Wednesday, February 07, 2007

கண்ணே! கலைமானே!

வருடங்கள் இருபது உருண்டோடி விட்டது! ஆனால் இன்றும் அன்றைய நினைவுகள் மனதை விட்டு அகலவில்லை! வாழ்ந்த கழித்த நாட்களை எண்ணுவதா, அல்ல வாழப்போகும் நாட்களை எண்ணி ஏங்கி கழித்த நாட்களை நினைவு காணுவதா இன்று என மனதுக்குள் ஒரு இனிமையான போரட்டம்! ஒவ்வொரு காலகட்டத்திற்கும் ஒரு சுவையுண்டு! சற்றே அதை நினைத்து மருகுகையில் அந்த காலத்திற்கே அழைத்து செல்கிறது மனம்! அப்படி நினைக்கையிலே எத்தனை சந்தோஷ தருணங்கள் அவை, அதை இன்று தொலைத்துவிட்டு சராசரியாக நாட்களை கழிப்பது ஏன் என மனம் இருகுகிறது! ஆனால் அந்த சந்தோஷ தருணங்களை எண்ணிப்பார்க்கிறேன் இப்போது! அதற்கு ஒரு காரணம் உண்டு!இன்று திருமண நாள் காணும் நாம் இத்தருணம், நினைக்க விரும்புவது இது போன்ற அன்புடன் என்றும் வாழ!இதோ உனக்காக ஒரு கவிதை மடல் வைரமுத்துவிடம் கடன் வாங்கி அக்கால நினைவினை அசைப்போட!

அது ஒரு காலம் கண்ணே! கார்காலம்!
நனைந்து கொண்டே நடக்கிறோம்!

ஒரு மரம் அப்போது தரைக்குத் தண்ணீர் விழுதுகளை
அனுப்பிக் கொண்டிருந்தது!
இருந்தும் அந்த ஒழுகுங் குடையின் கீழ் ஒதுங்கினோம்!

அந்த மரம் தான் எழுதி வைத்திருந்த பூக்கள் என்னும்
வரவேற்பு கவிதையின் சில எழுத்துக்களை நம் மீது வாசித்தது!

இலைகள் தண்ணீர் காசுகளை சேமித்து
வைத்து நமக்காக செழவழித்தன!

சில நீர்த்திவலைகள் உன் நேர்வகிடு என்னும்
ஒற்றையடி பாதையில் ஓடிக் கொண்டிருந்தன!

அந்தி மழைக்கு நன்றி!
ஈரசுவாசம் நுரையீரல்களின் உட்சுவர்களில்
அமுதம் பூசியது!
ஆயினும்-நான் என் பெருமூச்சில்
குளிர் காய்ந்து கொண்டிருந்தேன்!

நம் இருவரிடையே இருந்த இடைவெளியில் நாகரிகம்
நாற்காலி போட்டு அமர்ந்திருந்தது!
எவ்வளவோ பேச எண்ணினோம்
ஆனால் வார்த்தைகள் ஊர்வலம் பாதையெங்கும்
மெளனம் பசை தடவி விட்டிருந்தது!

உன்முகப்பூவில் பனித்துளியாகி விடும்
இலட்சியத்தோடு உன் நெற்றியில்
நீர்த்துளிகள் பட்டுத்தெரித்தன!

உனக்கு பொன்னாடை போர்த்தும் கர்வத்தோடு
எனது கைக்குட்டையை எடுத்து நீட்டினேன்
அதில் உன் நெற்றியை ஒற்றி நீ நீட்டினாய்!
நான் கேட்டேன், "இந்த கைக்குட்டை உலராமல் இருக்க ஓர் உத்தி சொல்லக்கூடாதா?"
நீ சிரித்தாய்!

அப்போது மழை
என் இருதயத்துக்குள் பெய்தது
அது ஒரு காலம் கண்ணே!

கார்காலம்!

இதோ நீ விரும்பும் பாடலின் ஒளித்துண்டு!

14 comments:

said...

திருமணநாள் வாழ்த்துகள்!

said...

மணநாள் வாழ்த்துக்கள்!

said...

அருமையான திருமண நாள் பரிசு!

திருமண நாள் வாழ்த்துக்கள்.

