Saturday, March 11, 2006

லக்க..லக்க...லக்க...லக்க...லக்க..லக்க.......

இன்னைக்கு சண்டைக்கோழி படம் பார்க்கிறப்ப, மதுரை வீரன் சாமி பத்தியும், காக்கும் தெய்வம் பத்தியும் அதிகம் பேசி வசனம் வந்தோன, இதை பத்தி கொஞ்சம் அலசலாமுன்னு தான் இந்த பதிவு. ஏற்கனவே நான் வெளிகண்ட நாதர் பேர்ல போடற பதிவை பார்த்துட்டு ரொம்ப பேர் என்ன, நீங்க ஆன்மீகம் எழுதலையான்னு கேட்டாங்க, அதுக்குத்தான் இந்த பதிவு. அதுக்கு எதுக்கு இப்படி ஒரு தலைப்பு, சும்மா ஒரு பில்டப்புக்குத்தான். கோயில், சாமி, பூதம்னு பேசபோறோமே, கொஞ்சம் வித்தியாசமா தலைப்பு வைப்போம்னுதான்.

இந்த இந்து கடவுள ஆராச்சி பண்றப்ப, இந்துயிசத்தை, அந்த ரிக் வேத காலத்திலருந்து கொஞ்சம் பார்த்தோமுன்னா, விஷயம் தெரியும், அதாவது வழிபாட்டுகள்ல தலைவான விளங்கினது, பிரஜாபதி, அதாவது கடவுள், மனிதர்கள் எல்லாருக்கும் தந்தை! அந்த பிராஜாபதியை யாரு பார்த்தது? ஏதோ ஒளி கற்றை, அந்த பிராஜாபதியைதான் பல ரூபமா அப்ப கொண்டாடினாங்களாம், அதாவது, இந்திரன், வருணன், சூரியன், அக்னி, சோமன், ருத்ரன், யமன் அப்படின்னு. இந்திரன் வீரக்கடவுள், இடி, மின்னல்களோட சம்பந்தபடுத்தி அழைக்கப்பட்டவன். அதாவது, மின்னலை பூட்டிய வண்டியில், இடி ஆயுதங்களை எடுத்துக்கொண்டு உலவினவன். இந்த இந்திரனை, கிரீக்லயும், ஜெர்மனியிலையும் அப்பவே கொண்டாடினாங்களாம், அதவாது, Zeus God of Greek and Thor of the Germans னு ஒரு கருத்து இருக்காம். இந்த இந்திரனுக்கு வாகணம் வெள்ளையானை! அடுத்தது வருண பகவான், இயற்கையை ஆளுமை கொண்டவன், மிகவும் பரிசுத்தமான கடவுள் ரிக் வேதத்திலே! இந்த வருண பகவானுக்கு பழைய இரானிய மக்களுக்கு மிகவும் வேண்டபட்ட கடவுள், இந்து மதத்தை போல! பிறகு சூரிய பகவான், இப்படின்னு போயிகிட்டு இருக்கு...

பிறகு ஆரம்பிச்சது தான் ஆரிய கடவுள்கள், திருமூர்த்திகள், சிவா, விஷ்ணு, பிரம்மான்னு. உங்களுக்கு எல்லோருக்குமே தெரியும் இந்த கடவுள்களோட புராணங்கள், கதைகள் எல்லாம், சிவபுராணம், தசாவதாரம், இராமாயணம், மஹாபாரதம், அப்படின்னு.. போயிகிட்டு இருக்கும்...
அதே மாதிரி, சக்தி அவதாரம் கதைகளும், அவங்களோட ஒட்டிய சாமிகளையும் உங்களுக்கு தெரியும். பார்வதி, மலைகளின் ராணி, மஹாதேவி, கெளரி, அன்னபூரணி, சரஸ்வதி, அப்படின்னு எல்லோரும் ஆரியமாலங்க! இவங்க கதைகளும், புராணங்களும் நிறையவே தெரிஞ்சு இருக்கும். ஆதிபராசக்தியிலருந்து பொட்டு அம்மன் வரைக்கும், ஏபி நாகராஜன், இராமராஜன் எல்லாம் படமா எடுத்து தள்ளி நம்மல பக்தி வெள்ளத்தில ஆழ்த்திட்டாங்க போங்க! ஆக இவங்களையும் நல்லா தெரியும்.

பிறகு தமிழக கிராமங்கள்ல அதிகம் கும்பிட படுகிற மாரியாத்தாளையும் நம்ம எல்லாருக்கும் தெரியும். ஆனா.. நம்ம காக்கும் தெய்வங்கள் பத்தி அதிகமா புராணமோ, கதைகளோ வர்றதில்லை, ஏன்? மதுரை வீரன், முனீசுவர்ன், ஆஞ்சனாரு, இப்படின்னு, இவங்க கதைகள் அதிகம் நம்க்கு தெரிவதில்லை.
அதை பத்தி திரைப்படங்கலும் அதிகம் வரதில்லையே. ஆனா, கிராமத்து கதையை வச்சு எடுக்கிற படங்கள்ல கடைசி சண்டைக்காட்சி, இது மாதிரி காவல் தெயவத்துக்கு முன்னே, பிரம்மாண்டமா இருக்கும். எல்லா சாமிக்கும் அந்தந்த ஊருங்கல்ல ஒரு குட்டிக்கதையிருக்கும்.. இவங்க எல்லாம் எல்லை சாமிகள். அந்த ஊரைவிட்டு வேறெங்கேயும் பிரசித்தம் அவ்வளவு கிடையாது.

