Thursday, February 22, 2007

கமலுக்கு கை கொடுத்த பரதம்!

ரொம்ப நாளாவே இந்த நடிப்பை பத்தி நான் எழுதி வர்ற பதிவுகள்ல எனக்கேத் தெரியாம அப்ப அப்ப கமலை கிரிட்டிஸைஸ் பண்ணி எழுதினேன், அதனாலே நம்ம ஜோவிலிருந்து கொத்தனார் வரை காட்டஞ்சாட்டமா பின்னோட்டம் போட்டு என்னா ஏது இப்படி சொல்றீங்களேன்னு கேட்டதுக்கு பதில் பதிவு போடனும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது அப்படியே தள்ளிப் போயிடுச்சி! அதுக்குத்தான் இந்த பதிவு!

கமல் வந்து ஒரு ச்சைல்ட் ஆக்டர், அதாவது சின்னபுள்ளேயிலிருந்தே நடிக்க வந்தவர். ஜெமினி மாமாவோட 'களத்தூர் கண்ணம்மா'ன்னு ஆரம்பிச்சி எம்ஜிஆரோட ஆனந்த ஜோதியிலே 'ஆர் எஸ் எஸ்' மாதிரி 'ஒரு தாய் மக்கள் நாம் என்போம்'னு ஆடிப்பாடி நடிக்க ஆரம்பிச்சவரு! பொதுவா பார்த்தீங்கன்னா இந்த ச்சைல்ட் ஆர்டிஸ்ட்ங்க வளர்ந்தபின்னாடி, பெரிய ஆளா வர ரொம்ப சிரமப்படுவாங்க, அப்படி கஷ்டபட்டு வந்தாலும் சரியா சோபிக்க மாட்டாங்க! உதாரணத்துக்கு நீங்க நெறைய பேத்தை எடுத்துக்கிடலாம். சின்ன புள்ளையிலே கொடிகட்டி பறந்த 'குட்டி பத்மினி' பத்தி உங்களுக்கு எத்தனை பேருக்கு தெரிஞ்சிருக்குமோ எனக்குத்தெரியாது, டிவியிலே எஸ் வீ சேகர் டிராமா 'வண்ணக் கோலங்கள்' பார்த்திருந்தீங்கன்னா, அதுல அம்மணி தான் ஹீரோயின்! அந்த அம்மா சின்ன புள்ளையா நடிச்சப்ப இருந்த பாப்புலாரிட்டி அவ்வளோ, வெறும் பத்மினின்னு பேரை வச்சுக்கிட்டு நம்ம பப்பிம்மா பத்மினிக்கே சவாலா, பேரிலதான், இருந்ததாலே இந்த 'குட்டி'ங்கிற அடை மொழி வந்துச்சு! அப்படி சின்னபுள்ளையிலே போடு போடுன்னு போட்ட பொண்ணு! ஆனா வளர்ந்து நிலைக்கிலே!

அது மாதிரி அவங்க அண்ணன், மாஸ்டர் பிரபாகர், அந்த காலத்திலே பிஸியா இருந்த ச்சைல்ட் ஆக்டர், வா ராஜா வா, இரு கோடுகள், அப்படின்னு எக்கசக்கப்படம் அப்ப வந்த எல்லா படத்திலேயும் கதைக்கே சம்பந்தமில்லாம சின்னபுள்ளைக்கூட்டத்திலே காமிக்கனும்னாலும், இல்லை சின்னப்புள்ளையிலே நடந்த ப்ளாஸ்பேக் சொல்லனும்னாலும் இவரு இல்லாம படமில்லைன்னு இருந்த காலம்! இவரு தான் எனக்கு 'ரோல்மாடல்' அப்ப, எனக்கும் நடிப்புன்னு வந்தப்ப, பூனை புலியை பார்த்து சூடுபோட்ட கதையா நானும் அலைஞ்சேன்! அந்த சோகக்கதையை நான் ஏற்கனவே எழுதின 'வா...ராஜா..வா..' பதிவிலே வேணும்னா போய் படிங்க! ஆனா பார்த்தீங்கன்னா இவரு வளர்ந்து பெரியவனாயி, என்ன கர்ணம் போட்டும் சினிமாவிலே தலை காட்ட முடியிலே! அதாவது எஸ்டாபிளிஸ்ட் ஆக்டரா ஆகமுடியிலே, அங்கொண்ணு இங்கொண்ணுன்னு நடிச்சிட்டு போயி சேர்ந்திட்டாரு!

