மணியோட எத்தனையோ லேட்டஸ்டா வந்த படங்கள்ல இந்த தொழிநுட்ப கலக்கலும் கதை சொல்லும் திறமை பளிச்சிட்டாலும், எனக்கு ஆரம்ப காலத்திலே வந்த 'மெளனராகம்' படம் இன்னும் மனசிலே அப்படியே நின்னுக்கிட்டிருக்கு. உதாரணத்துக்கு இந்த காட்சி அமைப்பை பார்ப்போம்!
சீன்: ரேவதி, என்னமோ பெரிசா சாதிச்சிட்டதா, அதுவும் அப்பா, அம்மா சொல்லியும் கேட்கமா லேட்டாவந்து, பொண்ணு பார்க்க வந்த கும்பலை பார்க்காமலே திருப்பி அனுப்பிச்சிட்டதா நினைச்சிக்கிட்டு வீட்டுக்குள்ள நுழையும் போது அவங்க எல்லாம் இருக்கிறதை கண்ட அதிர்ச்சியான காட்சி! மாப்பிள்ளை மோகனும், அவருக்காக காத்துக்கிட்டிருக்க, அவங்க இரண்டுபேரும் தனியா சந்திச்சு உரையாடி, அந்த தனி சந்திப்பின் உரையாடிலின் விளைவே கல்யாணத்தை நிகழ்த்தக்கூடிய சம்பவமாகிப் போவதாகும் காட்சி! இதை மணியைத்தவிர இத்தனை அழகா திரைக்கதை சொல்லும் ('Narration') திறனை வேற எந்த இயக்குநர் கிட்டேயும் பார்க்க முடியாது!
 இந்த முதல் ஃபிரேம், ரேவதி மழையிலே ஆட்டம் போட்டுட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு திரும்பி, உள்ளே நுழையறப்ப, அவருக்காக காத்துக்கிட்டிருக்கிற மணமகன் குடும்பத்தை கண்டதும் அதிர்ச்சியோட உள்ளே நுழையும் காட்சி!
இந்த முதல் ஃபிரேம், ரேவதி மழையிலே ஆட்டம் போட்டுட்டு ரொம்ப லேட்டா வீட்டுக்கு திரும்பி, உள்ளே நுழையறப்ப, அவருக்காக காத்துக்கிட்டிருக்கிற மணமகன் குடும்பத்தை கண்டதும் அதிர்ச்சியோட உள்ளே நுழையும் காட்சி! அடுத்த ஃபிரேம்ல ரேவதிக்கு அலங்காரம் செய்யும் பொழுது, லேட்டா வந்ததுக்காக வாங்கி கட்டிக்கிட்டு, 'அதே நேரத்தில எவ்வளவு பெருந்தன்மையா மாப்பிள்ளை உனக்காக காத்துக்கிட்டு இருந்தாரு'ன்னு மாப்பிள்ளைப் புகழ் பாடறதையும் கேட்டுக்கிட்டு இருக்கிற ரேவதி எந்த வித ரியாக்ஷனும் இல்லாம மூஞ்சியை உம்முன்னு வச்சுக்கிட்டு இருக்கிறதை 'கண்ணடி பிம்பம்' வழியா அவருடய பிரதிபலிப்பு என்னான்னு சொல்ற ஃபிரேம்!
