Tuesday, March 07, 2006

எனை ஆண்ட அரிதாரம் - பதினொன்றாம் பகுதி

சமீபத்தில கமலஹாசன் எங்க காலேஜ் வந்துக்கு பேசிட்டு போனதாகவும், அப்ப, தமிழ் படத்தில நடிச்சு ஆஸ்கர் பரிசு வாங்கறது அவ்வளவு ஈசியில்லன்னு, ஏதோ பேசிட்டு போனதா, தெட்ஸ்தமிழ் (Thatstamil) வெப் சைட்ல வந்திருந்தது. அத படிச்சோன, எனக்கு பழய ஞாபகம் தான் வந்துச்சு.அதாவது, நான் டிராமடிக் கிளப் செக்ரட்ரியா இருந்தப்ப, யாரையாவது நடிகர் நடிகைகளை எங்க காலேஜ் ஃப்ங்க்ஷனுக்கு கூட்டிகிட்டு வர ரொம்ப சிரம்மம் எடுத்திருப்பேன். கமலஹாசன் மாதிரி பெரிய நடிகர்களை கூட்டிட்டு வர்றதுங்கிறது பெரிய குதிரை கொம்பு, அப்ப, ஏன்னா, மெட்ராஸ்னா, எந்த காலேஜ்லருந்து போய் கூப்பிட்டாலும் உடனே வந்துடுவாங்க, 'கோயம்புத்தூரா, அவ்வளவு தூரம் எப்படி தம்பின்னு', இழுப்பாங்க. இப்படி பிரபலங்கள கூப்பட நாயா பாடா அலஞ்சிருப்பேன், அந்த காலத்தில நான்!

அதுவும் எங்க குரூப்ல இருந்த அங்குராஜ் (தொடரை தொடர்ந்து படிச்சி வந்தீங்கன்னா, மொதல்ல, நான் சொல்லல, டாக்டர் கொன்னைன்னு, சுஹாசினி தங்கச்சியை டாவுவுட்டுகிட்டுருக்கேன்னு, அவனே தான்), சுஹாசினி வீட்டுக்கு பின்னாடி தான் இருக்கேன், 'வாடா மாமே', நம்ம பேசி கூட்டிகிட்டு வந்திடலாம் ரொம்ப உசுப்பி ஏத்தி என்ன இரண்டு மூணு முறை மெட்ராஸ் வர வச்சு அலைகழிச்சிட்டான்.
அவனுக்கு வீடு ஆழ்வார் பேட்டையில, எல்டாம்ஸ் ரோட்டுக்கு பக்கத்தில தான். அங்க போன, துரை, இவரை பார்க்கறதுக்கே, ஏழுநாளு காக்க வச்சருவாரு, எப்ப போனாலும் அவங்க அண்ணன் தான் ஆஜராவாரு, அங்குராஜ்ஜு எங்கேன்னு கேட்டா, 'அவன் கரண்ட் பில்லு கட்ட போயிருக்கான், அம்மாவை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்கான்னு' பதில் வரும். அப்ப நான் மெட்ராஸ் போன தங்கறது, என் இன்னோரு குளோஸ் பிரண்டு திருவேங்கடம் வூட்லதான், எங்க சித்தப்பா வீடு அய்யனாவர்த்தில இருந்தாலும். ஏன்னா, திருவேங்கிடம் வீடு, மெளன்ட் ரோடு சென்ட்ர்ல, அதாவது தேவி தியோட்டருக்கும் அன்னா தியேட்டருக்கும் இடைப்பட்ட பின்னாடி தெருங்கள்ல ஒன்னான, புராசாகிப் தெருக்குள்ள இருந்தது (பழய போட்டா பாருங்க!, அந்த சந்து போற வழி தெரியும், சரியா சொல்னும்னா, ஜெயப்ரதா தியேட்டர் போய்ருக்கீங்களா, அதுக்கு பக்கத்தில தான்). அவங்க வீட்டு மாடில தனி ரூம் இருந்த தாலே அங்க தான் போய் எப்பவும் தங்குவேன்.ரொம்ப வசதி, அங்கேருந்து எங்க வேணும்னாலும் பஸ் புடிச்சி போறதுக்கு. புறவு சாய்ந்திரத்தில, எங்க மெட்ராஸ் 'B' பார்ட்டிங்களோட சேர்ந்து மெரீனா பீச்சு சுத்துறத்துக்கு வசதி. அதாவது பின்னாடியான்ட தெரு வழியா போன, திருவல்லிக்கேணி, அப்புறம் பைகிராப்ட்ஸ் ரோடு, ரத்னா கபே, நேரா போன கண்ணகி சிலை, பீச்சுன்னு வசதியா இருக்கும்.

