Friday, February 24, 2006

உன்னால் முடியும் தம்பி! - ப்ளாக்கர்களின் சாம்ராஜ்யம்

நானும் இந்த பதிவுகள் போட ஆரம்பிச்சு சரியா ஒரு ஆறு மாசமாச்சு, சும்மா விளையாட்டா, தமிழ்ல எப்படி எழுதுறது, அப்புறம் யுனிகோடு பற்றி எல்லாம் படிச்சிட்டு,பிறகு இ-கலப்பை என்ற தமிழ் எழுத்துருவி கருவியை உபயோகிக்கவும் கத்துகிட்டாச்சு. பிறகென்ன அப்பப்ப, பதிவுகள் எழுதி ஆசை தீர பார்த்துட்டு, அதற்கு வரும் பின்னோட்டங்களை பார்த்ததும், நட்பா நம்மக்கிட்ட பேச நிறைய தமிழ் நண்பர்கள் கிடைச்சிட்டாங்களேன்னு, மேலும் நமக்கு ஒரு ஆர்வத்தை கொடுத்துச்சு. ஏற்கனவே இந்த Web Logging, Blogging பத்தி தெரிஞ்சிருந்தாலும், எப்பயாவது தான் எந்த ப்ளாக்கர் postingயாவது படிக்கிறது. ஆனா, இந்த ப்ளாக்கர்களின் பலம் என்னான்னு தெரியுமா உங்களுக்கு? வெறுமனே உப்பு பொறாத விஷயங்களை கதைக்கிறத விட்டுட்டு நம்ம பலம் என்னான்னு தெரிஞ்சுக்கங்க! அனுமார் தன் பலம் என்னான்னு ராமர் சொல்லித்தான் தெரிய வந்துச்சான். அது மாதிரி நம்மகிட்ட இருக்கிற இந்த அசுரபலம் என்னான்னு தெரிஞ்சுக்கிட்டு, அதை ஆக்கபூர்வமான விஷயங்களுக்கு பயன்படுத்தினா, யாரை வேணாலும் கவுக்குலாம், பிரச்சனைகளை எப்படி தீர்ககலாம்ங்கிறதை தான் நான் இப்ப சொல்ல போறேன். ஆமா, இது நம்ம சாம்ராஜ்யம், 'உன்னால் முடியும் தம்பி!'

இந்த Web Logging, Blogging என்கிற சமாச்சாரம் இணையத்தில ஒரு மூணு நாலு வருஷமாவே இருக்கு, அதுவும், இனையத்தை அதிகமா எல்லா விஷயங்களுக்கும் உபயோகிக்கிற இந்த அமெரிக்காவில , ப்ளாக்கர்கள், எவ்வளவு பெரிய கார்ப்ரேட் சாம்ராஜ்யங்களை கவுத்துருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா? பெரிய பெரிய கார்ப்ரேட் ஊழல்களால சரிஞ்ச, 'ENRON', 'WORLDCOM' போன்ற கம்பெனிகள், தொடர்ந்து எதிர்ப்புகளை சந்திச்சு வரும் 'Wal-Mart', 'McDonald' போன்ற கம்பெனிகள், இவை அனைத்தும் சந்திச்ச, மற்றும் சந்திக்கிற எதிரிகள் யாரு தெரியுமா. நீங்களும், நானும் தான்! ஆமா நம்மை போன்ற ப்ளாக்கர்கள்! ஆச்சரியமா இருக்கா, இந்த இணயத்தில நடமாடிக்கிட்டு இருக்கிற 'சமூக ஊடகம்' தான், அதாவது, ஆங்கிலத்தில சொல்லனும்னா, 'Social Media' across the Internet-such as Online discusssion, groups, e-mailing lists and blogs. இவர்கள் புதுசா உருவாக்கப்பட்ட 'ப்ராண்டு(Brand) கொலைக்காரர்கள்'. இவர்களாலே, இந்த மாதிரி கம்பெனிகளை வழி நடத்தும் மேலாளர்களுக்கு நித்தமும் கண்டந்தான். ஏன்னா இந்த 'Brand Assassins' கண்ணுக்கு தெரியாத எதிரிங்க! அவங்க தொடுக்கும் அம்புகள், சில சமயம், இந்த பொருளாதாரச் சந்தையில நடக்கிற அக்கிரமங்களை தோலுறித்து காட்ட உதவும், சில சமயம் அதுவே கொஞ்சம் நியாயமில்லாமவும் போயிடறதுண்டு. இந்த எதிரிகளை சமாளிக்கிறது கார்ப்ரேட் சாம்ராஜயத்துக்கு ஒரு பெரும் சவாலா இருக்குது.

