Saturday, June 10, 2006

Water-பிராமண விதவைகள்!!

இங்கே அமெரிக்காவிலே, இப்போ போடு போடுன்னு போட்டுக்கிட்டிருக்கிற ஒரு படம் 'வோட்டர்', அதாவது 'Water'. நான் தினம் வாக்கிங் போறப்ப தொடர்ந்து ஒரு மாசமா, ஒரு மல்டிபிளக்ஸ் சினிமா தியேட்டரை கடந்து போறப்ப, அடிக்கடி கண்ணுல படற போஸ்டர், இந்த தீபா மேத்தாவின் வோட்டர்! அட என்னடா நம்ம ஊரு ஹிந்திப் படம் இந்த ஊர்ல இவ்வளவு சக்கைப் போடு போடுதேன்னு ஆச்சிரியமா பார்த்துக்கிட்டு போவேன். ஒரு இரண்டு மாசம் முன்னமே இதை பார்த்துருந்தாலும், இதை பத்தி என்னமோ பதிவு போட மறந்து போச்சு, நேத்து வாக்கிங் போறப்ப பார்த்த போஸ்டரை பார்த்துட்டு , சரி நாளைக்கு பதிவெழுத சப்ஜெக்ட் கிடச்சிருச்சின்னு யோசிச்சுக்கிட்டே வந்தேன், அதான் இப்ப இந்த பதிவு!

இந்த படம் தீபா மேத்தாவோட 'நிலம், நீர், நெருப்பு'ன்னு 'Triology' series'ல வந்த மூணாவதுப் படம். நீங்க எத்தனை பேரு இந்த மூணு படத்தை பார்த்திருப்பீங்கன்னு எனக்கு தெரியாது. நான் மூணையும் பார்த்திருக்கேன். முதல்ல வந்த படம் நெருப்பு, அதான் 'Fire', இது இந்திய குடும்பங்கள்ல நடக்கும் லெஸ்பியன் கதை!(இதை வச்சி விவேக் காமெடி எல்லாம் பண்ணியிருக்கார்!) இந்த 'gay','lesbian' எல்லாம் நம்ம ஊரிலே புடிபடாத ஒன்னு! இதெப் பத்தி பேசினாலே உவ்வேம்பாங்க! ஏன்னா ஒரு 'social stigma', சமூகம் ஏத்துக்காத ஒன்னு! ஆனா வெளியிலே தான் அப்படி, நம்ம நாட்ல நிறையவே நடக்கிற ஒன்னு தான். இதுக்குன்னு வந்து கூடுற கும்பல மெரினா பீச்சிலே பார்த்தவங்க, பத்ரி மாதிரி ஆளுங்க, நிழலுகம் மாதிரி, இதை பத்தியும் நிறைய கதை எழுதலாம்! நான் மெட்ராஸ்ல தங்கியிருந்த 80 களில் இதபத்தி என்னோட மேன்ஸன்ல தங்கியிருந்த ரூம் மேட் தினம் ஒரு கதை சொல்வான்! அதுவும் கண்ணகி சிலை, எம்ஜிஆர், அண்ணா சமாதி பக்கம் அதிகமா நடக்கிற கூத்து! இதுக்கு வந்து உட்கார்ந்திருக்கிற, ஆளுபிடிக்க வரும் கும்பலை என் ரூம் மேட் கரெக்டா இனம் கண்டு சொல்லிடுவான், இது அந்த மாதிரி, நமக்கு மண்ணு, ஒரு எளவும் புரியாது, ஏதோ கும்பல்ல வர்ற ஒரு ஆள்ன்னு நினைக்கிறதோட சரி! எப்படிடா, இவன் மட்டும்னு சட்டுன்னு சொல்லிடறானேன்னு பார்த்தப்ப, ரொம்ப காலம் கழிச்சி விளங்குச்சு, அண்ணாத்தே அந்த கதை தான்னு! சரி இதை எதுக்கு சொல்றேன்னா, இது ஒன்னும் நம்ம ஊர்ல நடக்காத ஒன்னுல்லை, ஆனா இங்கே அமெரிக்காவில் வாழும் இந்திய குடும்பங்கள்ல, இந்த மாதிரி போய்ட்டா, குய்யோ முய்யோன்னு கத்துறவங்களுக்குன்னே ஒரு ஆதரவு அமைப்பு இருக்கு!அது சரி பொம்பளைங்குள்ள, நம்மூர் வீடுகள்ல இந்த லெஸ்பியன் கூத்து நடக்குது நல்லான்னு அடிச்சு சொன்னப் படம்! இதை எதிர்த்து சிவசேனா ஆளுங்க எக்கசக்கமா கத்தி போஸ்டரை கிழிச்சு ஆர்பாட்டம் எல்லாம் பண்ணாங்க, இந்த படம் வந்தப்ப பாம்பேயில்ல!

