Monday, February 20, 2006

தேடினேன் வந்தது-கூகுளின் அசூர வளர்ச்சி!

கணனியை பயன்படுத்துறவங்க எல்லாரும் கூகுளை பயன் படுத்தாம இருக்கமாட்டங்க. எதை நீங்க இணயத்தில தேடனும்னு உட்கார்ந்தாலும், எல்லாரும் முதல்ல போற இடம் கூகுள் தான். அந்த கம்பனி எங்க ஆரம்பிச்சது தெரியுமா? காரு கேரேஜ்லதான். அதை ஆரம்பிச்சது இரண்டு இளைஞர்கள், 'லேரி பேஜ்' மற்றும் 'செர்கி பிரின்'. அவங்க பிஎச்டி படிக்கிறப்ப, அவங்க ஆராஞ்சு கண்டுபிடிச்ச 'தேடுபொறி' தான் இந்த கூகுளுக்கே மூலதனம். அவங்க படிச்சது கலிபோர்னியால இருக்கிற ஸ்டேன்ஃபோர்ட் பல்கலைக்கழகம். அதுக்கப்பறம் வாய்மூலமா சொல்லப்பட்ட இந்த கூகுள் எல்லாரும் விரும்பி எந்த விஷயத்தையும் இணையத்தில தேட இலகுவா உண்டாக்கப்பட்ட கருவி.


இந்த கம்பனியோட சாராம்சம், விளம்பரங்கள் இருந்து வர வருமானம் தான். இன்னைக்கு அசூரத்தனமா வளர்ந்து 100 பில்லியன் டாலர்களை தொட்டு விட்டது. அதனுடய பங்கு இன்னைக்கு $475 வரைக்கும் உச்சாணியிலே போயுடுச்சி. வெறும் சாதாரணமா அதன் பங்கு, $85 ஆரம்பிச்சது IPO மூலியமா!இவ்வளவு அசுரத்தனமா வளர்ச்சி அடைஞ்ச இந்த கம்பனி, இது கொடுக்கிற அத்தனை வசதிகளும் நம் போன்ற சாதரண மக்களுக்கு இலவசமா கொடுக்குது. அதாவது சொற்பதங்களை வச்சு, எந்த ஒரு விஷயத்தை தேடிறதுல இருந்து, ஜிமெயில், மேப், அப்புறம் எங்க ப்ளாக் சைட் Analytics, ஒலியும் ஒளியும் பிம்பங்கள் சேகரிப்புன்னு எத்தனையோ! இதனுடய பரம தொழில் முறை எதிரிங்க 'yahoo' மற்றும் 'Microsoft' எப்பவேனாலும் இவங்களால ஆபத்து வர வாய்ப்பு உண்டு. ஆனா எதையும் பத்தி கவலைப்படாமா தொழில்நுட்ப முன்னேற்றத்தில கவனம் செலுத்தி புது புது வசதிகளை நம் போன்று இணையத்தை உபயோகபடுத்திறவங்களுக்கு செய்து கொடுத்துக்கிட்டே இருக்கு. இன்னும் நிறைய இலவசமா வசதிகளை செய்ய முனைப்புடன் இருக்காங்க, அது மாதிரி ஒரு 100 வசதிகள் அவங்க லிஸ்ட்ல இருக்கு, அதில ஒன்னு 'space Elevator', அதாவது பூமியிலருந்து நிலவுக்கு சாமான்களை எடுத்த செல்லும் வாகனம்!

இவ்வளவு பெரிய வளர்ச்சியை ஏழாண்டுகளுக்குள்ள அடைஞ்சிருக்கு. இதனுடய இந்த அசூரத்தனமான வளர்ச்சியை எந்த மீடியா கம்பனிங்களும் இது வரை காணல. எல்லாம் அந்த 30 வயசு தாண்டின இந்த இரு இளைஞர்களால. இருந்தும் கம்பனிக்கு பெரிசு ஒன்னு வேணும்னு, ஏன்னா என்னதான் புத்திசாலித்தனம் இருந்தாலும், அனுபவரீதியா வழி நடத்த ஒருத்தர் வேணும்னு, 'எரிக் ஸ்க்மிட்'னு 51 வயசுகாரர், 'Sun Micro System'த்தில வேலை செஞ்சவரு இந்த கம்பனி CEO வாக்கி ஆளுமை செஞ்சுக்கிட்டு இருக்காங்க. இதில விஷேஷம் என்னான்னா, இந்த இரு இளைஞர்களும் எந்த பெரிய 'Business School' போயி படிக்கல்ல, ஆனா அவங்க படிச்ச பள்ளி படிப்பு, வியாபர உத்திகளை சின்ன புள்ளையிலருந்தே அவங்க கிட்ட வளர்ந்த 'Entrepreneurship' திறன் தான் இந்த இமாலய வளர்ச்சிக்கு பெரும் உதவினது.

