நேத்து கால்கரியிலே நடந்த தமிழர்களின் தைத் திங்கள் திருவிழா பற்றியும், அதில் வலைப்பதிவாளர்களுக்கு கிடைத்த மரியாதை, அங்கிகாரத்தை பற்றியும் அழகா நான் எழுதும் முன்னர் கால்கரி சிவா, 'வலைப் பதிவாளர்களுக்கு மரியாதை' என்று எழுதி உங்களுக்கு எல்லாத்தையும் தெரிவிச்சிட்டார்! அவரு வெறும் படம் மட்டும் போட்டுட்டு சொல்ல விட்டதை, கொஞ்சம் சொல்லுவேமேன்னு தான். அதாவது எங்க இரண்டு பேரையும், வலைப்பதிவாளர்கள்னு தெரிஞ்ச உடனேயே, இங்கே உள்ள என் இனிய தமிழ் மக்கள், அதைப் பற்றி தெரிந்து கொள்ள நிறைய ஆர்வம் காட்ட தொடங்கினார்கள்! சரி அதனாலே எல்லாருக்கும் அதை பத்தி கொஞ்சம் எடுத்த சொல்லுவோமேன்னு தான் நேற்று என்னுடய மேடைப் பிரசங்கம்.
இந்த தமிழ் வலைப்பதிவுகள், வலைப்பூக்கள்னு ஆரம்பிச்சு, அதை அழகா தெரிஞ்சக்க வழி செஞ்ச காசி போன்றோரின் உதவியாலேயே, என்னால் இந்த மேடைப் பிரசங்கத்தை வழங்க முடிந்தது, ஆகையால், வயதில் சிறியவர்களாக இருப்பினும் அவர்களை வணங்கி எனக்கு இதன் விவரங்களை அறிய வைத்த அவருக்கும், தமிழ் மணக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!
ஆக இந்த பிரசங்கத்தின் வீடியோ படத்துண்டினை வழங்குவதில மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!
அடுத்து என்ன தான் சொல்லி பிரசங்கம் செய்தாலும் அதனை பயற்சி பெற கொஞ்சம் காலம் எடுத்து கொள்ளக் கூடும்! அதன் படி இந்த தமிழ் எழுதும் கருவி, தமிழ் எழுத்துருக்கள் பார்ப்பது எப்படி, மின்னஞ்சல் எழுதுவது எப்படி என்றெல்லாம் கேள்வியோடு நேற்று என்னிடம் வினாக்களை தொடுத்த மக்களுக்கு பயன்படும் வண்ணம், அதன் செய்முறை விளக்கத்தத ஒரு செய்தி படமாக தொகுத்து கொடுத்தால் என்னவென்று தோன்றியது. அதன் விளைவாக, இதோ இந்த பக்கத்திலே இருக்கும் வீடியோ பட துண்டுகள் அந்த செய் முறை விளக்கதை கூறுகிறது. இதன் மூலம் அவர்கள் இந்த இனிய தமிழை கணனியிலே கற்று, அதை கருவேற்றி அவர்களும் சிறந்த வலைப்பதிவாலர்களாகி நமது கூட்டத்திற்கு பலம் சேர்ப்பதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன்!
வெ.க, அருமையாக இருந்தது உங்களின் உரை. நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தது போல், பள்ளியில் படித்த தமிழை விட நான் இணையத்தில், குறிப்பாக தமிழ்மணத்தில் கற்றுக்கொண்டது ஏராளம். நீங்கள் தமிங்கிலிசில் பேசாது தமிழில் பேசினது இன்னும் சிறப்பு.
உங்கள் உரையில் ஒரு வருத்தமான விடயத்தையும் அவதானித்தேன். இது கல்கேரியில் மட்டுமல்ல, அதிகமாக தமிழர்கள் நடாத்தும் விழாக்களில் காணும் ஒரு குறை. அதாவது ஒருசிலர் இந் நிகழ்ச்சிகளுக்கு சும்மா புதினம் பார்க்கவும், மற்றவர்களுடன் பேசி மகிழவும் மட்டும்தான் போலும். உங்களின் உரையில் ஒரு கட்டத்தில் பின்னால் உள்ளவர்களை அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டதற்காக இதைச் சொல்கிறேன்.
