இந்த பேருல அந்த காலத்திலே ஒரு படம் சிவாஜி நடிச்சு வர வேண்டி இருந்துச்சு, அப்புறம் அந்த படத்தோட பேரு அப்படி வச்சா எல்லாரும் சிவாஜியை சாப்பாட்டு ராமன்னு கூப்டுவாங்கன்னு, அதை மாத்திட்டாங்க, என்ன பேரு வச்சாங்கங்கிறதை உங்க பின்னோட்டத்திலே எழுதுங்க! யாரு முதல்ல எழுதுறாங்கன்னு பார்க்கலாம்! என்ன கொஞ்சம் குளு சொல்றேன், இதிலே கே ஆர் விஜயா, முத்துராமன் நடிச்சிருந்தாங்க! கிராமத்திலே இருந்து பட்டணம் போய் சிவாஜி நடிச்சி, சிவாஜியாவே, பெரிய நடிகரா வருவாரு! இப்ப சொல்லுங்க பார்க்கலாம். சரி விஷயத்துக்கு வர்றேன்! இந்த சாப்பாட்டு விஷயத்திலே, நம்ம எல்லாருமே கொஞ்சம் சாப்பாட்டு ராமன்கள் தான்! நான் பல இடங்களுக்கு போனதால பல தரப்பட்ட சாப்பாடு, அப்புறம் சாப்பாட்டுக்குன்னு அலைஞ்ச கதைன்னு நிறையவே இருக்கு, சரி சாப்பாட்டையும், அப்படி அலைஞ்ச கதையும் எழுதுவோமேன்னு தான் இந்த பதிவு!
ஆரம்பத்திலே, சின்ன வயசிலே, ஓட்டல்னு போனா விரும்பி சாப்பிடுவது, ரவா தோசை! அப்புறம் ஓட்டல்னு பார்த்தா, நான் சின்ன வயசிலே அதிகம் போனது பாலக்கரை பவானி, மற்றும் சுந்தரமய்யர் ஓட்டல்கள் தான். இது அந்த ஏரியாவுக்கு ரொம்ப பேமஸ்! அதிலேயும் சுந்திரமய்யர் ஓட்டல் ரவா தோசை எப்பவும் நான் விரும்பி சாப்பிடுவது! இது பாலக்கரையிலே சுத்தினப்ப, கொஞ்சம் வளர்ந்து திருச்சி மெயின்கார்டுகேட், ஜங்ஷன் எல்லாம் போக ஆரம்பிச்சப்ப, காஞ்சனா, தேவி இதெல்லாம்! அதுவும் இந்த ரவா தோசை திங்க ஆசைப்பட்டு ஒவ்வொரு மாசமும் கிருத்திகைக்கு கோயிலுக்கு என் தந்தையோடு போவேன்! இது சைவம். அசைவம்னு பார்த்தா, பாலக்கரையிலே இருக்கிற ஆறுமுகம் ஓட்டல் ரொம்ப பேமஸ்! தீபாவளிக்கு தீபாவளி அந்த விஷேஷ நாட்கள்ல, வான்கோழி பிரியாணி போடுவாங்க!, அதான் டர்க்கி, அமெரிக்காவிலே வந்து தேங்ஸ்கிவ்விங் டேக்கு சாப்டறதுக்கு முன்னேயே அதை நம்ம ஊர்ல வச்சி சாப்பிட்டாச்சு, அதுவும் அப்புறம் முட்டைக்குள்ள குஸ்கா, சால்னா, இதெல்லாம், ரொம்ப விரும்பி சாப்பிடுவது! புரோட்டா, தோசைன்னு வந்திட்டா தோசை தான் பிடிக்கும் நமக்கு, ஆனா சில பேருக்கு புரோட்டா சால்னா தான் புடிச்சது, அதுக்குன்னு போற ஆளுங்க நிறையவே!
அப்பறம் கோயம்புத்தூர் வந்தா, மரவள்ளி கிழங்கு சிப்ஸ், டீ, இது காலேஜ் படிக்கிறப்ப தினம் சாப்பிட போறதுண்டு. அப்புறம் எங்க காலேஜ் மெஸ், இப்பவும் எனக்கு என்வி மெஸ் மெனு ஞாபகம் இருக்கு! பொதுவா காலையிலே பிரட், இல்லை ஊத்தப்பம் கிடைக்கும், மத்தியானம் சாம்பார், ரசம் மோர் எல்லாம். ஆனா சாய்ந்திரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்னு! திங்க கிழமை கீரைஸ், கோழி வருவல், செவ்வாய், இட்லி, மட்டன் குழம்பு, புதன், வெரைட்டி ரைஸ், கோழி வருவல், வியாழன், முட்டை குழம்பு, காரரசம், சாதம், சிப்ஸ் வெள்ளி,பாசிபருப்பு சாம்பாரு, தக்காளி ரசம், மட்டன் வருவல், சனிக்கிழமை வெரைட்டி ரைஸ், இல்ல கீரைஸ், சிப்ஸ், கோழி வருவல், ஞாயித்துக்கிழமை வெறும் ஊத்தப்பம், மத்தியானம் கோழி பிரியாணி, அப்பா ஒரு வழியா சாப்பிட்ட அத்தனையும் சொல்லிட்டேன்!