அப்படி போயி வர்றப்ப தான் வடபழனி போயியே என் காலு தேஞ்சு போனது அந்த கடவுளுக்கே வெளிச்சம், இல்ல 37B, பல்லவனுக்குத்தான் வெளிச்சம்!. எதுக்கு, வடபழனி முருகன் கோயில்லுக்கு போயிட்டு வந்தேன்னா நினைச்சீங்க, அதான் இல்ல, எல்லாம் அங்கருக்கிற ஸ்டியோ ஏறி இறங்கத்தான். பெரும்பாலும், அந்த காலகட்டங்கள்ல வந்த நிறைய சினமாக்களோட, பட சூட்டிங்கை பார்த்திருக்கேன்.
ஒரு தடவை அப்படித்தான் 'சங்கிலி'ன்னு ஒரு படம், சிவீ ராஜேந்திரன் டைரக்ஷன்ல விஜயா வாஹினில்ல சூட்டிங், போய் பார்த்தப்ப, கூட்டத்தில வந்தவன் இல்லாம, ஏதோ அஸிஸ்டென்ட்ன்னு நினைச்சி, 'தம்பி, போய் சாப்புடுங்கன்னு', அழகா கூட்டிட்டு போயி, அந்த சூட்டிங்ல இருந்த கும்பலோட சேர்ந்து சோறு தின்னுட்டு வந்திருக்கேன்னா, பாத்துக்கங்க! ஆனா, நல்ல அருமையான சாப்படு கிடைக்கும் பாத்துக்கங்க, இந்த அலுமினிய அடுக்கு, பெரிய அடுக்கு சும்மா பத்து அடுக்கு பாத்திரத்தில, நிறையா வரும், பின்னாடி கேன்டீன் மாதிரி இருக்கிற இடத்தில திருப்தியா சாப்பாடு போடுவாங்க. (வேற சில சமயத்தில, விரட்டாத குறையா, நிக்க வுடமாட்டாங்கெ, அதுவும், சிலுக்கு டான்ஸ் சீன்னு எடுக்கிறப்ப ஒரு தடவை, துரத்தி துரத்திவுட்டும் பாத்தாச்சுல்ல, 'சகலகலாவல்லவன்' படம்னு நினைக்கிறேன்.)

அந்த சங்கிலி படத்தில தான் பிரபு முதன் முதலா அறிமுகம் ஆனது. பிரபுவை பத்தி எனக்கு முன்னமே பரிச்சியம் இருக்கு. பரிச்சயம்னா, நான் திருச்சியில இருக்கிறப்ப எங்க பாலக்கரை பக்கத்தில இருக்கிற பிரபாத் டாக்கீஸ்க்கு அவர் அடிக்கடி வருவாரு. சும்மா அப்பவே குண்டுன்னா குண்டு போங்க. அதுவும் அந்த மேனஜர் ஆபீஸ்ல வந்து உட்கார்ந்திருக்கிறப்ப, நாங்க போயி, சிவாஜி புள்ளைன்னு வேடிக்கை பார்ப்போம். அப்ப திருச்சியில பிரபாத் கொட்டாய, சிவாஜிதான் லீசுக்கு எடுத்து நடத்தினாரு. அந்த தியேட்டர் இடம் முஸ்லீம் வக் போர்டுக்கு சொந்தம், அதை ரொம்ப நாளு வச்சி நடத்தினது சிவாஜி தான். அப்ப எல்லாம் திருச்சியில சிவாஜி படம் பிரபாத்ல தான் ரிலீஸ்ஸாகும். ஆக, பிரபு, சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், ராம்தாஸ் எல்லாம் நடிச்ச சீனுன்னு நினக்கிறேன், அதை சூட் பண்ணாங்க.