I guess, those three Video tutorials are extremely useful for new comers of tamil blogging and with your permission i'd like to use the videos in Tamilblogging tech support blog.
வாங்க வெற்றி, பொதுவிலேன்னு வந்துட்டா நீங்க சொல்ற மாதிரி புதினம் பார்க்க வருபவர்கள் உண்டு, அவர்களால் சலசலப்புக்கள் ஏற்படுவதுண்டு, இருந்தாலும் நம் பணி தொடர வேண்டும்!
குமரன், நேற்றைய பிரசங்கத்தில் என்னவெல்லாம் படிக்கலாம், எழுதலாம் என்று கூறும் பொழுது, ஆன்மிக சிந்தனை, இலக்கியங்கள் பற்றி கூறும் பொழுது உங்கள் பேரை நினைவு கூர்ந்தேன்!
விக்கி, மேற்கொண்டு அந்த டுட்டோரியல்களை AVI file களை download செய்து கொள்ள என்னுடய பதிவிலேயே லிங்க் இருக்கிறது, அப்படி தங்கள் கம்ப்யூட்ட்ரில் இறக்கி பெரிதாக அதை பார்க்கும் பொழுது you tubeல் தெரிவதை விட தெளிவாகத் தெரியும்!
Thanks for the wonderful tutorials. I could download as per your instructions and install everything but I need some more time to practice in tamil typing. Some letters are not coming now. May be with practice I'll be able to learn. Really a great work and the Calgary Tamils are lucky to have you both ( Siva & Nathar).
இன்னும் நல்ல பல தமிழ் எழுத்தாளர்களை வலைப்பூக்கள் உள்ளே கொண்டுவர இது உதவியாக இருக்கும். விக்கிக்கு கொடுத்த அனுமதியை நானும் எடுத்துக்கொள்ளலாமா? யாருக்காவது தேவைப்பட்டால் கொடுத்து உதவ. நன்றி
வருகைக்கு நன்றி Jadayampalayam! இன்னும் முயற்சி செய்து பாருங்கள், தமிழை நீங்கள் வெகு சீக்கிரமே கணனியில் எழுதக் கூடும், பிறகு வலைப்பதிவிட மறந்து விடாதீர்கள்!
தமிழ்த் தட்டச்சு செய்ய உதவும் வீடியோக்களைக் காண மகிழ்ச்சி. உங்கள் இணையத் தமிழ்த் தொண்டுக்கு வாழ்த்துக்கள். (இன்னும் படத்தைப் பார்க்கலீங்க.. அதுக்காக வாழ்த்தறதைத் தள்ளிப்போடமுடியுமா? :-))
பாலபாடம்னாலும் அவசியம் பார்ப்பேன்.. புதுசா யுனித்தமிழ் தட்டச்சு செய்யறவங்களுக்குப் பரிந்துரைக்கலாமில்ல? இந்த வெள்ளிக்கிழமை, பிறகு மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து தான் படம், பாட்டுக்கெல்லாம் கொஞ்சமாவது நேரமிருக்கும் :-)
உங்க உரை கேட்டேன். நீங்க சொன்னது அப்படியே உண்மை, என் விசயத்திலும். பள்ளிக்கூடத்தில் படிச்சுப் பயன்படுத்திய தமிழ்ச் சொற்களை விட இப்ப கிட்டத்தட்ட 2 வருசமா இணையத்தின் உதவியாலும் இடைவிடாமல் எழுதறதன் உதவியாலும் நான் கத்துக்கிட்ட தமிழ்ச் சொற்கள் ஏராளம். அதுவும், தமிழ்னு நாம நினைச்சிட்டிருக்க சமஸ்கிருதச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை மாற்றி உபயோகிக்க ஆரம்பிச்சிருக்கிறது சமீபத்தில் தான்!