அடுத்து வந்த படம் பூமி, 'The Earth' அப்படின்னு, இது 'Ice Candy Man'ன்னு வந்த நாவல், அதாவது இந்திய பாகிஸ்தான் பிரிவனையின் போது நடந்த ஒரு கதை! ஒரு பார்ஸி குடும்பத்திலே வளரும் சின்ன பொண்ணின் தோழி, அந்த வீட்டு வேலைக்காரி, இந்து பெண், அப்ப ஐஸ் குச்சி விக்கும் ஒரு தள்ளு வண்டி வியாபாரி அவங்களோட நண்பர், அப்புறம் சைக்கிள்ல செண்ட், அத்தர் விக்கிற இன்னொரு ஆளும் அவங்களுக்கு தோஸ்த்து. ஐஸ் விக்கிறவன் வேலைக்காரியை காதலிப்பான், ஆனா அவ அத்தர் விக்கிறவனை காதலிப்பா, இந்த பிரிவினையின் போது எப்படி, இந்து முஸ்லீம் இனக்கலவரத்தாலே பலி ஆகிறான்னு சொல்லி வந்தப்படம், அவ்வளவா எந்த 'Controversy'யும் இல்லாம வந்து போன படம். இதுக்கு நம்ம ரஹமான் தான் ம்யூசிக். எல்லாம் பாட்டும் இந்த படத்திலே சூப்பர்!

அப்பறம் இந்த 'Triology'ல கடைசியா வந்த படம் தான் இந்த 'வோட்டர்'. இது 1938ல ஆங்கிலேய ஆட்சி நடக்கிறப்ப நடந்ததா வந்த கதை! அதுவும் விதவைகளை பத்தி. இந்தப் படம் ஒரு நாலு வருஷத்துக்கு முன்னே காசி பக்கம் எடுக்கிறதா வந்தாங்க, அப்ப இது இந்துக்களுக்கு எதிரா பிரச்சாரம் பண்ற படம்னு சொல்லி ஒரே அடிதடி, இந்த படத்திலே அப்ப, நம்ம அழகி படத்திலே நடிச்ச நந்திதா தாஸ்ஸும், சபனா ஆஸ்மியும் நடிக்கிரதா இருந்திச்சு. இதுக்குன்னு நந்திதாஸ் மொட்டை கிட்டை எல்லாம் போட்டுகிட்டு ரெடியா இருந்தப்ப தான் இந்த கூத்து எல்லாம்! அப்புறம் அதை அப்படியே ட்ராப் பண்ணிட்டு தீபா மேத்தா கனடா போய்ட்டாங்க! திரும்ப இந்த மொத்த படமும் இலங்கையிலே வச்சு எடுத்து வெளி வந்தது. இதில நடிச்சது நம்ம பூலான் தேவியா (இந்த பூலான் தேவி கதை நிறைய பேரு படிக்கில, நான் பதிவு போட்டு, வேணும்னா ஒரு எட்டு அப்படி கிளிக்கி போய் பார்த்துட்டு வந்துடுங்க!) நடிச்சிச்சே சீமா பிஸ்வாஸ், அப்புறம் கனடா அழகி லிஸா ரே நடிச்சு இப்ப வந்திருக்கு!

படக்கதை இது தான், அந்த காலத்திலே புருஷன் செத்துப்போனா இந்த விதவைக்கோலம் போட்டு மொட்டை அடிச்சி, வெள்ளை சேலை கட்டி, பக்கத்திலே இருக்கிற ஆசிரமத்திலே கொண்டி விட்டுடு வாங்கலாம். அப்படி ஆசிரமத்திலே கொண்டி விட்டா, சாகறவரைக்கும் ஆசிரமே கதின்னு இருக்கு வேண்டியது தான். இதிலே இன்னொரு கொடுமை என்னான்னா, ஆசிரமத்தை ஒட்டறத்துக்காக, பணம் வேண்டி, அங்க வர்ற இளம் விதவைகளை, அப்ப இருந்த ஜமீந்தார்களுக்கிட்ட அனுப்பி விபச்சாரம் பண்ணி, அதில் வரும் வருமானத்தை வச்சி ஆசிரமம் நடத்தறதா கதை வரும்! அதுவும் படத்திலே சின்ன வயசிலே கிழவனுக்கு கட்டி கொடுத்த ஒரு 10 வயசு பொண்ணு, அந்த கிழவன் செத்தோன, கைவளையல், எல்லாம் உடச்சி, மொட்டை அடிச்சி, வெள்ளை சேலைக்கட்டி, தனக்கு என்னா நடக்குதுன்னு தெரியாத பருவத்திலே அந்த மாதிரி கொண்டி ஆசிரமத்திலே விட்டுட்டு, அந்த பொண்ணையும் விபச்சாரத்திலே ஈடுபடுத்தி கடைசிலே காப்பாத்தி காந்தி ஆசிரமத்திலே கொண்டி விடறமாதிரி கதை! படம் எடுத்த விதமமென்னமோ ரொம்ப நல்லாதான் இருக்கு! படத்தின் சில காட்சிகள் உண்மையிலேயே, நடந்த அந்த சம்பங்களை பார்க்கும் போது கொடுமையா இருக்கு! ஆனா கடைசியிலே அது இன்னும் வழக்கிலே இருக்குன்னு சொல்லி கடைசியிலே டைட்டில் கார்டுல விளாவாரியா விளக்கிறது தான் இன்னும் புரியலை! அப்படி இன்னும் நடக்குதான்னு விவரம் தெரிஞ்சவங்க மேற் கொண்டு சொன்னா நல்லா இருக்கும்!