அதே மாதிரி இன்னொரு எஸ்டாபிளிஷ்ட் ச்சைல்ட் ஆர்டிஸ்ட், மாஸ்டர் சேகர், எம்ஜிஆர் படத்திலே 'ஒளிவிளக்கு', சிவாஜி படத்திலே 'ராஜா' எல்லாம் நான் இவரை இன்னொரு தடவை பார்க்கணும்னு போய் அவருக்காக ஒரு முறை பார்த்த அனுபவம் உண்டு, அதாவது பொதுவா எம்ஜிஆர் படம் குறைஞ்சது மூணு தடவை பார்த்துடுவேன், ஆக அந்த கணக்கிலே இவரு கணக்கு ஒரு தடவை! ஆனாப் பாருங்க இவரும் பெரிய ஆளாயி ஒன்னும் சுகப்படலே! இவரு வயசுக்கு வந்து ஒரு பலானப்படம் வந்துச்சு 'மஞ்சள்முகமே வருக'ன்னு அதிலே தான் இப்ப அம்மாவா கலக்கிட்டு இருக்கிற 'சத்யகலா' அப்படியே ஏகப்பட்ட கவர்ச்சியோட நடிச்சு எங்களை சூடேத்தின அம்முணி! இதை ஏன் சொல்றேன்னா, இவங்க எல்லாம் 'எஞ்சோட்டு' பசங்க! அதுக்கப்பறம் இவரும் பெரிய ஆளா வந்து சுகப்படல!

ஏன் கொஞ்சகாலத்துக்கு முன்னே கலக்கிகிட்டு இருந்த காஜாஷரீப்பும், இப்ப விடலை முடிஞ்சு வாலிபம் வந்து ஒன்னும் சுகப்பட்ட மாதிரி தெரியலை! அப்படி சின்னவயசிலேருந்து நடிக்க வந்து வாலிபம் வந்து நடிக்க ஆரம்பிச்சு உருப்பட்டதிலே நம்ம கமலும்,ஸ்ரீதேவியும் தான்!அப்பறம் இப்ப வெற்றி பெற்றது 'ஷாலினி', ஏனோ அந்த அம்மாவும் தொடந்து நடிக்கல! ஆனா கமலு தன்னை நிரூபிச்சு நல்ல நடிகன்னு காமிக்கறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டாரு! அதைத்தான் நான் அப்ப சொல்ல வந்தேன்! அதாவது அவரும் வயசுக்கு வந்து நடிக்க ஆரம்பிச்சோன, முதல்ல பாலசந்தர், அவரை 'சொல்லத்தான் நினைக்கிறேன்'ல வில்லனா போட்டு அறிமுகப்படுத்தினாரு! அதுக்கு முன்னே அவரு மலையாளப்படத்திலே நம்ம ஷகீலா ரேஞ்சுக்கு அப்ப நடிச்சு ஒரு படம் வெளி வந்தது, அது 'ராஸலீலா'ன்னு! ரொம்ப ஞ்சூடேத்திரப்படம், பிரத்யோக காலைகாட்சிப்படம், பிட்டுப்படமாதிரி! அப்ப அது மாதிரி தான் நடிச்சிக்கிட்டு இருந்தாரு! பாவம் என்ட்ரீ கிடைக்காம கஷ்டபட்டுக்கிட்டு இருந்த நேரம், அப்ப!

அப்ப தான் சினிமாவிலே டான்ஸ் மாஸ்டர் வேலை செஞ்சுக்கிட்டு, அப்பறம் ஆர் சி சக்தியோட சுத்திக்கிட்டிருந்தப்ப தான் பாலசந்தர் ஒரு பிரேக் கொடுத்தாரு! வேணும்னா அந்த கால 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அரங்கேற்றம்' படமெல்லாம் பாருங்க, ஆளு ஒல்லிப்பிச்சான் மாதிரி சரியான ஐயர்வூட்டு தயிர் சாதம் பையன் மாதிரி தான் இருப்பாரு! அப்ப தான் 'தண்டால், வெயிட்லிஃப்டிங்,அப்படின்னு தேகப்பயிற்சி செஞ்சு உடம்பை தேத்திக்கிட்டு கொஞ்சம் கொஞ்சமா ஆளாகிக்கிட்டிருந்த நேரம். அவரை ஷேப் பண்ணைதிலே பெரும் பங்கு பாலசந்தரோடது! நீங்க இந்த வித்தியாசத்தை அபூர்வராகங்களுக்கும், அவள் ஒரு தொடர்கதைக்கும் இடையே பார்க்கலாம்!

