என்ன புதுசா கெளதம் எடுக்கிற படத்தலைப்பை வச்சு ஒரு பதிவு போட்டுருக்கேன்னு பார்க்கிறீங்களா! அதான் இது ரொம்ப நாளா எழுதுனும்னு நினைச்ச பதிவு, பல பாகங்கள்ல வரும்! அதாவது நான் சின்ன வயசிலே ரசிச்சு, ரசிகனா இருந்த எங்கள் தலைவர் எம்ஜியார் பத்தி இது வரை சொல்லவே இல்லியே, என்னோட அரிதாரத் தொடர்ல அப்படியே கொஞ்சம் தொட்டு வச்சேன், நான் அவரோட ரசிகர்னு, ஆனா அதிகமா எழுதலை அதான்! இந்த தலைப்பிலே வரும் பாடல், அப்ப ரொம்ப பாப்புலர், 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்திலே நம்ம தலைவர் தாய்லாந்து நடிகையோட ஆடிப்பாடி வரும் கனவுப்பாடல்! இந்த படத்தை பத்தி சொல்லிக்கிட்டே போகலாம்! இந்தப்படம் 70களின் தொடக்கத்திலே வந்த ஒன்னு, எனக்கு தெரிஞ்சு இந்த படம் அப்பே எவ்வளவோ பேருக்கு வாழ்க்கை கொடுத்த ஒன்னு, என்ன பார்க்கிறீங்க, அப்ப எனக்கு தெரிஞ்சு இந்த படம் திருச்சி பேலஸ் தியோட்டர்ல வெளி வந்து, அந்த தியேட்டர்ல வேலை செஞ்ச, எனக்கு தெரிஞ்ச ஒருத்தரு, இந்த படம் ஓடின அத்தனை நாடகளிலேயும் ப்ளாக்ல டிக்கட்டு வித்தே தன் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த கதை உண்டு! அப்படி பல சாதனைகளை முறியடிச்ச படம்.

இந்த படம் வந்தப்ப தான் எம்ஜியார் அரசியல்ல சூடுபிடிக்க ஆரம்பிச்சிருந்த நேரம்! இந்த படம் வந்தா நம்ம கட்சி அம்பேல்ன்னு பயத்து நடுங்கின கலைஞரு இந்த படத்தோட நெகடிவ்களை லேபிலேயே கிழிச்சு போட்டு படம் வெளிவரவிடாம தடுக்க பார்க்கிறாருன்னு அப்போ ஒரு வதந்தியே சுத்தி வந்தது. அதைக்கூட நம்ம மணி இருவர் படத்திலே அப்படி இப்படின்னு காமிச்சு கடைசியிலே, ஒரு நடிகனோட புது படம் வெளியாவதை பாத்து பயப்படும் நிலமையிலே நம்ம கட்சியில்லேன்னு சொல்ற மாதிரி ஒரு டைலாக் வச்சு, கலைஞரை நல்லவரா காட்டி இருப்பாரு, ஏன்னா இருவர் படம் வந்தப்ப திமுக ஆட்சியிலே இருந்த நேரம்! ஆனா இது வதந்தியா, இல்லை உண்மையான்னு எனக்கு தெரியாது, ஆனா 'உலகம் சுற்றும் வாலிபன்' படம் வர்றதுக்கு முன்னே நல்லொதொரு பப்ளிசிட்டி, இதுகூட எம்ஜியாரின் மார்க்கெட்டிங் சாதுர்யம் தான்!
இந்த மாதிரி அந்த காலத்திலே, சின்ன வயசிலே என்னை அறியாமலே அவர் பால் ஈர்க்கப்பட்டு ரசிகனா இருந்தேன், ஆனா இப்ப அவருடய படங்களை திருப்பி பார்க்கும்போது, அதுக்கு நிஜமாவே நல்ல காரணங்கள் இருந்ததா எனக்குப்படுது! அது எப்படின்னு சொல்லத்தான் இந்த பதிவு, வழக்கம்போல வீடியோ கிளிப்புகளோட! இப்ப சமீபத்திலே இந்த படம் பார்த்தப்ப ஒரு ஸ்ட்ரைக்கு!