அடுத்த ஃபிரேம்ல ரேவதிக்கு அலங்காரம் செய்யும் பொழுது, லேட்டா வந்ததுக்காக வாங்கி கட்டிக்கிட்டு, 'அதே நேரத்தில எவ்வளவு பெருந்தன்மையா மாப்பிள்ளை உனக்காக காத்துக்கிட்டு இருந்தாரு'ன்னு மாப்பிள்ளைப் புகழ் பாடறதையும் கேட்டுக்கிட்டு இருக்கிற ரேவதி எந்த வித ரியாக்ஷனும் இல்லாம மூஞ்சியை உம்முன்னு வச்சுக்கிட்டு இருக்கிறதை 'கண்ணடி பிம்பம்' வழியா அவருடய பிரதிபலிப்பு என்னான்னு சொல்ற ஃபிரேம்! இந்த ஃபிரேம்லே ரேவதியோட தங்கச்சி, 'அவரு பாவம்!, உங்கிட்ட...' இந்த டைலாக சொல்ல வர்ற தங்கச்சியையும் கண்ணாடிபிம்பத்திலே தான் காமிக்கிறார் மணி, ஆனா அடுத்த ஃபிரேம் பாருங்க, அங்க தான் மணியோட திரைக்கதை சொல்லும் கெட்டிக்காரத் தனம் பளிச்சிடும்!
இந்த ஃபிரேம்லே ரேவதியோட தங்கச்சி, 'அவரு பாவம்!, உங்கிட்ட...' இந்த டைலாக சொல்ல வர்ற தங்கச்சியையும் கண்ணாடிபிம்பத்திலே தான் காமிக்கிறார் மணி, ஆனா அடுத்த ஃபிரேம் பாருங்க, அங்க தான் மணியோட திரைக்கதை சொல்லும் கெட்டிக்காரத் தனம் பளிச்சிடும்! 'அவரு பாவம்! உங்கிட்ட தனியா ஏதோ பேசணுமா, அதுக்குதான் இவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருக்காரு!' அப்படின்னு தங்கச்சி சொன்னோன்ன உடனே அதிர்ந்து திரும்பறப்ப தான் ரேவதியோட நிஜ முகம் நமக்கு தெரிய வருது! அதுவரை பிம்பத்தை எதிரொலியாக மட்டும் கண்ணாடியிலே காட்டி விட்டு அவரின் அதிர்ச்சியை நிஜத்தில் காட்டும் இக்காட்சி, அதற்கு அழகு சேர்க்கும் இசைஞானியின் பின்னனி இசை, காட்சியை எங்கேயோ கொண்டி நிறுத்தும்!
'அவரு பாவம்! உங்கிட்ட தனியா ஏதோ பேசணுமா, அதுக்குதான் இவ்வளவு நேரம் காத்துக்கிட்டிருக்காரு!' அப்படின்னு தங்கச்சி சொன்னோன்ன உடனே அதிர்ந்து திரும்பறப்ப தான் ரேவதியோட நிஜ முகம் நமக்கு தெரிய வருது! அதுவரை பிம்பத்தை எதிரொலியாக மட்டும் கண்ணாடியிலே காட்டி விட்டு அவரின் அதிர்ச்சியை நிஜத்தில் காட்டும் இக்காட்சி, அதற்கு அழகு சேர்க்கும் இசைஞானியின் பின்னனி இசை, காட்சியை எங்கேயோ கொண்டி நிறுத்தும்! இந்த காட்சியில் மோகனை ஒரு இருட்டறையில் காட்டி, அதன் பக்கத்தில் இருக்கும் டேபிள் லேம்ப்பின் ஒளி மட்டும் தான் காட்சி பரிபாலனம்! வேறு எந்த ஒளி மூலத்தையும் கையாளவில்லை, இது மணியின் டிபிக்கல் ட்ரேட்மார்க்!
 இந்த காட்சியில் மோகனை ஒரு இருட்டறையில் காட்டி, அதன் பக்கத்தில் இருக்கும் டேபிள் லேம்ப்பின் ஒளி மட்டும் தான் காட்சி பரிபாலனம்! வேறு எந்த ஒளி மூலத்தையும் கையாளவில்லை, இது மணியின் டிபிக்கல் ட்ரேட்மார்க்! அடுத்து ரேவதி அறைக்குள் நுழையும் காட்சி! லெனின்-விஜயனின் எடிட்டிங் திறமை பளிச்சிடுகிறது இங்கே! ஒரே ஒரு கோணத்தில் ரேவதியின் அனைத்து நகர்வுகளும் பதிவு செய்ய பட்டு எடுக்கப்பட்டிருக்கும்! அப்படியே காமிரா கண்கள் தூரத்திலிருந்து கேரெக்டர் அருகாமயில் சென்று அடுத்த ஃபிரேமிக்கு செல்வதை காணலாம்!