அப்பறம் தமிழ்நாடு முழுக்க, மொத்ததிலே எல்லா ஓட்டலுங்களும் காலையிலே பதினோரு மணிக்கே 'சாப்பாடு தாயார்' ன்னு சாக்பீஸ்லேயோ, இல்லெ பெயிண்ட்ல எழுதின போர்டு வெளியிலே மாட்டிடு வாங்க, அந்த மாதிரி பெரிய நகரங்கள்லருந்து சின்ன ஊருங்க வரை இது உண்டு! அளவு சாப்பாடு எப்பவும் நமக்கு கட்டுபிடியாகாது, அதனால 'ஃபுல் மீல்ஸ்' எந்த ஓட்டல்ல போடுறான்னு தேடி கண்டுபிடிச்சி சாப்டறதுண்டு, இந்த மெட்ராஸ்ல பாரிஸ் கார்னர், 'மிண்ட்'(அதான் தங்கசாலை, பஸ் எல்லாம் இந்த பேருலதான் ஓடும், ஆனா மக்கள் பேர் சொல்லி அழைப்பது 'மிண்ட்' தான், மெட்ராஸ்ல முக்காவாசி, தமிழாக்கம், திமுக அப்ப எவ்வளவு முயற்சி பண்ணாலும் மக்கள் இங்கிலிபீஸ்ல தான் சொல்லுவாங்க, பேச்சு தமிழ்ல 'மெளண்ட் ரோடை' இன்னும் அப்படி தான் கூப்பிடறாங்க, அண்ணா சாலைன்னு அதிகமா சொல்றதே கிடையாது, இப்ப அப்படியே தானா, இல்ல மாறி போச்சா, சென்னை வாழ் பதிவர்கள் இது பற்றி பின்னோட்டம் போடுங்க) இங்க எல்லாம் இந்த முழு சோறு போடற போஜன சாலைங்க நிறைய உண்டு!
அடுத்து அந்த காலத்திலே மெட்ராஸ்னு எடுத்துக்கிட்டா சைவத்திலே பேம்ஸ்ஸா, அந்த அந்த ஏரியாக்கு ஒரு ஓட்டலுங்க இருக்கும், ஆனா எல்லாருக்கும் தெரிஞ்சு எல்லாஇடத்துக்கும் பொதுவானா, பாரீஸ் கார்னர்ல இருந்த ராம்கிருஷ்ணா ஓட்டல், அப்ப சரவண பவன் எல்லாம் வராத நேரம்!(இப்ப ஓட்டல் முதலாளிக் கதை என்னாச்சு? தெரிஞ்சவங்க அறிஞ்சவங்க, பின்னோட்டம் கொடுங்க, இல்லைன்னா தொடர் பதிவு போடுங்க சுவாரசியமா இன்னொரு தடவை படிக்கலாம்!) அதுல்ல போடற பாசந்தி ரொம்ப பேமஸ்! அப்புறம் புகாரியிலே பிரியாணி, முட்டை புரோட்டா, இது அசைவம்! அப்பறம் எல்லா ஊருக்கும் இருக்கிற நம்ம முனியாண்டி விலாஸ் செயின் எல்லாருக்கும் தெரிஞ்சது தானே! மெக்டனால்டு அந்த காலகட்டங்கள்ல ஆரம்பிச்சவங்க தான், நம்ம உடுப்பி, முனியாண்டி எல்லாம் அப்படி தான், ஆனா பிராண்டு நேம்மை காசு பண்ண தெரியலை பாருங்க நம்மலால! நான் மெட்ராஸ்ல படிச்ச காலத்திலே கிண்டி இஞ்சினியரிங் காலேஜ்லே போடற தயிர் சாதமும், ரவா தோசையும் புடிக்கும்! நான் சேர்ந்த மெஸ்ல சீக்கிரம் தீர்ந்திடும், எப்போதும் லேடீஸ் ஹாஸ்டல் தயிர் சாதம் தான் எனக்கு எப்பவும் கிடைக்கும், ஏன்னா நான் எப்பவும் லேட்டா மெஸ்ஸுக்கு போறதாலே, லேடீஸ் ஹாஸ்டல் இருந்து எது கிடைச்சிதோ, இல்லையோ, ஆனா தயிர்சாதம் கிடைச்சிது எனக்கு-:)
