Wednesday, June 14, 2006

எனது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம்!

என்னென்னமோ எழுதியாச்சு, பயணக்கட்டுரை எழுதிலயேன்னு எப்பவும் ஒரு ஏக்கம் இருந்திச்சு, இதோ, கொஞ்சம் எழுதலாமுன்னு உட்கார்ந்தா, எதப்பத்தி எழுதறதுன்னு பார்க்கிறப்ப, சரி நம்ம போய் வந்த ஆஸ்திரேலியா, நியுசிலாந்து பத்தி எழுதுவோம்னு தோணுச்சி! அதுக்கு கொஞ்சம் காரணமும் இருக்கு, ஏன்னா நியுசிலாந்து பத்தி உங்களுக்கு நிறையா சரித்திரம் சொல்லி பாடம் கத்துக்கொடுக்கிற டீச்சர் தமிழ்மணத்திலே இருக்கிறதால, அது கொஞ்சம் உங்களுக்கு பரிச்சியமா இருக்குங்கிறதாலே, சரி அதை எடுத்துக்குவோம்னு இந்த டூரைப் புடிச்சேன்!

பொதுவா இந்த டூர் போறது எங்க வீட்ல, என் மனைவி, மகளுக்கு ரொம்ப புடிச்ச ஒன்னு! நான் டில்லியிலே இருந்த சமயத்திலே, ஒரு மூணு மாசத்துக்கு அப்புறம் எங்கேயாவது டூர் போறது பெரும்பாலும் எங்க வழக்கம்! அதுவும் டில்லி சரியான இடம், ஏன்னா எல்லாத்துக்கும் சென்டர்! வடக்காலே நீங்க இமயமலை அடிவாரம் போகணும்னாலும் சரி, மேற்காலே ராஜஸ்த்தான் பாலைவனம் போறதா இருந்தாலும் சரி, கிழக்காலே காசி, இலகாபாத்ன்னு புண்ணிய தரிசனம் பண்ண போகனாலும் சரி, இல்லே தெக்காலே, தாஜ்மஹால், அஜந்தா, எல்லோரா சிற்பங்கள் பார்க்க போகனாலும் சரி போய்ட்டு வந்திடலாம்! நாங்க இந்த எல்லா இடத்துக்கும் போய் வந்தவங்க!

சரி உள்நாடு சுத்தி பார்த்து போரடிச்சு போச்சுன்னு, வெளி நாடு போகலாமுன்னு போனது தான் இந்த ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பயணம். நான் முதல்ல வேலை பார்த்த கம்பெனியிலே சேரும் போது, அந்த HRல எல்லா பேப்பரையும் கை எழுத்து வாங்கிக்கிட்டு இருந்த ஒரு அம்மாக்கிட்ட, ஆமா இந்த கம்பெனியிலே 'பாரத் தர்ஷன்' போக எல்லாம் வழி இருக்கான்னு கேட்டுட்டேன்! ஏன்னா அதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த மத்திய அரசாங்க நிறுவனத்திலே, அந்த மாதிரி ஒன்னு இருந்திச்சு, அதான் LTC ன்னு சொல்றது! அந்த அம்மா சிரிசிக்கிட்டே, பக்கத்திலே இருந்தவருக்கிட்டே, இதப்பாருடா, புது சேரவந்தவரு 'பாரத் தர்ஷன்' போக முடியுமான்னு கேட்கிறாரு சொல்லி சிரிச்ச கதை இப்ப நினைச்சாலும் சிரிப்பா வருது!

