Saturday, March 04, 2006

மீண்டும் ஷோலே - ஹிந்தி திரைப்பட பார்வை!

எல்லோரும் ஒரு 30 வருஷத்துக்கு முன்னே வந்த இந்த 'ஷோலே' திரைப்படம் பார்த்திருப்பீங்க. அந்த காலகட்டத்திலே நான் ஹை ஸ்கூல் படிச்சிக்கிட்டு இருந்த நேரம். அப்போ அதிகமா ஹிந்தி படங்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமிச்சு இருந்த நேரம். தமிழை தவிர எந்த மொழி படத்துக்கு போனாலும், ஆடும் ஓடும் பிம்பங்களை வச்சுத்தான் கதை போற போக்கை தெரிஞ்சுக்க முடிஞ்சுது. அப்படியும் இது மாதிரி ஹிந்திப்படங்கள் தான் போறது. ஏன்னா, அந்த காலகட்டத்தில, தமிழ்படங்கள் எதுவும் சொரத்தயில்லாம இருந்த நேரம். ஹிந்திபடங்கள்ல, ஆராதனா, யாதோங்கிபாராத், ரொட்டி கப்டா அவுர் மக்கான், ரோட்டி, கபிகபி, அப்படின்னு எல்லா ஹிந்திபடங்களும் தமிழ்நாட்டில சக்கை போட்டுக்கிட்டு இருந்த நேரம். அதே மாதிரி ஹிந்தி பாடல்களும், மக்களுக்கு புரிஞ்சுதோ இல்லையோ, ஆனா பட்டையை கிளப்பிக்கிட்டு இருந்த நேரம். அப்ப நம்ம மெல்லிசை மன்னர் எல்லாம் போட்ட பாட்டுகளை விட இந்த ஹிந்தி பட பாடல்கள் மக்களிடையே பிரசித்த பெற்று இருந்த நேரம்.
இதை தூக்கி எறிஞ்சு, கிராம மெட்டுகள்ல தன் ராஜாபாட்டை படைக்க இளையராஜா வராத நேரம். பொறிபறக்க,ஸ்டைல் காட்ட ரஜினியோ, இல்ல சப்பாணி மாதிரி வித்தியாசமா நடிச்சு மனசை கவர கமலஹாசனும் வராத நேரம். எம்ஜிஆரும் கட்சி ஆரம்பிச்சு, அதிகமா நல்ல படங்கள் வராத நேரம், அப்படியே வந்த 'நீரும் நெருப்பும்', 'ராமன் தேடிய சீதை' மாதிரி படங்கள் அவ்வளவா வெற்றி பெறல. அந்த மாதிரி நேரத்தில வந்த ஹிந்திபடங்கள்ல ராஜாங்கம் படைச்சது தான் இந்த 'ஷோலே'!

வழக்கமா நமக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாத குதிரை, கொள்ளக்காரன், துப்பாக்கி சண்டையின்னு வருகிற ஹிந்திபடங்கள்ல, இந்த ஷோலே ஒரு வித்தியாசமான ஒன்னு. ஏன்னா அந்த எழுபதுகள்லயும் எம்ஜிஆர், கத்தி சண்டை போட்டுகிட்டு இருந்து வந்த படம் 'நீரும் நெருப்பும்'. அதுனால நமக்கு கொஞ்சம் புதுசா இதெல்லாம் தெரியும். அந்த குதிரை விரட்டு, துப்பாக்கிச் சண்டைகள் பார்க்க ரொம்பவே ஆர்வமா இந்த மாதிரி படத்துக்கு போவேன். ஆனா வெறும் துப்பாக்கி, குதிரைன்னு இல்லாம, விறு விறுப்பா, கதை போகும். இந்த சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளைக்காரங்க கதை நிறைய தினத்தந்தில்ல பெரிசா கட்டம் கட்டி வரும். அதை படிக்கிறதுல ரொம்ப ஆர்வம். அதனாலேயே இந்த ஹிந்திபடத்துக்கெல்லாம் போறதுண்டு. இந்த படம் ஹிந்திபட சரித்திரத்தில, ஏன் இந்திய திரைப்பட சரித்திரத்தில ஒரு தனி சரித்திரம் படைச்சது. இது தமிழ்நாட்டிலேயே ஒரு வருஷத்துக்கு மேலே ஓடுன படம்னா நம்புவீங்களா, அதே மாதிரி பாம்பேயில 'மராத்தா மந்திர்'ன்னு ஒரு தியோட்டர்ல தொடர்ந்து அஞ்சு வருஷம் எல்லாம் ஓடி கின்னஸ் புத்தகத்தில இடம் பெற்ற ஒன்னு. அப்பேர்பட்ட படம், கதை, காட்சி அமைப்பு, இசை, இப்படி எல்லாமே அப்ப ஒரு புதுசு. அதைத்தான் திருப்பி எடுக்கப் போறாங்களாம்.