அப்பறம் பாம்பேலன்னு பார்த்தா, செம்பூர் பக்கம் அதிகம் நம்ம ஊரு ஓட்டலுங்க இருக்கு, அதனாலே கவலையில்லே! நான் தங்கி இருந்தது அப்ப அணுசக்தி நகர்லே, ஆக சாப்பிட செம்பூருக்கு போய் வருவோம்! பாம்பே பாவு பாஜி ரோட்டு கடைங்க ரொம்ப பேமஸ், ராத்திரி எத்தனை மணி ஆனாலும் சாப்பிட கிடைக்கும்! பேச்சலரா காலம் கழிச்சப்ப, ராத்திரி ஒன்னும் சாப்பிடாம சினிமா போயிட்டு நடுராத்திரி இந்த மாதிரி பாவு பாஜி தின்னுட்டு வூடு வந்த நாட்கள் அதிகம்! வட இந்தியாவுக்குன்னு போக ஆரம்பிச்சிட்டீங்கன்னா, சரியா சொல்லலுனும்னா, விந்திய சாத்பூர மலைத்தொடர் வரை கவலையில்லை, அதுவும் நீங்க வெறும் சோறு திங்கற ஆளா இருந்தா, அதை தாண்டினீங்க, நம்ம ஊரு சோறு கிடைக்காது, அப்பறம் எல்லாமே கோதுமை, கடுகு எண்ணெய் தான்! பழகாத ஆளா இருந்தா முத பத்து நாளைக்கு வவுத்திலே ஒன்னும் இறங்காது! ஆனா இன்னும் கொஞ்சம் வடக்க வந்தா பஞ்சாபி கானான்னு சுத்தமான தேசி கீ ன்னு எல்லாம் நெய்ல செஞ்சது ! அதுவும் டில்லி எருமை பால்ல இருந்து எடுத்த நெய்! ஆரம்பத்திலே மூக்கிலே புடிக்க கஷ்டம், பழகிட்டா பஞ்சாமிர்தமா இருக்கும்!
அது மாதிரி ரோடு கடைகளை இவெங்க தாபான்னு கூப்பிடுவாங்க! வட இந்தியாவின் பல பகுதிகள் போய் வந்தவங்கிர முறையிலே, இந்த தாபாக்கள் எனக்கு ரொம்ப பரிச்சயம்! காலையிலே இட்லி, தோசை, இல்லே பொங்கல் வடைன்னு நீங்க தேடினீங்கன்னா ஒன்னும் கிடைக்காது! நம்ம ஊர்லருந்து தாஜ்மஹால் சுத்தி பார்க்க வர்றேன்னு வர்ற ஜனம் தவிச்சிடும். வீட்டை வுட்டு வெளியே வந்தா வாயை கட்டி போடணும்னு அறிவுரை சொல்ற நம்ம ஊரு பெருசுங்க, சில சம்யம் ப்ச்.. கொட்டிக்கிட்டு, என்ன இருந்தாலும் நம்ம ஊரு சாப்பாடு வரும்மா, எல்லாம் சப்னு இருக்கும்னு முதல்ல அதுங்க தான் பாட்டு படிக்கும்! ஆனா நீங்க இந்த வடக்கிந்திய உணவு வகைகளை சரியா சாப்பிட கத்துக்கிட்டீங்கன்னா, அப்புறம் அதுவே சொர்க்கமா இருக்கும்!
காலையிலே பொதுவா இந்த ஊர்ல, புரோட்டா, தயிர், ஊறுகாய், காரியம் முடிச்சிடுவாங்க! சில தாபாக் கடைகள்ல இந்த புரோட்டாவும் தயிரும் தான்! தயிர்ல மிளகாய் பொடியை தூவி உப்பை போட்டு சாப்டுங்க, அப்படியே அமிர்தமா இருக்கும்! மத்த படி தந்தூரி ரொட்டி, காய்கறிகள்! சாப்பிட முதல்ல கஷ்டம் தான்! போகப்போக பழகிடும்! நம்ம ஊரு சாம்பாரு, தோசைன்னு இங்கே கிடைப்பதெல்லாம் கடலை மாவு கலப்படம். ஆக சுத்தி பார்க்க போனால் தென்னிந்திய உணவகம்னு எதையாவது தேடி போய் சாப்பிடுவதை விட சப்பாத்தியும் ரொட்டியும் சாப்பிட பழகிக்கங்க! வீணா கடலை மாவு தோசை சாப்பிடத்தேவையில்லை!