அவங்க சொல்ற கணக்குப்படி, 2001 கணக்கெடுப்படி, இன்னும் இந்தியாவிலே மூணரை கோடிக்கு மேலே விதவைகள் இருக்காங்க! அநேகம் பேரு, பொருளாதார, சமூக கலாச்சார பிடியில், இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னே வகுப்பட்ட மனு சாஸ்த்திரப்படி இன்னும் அதே நிலைமையிலே இருக்காங்கன்னு சொல்லி, பெரிய டைட்டில் கார்டு போட்டு சொல்றாங்க, அதுவும் இன்னும் இது அந்தணர் குலத்திலே அதிகம்னு சொல்லுது இந்தப்படம்! இது என்னா உண்மையான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்க! எனக்கு தெரிஞ்சு, சின்ன வயசிலே அங்கொண்ணும், இங்கொன்னுமா, சில ஐயர் வீடுகள்ல பார்த்திருக்கேன் சில பாட்டிமார்களை, மொட்டை அடிச்சி, ராமமோ, விபூதியோ பூசிக்கிட்டு, அதுவும் வெள்ளை சேலை எல்லாம் கட்டி பார்த்ததில்லை. அப்புறம் சினிமாவிலே காமடி பண்ற அந்த மாதிரி மாமிகளை பார்த்திருக்கிறேன். ஆனா இது என்னடான்னா இவ்வளவு பெரிய 'statistical data'வோட சொல்றாங்க இந்த படத்திலே! அதுவும் பிராமிண விதவைகள் தான் இப்படி கஷ்டபடறாங்கண்னு சொல்றாங்களே, அது எப்படி?

மற்ற சாதி சனங்கள்ல இது அதிகம் இல்லையே ஏன்? நம்ம படிக்கல்லையா, இல்ல பார்க்கலையா, இந்த விதவைக்கோலம் போடும் பெரும்பாலான அம்மாக்களுக்கு இடலி யாவாரம் பண்ணி பொழப்பை நடத்தி குடும்பத்தை பெரிசா கொண்டு வந்ததா சொல்றாங்களே. சேரன் கூட ஆனந்த விகடன்ல டூரிங் டாக்கிஸ்னு எழுதனப்ப, அவங்க பாட்டியை பத்தி சொல்றப்ப பெருமையா, சின்ன வயசிலே விதவையானலும், எல்லாத்தையும் வீரங்கொண்டு சமாளிச்சு, சமூகத்திலே தன் தாய் தந்தையரை முன்னேற்றி தன் குடும்பம் பெரிசா வந்ததுன்னு சொல்லி இருக்கிறாரே! ஏன் நானே என் விதவையான அத்தையின் வாழ்க்கையை பார்த்திருக்கிறேன். இந்த சமுதாயத்திலே நீச்சல் போட்டு வந்ததை! அதெப்படி இந்த படத்திலே காமிக்கிற மாதிரி விதவை கொடுமைகள் இன்னும் இருக்குன்னு சொல்றாங்க! அது தான் புரியல்லை?

அதுவும் எல்லாத்திலேயும் முன்னேற்றமா இருக்கும் இந்த பிராமண குலத்தில், இந்த விதவை விஷயத்திலே இப்படி பின்னோக்கி இருந்தாங்க, இப்ப இல்லேன்னாலும் அந்த காலத்திலே எப்படி இப்படி கொடுமை படுத்தினாங்க மனுசாஸ்த்திரம், ஆட்சாரம்னு சொல்லி, அது தான் புரியல்லை? பரவலா அப்ப இருந்த சதி ஏறுதல் அதிகம் மத்த இந்து குலங்களில் இருந்த ஒன்ன்னா? பிராமண குலத்தில் இந்த விதவைக்கோலம் பூளுவது எப்படி தொடர்ந்து இருந்து வந்தது. காந்தி சொன்ன விதவை மறுவாழ்வு புரட்சிகள் எல்லாம் என்னாச்சு? அதான் தெரியல்லை.

அதுவும் இந்த படம் பெரிசா அந்த 'exploited destitute women' பத்தி எடுத்ததா சொல்லி வரும் படங்கள் அவ்வளவா நல்ல இமேஜை கொடுக்கிறதில்லையே! ஆனா இந்த மாதிரி படம் இங்கே தொடர்ந்து ஒடுவது எனக்கு ரொம்ப ஆச்சிரியப்பட வச்ச ஒன்னு! நம்ம ஊர்ல வந்திருச்சான்னா இன்னும் எனக்கு தெரியாது! எக்னாமிக் பவர், பொருளதார வளர்ச்சியிலே பீறு நடை போட்டு வருது இந்தியா அப்படின்னு பெருமை பேசி வரும் இந்நாட்களில், அந்த கால சத்தியஜித் ரே படங்கள் மாதிரி ஏழ்மையை படம் புடிச்சி காட்டி வந்த மாதிரி, இந்த மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களை படம் புடிச்சி இப்படி புரெஜக்ட் பண்றதலே யாருக்கு என்னா லாபமுன்னு தெரியல்லை!

24 comments:

said...

நல்ல பதிவு வெளிகண்ட நாதர்,சில விஷயங்கள் எங்கும் இருக்கும் ஆனால் அதனை உரக்க பேசுவதை விரும்ப மாட்டார்கள்,குறிப்பாக இந்தியாவில் எனவே தான் எதிர்ப்புகள்.சில தவறுகள் இருட்டில் இருப்பதே நல்லது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்!