அப்ப எல்லாம் தியோட்டர்கள் படம் பாக்க போன, ஒரு ஆம்பியன்ஸ்(ambience) இருக்கும் பாருங்க, அது என்னமோ இப்ப வீடியோவிலே வீட்டுக்கூடத்திலே பார்க்கிறப்ப கிடைக்காத ஒன்னு, ஏன் மல்டிபிளக்ஸ்ன்னு, பாப்கார்ன்னு, கோக்ன்னு எடுத்துட்டு போய் சீட்டிலே மாட்டிக்கிட்டு என்னமோ சொகுசா படம் பார்த்தாலும் அந்த காலத்துல தியோட்டர்ல படம் பார்த்த சொகுசே தனி தான்! அதாவது ஆறரை மணி ஷோவுக்கு நாலுக்கே போய் க்யூவிலே நின்னு(இந்த க்யூங்கிறது, கதவை திறந்தப்பறம் தான், அதுக்கு முன்னே நீங்க பலசாலியா இருந்து, டிக்கெட்டு சந்துக்குள்ள போகனும், கொஞ்சம் நோஞ்சான்னாலும், நீங்க எம்ஜியார் படம் பார்க்க அட்லீஸ்ட் ஒரு 50 நாளு வெயிட் பண்ணனும், எம்ஜியார் ஸ்டண்ட் மாதிரி தலை மேலே எல்லாம் நடக்க பழகி இருக்கனும்) , அடிதடின்னு கதவை திறந்து டிக்கெட் வாங்க, ஒரு ஆளு போற மாதிரி இருக்கும் சந்துலே போயி, அப்பறம் டிக்கெட் கவுண்டருக்கு வந்து மஞ்சளோ, பச்சையோ, ரோஸ் கலரா ஒரு டிக்கெட்டை கிழிச்சி வாங்கி, தியோட்டர்குள்ள போயி பின்னாடி சீட்டு புடிக்க ஓடி, தூணுகீணு மறைக்காத இடத்திலே உட்கார்ந்து ஆரம்ப நியூஸ் ரீலு, இல்லை இல்லை, அந்த விளம்பர சிலேடுங்கள்லருந்து பார்த்தாதான் திருப்தி, அதுவும் சரியா பேலஸ் தியேட்டர்ல, படம் போடறதுக்கு முன்னே 'திரைப்படம் ஓடும் பொழுது லாகிரிவஸ்துகள் எதுவும் உபயோகிக்க கூடாது'ன்னு ஒரு சிலைடு போட்டப்பறம் தான் படமே, நாங்க அங்க, இங்கே வெளியே நின்னுகிட்டு இருந்தாலும், அந்த சிலைடை பார்த்தோன்ன, டேய் படம் போடப்போறாண்டான்னு அடிச்சு புடிச்சு போய் உட்கார்ந்து பார்த்த காலம் இருக்கே அது பொற்காலம்! ச்சே..இப்பயும் சத்தம் போடமா, அலுங்காம குலுங்காம இந்த மல்டிபிளக்ஸ்ல போயி படம் பார்க்கறதிலே எந்த சுவாரசியமும் இல்லை போங்க! அதே மாதிரி சினிமா கொட்டகையில் விற்கும் கள்ளமிட்டாய், தேங்கா பர்ஃபி, முறுக்கு எல்லாம் நம்ம உட்கார்ந்த இடத்துக்கு கொண்டாந்து வித்து, அதை வாங்கி சாப்பிடும் இன்பமே தனி தான்! இதெல்லாம் இல்லாத ஒர் ஆம்பியன்ஸ்ல பார்த்த எம்ஜியார் படம் படமேயில்லை!
அப்பறம் படம் ஆரம்பிக்கிறப்ப போடற லோகோ இருக்கே, அதுக்கு பிகிலு தூள் பறக்கும் பாருங்க, எம்ஜியாரே நேரில வந்த மாதிரி! இந்த லோகோவை வச்சு அந்த காலத்திலே கரெக்டா இது இன்னார் கம்பெனின்னு கரெக்டா கண்டுபிடிச்சிடுவோம்! அதாவது எவிஎம், ஜெமினி, சுஜாதா புரெடெக்ஷன்ஸ், அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம்!
30 comments:
சமீபத்தில் (டோண்டு சார் பாணியில் அல்ல) உலகம் சுற்றும் வாலிபன் ,அடிமைப் பெண் இரண்டும் ஒரே டிவிடி -யில் வாங்கினேன் .உ .சு .வாலிபனில் கேட்கக் கேட்க அலுக்காத பாடல்கள்.
அப்புறம் ,பேலஸ் தியேட்டர்-ல நான் நிறைய படங்கள் பார்த்திருக்கேன்.