கால்கரி சிவா... கொத்ஸின் கொத்து பரோட்டாவையும் விட்டு வைக்கலியே :-)
எ-கலப்பை (ஈ கலப்பை அல்ல :-)) பற்றிய வீடியோவும் அருமை. கடந்த 2 வருசமா கூகுள்குழுமம் (அன்புடன்) மூலம் இப்பணியை நண்பர்கள் சிலரும் செஞ்சிட்டு வரோம்... சில பிரபல பதிவர்கள் உட்பட பலருக்கும் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி ஆனந்தப்படுத்தியிருக்கோம்.
ஆனா ஒண்ணு.. இந்த யாகூவை வச்சிட்டே எப்படித் தான் யுனிகோடுக்கு அலக்குடுக்குறீங்களோ தெரியல.. ஒவ்வொரு முறையும் போய் என்கோடிங்கை மாத்துவீங்களா? இதுக்குத் தான் ஜிமெயில் பயன்படுத்தணும்கிறது :-)
//ஆனா ஒண்ணு.. இந்த யாகூவை வச்சிட்டே எப்படித் தான் யுனிகோடுக்கு அலக்குடுக்குறீங்களோ தெரியல.. ஒவ்வொரு முறையும் போய் என்கோடிங்கை மாத்துவீங்களா? இதுக்குத் தான் ஜிமெயில் பயன்படுத்தணும்கிறது :-)//சரியா சொன்னீங்க, ஆனாலும் பழக்க தோஷம்,போகமாட்டேங்கிது!
//மத்ததும் நிறைய என் மறுமொழியா இருக்கு?//அப்புறம் உங்கள விட்டா யாரு இருக்கா மறுமொழி போட!
எல்லாம் சரி, நீங்க demo'ல சொன்ன keyboard layoutம், என்னோட keyboard layoutம் வேற வேறயா இருக்கு, என்னோடதும் எ-கலப்பை தான், தமிழ்99 தான், உதாரணத்துக்கு ந-;, ன-I. ஏன் இந்த வித்தியாசம்? (இதை டைப் பண்ணறதுக்குள்ள வலி உயிர் போகுதே?)
செந்தில், நீங்க தரவிறக்கம் செய்த எ-கலப்பை, அஞ்சல் முரசு சார்ந்ததா, இல்லை தமிழ்நெட்99 சார்ந்ததா? அஞ்சல் முரசு சார்ந்தென்றால் இந்த பிரச்சனை வர வாய்ப்பில்லை! அப்பறம் சேதுக்கரசி சொன்னது போல தான் 'ந' எழுத்திற்கு தட்டச்சு செய்ய வேண்டும்!
38 comments:
இதனை தொடர்ந்து விழாவில் காண்பித்த தமிழ் திரைப்பட பாடல்களையும், அதனுடன் கூடிய விரிவாக்க டைட்டில் கார்டைய்ய்ம் பிறகு வெளியிடுகிறேன்!
ஐயா, விரிச்சுட்டோமில்லே எத்தனை மாட்டுது என பார்க்கலாம்.
கலக்கியிருக்கீங்க கால்கரிக் காரவுங்க.
வாழ்த்துக்கள். ரெம்ப நல்ல பணி.
பதிவர்களால மக்களுக்கு உருப்படியா என்ன செய்யமுடியும் என்பதில் இதுவும் ஒன்று.
தொடருங்கள்.
வெ.க,
அருமையாக இருந்தது உங்களின் உரை. நீங்கள் உங்கள் உரையில் குறிப்பிட்டிருந்தது போல், பள்ளியில் படித்த தமிழை விட நான் இணையத்தில், குறிப்பாக தமிழ்மணத்தில் கற்றுக்கொண்டது ஏராளம். நீங்கள் தமிங்கிலிசில் பேசாது தமிழில் பேசினது இன்னும் சிறப்பு.