அடுத்து ரேவதி அறைக்குள் நுழையும் காட்சி! லெனின்-விஜயனின் எடிட்டிங் திறமை பளிச்சிடுகிறது இங்கே! ஒரே ஒரு கோணத்தில் ரேவதியின் அனைத்து நகர்வுகளும் பதிவு செய்ய பட்டு எடுக்கப்பட்டிருக்கும்! அப்படியே காமிரா கண்கள் தூரத்திலிருந்து கேரெக்டர் அருகாமயில் சென்று அடுத்த ஃபிரேமிக்கு செல்வதை காணலாம்! முந்தைய ஃபிரேமின் தொடர்ச்சி, ஆனால் ரேவதியை போக்கஸ் செய்யப்பட்டு காண்பிக்கப்படும் காட்சி! இக்காட்சியை தொடர்ந்து ரேவதியின் வசனங்கள், எதற்காக இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று கூறும் வசனக்காட்சிகள்!
 முந்தைய ஃபிரேமின் தொடர்ச்சி, ஆனால் ரேவதியை போக்கஸ் செய்யப்பட்டு காண்பிக்கப்படும் காட்சி! இக்காட்சியை தொடர்ந்து ரேவதியின் வசனங்கள், எதற்காக இந்த கல்யாணம் பிடிக்கவில்லை என்று கூறும் வசனக்காட்சிகள்! இந்த காட்சியின் கோணத்தில் ஓளி என்று பார்க்கும் பொழுது மோகன் ரேவதிக்கும் இடையில் இருக்கும் சின்ன டேபிள் லேம்ப் தான்! மீண்டும் இருண்ட பின்னனியில் வசனங்கள் நடந்தேறும் காட்சி! ஆனால் பளிச் என்று வந்திருக்கும்! இருவர் கதாபாத்திர உரையாடல் காட்சியின் கோணத்தில் காமிராவின் ஆங்கிள் நிறுத்தப்பட்டிருக்கும்!
இந்த காட்சியின் கோணத்தில் ஓளி என்று பார்க்கும் பொழுது மோகன் ரேவதிக்கும் இடையில் இருக்கும் சின்ன டேபிள் லேம்ப் தான்! மீண்டும் இருண்ட பின்னனியில் வசனங்கள் நடந்தேறும் காட்சி! ஆனால் பளிச் என்று வந்திருக்கும்! இருவர் கதாபாத்திர உரையாடல் காட்சியின் கோணத்தில் காமிராவின் ஆங்கிள் நிறுத்தப்பட்டிருக்கும்! இந்த காட்சி குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியாக சம்பந்தம் முடிந்தை பற்றி பேசும் காட்சியின் தொடக்கம்! அடுத்தடுத்து ஒவ்வொருவராக போக்கஸில் வந்து தன்னுடய கருத்துகளை கூறும் காட்சிகள் இனி வரும் ஃபிரேம்களில்!
இந்த காட்சி குடும்பத்தார் அனைவரும் மகிழ்ச்சியாக சம்பந்தம் முடிந்தை பற்றி பேசும் காட்சியின் தொடக்கம்! அடுத்தடுத்து ஒவ்வொருவராக போக்கஸில் வந்து தன்னுடய கருத்துகளை கூறும் காட்சிகள் இனி வரும் ஃபிரேம்களில்! குடும்பத்தாரார் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டாலும், ஆனால் படம் பார்ப்பவர்கள், ரேவதியின் கருத்து என்ன என்று, யோசிக்க வைக்கும் இந்த காட்சியில் ரேவதியை போக்கஸ் செய்து காட்டி இருப்பார் மணி!
