
சரியா எஸ் எஸ் எல் சி பரீட்சை எழுதி பாஸ் பண்ணி காலேஜ் எந்த பக்கம் போறதுன்னு முடிவெடுக்க வேண்டிய நேரத்திலே வந்த படம் இந்த 16 வயதினிலே! சரியா என்னோட 16 வயதினிலே! இந்த படத்திலே தாவணி கட்டி வந்த ஸ்ரீதேவியை ரொம்ப புடிக்கும். பாலியக்கவர்ச்சின்னு சொல்ல முடியாது, அந்த வயசுல பட்னு சில பெண்களை பார்த்த மாத்திரத்திலே புடிச்சிடும்! அதுவுமில்லாம, அப்படி கொஞ்சம் அரசல் புரசலா இந்த தாவணிப் பெண்கள்கிட்ட பழக தொடங்கி இருந்தது அந்த ஒரு காலகட்டத்திலே தான்! அதுவரைக்கும் எனக்கு அதிகமா என் வயசு ஒத்த பெண்ணுகள் கிட்டே பேசினதோ, பழகினதோ கிடையாது, சின்ன வயசிலே ஒரு ஆறு ஏழு வயசு வரை, உறவுக்கார பெண்ணு புள்ளைங்களோட விளையாண்டு பேசினதோட சரி, பிறகு பெரிய இடைவேளை!
முதல் முதலா இந்த 16 வயசிலே தான், எங்க பெரியம்மா வீட்டுக்கு எதிர்ல, ஒரு ஸ்டோர்ல குடியிருந்த பெண்கள்கிட்ட பேசும் வாய்ப்பு கிடைச்சுது! அதுவும் நான் பொதுவா அடிக்கடி போய் வருபவன் தான், ஆனா அந்த வயசிலே அவங்க குடிமாறி இருந்த அந்த பக்கம் சின்ன வயசு பெண்கள் நிறைய எதிர்ல இருந்த ஸ்டோர்ஸ்ல இருந்தது ஒரு கூடுதல் காரணம்! புதுசா ஒரு ஆடவன் வாசனை தெரியுதேன்னு அந்த குடியிருப்பில் இருந்த பழுத்த பெண்கள் என் மேல் கண்பார்வையிட்டு, அதிசியமா பார்த்தது. பிறகு என் பெரியம்மா அவர்களிடம் கொண்டிருந்த நட்பால் என்னை அறிமுக படுத்த ஆரம்பித்தது பேச்சு படலம். அதாவது, வரும் போகும் போதொல்லாம், அந்த பழுத்த பெண்கள், கொஞ்சு வயசானாலும், அக்கா வயதுடையவர்கள், 'நல்லா இருக்கியா ...'ன்னு உரிமையோட குசலம் விசாரித்து ஏதேனும் பேசி என்னிடம் கடலை போட முற்படுவார்கள், எல்லாம் அந்த வயதுக்கே உண்டான கவர்ச்ச்சி, அவர்களையும் சேர்த்து தான்! ஆனால், ஆடவனுக்கு அந்த தைரியம் எல்லாம் வருவது, பார்த்த மாத்திரத்தில், கிடைத்த சந்தர்ப்பத்தில், கொஞ்சம் பெண்களிடம் உடனே அப்ரோச் செய்வது டெவலப் செய்வதெல்லாம் இந்த 16 வயதில் வரும் கலை அல்ல, அதற்கு கொஞசம் வயசு கடக்கணும். ஆனா, பெண்களுக்கு அப்படி அல்ல, அந்த ஒரு அசகாய துணிச்சல் இருக்கும் இந்த 16 வயதினிலே! மேற்கொண்டு வயதில் மூத்தவள் என்ற உரிமை எடுத்து பேச துணைவது அவர்கள் சாமர்த்தியம்! வயது வித்தியாசம் ரொம்பவும் அதிகம் இல்லை, ஓரிரண்டாண்டுகள் தான்!