தீபா மேத்தா போன்ற NRI க்கு விவாதத்திற்குரிய வகையில் படம் எடுத்து பேர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு கொள்கை ரீதியான தாக்கங்கள் எல்லாம் இல்லை. வெளி நாட்டினர் இந்தியா வந்தால் வழக்கமாக டைடல் பார்க் போன்ற நவீனங்களை கணக்கில் எடுக்காமல் மறக்காமல் பிச்சை எடுக்கும் சிறுவன்/சிறுமி, ஏதேனும் சாமியார்,பாம்பாட்டி என தேடித் தேடி படம் எடுத்து போய் அவர்கள் ஊரில் இதான் இந்தியா எனக்காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.அவர்களை போன்றவர் தான் தீபா மேத்தா!

said...

நல்ல பதிவு வெளிகண்ட நாதர்,சில விஷயங்கள் எங்கும் இருக்கும் ஆனால் அதனை உரக்க பேசுவதை விரும்ப மாட்டார்கள்,குறிப்பாக இந்தியாவில் எனவே தான் எதிர்ப்புகள்.சில தவறுகள் இருட்டில் இருப்பதே நல்லது என்ற எண்ணமாகவும் இருக்கலாம்!

தீபா மேத்தா போன்ற NRI க்கு விவாதத்திற்குரிய வகையில் படம் எடுத்து பேர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் தவிர வேறு கொள்கை ரீதியான தாக்கங்கள் எல்லாம் இல்லை. வெளி நாட்டினர் இந்தியா வந்தால் வழக்கமாக டைடல் பார்க் போன்ற நவீனங்களை கணக்கில் எடுக்காமல் மறக்காமல் பிச்சை எடுக்கும் சிறுவன்/சிறுமி, ஏதேனும் சாமியார்,பாம்பாட்டி என தேடித் தேடி படம் எடுத்து போய் அவர்கள் ஊரில் இதான் இந்தியா எனக்காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.அவர்களை போன்றவர் தான் தீபா மேத்தா!

said...

உதயகுமார்,

நம்ம வவ்வால் சொன்னது சரிதான். நம்ம ஜனங்க வெளிநாடு போனால், அங்கெ இருக்கற
பெரிய பெரிய கட்டிடங்களையும், மத்த நல்ல சமாச்சாரத்தையும் பார்த்து 'ஆ'ன்னுட்டு வந்துருவோம்.
வெள்ளைக்காரங்களுக்கு, இந்தியான்னாவே ஒரு இளக்காரம் மனசுக்குள்ளெ (உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே)
இருக்கு.

இல்லேன்னா, நான் இங்கே வந்த புதுசுலே (அப்ப இங்கே ஏது அவ்வளோ இந்தியர்கள்) இந்தியாவுலே
'வறுமை ஜாஸ்தியாமே, சாப்பாடே இல்லையாமே'ன்னு கேட்டிருப்பாங்களா?

'என்னப் பார்த்தா அப்படியாத் தோணுது?' இது நான் கொடுத்த பதில்:-)))

வறுமை எங்கே இல்லை? அமெரிக்கா, இங்கிலாந்துலே எல்லாம் கார்டுபோர்டு பெட்டியிலே தூங்கற
ஜனங்க இல்லையா என்ன?

புகழ்பெற்ற போட்டோகிராஃபர்ங்க, அவுங்க படத்தையெல்லாம் புத்தகமாப் போட்டு யாவாரம் செய்யறாங்கள்ளெ.
அவுங்க போட்ட 'இந்தியா' புத்தகத்தை ஒருக்கா எடுத்துப் பாருங்க. எத்தையெல்லாம் போட்டுருக்காங்கன்னு.

இங்க நியூஸியிலே கூட அரசாங்கம் இவ்வளோ செய்யும்போதே, வீடு இல்லாம ரோடுலே தூங்கறவங்களும்
இருக்காங்கன்னு அப்பப்ப பேப்பருங்க சொல்லுது. ஸூப் கிச்சன்லே போய்ப் பாருங்க, தெரியும்!

said...

//வெளி நாட்டினர் இந்தியா வந்தால் வழக்கமாக டைடல் பார்க் போன்ற நவீனங்களை கணக்கில் எடுக்காமல் மறக்காமல் பிச்சை எடுக்கும் சிறுவன்/சிறுமி, ஏதேனும் சாமியார்,பாம்பாட்டி என தேடித் தேடி படம் எடுத்து போய் அவர்கள் ஊரில் இதான் இந்தியா எனக்காட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.அவர்களை போன்றவர் தான் தீபா மேத்தா! // இதைத் தான் நான் சொன்னேன் வவ்வால், பதிவின் கரு அது தான்! இப்படியும் புரெஜக்ட் பண்ணிக்கிட்டு ஒரு கும்பல் திரியறது தான் வருத்தமான ஒன்னு!

said...

வாங்க துளசி,

//'வறுமை ஜாஸ்தியாமே, சாப்பாடே இல்லையாமே'ன்னு கேட்டிருப்பாங்களா?

'என்னப் பார்த்தா அப்படியாத் தோணுது?' இது நான் கொடுத்த பதில்:-)))// சரியா அடிச்சீங்க போங்க:-))))

said...