படத்தோட கதை சம்பல் பள்ளதாக்கில இருக்கிற கொள்ளக்கார கும்பல், அதோட மோதும், ஒரு போலீஸ் அதிகாரி, அவரு அந்த கொள்ளக்காரங்க இருக்கிற கிராமத்தின் தலைவர், ஹிந்தில அவங்களை 'தாக்கூர்' அப்படின்னு கூப்புடுவாங்க!. எனக்கும் இந்த கொள்ளக்காரங்க (Decoit) அனுபவம் இருக்கு! நான் 1980 களின் முதல் பகுதியில, பாம்பேயில்ல, அணுசக்தி துறையில ட்ரியினிங் எடுத்துட்டு கொஞ்ச காலம் வட இந்தியாவில, உத்திரபிரதேச மாநிலத்தில உள்ள நரோரா அணுசக்தி மின்நிலையத்தில வேலை செஞ்சப்ப, அந்த அனுபவம் உண்டு. அந்த மின்நிலையம் போற வழி, அந்த மாதிரி கொள்ளைகாரங்களால ஆபத்து மிகுந்த பகுதி. அதுவும் இருட்டின பின்ன அங்கிருந்து டில்லி போகனும்னா, உயிர் உங்க கைக்கு உத்ரவாதம் கிடையாது. என்ன வேணும்னாலும் நடக்கலாம், அப்படி போன எங்க ஸ்டேஷன் ஆபீசர் கதை கந்தலாயி வந்ததை பத்தி வேணும்னா அப்புறம் ஒரு பதிவா போடுறேன்! (ஏன்னா, நானும் அப்ப அவரு கூட போனவன்!)