நான் கிராமத்தில வளராதவன், அதனால அதிகமா கதைகள் எனக்குத்தெரியாது. ஆனா, மதுரை வீரன் சாமியை நாங்க தொடர்ந்து கும்பிடுவோம். இன்னொன்னு, ஆடு கடா வெட்டி படையல் போட்டு நல்லா மூக்க புடிக்க சாப்பிட்டுட்டு ஏப்பம் உட, இந்த சாமியை அடிக்கடி கும்படுறதுண்டு. அதுக்குன்னே எங்க பங்காளிங்க வீட்டுக்கு சாமி கும்பட எப்ப போப்போறோம்னு சும்மா நச்சரிச்சுக்கிட்டு இருப்பேன். என் கேள்வி என்னான்னா, கிராமங்களை விட்டுட்டு அதிகமா இந்த சாமிக்கோயில்கள் இருப்பதில்லை, ஏன்? அதாவது ஆரியக்கடவுள்கள், திராவிடக்கடவுள்ங்கிற பிரிவுல இது வந்துடுதோ!.


நான் வட நாட்டில இருந்த பொழுதும், அங்கே மேலே சொன்ன, சிவன், விஷ்ணு, சக்தி கோயில்கள் தான் அதிகம். இது மாதிரி மனிதரை மனிதர்கள் காத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த சாமிகள் தெக்காலதான் அதிகம். ஏன் அப்படி? இதுதான் திராவிட கடவுள்களா? அப்புறம் இந்த சாமிகளை வேற விதமாத்தான் சித்தரிச்சு காட்றாங்க, அதாவது பேய் விரட்ட, சித்தபிரம்மை தீக்க, அப்படின்னு.. ஏன் அன்பான வெளிப்பாட, சரஸ்வதி, லக்ஷமி, அன்னபூரணி, அப்படின்னு நல்லமாதிரி சாமிகளை, இந்த சாமிகளை வெளிப்படுத்திக்காட்டல, விவரம் தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்! நான் ஆர்யம், திராவிடன் பிரிவனை பேசவர்ல. பொதுவா, நம்ம தமிழ் நாட்ல அதிகமா இந்த மாதிரி கும்படற சாமிகள், சுடலை மாடன் சாமி, மதுரை வீரன், (மதுரைக்காரங்க, மீனாட்சியை தான் தூக்கிவச்சுக்குவாங்க, இந்த மதுரை வீரன் சாமியை வுட்டுடுவாங்க, ஏன்னோ) அதிகமா பரவலா கும்படறதில்லை, இதன் சரித்திரம் என்ன? ஆரிய அமுக்கமா? எப்படி..

அப்புறம் கடைசியா, ஆரிய வழியில வந்த கடவுள் தான் முருகப்பெருமான், ஆனா, நம்ம அவரை அதிகமா தமிழ்கடவுள்னு சொல்லுறோம், ஏன்? பெரும்பாலும் வடக்கால, அதாவது, வட இந்தியாவில யானைமுகத்தானை அதிகம் வழிபடுவதால், நம்ம முருகப்பெருமானை எடுத்துக்கிட்டமோ? கார்த்திக்னு, அவ்வளவு பாப்புலர் இல்ல அவரு அங்க, ஏன்? இந்த உருவ வழிபாடு வருவதற்கு முன்ன, வேதகாலத்துக்கு முன்ன, நம்ம முன்னோர்கள் உருவ வழி இல்லாம வழிபட்ட அஞ்சு பூதங்கள் வழிப்பாடு ஏன் இப்படி உருவ வழிபாடானாது. அந்த உருவ வழிபாட்டு முறையில வந்த இந்த காவல் தெய்வங்கள் அதிகம் ஊர் எல்லையை வுட்டு தாண்டரதில்ல! வெறும் பேய்விரட்ட அப்படின்னு ஏன்? லக்க..லக்க..லக்க..லக்க...லக்க...லக்க...

34 comments:

said...

//அப்புறம் கடைசியா, ஆரிய வழியில வந்த கடவுள் தான் முருகப்பெருமான்,//


இவங்க வேற மாதிரி சொல்றாங்களே?


//'தென்னாடுடைய சிவன்' என்று சொல்வதும் 'முருகனை மட்டும் தமிழ்க்கடவுள்' என்று சொல்வதும் என்று நினைக்கிறேன். பழந்தமிழ் மரபில் மாயோனும் ஐந்து நிலக் கடவுளர்களில் ஒருவன் தானே? அப்படி என்றால் அவனையும் தமிழ்க் கடவுள் என்று கூறுவதில் என்ன தயக்கம்? சிவனும் முருகனும் எப்படித் தமிழ்க் கடவுளர்களோ அதே மாதிரி மாயவனும் கொற்றவையும் தமிழ்க் கடவுளர்களே!!!

By குமரன் (Kumaran), at January 28, 2006 6:18 AM //

அன்புடன்
சாம்

said...

I want to pass the buck to others, especially to Ragavan.G.

said...

எங்கு சென்றாலும், மனிதனின் மன நிலை தன் ஊரை விட்டு தாண்டாது என்பதைத்தான் இது காட்டுகிறது.