குடும்பத்தாரார் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொண்டாலும், ஆனால் படம் பார்ப்பவர்கள், ரேவதியின் கருத்து என்ன என்று, யோசிக்க வைக்கும் இந்த காட்சியில் ரேவதியை போக்கஸ் செய்து காட்டி இருப்பார் மணி! மறுபடியும் எடிட்டிங்கின் திறமை பளிச்சிடும்! இனி ஒவ்வொருவராக அந்த அந்த கேரெக்டர்களை போக்கஸ் செய்து கருத்துக்கள் கூருவது போல இயல்பாக எந்த ஒரு குடும்பத்திலும் நடக்கும் இச்சம்பவம் போல படம் பிடித்து காட்டியிருப்பார்!
மறுபடியும் எடிட்டிங்கின் திறமை பளிச்சிடும்! இனி ஒவ்வொருவராக அந்த அந்த கேரெக்டர்களை போக்கஸ் செய்து கருத்துக்கள் கூருவது போல இயல்பாக எந்த ஒரு குடும்பத்திலும் நடக்கும் இச்சம்பவம் போல படம் பிடித்து காட்டியிருப்பார்! ஆனால் ரேவதியோ விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருப்பார்! அதுவும் வளையலை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்து விளையாடிக்கொண்டிருக்கும் தன் சந்தோஷமற்ற தன்மையை இந்த ஃபிரேம் படம் பிடித்து காண்பிக்கும்! இந்த மாதிரி கட்டங்களில் எந்த பெண்ணுக்கும் உள்ள மனோபாவத்தை அழகாக சொல்லி இருப்பார்!
ஆனால் ரேவதியோ விரக்தியின் உச்சக்கட்டத்தில் இருப்பார்! அதுவும் வளையலை ஒவ்வொன்றாக பிடித்து இழுத்து விளையாடிக்கொண்டிருக்கும் தன் சந்தோஷமற்ற தன்மையை இந்த ஃபிரேம் படம் பிடித்து காண்பிக்கும்! இந்த மாதிரி கட்டங்களில் எந்த பெண்ணுக்கும் உள்ள மனோபாவத்தை அழகாக சொல்லி இருப்பார்! ரேவதியின் அண்ணன் தன்பங்குங்கு கூறும் காட்சியின் தொகுப்பு! இது மாறி மாறி வரும் கேரெக்டர்களின் வசனகாட்சிகளில் எடிட்டிங்கின் மேஜிக் தெரிய வரும்!
ரேவதியின் அண்ணன் தன்பங்குங்கு கூறும் காட்சியின் தொகுப்பு! இது மாறி மாறி வரும் கேரெக்டர்களின் வசனகாட்சிகளில் எடிட்டிங்கின் மேஜிக் தெரிய வரும்! கடைசி தங்கை தன்பங்குக்கு தன் கருத்தை சொல்லும் காட்சி! அதையும் மிக அழகாக எடுத்து சொல்லி படம் பார்ப்பவர்களை ஆர்வத்தின் உச்சத்திற்கு எடுத்து செல்வார்!
கடைசி தங்கை தன்பங்குக்கு தன் கருத்தை சொல்லும் காட்சி! அதையும் மிக அழகாக எடுத்து சொல்லி படம் பார்ப்பவர்களை ஆர்வத்தின் உச்சத்திற்கு எடுத்து செல்வார்! ரேவதியின் தந்தை ரேவதியிடம் எதற்காக உனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்று கேட்கும் காட்சியில் மீண்டும் கேரெக்டர் போக்கஸ் செய்து அடுத்து வரப்போகும் திடீர் திருப்பங்களிக்கான வீரியத்தை கொண்டு வர முயற்சிப்பார்!
