Saturday, February 25, 2006

தேன் கிண்ணம்

நிறைய தமிழ் பாடல்கள் பதிவில போட்டு, இசையின் ஆனந்ததை எல்லோரும் கொண்டாடிகிட்டு இருக்கிறப்ப, நானும் சில பாடல்களை கேட்டேன். இனிமையான இசை, காதில் தேனருவி பாய்வது போன்ற உணர்வு. அதுவும் இளையராஜா, ஏ ஆர் ரஹமான் பாடல்கள்னா கேட்க வேணாம். அப்ப்டி சில பாடல்களை கேட்டப்ப, சில பாடல்கள் நடுவில் வரும் குழுமியர் பாடும் பாடல்கள் இசை சொருகல்கள், மெயின் பாட்டுக்கு ஒரு தனி மகத்துவத்தயே கொடுக்கும். சில சமயம் அந்த பாடல்களே கேட்க சிறப்பா இருக்கும். இதை நீங்க எத்தனை பேரு கவனிச்சிருப்பீங்கன்னு எனக்கு தெரியாது. பாடல்கள் கேட்டு பார்க்கிறப்ப, இதை கருத்தில வச்சு, கேட்டு பாருங்க, நான் சொல்வது உங்களுக்கு புரியும். உதாரணத்துக்கு சில இளையராஜா, ஏஆர் ரஹமான் இசையமச்ச நான்கு பாடல்களை கீழே கேட்டு பாருங்க. பிறகு நீங்களே சொல்லுங்க இந்த இடை சொருகல் பாடல்கள்ல யாரு ராஜான்னு? ஒரு விவாதத்தை உங்க முன்னே வைக்கிறேன்!

முதல் பாடல், 'பாம்பே' திரைப்படத்தில வந்த 'கண்ணாளனே' என்ற பாட்ல வர அந்த முதல் பாகத்தில், கல்யாண மணப்பெண் தோழியர்கள் பாடும் பாடல். மெயின் பாட்டே கல்யாணமணப்பெண்ணின் தோழி பாடறது தான். இது அந்த தோழிக்கு தோழியர்கள் பாடுவது.

இரண்டாவது பாட்டும் ஏஆர் ரஹமான் இசை அமைச்ச பாடல், எனக்கு ஹிந்தி பட பேரு தான் ஞாபகம் இருக்கு, 'தில்சே'ன்னு. ஏன்னா நான் பார்த்தது ஹிந்தில தான். தமிழ் பட பேரு தெரியல, ஆனா ஹிந்தி, தமிழ் இரண்டுலயும் இந்த இடை சொருகல் பாட்டு மலையாளப் பாட்டு.

மூணாவதா, இளையராஜா இசை அமைச்சு, பாரதிராஜா எடுத்த படம். 'காதல் ஓவியம்' படத்தில இருந்து.இப்ப தான் சிவாவும், சுந்தரும், இந்த படத்திலருந்து பாட்டு போட்டு நம்மல எல்லாம் மகிழ்ச்சி கடல்ல ஆழ்த்தினாங்க. அந்த ப்டத்தில வர 'வெள்ளி சலங்கைகள்' பாட்டுல வர இடை சொருகல், கேளுங்க!

நாலாவதா, இளையராஜா, இசை அமைச்ச தேவர்மகன் படத்திலருந்து வர 'மாசுற பொண்ணே வருக'ங்கிற பாட்டு. இது ஒரு இடை சொருகல் இல்ல, மெயின் பாட்டே, ஆனா, படத்தில 'background Score'க்கு பதில இளையராஜா, அருமையா சின்ன பாட்டை போட்டிருப்பார். ஏற்கனவே சிவா இந்த பாட்டை போட்டு, இளையராஜான்கிற இசை ஜீனியஸ் புகழ் பாடினார். எனக்கும் ஒரு மறக்க முடியாத பாட்டு. இந்த பாட்டு படமாக்கிருந்த் விதமும் சூப்பர். இன்னொரு விஷயம் இந்த படத்தோட டைரக்டர் யாருன்னு தெரியுமா?, 'பரதன்', பல மலையாள படங்களை டைரக்ட் பண்ணினவர். என்னுடய பொறியியல் கல்லூரி நாட்கள்ல இவர் இயக்கின பல் மலையாள படங்களை பைத்தியமா திரும்ப திரும்ப பார்த்துகிட்டு இருப்பேன். அப்பேர்பட்ட சிறந்த இயக்குநர். அவரை வச்சு 'தேவர் மகனை' கமல் இயக்கிருந்ததில ஒரு ஆச்சிரியமில்லை தான்.