உங்கள் உரையில் ஒரு வருத்தமான விடயத்தையும் அவதானித்தேன். இது கல்கேரியில் மட்டுமல்ல, அதிகமாக தமிழர்கள் நடாத்தும் விழாக்களில் காணும் ஒரு குறை. அதாவது ஒருசிலர் இந் நிகழ்ச்சிகளுக்கு சும்மா புதினம் பார்க்கவும், மற்றவர்களுடன் பேசி மகிழவும் மட்டும்தான் போலும். உங்களின் உரையில் ஒரு கட்டத்தில் பின்னால் உள்ளவர்களை அமைதியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டதற்காக இதைச் சொல்கிறேன்.
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.
அதென்ன சிவா, 'மாம்பழம் பாட்டுக்கு இளைஞர்களும் இளைஞிகளும் நடனமாடி மகிழ்ந்தனர்' என்று போடு இருக்கிங்க்கீங்க, அங்கன ஆடுனதை படிக்கிறவறங்க யாரும் பார்க்கலைங்கிற தைரியமா? என்ன ஆட்டபாட்டத்தை படம் காமிச்சிடுவோமா?
வாங்க சிறில், கால்கரிகாரவுங்க எங்களால முடிஞ்ச ஒன்னு!
I guess, those three Video tutorials are extremely useful for new comers of tamil blogging and with your permission i'd like to use the videos in Tamilblogging tech support blog.
Gr8 work.
--Vicky
விக்கி, கண்டிப்பாக, உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள், நன்றி!
//'மாம்பழம் பாட்டுக்கு இளைஞர்களும் இளைஞிகளும் நடனமாடி மகிழ்ந்தனர்'அங்கன ஆடுனதை படிக்கிறவறங்க யாரும் பார்க்கலைங்கிற தைரியமா? என்ன ஆட்டபாட்டத்தை படம் காமிச்சிடுவோமா? //
நாதர், நம்ம இரண்டு பேரும் இளைஞர்கள் என நான் நினைத்துள்ளேன்.
உங்க நினைப்பு எப்படி?
அருமை அருமை மிக மிக அருமை பாபா ஐயா.
வாங்க வெற்றி, பொதுவிலேன்னு வந்துட்டா நீங்க சொல்ற மாதிரி புதினம் பார்க்க வருபவர்கள் உண்டு, அவர்களால் சலசலப்புக்கள் ஏற்படுவதுண்டு, இருந்தாலும் நம் பணி தொடர வேண்டும்!
அப்படி போடுங்க சிவா, நடுத்தரவயது இளைஞர்கள் எல்லாம் சொல்லிக்கிட்டு திரிய தேவையில்லை, இளமை ஊஞ்சலாடும் இளைஞர்கள்னு அடிச்சி சொல்லிக்குவோம்!
குமரன், நேற்றைய பிரசங்கத்தில் என்னவெல்லாம் படிக்கலாம், எழுதலாம் என்று கூறும் பொழுது, ஆன்மிக சிந்தனை, இலக்கியங்கள் பற்றி கூறும் பொழுது உங்கள் பேரை நினைவு கூர்ந்தேன்!
Could u pls. send me the youtube address of the videos, so that i can get the code to embed in the blog??. I tried searching, but couldnt find it out.
Thanks again
அந்த மூன்று டுட்டோரியல் you tube லிங்கும் கீழே உள்ளது!
1. http://www.youtube.com/watch?v=po-KMGzigXY
2. http://www.youtube.com/watch?v=B4Y7BpcbIH0
3. http://www.youtube.com/watch?v=vowDpZMoQVM
விக்கி, மேற்கொண்டு அந்த டுட்டோரியல்களை AVI file களை download செய்து கொள்ள என்னுடய பதிவிலேயே லிங்க் இருக்கிறது, அப்படி தங்கள் கம்ப்யூட்ட்ரில் இறக்கி பெரிதாக அதை பார்க்கும் பொழுது you tubeல் தெரிவதை விட தெளிவாகத் தெரியும்!