அப்படி, அந்த கொள்ளக்காரத் தலைவன், அந்த படத்தில பேரு 'கப்பர் சிங்'. ரொம்ப சூப்பர்ப் கேரக்டர். அதை நடிச்சது 'அம்ஜத் கான்'னு ஒரு ஆக்டர், அந்த படத்தில தான் அவரு அறிமுகம். அந்த கேரெக்டருக்கு இன்னொரு வில்லன் 'டேனி' அப்படின்னு ஒருத்தரை தான் முதல்ல அணுகினாங்க, அவருக்கு ஏற்கனவே படங்கள் புக்கானதினால, இந்த புதுமுகத்தை போட்டாங்க. அவரும் அந்த கேரக்டருக்கு ஒரு புது மோல்டு கொடுத்திருந்தார். வட இந்தியாவில அவ்வளவு பிரசித்தம் இந்த கேரெக்டர். இங்க உள்ள அம்மாக்கள் எல்லாம் தங்கள் குழந்தைகளை தூங்கவைக்க, 'கப்பர் சிங்' பேரைத்தான் சொலவாங்களாம், இப்படி, 'கண்ணா தூங்கிடு சீக்கிரம், இல்ல 'கப்பர் சிங்' வந்து புடிச்சுட்டு போயுடுவான்னு!' அவ்வளவு பயங்கரத்தை அவனுடய கேரக்டர்ல காட்டியிருப்பாங்க, அவரும் நல்லா நடிச்சு இருப்பாரு. இப்ப அந்த நடிகர் உயிரோட இல்லங்கிறது வேற விஷயம்.
அந்த தாக்கூரு கையை வெட்டிடுவான் அந்த கப்பர் சிங், முள்ளை, முள்ளாலத்தான் எடுக்கனும்னு, சில பெட்டி கிரைம்ஸ் பண்ணிகிட்டு இருக்கிற குற்றவாளிங்க இரண்டு பேரை அந்த கிராமத்துக்கு தாக்கூரு வரவழச்சி, அந்த கொள்ளக்காரனை எதிர்ப்பார். அந்த ரெண்டு பேரா நடிச்சது அமிதா பச்சனும், தர்மேந்திராவும். அந்த கிராமத்துக்கு வந்தோன, தர்மேந்திரா, அந்த கிராமத்தில குதிரை வண்டி ஓட்டற ஹேமாமாலினிய காதிலிப்பார், அமிதாபச்சன், அந்த தாக்கூரோட விதவை மருமகளை காதிலிப்பார். அந்த விதவை மருமகளா நடிச்சது அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், அப்ப அவர் 'ஜெயா பாதுரி'. படத்தோட ஹைலைட், அந்த முதல்ல வர ஓடும் ரெயில்ல போடற சண்டை காட்சி. அது மாதிரி இன்னும் ஒரு படமும் சண்டைக் காட்சிகளை படம் புடிச்சதில்லை. நம்ம தமிழ் படத்தில அதை நினைச்சே பார்க்க முடியாது. ஆங்.. வேணும்னா, நம்ம மணி, ட்ரெயின் மேலே டான்ஸ் ஆடி, ஒரு பாட்டு எடுத்தாரே, என்ன படம் அது 'தில்சே' ன்னு இந்திபடம், தமிழ்ல பேரு தெரியல, அதை வேணா சொல்லலாம். அது மட்டுமில்ல, மிக நளினமான காதல் காட்சிகளும் கொண்ட படம் இது. அமிதாப்பும், விதவை ஜெயாவும் அதிகம் பேசிக்க மாட்டாங்க. கண்ணுக்குள்ளயே கவிதை பாடுவாங்க! ஏன்னா, அவங்க விதவை, இவரு இப்படி சின்ன சின்ன குற்றங்கள் செஞ்சுகிட்டு நிலையான வாழ்க்கையில்லாம் சுத்துறவரு. வாழ்க்கையில செட்டில ஆகணும்னு ஆசை படுவார், அதனால அந்த நம்பிக்கையான காதல் நிறைவேற வசனங்கள் எதுவுமே இல்லாம கவிதை மாதிரி, அப்படி ஒரு காட்சி இருக்கும், சாய்ந்திரம் இருட்டினோன, அமிதாப் வெளியில உட்கார்ந்து மெளத் ஆர்கான் வாசிச்சுகிட்டு இருப்பாரு, ஜெயா ஒவ்வொரு சிமிழ் விளக்கா அணைச்சிகிட்டே வருவாங்க, இருட்டினதை காமிக்க, ஆனா தன் அறையில் இருக்கிற விளக்கை அணைக்காம அப்படியே படுத்து தூங்கிடுவாங்க, அந்த எரியும் விளக்கின் தீபம் தான் அவங்க நம்பிக்கையின் வெளிச்சம் மாதிரி அழகா படம் பிடிச்சிருப்பாங்க!