இப்படி சூட்டிங்ல நான் அநேகமா அந்த கால கட்டத்தில எல்லா நடிகர், நடிகைகளையுமே பார்த்திருக்கென். அப்படி ஒரு நாள், ஸ்ரீதேவி, அந்த காலத்தில இளசா இருக்கிறப்ப, தெலுங்கு பட சூட்டிங்ல பார்த்திருக்கேன். அதே மாதிரி எங்கூட படிச்ச ஃபிரண்டு, அவங்க அப்பா, பிஎஸ் வீரப்பா, ஆபிஸ்ல அக்கெவுண்டண்டா இருந்தப்ப, அங்கே, நம்ம கேப்டனை பார்த்திருக்கேன். நாங்க ஒரு வாரம் ரெகுலரா அங்க போனப்ப, விஜயகாந்த் அங்கேயே தான் டேரா அடிச்சிக்கிட்டு இருந்தாரு. அப்ப அவரு அப்பதான் சினிமாவில காலடி எடுத்து வச்சிருந்த நேரம். அப்ப எம் ஏ காஜான்னு ஒரு டைரக்டர், அவரை அறிமுக படுத்தி வச்சாரு. அதாவது ரஜனிகாந்த் அப்பதான் வேகமா முன்னேறிக்கிட்டு இருந்த நேரம், கொஞ்சம் கொஞ்சமா ஹீரோ ஆயி பெரிய ஆளா வந்துகிட்டு இருந்தப்ப, அவரு ஸ்டைல், அந்த கருப்பு நிறம் எல்லாம் ஒரு அட்ராக்ஷன் அப்ப. அந்த நேரத்தில அவரு மாதிரி நகல்ங்க நிறைய வர ஆரம்பிச்சப்ப தான் , இந்த விஜயகாந்த் வந்தாரு, இன்னொரு ஆளும் நளினிகாந்த்ன்னு, அவரும் ரஜினிமாதிரி முடி ஸ்டைல் எல்லாம் வச்சிகிட்டு வந்தாரு. ஆனா, இவெங்க யாரும் ரஜினி முன்னாடி நிக்க முடியல்ல. அப்ப விஜயகாந்துக்கு சரியான் பிரேக் கிடைக்காம இருந்த நேரம். பிஎஸ் வீரப்பா, புதுசா கம்பெனி ஆரம்பிச்சு படங்கள் எடுத்து கொஞ்சம் கமர்சியலா ஜெயிச்ச நேரம் அது. அப்ப அவரு புது முகங்களை வச்சி படம் எடுத்தப்ப, விஜயகாந்தை வச்சு எடுத்த படங்கள் கொஞ்சம் சக்ஸசாச்சு. 'சட்டம் ஒரு இருட்டறை' தான் அவருக்கு ஒரு நல்ல பிரேக் கொடுத்துச்சு.(இதுல ஒரு வேடிக்கை என்னா தெரியமா, யாரை நகல் எடுத்து நடிக்க வந்த விஜயகாந்துக்கு பிரேக் வாங்கி கொடுத்த இந்த படம் தான், அசல் ரஜினிகாந்த், ஹிந்தியில முதன்முதலா நடிச்சு 'அந்தாகானுன்'னு வெளிவந்துச்சு, பாருங்க, ம்... என்ன Irony?) அதுக்கப்புறமும் சில நடிகைங்கெல்லாம் அவருகூட் நடிக்க மறுத்த தான் கேள்வி.
அதுல்ல ஸ்ரீபிரியா, ராதிகான்னு நினக்கிறேன், அப்புறம் அவரு பெரியளாயி, ராதிகாவே, அவரை பிராக்கெட் போட்டு, இவரு ஓடி ஒளிஞ்சு, இன்னைக்கு இன்னும் பெரியாளாயி, கட்சி ஆரம்பிச்சு, ஓட்டு கேட்டுக்கிட்டுருக்காரு, மத்தது எல்லாம் சரித்தரம்.