Thanks a ton :)
ரொம்ப நல்ல வேலை செஞ்சுருக்கீங்க.
வாழ்த்து(க்)கள்.
Thanks for the wonderful tutorials. I could download as per your instructions and install everything but I need some more time to practice in tamil typing. Some letters are not coming now. May be with practice I'll be able to learn. Really a great work and the Calgary Tamils are lucky to have you both ( Siva & Nathar).
Thanks a lot again.
வாங்க துளசி, உங்க ஊர்ல ஏதும் இப்படி செஞ்சு காமிச்சிங்களா? நீங்க தான் அப்ப அப்ப கூட்டம் கூட்டுவீங்களே!
இன்னும் நல்ல பல தமிழ் எழுத்தாளர்களை வலைப்பூக்கள் உள்ளே கொண்டுவர இது உதவியாக இருக்கும்.
விக்கிக்கு கொடுத்த அனுமதியை நானும் எடுத்துக்கொள்ளலாமா?
யாருக்காவது தேவைப்பட்டால் கொடுத்து உதவ.
நன்றி
வருகைக்கு நன்றி Jadayampalayam! இன்னும் முயற்சி செய்து பாருங்கள், தமிழை நீங்கள் வெகு சீக்கிரமே கணனியில் எழுதக் கூடும், பிறகு வலைப்பதிவிட மறந்து விடாதீர்கள்!
கண்டிப்பாக குமார், நீங்கள் கொடுத்துதவலாம். இதன் வெளியீடு உலகில் உள்ள அனைத்து தமிழ் கூறும் நம்மவர் பயன் பெற வேண்டுமென்பதே!
Sir,
Excellet One!!
Good Work!!
தமிழ்த் தட்டச்சு செய்ய உதவும் வீடியோக்களைக் காண மகிழ்ச்சி. உங்கள் இணையத் தமிழ்த் தொண்டுக்கு வாழ்த்துக்கள். (இன்னும் படத்தைப் பார்க்கலீங்க.. அதுக்காக வாழ்த்தறதைத் தள்ளிப்போடமுடியுமா? :-))
வாங்க சிவபாலன், செளக்கியமா? உங்களுக்கு தெரிஞ்ச தமிழ் நெஞ்சங்களுக்கு இதை பத்தி சொல்லுங்க! அவங்களும் கத்துக்கிட்டு வலைப்பதிவு போடட்டும்
சேதுக்கரசி, பாட்டு போட்டாலும் கேட்க மாட்டேங்கிறீங்க, படம் போட்டாலும் பார்க்கமாட்டேங்கிறீங்க! ஆமா உங்களுக்கு இது பால பாடமாச்சே, அதனாலே எதுக்கு பார்க்கனும்னு விட்டுட்டீங்களா-:)
பாலபாடம்னாலும் அவசியம் பார்ப்பேன்.. புதுசா யுனித்தமிழ் தட்டச்சு செய்யறவங்களுக்குப் பரிந்துரைக்கலாமில்ல? இந்த வெள்ளிக்கிழமை, பிறகு மீண்டும் அடுத்த வாரத்திலிருந்து தான் படம், பாட்டுக்கெல்லாம் கொஞ்சமாவது நேரமிருக்கும் :-)
மூன்றாவது லின்க் வேலை செய்யவில்லை போல் தெரிகிறது.கொஞ்சம் பாருங்கள்.
தடங்கலுக்கு வருந்துகிறேன்! இப்பொழுது முயற்சிக்கவும்!
உங்க உரை கேட்டேன். நீங்க சொன்னது அப்படியே உண்மை, என் விசயத்திலும். பள்ளிக்கூடத்தில் படிச்சுப் பயன்படுத்திய தமிழ்ச் சொற்களை விட இப்ப கிட்டத்தட்ட 2 வருசமா இணையத்தின் உதவியாலும் இடைவிடாமல் எழுதறதன் உதவியாலும் நான் கத்துக்கிட்ட தமிழ்ச் சொற்கள் ஏராளம். அதுவும், தமிழ்னு நாம நினைச்சிட்டிருக்க சமஸ்கிருதச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களை மாற்றி உபயோகிக்க ஆரம்பிச்சிருக்கிறது சமீபத்தில் தான்!