ஆக இந்த இடைப்பட்ட நேரத்திலே சில மற்றவர்கள் படத்திலேயும் நடிச்சாரு, அழக்கூடத்தெரியாதுன்னு நான் சொன்னேன்ல, வேணும்னா தமிழ்ல எடுத்த ஹிந்திப்படமான 'மதர் இண்டியா', பேரு என்னான்னு தெரியலை, அதுல அவரு அழுது நடிக்கறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுச்சு! அப்பறம் தேத்தின உடம்பை காமிச்சு அசத்திக்கிட்டு இருப்பாரு படத்துக்கு படம், இந்த சல்மான்கான் மாதிரி! கோகிலா, மரோச்சரித்திரா, மன்மதலீலை, அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்! ஏன்னா நடிப்புக்குறை ஏதும் இருந்தா அதை மறைக்கிறதுக்கு!

அப்பறம் அவருக்கு கிடைச்ச 'லவ்வர் பாய்' இமேஜ், அதிலே அவரு நல்லாவே கேப்டலைஸ் பண்ணினாரு! அதானாலேயே ஜொமினி மாமாவுக்கு, 'காதல் மன்னன்' பட்டம் கொடுத்திட்டாதினாலே இவருக்கு 'காதல் இளவரசன்' பட்டம் கொடுத்தாங்க! அப்ப இவருகிட்ட நடிச்ச எல்லா ஹீரோயினுக்கும் முத்தம் கொடுக்கலேன்னா தூக்கம் வராது! அப்ப தான் வயசுக்கு மீறுன வளர்ச்சியோட வந்த தீபாவை வச்சு நம்ம பாபிப்பட ஸ்டைல்ல ஒரு நீச்சல் டிரெஸ்ல ஒரு படம் வந்துது, முதன்முதல்ல கமல் அதுலே பாட ஆரம்பிச்சாரு, படம் பேரு தெரியலை, தெரிஞ்சவங்க பின்னோட்டம் போடுங்க! இப்படி நடிப்புல வெரைட்டின்னு ஒன்னும் காமிக்கல்லை அப்ப! உடம்பை காமிச்சும், காதல் பண்ணியும் ஒப்பேத்தினாரு! ஆனா அப்ப அவரு கொஞ்சம் எங்களுக்கெல்லாம் ரோல்மாடல் தான் ரொமான்ஸ் பண்ணறதுக்கு! என்னோட தேகப்பயிற்சி, பேரலல் பார், வெயிட்லிஃப்டிங் இப்படின்னு ஒரே தீவிரமா உடம்பை வச்சு பொண்ணுங்களை மயக்க முடியும்னு அடி போடவும் காரணமா இருந்தவரு! (அப்படி ஏதும் காரியம் ஆகலைங்கிறது வேறே விஷயம்!)

ஆனா அப்ப அவருகிட்ட புடிக்காத ஒன்னு என்னான்னா இந்த பரத நாட்டியத்தை எக்ஸ்போஸ் பண்ணுனது தான்! பொட்டபுள்ளைங்களுக்கு வேணும்னா, 'ஆகா என்னா அழகா, அம்சமா அபிநயம் புடிக்கிறாரு கமலு'ன்னு ஓ போட வச்சாலும், எனக்கென்னமோ நிழல் நிஜமாகிறதுலஒரு சீன்ல ஆடி காமிச்சது கடுப்பாதான் இருந்தது, இதை இந்தியிலே 'திகாவத்'ன்னு சொல்லுவாங்க! அதாவது தமிழ்ல'பீத்திக்கறது'ன்னு சொல்றது! அப்படி தான் எனக்கு தோணுச்சு! பொட்டபுள்ளைக்கு கத்துகுடுக்கறதை இவரும் கத்துக்கிட்டு ஆடுறாரு, இதிலெ என்னா இருக்குன்னு! ஒரு வேளை இது என்னோட ஆற்றாமையாக் கூட இருக்கலாம்! ஏன்னா தேகப்பயிற்சி பண்ணி உடம்பை தேத்திறதிலே எந்த சிரமம் இல்லை, அவரை காப்பி அடிச்சு, ஆனா பரதம் ஆடனும்னா, எங்கப்போறது?