என்னதான் இப்பழுத்த பெண்கள் என்னிடையே பேசினாலும், அல்லது பேச முற்பட்டாலும், நம்மலும் தொடர்ந்து பேசி, பழகி நட்பை பெரிதாக்கி கொள்ள அவ்வளவு ஆர்வம் அதிகம் இருக்கவில்லை! அப்போது கண் பரபரப்பது எல்லாம் நம் வயது ஒத்த பெண் யாரேனும் இருக்கிறாளான்னு ஆராயத்தான், அப்படித்தான், என் படிப்பு படித்த கஸ்தூரி என்ற பெண்ணிடம் சிநேகம் கொண்டேன், அதுவும் 'உங்க ஸ்கூல்ல என்ன சொல்லி கொடுத்தாங்க, உன் நோட்ஸ் எனக்கு குடு, நான் என் நோட்ஸ்ஸை உனக்கு கொடுக்கிறேன்'ங்கிற அளவோட நின்னு போனது தான். அதென்னமோ எனக்கு இந்த பெண்ணின் மேலேயும் கவர்ச்சி இருந்ததில்லை! ஆனா அந்த பெண்ணைவிட அழகான அந்த பழுத்த அக்காவிடமும் மனம் நாடவில்லை, அந்த பெண் மிகவும் சிரத்தை எடுத்து என்னிடம் மிக சிநேகமாக இருக்க முயற்சி செய்தும்! ஆனால் அவர்களை சும்மாவது பார்க்கணும் என்று அடிக்கடி போவேன். ஒருவேளை என்னை அறியாமல் இருந்த பயம் கூட இருக்கலாம், அதிகபிரசிங்கித்தனமாக் அதிகம் இதில் இறங்க வேண்டாமென்று! இது அந்த 16 வயதுக்கே உண்டான விந்தை!
நான் அப்போ ரொம்பவும் சிலாகிச்ச பெண்களின் உடுப்பு இந்த தாவணி, அதுவும் வெள்ளை தாவணி மத்த எந்த கலர் பாவடைக்கும் சரியாக மேட்ச்சா இருக்கும். இந்த காஸ்ட்யூம் விந்தை எப்படி பாரதிராஜாவுக்கு தெரியும்னு எனக்கு தெரியாது, ஆனா படம் பூரா ஸ்ரீதேவியை அந்த அலங்காரத்தில் காண்பித்திருப்பார். அதற்கப்பறம் எல்லா படத்திலேயும் முத்தி வந்த ஸ்ரீதேவியை கொஞ்சமும் பிடிச்சதில்லை, அதுவும் ஸ்ரீதேவியை ஆ..ஊ..ன்னு வடக்கத்திகாரங்க கொண்டாடுனப்பையும் எனக்கு எரிச்சல் தான் அதிகம் வந்தது. ஏனோ அந்த இயல்பான, கள்ளம் கபடமற்ற, சிறு பிள்ளை முகம், சிரிப்பு, அந்த தாவணி, 16 வயதுக்கே உண்டான இளம் உடல்வாகு, அத்தனையும் பொருந்திய 16 வயசு ஸ்ரீதேவியை ரொம்ப நான் ரசிச்சதும் என்னோட 16 வயசினிலே!
அதற்கப்பறம் சிகப்பு ரோஜாக்கள்ல கொஞ்சம் பெரிய வளர்ந்த பெண்ணா, அழகா வந்தாலும், அதை அருமையா ஸ்ரீநிவாஸ் படம் புடிச்சிருந்தாலும், எனக்கு அது கவர்ச்சியா தோணல! 16 வயதினிலே கண்டது இனி இல்லை என்றாகிவிட்டது, ஸ்ரீதேவிக்கு அன்றே வயதாகிவிட்டது!

