சரியா இன்னும் 20 வருஷம் கழிச்சு பார்த்தா இந்த உலகம் எப்படி இருக்க போகுதுன்ன்னு நினைச்சு பார்க்கிறதுண்டா? இல்லேன்னா கொஞ்சம் பார்க்கலாம் வாங்க! சரி, சரித்திரம்னு எடுத்துக்கிட்டா, அது ஒரு கோடு கிழிச்ச மாதிரி நேரா கிழிச்சி இப்படி தான் நடந்ததுன்னு சொல்லிட முடியாது! ஏகப்பட்ட ஏற்றம் இறக்கங்கள் கொண்டது, ஒரு காலத்திலே நம்மளும் சைனாவும் தான் ராஜா உலக பொருளாதாரத்திலே, செல்வ செழிப்புல, ஆடம்பரத்திலே, அப்புறம் வாழ்க்கையை அணு அணுவா ரசிச்சு வாழ்றதுல்ல, ஏன்னா அப்படி பட்ட பூமி நம்மது, அதுனால தான் காமசூத்திரம் எழுதியும், அழகு அழகா சிற்பம் செதுக்கியும் அந்த காலத்திலே கழிச்ச கேளிக்கைகளின் நவரசத்தை செதுக்கி வச்சி, ஒய்யார வாழ்க்கை வாழ்ந்து வந்தோம்! அப்பறம் என்னாச்சு, கொஞ்சம் கொஞ்சமா உலகின் மத்த பாகங்கள்ல இருந்து கடல்ல நிலம் தேடி, நல்லா ஆடம்பரமா இருந்து சுகவாசி வாழ்வு வாழ்ந்த இடங்கள் எங்கேன்னு தேடி, கொஞ்சம் தன்னோட புத்தியை உபயோகிச்சு, எப்படியும் முன்னேறி வாழ்னும்னு தேசம் விட்டு வந்த மாற்று கண்டத்துக்காரங்க அப்படியே கொஞ்சம் கொஞ்சமா இப்படி செழிப்பா வாழ்ந்து கழிச்ச இடங்களை அண்டி, கடைசியிலே அதையே புடிச்சி ஆட்சி செஞ்சு நாம் தலைகீழ் ஆனது சரித்திரம்! ஆனா எதிர்காலம் மட்டும் அப்படி எதிர்பார்த்தது போல கிழிச்ச ஒரே நேர்கோட்ல ஏத்தம் இறக்கம் இல்லாம மாறிவுடுமா என்ன? அது அப்படி எப்படித் தான் மாறப்போகுதுங்கிறதை கொஞ்சம் பார்ப்போமா?
இன்னும் சரியா 20 வருஷத்திலே பார்த்தீங்கன்னா, சைனாவோட பொருளாதாரம் அமெரிக்காவை தூக்கி சாப்பிட்டுடும்! அப்புறம் நம்ம பொருளாதாரத்தை எடுத்துக்கிட்டா, எந்த ஒரு ஐரோப்பிய நாட்டைவிட அதிகமா இருக்கும். அப்புறம் ரஷ்யா, பிரேசில், இந்தோனேஷியா, இவெங்கெல்லாம் எல்லாத்தையும் பின்னாடி தள்ளிட்டு முன்னே வந்திடுவாங்க! ஊரு உலகம் முழுக்க இனி பாட்டு படிக்கப்போறது ஆசியாவை பத்தி தான், அதுவும் "Asian values", "Beijing consensus", அப்படின்னு ஒரே புராணம் தான் பத்திரிக்கை, அப்புறம் எல்லா ஊடகமும் பாட்டு படிக்க போவுது (இப்பவே அப்படி பாட ஆரம்பிச்சு ரொம்ப நாளாச்சு!) இந்த நாடுகள் எல்லாம் வளர ஆரம்பிச்சோன, நிறைய தட்டுப்பாடு வரப்போவுது, இயற்கை செல்வங்களுக்கும், மனித குலத்துக்கும் தான்! உலகமே நொறுங்கி நிக்க போகப்போகுது மூணு விஷயத்துக்கு, ஒன்னு எண்ணெய், இன்னொன்னு தண்ணீர், மூணாவது விஷயம் தெரிஞ்ச, சாமர்த்தியம், திறமை கொண்ட தொழிலாளர்கள்!
