Sunday, February 18, 2007

நோய் தீர்க்கும் ராகங்கள்! - பிலஹரி ராகம்!

இசை என்பது எல்லாத்தையும் தீர்த்துவைக்கும் ஒரு நிவாரணி! எப்பவாது மனசு சஞ்சலத்தோட இருக்கிறப்பவும், இல்லை மகிழ்ச்சியிலே குதுகுலிக்கிறப்பவும், அந்த வேளைகளில் கிடைக்கும் இசை, பாடல்களை கேட்டுப்பாருங்க, அதைவிட ஒரு பெரிய ஆறுதல் எதுவும் இருக்க முடியாது. அது மாதிரி எத்தனை காலமானாலும் பழைய பாடல்களை கேட்கும் பொழுது அந்த பாடல்கள் புதுசா வந்த காலகட்டத்திலே நமக்கு நடந்த பல நிகழ்ச்சிகள் நம் மனசிலே அசை போடும்! ஆகா நாம் வாழ்ந்த அந்த காலங்கள் பொற்காலங்கள்னு தோணும். என்னதான் பழைய போட்டாக்களை நாம் பார்த்து நினைவு கூர்ந்தாலும், நம்மலுடய பிம்பங்களே பிரதிபலித்தாலும், அவ்வளவா நினைவுகளை அசைபோட முடியாது.

ஆனா பாடல்கள், அந்த காலத்திலே காற்றிலே கீதமா வந்த பாடல்கள், அதை கேட்டு அப்போழுது நடந்த சம்பங்களை நினைச்சு சுலபமா கோர்வையாக்கி நினைவு கொள்ள முடியும்! அப்படி இருக்கும் இந்த இசைக்கும் அதனுடன் கூடிய ராகங்களுக்கு நோய் தீர்க்கும் குணம் உண்டுன்னு நான் படிச்சப்ப, அது ஆச்சிரியமில்லை, உண்மைன்னு தான் தோணுச்சு! அதுக்காக ஒரு பெரிய லிஸ்ட்டே போட்டு இன்னன்ன ராகங்கள் இன்னன்ன நோய்களை குணப்படுத்தும்னு போட்டிருந்தாங்க, சரி அதை பத்தி ஆராய்ச்சி பண்ணி பதிவு கம் பாட்காஸ்ட் போடலாமேங்கிற எண்ணத்திலே வந்த முயற்சி தான் இது!

அதுக்காக கொஞ்சம் சிரத்தை எடுத்துக்கிட்டு, ராகங்களின் தொடர்புடைய பாடல்களை தேடி கண்டுபிடிச்சு, அதையும் அந்த பாடல்களின் பின்னனி, அப்பறம் எனக்கு நினைவுக்கு வந்த சம்பங்களை வச்சு இதை ஒரு அழகான பாட்காஸ் போடுவோமேன்னு தான்!

முதல்ல நான் எடுத்துக்கிற ராகம் 'பிலஹரி' என்ற ராகம். இந்த ராகத்துக்கும் காதலுக்கும் தொடர்புண்டுன்னு சொல்றாங்க! அதாவது 'நாஜீவதாரா' என்ற தியாகராஜ் கீர்த்தனை ரொம்பவும் பிரசித்து பெற்ற ஒன்று, இந்த ராகத்திலே அமைந்த ஒன்னு! அதாவது அந்த அந்த காலத்திலே வயித்து வலியால துடிச்சவனுக்கு மருந்தா இந்த ராகத்திலே பாடி குணப்படுத்தினதா சொல்றாங்க! ஆக இந்த 'பிலஹரி' ராகத்திலே பாடி கடவுளை கூப்பிட்டு 'ஏ கோபாலா, கருணைகாட்டு, வயத்து வலிதீர்த்து, என்றும் உன் புகழ் பாட அருள் பாலிப்பாயா'ன்னு பாடி இந்த ராகத்திலே குணப்படுத்துவாங்களாம்!

