுவடின் கண்டுபிடிப்போட முக்கியம்சமே அந்த விரல்கள், மனிகட்டுகள் கொண்ட உருவமப்புதான். ஏன்னா ஜெனிடிக்லா இதை பத்தி ஆராஞ்சு அதற்கு காரணமான 'Hox Genes' தான் கை, கால் விரல் அசைவுகள், வளர்ச்சிக்கு பிரதானம்னு கண்டு பிடிச்சிருக்காங்க. இதுதான் மனித குலத்துக்கும் காரணமான ஜீன்ஸ். ஆக இந்த மீன் இன அரியகண்டுபிடிப்பு மேற்கொண்டு இதனை ஆராஞ்சு பரிணாம வளர்ச்சியின் முக்கியத்தை உலகுக்கு பறைசாற்றும்! ஆக இது போன்ற சுவடுகளே உயிரிணங்களின் மாற்றம், பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பவை, அதிலும் முக்கியமாக உருவ மாற்றமைப்பின் தொடர்ச்சி (Transistional forms) கண்டறிவதில் ஒரு பெரிய வெற்றி!

ஆக டார்வின் தத்துவம் மெல்ல மெல்ல வெற்றி பெற்று வருகிறது! அவர் கண்டறிந்த தத்துவக்காலத்திலருந்து இன்றைய வரை எத்தனையோ கண்டுபிடிப்புகள் அந்த தத்துவத்தை ஊர்ஜிதம் செய்கின்றன! அவர் அமைத்துக் கொடுத்த அந்த தத்துவ மேடையே இன்றைய முன்னேறிய உயரியல் தத்துவத்துக்கு வழிக்காட்டி, தொடர்ந்து கண்டுபிடித்து வரும் சுவடுகளை சரியாக இன்று கண்டுபிடிக்கப்படும் ஜீனோம்களோடு ஒப்பிட்டு அட்டவணையிட தோதுவாகிறது! இந்த விஞ்ஞானம் அளித்த பரிணாம வளர்ச்சியை எள்ளி நகையாடி, ஆன்மிக போதையை மக்களுக்கு அளித்து, அதுவும் நல்லதொரு ஊடகக் கருவிக் கொண்டு மனிதகுல முன்னேற்றத்திற்கு காரணமாகமல் நேரவிரயம் செய்யும் என் நண்பர்கள் சற்றே யோசிக்கவும்! இந்த பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் கிருமி 'H5N1' மிருகத்திடமிருந்து மனிதனுக்கு பறவக் காரணம் என்ன தெரியுமா, அதுவும் ஒரு பரிணாம வளர்ச்சியே! ஆக இந்த பரிணாம வளர்ச்சி தத்துவங்கள் நம் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கின்றன!

டார்வின் தத்துவம் சொல்லுவது மாறிவரும் சுழலுக்கு ஏற்ப மாற்றம் கொள்ளுவதே பரிணாம வளர்ச்சி ('Survival of Fittest'). ஆக இந்த சுவடுகளின் கண்டுபிடிப்பில் ஒன்று தெளிவாகத் தெரிகிறது. மாறிவரும் சுழலுக்கு தன்னை தயார்படுத்திக் கொள்ளும் உயிரினங்கள் பிழைத்து வாழ்கின்றன, அப்படி முடியாதவை அழிகின்றன. இதோ மாறி வரும், அதி வெட்ப சுழலிலும்,காடுகள் அழியும் இப்பூவுலகிலும், பிராண வாயு(ஆக்ஸிஜன்) குறைந்து, கார்பன்டை ஆக்சைடால் வலைசூழும் இந்த காற்றுமண்டலத்தில் ஜெயித்து வாழபோகும் உயிரினங்கள் யார் இனி? நீங்களும் நானுமில்லை! இறக்கை முளைத்த புது மனிதனாகக் கூட இருக்கலாம், யார் கண்டார். இது தான் பரிணாம வளர்ச்சி!

27 comments:

said...

உதயகுமார்,
அட்டகாசமான பதிவு.
வரவர தூள் கிளப்புறீங்க!

நல்லா இருங்க.

said...