இந்த குழந்தைத்தனமான ஆர்வம் தான், இவங்களோட இந்த வளர்ச்சிக்கு காரணம், இந்த பேஜ், மிச்சிகன் மாகாணத்தில் பிறந்தவர் இவரது தந்தை கணனி பேராசிரியர், தாயும் ஒரு கணனி ஆசிரியர். சிறு வயசிலே சிறு ரேடியா மற்றும் எலக்ட்ரானிக் உபகரண்களை கொண்டு விளையாட்டு களில் நாட்டம் செலுத்தியவர். இசையிலும் மிகுந்த ஆர்வமுடையவர், அஞ்சலி, அஞ்சலி பாட்டுக்குள் வரும் செக்ஸாபோன் தான் இவர் விரும்பி வாசிக்கும் இசைக்கருவி. ஆனால் பிரின், பிறப்பால் ஒரு ரஷ்யர், 1970களில் அமெரிக்காவிற்கு அவரது பெற்றோர்கள் குடி புகுந்தனர். சிறுவயதில் சர்க்கஸ் பள்ளியில் பயின்றவர். அதாவது சர்க்கஸ் தொடங்கும் போதோ முடியும் போதோ கடசியில நெட்கட்டி, பார் விளையாடுவாங்களே , அந்த விளையட்டு. அதை கற்றுக்கொண்டவர். பாருங்க சின்ன வயசில எப்படி விநோதமான பொழுது போக்குகள்ல எல்லாம் ஈடுபடறாங்கன்னு. நமக்கு சர்வமும் சினிமான்னு தான் பொழுது போகும்!

ஆக இந்த கூகுளின் அசகாய வளர்ச்சிக்கு பெரும் பங்கு இந்த இரட்டையர்கள் தான். இந்த கூகுள்ங்கிற பேர் வந்த மூலக்காரணம் தெரியுமா. அதாவது அவங்க கண்டு பிடிச்ச அந்த 'தேடுதல்' திறனுக்கு பேர் சூட்டினது முதல்ல 'Googol'. அதாவது, இந்த ஆங்கில பதம் குறிப்பது கணிதத்தில் வர நம்பர், அதாவது ஒன்றுக்கு பிறகு நூறு பூஜ்யங்களை கொண்ட நம்பர், ஆனால், அது சற்றே திரிந்து 'Google' ஆயுடுச்சி! இன்னொன்னு, இவங்க வியாபார உத்தியே தனி, அதாவது விளம்பரதாரர்கள்கிட்ட இருந்து தான் வருமானமே. ஆனா ஜாஸ்தி காசு கொடுத்தா, நம்ம விளம்பரம் அந்த 'தேடுதல்' பக்கத்தில முன்ன வரணும்ன்கிற கட்டாயம் கிடையாது. ஜனங்க எவ்வளவுக்கெவ்வளவு அதிகமா, உங்க விளம்பரங்களின் சுட்டியை தொட்டு, உங்க பக்கத்துக்கு வாரோங்களோ அதுக்கு தகுந்த மாதிரி காசு கொடுக்கணும், அதாவது நம் போன்ற மக்கள் எவ்வளவு விரும்பி அந்த விளம்பரத்துக்கு போறோம்ங்கிறதுதான் இங்கே முக்கியம். இதனால் விளம்பரதாரருக்கும் மகிழ்ச்சி, நம்மை போன்ற உபயோகாதாரருக்கும் மகிழ்ச்சி, கூகுளுக்கும் அதிக வருமானம். இது போன்ற புத்திசாலித்தனமான உத்திகள் நிறைய பின்பற்றரதுனால தான், இந்த அசகாய வளர்ச்சி! இவங்களோட இந்த புத்திசாலித்தனமான உத்திகள்ல சில சர்ச்சைக்குறியதுக்கூட, அதில முக்கியமா ஜிமெயில் வரும் மடல்களை ஸ்கேன் செஞ்சு, அதில வர பதங்களுக்கு ஏத்த மாதிரி விளம்பர சுட்டிகளை இணக்கிறது. இது ஒரு நல்ல வியாபார உத்திதான், ஆனா, ப்ரைவசிக்கு வேட்டு வைக்கறதால இதற்கு நிறைய எதிர்ப்பு!