இந்த மாதிரி பரதம் ஆடி வியக்க வைக்கிறதை அவரு 'சொல்லத்தான் நினைக்கிறேன்'லேயே செய்ய ஆரம்பிச்சிட்டாரு! அதாவது வராத நடிப்பை மறைக்க கைகொடுத்தது இந்த பரதம், ஆக மக்கள் தனித்துமா அடையாளம் கண்டு கொள்ள இது அவருக்கு உதவுச்சு!

ஆனா பார்த்தீங்கன்னா, பிறகு கொஞ்சம் கொஞ்சமா நடிப்பிலேமெச்சூரிட்டி வர ஆரம்பிச்சு, இந்த பரத்தை நல்ல நடிப்பா காட்டி அதை எக்ஸ்ட்ரீம் எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் பண்ணி வெளி வந்தப்படம் 'சலங்கை ஒலி'! சொல்லக்கூடாது சும்மா அசத்தியிருப்பாரு! அதுக்காக 'நிழல் நிஜமாகிறது' நல்லா இல்லேன்னு சொல்லலை, அது கேபியோட இன்னொரு மாஸ்டர் பீஸ், அதைப் பத்தி அப்பறமா எழுதுறேன்!

நீங்க இந்த வித்தியாசத்தை இந்த வீடியோ கிளிப்புலே பார்க்கிலாம்! ஆக எனக்கும் கமல்பிடிக்கும் தான்! ஆனா வெரைட்டி காட்றேன்னு கஷ்டபட்டு கெட்டப்பை மாத்தி, உழைச்சு நல்லா தான் நிறைய படங்கள்ல நடிக்கிறாரு! இருந்தாலும் நடிப்பிலே தன்னை வருத்திக்காமே வெரைட்டி காட்ட முடியாதாங்கிறது தான் என் ஆதங்கம்! இதோ பக்கத்திலே மலையாளத்திலே நடிச்சிக்கிட்டிருக்கிற மோகன்லால் படங்கள் நீங்கள் எத்தனை பேரு பார்ப்பீங்களோ எனக்குத் தெரியாது! அவரு மீசைக்கூட ஒதுக்கி உட்டுகிறது கிடையாது, ஆனா படத்துக்கு படம் அவ்வளவு வெரைட்டி நீங்கப் பார்க்கலாம்! அதைத் தான் நான் சொல்ல வந்தேன்! மற்றபடி எனக்கும் கமலை நல்லாவே புடிக்கும், அவர் நடிச்ச எத்தனையோ படங்களை அப்படியே சிலாகிச்சு ரசிச்சு சோறு தண்ணி இல்லாம, அப்ப அதை பத்தியே நினைச்சு மருகி காலேஜ் ஹாஸ்டல் காலம் தள்ளின காலங்களும் உண்டு! ஆக ஜோ, இலவசக் கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், ஏன் நம்ம கால்கிரி சிவாக்கூட கேட்டிருந்திரு, 'உங்களுக்கும் கமலுக்கும் முன் ஜென்ம பகையான்னு' உங்க எல்லாத்துக்கும் இந்த பதிவு என் பதில்! இப்ப வீடியோ கிளிப்பு பாருங்க!

25 comments:

said...

வெளிகண்ட நாதரே!

youtube வீடியோவைக் காட்ட இவ்ளோ பெரிய பில்டப் பதிவா! யம்மாடி!

சரிசரி. ஒங்களுக்கும் கமலுக்கும் முன்ஜென்மப் பகை கிடையாதுன்னு ஒத்துக்கிட்டதுக்கு நன்றி.