நல்ல அருமையான பதிவு.
இது தொடர்பாக நான் எழுதிய கட்டுரை

http://www.thinnai.com/?module=displaystory&story_id=40604211&format=html

said...

http://www.royalsoc.ac.uk/portals/jones/msh.htm


சுவனப்பிரியன் மாதிரி ஆட்களை ஊக்குவிக்கக்கூடாதென்று நினைத்தே இதைப்பற்றிய பதிவை எழுதவில்லை.

அந்த வீடியோவைப்பாருங்கள் அருமையாக இருக்கும். கீழே இருப்பது விகடனின் மந்திரச்சொல் என்ற ஒரு ஆர்டிகள்.

----------

1835 - ம் ஆண்டு... இங்கிலாந்தில் இருந்து கிளம்பியது ‘பீகில் எனும் கப்பல். சுமார் நான்கு ஆண்டு பயணத்துக்குப் பின் மனித நடமாட்டமே இல்லாத கலோபஸ் தீவுக் கூட்டத்தில் நங்கூரமிட்டது ‘பீகில்’. தீவுக்குள் நுழையும்போதே சார்லஸ் டார்வினுக்கு ஆச்சர்யம். கரையோரமாக முதிர்ந்த ராட்சத ஆமைகள் கூட்டம். கடலுக்குள் சுறா மீன்கள் துள்ளி விளையாடு வதையும், கூட்டமாக ஒரு மீன் கூட்டம் சரசரவென கரையேறு வதையும் பார்த்தவர், சற்றே நெருங்கியபோது அதிர்ந்தார். அவை மீன்கள் அல்ல... சின்னஞ்சிறு கால்களைக் கொண்ட பல்லிகள்.

மீன்களாக இருந்தவை சுறா மீன்களுக்குப் பயந்து ஆபத்தில் இருந்து தப்புவதற் காக தங்கள் செதில்களையே கால்களாக மாற்றிக்கொண்ட ஜீவராசிகள் எனத் தெரிந்ததும் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தார். மனித குலத்துக்கு அதிர்ச்சி தரக்கூடிய மாபெரும் அறிவியல் உண்மையை அறிந்துவிட்டாலும் எப்படி அதைச் சொல்வது எனத் தயக்கம் டார்வினுக்கு.

ஏனென்றால், எல்லோருக்குமே டார்வின் அப்போது ஒரு விளையாட்டுப் பிள்ளை. 1809 - ம் வருடம் செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்து, டாக்டருக்குப் படித்தவர் டார்வின். பிறகு அது பிடிக்காமல், மதகுரு ஆவதற்குப் பயிற்சியெடுத்தவர். அதிலும் ஆர்வம் குறையவே, ‘பீகில்’ ஆராய்ச்சிக் கப்பலில் உலகம் சுற்றத் தொடங்கிவிட்டார். அபூர்வ தாவரங்கள், அதிசய உயிரினங்கள் என டார்வின் உலகமெங்கும் தேடித் தேடிச் சேகரிப்பதை அவரது பொழுது போக்கு என்றே மற்றவர்கள் நினைத்தார்கள். அவரை ஒரு ஆராய்ச்சியாளராக யாருமே கருதவில்லை. அதனால், ஒரு பெரும் உண்மையை கண்டு பிடித்தும் மனதில் போட்டு பூட்டிவைத்துப் புழுங்கினார் டார்வின்.

1838&ம் ஆண்டு மக்கள் தொகை பெருக்கம் பற்றி தாமஸ் மால்தூஸ் எழுதிய கட்டுரையைத் தற்செயலாக டார்வின் வாசித்தார். ‘மக்கள் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வந்தாலும் ஒரு கட்டத்தில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டு, போர் உண்டாகி, மக்கள் தொகை குறையத் தொடங்கிவிடும். தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும், தகுதியற்றவை அழிக்கப்பட்டு விடும்’ என்ற வரிகள் டார்வினை உலுக்கின. அவரது ஆராய்ச்சியின் தடுமாற்றத்தை, அவருக்குள் இருந்த தயக்கத்தை அந்த ஒரே வரி அழுத்தமாகத் தீர்த்துவைத்தது. ‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்’ என தனக்குள் ஆயிரமாயிரம் முறை சொல்லிப் பார்த்தார் டார்வின்.