டில்லியிலே இருந்தவரைக்கும் நாங்க சாப்பாட்டை அனுபவிச்சு எல்லா ஓட்டல்கள்ளயும் சாப்பிட்டு இருக்கோம். அப்ப கரோல்பாக்ல இருந்த ராமானுஜம் ஓட்டல், நம்ம ஊரு இட்லி, வடை தோசை கிடைக்கும்! இதபத்தி ஒரு தடவை ஆனந்த விகடன்ல வந்திச்சு! இந்த ஓட்டல் நடத்தினவங்க 1950 களில் டில்லி போனவங்க, அப்ப ஊருக்கு ஒதுக்குப்புறம்னு இருந்த கரோல்பாக் இப்ப டெல்லி செண்டர், அதாலே இன்னும் எத்தனை நாளைக்க்கு வெறும் தோசை சுட்டு குடுக்கிரதுன்னு எல்லாம் ரூமு கட்டி போட்டு லாட்ஜாக்கிட்டாங்க, வருமானம் அதிலே ஜாஸ்தி! அப்புறம் 'சாகர் ரத்னா'ன்னு இது ஒரு செயின் டில்லி புறநகர் எல்லா இடத்திலேயும் இருக்கு! நாங்க இருந்த வீட்டு பக்கமும் இருக்கு! பாதி வீட்ல மீதி ஓட்ல்லன்னு சனிக்கிழமைகளிலே வீட்ல வெண்பொங்கல் போட்டா சாம்பார் செய்ய சோம்பேறி பட்டுகிட்டு போய் வடையும் சாம்பாரும் வாங்கிட்டு வந்து சாப்பிட்டு கழிச்ச சனிக்கிழமைகள் அதிகம்!
பெரும்பாலும், மதியம் சாப்பிட 'ஆந்திர பவன்' என்ற ஆந்திரா ஸ்டேட் ஹவுஸ்ல இருக்கும் கேண்டினுக்கு போய் சாப்பிட்டு வருவது வழக்கம்! பருப்பு பொடி கோங்கரா ஊறுகாய் மிகவும் பிரசித்த பெற்ற ஒன்னு! அது போல வழக்கமா ஒவ்வொரு ஞாயித்துக்கிழமையிலும், எதவாது மல்டிபிளக்ஸ்ல சினிமா பார்த்திட்டு சாய்ந்திரம் 'நார்த் இண்டியன் கானா' அப்படின்னு சாப்பிட்டுட்டு வருவது மிகவும் பிடித்த ஒன்று!
வட இந்திய உணவுகள் அப்படின்னா, நொறுக்கு தீனியிலிருந்து ஆரம்பிக்கனும், டிக்கி, இது உருளைக்கிழங்கு மசிய வச்சி எண்ணெய்ல வாட்டி எடுப்பது! அப்பறம் கோல் கப்பே, அப்டீன்னா, பாணி பூரின்னு சாப்பிடுவோமே மெட்ராஸ்ல அது தான், இது மாதிரி நிறைய அயிட்டம் இருக்கு! நீங்க நார்த் இண்டியன் கல்யாணம் எதுக்கும் போனீங்கன்னா, நம்ம ஊரு மாதிரி முதல்ல சாப்பாட்டை போடமாட்டாங்க, இது மாதிரி நொறுக்குத் தீனி, அப்பறம் சாப்பாடு!
அப்புறம் கல்யாண சாப்பாடு தனி தான், என்ன தான் ஓட்டல்கள்ல சாப்பிட்டாலும், இந்த கல்யாணத்திலே போடற சாப்பாடு மாதிரி வராது! கல்யாணத்துக்குன்னு எப்படி தான் தனியா சமைப்பாங்களோ! ஒரு தடவை செல்வராகவன் இண்டர்வியூ கேட்டப்ப, நீங்க எப்ப சோனியா அகர்வாலை கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கன்னு கேட்டதுக்கு, எனக்கும் கல்யாணத்தில எல்லாம் ஆசை இருக்கு, எது இருக்கோ இல்லையோ, கல்யாணத்திலே நல்லா சாப்பாடு போடறாங்கன்னு சொல்லி பேட்டியை படிச்சேன்! அது மாதிரி நம்ம தமிழ்நாட்ல கல்யாண விருந்து சாப்பிடறது தனி தான் போங்க!
இப்படி எல்லாம் இருந்துட்டு வெளி நாடு போய், நம்ம சாப்பாட்டுக்குன்னு அலைஞ்ச கதை உண்டு! சிங்கப்பூர்ல இருந்த அஞ்சு நாளும் 'கோமள விலாஸ்'ல சாப்பிட்டு ஒரு உன்னதம் அடைஞ்சோம்! இதிலே ஒரு கூத்து என்னான்னா, இங்கே அமெரிக்கா வந்து கோமள விலாஸ் தேடி அலைஞ்ச கதை உண்டு! ஒரு தடவை, சான்ஃபிரான்ஸிஸ்கோ போறப்ப சேன் ஜோன்ஸ்ல இருக்கிற கோமள விலாஸை தேடி கண்டுபிடிச்சு சாப்பிட்டுட்டு வந்தோம். அப்புறம் நியூயார்க், கேட்கவே வேணாம், சரவண பவன்ல இருந்து , அத்தனை ஓட்டலும் போய் சாப்பிட்டு வந்தோம்!