//ஆக ஜோ, இலவசக் கொத்தனார், ஸ்ரீதர் வெங்கட், ஏன் நம்ம கால்கிரி சிவாக்கூட கேட்டிருந்திரு, 'உங்களுக்கும் கமலுக்கும் முன் ஜென்ம பகையான்னு' உங்க எல்லாத்துக்கும் இந்த பதிவு என் பதில்//

பின்னூட்டத்துல வந்து சொன்னதுக்காக அவங்கள்ளாம் மட்டும் கமல் ரசிகர்கள் மாதிரியும் சும்மா படிச்சுட்டுப் போனதுக்காக நானெல்லாம் கமல் ரசிகன் இல்லைமாதிரியும் தொனிக்கிற மாதிரி எழுதியமைக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

//அப்ப தான் வயசுக்கு மீறுன வளர்ச்சியோட வந்த தீபாவை வச்சு நம்ம பாபிப்பட ஸ்டைல்ல ஒரு நீச்சல் டிரெஸ்ல ஒரு படம் வந்துது, முதன்முதல்ல கமல் அதுலே பாட ஆரம்பிச்சாரு, படம் பேரு தெரியலை, தெரிஞ்சவங்க பின்னோட்டம் போடுங்க!//

அந்தரங்கம் - பாட்டு "ஞாயிறு ஒளி மழையில்" தமிழ்ல அவரோட மொதப் பாட்டு.

"கலக்கப் போவது யாரு"ன்னு விஜய்ல ஓரிரு வருஷங்களுக்கு முன்னாடி ஒரு நிகழ்ச்சில கமல் மையமா ('மய்யம்' பத்திரிகை ஞாபகமிருக்கா?) ஒக்காந்திட்டு இருக்க பிரபலங்கள் ஒவ்வொருத்தரா வந்து பேசுவாங்க. பாலு வந்தப்ப கமலை அவரது பாடல்களுக்காகப் பாராட்ட, அவரு "நீங்க வேற. நான் ஞாயிறு ஒளி மழையில் பாட்டக் கேக்கம்போது மூக்காலயே பாடிருந்தது தெரிஞ்சது"ன்று சிரிச்சிக்கிட்டே ஒத்துக்கிட்டார்! :-) ஆனாலும் நடிகனா இருக்கற வசதியினால குரல்லயே உணர்வுகளைப் பிழிஞ்சிப் பாடின பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். சுந்தரி நீயும், தென் பாண்டிச் சீமையிலே, இஞ்சி இடுப்பழகி...ன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.

இருந்தாலும் கமலோட கலைப்பயணத்னின் ஹைலைட்ஸைக் குயிக்காக் காட்டினதுக்கு நன்றி.

said...

//பொட்டபுள்ளைக்கு கத்துகுடுக்கறதை இவரும் கத்துக்கிட்டு ஆடுறாரு, இதிலெ என்னா இருக்குன்னு! ஒரு வேளை இது என்னோட ஆற்றாமையாக் கூட இருக்கலாம்!//

பாத்துங்க இந்த மாதிரி ஸ்டேட்மெண்ட் எல்லாம் விடறீங்க. அப்புறம் நம்ம பிள்ளைங்க எல்லாம் வந்து பெண் ஈயம் காச்சு ஊத்திரப் போறாங்க!!

On a serious note, பரதநாட்டியம் பெண்களுக்கு உரியது என்ற உங்கள் கருத்து ஏற்பதாக இல்லை. எத்தனையோ ஆண்கள் திறம்பட ஆடி பெயரும் புகழும் சம்பாதித்துள்ளார்கள்.

மற்றபடி பதிவில் மீண்டும் கெட்டப் மாற்றாமல் கமலுக்கு நடிக்கத் தெரியாது என்று சாட்டையை சுழற்றியுள்ளீர்கள். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை! ;)

said...

//ஒரு வேளை இது என்னோட ஆற்றாமையாக் கூட இருக்கலாம்!//

இதுக்கு அதே! அதே! போடணமுன்னு நினைச்சேன். விட்டுப் போச்சே!

said...

//பின்னூட்டத்துல வந்து சொன்னதுக்காக அவங்கள்ளாம் மட்டும் கமல் ரசிகர்கள் மாதிரியும் சும்மா படிச்சுட்டுப் போனதுக்காக நானெல்லாம் கமல் ரசிகன் இல்லைமாதிரியும் தொனிக்கிற மாதிரி எழுதியமைக்கு என் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்//சுந்தர், பேரு உட்டுபோனதுக்கு மன்னிக்கவும்-:) இனிமே ஞானகண்ணிலே பார்க்கிறேன் உங்க பின்னோட்டத்தை!