அப்புறம், நீங்க சொன்ன மாதிரி பிச்சக்காரக்கூட்டம் இங்கே நிறைய இருக்கு! என்ன கெளரதையா கார்ட்போர்ட்ல எழுதி, அதுவும் ஸ்டைலா, 'Please help me, Hard time!'னு போட்டு பிச்சை எடுக்கிறவங்கள பார்க்கிறப்ப, நம்ம ஊர்ல, 'அய்யா சாமி உதவி பண்ணுங்க, கஷ்ட காலம்னு' சொல்லி பிச்சை எடுக்கிறவங்களை தான் நினைக்க தோணும்!

said...

இங்கே பிச்சையெடுக்கரதுக்கும் கெளரவப் பேர் இருக்கு. பஸ்கிங். இதுக்கு ஒரு 10 நாள் விழாவும் இருக்கு.
அடுத்த விழா 2007லே ஜனவரி 18 முதல் 28 வரை. உலக பஸ்கர்ஸ் ஃபெஸ்டிவல்.

said...

//எக்னாமிக் பவர், பொருளதார வளர்ச்சியிலே பீறு நடை போட்டு வருது இந்தியா அப்படின்னு பெருமை பேசி வரும் இந்நாட்களில், அந்த கால சத்தியஜித் ரே படங்கள் மாதிரி ஏழ்மையை படம் புடிச்சி காட்டி வந்த மாதிரி, இந்த மூட நம்பிக்கை, பழக்க வழக்கங்களை படம் புடிச்சி இப்படி புரெஜக்ட் பண்றதலே யாருக்கு என்னா லாபமுன்னு தெரியல்லை//

Water படம் குறித்த உங்கள் பிற கேள்விகளுக்கான முழுமையான பதில்கள் என்னிடம் இல்லை, ஆனால் நல்லதொரு பதிவை இப்படியா முடிக்கவேண்டும்? தீபா மேத்தாவின் Fire, Earth, Water மூன்று குறித்தும் எனக்குப் பெரிய அபிப்ராயம் ஏதும் இல்லை. ஆனால், சத்யஜித் ரே ஏழ்மையைப் படம்பிடித்துக் காட்டி பிரபலமடைந்தார் என்பது எனக்குத் தெரியவந்தவரையில், ஒரு பொத்தாம்பொதுவான, உண்மையற்ற குற்றச்சாட்டு, அவரது படங்களைப் பார்க்குமுன் ஒருகாலத்தில் இதையேதான் நானும் சொல்லிக்கொண்டிருந்தேன். இங்கே பட்டியலில் பார்த்துக்கொள்ளலாம். Apu Trilogy ஒன்றை மட்டும் வைத்து இப்படிச் சொல்வது சரியல்ல என்று நினைக்கிறேன், அதுவும்கூட வறுமையைப் படம்பிடித்துக் காட்டும் படமல்ல - வலைப்பதிவுகளில் எனில் இங்கே பார்க்கவும்.

மேலே நான் மேற்கோள் காட்டியிருக்கும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமெனில், இந்நூற்றாண்டின் மத்தியில் வந்த பாஸோலினியின் Gospel according to St. Matthew என்ற அற்புதமான படத்தைக் கருத்தில் கொள்ளாது ஒதுக்கிவிட்டு, சமீபத்தைய மெல் கிப்ஸனின் அரைவேக்காட்டுத்தனமான Passion of The Christஐ கிறிஸ்துவத்தை விளக்கும் ஒரு அற்புதமான உதாரணமாக ஏற்றுக்கொள்ளவேண்டும். கிறிஸ்து சிலுவையில் வலி அனுபவித்தார், அதனால் அவரை வழிபட்டாகவேண்டுமென்று மறைமுகமாக Christian rightக்கு அழைப்பு விடுத்து வலிக்கேற்றபடி வழிபாட்டை வேண்டும் consumerist மெல் கிப்சனின் படத்தை ஆகர்ஷித்துக்கொண்டு, அதேநேரத்தில், ஒரு சாதாரணத் தச்சனாகத் திரிந்து உய்விப்புக்குத் தன்னாலியன்ற வழியைச் சொல்லிச் சென்ற கிறிஸ்துவின், சிலுவையிலிருந்து கழற்றப்பட்டு சிம்மாசனத்தில் அறையப்பட்டிருந்த கிறிஸ்துவை விடுவித்து அவரது வாழ்க்கையை பிரச்சாரமின்றி, அனைத்துக்கும் மேலாய் நம்பிக்கைத் திணிப்பின்றி, ஒரு நடுநிலையாளனின் பார்வையில் இன்னும் அதிக வீச்சுடன் கூறும் Gospel according to St.Matthewவை ஒதுக்கித் தள்ளவேண்டுமென்று யோசிப்பதே வெகு அசௌகரியமாகத்தான் படுகிறது. கிறிஸ்து அமரவைக்கப்பட்டிருந்த பீடத்தின் கூசவைக்கும் ஒளியிலிருந்து அவரை அகற்றி, பிறருக்காகச் சிந்தித்த ஒரு சாதாரண மனிதராக அவரைச் சித்தரித்துக் காட்டிய இப் படத்தையும் கிறிஸ்துவர்கள் ஒதுக்கித் தள்ளிவிடவேண்டுமா அப்போது?