இது ஒரு பக்கம்னா, இந்த ஊரு, 'கிளைம் ஜம்பர்'லருந்து, 'ஐ ஹாப்' வரைக்கும் அத்தனை செயினும் போய் சாப்பிட்டாச்சு! இந்த மெக்ஸிகோ உணவுகளை என் பொண்ணு ரொம்ப டீசண்டா 'லோஃபர் ப்ரட்ம்பா'! இத்தாலியன் பாச்ட்டாலருந்து பான் கேக்கு வரைக்கும் எல்லாமே சீஸ்! ஆக, அந்தந்த ஊருக்கு போய் அந்த அந்த உணவு சாப்பிட பழகிகிட்டா வம்பில்லை! ஆனா எல்லாமே மனுசன் சாப்பிடறது தான், அது பாருங்க எப்படி நாக்குக்கு நாக்கு ருசியாகுதுன்னு! இப்ப தான் என் சம்சாரம் இந்த 'ரேச்சல் ரே' தயாரிக்கும் இந்த ஊரு உணவு முறைகளை டீவியில பார்த்து செய்ய கத்துக்கிட்டிருங்காங்க! இன்னும் கொஞ்ச நாள்ல அந்த உணவுகள்ல என்னா, எப்படின்னு சாப்பிட்டுட்டு பார்த்து விட்டு பதிவு போடறேன்!
Friday, June 16, 2006
Subscribe to:
Post Comments (Atom)
46 comments:
சார்,
சூப்பர் பதிவு!!
புள் மீல்ஸ் சாபிட்ட மாதிரியிருக்குது.
மிக்க நன்றி.
ராமன் எத்தனை ராமனடி!
ராமன் எத்தனை ராமனடி!
ஆயிரம் சொல்லுங்க!
வீட்டு சாப்பாடு மாதிரி எதுவும் வராது!
இதெல்லாம் காசைக் குடுத்து வயுஇத்தைக் கெடுத்துக்கற கதை!
சாப்பாட்டுராமன் என்ற படம்தான் பின்னர் ராமன் எத்தனை ராமனடி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
ராமன் எத்தனை ராமனடி!
பாலக்கரை பரந்தாமன்!
படம் ஓட்டும் மூவிராமன்!
அரசியல் ராமன்!
அரிதார ராமன்!
உலகம்சுற்றும் ராமன்!
கவலை ராமன்!
காதல் ராமன்!
சாப்பாட்டு ராமன்!
சபாஷ் ராமன்!
எனக்குப் பிடிச்சதா ஒரு பதிவு போட்டதுக்கு நன்றி:-))))
ஆமாம், கோமளவிலாஸ் (சிங்கை) படம் எப்ப எடுத்தீங்க? ரொம்பப் பழசா இருக்கே.
இப்படியெல்லாம் எழுதி காலம் போன காலத்தில ஏங்க மனுஷனை உசுப்பேத்துறீங்க?
இப்படியெல்லாம் எழுதுனீங்கன்னா அப்புறம் நாம் முதல் முதல்ல குஸ்கா சாப்பிட்டதப் பத்தியெல்லாம் எழ்ழுதவேண்டி வரும்...பாத்துக்கங்க..
வெளிகண்ட நாதர்,
//இப்படி எல்லாம் இருந்துட்டு வெளி நாடு போய், நம்ம சாப்பாட்டுக்குன்னு அலைஞ்ச கதை உண்டு//
அய்யா, கடந்த 21 வருடங்களாக [கனடாவில்]நான் இன்னும் சாப்பாட்டுக்கு அலைஞ்சு கொண்டுதான் இருக்கிறேன். நான் மாமிச உணவுகள் உண்பதில்லை. நான் vegetarian. அதனால இந்த சைவ உணவுகளுக்காக நான் அலையும் அலைச்சல் ... ஆண்டவனுக்குத்தான் புரியும்.
// இப்ப தான் என் சம்சாரம் இந்த 'ரேச்சல் ரே' தயாரிக்கும் இந்த ஊரு உணவு முறைகளை டீவியில பார்த்து செய்ய கத்துக்கிட்டிருங்காங்க! இன்னும் கொஞ்ச நாள்ல அந்த உணவுகள்ல என்னா, எப்படின்னு சாப்பிட்டுட்டு பார்த்து விட்டு பதிவு போடறேன்!//
இப்படி வித விதமாய்ச் சாப்பிடுவதற்காகவாதல் நான் சீக்கிரம் கலியாணம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.:))
ஹூம்....(பெரூமூச்சு)
இப்படிக்கு,
இன்னும் ஒரு Mrs. சாப்பாட்டு ராமன்
வாங்க சிவபாலன் ஃபுல்மீல்ஸ் சாப்பிட்டாச்சினா, ஓகே தான்!
எஸ்கே, படம் பேரு சரியா சொல்லிட்டீங்க, இந்தாங்க புடிங்க ஆயிரம் பொற்காசுகள் -:)
நீங்க சொன்னது சரி தான் என்ன இருந்தாலும் வீட்டு சாப்பாடு மாதிரி வர்றாது தான்!