ஆனா பெரும் சக்திகள், வல்லரசுகள்னு சொல்லப்பட்ட நாடுகள் எல்லாம் பெரியதொரு தாக்குதலுக்கு உட்படுத்த படுவார்கள்! அழிவுகள் அனைத்தும் தனிவுடமை ஆக்கப்படும், ஆமா, தன் படுக்கை அறையிலிருந்து உலகத்தை ஆட்டி படைப்பார்கள் கம்ப்யூட்டர் நெர்ட்ஸ்னு சொல்லக்கூடிய அதி புத்திசாலிகள், அதே மாதிரி தீவிர வாதிகள் உலக சந்தையில் விக்கக்கூடிய பேரழிவு சாதனங்களை, அனைவரையும் கொல்லும் ஆய்தங்களை ('Weapons of Mass Destruction') சுலபமா வாங்கக்கூடும்! தனிமனித கும்பல்கள் ஒரு தேசத்தையோ, இல்லை மாநிலங்களையோ அழிக்கக்கூடும்! இந்த தாக்கப்படும் அபாயத்தால், பாதுகாப்பு அளிக்கும் ஏகாதிபத்தியத்தை ('Defensive Imperialism')கடைபிடிப்பார்கள் பெரும் வல்லரசு என அழைக்கப்படும் நாடுகள்! அதாவது, வல்லரசு நாடுகளின் ஆக்கிரமிப்புகள், இது போன்ற தீவரவாதம் வளரும் பகுதிகளையும், நாடுகளையும் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பார்கள், இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பு கட்டு பாடு கொண்ட ஈராக், ஆப்கானிஸ்தானம் போல!
பொருளாதார இமயங்கள் ('Economic Mights') உலகத்தின் வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் மாறி தெற்கு, கிழக்கு பகுதிகளில் வியாபித்து விடும், அதனால் கலாச்சார சக்திகளும் ('Cultural power')மாறிவிடும்! வளர்ந்து வரும் அல் ஜாசீரா போன்ற ஊடகங்கள் 'சி என் என்' போன்றவற்றை விட வழுபெற வாய்ப்பு இருக்கிறது! பிறகு நமது 'பாலிவொட்' ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது! இதனால் என்ன ஆகுமென்றால் உலகம் எல்லாவற்றையும் அமெரிக்க கண்கள் கொண்டு பார்க்கப்போவதில்லை! நமது பழமையான நாகரீகம் மீண்டும் தளிர்த்து எழுத்து புத்துணர்வுடன் பீறு நடைப்போடப் போகிறது! அதிக சுயநம்பிக்கையுடன் எழுந்தாடப்போகிறது மேற்கத்திய நாகரீகத்தை விட, எல்லோரும் அமெரிக்காவில் சாம்பாரும், கறிக்கொழம்பும் சாப்பிடுவது சாத்தியமே! அதைவிட அதிக நம்பிக்கையுடன் நமது கருத்துக்கள் மேலோங்கி நிற்கும்! குடியுரிமை, சுதந்திரம், சட்ட விதிகளில் நமது எண்ணங்கள் தழைத்தோட போகிறது!
இந்த போக்குகள் வரும் பொழுது, 2026 ஒரு புதிய உலக ஆணையை ('World Order') மட்டும் சந்திக்கப்போவதில்லை, நான்கு உலக ஆணையை சந்திக்கவிருக்கிறது! உலகம் நான்காக பிரிந்து இருக்கும் வாய்ப்புகள் இருக்கிறது! அதாவது இரண்டு அட்சுகளால் சுழலப்படும் நான்கு துருவ உலகம் வர வாய்ப்புள்ளது! மக்கள் பலம் பொருந்திய குடிஆட்சி கொண்ட உலகம் ஒரு பக்கமும், கொடுங்கோன்மை மேலோங்கிய சர்வாதிகார ஆட்சி கொண்ட உலகம் மறுபக்கமும் ஒரு அட்சில் சுழலப்போகிறது! அதே போல சமசீர்தூக்கிய பலம் ('Balance of Power')கொண்ட நாடுகள் ஒரு பக்கமும், பன்னாட்டு சட்டத்திட்டங்களுக்கும், ஸ்தாபனங்களும் அடங்கி வாழும் நாடுகள் கொண்ட இன்னொரு பக்கமும் அடங்கிய இன்னொரு அட்சும் சுழல இருக்கிறது!