சர்ச்சை, எதிர்ப்புகளைப்பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்ற முடிவுடன் தனது ஆராய்ச்சியை எழுதத் தொடங்கினார். எழுதி முடிக்க இருபது ஆண்டுகளாயின. 1859&ம் ஆண்டு ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டார் டார்வின்.

உயிர்களை எல்லாம் ஒரே நாளில் தான் ஆண்டவர் உருவாக்கினார் என்று உலகில் எல்லா மதங்களும் போதித்து வந்த கருத்தினை, டார்வினின் புத்தகம் அடித்து நொறுக்கியது. உயிரினங்கள் அனைத்தும் சிறிது சிறிதாக மாற்ற மடைந்து, இன்றைய உருவத்துக்கு வந்திருக்கின்றன... எதுவும் ஒரே நாளில் படைக்கப்பட்டதல்ல என்பதைத் தன் ஆராய்ச்சியின் மூலம் பல்வேறு ஆதாரங் களுடன் விளக்கினார் டார்வின்.

1871&ம் ஆண்டு ‘மனித வம்சம்’ என்ற தனது அடுத்த ஆராய்ச்சி நூலை வெளி யிட்டார். குரங்கில் இருந்து மனிதன் வந்தான் என்று சொன்ன கருத்துக்களுக்கு மத இயக்கங்களில் இருந்து மீண்டும் பெரும் எதிர்ப்பு. அப்போதும் அவருக்குக் கைகொடுத்தது ‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்’ என்ற மந்திரச் சொல்தான். அன்று டார்வினை உலகம் ஒப்புக்கொள்ள வில்லை. இன்றோ அறிவியல் உலகத்தில் டார்வின்தான் விஞ்ஞானத் திருவள்ளுவர்.

‘தகுதியுள்ளவை தப்பிப் பிழைக்கும்’ என்பதற்கு அவருடைய வாழ்வே அருமையான உதாரணம்!

said...

துளசி, ஏதோ நம்மால முடிஞ்ச காரியம்!

said...

வருகைக்கு நன்றி செல்வன்! நீங்கள் எழுதிய கட்டுரை படித்தேன்!

said...

Hats off to Mr.வெளிகண்ட நாதர் !!!

I hope, people who read this will remind of many things.

I think you have given us another very good blog.

Thanks.


// ஆன்மிக போதையை மக்களுக்கு அளித்து // A heavy slab on many faces !!

said...

Hats off to Mr.வெளிகண்ட நாதர் !!!

I hope, people who read this will remind of many things.

It is yet another very good blog from you.


// ஆன்மிக போதையை மக்களுக்கு அளித்து // A heavy slap on many faces!!!

said...

மோகன்தாஸ், சுட்டிக்கு நன்றி. நல்லதொரு செமினார் போன திருப்தி!

said...

வாங்க மனக்குமறல்! பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகம் இருட்டாயிடுமா, அந்த கதை தான் இதுவும்!

said...

Sivabalan, thanks for the visit!

said...

வெளிகண்ட நாதரே,

அருமை மிக அருமை. டார்வின் தியரியும் பொய் என்று விஞ்ஞான பூர்வமாக நீரூப்பித்து விட்டார்கல் என சொல்கிறார்களே அதைப் பற்றி...கொஞ்சம் சொல்லுங்களேன்

said...

என்ன சிவா ஜோக் அடிக்கிறீர்களா?

டார்வின் தத்துவம் தியரி என்பதையும் தாண்டி fact/ Predictive model எனும் அளவுக்கு சென்றுவிட்டது.டார்வின் தத்துவத்தை தவறு என்று யாரும் நிருபிக்கவில்லை.அது மேலும்,மேலும் மேம்படுத்தப்பட்டு வலுவாக்கப்பட்டுத்தான் கொண்டிருக்கபட்டுள்ளதே தவிர பொய்பிக்கப்படவில்லை.

said...

Mr. மோகன்தாஸ் , thanks for the vedio clip link.

A good one.

Thanks

said...