வருகைக்கு நன்றி சந்தர்! படம் பேரையும் சரியா சொல்லிட்டீங்க!
ஓ.. சித்தர் பாட்டு படிச்சு பாராட்டிப்புட்டீங்களா-:)
துளசி, நீங்களும் சாப்பாட்டு பிரியை தானா!(இது என்ன கேட்க வேண்டியிருக்கு, பார்த்தா தெரியல்லைங்கிறீங்களா-:))
கோமள விலாஸ் படம் நெட்ல இருந்து இறக்குனது! ஆமா, இப்பதான் கடையே மாத்தி வெளியிலே இருந்தாலூம் உள்ளே அப்படியே தானே இருக்கு! ஆமா, இன்னொரு அந்த ஃபாஸ்ட் புட் கடை மாதிரி இருக்கிற கோமள விலாஸ்ஸுக்கு போயிருக்கீங்களா??
தருமி சார், வாழ்க்கையிலே சாப்பாடு ஒரு முக்கியமான விஷயமில்லையா, எதை எதையோ, எழுதுறோம், அப்பறம் இதை எழுதலன்னா எப்படி-:) அப்பறம் நீங்க வெறும் குஸ்கா சாப்பிட்டீங்களா, இல்லை குஸ்காக்குள்ளே முட்டை சாப்பிட்டீங்களா? விவரமா தான் ஒரு பதிவு போடுங்களேன்!
//இப்படி வித விதமாய்ச் சாப்பிடுவதற்காகவாதல் நான் சீக்கிரம் கலியாணம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.:))// சீக்கிரம்ம் கல்யாண சாப்பாடு போடுங்க-:)
வாழ்த்துக்கள் Mrs. சாப்பாட்டு ராமன்!
நம்மல மாதிரி, நல்லா கவனிச்சிங்க!
உதயகுமார்,
ஃபாஸ்ட் ஃபுட்க்குப் பேர் 'கோமளாஸ்'
அங்கே காஃபி சரியில்லை. அதுவுமில்லாமல் பழைய ஸ்டைலில் சாப்புடறதுதான் நல்லா இருக்கு. பரிமாறுகிறவருக்கும் நமக்கும் இடையில் ஒரு அன்னியோன்னியம் வந்துருது பாருங்க.
'சூடா என்ன இருக்கு?'னு நாம் கேக்க, அவர் ஒரு பெரிய லிஸ்ட்டை ஒப்பிப்பாரு பாருங்க. அந்த ஒன் டு ஒன் டச் கோமளாஸ்லே இல்லையே (-:
:-) (attendance for a nice work, nothing much to say)
என்ன இவ்வளவு பெருசா பதிவு போட்டு இருக்கீங்க? இருங்க. ஒரு வாய் சாப்பிட்டு வந்து படிக்கறேன்.
விதவிதமான இடுகைகள் இடுவதுதவிர விதவிதமான சாப்பாடுகளும் பரிமாறி விட்டீர்களே! இதில் நான் இரசித்த வங்காள, கேரள உணவுகள் இல்லை. தில்லியில் எங்கள் அலுவலகம் அருகில் யூஎன் ஐ கேன்டீனுக்கு நான் அடிக்கடி செல்வேன். அவசர மதிய உணவுக்கும் பர்ஸுக்கும் நல்லது.
நீங்கள் சொன்ன மெயின் கோர்ஸ் எல்லாம் விட்டுவிட்டு நொறுக்ஸில் காலம் தள்ளும் இளைய தலைமுறையையும் கவர் செய்திருக்கலாம்.
வெளிகண்ட நாதர் சார்,
//அந்தந்த ஊருக்கு போய் அந்த அந்த உணவு சாப்பிட பழகிகிட்டா வம்பில்லை
Well said :-)
மெட்ராஸ்ல திருஅல்லிகேணி மெஸ்களை பத்தி ஒரு வரி சொல்லி இருக்கலாம். எப்ப மெட்ராஸ் போனாலும் அங்க போய் ஏதோ ஒரு மெஸ்ல சாப்பிடுவது வாடிக்கை. எதோ பழைய காலகட்டத்துக்கே போய்ட்டு வந்த மாதிரி இருக்கும்.
வாங்க நன்மனம், சாப்பாட்டை பத்தி ஒன்னும் சொல்லலியே, நல்லா இருந்ததா??
நீங்க சொல்றதும் சரி தான் துளசி, எதையும் கேட்டு, அவங்க பரிமாறி நம்ம சாப்பிடற சுகம் தனி தான்!
ஹலோ கொத்ஸ், நல்ல வயிறு புடைக்க சாப்பிடுங்க, ஒரு புடி புடிங்க! அடுத்த முறை கால்கரி வந்தா சொல்லுங்க, நம்ம சேர்ந்து சாப்பிடலாம்!