வட நாட்டிலும் ஊர் தெய்வங்கள் உண்டு.

ஊர் ஊருக்கு ஒரு பெயரில் அங்கும் இந்த எல்லை தெய்வங்கள் இருக்கு!

ஆனால், ஒரு நியாயமான விவாதத்தைத்தான் தொடங்கி வைத்திருக்கிறீர்கள்.

ஊர் ஊருக்கு தனியாக இருந்தாலும், வீரன், அய்யனார், அம்மன் எல்லா ஊரிலும் இருப்பதே ஒரு பொதுத்தன்மை தானே!

said...

வருகைக்கு நன்றி சாம் அவர்களே! அதுதானே எனக்கும் தெரிஞ்சாவுனும்..

said...

குமரன், ராகவன் கிட்ட இருந்த ஒரு தகவலும் இல்லையே. முதல் மரியாதை படத்தில செம்பட்டையன் கேட்கற மாதிரி ,'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாவுணும் சாமி!' டைலாக் வுட்டா தான் பதில் போடுவாரா?

said...

வருக எஸ்கே! வட நாட்டில எல்லை தெய்வங்கள் இருந்தாலும், நம்ம ஊரு அளவுக்கு இல்லை. அதூவும் அய்யனாரு சிலை எல்லாம் கிடையாதே! காக்கும் தெய்வங்களை பத்தி அதிகமா கதைகள் வரதில்லையே, ஏன்??

said...

வெளிகண்டநாதர், முருகனைக் கார்த்திக் என்று சொல்வதெல்லாம் பிற்காலத்து வழக்கம். நம்புங்கள்...இன்றைக்கு ஐயனார் கோயில்கள் இருப்பது போலத்தான் அன்றைக்கு முருகன் கோயில்களும் இருந்தன. கிடா வெட்டிக் கொண்டாடியிருக்கிறார்கள். வெறியாடியிருக்கிறார்கள். அதே போலத்தான் கொற்றவைக்கும். பின்னால் ஆரியக்கலப்பில் இருவரும் செறிவு கொண்டாலும் அவர்களின் மண்வாசனை போகாமல்தான் தமிழ்க்கடவுள் என்று சொல்வதும்...தென்னாடுடைய சிவனே என்று சொல்வதும். கண்ணகி கோயில்கள் எங்கும் இருந்தன. அவைகளும் இன்றைக்கு அம்மன் கோயில்கள்தான்.

மகாசக்தி மாரியம்மன், பதில் சொல்வாள் பத்திரகாளி, சமயபுரத்தாளே சாட்சி, என்று இந்தப் பக்கமும் வரிசைகள் இருக்கின்றன. ஆனாலும் வடக்கத்திய ஆதிக்கம் எங்கும் இருப்பது மறுக்க முடியாததுதான்.

said...

முருகன் கோவில்ல கிடா வெட்டி கொண்டாடினாங்களா? அப்புறம் எப்படி பஞ்சாமிர்தமாச்சு? இதுக்கு காரணம் யாரு?
//ஆரியக்கலப்பில் இருவரும் செறிவு கொண்டாலும்// பாருங்க போட்டீங்களே ஒரு போடு! திராவிடம் செறிவுற்றது ஆரிய கலப்பால்னு, திக காரங்க யாரவது படிச்சா என்னாவறது?

பதில் அவ்வளவு சுரத்தா இல்லையே?

said...

வெ.க.நாதரே,
ரெண்டு புத்தகம் சொல்றேன்; முடிஞ்சா மேஞ்சு பாருங்க; ஒண்ணு:why i am not a hindu - kanchia illiya (not sure of spelling )
2. sociobiology by wilson - a chapter on religions, faiths...

முடிஞ்சா மதங்கள் பற்றிய என் பதிவுகளில் கடைசிப் பதிவு (மட்டுமாவது)படியுங்கள்-முடியாட்டி அதன் 9வது பாயிண்டை'மட்டுமாவது(!)படியுங்கள். ஒரு விளம்பரம்தான் -சந்தடி சாக்கில்!

நான் சொன்ன முதல் புத்தகத்தில் எல்லா மதங்களிலும் உள்ள 'பெரிய கடவுளர்கள்', 'சின்னக் கடவுளர்கள்'பற்றிச் சொல்லப்பட்டிருக்கும்.
இதிலும் கீழ்த்திசை நாடுகளில் 'முன்னோர் வழிபாடு' ஒரு முக்கிய அம்சம். இந்த முன்னோர் வழிபாடும், திராவிட மதங்களும் பற்றி இரண்டாவது புத்தகத்தில் கூறப்படுகிறது. அதோடு, இந்து மதம் 'சிறுபான்மையாரின் மதமே'(since it is a brahminic religion,)என்றும் வாதிடுவார்.
எனது பதிவில் எப்படி எந்த மதமும் universal religion இல்லை; அங்கங்கு அந்தந்த நிலப் பரப்பில் கடவுளர்கள் மனிதர்களால் படைக்கப்பட்டார்கள் என்று கூறியுள்ளேன்.

ஆக, நீங்கள் சொல்லும் சின்னக் (திராவிடக்)கடவுள்கள் முன்னோர் வழிபாட்டினால் வந்த தெய்வங்கள்.அதனாலேயே இந்த தெய்வங்கள் தெக்காட்டுல மட்டும் இருக்காக. 'பெரிய கடவுள்கள்' ஆரியக் கடவுள்கள்.அவுக வடக்கால இருக்குறதுக்கும் அதுதான் காரணம்.