வெளிநாட்டு ஊடகங்கள் நமது ஏழ்மையைக்குறித்து ஒரு கீழ்த்தரமான பார்வையை வைத்திருப்பதை ஒத்துக்கொள்கிறேன் - அதேசமயம் வெளிநாட்டின் morality issues, family values குறித்து நமது கோணத்திலான ஒரு கீழ்த்தரமான பார்வையும், வெளிநாட்டில் வாழ்ந்து பார்த்திராத நமது ஜனங்களுக்கு இருக்கிறதா இல்லையா?

மற்றப்படி, திரைப்படங்களில் இப்படி project செய்யப்படுவதால் இமேஜ் போய்விடுமென்று நினைத்தால், Sweet Sweetback's Baadasssss Song போன்ற படங்கள் அமெரிக்காவின் இமேஜையும், கலிகுலா போன்ற படங்கள் இத்தாலியின் இமேஜையும் ரிப்பேர் செய்திருக்கவேண்டுமே? ;-)

said...

சன்னாசி, சத்யஜிரே படங்களின் மீது எனக்கு ஒரு தனி அபிமானம் இருக்கிறது, ஆனால் பொதுவாக வைக்கப்படும் குற்றச்சாட்டு, அவர் அதிகம் இந்தியாவின் ஏழ்மையை படம் பிடித்துக் காட்டினார் என்று. அக்காலகட்டங்களில் அது உண்மையும் கூட, ஆனால் வளர்ந்து வரும் இன்றைய காலகட்டங்களில், அதுவும் வல்லரசு தன்மை அடைய விரும்பும் இப்பொழுதிலே, இது போன்ற மூட நம்பிக்கை பழக்க வழக்கங்கள் இன்னும் நிலவுவது போல சித்திரிப்பதை தான் கூறினேன்! அதுவும் வெளி நாட்டவரின் கண்ணேட்டம் என்றால் கூட ஒத்துக் கொள்ள வேண்டிய ஒன்று, ஏனென்றால் அவருக்கு நம் மாறி வரும் சமுதாய மாற்றங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, ஆனால் நம் ஊரிலே பிரந்து வளர்ந்து, தொழில்நுட்பம் அதிகம் கற்று, மாறி வரும் மூட நம்பிக்கைகள் இன்னும் இருப்பது போல பறைசாற்றி கொள்ளும் இந்திய வம்சாவழியினர் இங்கே குடி புகுந்து இது போன்ற ஒரு இமேஜை புரெஜ்க்ட் செய்வது யாருக்கு லாபம் என்று தான் வினா கொண்டேன்!

மேற்கோண்டு, நீங்கள் கூறியது போல, இது போன்ற படங்களால் நாம் பாதிப்பு அடையப் போவதில்லை! அதே போல் இப்பொழுது உலகமெங்கும் வியாபித்து இருக்கும் நம்மால், இவர்களின் கலாச்சாரத்தை அருகில் இருந்து பார்க்கும் பொழுது நீங்கள் கூறிய 'morality issues, family values' போன்றவற்றின் எண்ணங்கள் மாறி வரத்தான் செய்கிறது! அது முற்றிலும் மாற சில காலம் பிடிக்கலாம். இந்த உலகமயமாக்கலில் cross culture breeds என்ற புது கொள்கை வளர்ந்து அந்தந்த நல்லொழுக்கங்களை பின்பற்றும் மக்களின் மனபோக்க்கு மாற அதிக நாட்கள் ஆக போவதில்லை என்பதே என் கருத்து!

இந்த் கலிகுலா சரித்திரம் பழமையானது, பழமை பேசி எதுவும் பாழாவதில்லை! மேற்கொண்டு இது ஒரு கிளுகிளுப்பான சரித்திரம்! இதை பற்றி கமலஹாசன் எழுதிய டைரி குறிப்புபடிக்க சுவாரசியமானது!

said...

//இதை பற்றி கமலஹாசன் எழுதிய டைரி குறிப்புபடிக்க சுவாரசியமானது!// சுட்டி சரியாக வரவில்லை, இதோ அந்த டைரி குறிப்பு

said...

EARTH படத்தைப் பற்றிய எனது கருத்து இங்கே.

said...

நல்ல பதிவு.

வெளிநாட்டினருக்கு மட்டுமல்ல நமக்கும் நம்மை நமே மட்டம் தட்டி பேசிகொள்வதில் அவ்வளவு பெருமை. (எத்தனை இந்தியன் ஜோக்ஸ், இந்திய அரசியல்வாதி ஜோக்ஸ்)

said...

//
இந்த லெஸ்பியன் கூத்து நடக்குது நல்லான்னு அடிச்சு சொன்னப் படம்! இதை எதிர்த்து சிவசேனா ஆளுங்க எக்கசக்கமா கத்தி போஸ்டரை கிழிச்சு ஆர்பாட்டம் எல்லாம் பண்ணாங்க, இந்த படம் வந்தப்ப பாம்பேயில்ல!
//

வெ. நா,
உண்மைதான் அடிச்சு சொன்ன படம் தான்...அதை எதிர்த்திருக்கக் கூடாது என்று சொல்வதைவிட நாகரீகமாக எதிர்ப்பைக் காட்டிவிட்டு (Token protest!!) நிறுத்திக் கொண்டிருந்தால் ஓ. சி. பப்ளிசிட்டியாவது கிடைக்காமல் போயிருக்கும்.