இது அந்த 16 வயதுக்கே உரிய சுபாவம்! அடுத்து அந்த வயதிலே என் மனதை கொள்ளை கொண்ட இன்னொரு பெண், என் நண்பனின் தங்கை! உள்ளத்தில் எந்த கள்ளமும் இல்லாமல் நான் அவனிடம் பழகியும், அவன் வீட்டுக்கு சென்றாலும், அவன் என்று என்னை அவன் வீட்டு வாசல், மிஞ்சினால் முற்றம் தாண்டி அனுமதித்தில்லை! அந்த வயதில் அதற்கான காரணம் ஏன் என்று அப்பொழுது அறிந்து கொள்ள மனம் இடங்கொடுக்கவில்லை. என்னை பொறுத்தவரை, நாங்கள் நல்ல நண்பர்கள், பெரும் பொழுது, வீட்டை விட்டு வெளியிலே தான் கழிக்கிறோம், ஆகையால் அதுவரை எனக்கு எந்த பாகுபாடும் தெரியவில்லை. ஆனால், எங்க தோழர் குழுவில் இருந்த இன்னொரு நண்பன், அவன் தங்கையை பற்றி பேசக்கேட்டு, பிறகு கிண்டலாக ஏதோ பேசப்போக, எப்பொழுதோ அவர்களுக்கிடையே நடந்த சண்டையில், என் நண்பனை தடுத்து பத்திரமாக அவன் வீடு கொண்டி சேர்த்த பொழுது, மின்னலாக அவனின் தங்கை வந்து மறைந்ததை அன்று தான் பார்த்தேன்! பிறகு இரண்டொரு சந்தர்ப்பங்களில் அவளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது! அந்த வயதில், நாம் செய்வது தவறு என்று தெரிந்தும், அவளை பார்க்க மனம் ஆர்பரிக்கும்! ஏதேனும் காரணம் கொண்டு அவளை நான் பார்க்க செல்வதும், அவளும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, முற்றத்தில் காய்ந்த துணிமணிகளை எடுப்பது போலோ, இல்லை வேறு வேலை கொண்டோ என்னை பார்த்து சிரித்துவிட்டு செல்ல தவறுவதில்லை!

இப்படி அடிக்கடி நாங்கள் வெறும் பார்த்து கொள்ளும் சம்பவம் தொடர்ந்ததே ஒழிய வேறொன்றும் நடந்ததில்லை. இதை நான் காதல் என்று கொள்ளவில்லை, ஆனால் அந்த 16 வயதுக்கே உரிய பெண்ணிய கவர்ச்சி! அப்பொழுதும் கவர்ந்தது அந்த தாவணி தான். அவள் போட்டு கொண்டிருந்த தாவணியால் அழகான உருவம் மனதில் பதிந்து, ஏற்பட்ட கனவுகள் பல! அவ்வளவே! அதுவும் அந்த காலகட்டத்துடன் முடிவடைந்தது!
ஆக இந்த 16 வயதினை ஒரு இரண்டு கெட்டான் வயசுன்னு சொல்றது எவ்வளவு சரி பாருங்கோ! இப்படி ரம்மியமாக கழிந்த 16 வயதினை கொஞ்சம் அசைபோட்டு பார்த்தேன்! அத்தனை பெண்களும் மனதை விட்டு மறைந்து விட்டனர், ஆனால் இன்னும் மறையவில்லை என் 16 வயதினிலே மயிலு! அது தான் நம் தமிழ் சினிமாவின் தாக்கம் என்பது!
21 comments:
வணக்கம் வெளிகண்டநாதர்!
16 வயதினிலே காலத்தை நினைத்ததும் மீண்டும் இளமை ஊஞ்சல் ஆட ஆரம்பித்து விட்டதா :-))
ஆமாம் வவ்வால், முதுமை தள்ளாடாதவரைக்கும், இளமை ஊஞ்சலாட வேண்டியதுதான்! ஆசை எப்பவும் நரைச்சதில்லையே-:)
என்றென்றும் பதினாறு.
நல்லதொரு பதிவு:-)
16 வயதினினிலே வரும் போது உங்களுக்கு வயசு பதினாறு, அது போல என் பதினாறு வயதில் வந்த படமும் மறக்கமுடியாது. பின்னர் அதைப்பதிவாகத் தருகின்றேன்.
முதுமை தள்ளாடாதவரைக்கும், இளமை ஊஞ்சலாட வேண்டியதுதான்"//
- ஓ! அதுவரைக்கும்தானா...அப்டியா?
வசந்தன், என்றும் பதினாறாக இருக்கத்தான் ஆசை, ஆனால் அதற்கு நானென்ன எம் ஜி ஆரா? (அந்த கால மேடைகளில் நான் பேசிய வசனம் -:))
கானா பிரபா, தங்கள் வரவு நல்வரவாகுக!
இந்த 16 வயது அனைவருக்கும் ஒரு முக்கிய பருவம். பிஞ்சாகவும் இருக்க முடியாது, பழுத்தும் இருக்க முடியாது. இரண்டுக்கும் இடையே தள்ளாடும் கோலம்! எல்லா விடயங்களிலும், முக்கியமாக, எதிர்பாலிடரிடம்! அது தான் என் பதிவின் சாராம்சம்!