//சுந்தரி நீயும், தென் பாண்டிச் சீமையிலே, இஞ்சி இடுப்பழகி...ன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.//நீங்க போட்ட லிஸ்ட் எனக்கும் பிடிக்கும், இஞ்சி இடுப்பழகா பத்தி ஒரு பதிவு போட பாக்கி இருக்கிறது. நல்ல பாட்டு, படமாக்கின விதம், நிறைய சிலாகிச்சிருக்கேன், பதிவு போடத்தான் நேரம் கிடைக்க மாட்டேங்குது!

said...

//பாத்துங்க இந்த மாதிரி ஸ்டேட்மெண்ட் எல்லாம் விடறீங்க. அப்புறம் நம்ம பிள்ளைங்க எல்லாம் வந்து பெண் ஈயம் காச்சு ஊத்திரப் போறாங்க!! //சர்தான் நீங்களே போட்டு குடுத்துவீங்க போல இருக்கே!

//On a serious note, பரதநாட்டியம் பெண்களுக்கு உரியது என்ற உங்கள் கருத்து ஏற்பதாக இல்லை. எத்தனையோ ஆண்கள் திறம்பட ஆடி பெயரும் புகழும் சம்பாதித்துள்ளார்கள்.//oh yes, எனக்குத் தெரியும், இருந்தாலும் இந்த நினைப்பு அந்த வயசிலே வந்த ஒன்னு, கமலு நடிப்புக்கு மெச்சூரிட்டி வர காலம் புடிச்ச மாதிரி இந்த நினைப்பு அகல நமக்கும் காலம் புடிச்சிது, வயசும், அனுபவம் நிறைய கத்துக்கொடுக்கும், இது சும்மா நினைவுப்பதிவே-:)

said...

//மற்றபடி பதிவில் மீண்டும் கெட்டப் மாற்றாமல் கமலுக்கு நடிக்கத் தெரியாது என்று சாட்டையை சுழற்றியுள்ளீர்கள். நான் ஒன்றும் சொல்வதற்கில்லை! ;)//நீங்க ஒத்துக்கிறீங்களா இல்லையா??

said...

////சுந்தரி நீயும், தென் பாண்டிச் சீமையிலே, இஞ்சி இடுப்பழகி...ன்னு சொல்லிக்கிட்டே போகலாம்.//நீங்க போட்ட லிஸ்ட் எனக்கும் பிடிக்கும்,//

இவையெல்லாத்தையும் விட எனக்கு மாருகோ மாருகோ (சதி லீலாவதி, வெற்றிவிழா இல்லை)தான் ரொம்பப் பிடிக்கும். :))

said...

//நீங்க ஒத்துக்கிறீங்களா இல்லையா??//

நான் ஒத்துப்பேனா? நீங்களே சொல்லுங்க. நான் ஒண்ணும் சொல்லறதுக்கில்லைன்னு சொன்னாலும் வம்புக்கு இழுக்கறீங்களேப்பா...

said...

//இவையெல்லாத்தையும் விட எனக்கு மாருகோ மாருகோ (சதி லீலாவதி, வெற்றிவிழா இல்லை)தான் ரொம்பப் பிடிக்கும். :))//அது என்னாங்க இருக்கிற கதாநாயகியை விட்டுட்டு கோவைசரளாவை ஜோடி போட்ட படமும் பாட்டும் புடிக்கிதுங்கிறீங்க!

said...

ஒரு கலைஞனின் வளர்ச்சியை வேகமாக படம் பிடித்திருக்கிறீர்கள். கமல் ஆரம்பத்தில் சொதப்பி இன்று கொடிகட்டி பறக்கிறார். சூப்பர்ஸ்டார் ஆரம்பத்தில் வெரைட்டி காண்பித்து இப்போது சொதப்புகிறார்.

said...

//சூப்பர்ஸ்டார் ஆரம்பத்தில் வெரைட்டி காண்பித்து இப்போது சொதப்புகிறார்//அவருக்கு இந்த வெரைட்டி எல்லாம் ஒன்னும் கிடையாதே! அவருக்குன்னு உண்டான ஃபார்முலாக்குள்ள அவரு நடிப்பாரு, அப்பறம் எங்க வெரைட்டி எல்லாம்??

said...