இதிலே அதிக வல்லமை படைத்த துருவமாக அமெரிக்காவும் அதை சார்ந்த இந்தியாவும் வர வாய்ப்பிருக்கிதறது! ஆனால் சரிந்து விழும் டாலர் மதிப்புகளும், உலகம் முழுக்க அதிக இராணுவ தடம் பதிப்புகளையும் கொண்ட அமெரிக்கா உலக நாடுகளால் கவர்ந்துழுப்பதை காட்டிலும் துரத்தி விடப்படுவதை அதிகம் காணலாம்! அதன் தொன்று தொட்ட தோழமைகளான ஐரோப்பிய ஐக்கிய நாடுகள், ஜப்பான், மற்றும் தெற்கு கொரியா போன்ற நாடுகள் அவ்வளவாக அமெரிக்க தலைமைக்காக, எவ்வாறு சோவியத் யூனியனிடன் நடந்த பனிப்போரில் ஆர்வம் காட்டினவோ, அவ்வாறு ஆர்வம் காட்டப்போவதில்லை!
உலகத்தின் மேற்கிலே பல்கேரியா, ரோமேனியா, நார்வே, சுவிட்சர்லாந்து, துருக்கி, உக்ரைன், மோடோவ்வோ, போன்ற நாடுகள் கொண்ட ஒரு அகண்ட ஐரோபியகுழுமம் குடியரசு ஆட்சி முறையை பெரிதும் நம்பி, அமெரிக்க, இந்திய நாட்டு குடிஆட்சிகளின் தன்மையில் கொண்ட நம்பிக்கையை தாங்களும் கொள்ள வாய்ப்பிருக்கிறது! ஆனால் அமெரிக்காவுடன் கூடிய உறவை துண்டித்துக்கொள்ள விரும்புவார்கள்! முன்பு சோவியத் பிளாக் என்றழைக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட சிறிய நாடுகள், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகள் அனத்தும் வணிகம், மற்றும் முதலீடு, உதவித்தொகை பெறுவது போன்ற அனைத்திற்கும் ஐரோபிய குழுமத்தை நம்பி இருக்கப்போகிறார்கள்! சிறுக சிறுக ஐரோபிய வணிக முறை மற்றும் செயல்பாடுகளில் முற்றிலும் ஈர்க்கப்பட்டுவிடுவார்கள் இவ்வனைத்து நாடுகளும்!
ஐரோப்பாவின் கிழக்குப்பகுதி ரஷ்யா, சைனாவால் ஈர்க்கப்பட்டு, தங்களின் சர்வாதிகார ஆட்சி தன்மையை நிலைநிறுத்த முற்படுவார்கள்! அவர்கள் அனைவரும் பலதரப்பினை கொண்ட ஆட்சிஅமைப்பை ஏற்படுத்தி சர்வாதிகாரம் கொண்ட உலகத்திற்கு வழி வகுப்பார்கள்! ரஷ்யா ஐரோப்பிய வாழ்க்கை மதிப்புகளை தடுக்க எல்லா வகையிலும் முற்பட்டு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முற்படுவார்கள்! சைனாவின் அசுர பொருளாதார வளர்ச்சி சர்வாதிகாரிகளுக்கு ஒரு ஒளி விளக்காக அமையும்! தங்களின் ஆளுமையை விட்டுக்கொடுக்காமல், வளர்ச்சியடையவே முற்படுவார்கள், அதனால் அந்நாட்டு மக்களின் சுதந்திரம் அடக்கி ஆளப்படும்! சைனா, ரஷ்யா மற்றும் கஷக்கிஸ்தான், கிர்கிஷ்த்தான், தஜக்கிஷ்த்தான், உஜபெக்கிஷ்த்தான் போன்ற நாடுகளுடன் கைகோர்த்து ஷாங்காய் கூட்டுறவு கொள்கை என்ற ஒன்றை உருவாக்கி இப்பொழுது இருக்கும் பொருளாதார வல்லமை பொருந்திய, மற்றும் பொருளாதார அடக்குமுறை கொள்கைகளை கையாளும் G7 என்ற நாடுகளின் கூட்டமைப்புக்கு எதிர் குரல் கொடுப்பார்கள்! மேலும் பலதரப்பட்ட ஸ்தாபனங்களில் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு ஐரோப்பிய குழுமத்தில் தங்கள் வணிக வல்லமையை வழுப்படுத்தி அமெரிக்காவை அடக்கி ஆள முற்படுவார்கள்
அடுத்த துருவம் நம்பிக்கை பிராந்தியம்-இது குடிஆட்சி முறைகளாலோ இல்லை சட்டவிதிகளாலோ விளக்கப்படும் ஒன்றல்ல! 2026ல் மதச்சார்பற்ற ஐரோபிய கண்டம் மத எதிர்ப்பு வாதத்தால் பந்தாடப்படும்! முஸ்லீம் உலகம் அதற்கு முதல் வரிசையில் நின்று ஆட்டுவிக்கும்! மத்திய கிழக்கு நாடுகளான லெபனான், பாலஸ்தீனம், ஈரான் போன்ற நாடுகள் ஒரு புதுவிதமான முஸ்லீம் குடியாட்சியினை கொண்டு வர முற்படும்! ஆனால் அதிகமான நாடுகள் எந்த அரசியல் மாற்றத்தையும் சமூக தேவைகளுக்கு ஏற்ப அவ்வளவு விரைவாக கொண்டு வருவதில் முனைப்பாக இருக்காது! சவுதி அரேபியா, எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் ஊழல்புரியம் சீமாந்தர்கள், இஸ்லாமியர்களால் துடைக்கப்பட்டு வெளியேற்றப்படுவர், அதுவும் பன்னாட்டு துணைக்கொண்டு!