சிவா, யாரு சொன்ன உங்க கிட்ட டார்வின் தியரி பொய்ன்னு! அதுதான் இன்னைக்கு 'Modern Bioligist' க்கும், Paleontologist க்கும் பைபிள் தெரியும? செல்வன் சொன்ன மாதிரி அதை தாண்டி ஜீனோம் ஆராய்ச்சியோட தொடர்ச்சிக்கு அது அடிகோலா இன்னும் இருக்கு!

said...

நாதரே, நாம பேசிக்கொள்ளும் விசயம்பற்றி எல்லோரும் ஆர்வம் காட்டுகிறார்களா படிக்கிறதுக்கு...? உங்கள் கட்டுரை நன்றாக வந்திருக்கிறது...எனது சுட்டியை வழங்கியதற்க்கு நன்றி...Geological Scale_படி வழங்கி பின்னிவிடீர்கள்...நான் கொஞ்சம் சோம்பேரிப் பையன் :)

அன்பு,
தெகா.

said...

அன்பு வெளிகண்டநாதர்,
நல்லதொரு இடுகையைத் தந்துள்ளீர்.
இருப்பினும், அதற்கு வந்த பின்னூட்டுகளில் ஒன்றில்
// ஆன்மிக போதையை மக்களுக்கு அளித்து // A heavy slap on many faces!!!// எனக் கூறப்பட்டுள்ளது. இது பற்றி எம் கருத்து.

தெரிந்ததைச் சொல்லித் தெரியாததை விளக்கவே ஆன்மிகம். அதன் இரு நிலைகள்:
1.கோயிலில் இறைவன் உள்ளான்; அவன்தான் எல்லாம்.
2.இறைவன் (கோயிலில்)இல்லை. நானே இறைவன். இது ஞான நிலை.

1வது மனிதனுக்கு ஆன்மிகம் உணவு. இறை நம்பிக்கையற்றவர்களுக்கு அது போதை.
1வது மனிதனுக்கு அவன் போக்கிலே போய்த்தான் 2வது நிலைக்குத் திருத்திக் கொண்டுவர இயலும்.

ஆக உணவு என்பதும் போதை என்பதும் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறதல்லவா?

கருத்துக்களைக் கூறும்போது மற்றவர் மனம் நோகாமல் கூறுவது பண்பல்லவா?

ஒன்றுமட்டும் உறுதி. மெய்ஞானத்தின் அடிப்படையில்தான் விஞ்ஞானம் வளர்கிறது.

said...

தெக்கி, இந்த பதிவு போட மூல காரணமே உங்க பதிவு தான், அப்பதான் நான் படிச்ச இந்த புது இன மீன் சுவடு கண்டுபிடிப்பு கண்ல பட்டது. சரி நீங்க சொன்ன கருத்துக்கே சரியா தொகுத்து ஒரு பதிவு போடுவோமே போட்ட ஒரு முயற்சி தான். வேற ஒன்னுமில்லை! இந்த விஷயங்கள்ல மக்களுக்கு ஆர்வம் இருக்கத்தான் செய்யும்.

நீங்க சோம்பேறி பையன் இல்லை, 'குளோபல் வார்மிங்' எழுதனும்னு என் லிஸ்ட்ல இருந்தது, நீங்க முந்தி, அறிமுகம் கொடுத்திட்டீங்க. நான் வேறு விதமா, அதன் தாக்கமும் இந்த மேலை நாடுகள் நம் போன்ற கீழை நாடுகளுக்கு அதை எப்படி அரசியலாக்கறாங்கன்னு வேண்ணா இன்னொரு கண்ணோட்டத்தில பார்க்க முயற்சிக்கிறேன்! ஆக அருணகிரி சொன்ன மாதிரி உங்க பதிவின் தலைப்பு பார்த்துட்டு சர்ச்சையாக்கிதான் எழுதி இருப்பேன்னு போனா அறிமுகம் கொடுத்து அட்வைஸ் கொடுத்துருந்திங்க! ஆனா இதையே சர்ச்சைக்குரிய விஷயமா வேறுபட்ட கண்ணோட்டத்தில ஏன் பார்க்கக் கூடாது, நிறைய சொல்லலாம். ம்..வெட்டி கதைகளுக்கு நடுவிலே ஏதோ நம்மாலான உபயம்!

said...