அதை ஏன் அந்த லெஸ்பியன்களில் சீதா என்று பெயர் வைக்கவேண்டும் என்பது விளங்காத ஒன்று...!!

//
ஆனா கடைசியிலே அது இன்னும் வழக்கிலே இருக்குன்னு சொல்லி கடைசியிலே டைட்டில் கார்டுல விளாவாரியா விளக்கிறது தான் இன்னும் புரியலை! அப்படி இன்னும் நடக்குதான்னு விவரம் தெரிஞ்சவங்க மேற் கொண்டு சொன்னா நல்லா இருக்கும்!
//

வாட்டர் கொஞ்சம் ஓவர்...அந்த அம்மணி என்ன தான் மனசுல நெனச்சிகிட்டு இருக்குன்னு தெரியல்ல...அவர் செய்வது, சொல்வது எல்லாமே, ஏதோ வெளி நாடுகளில் நிலவும் Stereotypes களை நிலைநிறுத்துவது போல் தெரிகிறது...Caste, cows and curry, Sati, Widows...etc., 55 ஆண்டுகளுகு முன்னால் இந்த படம் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...இன்று அதில் சொல்லிக் கொள்ளும் படியாக ஒன்றுமில்லை. மனு தர்மம் மன்னர் ஆட்சிகாலத்திலேயே, குறிப்பிட்ட பகுதியில் தான் கடைபிடிக்கப் பட்டது...இந்தியா முழுவதுமல்ல...தீபா மேத்தா அது ஏதோ இந்தியர்களின் மதப் புத்தகம் போல் காட்டுவதும், முதலிலும் கடைசியிலும் விளக்கங்கள் கொடுப்பதும், மஹா அபத்தம்...!

இந்த நிலையில் அவர் எண்ணத்தைக் கேள்விக்குட்படுத்தாமல் இருக்க முடியவில்லை!!

said...

தருமி, உங்க விமரிசனத்தை பார்த்தேன்! இந்த படம் படமாக்கப்பட்ட விதம் நன்றாகவே இருந்தது! மணிரத்னத்தின் 'Buildup' பக்கா கமர்சியல்! ஆனா தீபா மேத்தா படங்கள் வேறு 'Genre', வேறே ரகம், முரட்டுத்தனம் 'Earth'ல ஜாஸ்தின்னு, அது நடந்த களம் அப்படி! விந்திய சாத்பூர மலைகளுக்கு அப்பால், எல்லாமே பயங்கரமான முரடுத்தனம் கொண்டது. அங்க இருந்து, பழகினவங்கிற முறையிலே எனக்குத் தெரியும்! அந்த பாரசீக முஸ்லீம் ரத்த பரம்பரைகள், முரட்டுத்த்னம் ஜாஸ்தி தான்! அதுவும் இந்து முஸ்லீம் பஞ்சாபிகளுக்கே உண்டான ஒரு சுபாவம். கதை நடந்த களம் அந்த பகுதிங்கறதாலே உங்களுக்கு முரட்டுத்த்னம் தெரிஞ்சிருக்கு! ஆனா முரட்டுதனத்தை அழகா படம் பிடிச்சு காமிச்சதுலே, அந்த கோரதாண்டவமாடி வர்ற ரயில் காட்சிகள், இப்பவும் என் கண்ணுல நிக்குது!

ஆமா 'water' நம்ம ஊர்ங்கல்ல வந்திடுச்சா, நீங்கெல்லாம் பார்த்திட்டீங்களா, அதை பத்தி ஒன்னும் சொல்லலியே!

//யாரை அப்படி சொன்னேன் என்று அறிய ஆசையா? என் அடுத்த வலைப்பதிவுக்குக் காத்திருங்கள், சரியா.// தருமி சஸ்பென்ஸை எப்பவாது உடச்சீங்களா?
படிக்கனும்னா உங்க பழசை எல்லாம் நோண்டனும்! நேரமில்லை

ஒரு மாசம் லீவு போட்டுட்டு உங்க எல்லா பதிவையும் பார்க்கணும்-:)

said...

இந்தியா பிச்சைக்கார நாடு என்று சொல்லி காசு தேத்தும் இம்மாதிரி படங்களை வெளிநாட்டில் வாழும் இந்தியர் அனைவரும் புறக்கணிக்க வேண்டும்.

said...

வாங்க மனசு, நீங்க சொல்றது வாஸ்தவம் தான்! முதல்ல நம்மை நாமே மதிக்க கத்துக்கணும், ம்.. எங்கே, எப்படா அடுத்தவன் காலே புடுங்கலாம்னு தானே இருக்கிறோம் !

said...

ஷங்கர், பெரும்பாலும் இப்படி மோசமான படங்களுக்கு பப்ளிசிட்டி கொடுக்கிறதாலே தான், இந்த மாதிரி படமெல்லாம் பிச்சிக்கிட்டு போகுது! எனெக்கென்னாமா இது 'organised promotional efforts'னு தான் தோணுது! இந்த மனீஷா கொய்ராலா நடிச்ச ஒரு சின்னபையன் பார்க்கிற அந்த 'peep show' படம் ஒன்னு வந்துச்சே, அதுவும் இதே மாதிரி கதை தான்!