அனத்து நாடுகளும் செல்வாக்கு கொண்ட புது கோளத்தின்( 'sphere of Influence') ஒரு பகுதியாக இருக்கப்போவதில்லை! இந்த செல்வாக்கினையுடய கோளங்களை அடைவதற்கான உலக சண்டையில் எந்தப்பக்கமும் சாயக்கூடிய நாடுகளின் மீது எல்லோர் கண்ணும் இருக்கும்! இந்த செல்வாக்கினை நிலை நிறுத்திக்கொள்ளும் போட்டியில் முற்படப்போவது தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசிய, காக்கஸ் என்றழைக்கப்படும் பகுதியான காஸ்பியன் மற்றும் கருப்பு கடலை ஒட்டிய பகுதியும் மத்தியகிழக்கு ஆசிய பகுதியும் தான்! எந்தப்பக்கமும் சாயக்கூடிய தன்மையில் உள்ள நாடுகளில் இந்தியா மிக முக்கியமான ஒன்று!
இந்த நான்கு துருவ உலகானது தங்களை நிலைநிறுத்திக்கொள்ள, தங்கள் வல்லமையை நிலைநிறுத்த எப்பாடுபட்டாவது சண்டை போடும் அளவிற்கு செல்ல வாய்ப்பில்லை, ஆனால் இந்த நம்பிக்கை பிராந்தியம் என்று சொல்லக்கூடிய துருவத்தில அதி தீவிர வாதம் வளர வாய்ப்பிருக்கிறது! ஆனால் இந்த நான்கு துருவங்களையும் கட்டிபோட்டு வைப்பது ஒற்றை பொருளாதார அமைப்பு ('Single Economic System'), அதில் அனைத்து துருவங்களும் போட்டி போடுக்கொண்டு வணிகம், வர்த்தகம், முதலீட்டினை அதில் ஒருவொருக்கொருவர் செய்து கொண்டிருப்பார்கள், அதுவே அனைத்தையும் சமன் செய்யும் மிருதுவான வல்லமை கொண்டிருப்பதால், ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உறுதியுடன் இருப்பது என்னவோ முற்றிலும் உண்மை!
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
உதயகுமார், என்னங்க, இப்படி பயம் காட்டறீங்க.. இப்போவே பயமா இருக்கு.. !!
சார்,
சிந்தனை சிறகை தட்டிவிடும் பதிவு.
பாஸிடிவான கண்னோட்டம்.
ஆக 2 or 3 decadeல்ல இந்தியா நல்ல நிலைக்குவரும்!!
மிக்க நன்றி.
சாத்தியம் உண்டு.
நல்ல பதிவு.
அமெரிக்காவின் அணுஆயுதங்களை வைத்து அது சில மிரட்டல்களை விடும் என்பது என் கணிப்பு.
//இதிலே அதிக வல்லமை படைத்த துருவமாக அமெரிக்காவும் அதை சார்ந்த இந்தியாவும் வர வாய்ப்பிருக்கிதறது! ஆனால் சரிந்து விழும் டாலர் மதிப்புகளும், உலகம் முழுக்க அதிக இராணுவ தடம் பதிப்புகளையும் கொண்ட அமெரிக்கா உலக நாடுகளால் கவர்ந்துழுப்பதை காட்டிலும் துரத்தி விடப்படுவதை அதிகம் காணலாம்! //
அமெரிக்காவின் வீழ்ச்சி காலத்தில் இந்தியா அதற்கு துணை இருக்கும் என்று சொல்கிறீர்களா!