ரேவதியின் தந்தை ரேவதியிடம் எதற்காக உனக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லை என்று கேட்கும் காட்சியில் மீண்டும் கேரெக்டர் போக்கஸ் செய்து அடுத்து வரப்போகும் திடீர் திருப்பங்களிக்கான வீரியத்தை கொண்டு வர முயற்சிப்பார்! குடும்பத்தார் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியின் கோணத்தில் எடுக்கப்பட்ட அதே காட்சியின் மீதம் இங்கு ஒட்டப்பட்டிருக்கும்! ஆனால் வசனப்பதிவின் தொடர்ச்சியில் காட்சி எடுக்கபட்ட நிலையை வேறுவிதமாக கண்பிப்பது எடிட்டிங் திறமை!
குடும்பத்தார் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்த காட்சியின் கோணத்தில் எடுக்கப்பட்ட அதே காட்சியின் மீதம் இங்கு ஒட்டப்பட்டிருக்கும்! ஆனால் வசனப்பதிவின் தொடர்ச்சியில் காட்சி எடுக்கபட்ட நிலையை வேறுவிதமாக கண்பிப்பது எடிட்டிங் திறமை! புதுவித கோணத்தில் ரேவதிக்கும் அவரது தந்தைக்குமிடையே நடக்கும் உரையாடல்! கேமிராவின் கோணம் ரேவதியின் முதுகு பக்கத்தை காண்பித்து, தந்தையை மட்டும் பிரதானபடுத்தும் காட்சி! வசனமும் பளிச்சென்று இருக்கும், தன் மிடில் கிளாஸ், அரசாங்க உத்தியோக தகப்பனின் கடமை என ரத்தினசுருக்கமான காட்சி, ஆனால் வீரியம் மிகுந்த ஒன்று!
புதுவித கோணத்தில் ரேவதிக்கும் அவரது தந்தைக்குமிடையே நடக்கும் உரையாடல்! கேமிராவின் கோணம் ரேவதியின் முதுகு பக்கத்தை காண்பித்து, தந்தையை மட்டும் பிரதானபடுத்தும் காட்சி! வசனமும் பளிச்சென்று இருக்கும், தன் மிடில் கிளாஸ், அரசாங்க உத்தியோக தகப்பனின் கடமை என ரத்தினசுருக்கமான காட்சி, ஆனால் வீரியம் மிகுந்த ஒன்று! ரேவதியின் பரிகாசப் பார்வை, எதற்காக இந்த மிடில் கிளாஸ் நிர்பந்ததிற்கு கட்டுப்பட வேண்டும் என்கிற ஏளனப்பார்வை! வசனமின்றி தந்தையின் அறிவுரையை அவமதிப்பது போன்ற காட்சி அமைப்பு!
ரேவதியின் பரிகாசப் பார்வை, எதற்காக இந்த மிடில் கிளாஸ் நிர்பந்ததிற்கு கட்டுப்பட வேண்டும் என்கிற ஏளனப்பார்வை! வசனமின்றி தந்தையின் அறிவுரையை அவமதிப்பது போன்ற காட்சி அமைப்பு!  நான் மேலே கூறிய காட்சியின் தொடர்ச்சி, தந்தை வசனம் பேசுகிறார், ஆனால் அவர் காட்சிக்குப் பின்னால் தள்ளப்படுகிறார். இங்கு முக்கியமாக காண்பிக்க வேண்டியது ரேவதியின் அலட்சியப் போக்கு! இப்படி படம் பிடித்து காண்பிப்பதில் உண்டாகும் திரைக்கதை அழுத்தம் எப்படி வந்திருக்கிறதென்று பாருங்கள்!