இப்ப ஆங்கில மொழிய விட்டு உலகத்தில இருக்கிற அத்தனை மொழி தேடல் பொறிகளை ஆக்கிரமிக்க மும்மரமா இருக்காங்க இந்த கூகுள் நிறுவனத்தினர். அதானால, சீனா, இந்திய மொழிகள்லயும் மெதுவா நுழைஞ்சு ஆதிக்கம் படைக்க தயாராகிட்டாங்க! ஆக எதை தேடினாலும் இனி வந்து விடும். அதானல தான் இந்த பதிவே 'தேடினேன் வந்தது'

எனக்கு என்னமோ இந்த கூகுள் வளர்ச்சியை பத்தி எழுதனும்னு தோணுச்சி, ஏன்னா நம்மவங்கிட்ட இருக்கும் அசாத்திய திறமையில நம்மலால மென்பொருள் எழுத்தாளாரா உலகம் வியக்க நிக்க முடிஞ்சதே தவிர, இது போன்ற ஒரு தனித்துவமா பெரிய கம்பனி உருவாக்கி சாதனை படைக்க முடியல நம் ஊர் இளைஞர்களாலே! கொஞ்சமா கொஞ்சமா சராசரி வேலைகளை நம்மல மாதிரி நாட்டுக்கு அனுப்பி, நம்மக்கிட்ட இருக்குக்கூடிய இந்த மக்கள் கூட்டம்ங்கிற விலை மதிக்க முடியாத சொத்துக்களை கம்மியான விலையிலே உபயோகம் பண்ண சரியா தெரிஞ்சு வச்சிருக்காங்க இந்த அமெரிக்காவினர். அதனால தான் இங்கிருக்கிற அமெரிக்கர்கள், INNOVATION பத்தி எப்பவும் சிந்தனையோட இருக்கிறதால, அவங்காளால உலகை ஜெயிக்க முடியுது. இதை பத்தி அநேகமா நேரம் கிடைக்கிறப்ப பிறகு நிறைய எழுதலாமுன்னு இருக்கேன்.

12 comments:

said...

நல்ல பதிவு நாரதரே,
நீங்க சென்ன மாதிரி நம்ம மக்களிடம் innovation இல்லை நம்மிடம் ரிஸ்க் எடுக்கும் மனப்பான்மை இல்லை ஏனெனில் கல்யாணம் பண்ணோமா குழந்தை பெத்தோமா, அப்படின்னு வாழ்க்கை முடிஞ்சி போகுது. அதும் இல்லாமல் நம்மிடம் தோல்வி பயம் அதிகம் தோற்றவனை நாம் மதிப்பதில்லை அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

said...

சந்தோஷ், நம்மல நாரதர் ஆக்கிட்டீங்க, இருந்தாலும் பண்ற கலகம் நல்லதுல தான் முடியும்.

நீங்க சொன்ன மாதிரி ரிஸ்க் எடுத்து தைரியமா செய்யக்கூடிய தினவு நம்மாளுங்களுக்கு கொஞ்சம் கம்மிதான். இருந்தாலும் அப்ப அப்ப, பாட்டியா(Bhattiya) மாதிரி ஆளுங்க வரத்தான் செய்றாங்க!

said...

நல்ல பதிவு வெளிகண்ட நாதர்.

said...

பாலக்கரை தங்கள் தகவல் நல்ல தகவல்
வீடு எங்குள்ளது பலக்கரையில் அந்த பக்கமே வரமுடியவில்லை மேம்பால வேலையால்.

said...

நன்றி என்னார், பாலக்கரையில இருக்கிற பருப்புக்காரத் தெரு தான், நமக்கு பூர்வீகம். காவேரி தியேட்டருக்கு வந்திருக்கிங்களா? அங்கிருந்து கூப்பிடற தூரம் தான்! மேம்பாலம் கட்டி துறந்திட்டாங்கன்னு கேள்விப்பட்டேனே!

said...

குமரன், வந்திட்டீங்களா கடைசில நம்ம பக்கத்துக்கு! பிரின்ட் எடுத்துட்டு போயி நம்ம பதிவெல்லாம் படிக்கிறேன்னீங்களே, நேரம் கிடைச்சிதா!

said...

இணையத்திற்கு WWW கொடுத்ததிற்கு இணையான ஒரு திருப்பம்/உந்துதல் கூகிளினாலும் உண்டு.
நல்ல இடுகை.

said...

தங்கள் வருகைக்கு நன்றி, மணியன். ஆம், நீங்கள் கூறுவது போல கூகுள்ளின் திருப்பம் இணையம் தோண்றலுக்கு ஈடானது!

said...

நல்ல பதிவு... தொடருங்கள்

said...

good

said...

Rams, Thaks for your Visit

said...

நாகராஜன், தங்கள் வரவுக்கு நன்றி!