தலைப்பை பார்த்தவுடன் என்னடா தலைவர் திடீர்னு இப்படி 'நடிக்கவே' (?!?!) தெரியாதவரோட பாட்டை தேர்ந்தெடுத்திருக்கிறாரே-னு யோசிச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது அது உங்கள் மனைவிக்கு பிடித்த பாடல் என்று. அவருடைய அருமையான ரசனைக்கு தனி வாழ்த்துகள். :-))))

said...

நன்றி மதி!

said...

நன்றி ஹரிஹரன்!

said...

நன்றி ஸ்ரீதர் வெங்ட்! அதென்ன அப்படி சொல்லீட்டீங்க, நடிக்கவே தெரியாதவர்னு நான் சொல்லமாட்டேன், அவர் செய்யும் சேஷ்டைகள் பிடிக்காது, அவ்வளவே! இதை பத்தி சீக்கிரமே விளக்கம் கொடுத்து ஒரு பதிவு போட்டுடுறேன், இல்லேன்னா இதுக்கு வேற மாதிரி கோஷ்டி சேர்ந்திடும்-:)

said...

வாழ்த்துக்கள்!

//அவர் செய்யும் சேஷ்டைகள் பிடிக்காது//

விளக்கம், தயவு செய்து! :-)

said...

//விளக்கம், தயவு செய்து! :-) //
சும்மா இருக்க் மாட்டிங்களே!! அதான் தனியா பதிவு போடறேன்னு சொல்றேன்ல்ல! அவருடய ஆரம்ப கால நடிப்பிலிருந்து அவர் தன்னை எப்படியெல்லாம் தன்னை மாத்தி, கடைசிலே பண்பட்ட நடிகனா மாத்தினாருங்கிறது தான்! அதுக்குன்னு அவரு பண்ண சேஷ்டைகள் பரதம் ஆடியதிலிருந்து சொல்லிக்கிட்டே போலாம்...., அது சரி இங்கியே சொல்லிட்டா பதிவுக்கு என்ன பண்றது?:-)

said...

வழக்கம் போல 'தனி பதிவு' ன்னு சொல்லிட்டே இருக்கப் போறீங்களா இல்ல நிஜமாவே போட்டுடுவீங்களா?

//அதுக்குன்னு அவரு பண்ண சேஷ்டைகள் பரதம் ஆடியதிலிருந்து சொல்லிக்கிட்டே போலாம்...., //

ஆஹா... பரதம் வேற சேஷ்டை ஆயிடுச்சா... ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல.

மனத்தடை இல்லாம நடுநிலைமையோட (அப்படி ஒன்னுமே இல்லையாமே. அப்படினு தமிழ்மணத்தில பேசிக்கிறாங்க) எழுதினீங்கனா... நல்ல இருக்கும்.

said...

இன்னும் அடுத்த அடுத்த அடுத்த ....
இருபதாண்டுகளில் என்னென்ன பாட்டு போடுவீர்கள் என்று யோசித்துப் பார்த்தேன் ........

வாழ்த்துக்கள்

said...

அன்பு வெளிகண்ட நாதர்,
நான் வந்தது சற்று தாமதமானாலும்...
'இனிய மணநாள் வாழ்த்துக்கள்' இருவது வருஷமா.. ரொம்ப சந்தோஷம்.. நாங்க இப்ப தான் 10 வருடங்கள் முடித்தோம்...

என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

said...

//அவர் செய்யும் சேஷ்டைகள் பிடிக்காது//

http://sinnakuddy1.blogspot.com/2007/02/blog-post_17.html

said...

பார்த்தேன் வீடியோ கிளிப்புகளை, இந்த 'மரோச்சரித்திரா' பத்தி எழுதனும்னு ஒரு நினைப்பு ரொம்ப நாளா இருந்தது. படமும் வீடியோ கிளிப்புக்குத்தான் எதிர்பார்த்தேன், இனி எழுதிட வேண்டியது தான்!

said...

மரோச்சரித்திரா - எங்க வீட்டையே புரட்டிப் போட்ட பிறமொழிப் படங்களில் ஒன்று இது. (பெரியவங்களை சொல்லலை... என் தலைமுறையைத் தான்! :-)) இன்னொன்று: Kanamarayathu (மலையாளம்)