ஆனா இந்த முருக பெருமானின் விஷயம் எனக்கும் புரியாத ஒன்று.ராகவன் ஜி-யின் விளக்கம் போதவில்லை.

said...

என்னங்க எல்லோரும் ஆன்மீகத்தை குத்தகை எடுத்திட்டீங்க! ஏதோ சினிமா விமர்சனம்னு வந்து ஏமாந்தேன்.

said...

மனிதன் அந்தந்த நிலபரப்பிலே தான் படைத்த கடவுள் எல்லைகளை விளக்கி உள்ளீர். ஆனால் நான் கேட்கும் கேள்விகள் எப்படி சில கடவுள்கள் ஆதிக்கம் பெற்றனர். வழி வழியாக தான் படைத்த கடவுளை விட்டுவிட்டு மனிதன் வேறு கடவுளை தேடி போக வழி ஏன்? மதமாற்றம் முன் கடவுள் மாற்றம் ஏற்பட்டுவிட்டது ஆண்டாண்டு காலம் முன்னர். ஆக உங்கள் கருத்தே இதிலும் அடங்குகிறது, எந்த கடவுளும் பொதுமையானவன் அல்ல. No religion is universalங்கிற மாதிரி No God is universal. ஆக பண்டைய வழிபாட்டான பஞ்ச பூதங்களே நம்மை சுற்றி இருக்கும் சக்தி, கடவுள்!

said...

தாணு, இது ஆரம்பிச்சதே சினிமாவை பார்த்து தான். அந்த மதுரவீரன், அய்யனாரு கோவிலு, எல்லாத்தையும் பத்தி படத்தில பேச போக வந்த விளைவு. அப்புறம் எப்பவும் சினிமா பேசினா எப்படி. பேருக்கு ஏத்த மாதிரி கொஞ்ச்ம் ஆன்மிகமும் பேசனுமில்ல!

said...

இன்னிக்குத் தேதியிலே கண்டிப்பா விலைபோற சமாச்சாரம் இந்த 'ஆன்மீகம்'தான்.

இதோ கிளம்பிட்டேன்.'பின்னூட்ட மாதா துளசி'யின் அருளைப்பெற திரண்டு வாரீர்.

உங்கள் குறைகள் எல்லாம் நொடியில் தீர்ந்துவிடும். குறைகளை எல்லாம் கண்டிப்பாக் காது கொடுத்துக் கேப்பாங்க
நம்ம மாதா. அதைப் பதிஞ்சதும்,அதுக்கு பின்னூட்டம் வரவர உங்கள் குறைகள் மாயமாய் மறைந்து போகும்.

யாருகண்டா, நம்ம ஜனங்க கூட்டமா வந்தாலும் வந்துருவாங்கதானே?

சீக்கிரம் சிஷ்யர்கள் தேர்வு நடக்கப்போகுது. கவனமா 'துளசிதளம்' படியுங்க. அதுலேதான் தேர்வு நாள் வெளியிடப்படும்.

துள்சிதளம் கீ ஜெய்!!! போலோ துள்சிதளம் கீ ஜெய்!!!!

said...

Inru nam kumbidum Ayyanar, sasthavin vadivam than. Sastha arya kadavul enral ayyanarum arya kadavulthan.Pechi Aye enbathu Saraswathi deviyin tamil akkam than. Kathayi enbaval Mahalakshmiyin vadivam.Kali, Maha Mari ponror ellamvalla sakthi soroopangalthan. Mazhai peivatharku mariamman koilil kodi ethi thiruvizha kondaduvathu undu. Ithe mathiriyana deivangal vada nattilum undu.Karthigai pengal valarththal than Murugan Karthikeyan enapadukirar.Karthikeyan enbathu vada mozhiyum alla.Podhuvaga India pooravum ore Kadavul enru irunthalum avar avar mozhi panpadukku erpa sila sila maruthalkal irukkirathu.Chilappathikarathil Ayichiyar kuravaiyil varum tamil pattu,
NARAYANA ENNUM NAVENNA NAVE, enrum innoru idathil KARIYAVANAI KANATHA KAN ENNA KANNE< KAN IMAITHU KANBAR THAM KAN ENNA KANNE, enru vanthirukkirathu. Ithilirunthu pandaiya tamil nattilaye Kannan Valipadu, Murugan Valipadu, Kotravai Valipadu mudhliyana irunthu vanthullathu.Matrapadi Kannagi Madurai nagarai eritha karanathal ennal Kaval deivamaga etru kolla mudiyavillai.Madurai Chellaththamman Koil than Kannagi Koil enru kooruvarkal.Krishnan prappai kondadi ayichiyar kuravai pattu chilappathikarathil irukkirathu.

said...

அன்புடையீர்,
13.01.2006 அன்று நண்பர் திரு.தருமி தன் வலைப்பூவில் எழுப்பியிருந்த சில வினாக்களுக்கு எம் விடைகள். இவ்விழைக்குக் கொஞ்சம் தொடர்புள்ளது என நினந்து இட்டுள்ளே.

http://ukumar.blogspot.com/2006/03/blog-post_114213930274286589.html

இன்னும் பாலக்கரையாருக்குத் தனியே எமக்குத் தெரிந்தவைகளை இடுகிறோம்.

said...