இப்படி நான் மெட்ராஸ்சே கதின்னு அலைஞ்சு திரிஞ்ச நாட்கள் அப்ப ரொம்ப, அந்த நேரத்தில நடிக்க சான்ஸ்னு என்னமோ போகல, ஆனா, காலேஜ்க்கு அவங்கள எல்லாம் கூட்டிகிட்டு வரணும்னு அலைஞ்சேன். கடைசியில ஒரு வாரம் காத்திருந்து, தினம் சாருஹாசன் தான் எங்களுக்கு பதில் சொல்லிகிட்டு இருப்பாரு. கடைசியில சுஹாசினி, தெலுங்கு பட சூட்டிங் முடிச்சிட்டு வந்து, அவங்க வீட்ல இருந்தப்ப புடிச்சி பேசி, ஒரு வழியா அவங்களை ஒத்துக்கவசோம். வண்டிசத்தம், தங்கற வசதி எல்லாம் காலேஜ்லருந்து அரேஞ்ச் பண்ணி, எல்லா ஏற்பாடுகளையும் பண்ணிட்டோம். அதாவது இரண்டு மாசத்துக்கு அப்புறம் நடக்க வேண்டிய பொரோகிராமுக்கு, ஏற்பாடு பண்ணியாச்சு. அப்ப தான் ஒரு சோகம் நடந்துச்சு போங்க, அந்த புரோகிராமே நடத்தமுடியாம, பயங்கர ரகளையாயி, போலீஸ் கச்சேரின்னு அலையவேண்டியதா போச்சு, அதென்ன கூத்துன்னு தானே கேட்கிறீங்க, அடுத்த பதிவில விரிவா சொல்றேன், வர்ட்டா..!

8 comments:

said...

யார் யார் ஃபோட்டோ எல்லாம் போடறீங்க. உங்க படம் ஒண்ணூ காமிங்களேன். நாங்களும் நாங்க மிஸ் பண்ணுன ஹீரோ முகத்தப் பாத்துக்கிறோமே! ப்ளீஸ்!!

said...

வெளிகண்ட நாதர் ந்னா ஏதோ ஆன்மீகம் என்று நினச்சு ஓடியாந்தேன்!!பரவாயில்லை சினிமா நடப்புக்களை தமாஷாசொல்றீங்க!!நன்றி!!தொடரட்டும்!!

said...

ஏனுங்கோ, நீங்க பூ.சா.கோ வா இல்ல கோ.தொ.க யா?

Tech-ல அனைத்து கல்லூரி விழா நின்னது உங்க காலத்துலயா?

said...

நீங்க பார்த்த நடிகர்களுன்னே ஒரு பதிவு போடலாம்னு நினைக்கிறேன்

said...

சீக்கிரம் போடுறேன் தருமி சார்!

said...

வரணும் பெத்த ராயுடு, கோ.தொ.க நம்மது, நீங்க அந்த பக்கம் ஏதும் படிச்சீங்கிளா, தொடர்ந்து வாங்க, நம்மகிட்ட, பூ.சா.கோ வில உண்டான நிறைய அனுபவங்களும் இருக்கு!

said...

வாங்க நடேஷன், ஆன்மிகம் நம்ம கிட்ட நிறைய இருக்கு, புறவு போட்டுட்டா போச்சு! வருகைக்கு நன்றி!

said...

தாணு, பார்த்தது மட்டுமில்ல, பழகனவங்களும் இருக்காங்க, தொடர்ந்து வாங்க, தமாஷா இருக்கும்!