ஆக இந்த இடை சொருகல் வித்தையில யாரு ராஜான்னு, உங்க வியூகத்துக்கே விட்டுடறேன். பதில சொல்லுங்க!

கடைசில ஒரு டெயில பீஸ், இங்க ஒரு படத்தை சொருகுறேன், இந்தம்மா யாருன்னு கண்டு பிடிச்சு சொல்லுங்க!. ஸ்ரீதர் கண்டு பிடிச்ச ஹீரோயின், இந்த ஹீரோயினை கொண்டு வந்ததுக்கு பெரிய கதையே இருக்கு. ஏற்கனவே ஃபீல்ட்ல இருந்த இன்னொரு ஹீரோயின் பண்ண அட்டகாசம் தாங்கமுடியாம, இவங்கள கதாநாயிகியா போட்டு படம் எடுத்தாரு ஸ்ரீதரு. அந்த படத்தில நாகேஷ் கூட அந்த நடிகை மாதிரி சச்சு நடிக்க, காமடி ஏக ரகளையா இருக்கும். கண்டுபிடிங்க யாரு இந்த அம்மா?, பிறகு எது அந்த படம்னு? பிறகு அந்த அட்டகாசம் பண்ண நடிகையும் யாருன்னு, சரியா!

இன்றய தேன்கிண்ணம் இனிதே நிறைவுற்றது!

7 comments:

said...

அட. இது நம்ம காதலிக்க நேரமில்லை காஞ்சனாதானே?

said...

சரியா கண்டுபிடிச்சீங்க ஞானவெட்டியான்! அது காஞ்சனாவே தான். படமும் காதலிக்க நேரமில்லை. அந்த இன்னொரு அட்டகாசம் பண்ண நடிகை சரோஜாதேவி!

said...

வாங்க மார்கழிப்பூ, உங்க விடை சரி!

said...

நடிகை காஞ்சனா....வம்பு செய்த நடிகை சரோஜாதேவி.

கண்ணதாசன் கூட சரோஜாதேவியைக் கிண்டல் செய்து காட்டு ரோஜா படத்தில் பாடல் எழுதினாராம். என்ன பாடல் என்று மறந்து விட்டது.

நடிகை காஞ்சனா..இப்பொழுது பெங்களூரில் ஒரு கோயிலில் தங்கிக் கொண்டு கோயில் பணிகள் செய்து கொண்டு வாழ்வதாகக் கேள்வி. இவர் ஒரு விமானப் பணிப்பெண்.இவர் ஒரு பைலட்டைக் காதலிக்க..வீட்டில் ஒப்புக்கொள்ளாமல் இவரை சினிமாவில் தள்ளி விட்டார்களாம். கடைசியில் எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டு விரட்டி விட்டார்களாம். கொடுமை.

said...

வெளிகண்ட நாதர். படத்தைப் பார்த்தவுடன் காஞ்சனா என்று தெரிந்தது. மற்ற தகவல்கள் புதியவை. முதுமை ஆட்களை எப்படி மாற்றிவிடுகிறது.

said...

வாங்க ராகவன், ரொம்ப நாளா, நம்ம வலை பக்கம் வரவே இல்லை! ஆமாம், சினிமாவினால் சீரழிந்த பெண்மணிகள் ஏராளம். தமிழக அரசு கலைமாமணி நிகழ்ச்சியில கலந்து கொண்டபோது எடுத்த படம் இது. அந்த அம்மாவின் முதுமை தள்ளாடும் பொழுது, இளமை ஊஞ்சல் ஆடியதை கொஞ்சம் எண்ணி பார்த்தேன்!

said...

ஆமாம் குமரன், முதுமை, ஆட்களை அறியா வண்ணம் மாற்றி விடுவது உண்மை தான்!