அப்படி பட்ட இந்த ராகத்திலே வந்த சில சினிமா பாடல்களை நம்ம எல்லாம் இனகொள்ள வேண்டுமென்ற முயற்சியில் இதோ! கொஞ்சும் சலங்கையிலே வரும் 'ஒருமையுடன் நினது திருமலரடி' என்ற பாடல் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய பாடல் அப்பொழுது பிரசித்து பெற்ற ஒன்று, அதற்கு பின் கல்யாணப்பரிசு திரைப்படத்தில் வந்த 'உன்னை கண்டு நான் ஆட என்னை கண்டு நீ ஆட' என்ற பாடல் சுகமாகவும் சோகமாவும் ஒலித்த ஒன்று! A M ராஜா இசையிலே ஸ்ரீதர் இயக்கத்திலே வந்தப்படம்! இந்த படத்திலே தங்கவேலு காமடியும் ரொம்பவும் பாப்புலர்! பிறகு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்த அகத்தியர் படத்திலே வரும் 'தலைவா தவப்புதல்வா வருகவே' என்ற பாடல், பிறகு இந்த ராகத்திலே நம்ம இளையராஜா 'உன்னால் முடியும் தம்பி என்ற படத்திலே இசை அமைச்ச 'நீ ஒன்று தானா என் சங்கதீம்' என்ற பாடல்!

இது மட்டுமில்லாது ஹிந்தியில் வந்த ஆராதனா என்ற படத்தில் வரும் 'கோரா காஹஸ்' என்ற மற்றொரு அருமையான பாடல்!

இதோ இதனுடய தொகுப்பாக இந்த பாட்காஸ்ட்டை கேட்டு மகிழுங்கள்! இனி இது ஒவ்வொரு பாட்காஸ்ட்டா தொடர்ந்து வரும்! கேட்பதற்கு எப்படி இருந்ததுன்னும், மேற்கோண்டு என்னென்ன முன்னேற்றங்களை செஞ்சா நல்லா இருக்கும்னு உங்க பின்னோட்டங்களை போடுங்க!


தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!

13 comments:

said...

இதை தொடர்ந்து அடுத்த ராகமாக வருவது 'ரதிபதிப்ரியா' என்ற ராகம், இதில் அமைந்த பாடல் ஒன்று நீங்கள் கூறலாமே-:)

said...

நாதரே, இந்த பதிவு பாக்காம விட்டுட்டேனே. ராகங்கள் பற்றிய தொடரா?! பேஷ் பேஷ் நடக்கட்டும். :)

இப்போதான் பிலகரி கேட்க ஆரம்பிச்சு இருக்கேன். அதனால அதிகம் பரிச்சயம் இல்லை. இன்னும் கொஞ்ச நாள் கழித்து வேண்டுமானால் பேசலாம்.

said...

ரதிபதிப்ப்ரியா பற்றித் தேடிப் பார்த்தேன். வெகு சில பாடல்களே இருக்கின்றன. நான் அவற்றைச் சொல்லி உங்கள் இடியை திருட விரும்பவில்லை! (அதாங்க I dont want to steal your thunder!!)

said...

வாங்க கொத்ஸ், எனக்கு ராகங்கள், அதன் கீர்த்தனை, அப்பறம் சப்த சங்கதியான் சஜ்ஜ்மம், மத்திமம் பத்தி ஏ பி சி டி எதுவும் எனக்குத் தெரியாது. ஆனா பாமரத்தனமா பாட்டை மட்டும் கேட்டாலும், அந்த இசைகளின் பின்னாடி இருக்கிற இன்ஞினியரிங்கை பத்தி தெரிஞ்சிக்க ஆர்வம் தான். இருந்தாலும் இந்த நோய் தீர்க்கும் நிவாரணின்னு வர்றப்ப ஆர்வம் அதிகமாகி போட்ட பதிவு, அப்பறம் பாட்காஸ்ட் எப்படி புதுமையா போடறதுன்னு யோசிச்சப்ப, இந்த ராகசங்கதிகளையும் மெலோடிகளையும், அப்பறம் நம்ம நினைவலைகளின் பத்தி கதைச்சு போட்ட நல்லா இருக்குமேன்னு வந்த ஆர்வக்கோளாறு! தப்பிருந்த மன்னிக்கவும்!

said...