முன்னமெல்லாம், எந்த ஒரு பெரிய சமூக எதிர்ப்புகள், சுற்றுபுற சூழ்நிலை மாசுபடுவதாலோ, இல்ல வேற எந்த ஒரு காரணத்துக்காக போரடக்கூடிய அமைப்புகள், NGO சங்கங்கள் எல்லாத்தையும் ரொம்ப சுலபாமா சமாளிச்சிடுவாங்க இந்த பெரிய கார்ப்ரேட் சாம்ராஜ்யங்கள். ஏன் 'போபால் விஷவாயு'விபத்தை எதிர்த்து போரடின சங்கங்கள், குஜராத்ல நர்மதா நதி அணைத்திட்ட எதிர்ப்பு நடத்திய குழுமங்கள் மாதிரி கண்ணுக்குத் தெரிஞ்ச இந்த சக்திங்களை அடக்க, ஒடுக்க அவங்களுக்கு எல்லா வழியும் தெரியும். அதுமாதிரி தாக்கம் கொடுக்கும் அத்தனை எதிர்ப்புகளை களைய, கம்பெனிகள், 'சமுதாய பொறுப்புகளை' எடுத்துகொண்டோம்னு சொல்லிக்கிட்டு காசு குடுத்து சரிகட்டியோ, இல்ல அந்த எதிர்ப்பு தெரிவிக்கும் குழுமினர்கள்ல ஒருத்தரை எடுத்து அனைத்துக் கொண்டு போய்விடுவதுண்டு. சில சமயம் இது பொதுமக்களுக்கு நல்லதை விளைவிக்கும். சில சமயம், காசு வாங்கிக்கிட்டு அடங்கி போய்விடுவதும் உண்டு.

ஆனா இப்ப ஏற்பட்டிருக்கும் இந்த 'ப்ளாக்கர் குழமம்'(Blogosphere') அப்படிப்பட்டதில்ல. இந்த குழமம், ஏதோ நாலு பேரா சேர்ந்து உருவாக்கி இருக்கிற அமைப்பில்ல. இந்த குழமத்தில்ல, தங்களை இணைச்சிக்கிட்டவங்க, ஒரு ஏமாற்றபட்ட, கோபநிலையில் உள்ள ஒரு வாடிக்கையாளரா இருக்கலாம், பாதிக்கப்பட்ட ஒரு தொழிலாளியா இருக்கலாம், ஏன் அவங்க அவதூறு சொல்லும் கம்பெனிங்களுக்கோ, இல்ல அமைப்புக்கோ சம்பந்தமே இல்லாதவங்களா இருக்கலாம். ஆனா, அவங்க இந்த ப்ளாக்கில் தங்கள் ஆய்தத்தை எடுத்து விட்டாங்கன்னு கம்பெனி, அமைப்புகள் எல்லாம் அம்பேல்! என்ன அவங்களுக்கு வேண்டியது, தவறு நடக்கும் விஷயங்களை பத்தின செய்தி, அவ்வளவுதான், அதுதான், இந்த 'knoweledge based Economy'ல, அவங்க கிட்ட கிடைச்ச ஆயுதம்! தண்டாயுதம்!

இப்படி ப்ளாக்கர்களால கவுந்து போன கம்பெனிங்க இங்க அமரிக்காவில ஜாஸ்தி. அதனால இந்த ப்ளாக்கர் பலத்துக்கு மதிப்பு கொடுத்து கம்பெனிகள் செயல்படுதுங்க. அது மாதிரி 'Corporate Reputation'ஐ கணிக்க, இணையத்தில இருக்கிற ப்ளாக்கர்கள் போடற செய்திகளை வச்சி கணிக்க, இங்க நிறைய 'Consultancy' கம்பனிங்க இருக்கு. அவங்க கிட்ட இருக்கிற 'Blog Sniffing Software'ஐ வச்சு சரியா onlineல என்ன நடக்குதுங்கிறதை கணிக்க முடியும். அது மாதிரி, சைக்கிள் பூட்டு செஞ்ச கம்பனிய நார் நார கிழிச்சிட்டாங்க. அவங்க செஞ்ச புது பூட்டை எவ்வளவு ஈசியா கொண்டை ஊசி வச்சி திறந்திடலாமுன்னு வீடியோ படம் விளக்கி ப்ளாக் போட்டே, அந்த பூட்டின் தரத்தை அந்த கம்பெனியை உயர்த்த வச்சிட்டாங்க!. அந்த கம்பெனி இப்ப நிதம் ஒரு 40-50 ப்ளாக்கை செக் பண்ணிக்கிட்டு இருக்காங்களாம் , அவங்க உற்பத்தி செய்ற பொருள் குறை நிறைகளை கண்டெறிய!