இந்த படம் மாதிரி திரும்ப இனி எடுக்க முடியாதுன்னு எல்லாரும் சொல்லிகிட்டு இருந்தப்ப தான், தெலுங்கு, இந்தி படம் எடுக்கிற டைரக்டர், 'ராம் கோபால் வர்மா' இதை திருப்பி எடுக்க போறாராம். இந்த 'ராம் கோபால் வர்மா' யாருன்னு கேட்கிறீங்களா, இவரு ஒரு பெரிய டைரக்டர், பாம்பே அண்டர் வோர்ல்ட் பத்தி நிறைய படம் எடுத்திருக்கிறார். நம்ம ஊரு மணி மாதிரி நிஜமா நடக்கிற நிகழ்ச்சிகளின் பிண்ணனியில் எடுத்த எல்லா படங்களும் நார்த் இந்தியாவில ஓடு ஓடுன்னு ஓடிச்சு. 'சத்யா', 'கம்பெனி', 'டி', 'சர்க்கார்' அப்படின்னு எல்லா படமும் ஸக்சஸ். எல்லாமே, தாவூத் இப்ராகிம் மாதிரி அண்டர்வோல்ட் டான்ங்களை பத்தி தான், நல்ல ஆராஞ்சு, நிறைய கதை வச்சுக்கிட்டு சுட்டு தள்ளிக்கிட்டு இருக்கிறாரு. (இப்ப செல்வராகவன் எடுத்துக்கிட்டு இருக்கிற 'புதுப் பேட்டை' ங்கிற படம் இந்த மாதிரி தான், ஒரு பேக்ட்ராப்பை வச்சின்னு கேள்வி பட்டேன்) அவரு எடுத்த ஒரு தெலுங்கு படம் தமிழ்லக் கூட 'உதயம்'னு வந்ததுன்னு நினைக்கிறேன். பிறகு ரஹமானை வச்சி பாட்டு கட்டி, பட்டைய கிளப்பன, 'ரங்கீலா' ன்னு ஒரு ஹிந்திபடமும் நீங்க கேள்வி பட்டிருப்பீங்க! அதுவும் இவரு எடுத்தது தான். ஹிந்தி திரை உலக பாரதிராஜா இவரு. நிறைய படம் எடுத்து, புது புது டெக்னிக்குகள கொண்டு வந்தவர். அப்புறம் சினமா தொழில ஒரு கம்பனி மாதிரி நடத்துறவரு. கந்துவட்டி கதை எல்லாம் கிடையாது. அந்த கம்பெனிக்கு பேர் 'பேக்டரி'ன்னு. இன்னய தேதிக்கு எல்லாரும் இவரு படத்தில நடிக்க ஆசை படறாங்க. அவரு தான் இந்த ஷோலே படத்தை திருப்பி எடுக்க போறாரு.


இந்த 'ஷோலே' படத்துக்கு பின்னாடி நிறைய நிஜக்கதைகள் உண்டு. அப்ப அந்த கப்பர் சிங் பாத்திரத்தில நடிக்க அமிதாப் பச்சன் ரொம்ப ஆசைப்பட்டாராம் அப்ப, அதே மாதிரி தாக்கூரா நடிச்ச சஞ்சீவ் குமாரும் ஆசைப்பட்டாரம். இப்ப அவரு மண்டையை போட்டுட்டாறு. பிறகு தர்மேந்திரா, ஹேமாமாலினி மாமி காதலிக்க ஆரம்பிச்சது இந்த படத்தில தானாம். அதுக்கு முன்ன மாமி சஞ்சீவ் குமார், ஜித்தேந்திரான்னு டாவு வுட்டுகிட்டு இருந்தாங்க. அமிதாப்பும் ஜெயாவும் கல்யாணம் பண்ணி அபிஷேக் பச்சன் வயித்தில இருந்தாரம் இந்த படம் நடிக்கிறப்ப.

அதனால அமிதாப் நடிக்க ஆசைப்பட்ட அந்த கேரெக்டர்ல திருப்பி அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறாரு. பிறகு தர்மேந்திரா நடிச்ச வீருங்கிற கேரக்டர்ல அபிஷேக் பச்சன் நடிக்க போறாராம். பிறகு நம்ம மலையாள நடிகர் மோகன்லால், தாக்கூரா நடிக்கிறாராம். நம்ம மாமி 'பசந்தி' நடிச்ச பாகத்தில உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்கிறாங்களாம், ரஜினிக்கு இதை கேட்க பொறாமையா இருக்கும். ஆனா கதை எப்படின்னு தெரியல, திருப்பி சம்பல் பள்ளத்தாக்கு பகுதி பிண்ணனியில வரப்போவுதா, இல்ல மும்பையான்னு தெரியல்ல, பொறுத்திருந்து பார்ப்போம்! படம் வரட்டும்!

12 comments:

said...

எப்பவுமே புதுசு பழசு மாதிரி ஆகாது. இது இந்தக்காலத்திலே வர 'remix songs ' மாதிரி தான் இருக்கும்.