கேட்டுட்டேன்.. கேட்டுட்டேன்! நல்ல அலசல். அழகான பாடல்களையும் இதனால அப்பப்ப கேட்கமுடியுது. இத சாக்கா வச்சாவது "கோரா காகஸ்" மாதிரி அழகான இந்திப் பாட்டெல்லாம் எப்பவாவது கேட்கமுடியுதே :-)

said...

அப்பா, இதை உடனே கேட்டுட்டீங்க-:)

//"கோரா காகஸ்" மாதிரி அழகான இந்திப் பாட்டெல்லாம் எப்பவாவது கேட்கமுடியுதே :-) //நீங்க என்ன இந்திப்ப்பாடல் பிரியையா??

said...

இந்த ராகத்தில் அமைந்த மற்றொறு திரைப்படப்பாடல், கூந்தலிலே மேகம் வந்து என்று தொடங்கும் பாடல். யேசுதாஸ் பாடியிருப்பார்.

பாலநாகம்மா என்ற திரைப்படம். சரத்பாபுவும், ஸ்ரீதேவியும் நடித்தது. தெலுகு டப்பிங் என்று நினைக்கிறேன்.

said...

இந்திப் பாடல் பிரியையெல்லாம் இல்லை.. சில நல்ல இந்திப் பாடல்களை அப்பப்ப காதில் விழுந்தா கேட்கவும் பிடிக்கும். இப்பல்லாம் தமிழ்ப் பாட்டே அவுட் ஆஃப் டச். இந்த லட்சணத்தில் எனக்குத் தெரிஞ்ச இந்திப் பாட்டெல்லாம் குறைஞ்சது 10 வருசத்துக்கு முன்னாடி வந்தது தான் :-)

said...

//கூந்தலிலே மேகம் வந்து என்று தொடங்கும் பாடல். யேசுதாஸ் பாடியிருப்பார்.// வருகைக்கு நன்றி ஸர்மாஜி, இன்னுமொரு திரைப்பட பாடல் சுட்டி காட்டியதற்கு நன்றி!

said...

//இந்திப் பாட்டெல்லாம் குறைஞ்சது 10 வருசத்துக்கு முன்னாடி வந்தது தான் :-)// பத்து வருசம்னா 90 களிலா? அப்போ 70, 80 களில் வந்தது??

said...

//பத்து வருசம்னா 90 களிலா? அப்போ 70, 80 களில் வந்தது??//

எல்லாம் தான்.. (70-களில்... சந்தேகம்) தமிழ்ப் பாட்டே 90-களின் இறுதியிலிருந்து இப்ப வரைக்கும் ஒரு பத்துப் பாட்டு சொன்னீங்கன்னா அதுல நாலு தான் கேட்டிருப்பேன்.. நீங்க வேற! :-)))

said...

//தமிழ்ப் பாட்டே 90-களின் இறுதியிலிருந்து இப்ப வரைக்கும் ஒரு பத்துப் பாட்டு சொன்னீங்கன்னா அதுல நாலு தான் கேட்டிருப்பேன்.. நீங்க வேற! :-)))// அப்ப இனி வரும் ராகங்களில் நான் போட போகும் பாட்டை எப்படி ரசிப்பீங்க!, தெரிஞ்ச பாட்டை சொல்லுங்க, ராகத்துக்குள்ள ஃபிட் பண்ணிடலாம்!

said...

அதெல்லாம் வேணாம்.. உங்க போக்குல கண்டின்யூ...