நான் மேலே கூறிய காட்சியின் தொடர்ச்சி, தந்தை வசனம் பேசுகிறார், ஆனால் அவர் காட்சிக்குப் பின்னால் தள்ளப்படுகிறார். இங்கு முக்கியமாக காண்பிக்க வேண்டியது ரேவதியின் அலட்சியப் போக்கு! இப்படி படம் பிடித்து காண்பிப்பதில் உண்டாகும் திரைக்கதை அழுத்தம் எப்படி வந்திருக்கிறதென்று பாருங்கள்! தந்தை உரையாடி முடிக்கும் காட்சியின் முன்னே, அவர் காட்சியில் முழுவதுமாக முன்னுக்கு கொண்டு வரப்படுகிறார், ரேவதி பின்னே தள்ளப்படுகிறார்! கேமிராவின் கோணம் முந்தைய தந்தையின் உரையாடல் ஆரம்பிக்கும் கோணத்திலிருந்து சற்றே உயர்ந்து அவர் முகத்தின் உச்சரிப்புத் தோற்றத்தை பிரதானமாக்குகிறது!
தந்தை உரையாடி முடிக்கும் காட்சியின் முன்னே, அவர் காட்சியில் முழுவதுமாக முன்னுக்கு கொண்டு வரப்படுகிறார், ரேவதி பின்னே தள்ளப்படுகிறார்! கேமிராவின் கோணம் முந்தைய தந்தையின் உரையாடல் ஆரம்பிக்கும் கோணத்திலிருந்து சற்றே உயர்ந்து அவர் முகத்தின் உச்சரிப்புத் தோற்றத்தை பிரதானமாக்குகிறது! ரேவதி மறுத்து, "பொட்டணம் கட்டி விக்க பார்க்கிறீங்களா?" என்று கேட்டவுடன் தந்தை விடும் அரையை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் எழுந்து நிற்கும் காட்சி. இயல்பான காட்சியின் யதார்த்தம்! அதை அழகாக படம் பதிவு செய்த லாவகமே மணியின் மந்திரம்!
ரேவதி மறுத்து, "பொட்டணம் கட்டி விக்க பார்க்கிறீங்களா?" என்று கேட்டவுடன் தந்தை விடும் அரையை பார்த்துவிட்டு அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் எழுந்து நிற்கும் காட்சி. இயல்பான காட்சியின் யதார்த்தம்! அதை அழகாக படம் பதிவு செய்த லாவகமே மணியின் மந்திரம்! அடுத்து இருள் கூடிய மேகத்தில் வெளிவரும் நிலாவை காண்பிக்கும் காட்சி, இருள் கப்பிய இறுக்கமான காட்சிகள் நடந்தேறியதை காண்பித்து சோகமயமான இரவை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவது இன்னொரு ஹைலைட்!
அடுத்து இருள் கூடிய மேகத்தில் வெளிவரும் நிலாவை காண்பிக்கும் காட்சி, இருள் கப்பிய இறுக்கமான காட்சிகள் நடந்தேறியதை காண்பித்து சோகமயமான இரவை கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துவது இன்னொரு ஹைலைட்! அடுத்து இந்த சோகமயமான தருணத்தில் நிலவை பார்க்கும் ரேவதி! இந்த ஒளி அமைப்புகள், மணியின் படங்களுக்கே உரித்தான இருள் படர்ந்த காட்சிகளின் தொகுப்பு! சோகத்தை சொல்லி அடிக்கிறார்! காட்சியின் அமைப்பை சற்றே கவனித்து பாருங்கள்!