//அப்புறம் ,பேலஸ் தியேட்டர்-ல நான் நிறைய படங்கள் பார்த்திருக்கேன்//ஆமா, திருச்சியிலே எங்க நீங்க?
//ஆமா, திருச்சியிலே எங்க நீங்க?//
6 வருடங்கள் கல்லூரி வாழ்க்கை திருச்சியில் தான் (புனித வளனார் கல்லூரி)
அப்ப கிளைவ் ஹாஸ்டல்ன்னு சொல்லுங்க! மெயின்கார்டுகேட் பக்கத்திலே மாரீஸ் காம்பெளக்ஸ் இருக்கே, அப்பறம் பேலஸ் எப்படி போனீங்க! நீங்க படிச்சது 80க்கப்பறம்னா, இந்த பேலஸ் எல்லாம் படுத்திருச்சே, அப்ப! அதுக்கும் முன்னேயா நீங்க படிச்சீங்க!
நாதர், kyoto ப்ரொட்டொகோல்
அட போங்க ... நீங்களும் உங்க எம்,ஜி.மாரு படமும் ... ஹும்..
சிவா, உங்க விடை சரி!
தருமி சார், கண்டிப்பா பாசமலர் சீரிஸ் உண்டு, ஏன் கவலைப்படுறீங்க-:)
ஆஹா, நம்ம வாத்தியார் படம் போட்டிட்டீங்க, மிக்க நன்றி சார் !
நானும் எம்ஜிஆரின் சினிமா இரசிகன். மூளைக்கு வேலையில்லாத, கண்ணீரால் நனைக்காத, உற்சாகமூட்டும் படங்கள். உழைக்கும் வர்க்கத்தினருக்கு கிடைத்த ஓபியம்.
வாங்க மணியன், என்ன ரொம்ப நாளா காணோம்! எல்லாருமே ஒரு காலத்திலே வாத்தியாருக்கு ரசிகரா இருந்திக்கணும் சார்!
//இந்த படம் தான் பின்னாடி எல்லாரும் வெளிநாடு போய் படம் புடிக்க பாலபாடம் சொல்லி கொடுத்தது//
அண்ணன் சிவாஜி சிவந்த மண் என்ற படத்தை ஐரோப்பா சென்று எடுத்தது மறந்துவிட்டதா?
இந்தப் படத்தை பற்றிய பல செய்திகளையும் படித்திருக்கிறேன். ஆனால் இதுவரை பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் சில படங்களை பார்த்திருக்கிறேன். அவர் ஒரு charismatic person என்று வியந்திருக்கின்றேனே தவிர அவரின் படங்களை அவ்வளவாக ரசித்தது இல்லை.
சமீபத்திய நாடோடி மன்னன் மறு வெளியீடு வரை அவருடைய வீச்சு அபரிதமானது.
ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். அவருக்கு எதற்காக மிஸ்டர் பாரத் அவார்ட் கொடுத்தார்கள்?
உதயகுமார்,
நம்மூட்டுலே ஒரு எம்ஜியார் ரசிகர் இருக்கார். எம்ஜியார் படத்துலே எம்ஜியாரைத் தவிர
எல்லாமே நல்லா இருக்குமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கார். குடியிருந்த கோயில்
மட்டும் 22 தடவை பார்த்தாராம்.
சிவா, சிவந்தமண் பாடல் காட்சிகளுக்கென்று பிரத்தியோகமாக பிரான்ஸ் போய் எடுத்தாங்க, ஆனா கதை களம் வெளிநாடுகள்ல நடக்கிறதா வச்சு முழுப்படத்தையும் எடுக்க ஆரம்பிச்சது இதுலருந்து தான்! இதுக்கு அத்தாட்சி, ப்ரியா, நினைத்தாலே இனிக்கும் எல்லாம்!
//ரொம்ப நாளாக ஒரு சந்தேகம். அவருக்கு எதற்காக மிஸ்டர் பாரத் அவார்ட் கொடுத்தார்கள்?// அது மிஸ்டர் பாரத்தா இல்லை பாரத் ரத்னாவா??