தருமி, அதுவரைக்கும் தான் (கொஞ்சம் அழுத்தி வாசிக்கவும் இங்கே-:))
முதுமையில் இளமை இனியது, உங்கள் அனுபவம் எப்படி? இன்னும் சொல்லப்போனால் இளமையைவிட ஊஞ்சலின் வேகம் நிதனமாக பயணிப்பதால், இன்பம் அதிகம்! அங்கு எப்படி? -:)
இளமை ஊஞ்சாலாடும் பதினாறு வயதின் வசந்தம் இனிமை, 16 வயதை சுவீட் சிக்ஸ்டீன்ன்னு ஏன் சொல்றாங்க, பிரியபட்டவங்க எழுதுங்களேன்!
பதினாறு வயது கனவுகளும் காதல்களும் தனியானவையே! அந்த உணர்ச்சிகளை அந்த வயதில் யாரிடமும் பகிர்ந்து கொள்ளமுடியாமல் செய்வதெல்லாம் தவறோ எனக் குழம்பி.. சுகமான வேதனைகள். கல்லூரி விடுதி நண்பர்கள் அதனால்தான் மிக நெருக்கமான நண்பர்கள் ஆகி விடுகின்றனர்.
// 16 வயசு ஸ்ரீதேவியை ரொம்ப நான் ரசிச்சதும் என்னோட 16 வயசினிலே! //
சார்,
நிறைய உண்மை வெளியவருது..
ஜாலியான பதிவு சார்!
நன்றி!!
மணியன், சரியா சொன்னீங்க, அந்த உணர்வுகள் தனியானவை! சுகமான வேதனைகள்! அக்கால நண்பர்கள் துணையே தனி!
வாங்க சிவபாலன், நான் 16 வதினிலே ஸ்ரீதேவியை என் 16 வயதினிலே ரசிச்சது ரொம்ப உண்மை!
நீங்க யாரையும் ரசிச்சதுண்டா உங்க 16 வயதினிலே? சும்மா ஜாலியா சொல்லுங்க!
சார்
நீங்க என்னை வீட்ல அடி வாங்க வெக்கமா விட மாட்டீங்க போல.
உங்களுக்கென்னா சார், தைரியமா உண்மை சொல்லிருங்க..
இதில என்ன இருக்கு சிவபாலன், உங்க வீட்டுக்காரம்மாக்கிட்டேயும் சொல்லிடுங்க, இதெல்லாம் 16 வயசிலே சகஜம், அப்ப உங்க வீட்டுக்காரம்மாவை பார்த்திருந்தா அவங்களை தான் புடிச்சிருக்கும்னு ஒரு போடு போட்டு வைங்க! எல்லாம் சரியாயிடும்! சும்மா சொல்லுங்க! 16 வயசு, மறக்கக்கூடிய வயசில்லை!
சார்,
கோவை சரளாகிட்ட மாட்டின வடிவேல் போல என் நிலைமையாயிரும் .
ஆளை விடுங்க சார்!!
இவ்வளவு பயப்புடுறீங்க! சர் தான்! நீங்க எந்த ஊரு? கோயம்புத்தூர் தானே!, ஆமா, வீட்ல எங்க மதுரையா? இல்லேனாலும் மதுரை ஆட்சின்னுங்க!
மதுரை இல்லை சார், சென்னை, அதனால் தான் பயம் ஜாஸ்தி!!
உண்மையிலே, 16 வயது ஒரு ஜாலியான அனுபவம். நாம் நினைக்கறதுதான் சரின்னு தோனும். முக்கியமா பெண்கள் மேல ஒரு இனம் புரியாத ஈடுபாடு.
ஒரு ஜாலியான சோதனை/ வேதனை
// 16 வயசு ஸ்ரீதேவியை ரொம்ப நான் ரசிச்சதும் என்னோட 16 வயசினிலே! //
ஓ, இப்போத் தான் புரியுது நீங்க சக்கரை நோய் பத்தி இத்தனை விலாவாரியா பேசுவது எப்படின்னு :):)..
இவ்வளவு நாள் உங்க பதிவெல்லாம் படிச்சபோது இத்தனை வயசானவரா இருப்பீங்கன்னு நினைக்கலைங்க :)
அப்படி என்ன வயசாச்சு நினைச்சிட்டீங்க! கொஞ்சும் வயசில்லேன்னாலும் கொஞ்சம் வயசுதான் -:)
பொன்ஸ், அப்ப எழுத்திலே இளமை தெரிஞ்சுதா-:)
Post a Comment