அன்புடையீர்,
இதைப் படித்துவிட்டு ஞானவெட்டியானுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என நினைக்கவேண்டாம். தங்களின் வினாக்களுக்கு எனக்குத் தெரிந்தவரை விளக்கம் அளித்துள்ளேன். பதிவு பெரியதாகையால் தனியே இட்டுள்ளேன். காண்க.

http://njaanavelvi.blogspot.com/2006/03/blog-post_114234807778692355.html

said...

// முருகன் கோவில்ல கிடா வெட்டி கொண்டாடினாங்களா? அப்புறம் எப்படி பஞ்சாமிர்தமாச்சு? இதுக்கு காரணம் யாரு?
//ஆரியக்கலப்பில் இருவரும் செறிவு கொண்டாலும்// பாருங்க போட்டீங்களே ஒரு போடு! திராவிடம் செறிவுற்றது ஆரிய கலப்பால்னு, திக காரங்க யாரவது படிச்சா என்னாவறது?

பதில் அவ்வளவு சுரத்தா இல்லையே? //

வெளிகண்டநாதர், என்னுடைய பதில் உங்களுக்குச் சுரத்தா இல்லாததுக்குக் காரணம்....நான் சொல்லியிருப்பது செய்தி. பதிலல்ல. விவாதம் செய்வதற்காக நான் வரவில்லை. அது எனக்கு ஒப்புதலும் இல்லை. அதனால் இதைத் திககாரர் படித்தாலும் வேறு எந்தக்காரர் படித்தாலும் கவலையில்லை. ஆகையால் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டு நான் முடித்துக் கொள்கிறேன். அழைப்பு விடுத்தமைக்கு நன்றி.

செறிவுற்றது என்று நான் சொன்னது மேலும் சிலவை சேர்ந்ததைத்தான். Dopping என்று சொல்வார்கள். அதாவது adding impurities. electronics படித்தவர்களுக்குத் தெரியும்.

முருக வழிபாடு உறுதியான தமிழ்த்தொன்ம வழிபாடு. ஆகையால்தான் பின்னால் அதனோடு பல விஷயங்களைச் சேர்த்த பொழுதும் கதைகளைக் கூட்டிய பொழுதும் நூறு ஆயிரம் பேர்கள் கிடைத்த பொழுதும்......இன்றைக்கும் முருகனே நிலைத்திருப்பது விளங்கும். நெருப்பில் எதைச் சேர்த்தாலும் அது நெருப்பின் பண்பாகி நெருப்பே நிலைக்கும். கொற்றவையும் விரிசடையனும் தங்களது பெயர்களை இழந்து விட்ட பொழுதும்....பெயரும் தமிழ்க்கடவுள் என்ற வேரும் இழக்காத தன்மையைத்தான் நான் செறிவு என்றேன். எதிரியே இல்லாதவன் வீரனல்ல. ஆயிரம் எதிரிகள் வந்தாலும் வென்று நிலைப்பவனே வீரன். அது போல இது.

முருகக் கடவுளின் கோயில்கள் ஐயனார் கோயில்கள் போல இருந்ததிற்கும் கிடா வெட்டிக் கொண்டாடி வெறியாடியதற்கும் சாட்சிகள் தமிழ் இலக்கியங்களில் ஏராளமாகக் கிடைக்கின்றன. படித்துப் பார்த்தால் தெரியும். நக்கீரரும் இளங்கோவடிகளும் கூட விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

பஞ்சாமிர்தமானாது நிச்சயமாக பிற்காலத்தில். வடக்கிலிருந்து வந்த வழக்கு. எப்பொழுது எப்படி என்பது எனக்குத் தெரியாது. நிச்சயமாக பிராமணர்களால் என்று மட்டும் சொல்ல முடியும்.

கடைசியில் தருமிக்கு,

தருமி...கடவுள் மனிதனைப் படைத்தான். மனிதன் தான் உணர்ந்த வகைகளில் எல்லாம் கடவுள் உருவங்களைப் பெயர்களைப் படைத்தான். எந்தப் பெயரைச் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் அது ஒருவனைத்தான். இறைவனைத்தான். ஓலமறைகள் அரைகின்ற ஒன்றது..மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடரது.

வாய்ப்புக்கு நன்றி கூறி இந்தத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்.

said...

வெளிகண்டநாதர்,
இராகவன் சொல்வதுதான் என் கருத்தும். வட நாட்டில் ஸ்கந்தன் தோன்றியதை பற்றி பல்வேறு கதைகள் உண்டு. அப்படிப்பட்ட ஒன்றை பற்றிய என் பழைய பதிவு இங்கே..

http://valaippadhivu.blogspot.com/2006/01/blog-post.html


அதே கட்டுரையில் தென்னாட்டு கந்தனின் பழமையும், தனித்தன்மையையும் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். பாருங்கள்.

said...

இங்கே கொஞ்சம் பாருங்க!
அன்புடன் சாம்
http://www.harappa.com/script/maha12.html

said...

கடைசியில அமிர்தமர்த்தாயினி மாதிரி கோஷ்டி கும்பல சேர்க்க பார்க்கிறீங்க:) சினிமாவுக்கு அடுத்தது அதிகம் பேசப்படுறது இந்த ஆன்மீகம் தான், துளசி, அதான் அதிகம் விலை போறது!

said...