மணியன், சொல்லும்னு நினைச்சு விட்டுப்போனதிலே இந்த கேரள நேந்திரங்கா சிப்ஸ், அப்பறம் அவங்க சாப்பாட்டு ருசி அது தனி தான்! நான் ஒரு அஞ்சு வருஷம் எங்க ஹாஸ்டல் மெஸ்ல அனுபவச்சி சாப்பிட்டுருக்கேன், எங்க குக்குங்க எல்லாம் பாலக்காடு!
அப்புறம் யூஎன் ஐ கேன்டீனுக்கு நானும் போறதுண்டு எங்க பிடிஐ ஆபிஸ் போறப்ப!
நொறுக்குத் தீனியிலே காலம் தள்னவதான் நான், சொல்லனும் நினைச்சி நிறைய விட்டுட்ட்டேன் பாருங்க!
அடடா, இந்த திருவல்லிக்கேணி மெஸ்ங்களை விட்டுட்டேன் பார்த்தீங்களா, எவ்வளவோ மெஸ்ல சாப்பிட்டுறுப்பேன்! ரத்னா கபே போய் சாப்பிட்டதுண்டா???
வெளிகண்ட நாதர் சார்,
//ரத்னா கபே போய் சாப்பிட்டதுண்டா???
ரத்னா கபே சாம்பார் அண்டாவுல நீச்சல் அடிக்காத பேச்சிலர் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா ? :-)))))))
துளசியாக்கவிற்கு போட்டியா?
ஆகா.. நாக்குல நீர் ஊற வெச்சுட்டீங்களே!!
//என்ன தான் ஓட்டல்கள்ல சாப்பிட்டாலும், இந்த கல்யாணத்திலே போடற சாப்பாடு மாதிரி வராது!//
ரொம்ப சரி. ஆனா நம்ம கல்யாணத்துல சாப்பாட்டை ரசிச்சு சாப்பிடமுடியாம ஒரு வழி பண்ணிடுவாங்க.
//ஒரு தடவை, சான்ஃபிரான்ஸிஸ்கோ போறப்ப சேன் ஜோன்ஸ்ல இருக்கிற கோமள விலாஸை தேடி கண்டுபிடிச்சு சாப்பிட்டுட்டு வந்தோம்.//
இதெல்லாம் ரொம்ப சகஜம் இங்கே. ஆனா இப்போ கோமள விலாஸ் அவ்ளோ நல்லா இல்லை. மெக்சிகன் பொம்பளைங்க இடது கையால தொட்டுக்கோ தொடச்சிக்கோனு பரிமாறும்போது இன்னும் கொஞ்சம் போடுங்கனு கேக்கறதுக்கு கூச்சமா இருக்கு. அதைவிட சரவணபவன், உடுப்பினு எவ்வளவோ பெட்டர் சாய்ஸ் வந்தாச்சு.
நடு மத்தியான சாப்பாட்டு வேளையில இதைப்படிச்சு நல்ல பசி வந்துடுச்சு. நேரா சாப்பாட்டு டேபிள்க்கு தான் போகப்போறேன்!!
நாதர் இது அனுபவமாச்சே? ஏன் நகைச்சுவை/நையாண்டி என்று வகைபடுத்துனிங்க?
இரத்னா கபே பழசு காசி விநாயகமும் கற்பக விநாயகமும் புதுசு இங்க காசு கொடுத்து Token ன வாங்கிகிட்டு சாப்பிட கல்யாண பந்திய விட கூட்டம் அலைமோதுமில்ல? ஆனா எனக்கு புடிச்சது அம்பாள் மெஸ் தான்.
குறும்பன்,
//ஆனா எனக்கு புடிச்சது அம்பாள் மெஸ் தான்.
நீங்களும் அம்பாள் மெஸ் ரசிகரா ?. ஆகா.. வாங்க வந்து ஜோதில ஐக்கியம் ஆகுங்க.. எனக்கு உண்மையாவே சந்தோஷமா இருக்கு.. எப்ப கடைசியா போனீங்க.. அந்த ஓனர் புண்ணியவான் எப்படி இருக்குறார் ?.. அவங்க மதிய சாப்பாட்டுக்கே இன்னும் ஒரு மெஸ் ஆரம்பிச்சாங்க.. அது காசி வினாயகம் மெஸ்ஸ விட நல்லா இருக்கும்..
ஆஹா .. இப்படி சனிகிழமைல பழைய கொசுவத்திய சுத்தி விட்டுடீங்களே சார்.
இந்த படம் ரொம்ப பிடிச்ச படம் நாதர்.ஆனா கிளைமாக்ஸ் சோகமா வெச்சதுதான் பிடிக்கலை.மத்தபடி உங்க ஓட்டல்கள் எல்லாம் கலக்கல்.கோவையில் எந்த கல்லூரியில் படித்தீர்கள்?
மனசு, துளசிக்கு மட்டுமில்லை எல்லா சாப்பாட்டு ராமன்களுக்கும் போட்டி தான்!