அமிதாப் வைச்சிருப்பாரே, அந்த 2 பக்கமும் தலை இருக்கிற காசு? அதை விட்டுட்டீங்களே?

said...

ஷோலே வந்த சமயத்தில் அதைத் தமிழில் எடுக்க ஆசைப்பட்டார்களாம். கதாநாயகியாக கே.பி.சுந்தராம்பாளை போடலாம் என்று கூட எண்ணம் இருந்ததாம். படம் பெயர் கூட வைத்துவிட்டார்கள். ஆனால் ஏனோ எடுக்காமல் விட்டுவிட்டார்களாம். படத்தின் பெயர் "பழ முதிர் ஷோலே"!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஆமாம் துபைவாசி! எப்பவும் பதுசு பழசாகது, ஆனாலும் ராம் கோபால் வர்மா படங்களை கொஞ்சம் நம்பலாம். ஆனா இந்த புது ஷோலேயை எப்படி புடிக்க போறாருன்னு தெரியல்ல.

//அமிதாப் வைச்சிருப்பாரே, அந்த 2 பக்கமும் தலை இருக்கிற காசு? அதை விட்டுட்டீங்களே? // அட பார்த்தீங்களா, அதை விட்டுட்டேன். அதுவும் கடைசியிலே, உண்மையிலேயே கிளாஸ் சீன் போங்க!

said...

டோண்டு, இது எனக்கு தெரியாத புது தகவல், ஆனா தமாஷா இருக்கு! உண்மையில உங்க பின்னூட்டம் தானே, திருப்பி கன்ஃபார்ம் பண்னுங்க, ஏன்னா, உங்க போலி, அப்ப அப்ப நமக்கு மயில் போட்டு ஏக சித்ரவதை, நேரல கையில சிக்க மாட்டேங்கிறாரு, கிடைச்சா.. வேணாம் உடுங்க, நம்ம புள்ள! அன்பா திருத்துவோம்! எப்பா ராசா, நல்லயிருப்பா.. தப்புதப்பா எழுதறதை வுட்டுடு, யாருக்கு புரோயஜனம் அதனால, என்ன..

said...

உங்களிடம்தான் அதர் ஆப்ஷன் இல்லையே. ஆகவே மூன்றாம் சோதனை அதாவது என் பின்னூட்டங்களின் நகலை என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமிடுவதை இப்போதைக்கு உங்கள் மாதிரி ப்ளாக்கர் பின்னூட்டங்களைச் செயல்படுத்துபவர்களின் பதிவில் நிறுத்தியிருக்கிறேன்.

முதல் இரண்டு சோதனைகளே போதும். அதாவது என்னுடைய ப்ளாக்கர் எண்ணாகிய 4800161 உங்களுடைய பின்னூட்டப் பக்கத்தில் காணப்படும் என்னுடைய டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் திரைக்கு கீழே இடது ஓரத்தில் அப்படியே தெரிய வேண்டும். போட்டோ வேறு இருக்கவே இருக்கிறது. இரண்டு சோதனைகளுமே சேர்ந்து சேடிஸ்ஃபை ஆக வேண்டும். அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

வெளிகண்ட நாதர், இந்த ஷோலே படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நான் அப்போது அங்கு படித்துக்கொண்டிருக்கும் போது வெளியிட்டிருந்தார்கள். அங்குள்ள திரையரங்குகளில் அப்போது சக்கை போடு போட்டது. ரஷ்யர்கள் பொதுவாகவே இந்திப் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத படம். பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டீர்கள். நன்றிகள்.

said...

இப்ப இந்தப் படத்தை மும்பையைப் பின்னணியா வெச்சு எடுக்குறாராம் ராமு. அது சரி....அமிதாப் வேஷத்துல நடிக்கிறது யாரு? ஜெயா பாதுரி வேஷத்துல நடிக்கிறது யாரு.

இந்தப் படத்தைச் சம்பல் பள்ளத்தாக்குல எடுக்கலை. பெங்களூருல இருந்து மைசூர் போற வழியில இருக்குற ராம்நகர்ங்குற ஊருல எடுத்திருக்காங்க. அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடி வந்த சைனா கேட் அப்படீங்குற ஹிந்திப் படத்தக் கூட ராம்நகர்லதான் எடுத்தாங்க.....