தீபா மேத்தா, மீரா நய்யர் இவெங்கெல்லாம் இப்படி எடுத்து பேர் வாங்கன கும்பல் தானே!

said...

Water is an epic film that depicts first quater of 20th century. Whatever the director's intention and ability are she has all her rights to make a movie of an era. When Amir Khan acted as Mangal Pande or as a rural cricket player in the British Raj people, who cry for water did not seem having any problem. Where did Mehta go wrong? With her theme? She was forced to give the production after her initial attempt to film Water with Shabana and Nandita was destroyed (literarilly the shot film negatives), and Varanashi was out of place.

Almost after ten years she went to Sri Lanka to film it from the beginning with new adult actresses, who do not have the political picky bag like Shabana, and a little Sri Lankan girl. It's irony that here we're boasting ourselves about our advancement in time that supposed to give us the courage to oppose her film, while Mehta had to face the uncivilized way of life in India to express herself. Pathetic.

said...

செல்வன், ரொம்ப உணர்ச்சி வசமாயிட்டீங்க!

said...

ஜீலியன், நீங்க சொல்ற அந்த 'protest'க்கு அரசியல் சாயம் இருந்தது தப்பு தான்! அப்படி ரொம்பவும் 'fundamental'ஆ போயிருக்க கூடாது தான். பட், இன்னைக்கு நடைமுறையிலே இல்லாத ஒன்னை, statistical evidence' வோட ஞாயபடுத்தி, அந்த மாதிரி மூட நம்பிக்கையில இருந்து இன்னும் நாமே வெளி வரலைன்னு புரெஜ்க்ட் பண்றது தப்பு தானே! இந்த 'டாவின்ஸி கோட்'ல வர்ற் மாதிரி, ஏசுவை சிலுவையிலே அறைஞ்சு துன்புறத்தின தாலே, அது மாதிரி துன்பறுத்தி மதம் வளர்க்க இன்னும் பாடு படறங்க இங்கேன்னு பட எடுக்கிலயே, எல்லாமே 'fiction'ங்கிர கதையாயிடுதே! ஆனா நம்ம இதெல்லாம் உண்மைகள் இன்னும் சுட்டுக்கிட்டு இருக்குன்னு சொல்றது தான் தப்புன்னு சொல்ல வர்றேன்! சும்மா 'fictious'ஆ 'epic stories' எடுத்துவிட்டா இவெங்களை யாரு என்ன கேட்கப் போறா??

said...

வெளிகண்ட நாதர், இது ஒரு export quality படம் என்று தான் நானும் நினைக்கிறேன். purely exploitative. இந்தியாவைப் பற்றிய மோசமான செய்திகளைச் சொல்வதில் தவறில்லை - அது முக்கியமும் கூட. இருப்பினும் இத்தகைய ஒரு fringe தகவலை எடுத்துக் கொண்டு, அதை மைய நீரோட்டம் போல் சித்தரிப்பதில், exploitation தவிர வேறில்லை.

said...

வெளிகண்ட நாதர்,

இத்திரைப்படங்கள் பற்றிய தகவல்களுக்கு நண்றி.
நான் இவற்றை பார்த்ததில்லை என்றாலும் பின்னூட்டங்களில் காணும் உபரித் தகவல்களைக்கொண்டு இயக்குநரின் இறையாண்மை மீது சந்தேகம் வருகிறது. மேலும் இவர் போன்றவர்கள் சிறிதளவேனும் தங்களை ஆத்ம பரிசோதனைக்கு உட்படுத்தியிருபார்களளா என்று கேட்க்கத் தோன்றுகிறது. J.கிருஷ்ணமூர்த்திக்கும் சமூக சேவகிக்கும் இடையே நடந்த உரையாடல் நினைவுக்கு வருகிறது.

சுட்டி இங்கே.

உரையாடலின் சாரம் கீழே:
ஜே.கே: நான் உங்கள் சங்கத்தில் சேர்வது இருக்கட்டும். நீங்கள் ஏன் பசுவதைக்காக போராட வேண்டும் என்று நினைத்தீர்கள்?
ச.சே: உண்மையைச் சொல்கிறேன். எனக்கு மாற்றங்ககளை ஏற்படுத்தியவர் என்று பெயர் எடுக்க வேண்டும்.
ஜே.கே: அப்படியானால், உங்களுடைய உண்மையான நோக்கம், பிராணிகளுக்கு உதவுவதில்லைதானே?. வண்டிக்காரன் மாடுகளை துன்புறுத்தி பொருளீட்டுகிறான். நீங்கள் அதையே உள் அர்த்ததோடும் சூழ்ச்சியாகவும் செய்கிறீர்கள்.

said...

ஒரு மாசம் லீவு போட்டுட்டு உங்க எல்லா பதிவையும் பார்க்கணும்-:) //
படிக்க அவ்வளவு கஷ்டமான விஷயம் அப்டிங்கிறீங்க :((
அது 9வது பதிவு. அடுத்தது இந்த பத்தாம் பதிவு. படிச்சுப் பாருங்க Suspense ஒடஞ்சிட்டுப் போகுது!!

said...

Good My friend.,

Why Deepa mehta is showing only negative things., i want to comment on FIRE ., you know lesbianism is there everywhere infact deep mehta will open her bed room doors when she live with her hubby.., certtainly no.., like that she should not expose what has to keep secret