மண்ணிய புரதான உயிரின கண்டுபிடிப்பாளர்கள் - palaeontology க்கு உங்களின் தமிழாக்கத்தில் ஒரு சிறு மாற்றம் கொணரமுடியுமா? fossilised என்பதற்கு 'மண்ணிய' என்பதைத்தவிர வேறு சொல் கண்டால் நன்றாயிருக்குமோ? அடுத்து அந்த இரண்டாவது சொல்லில் ஒரு சிறு தவறு: புராதன - என்றிருக்க வேண்டும்.
கட்டுரையில் fossils, connecting link என்ற இருசொற்களைக் கூறி விளக்கமும் தந்திருந்தால் புரிதல் முழுமையாக இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
குற்றங்கூறுகிறேன் என்று எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் ( நீங்கள் ஒரு biologist இல்லையென்று தெரியுமாதலால் ) இந்தக் கட்டுரை ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது. கட்டுரை நன்றாக இருந்தது என்று நற்சாட்சிப் பத்திரம் கொடுப்பதைவிடவும், இக்கட்டுரைக்கு நன்றி என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

நன்றி

said...

ஞானவெட்டியான் அவர்களே, வருகைக்கு நன்றி! நான் ஏற்கனவே கூறியது போல மெஞ்ஞானம் விஞ்ஞானமாக முடியாது, அதே போல் ஆன்மிக சிந்தனை, கூற்றுகளை யாரும் பொய்பிக்க போவதில்லை! ஆனால் விஞ்ஞானத்திடம் தேடல் எப்பொழுதும் உண்டு!

பின்னோட்டமிட்டவர் நான் கூறியதை கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை!

said...

தருமி சார், நன்றி எல்லாம் எதுக்கு சார், தெரிஞ்சதை சொன்னேன்! பிழையிருந்தால் அது பிழையே, 'உன் பாட்டை குற்றம்னு சொல்லிட்டாய்யான்னு' தருமி சொல்ல, நெற்றிக்கண்ணை திறக்க நான் ஒன்னும் சிவபெருமான் இல்லையே! தவறை திருத்துகிறேன். இந்த 'fossil fuels' பத்தி கொஞ்சம் எழுதனும், சரியான பதம் புடிச்சு போடுறேன்!

said...

சர்சித்து சர்சித்து என்னத்தா கண்டோம் நாதரே! ஏதாதவது, எதார்த்திலா கொஞ்சம் நடைமுறை படுத்த முடியுமாங்கிறதுதான், இன்றைய தேவை. நிறைய படிச்சு வெறும் raw data_ வை கொடுப்பதில் எனக்கு உடன் பாடில்லை. பத்து வருடங்கள் அப்படி செய்து எல்லாம் குப்பையில் கிடக்கிறது. இப் பொழுது என் கனவெல்லாம் எப்படி அதனை நடைமுறை படுத்துவது, மக்களிடத்தே எடுத்து செல்வது என்பதுதான். "படித்தவன் ஏட்டை கெடுத்தான், பாடினவன் பாட்டை கெடுத்தான்."

அன்பு,
தெகா.

said...

// பின்னோட்டமிட்டவர் நான் கூறியதை கொஞ்சம் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். ஆனால் யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை //

I am not intended to hurt anybody. It is not my wish. My words may be strong. But this is because,lot of things happening around us.


To Mr.ஞானவெட்டியான்,

Sir,

// 2வது நிலைக்குத் திருத்திக் கொண்டுவர இயலும். // Where some people take advantage of this and fool many people all over the world.

But, Some good exceptions are there,like you, Sir.

But, how many people do we have like you, to think like, Sir.

said...

//"படித்தவன் ஏட்டை கெடுத்தான், பாடினவன் பாட்டை கெடுத்தான்."// சர்தான் ஒரு முடிவுக்கு வந்திட்டீங்க போலருக்கு!

தெகா,இதை பத்தி அப்புறம் ஒரு தடவை எழுதுறேன் விரிவா!

said...