நல்ல படைப்பு. நன்றி
ஹாலிவுட் படத்துக்கு கதை எழுதலாம் போங்க..... சூப்பர்.
படிக்க கொஞ்சம் டைம் கொடுங்கப்பா... இப்படி அடுத்து அடுத்து போட்டு தாக்கினா எப்படி???
பொன்ஸ், இது பயமுறுத்த இல்லை, ஓரளவுக்கு எல்லாருமே எதிர்பார்க்கிற ஹோஸ்யம்!
'சிந்தனை செய் மனமே' பின்ன எதுக்கு பெரியவங்க சொன்னாங்க சிவ பாலன்!
இது சாத்தியமே துளசி!
நன்மனம், நான் அமெரிக்கா வீழும்னு சொல்லலியே, அது ஒரு தனிப்பெரும் வல்லமையாய் இப்ப இருக்கிற மாதிரி இருக்காதுன்னு சொல்ல வர்றேன், ஏன்னா பொலிடிக்கல், மிலிட்டரி, எக்னாமிக் பவர்ல அதுகூட வேற சில நாடுகளும் சேர வாய்ப்பிருக்கு, அப்படி சேர்ந்து ஒரு துருவமா இந்தியா, அமெரிக்கா இருக்கலாமுன்னு சொல்ல வர்றேன்!
அதே நேரத்திலே அதுக்கு எதிர்ப்பு நாடுகளும் பெருகிக்கிட்டே இருக்கும்! இப்ப இருக்கிற 'affinity', சில முக்கிய நாடுகள் கிட்ட இருக்காது, அவ்வளவே!
மனசு, ஹாலிவுட் படம் வந்தாலும் ஆச்சிரியப்பட வேணாம்! நட்சத்திர வாரத்திலே ஒன்னுக்கு மேலே ஒரு நாள் பதிவு போடணும் இருக்கே! இந்த நடிகைங்க மாதிரி நம்ம பொளப்பு ஆயி போச்சு பார்த்தீங்களா, காத்துல்ல போதே தூத்திக்கன்னு-:)
வணக்கம் வெ.நாதர்!
திரு.அப்துல் கலாம் போல ரொம்ப பாஸிடிவ் ஆக நினைக்கறிங்க ,திரு அப்துல் கலாமின் விஷன் - 2020 படிச்சிங்களா. அதன் தமிழாக்கம் போல அருமையாக உள்ளது. கண்டிப்பாக இந்தியாவிற்கு வாய்ப்பு உள்ளது ஆனால் ஜான் ஏறினால் முழம் சறுக்கும் கதை நடக்காமல் இருக்க வேண்டுமே நாதர்!
//
அனைவரையும் கொல்லும் ஆய்தங்களை ('Weapons of Mass Destruction') சுலபமா வாங்கக்கூடும்!
//
Did you know that I can buy nuclear warheads for $40 million each? Hell, I could buy half a dozen and even get a discount. என்று ஜான் ட்ரவோல்டா Swordfish ல் சொல்லுவது ஞாபகம் வந்து போகிறது..!!
வவ்வால், இது ஒரு 'prediction' தான்! பொதுவா இப்ப போகும் நிலைமையை வைச்சு ஒரு யூகம் தான்! இதை வரப்போகும் நாட்கள் தான் சொல்லும் சரியா தப்பான்னு!
ஷங்கர், இது இப்போ சாத்தியமே! அழிச்சிக்க மனுசனுக்கு ரொம்ப நேரம் பிடிக்கறதில்லையே!
வணக்கம் வெளிகண்ட நாதர்.
அருமையான பதிவு.
இதிலிருந்து எதுவும் நிலையானது இல்லை என்று புரிகிறது. ஒரு காலத்தில் வளமாக இருந்த இந்தியா, தற்போது முனேரும் நாடாக() இருக்கிறது. 2026 ல் வல்லரசு நாடாக முன்னேறி விடும் என்று அறிய சந்தோஷமாக இருக்கிறது.
எல்லாமே ஒரு வட்டதின் ஓரத்தில்() (அ) சக்கரத்தில் பயனம் செய்வது போல இருக்கிறது. சக்கரம் மேலும் செல்கிறது, கீழும் செல்கிறது. 2026 ல் கிடைக்கும் வெற்றி பல ஆண்டுகள் நீடிக்க இப்போதிலிருந்தே இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!.
நன்றி!
நரியா, உங்களின் அவா, பிரார்த்த்னைப் படி, இந்தியா வளர்ச்சி அடைவது சாத்தியமே!
Post a Comment