எதுக்கு நான் இதை எழுதுனேனா, நம்ம பலம் என்னான்னு நமக்கு இன்னும் தெரியல. சும்மா வெட்டியா கதை பேசி, சில சமயம் பைசா புரோஜனம் இல்லாத விஷயங்களை எழுதி நேரம் போக்கிகிட்டு இருக்கோம். நான் என்னையும் சேர்த்து தான் சொல்றேன். அதுனால, இனி வரும் நாட்கள்ல நம்மால எதுவும் பண்ணமுடியும், சில பல நல்ல காரியங்களுக்கு, ஆக்கப் பூர்வமாண பணிகளுக்குங்கிற நம்பிக்கை இருக்கு! அதான்,

'உன்னால் முடியும் தம்பி!' இது நம் சாம்ராஜ்யம்!

10 comments:

said...

வெளிகண்ட நாதர்! தாங்கள் கூறுவது உண்மைதான். முன்பெல்லாம் எதிர்ப்பு என்றால் ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் என்று இருக்கும். ஆனால் தற்போது அனைத்து முதலாளிகள் ஆதரவு மீடியாக்களையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வளர்ந்துள்ளது பிளாக்கர். பிளாக்கரை சரியாக உபயோகித்தால் பல நாடுகளில் ஆட்சி மாற்றத்தையே கொண்டு வரலாம். கார்ப்பரேட்டுக்களை கவிழ்த்தும் விடலாம். தற்போது கூட புஷ் வருகைக்கு எதிராக இந்தியாவில் பல பிளாக்குகள் புதிதாக தோன்றியுள்ளன.
நீங்கள் அமெரிக்காவில் இருப்பதால், அமெரிக்காவின் அடாவடித்தனங்கள் குறித்து அமெரிக்க பிரஜைகள் என்ன நினைக்கிறார்கள் என்று ஒரு அப்டேட் கொடுத்தால் நலமாக இருக்கும்.

said...

varungal Nanbarea Kaikoarpoam, Pudiya Tamizham Padipom

said...

ஒவ்வொரு மனிதனிடமும் சமூக அக்கறை இருக்கிறது...
அவனுள்ளே இருக்கும் எழுத்தாளன் வெளிப்படும்போது, அது எரிமலையாக வெடிக்கிறது...

ஆனால், நாம் ப்ளாக்கில் எழுதுவது எல்லாம் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பது தற்காலத்தில் உண்மையில்லை... ஏனெனில் இன்னும் இணையத்தை படிக்கிறவர்கள் அதிகமாயிருக்கவில்லை... அதுவரை கவிதை,கதை, என் வாழ்வில் நிகழ்ந்தவை என எழுதிக்கொண்டிருக்கவேண்டியதுதான்...

அதுவும் தவிர, நமது தேசத்தின் வர்த்தக அணுகுமுறைகள் வேறுமாதிரியாக இருக்கிறது...

இங்கே ஒரு விற்பனை பொருளின் தரத்தைப் பற்றி பேசினால் எடுபடாது... காசு கம்மியா இருக்கா? அந்த பொருளைத்தானே வாங்குவோம்...

இன்னும் நாம்(ப்ளாக்காளர்கள்) பலம் பெறவில்லை என்பது என் கருத்து...

said...

வாருங்கள் சந்திப்பு, தங்கள் வருகை நல்வரவாகுக. ஆமாம் இந்த வலைகள் கொண்ட ஊடகத்தின மூலம், ஆட்சியையே மாற்றி அமைக்கலாம். அடாவடி என்றில்லை இங்கு நடக்கும் நல்ல பல விடயங்களையும் எழுத முயற்சிக்கிறேன்!

said...