தெளிவு படுத்தியதற்கு நன்றி செல்வன் மற்றும் நாதர் அவர்களே. ஒரு சோஷியல் காதெரிங்கில் ஒரு நண்பர் மிக அழுத்தமாக புருடா விட்டார். அதை நானும் சற்று நம்பிவிட்டேன்.

Predictive Model controller என்பது என் தொழில். அதை வைத்து ப்ரூவ் செய்துவிட்டார்களென்றால் மறு வார்த்தையில்லை

said...

வெளிகண்ட நாதரே,

இன்றைய கால்கரி ஹெரால்டில் வந்த ஒரு ஆர்டிக்கிள் உங்களை நினைவூட்டியது. டார்வின் பற்றிய என்னுடைய தவறான எண்ணத்தை மாற்றிய உங்களுக்கும் நண்பர் செல்வனுக்கும் நன்றி.

இனி கால்கரி ஹெரால்ட் ஆர்டிக்கிள் பத்தி.

காலகரி ஹெரால்ட் "மன்னிக்கவும் திரு பீன் அவர்களே, உங்கள் டெக்னிக்கை முதன் முதலிள் உபயோதித்தது ஆதி மனிதன் தான்" என தலைப்பிட்டிருந்தது. அதை OCR செய்து இங்கே paste செய்திருக்கிறேன்

---------------------------------
Sorry old Bean, but the apes got there first

ROGER DOBSON TIMES OF LONDON LONDON

The old ones really are the best. Evolutionary biologists have traced the origins of laughter back four million years to pre-humans slipping and stumbling in their first faltering attempts to walk on two legs.
According to the theory, when they saw a member of their group lose his footing they would laugh as a sign to each other that something was amiss, but nothing too serious.
The theory could explain why, to this day, the ungainly walk remains a staple element of slapstick humour from Monty Python's "Ministry of Silly Walks" to Rowan Atkinson's accident-prone Mr. Bean.
“Becoming bipedal means there was a greater chance of tripping and falling. Essentially, the suggestion is that slapstick and humour evolved from that time," said Matthew Gervais, an American evolutionary biologist who led the study.
"When we laugh at slapstick, we are laughing at the same things that amused our early ancestors. That's why we find them funny."

According to the study, the next basic elements of human behaviour that sparked laughter were flatulence and mild sexual mischief: Language appeared only two million years after the first laugh, enabling people to combine laughter and words into numerous refmements, from amusement at a joke to sneering at a rival.

The theory that humour began as a benign force contradiets several other recent theories of why people laugh, including one published in 2001 which claimed that laughing evolved because smiling was too easy to fake by cheating humans trying to break into a group.

Gervais and his colleague David Sloan Wilson devised their theory after reviewing mOre than 100 studies of laughter covering isolated aspects such as psycholog¥,;archeology, history and neurology.

The researchers.(believe that the forerunner of laughter was the panting noise made by apes and chimpanzees, often in response to tickling, which is believed by scientists to be a way of preserving harmonious relations in a family or other group.

The academics believe that man became more upright as he evolved in Africa, partly because he needed more mobility at a time of increased competition for food. The evolution of vertical walking also led to changes in the larynx which enabled laughter to become more recognizably human compared with the squeaks and grunts of monkeys.

The shortages of the period - known as the Pliocene epoch - also led to a' need for improved group solidarity so that food could be hunted and gathered more effectively.

"Witnessing another individual unexpectedly trip or slip while simultaneously recognizing the non-seriousness of the mishap often elicits laughter in humans today," says the study, which appears this week in the Quarterly Review of Biology. "Such a mishap could have become a potent elicitor of laughter in early hominids as a result of Pliocene pressures for increased social play
---------------------------------

said...

சிவா, சிரிக்க கற்று கொடுத்த குரங்கினை பற்றிய கால்கரி ஹெரால்ட் கட்டுரை டார்வின் தத்துவத்தினை உறுதிபடுத்தும் இன்னொரு ஊர்ஜிதம்!

said...

ஏற்கனவே தெரிஞ்ச சங்கதின்னாலும் புதுசா நிறைய விவரம் தெரிஞ்சுக்கிட்டேன் சார்.