எனக்கோ ஹிந்தி புரியாது. கூட இருந்த நண்பர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லாதவர்கள். எல்லாரும் சைனா கேட்டு பாக்கனும்னு போனோம். எல்லாரும் வசனத்தை ஒவ்வொரு வரியா ரசிக்கிறாங்க...எனக்கு கதையோட ஓட்டம் தெரியுது. ஆனா வசனங்கள் புரியலை...நடுவுல ஒரு இடத்துல பஸ் நிக்கும். அந்த பஸ் ஸ்டாப்புல கன்னடத்துல எழுதீருந்தது..எனக்கு சந்தோஷம்னா சந்தோஷம்...கன்னடத்தைக் கஷ்டப்பட்டு எழுத்துக் கூட்டி படிச்சிட்டேன்...ராம்நகர்னு...அப்புறம் ஒரு ஹிந்தி நண்பன் சொன்னான்...கர்நாடகத்துல அந்தப் படத்த எடுத்தாங்கன்னு.

said...

டோண்டு கன்ஃபார்ம் ஆயிடுச்சு, நன்றி! உங்களுடய பதிவுகளில் நான் பின்னோட்டம் இடுவது போலி டோண்டுவிற்கு பிடிப்பதில்லை. ஆதாலால் எப்பொழுதும் மின்னஞ்சலை திறக்கும் போது உங்கள் பேரில் வரும் மயிலை பார்த்து, போலி டோண்டுவின் பதிலை பார்ப்பதால் வந்த சந்தேகம் வேறென்றுமில்லை!

said...

பொதுவாகவே ரஷ்யர்கள் ராஜ் கப்பூர் படங்கள் மீது ஒரு வெறியாக இருப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அவர்கள் இந்த படத்தை விரும்பி பார்த்ததில் ஒரு ஆச்சிரியமில்லை. ஆமாம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படம். சிடி வாங்கி வைத்துள்ளேன், அடிக்கடி பார்த்தாலும், எப்பொழுது பார்க்கும் பொழுதும் ஒரு பது படம் பார்க்கும் உணர்வே வரும்! தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீரிதரன் (கங்ஸ்) அவர்களே!

said...

ராகவன், அமிதாப் பாத்திரத்தில், 'மோஹித் அலுவாலியா' என்ற ஒரு புதுமுகம் நடிக்கிறார். பிறகு ஜெயா வேடத்தில் 'கேத்ரினா, கெய்ஃப்' என்ற நடிகை நடிக்கிறாராம். இந்த் நடிகை ராமு எடுத்த சர்க்கார் படத்தில் அபிஷேக்கின் காதலியாய் வருவார். பிறகு அந்த பிரசித்தி பெற்ற மெஹ்பூபா, மெஹ்பூபா பாடல் ஞாபகம் இருக்கிறதா. ஹெலென் ஆடி அந்த பாட்டில் அசத்தி இருப்பாரே. அதில் ரங்கீலா கன்னி ஊர்மிளா மட்டோங்கர் நடிக்கிறார்.

படம் வேண்னா ராம்நகர்ல எடுத்திருக்கலாம். அந்த கதையின் பிண்ணனி சம்பல் பள்ளதாக்கை கொண்டது. பூலான் தேவி கதை தெரியுமா? எல்லாம் உண்மையில் நடந்த இடங்கள் மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் பகுதிகளை கொண்டதுதான் இந்த சம்பல் பள்ளதாக்கு பகுதியில் தான்!

said...

என் இடுகையில் ஷோலே - இரண்டாம் பாகம் என்று ஒரு பதிவு போட்டுள்ளேன். அங்கே இப்பதிவுக்கு லின்க் கொடுத்துள்ளேன்.

said...

//இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன//.ஆஹா.. மறந்தே போயிட்டேன்.. ஞாபகபடுத்தீட்டிங்க..அரிதாரத்தில எழுதனும், சிஐடி சங்கர்லருந்து, எங்கபாட்டன் சொத்து வரை..

வெளிகண்ட நாதர்