வெற்றி நம் பக்கம் கிட்டட்டும் ஆருரான் அவர்களே! தங்கள் வருகைக்கு நன்றி!

said...

கார்த்திகேயன், வருகைக்கு நன்றி! இதே போன்ற கருத்தை தான் காலம் காலமாக சொல்லி வருகிறோம், சினிமா என்ற ஊடகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதற்கும் இது போன்ற சப்பை கட்டாலேத்தான், விழிப்புணர்ச்சி எதுவும் எழவில்லை. ஆனால் ஆட்சிகளை பிடிக்க வெகுஜன சாதகமாக ஆக்கிக்கொண்டனர். டிவி, நியூஸ் பேப்பர் எல்லாம் கொஞ்சம் போல் செய்து வருகின்றன, ஆனால் அவை மற்றவர் கையில் ! ஆனால் இது நம் கையில்! அதிக நாட்களில்லை, மாற்றங்கள் நிகழ, இணையத்தின் தாக்கம் வெகு ஆழம்!

said...

வெளிகண்ட நாதர் சார். நல்ல பதிவு. உண்மைதான். அமெரிக்காவில் ப்ளாக்கர்கள் ஒரு வலிமை வாய்ந்த குழுமமாக ஆகிவிட்டது தான். ஆனால் நம் நாட்டில் தற்போது அந்த நிலைமை இல்லை. இணையத்தை எல்லா தர மக்களும் பயன்படுத்தத் தொடங்கியவுடன் அந்த நிலைமை நம் நாட்டிலும் வரும். இப்போது தொலைகாட்சி எல்லா நிலைகளிலும் உள்ளது போல் இணையமும் சீக்கிரம் எல்லா நிலையிலும் வந்து விடும். அப்போது இங்கு உள்ளது போல் ப்ளாக்கர்கள் தனி வலிமை வாய்ந்த குழுமமாக ஆகிவிடும். நாம் அதற்காகக் காத்திருக்காமல் இப்போதே அமெரிக்கர்களைப் போல் தைரியமாக உண்மைகளை எழுதத் தொடங்கினால் நல்லது தான்.

said...

வாருங்கள் குமரன், நமது வலிமை என்னவென்று தெரிய வைப்போம் இனி!

said...

அப்போ நம்ம நாட்ல கூட நல்லது நடக்க, நடத்த வைக்க முடியும்னு சொல்றீங்க. கேக்கவே சந்தோஷமா இருக்கு..ஏன்னா, நல்லது பலவும் நடந்துகிட்டு இருந்தாலும் நம் சமூக அடிப்படையில் உள்ள கோளாறுகளைக் காணும்போது எனக்கு நம்பிக்கை இல்லாமல்தான் இருக்கிறது. ஆனால் உங்கள் 'நம்பிக்கை டானிக்'வேலை செய்தால் எவ்வளவு நல்லது. இப்பவே - குமரன் சொல்றது மாதிரி - நாம் எல்லோரும் ஆரம்பிச்சிரணும்...ஒன்று செய்யலாம்..முதலில் ஒரு பட்டியல் தயார் பண்ணணும் எல்லோரும் சேர்ந்து - எந்தெந்த விஷயங்களை நாம் குறி வைக்கணும்னு...priorities ..நம்ம தமிழ்மணத்தின் முகப்பில ஒரு கேள்வி போட்டு, எதற்கு அதிக ஓட்டு விழுகிறதோ அதை நோக்கி நாம் ஒன்று திரண்டு நம் ஆக்கங்களைப் படைக்க முயலலாம்.
என்னிடம் கேட்டால்: கல்வி, நீதித்துறை இவைகளைச் செப்பனிடவேண்டும் என்பேன்.

said...

கண்டிப்பா தருமி, ஏன் நீங்க சொன்ன மாதிரி இந்த கல்வி, நீதித்துறைகளையே முதல்ல எடுத்துக்கிடலாம். இப்பொழுது இயங்கும் திட்டங்களை பத்தி விமரிசிச்சு, மாற்று வழிகலௌக்கு அடித்தளம் போடலாம். பிரச்சனைகள், லோக்காலா இருந்தாலும் சரி, குளோபலா இருந்தாலும் சரி. ஆரம்பிக்கலாம்..