வருக கீதா சாம்பசிவம் அவர்களே! நீங்க சொல்ற மாதிரி ஆரியகடவுள்கள் தான் இந்த காவல் காத்த தெய்வங்களான, அய்யனார், செல்லாத்தா, என்று நீங்கள் கூறுவதற்கு தக்க ஆதாரங்கள் இல்லை. எல்லாம் சொல்ல கேள்வி. ஆதி தமிழன் வழிப்பாட்டின் அங்கமாய் இருந்த இந்த காவல்காரர்களுக்கு அதிகமாக கோயில்கள் தமிழ்நாடெங்கும் மூலா மூலைக்கு இல்லை என்பதே என் ஐயப்பாடு!

said...

//ஆதி தமிழன் வழிப்பாட்டின் அங்கமாய் இருந்த இந்த காவல்காரர்களுக்கு அதிகமாக கோயில்கள் தமிழ்நாடெங்கும் மூலா மூலைக்கு இல்லை என்பதே என் ஐயப்பாடு!//

உள்ளது நண்பரே!

சிற்றூர்களிலும், பட்டி தொட்டிகளிலும், குறிச்சிகளிலும் எங்கேனும் மூலை முடுக்கில் இருக்கும். அது ஏதாகிலும், நட்ட கல்லாகவோ, பனைமரமாகவோ, நட்ட வேலாகவோ, அரிவாளாகவோ, மரங்களாகவோ இருக்கிறது.

பேரூர்களில் உள்ள தனவந்தர்கள் பொதுவாகத் தங்களின் செல்வங்களைப் பயன்படுத்தி பெரிய தெய்வங்கள் என்று அவர்கள் நினைக்கும் சிவன், மால், பிள்ளையார், முருகன் ஆகியோருக்குக் கற்றளி எழுப்பிக் குடமுழுக்கும் செய்துவிட்டுத் தான் பிறந்த ஊரில் உள்ள காவல் தெய்வங்களைக் கவனிப்பது இல்லை.அதனால் காவல் தெய்வங்களுக்குக் கோயில்கள் மிகவும் குறைவு. ஏன் என்று கேட்டால், குறி கேட்டேன்; "சாமி எனக்குக் கூறை வேண்டாம்" என்று சொல்லி விட்டது என மழுப்பி விடுவர்.

said...

திரு ஞான்வெட்டியான் அவர்களே, நல்லதொரு விளக்கத்தை அளித்துள்ளீர் உங்கள் பதிவில். நம் முன்னோர்கள் நமக்குள் எப்படி தெய்வம் ஆனார்கள், அதே போல் சமூகத்திற்கு, போரில் மாண்டோர் எப்படி தெய்வமானர்கள், ஆதி திராவிட தமிழனக்கு உருவ வழிபாட்டு வந்த முறையையும் விளக்கினீர்கள், சிலை வடித்து தெய்வத்தை நாட வேண்டிய கட்டாயத்தையும் விளக்கினீர்கள். மற்ற தெய்வங்களின் உருவக படுத்துதலையும் எப்படி புராணங்கள் வாயிலாக சித்திரிக்கப் பட்டன என்பதையும் விளக்கினீர்கள். சிற்றூர், பெரியூர்களின் அறிவுத்திறன்களையும் விளக்கினீர்கள். ஆக நீங்கள் கூறிய மெஞ்ஞான விளக்கம் அஞ்ஞான விளக்கத்திற்கு சரியாக வரவில்லை என்பதே அடியேனின் கருத்து.
இருந்தாலும், இந்த காவல் தெய்வங்கள் ஏன் வியாபிக்கவில்லை மற்ற தெய்வங்களின் உருவகமுறையில் அனத்து இடங்களிலும் வியாபித்தது போல். ஆக நிஜமான சம்பவங்களின் தொகுப்பால் இறையான்மையை படைத்த நம் திராவிட குலத்திற்கு, நிஜமற்ற புராண இதிகாசங்களை கொண்டு படைக்கப் பெற்ற கடவுள்கள் எப்படி மேன்மையாக்க பட்டன என்பதே கேள்வி. அதை சற்று விளக்கவும்!

said...

ராகவன், கொஞ்சம் சூடாகி போய்ட்டீங்கன்னு நினைக்கிறேன்.

//செறிவுற்றது என்று நான் சொன்னது மேலும் சிலவை சேர்ந்ததைத்தான். Dopping என்று சொல்வார்கள். அதாவது adding impurities. electronics படித்தவர்களுக்குத் தெரியும்.// இதுல Impurity யாரு?

//வாய்ப்புக்கு நன்றி கூறி இந்தத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்.// இப்படி ஓடிட்டா எப்படி, சரி பஞ்சாமிர்த கதை யாரு சொல்லுவா?

said...

சாம், சிந்து சமவெளி நாகரீகமே, நம் திராவிட நாகரீகம் தான்! அதில கிடைச்ச ஆதாரங்கள்ல முருகு கிடைச்சிருக்கு, ராகவனும் இதை பத்தி எழுதி இருந்தாரு, ஆனா வேற கோணத்தில, இராமநாதன் கொடுத்த சுட்டியில போயி பாருங்க, நானும் கொஞ்சம் அலசிட்டு அப்புறம் எழுதுறேன், சுட்டி கொடுத்தமைக்கு நன்றி சாம்!

said...