வாங்க வெங்கட் ரமணி, //ரொம்ப சரி. ஆனா நம்ம கல்யாணத்துல சாப்பாட்டை ரசிச்சு சாப்பிடமுடியாம ஒரு வழி பண்ணிடுவாங்க.// நீங்க சாப்பிட தான் வேறே இருக்கே-:)
குறும்பன், நகைச்சுவையா, பல்சுவை சுவைச்சதை சொல்லலாமுன்னு தான்!
அம்பாள் மெஸ் கதை எதும் இருந்தா எடுத்து வுடுங்க!
செல்வன், நான் படிச்சது சிஐடி, நீங்க அந்த ஊர்ல தான் படிச்சீங்களா??
நாதர்,
என் சொந்த ஊரே கோயமுத்தூர்தானுங்க.சி.ஐ.டி பக்கம் தலை வெச்சும் படுத்ததில்லை.அதெல்லாம் நல்லா படிக்கறவங்க படிக்கற காலேஜு.நான் ஆர்ட்ஸ் மாணவன்
ஆண்டு பல ஆச்சு கார்த்திக், அவங்க புது மெஸ் ஆரம்பிச்சதெல்லாம் எனக்கு தெரியாது.
நாதர் சொல்ற அளவு பெரிய சங்கதி இல்லை.
வீட்டு சாப்பாடு மாதிரி இருக்கும், சொல்லப் போனா சென்னையில் எனக்கு அம்பாள் மெஸ் சாப்பாடு தான் ரொம்ப பிடிக்கும், அதனால வேறவழியில்லைன்னா தான் நான் வேற உணவத்துக்கு செல்வேன். என்னால பல பேர் அம்பாள் மெஸ் வாடிக்கையாளர்கள் ஆனார்கள். என்னை அம்பாள் மெஸ்சுக்கு ஆள் பிடிக்கும் தரகர் என்று நண்பர்கள் கேலி செய்வதுண்டு. :-))
எல்லாரோடும் அம்பாள் மெஸ் முதலாளி ரொம்ப நல்லா பழகுவார். உரிமையா பேசலாம். திருவல்லிக்கேணியில் இதை விட வேறு என்ன வேண்டும்?
//அதெல்லாம் நல்லா படிக்கறவங்க படிக்கற காலேஜு// அதெல்லாம் நாங்க படிக்கறப்ப இல்லை! பிஎஸ்ஜி தான் நல்லவங்க காலேஜ், பள்ளிக்கூடம் மாதிரி! ஆனா இப்ப சிஐடி கம்ப்ளீட்டா மாரிதை கேள்விப்பட்டேன்! இன்னொரு விஷயம் நாங்க படிக்கிறப்ப கோ எட் இல்லை!
அம்பாள் மெஸ் எங்க உள்ளது??
வார இறுதியில் இந்த வார நட்சத்திரமான உங்கள் வலைப்பக்கம் வந்து உங்கள் பதிவுகள், எனை ஆண்ட அரிதாரம் தொடர்கள் எல்லாவற்றையும் படித்தேன்.மிகவும் அருமையான தொடர், என்னையும் இந்த தொடர் ரசிகர்களில் சேர்த்துக்கொள்ளுங்கள்!.
கிண்டி பொறியியல் கல்லூரி மெஸ் டில்லி ஆந்திர பவன், சிங்கப்பூர் கோமள விலாஸ், என பல ருசியான நினைவலைகளை ஞாகப்படுத்திவிட்டீர்கள்.
கிண்டியில் M.E படித்தீர்களா ? Electronics Branch ? நான் 1985-1989 B.E, ECE Batch.
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
வாங்க ரவி, வருகைக்கு நன்றி, எனது இன்னொரு அரிதார தொடர் ரசிகர் கிடைச்சதிலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி! நான் கிண்டியில்ல படிச்சது 83-84,M.E, நீங்க படிச்ச துறை தான்!
சார்,
கல்லூரி சீனியரை இணயத்தில் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. நேரம் கிடக்கும்போது நம்ம வலைப்பக்கம் வந்து இந்த கிண்டி பதிவுகளைப் பாருங்கள்.
http://vssravi.blogspot.com/2006/02/blog-post_09.html
http://vssravi.blogspot.com/2006/03/blog-post.html
BTW, Could you send your e-mail address to me, vssravi@gmail.com
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
நாதர், கால்கரி மைசூர் பேலஸ் கொஞ்சம் தேறியிருக்கு.
இன்னிக்கு சாப்பிட்ட சிக்கன் செட்டிநாடும் ரசமும் பட்டைய கிளப்பிடிச்சி.
வீட்டுக்கு வாங்க நம்ம ஊர் சாப்பாடுகளை பரிமாறுகிறோம். குடும்பத்துடன் எங்களை சந்தித்தால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கும்
அம்பாள் மெஸ் திருவல்லிக்கேணி இந்து உயர் நிலைப்பள்ளிக்கு அருகில் உள்ளது.
Post a Comment