ஆஹா உங்க வீட்ல நம்ம அண்ணா இருக்காரு! குடியிருந்த கோயில் கண்டிப்பா இந்த தொடர்ல இருக்குன்னு சொல்லுங்க, துளசி! தவறாம அவரையும் படிக்க சொல்லுங்க, இல்லேன்னா நீங்க படிச்சி காமிங்க, வீடியோ கிளிப்புகளை அவரு பார்க்கட்டும்-:)
//அப்ப கிளைவ் ஹாஸ்டல்ன்னு சொல்லுங்க! மெயின்கார்டுகேட் பக்கத்திலே மாரீஸ் காம்பெளக்ஸ் இருக்கே, அப்பறம் பேலஸ் எப்படி போனீங்க! நீங்க படிச்சது 80க்கப்பறம்னா, இந்த பேலஸ் எல்லாம் படுத்திருச்சே, அப்ப! அதுக்கும் முன்னேயா நீங்க படிச்சீங்க!//
நான் படித்தது 89-95 .கிளைவ் ஹாஸ்டல் இல்லை .கல்லூரி வளாகத்திலேயே இருக்கும் நீயூ மற்றும் தூய இருதய விடுதியில் இருந்தேன்.
மாரீஸில் புதுப்படல் பார்ப்பேன் .ஆனால் இண்டு இடுக்குகளில் எங்கே பழைய சிவாஜி படம் ஓடுகிறது என தேடித் தேடி பேலஸ் ,பிரபாத் ,வெலிங்டன் ,ராக்ஸி ,ராமகிருஷ்ணா இங்கே பார்த்தது தான் அதிகம்.
//அது மிஸ்டர் பாரத்தா இல்லை பாரத் ரத்னாவா??//
என்ன இப்படி கேட்டுடிங்க... ரிக்ஷாக்காரன் படத்திற்க்காக மிகச் சிறந்த நடிகர் என்னும் மிஸ்டர் பாரத் அவார்ட் எம் ஜி ஆருக்கு வழங்கப் பட்டிருக்கிறது 1971-ல் இங்கே பார்க்கவும்.
பாரத ரத்னா விருது அவர் இறந்த பிறகு வழங்கப்பட்டது.
எம்ஜியாரோட ஒரு படம் வெளிவந்தப்போ கும்பகோணத்தில நடந்த கலாட்டாவால ஸ்கூல் காலேஜ் எல்லாம் ஒருவாரம் மூடியாச்சு. என்ன படமா இருக்கும் சொல்லுங்க?
//எல்லாருமே ஒரு காலத்திலே வாத்தியாருக்கு ரசிகரா இருந்திக்கணும் சார்!//
அப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு ரொம்ப புளகாங்கிதமடையாதீங்க'ய்யா?
சரி..சரி... அப்ப அடுத்த சீரியல் ஆரம்பிச்ச பிறகு வர்ரேன். இந்த சீரியல் நமக்குத் தாங்காதுங்கோ.. வர்ட்டா ...!
////எல்லாருமே ஒரு காலத்திலே வாத்தியாருக்கு ரசிகரா இருந்திக்கணும் சார்!//
அப்படியெல்லாம் சொல்லிக்கிட்டு ரொம்ப புளகாங்கிதமடையாதீங்க'ய்யா? //
அதானே! நானும் விபரம் தெரிஞ்ச நாளுல இருந்து இன்னிக்கு வரைக்கும் நடிகர் திலகம் ரசிகன் .மற்றபடி எம்.ஜி.ஆர் பாட்டுக்கு ரசிகன்
//ஆனால் இண்டு இடுக்குகளில் எங்கே பழைய சிவாஜி படம் ஓடுகிறது என தேடித் தேடி பேலஸ் ,பிரபாத் ,வெலிங்டன் ,ராக்ஸி ,ராமகிருஷ்ணா இங்கே பார்த்தது தான் அதிகம்.//இப்ப நீங்க சொன்ன பல தியோட்டர்கள் இடிச்சி தரை மட்டமாயிடுச்சு தெரியுமா? நான் இந்த முறை ஊருக்குப்போனப்ப, பிரபாத் இடிச்சு போட்டதை பார்த்து கண்ணுள்ள அப்படியே தண்ணி வந்தது! அந்த காலத்திலே நான் அதிகமா சுவாசிச்சது இந்த பிரபாத் தியோட்டர் வளாகத்திலே தான்! சிவாஜி ரசிகனா இல்லை, சிவாஜி ரசிகன்ங்க பண்ண காமடியை பார்த்து ரசிக்க, அப்பறம் அவங்கெளோடயே அரட்டை அடிக்கன்னு பொழுது போகும், இதை பத்தி சுவாரசியமான சம்பங்கள் எல்லாம் இருக்கு, என்னோட சிவாஜி சீரிஸ்ல இதெல்லாம் வரும், வந்து மறக்காம படிங்க-:)
அப்பறம் நீங்க சொன்ன அத்தனை தியேட்டர்லேயுமே சுவாரசியமான சம்பங்கள், பார்த்த படங்களின் ஞாபகம் இன்னும் அப்படியே பசுமையா இருக்கு! ரொம்ப நன்றி ஞாபக படுத்தினதுக்கு, அப்பறமா எழுதுறேன்!