நாதரே,
"இருந்தாலும், இந்த காவல் தெய்வங்கள் ஏன் வியாபிக்கவில்லை மற்ற தெய்வங்களின் உருவகமுறையில் அனத்து இடங்களிலும் வியாபித்தது போல்..."//
- அதுதான் ஞானவெட்டியான் பதிலில் இருக்கிறதே. (நானும் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியுள்ளேன்) காவல் தெய்வங்களும், திராவிடரின் குல தெய்வங்களும் 'முன்னோர் வழிபாட்டின்' ஒரு பகுதியே. உங்கள் முப்பாட்டனை நீங்கள்தான் வழிபடுவீர்கள் - உங்கள் ஊரில் மட்டும், நான் என் முப்பாட்டனுக்கு எங்கள் ஊரில் கோவில் கட்டி, ஆடு வெட்டுவது போல. இல்லையா? இதைத்தான் local (gods) deities, small deities என்கிறார்கள். then the big gods were imposed / sneaked into our culture by hook or crook and they started dominating the society.

விளக்கம் சரியா என்று மக்கள்தான் கூற வேண்டும்.

கீதா "ஆரியகடவுள்கள் தான் இந்த காவல் காத்த தெய்வங்களான, அய்யனார், செல்லாத்தா, என்று .."சொல்வது போல் இல்லையென நினைக்கிறேன்.
அவர்கள் சொல்லுவது - evolution; ஆனால் உண்மையில் அவைகள் - parallels. அவ்வளவே என்றுதான் நினைக்கிறேன். மாரியம்மாளையும், மரியம்மாளையும், ஏசுவையும், ஆயர்பாடி கிருஷ்ணனையும் ஒப்பிடுவது மாதிரிதான்!

said...

இராமநாதன் கந்தன் கதை சொன்னதுக்கு நன்றி ! சிந்து சமவெளி ஆராய்ச்சி பத்தின பதிவை பாருங்க!

said...

ராகவன்,
"வாய்ப்புக்கு நன்றி கூறி இந்தத் திரியில் இருந்து விடை பெறுகிறேன்" // - இப்படிச் சொல்லிட்டா எப்படி? திரியில இப்பதான பத்த வச்சிருக்கு... :-)

"கடைசியில் தருமிக்கு,"//
- என்னைக் கடைசியில் தள்ளியமைக்கு என் 'எதிர்ப்பைத்' தெரிவித்துக்கொள்கிறேன் :-)

"தருமி...கடவுள் மனிதனைப் படைத்தான்." நாந்தான் இல்ல அப்டின்னு என் காரண காரியங்களோடு விளக்கிட்டேனே!
"மனிதன் தான் உணர்ந்த வகைகளில் எல்லாம் கடவுள் உருவங்களைப் பெயர்களைப் படைத்தான். எந்தப் பெயரைச் சொன்னாலும் எப்படிச் சொன்னாலும் அது ஒருவனைத்தான். இறைவனைத்தான். ஓலமறைகள் அரைகின்ற ஒன்றது..மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடரது."
ராகவன், சும்மா இப்படியே சொல்லிக்கிட்டு 'எல்லா நதிகளும் கடலில் தான் சேருகின்றன; அதுபோலவே எல்லா மதங்களும்...' அப்டின்னு ரொம்பவே கேட்டாச்சு. ஆனால் மதங்களுக்குள்ளும், மனிதன் படைத்த கடவுள்களுக்குள்ளும் எவ்வளவு வேற்றுமைகள். 'அன்பே கடவுள்', 'jesus loves',இறைவன் கருணைமயமானவன்' என்று வெளியே சொல்லிக்கொண்டே நாமும் காலம் காலமாய் நம் கடவுள்ர்கள் பெயரில் சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்; இருப்போம். மதங்களில் எங்கே இருக்கிறது பொதுமை? படைத்த கடவுளே நம் படைப்புகளில் உள்ள 'அவரைப் பற்றிய'(!!)அனர்த்தங்களையும், தவறுகளையும் அனுமதித்துக் கொண்டுள்ளாரா?

நீண்ட பின்னூட்டத்தைத் தவிர்க்க, இத்துடன் ""வாய்ப்புக்கு நன்றி கூறி (இந்தத் திரியில் இருந்து ) விடை பெறுகிறேன்"!!

said...

அன்பு வெளிகண்டநாதர்,

//நீங்கள் கூறிய மெஞ்ஞான விளக்கம் அஞ்ஞான விளக்கத்திற்கு சரியாக வரவில்லை என்பதே அடியேனின் கருத்து. //

தங்களின் வினா எனக்குப் புரியவில்லை.

//இந்த காவல் தெய்வங்கள் ஏன் வியாபிக்கவில்லை மற்ற தெய்வங்களின் உருவகமுறையில் அனத்து இடங்களிலும் வியாபித்தது போல். //

சிற்றூர்களிலும், பட்டி தொட்டிகளிலும், குறிச்சிகளிலும் எங்கேனும் மூலை முடுக்கில் இருக்கும். அது ஏதாகிலும், நட்ட கல்லாகவோ, பனைமரமாகவோ, நட்ட வேலாகவோ, அரிவாளாகவோ, மரங்களாகவோ இருக்கிறது.