இதெல்லாம் கொஞ்சங்கூட சரியில்ல.. சொல்லிட்டேன்.

said...

//இதெல்லாம் கொஞ்சங்கூட சரியில்ல.. சொல்லிட்டேன்//அப்படி என்ன எழுதிட்டேன்னு, இவ்வளவு எச்சரிக்கை-:) உள்ளதை சொல்றேன்!

said...

இப்ப என்ன சொல்லவரீங்க.. ஆரம்பத்துல தான் நல்லா நடிக்கலியா இல்ல எப்பவுமே மத்த விசயங்களில் நடிப்புக் குறையை அமுக்கிட்டாரா?

//(சூப்பர்ஸ்டார்) அவருக்குன்னு உண்டான ஃபார்முலாக்குள்ள அவரு நடிப்பாரு//

ஃபார்முலா டவுன் டவுன் :-) இப்படித்தான் விஜய்யும் கெட்டுப்போறாரு :-)

said...

நான் சொல்ல வர்றது என்னான்னா, இந்த கெட்டப்பு மாத்திரேன்னு, அஷ்டகோணலா என்னென்னமோ பண்ணி திரியறதை, ஆகா என்னா நடிப்புன்னு சிலாகிக்கிறதை தான், அது வெறுமனே, கேஷுவலா பண்ணிட முடியும்ங்கிரது தான்!

//ஃபார்முலா டவுன் டவுன் :-) இப்படித்தான் விஜய்யும் கெட்டுப்போறாரு :-)//இதை அவுங்களே வகுத்துக்கிட்டது தான்! கேட்ட ரசிகர்கள்னூ பழியை தூக்கி போட்டுடுவாங்க! இதை மாத்தனும்னா, மகேந்திரன் மாதிரி ஆளுங்க வேணும்!

said...

சரியான சொதப்பல் பதிவு.
//இந்த பரத்தை நல்ல நடிப்பா காட்டி அதை எக்ஸ்ட்ரீம் எக்ஸ்ப்ளாய்ட்டேஷன் பண்ணி வெளி வந்தப்படம் 'சலங்கை ஒலி'! சொல்லக்கூடாது சும்மா அசத்தியிருப்பாரு! //
அதாவது சலங்கை ஒலியில் நடனம் போக மற்ற காட்சிகளில் அவர் நடிப்பு அப்படி ஒன்ரும் பிரம்மாதமில்லை..இதான் உங்க வாதமா? ஐயோ கடவுளே! உங்க கருத்தை நீங்களே வச்சுகுங்க .பேசுறதுக்கு எதுவுமில்லை .சாரி.

said...

ஜோ, பார்த்தீங்களா, இந்த கமலஹாசன் ரசிகர்களுக்கே உண்டான உணர்ச்சிக்குழம்பா இருக்கீங்களே! நான் சொல்லவந்தது, அவரு பரதத்தையும் எக்ச்பிளாய்ட் பண்ணி அவரு முன்னேறுனாருன்னு! ஆம்பள பசங்க அந்தக் காலத்திலே பரத்நாட்டியம் கத்துக்க ஆசைப்பட்டது அவரு ஆரம்பிச்சு வச்ச சினிமா கட்ட்சியாலே தான்! அவருகிட்ட இருந்த ஒரு திறமையை உபயோகிச்சுகிட்டாருன்னே! அதுக்காக மத்ததெல்லாம் ஓன்னுமில்லைன்னு சொல்ல முடியாது!

said...

வெளிகண்ட நாதரே,

தெரியாம விக்கி பசங்கல உங்களுக்கு அழைப்ப கொடுத்திடேன். கொத்தனார் வந்து சொல்லிட்டு போனாரு.சொ உங்களுக்கு இங்க இன்னொரு அழைப்பு.

உங்களோட "வியர்டுநெஸ்ஸ ஒரு பதிவா போட்டு சொல்லுங்க .....:):)

said...

//உங்களோட "வியர்டுநெஸ்ஸ ஒரு பதிவா போட்டு சொல்லுங்க .....:):)//

நம்பர் 1: கமல் புடிக்காது.

said...

//நம்பர் 1: கமல் புடிக்காது.//பேசாம, நீங்களே எனக்கு பதிலா இதை பத்தி பதிவு போடுங்களேன் -:))

said...