கால்கரி சிவா... கொத்ஸின் கொத்து பரோட்டாவையும் விட்டு வைக்கலியே :-)
"தமிழில் எழுதலாம் வாருங்கள்
வலையில் பரப்பலாம் வாருங்கள்"
ஆகா.. அருமையான பணிக்கு கால்கரி சிவாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
எ-கலப்பை (ஈ கலப்பை அல்ல :-)) பற்றிய வீடியோவும் அருமை. கடந்த 2 வருசமா கூகுள்குழுமம் (அன்புடன்) மூலம் இப்பணியை நண்பர்கள் சிலரும் செஞ்சிட்டு வரோம்... சில பிரபல பதிவர்கள் உட்பட பலருக்கும் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி ஆனந்தப்படுத்தியிருக்கோம்.
ஆனா ஒண்ணு.. இந்த யாகூவை வச்சிட்டே எப்படித் தான் யுனிகோடுக்கு அலக்குடுக்குறீங்களோ தெரியல.. ஒவ்வொரு முறையும் போய் என்கோடிங்கை மாத்துவீங்களா? இதுக்குத் தான் ஜிமெயில் பயன்படுத்தணும்கிறது :-)
அப்புறம்.. உங்க 3வது வீடியோவில் நானும் வந்துட்டேன் போலிருக்கு.. வாசிச்ச மறுமொழி போக, மத்ததும் நிறைய என் மறுமொழியா இருக்கு? :-D
ஆகா, கடைசியிலே எல்லா வீடியோவும் பார்த்திட்டீங்க!
//ஆனா ஒண்ணு.. இந்த யாகூவை வச்சிட்டே எப்படித் தான் யுனிகோடுக்கு அலக்குடுக்குறீங்களோ தெரியல.. ஒவ்வொரு முறையும் போய் என்கோடிங்கை மாத்துவீங்களா? இதுக்குத் தான் ஜிமெயில் பயன்படுத்தணும்கிறது :-)//சரியா சொன்னீங்க, ஆனாலும் பழக்க தோஷம்,போகமாட்டேங்கிது!
//மத்ததும் நிறைய என் மறுமொழியா இருக்கு?//அப்புறம் உங்கள விட்டா யாரு இருக்கா மறுமொழி போட!
எல்லாம் சரி, நீங்க demo'ல சொன்ன keyboard layoutம், என்னோட keyboard layoutம் வேற வேறயா இருக்கு, என்னோடதும் எ-கலப்பை தான், தமிழ்99 தான், உதாரணத்துக்கு ந-;, ன-I. ஏன் இந்த வித்தியாசம்?
(இதை டைப் பண்ணறதுக்குள்ள வலி உயிர் போகுதே?)
செந்திலின் இந்தக் கேள்விக்கு எனக்கும் பதில் தெரியலை. நான் எ-கலப்பை கொண்டு தட்டச்சு செய்யும் முறை:
ந : wa அல்லது n-a
ன : na
செந்தில், நீங்க தரவிறக்கம் செய்த எ-கலப்பை, அஞ்சல் முரசு சார்ந்ததா, இல்லை தமிழ்நெட்99 சார்ந்ததா? அஞ்சல் முரசு சார்ந்தென்றால் இந்த பிரச்சனை வர வாய்ப்பில்லை! அப்பறம் சேதுக்கரசி சொன்னது போல தான் 'ந' எழுத்திற்கு தட்டச்சு செய்ய வேண்டும்!
உங்களுடைய இந்த பதிவு என்னை போன்று புதிதாக தமிழை இணையங்களில் உபயோகப்படுத்த ஆரம்பித்துள்ளவ்ர்களுக்கு சரியான வழிகாட்டி.
உங்களுடைய தமிழ் தொண்டுக்கு நன்றி.
-கிச்சா.
Post a Comment