பேரூர்களில் உள்ள தனவந்தர்கள் பொதுவாகத் தங்களின் செல்வங்களைப் பயன்படுத்தி பெரிய தெய்வங்கள் என்று அவர்கள் நினைக்கும் சிவன், மால், பிள்ளையார், முருகன் ஆகியோருக்குக் கற்றளி எழுப்பிக் குடமுழுக்கும் செய்துவிட்டுத் தான் பிறந்த ஊரில் உள்ள காவல் தெய்வங்களைக் கவனிப்பது இல்லை.அதனால் காவல் தெய்வங்களுக்குக் கோயில்கள் மிகவும் குறைவு. ஏன் என்று கேட்டால், குறி கேட்டேன்; "சாமி எனக்குக் கூறை வேண்டாம்" என்று சொல்லி விட்டது என மழுப்பி விடுவர்.

//நிஜமான சம்பவங்களின் தொகுப்பால் இறையான்மையை படைத்த நம் திராவிட குலத்திற்கு, நிஜமற்ற புராண இதிகாசங்களை கொண்டு படைக்கப் பெற்ற கடவுள்கள் எப்படி மேன்மையாக்க பட்டன என்பதே கேள்வி. அதை சற்று விளக்கவும்!//

- அதுதான் ஞானவெட்டியான் பதிலில் இருக்கிறதே. (நானும் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியுள்ளேன்) காவல் தெய்வங்களும், திராவிடரின் குல தெய்வங்களும் 'முன்னோர் வழிபாட்டின்' ஒரு பகுதியே. உங்கள் முப்பாட்டனை நீங்கள்தான் வழிபடுவீர்கள் - உங்கள் ஊரில் மட்டும், நான் என் முப்பாட்டனுக்கு எங்கள் ஊரில் கோவில் கட்டி, ஆடு வெட்டுவது போல. இல்லையா? இதைத்தான் local (gods) deities, small deities என்கிறார்கள். then the big gods were imposed / sneaked into our culture by hook or crook and they started dominating the society.

விளக்கம் சரியா என்று மக்கள்தான் கூற வேண்டும்.

ஆரியர்கள் அமுக்க வேண்டியதில்லை. அவர்கள் அன்பின் உருமாக சரஸ்வதி, லக்ஷமி, அன்னபூரணி, அப்படின்னு நல்லமாதிரி சாமிகளை உயர்த்திப்பேசி அதற்குரிய கதைகளையும் புராணங்களாக செங்கிருதத்தில் எழுதி வைத்து விட்டனர். எல்லைச் சாமிகளைப் பற்றி அவ்வூருக்குள் மட்டும்தான் பேச்சு. ஆக எல்லைச் சாமிகளைப் பற்றி கதைகள் நிறைய எழுதப்படவில்லை; பிரபலமாகவில்லை.

நண்பர் தருமியும் தங்களின் பதிவில் பின்னூட்டமிட்டுள்ளார்.

- அதுதான் ஞானவெட்டியான் பதிலில் இருக்கிறதே. (நானும் அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லியுள்ளேன்) காவல் தெய்வங்களும், திராவிடரின் குல தெய்வங்களும் 'முன்னோர் வழிபாட்டின்' ஒரு பகுதியே. உங்கள் முப்பாட்டனை நீங்கள்தான் வழிபடுவீர்கள் - உங்கள் ஊரில் மட்டும், நான் என் முப்பாட்டனுக்கு எங்கள் ஊரில் கோவில் கட்டி, ஆடு வெட்டுவது போல. இல்லையா? இதைத்தான் local (gods) deities, small deities என்கிறார்கள். then the big gods were imposed / sneaked into our culture by hook or crook and they started dominating the society.

விளக்கம் சரியா என்று மக்கள்தான் கூற வேண்டும்.

said...

//அப்புறம் கடைசியா, ஆரிய வழியில வந்த கடவுள் தான் முருகப்பெருமான்,//

நீங்க இதை ஏன் சொன்னீங்க?

அதனால தான் இந்த சுட்டிய அனுப்பினேன்.
சிவனை, சிந்து சமவெளி நாகரீகதில பசுபதின்னு சொல்றாங்கன்னு, தெரியும்.
முருகனுக்கும் சிவனுக்கும் முன்னாடியே தமிழோடு தொடர்பு இருக்கு
அதைத்தான் நான் சொல்ல வந்தேன். பஞ்சாமிர்தம் பற்றி பேச்சு வந்தது, கவனிச்சேன்.
தமிழுக்கு புலால் மறுத்தல்ங்குற பழக்கம் சமணர்களிடமிருந்துதான் வந்தது.
அன்புடன்
சாம்

said...

//then the big gods were imposed / sneaked into our culture by hook or crook and they started dominating the society.//

அப்பா கடைசியா வந்திட்டுது, இந்த hook or crook தான் எல்லாத்துக்கும் மொத்த பதில்!

said...

விவர்த்துக்கு நன்றி சாம்!

said...

ஒரு இடத்தில் நீங்கள் மூக்கு பிடிக்க கடா வெட்டி சாப்பிட்டதாக வருகிறது.:)))

நல்ல அலசல் நாரதர்
அய்யா..அப்புறம் உங்கள் நானோ டெக்கும் படித்தென்..சூப்பர் சார்..

said...

மதுரை வீரன் சாமி கும்படுறதே கடா வெட்டி சாப்பிடதானே-:))