//என்ன இப்படி கேட்டுடிங்க... ரிக்ஷாக்காரன் படத்திற்க்காக மிகச் சிறந்த நடிகர் என்னும் மிஸ்டர் பாரத் அவார்ட் எம் ஜி ஆருக்கு வழங்கப் பட்டிருக்கிறது//ஆமால்ல! மறந்துபோயிடுச்சு! மஞ்சுளா ஆன்டி க்யூட்டா இருப்பாங்க-:)
//என்ன படமா இருக்கும் சொல்லுங்க?//பத்மா, இது உங்க ஊரு லோக்கல் கலவரமா, அப்ப நீங்க தான் சொல்லனும்!
//சரி..சரி... அப்ப அடுத்த சீரியல் ஆரம்பிச்ச பிறகு வர்ரேன்//தருமி சார், அப்ப ரொம்ப உணர்ச்சிவசப்படுவீங்கல்ல, அப்ப கவனிச்சிக்கிறேன்!
//சிவாஜி ரசிகன்ங்க பண்ண காமடியை பார்த்து ரசிக்க//
இதே மாதிரி எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பண்ற காமெடிக்காகவே எம்.ஜி.ஆர் படம் நிறைய பார்க்கிறதுண்டு .இங்கே படிக்கவும் ... கடற்கரை மணலில் M.G.R படம்
//தருமி சார், அப்ப ரொம்ப உணர்ச்சிவசப்படுவீங்கல்ல, அப்ப கவனிச்சிக்கிறேன்!//
ஓகோ! நாங்க சிவாஜி ரசிகர்னா ,உணர்ச்சிவசப்பட்டு ஓரமா உக்காந்து அழுற கோஷ்டிங்க ..எம்.ஜி.ஆர் ரசிகர்ல்லாம் எப்ப பார்த்தாலும் 'ஓடி ஓடி உழைக்கணும்'-ன்னு ஓடிக்கிட்டிருக்குறவங்கண்ணு உங்களுக்கு ஒரு நினைப்பு..ஹா..ஹா..ஹா
// ... கடற்கரை மணலில் M.G.R படம் //ஜோ, உங்க கடற்கரை மணல் அனுபவம் சுவையா தான் இருந்தது! இந்த வெளியரங்கு தியேட்டர் அனுபவம் என்க்கும் உண்டு, அத்து நான் இன்ஞ்சினியரிங் படிச்சப்ப! சிவாஜி ரசிகன்ங்க செய்யும் காமிடியும் குறைச்சலில்லை! இது போன்ற அதீதம் தானே இவங்க எல்லாரையும் நமக்கு ஆதர்சமாக்கி காட்டியிருக்கு, நிதர்னசம் வேறமாதிரி இருந்தாலும், அதனாலே நல்லாவே ரசிப்போம்! நானும் எழுதுறேன்! இன்னொன்னு, சிவாஜி, கமல் எல்லாரையும் எனக்கு பிடிக்காத மாதிரி ஒரு இமேஜ் வருதுன்னு பார்க்காதீங்க! அவர்களின் சில குணசித்திரங்களை நான் நாள்கணக்கா சிலாகிச்சு இருந்திருக்கிறேன்! என்னா எனக்கு எழுத கொஞ்சம் டைம் எடுக்குது! சொல்றதுக்கு எவ்வளவோ இருக்கு!
எம்.ஜி.ஆரின் இரசிகர்களுக்காக ஒரு சுட்டி
http://www.tamilnation.org/hundredtamils/mgr.htm
அதில் உள்ள பதிவுகள் தமிழில் எழுதப்பட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.
வருகைக்கு நன்றி பாலராஜன் கீதா, நீங்கள் சொன்ன தொடுப்பினை நான் ஏற்கனவே பார்த்து வைத்துள்ளேன்! நான் எழுதும் இந்த பதிவு ஒரு எம்ஜியார் தொடர், கண்டிப்பாக அந்த விஷயங்கள் என் பதிவுகளில் தமிழில் அரங்கேறும்! எனினும் சுட்டி காட்டியதற்கு நன்றி!
Post a Comment