Monday, February 13, 2006

ஒளியும் ஓலியும்- ஒரு கலவை

இந்த Re-Mix, Re-Mixன்னு என்னமோ சொல்றாங்கள்ள, அது எப்படின்னு பார்க்கலாமுன்னு, இணையத்தை புரட்டினப்ப, ஒரு அருமையான வீடியோ மிக்ஸ் ஒன்னு கிடைச்சுது, அது என்ன பாட்டு ஒலியில தான் பண்ணனுமா என்ன,ஒளி ஒலியும்லயும் பண்ணலாம். இந்த கலவை எல்லாம் சன் டிவில ஏதோ ஒரு நிகழ்ச்சில்ல போடுவாங்கல்ல, அது மாதிரி, கீழே இருக்கிற வீடியோ மிக்ஸ்சை பாருங்க! கற்பனைக்கு வானமே எல்லை! 'பட்டிகாடா பட்டணமா'ல்ல நம்ம டிஎம்எஸ் வெளுத்து வாங்கின 'அடி என்னாடி ராக்கம்மா' பாட்டுக்கு நம்ம சிவாஜி, முதல்வரம்மா மட்டுமில்ல, அனத்திந்திய நடிகர் நடிகைகள், பங்கரா பாடகர்கள் அனைவரும் பாடி ஆடி நடிச்சிருக்காங்க பாருங்க, பார்க்க ஆனந்தம்மா இருக்கு! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்!!

3 comments:

said...

நல்லாவே இருக்கின்றது!!!

said...

கவலைப் படாதிங்க பல்லவி, இது என் படைப்பு இல்ல, யாரோ இணையத்தில தவழ் விட்டது, நான் பார்த்ததை, இவ்வயகம் பார்க்கட்டுமேன்னு தான்.. இது போன்று மனசை அள்ளும் காட்சிகளை பார்த்தா, போட்டுடறேன் பதிவில!

said...

நன்றி ஒளியினிலே!