அடுத்து இந்த சோகமயமான தருணத்தில் நிலவை பார்க்கும் ரேவதி! இந்த ஒளி அமைப்புகள், மணியின் படங்களுக்கே உரித்தான இருள் படர்ந்த காட்சிகளின் தொகுப்பு! சோகத்தை சொல்லி அடிக்கிறார்! காட்சியின் அமைப்பை சற்றே கவனித்து பாருங்கள்! ரேவதியின் இடது கன்னத்தில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது மறுபக்கம் அது கடந்து செல்வதில்லை! இது போன்று இருள் படர்ந்த காட்சி அமைப்புக்கு சொந்தக்காரர் நம்ம மணி! ஆக இப்படி செம்மையாக காட்சிகளை செதுக்குவதில் வல்லுநர் நம் மணி. அதற்கு கை கொடுப்பவர்கள் இந்த கேமிராமேன்கள், அதாவது சினிமெட்டோகிராபர். இது மட்டுமின்றி, கலை, மற்றும் செட்டுகளிலே காட்சிகளின் தன்மைகளை சொல்ல வருவதை வசனங்களின்றி ஒளியின் அளவால் பொருட்களையும், மற்றும் கேமிரா கோணங்கள், அதை பதியவைக்கும் முறை, நடிக்கும் பாத்திரங்களின் உணர்ச்சி தோற்றங்களையுமே அடிப்படியாக கொண்டு காட்சிகள் அமைத்து அதற்கு புது வடிவம் எடிட்டிங்கால் கொண்டு வரப்பட்ட மேஜிக் என இப்படி அனைத்து தொழில் நுட்பங்களுடன் வருவது தான் மணியின் மந்திரம்! நான் கூறிய இக்காட்சி தொகுப்பின் பின்னனி வசனங்களை கேட்டு மகிழுங்கள், பிறகு அதனுடன் சமப்படுத்தி நான் மேலே கூறியதை பாருங்கள், சரியா வருகிறதா என்று!
ரேவதியின் இடது கன்னத்தில் மட்டும் வெளிச்சம் தெரிகிறது மறுபக்கம் அது கடந்து செல்வதில்லை! இது போன்று இருள் படர்ந்த காட்சி அமைப்புக்கு சொந்தக்காரர் நம்ம மணி! ஆக இப்படி செம்மையாக காட்சிகளை செதுக்குவதில் வல்லுநர் நம் மணி. அதற்கு கை கொடுப்பவர்கள் இந்த கேமிராமேன்கள், அதாவது சினிமெட்டோகிராபர். இது மட்டுமின்றி, கலை, மற்றும் செட்டுகளிலே காட்சிகளின் தன்மைகளை சொல்ல வருவதை வசனங்களின்றி ஒளியின் அளவால் பொருட்களையும், மற்றும் கேமிரா கோணங்கள், அதை பதியவைக்கும் முறை, நடிக்கும் பாத்திரங்களின் உணர்ச்சி தோற்றங்களையுமே அடிப்படியாக கொண்டு காட்சிகள் அமைத்து அதற்கு புது வடிவம் எடிட்டிங்கால் கொண்டு வரப்பட்ட மேஜிக் என இப்படி அனைத்து தொழில் நுட்பங்களுடன் வருவது தான் மணியின் மந்திரம்! நான் கூறிய இக்காட்சி தொகுப்பின் பின்னனி வசனங்களை கேட்டு மகிழுங்கள், பிறகு அதனுடன் சமப்படுத்தி நான் மேலே கூறியதை பாருங்கள், சரியா வருகிறதா என்று!இது போன்ற நுட்பங்களை நீங்கள் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அதன் அம்சத்தை தெரிந்து கொள்ளாதவரை அதன் தாக்கம் தெரிவதில்லை! ஆனால் நம் அனைவருக்கும் உணர்ச்சிப் பூர்வமாக படத்தை பார்த்துவிட்டு பரவசம் அடைவது என்னவோ உண்மை! அதை நன்றாக இருக்கிறது என்று ரசித்து கொண்டே இருந்திருப்போம் ஆனால், கொஞ்சம் மேலே போய் இத்தரம் மிக்க நுட்பங்களை தெரிந்து கொள்ள முற்பட்டு பிறகு அக்காட்சிகளை ரசித்து பாருங்கள்! நான் சொல்வது உங்களுக்குப்புரியும்! வேண்டுமென்றால் நான் கூறிய அத்தனையும் எப்படி ஒத்து போகிறதென்பதை இன்னொரு தடவை டிவிடி வாங்கி இந்த 'மெளனராகம்' படத்தை நீங்கள் ஏன் திருப்பி பார்க்க கூடாது?
 





















