என்னுடய இணைய ஒலிபரப்பில் நிழல்கள் படத்திற்கு நான் அளித்த பாட்காஸ்ட்டின் தொடர்ச்சியாக ஒரு முக்கியமான பாடல், அந்த படத்தில் இடம் பெறாத ஒன்று, ஆனால் மனசை அப்படியே அள்ளியப் பாடல்! ஜானகி அம்மா பாடி அதுக்கு அவங்க நேஷனல் அவார்ட் வாங்கினாங்க, அதுவும் தமிழ்ல பாடினதுக்கில்ல, தெலுங்கிலே பாடினதுக்காக! அதை பற்றிய இந்த ஒலிப்பரப்பு நீங்கள் கேட்டு மகிழ இதோ இங்கே!
இந்த பாடல் மிகவும் முக்கியமான ஒன்னா படத்திலே இருந்திருக்கணும், அதாவாது வீணை கத்துக்கிறேன்னு போயி அதுக்குள்ள சாருஹாசன் செத்துப்போனன்ன, யாருக்காக ராஜசேகர் அடி வாங்கினாரோ,
அவரே இவருக்கிட்ட மயங்கி காதல் கொண்டு இந்த பாடலை பாடுவதா இருக்கும்! ஆனா இந்த பாடல் படத்திலே இடம் பெறலை! ஆனா படம் வந்த இரண்டு மூனு நாளுக்குள்ள நாங்க ஓடிப்போயி பார்த்ததாலே, அந்த காதல் சீக்குவன்ஸ் எல்லாம் படத்திலே இருந்தது, அப்பறம் படம் சரியா போகலைன்னு கட் பண்ணி தூக்கி எறிஞ்சிட்டாங்க, இருந்தாலும் இந்த பாட்டு நான் எப்ப கேட்டாலும் என்னை மறந்துடுவேன்! அதுவும் அந்த காலங்களில் இரவு நேரத்தில் தனியா டேப்பிலே இதைக் கேட்கிற சுகம் தனி, அதே மாதிரி ஜானியிலே வர 'காற்றில் எந்தன் தீபம்', இன்னைக்கும் அந்த சுகராத்திரிகளை நினைச்சு அசைப்போடுறதுண்டு!
தரவிறக்கம் செய்து கொள்ள இதோ!
இப்பாடலின் தெலுங்கு கீதம் இதோ!
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மிக அருமையான பாடல்..திரையிலே இந்த பாடல் இடம்பெறாதது வருத்தம் தான். ஜானகியின் குரலுக்கு கிடைத்த மிக சவாலான பாடல்
தரவிறக்கம் செய்யறேன். எப்போ கேட்பேன்னு எனக்கே தெரியாது :-)
//ஜானகியின் குரலுக்கு கிடைத்த மிக சவாலான பாடல்// அவங்களே சொல்லி இருக்கிங்காங்க, நான் இவ்வளவு கஷ்டபட்டு பாடியும் படம் பிடிக்காம விட்டுட்டீங்கன்னு, வருத்ததோடு சொன்ன டிவி இன்டர்வியூ இருக்கே!
//தரவிறக்கம் செய்யறேன். எப்போ கேட்பேன்னு எனக்கே தெரியாது :-)//இது பெரிய பாட்காஸ்ட் இல்லை, சின்னது தான், போட்டு இன்னைக்கே கேட்டுட்டு சொல்லுங்க-;)
இதே பாடல் நிழல்கள் படத்தில் வராவிட்டாலும் பின்னர் தெலுங்குப் படமான சிதாராவிற்கு (1984) இதே மெட்டும் ஜானகியின் குரலும் பயன்படுத்தப்பட்டு ஜானகிக்கு தேசிய விருதும் கிடைத்தது. பாடலைத் தேடிக்கேட்டுப்பாருங்கள் சொர்க்கம் தான், இதோ
Vennello godari andham
பிரபா, தெலுங்கு பாடல் அறிவித்தமைக்கு நன்றி, இதோ அந்த பாடலை விரும்பி கேட்பவருக்கு சுட்டி
Post a Comment