Tuesday, February 20, 2007

மனைவியினால் பெற்ற பயன்!

இந்த வாரம் ஆனந்த விகடன்ல சுஜாதா எழுதிய 'கற்றதும் பெற்றதும்' தொடர்ல படிச்ச ஒன்னு நமக்கு ரொம்ப ஒத்துப்போன ஒன்னு! அதாவது, மனைவி வந்தபின் அடையும் முக்கிய பயன் என்னான்னு! முதல்ல அதில வந்ததை கீழே படிங்க!


சில வாரங்களுக்கு முன், ஒரு புது மணத் தம்பதியரைப் பற்றி எழுதியிருந்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவர்களை மறுபடி ஒரு ‘கெட் டு கெத’ரில் சந்தித்தேன். நண்பர் ஒருவரின் குட்டிக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் விழா.

‘‘உங்ககிட்டருந்து எப்ப நற்செய்தி?’’ என்றேன்.

‘‘என்ன சார்... கல்யாணமாகி ஆறு மாசம் தான் ஆச்சு!’’ என்றான்.

‘‘இன்னும் மூணு வருஷத்துக்கு இல்லை சார்!’’ என்றாள் அவன் மனைவி.

‘‘சரி, எப்படிப் போயிட்டிருக்கு லைஃப்?’’

‘‘ஃபர்ஸ்ட் க்ளாஸ்! கல்யாணம் ஆனதிலிருந்து, என் முதுகில இருந்த அரிப்பெல்லாம் போயிடுச்சு சுஜாதா சார்!’’ என்றான்.

நான் அவன் மனைவியை வியப்பாகப் பார்க்க, ‘‘தினம் ராத்திரியானா இவருக்கு முதுகு சொரிஞ்சு விடணும்’’ என்றாள்.

‘‘என்ன சார் பண்றது... முதுகில் ஒரு ஏரியா இருக்கு. இன்னொருத்தர் உதவி யில்லாம தொடவே முடியாது! விசிறிக் கட்டை, பால்பாயின்ட் பேனான்னு என்ன என்னவோ வச்சு ட்ரை பண்ணாலும் அணுகவே முடியாது. மனைவிதான் சரி!’’ என்றான்

நான் யோசித்துப் பார்த்ததில், அவன் சொல்வதில் உண்மை இருப்பது புரிந்தது.

‘‘சுவத்தில் வச்சுத் தேச்சுக்கலாமே?’’

‘‘ம்ஹ¨ம்! அதுல ஒரு ‘கான்கே விட்டி’ இருக்கு. சில பேர் இதுக் குன்னே கல்யாணம் பண்ணிக்கிறாங்க தெரியுமா?’’

‘‘சேச்சே! டூ மச்!’’

‘‘ஆமா சார்! இவர் இதுக்காகத்தான் முக்கியமா என்னைக் கல்யாணம் செய்துட்டிருக்கார். அதுக்கும்...’’ என்று அவள் அவனைப் பார்க்க,

‘‘வெந்தயக் குழம்புக்கும்’’ என்றான் அவசரமாக. ‘‘அதுக்கு நன்றிக் கடனா என்னவெல்லாம் செய்யறேன்... சொல்லும்மா சார்ட்ட...’’

‘‘ஒண்ணும் பண்றதில்லை. 24 மணி நேரமும் கிரிக்கெட் பார்த்துண்டிருக்கார். எல்லாம் பழைய மேட்ச்!’’

‘‘ஏய்... உள்பாவாடையை ஒட்டப் பிழியணும்னா என்னைத்தான் கூப்பிடுவா!’’

‘‘வாஷிங்மெஷின்ல ஸ்பின் டிரை யர் வேலை செய்யலை. அதனால..!’’

‘‘அப்புறம், சாக்கடை குத்த?’’

‘‘சாக்கடை அடைச்சுண்டா முனிசி பாலிட்டியையா கூப்பிடறது?’’

‘‘ஒரு முதுகு சொரிய எத்தனைப் பாடு பார்த்தீங்களா? ஆனா சார்... இட்ஸ் ஆல் வொர்த் இட்! நடு முதுகுல சொரியறது இருக்கு பாருங்கோ... சொர்க்கம்! பாதாம் பர்பி, மதுரை மணியுடைய ரஞ்சனிக்கப்புறம் இதுலதான்...’’

அதிர்ஷ்டக்காரர்கள்!


மத்தவங்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது, நமக்கு இது முற்றிலும் ஒத்து போன ஒன்னு! உங்க அனுபவம் எப்படி??

8 comments:

said...

//மத்தவங்களுக்கு எப்படியோ எனக்குத்தெரியாது, நமக்கு இது முற்றிலும் ஒத்து போன ஒன்னு! உங்க அனுபவம் எப்படி??//

எங்க வீட்ல ஸ்பின் ட்ரையர் வேல செய்யுது.
:))

said...

எனக்கு முதுகுல அரிப்பு இல்லை,இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கொண்டேன்!!!
:-))

said...

//எங்க வீட்ல ஸ்பின் ட்ரையர் வேல செய்யுது.
:)) //அது சரி முதுகு எப்படி சொரிஞ்சிக்கிறீங்க??

said...

//எனக்கு முதுகுல அரிப்பு இல்லை,இருந்தாலும் கல்யாணம் பண்ணிக்கொண்டேன்!!!
:-))// அப்ப நீங்க அதிர்ஷ்டக்காரர் இல்லையா???

said...

//எங்க வீட்ல ஸ்பின் ட்ரையர் வேல செய்யுது.
:)) //அது சரி முதுகு எப்படி சொரிஞ்சிக்கிறீங்க??//


அதுக்குத்தான் பையன் இருக்கானே!

said...

//அது சரி முதுகு எப்படி சொரிஞ்சிக்கிறீங்க??//

நான் தனியா இருக்கிறது உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா?

முதுகு கடிச்சுதுன்னா ஒரு சூப்பர்ர் ஐடியா வச்சிருக்கேன். கை எட்டுற எடத்துல சொறிஞ்சுட்டு அத முதுகா நெனச்சுகிட்டா போதும்

:))

said...

//அதுக்குத்தான் பையன் இருக்கானே!// எந்த பையனை சொல்றீங்க???

said...

//நான் தனியா இருக்கிறது உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா?//ம்.. ஜாலி தான், அப்பறம் முதுகு எங்க அரிக்கப்போகுது??