//
நிழல் நிஜமாகிறதுலஒரு சீன்ல ஆடி காமிச்சது கடுப்பாதான் இருந்தது, இதை இந்தியிலே 'திகாவத்'ன்னு சொல்லுவாங்க! அதாவது தமிழ்ல'பீத்திக்கறது'ன்னு சொல்றது! அப்படி தான் எனக்கு தோணுச்சு!
//
16 வயதினிலே:

வில்லன் 'டேய்!' என்று திட்டி விட்டாலே தனது 'இமேஜ்' போய்விடும் என்று பயப்படும் இன்றைய கதாநாயகர்கள் வெட்கி தலைகுனியும் விதம், காதல் இளவரசனாகவும், கல்லூரிப் பெண்களின் ஆதர்ச நாயகனாகவும் இருந்த காலகட்டத்தில் தனது 'இமேஜ்' பற்றிய பயமில்லாமல் கதைக்கு தேவையானதால் ஒரு புதிய இயக்குனரின் (பாரதிராஜா) சொல் கேட்டு கோவணத்துடன் நடிக்க தயங்காத கமலின் செயல் பாராட்டத்தக்கது.


நிழல் நிஜமாகிறது :

ஒரே ஒரு படம் 100 நாள் ஒடிவிட்டாலே அடுத்த ரஜினி நான் தான் என்று நினைத்துக் கொண்டு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பீதியில் ஆழ்த்தி அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் இன்றைய இம்சை அரச நாயகர்களிடையே (வடிவேலுவை சொல்லவில்லை), 16 வயதினிலே என்ற வெள்ளிவிழா படத்தை அடுத்து தனக்கு துளியும் முக்கியத்துவம் இல்லாத கதையில் நடித்ததற்காகவே கமலை பாராட்டலாம். பாலசந்தர் உடைத்தெறிந்த தமிழ் சினிமாவின் எத்தனையோ வரையறைகளில் ஒன்று,

"ஒருவனால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும், இல்லை அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்."

ஷோபாவை சுற்றியே பின்னப்பட்ட கமலுக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லாத அருமையான கதை.

முடிந்தால் எனது கமல் ஒரு சகாப்தம் பதிவை படிக்கவும்.

said...

தன்னைப் போன்று திரையை நேசித்த மூத்த பல கலை உலகத்தினர்க்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்ததைப் பற்றி எழுதாலமே! உதாரணமாக

திரு. நாகேஷ்
திருமதி பார்வதி (மை.ம,கா.ரா - பாட்டி & மற்றும் பல படங்கள்)
திரு. கா.கா. இரா.கிருஷ்ணன்.

said...

வாங்க சத்யப்ரியன், நீங்க சொன்ன மாதிரி கமல் எந்த இமேஜிக்கும் பயப்படாம நடிச்சது உண்மை தான். இதெல்லாம் அவருடய இரண்டாம் இன்னிங்ஸ்! முதல்ல அந்த சைல்ட் ஆர்டிஸ்ட்ங்கிற ஸ்டேஜ்லருந்து விடலையாயி ஒரு பிரேக் ஈவன் பாய்ண்ட் வரவரைக்கும் அவரு பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சமில்லை!

நிழல் நிஜமாகிறதிலே அவரு நடிச்ச கேரெக்டர் என்ன ரொம்ப பொறாமை படவைச்சது, நம்மலும் அப்படி அடக்கி ஆண்டு பிறகு ஒன்னு சேர சந்தர்ப்பம் நிஜ வாழ்க்கையிலே வராதான்னு ஏங்கின காலமும் உண்டு! அவ்வளவு பவர்ஃபுல் கேரெக்டர் அது!

உங்களின் பதிவை படித்தேன், நன்றாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள்!

said...

வந்தமைக்கு நன்றி ராஜகோபால், கண்டிப்பாக ஒரு பதி எழுதி எப்படி அவர் மூத்த கலைஞர்களை நேசித்தார்ன்னு ஒரு பதிவு எழுதுகிறேன்!

said...

//பேசாம, நீங்களே எனக்கு பதிலா இதை பத்தி பதிவு போடுங்களேன் -:))//

ஆகா.. தப்பா எடுத்துக்கிட்டிருக்க மாட்டீங்கன்னு நம்பறேன்... (வெளியூர் போனதால பிசி)