எங்க வெளி நாட்டு பயணம் 15 நாளைக்குன்னு சரியா ரூட்டெல்லாம் போட்டு திட்டமிட்டு பண்ணுனது நானே தான், வேறே டிராவல் ஏஜண்ட் யாருமில்லை! அப்பவும் எல்லாத்துக்கும் இந்த இணையம் தான் கை கொடுத்தது! எல்லாமே உட்கார்ந்த இடத்திலே இருந்து முடிக்கிற விஷயம். அதே மாதிரி ஏர் டிக்கெட்டுக்கும், பக்கத்து காம்பிளக்ஸ்ல இருந்த டிராவல் ஏஜண்ட்டை பாடா படுத்தி டிக்கெட்டும் ரொம்ப மலிவா வாங்கியாச்சு. இந்த பயணம் நான் ஒரு இரண்டு வருஷம் முன்னே இந்தியாவிலே இருந்து போனது! அப்புறம் போனா எங்க தங்கறதுன்னு யோசிச்சப்ப, இந்த ஹோட்டல் எல்லாம் கட்டுபட்டு வராதுன்னு நினைச்சப்ப, நமக்கு கைக்கொடுத்தது 'YWCA', 'YMCA' தான்! பொதுவா வெளி நாட்ல, அதுவும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகள்ல எல்லா பெரிய ஊர்லயும் இது இருக்கு! இங்கே தேடி கண்டுபிடிச்சு போய் தங்கினீங்கன்ன மலிவு, இந்த தந்திரம் எங்கிட்ட கேட்டு வாங்கிங்க,ரொம்ப கைக்கொடுக்கும்! சரி அதில போய் தங்கினாலும் செலவாகுமுன்னு, வேறே என்ன வழின்னு பார்த்தா, இந்த கேம்பர்வேன், அதாவது நீங்க கேள்விபட்டிருப்பீங்களே, நடிகர் நடிகைகள், படுத்து தூங்க, மேக்கப் போடன்னு அவங்களுக்கும்னு ஒரு தனி வேன் இருக்கும் இல்லே, அது தான், அத்தனை வசதிகளோட படுத்து, தூங்கி குளிச்சு, எல்லாம் பண்ண வேன்னு குள்ளேயே வசதி இருக்கும்! அப்புறம் அதை நீங்களே ஓட்டி எல்லா இடத்தையும் சுத்தி பார்த்திடலாம்! அதிலே போய் தங்கிக்கிட்ட இந்த வண்டி சத்தம் மிச்சம், தங்கிறதுக்கும் செலவில்லைங்கிற கதையாயிடும்!

அப்படி கேம்பர்வேன் வாடகைக்கு கொடுக்கிற கம்பெனி நியூசிலாந்திலே 'Brit' இல்லே, 'Maui' ன்னு இருக்கு, அதை இணையத்திலே தேடிபுடிச்சி புக் பண்ணியாச்சு, வாடகை செலவு ஜாஸ்தி இல்லை, இன்ஸ்யீரன்ஸ் எல்லாம் சேர்த்து ஒரு 7-8 நாளைக்கு 1000 நியூசிலாந்து டாலர்குள்ள வந்திடும், அதுக்கு சீசனுக்குன்னு போனா கொஞ்சம் வாடகை ஜாஸ்தி, நாங்க போனது குளிர்காலம் தான், அதாவது கடுங்குளிர் குறஞ்சிருந்த நேரம், செப்டம்பர்ல, வாடகை கம்மி தான் (டீச்சர் கிட்ட பாடம் படிச்சீங்களா, சீதோஷ்ண நிலை, நம்ம ஊருக்கும், அங்கேக்கும் உல்ட்டான்னு! நமக்கு கோடைன்னா, அங்க குளிர், தெரியுமில்லை!) ஆக இப்படி போட்ட திட்டத்தோட பயணம் ஆரம்பமாச்சு!

முதல்ல சிங்கப்பூர், வழியிலே நின்னு போகணும், பிறகு நேரா சிட்னி! ஆகா, என்ன அழகான ஊரு தெரியுமா, ஏர்போர்ட்டு விட்டு வந்தோன்ன ஒரு சில்லு காத்து உடம்பை கிழிக்கும்! இந்த சிட்னியை நிறைய படத்திலே பார்த்திருப்பீங்க, சமீபத்திலே வந்த படம் திருட்டுபயலே, மெல்போர்ன்ல எடுத்தது, கிட்ட திட்ட அப்படி தான் இருக்கும்! இல்லேன்னா, 'சலாம் நம்ஸ்த்தே' ஒரு ஹிந்திப்படம் வந்ததுல்ல, அதை போய் பாருங்க, ஏன் நம்ம ஷங்கர் இந்தியன் எடுத்தாருல்ல, டெலிபோன் மணி பாட்டு, அது முழுக்க சிட்னியிலே எடுத்தது தான்! இங்கே பார்க்க வேண்டியது 'சிட்னி பிரிட்ஜ்' 'ஓப்ரா டவர்' அப்புறம் கடலை சுத்தி குரூஸ் போய் அழகா கட்டி போட்டுறக்க வீடுகள்! அப்புறம் சிட்டியில்லே நீங்க நடந்து ஜாலியா பார்த்துக்கிட்டே போகாலாம்! அதுவும் பொம்பளங்க மார்லருந்து கீழே நழுவி எப்ப விழும்ங்கிற மாதிரி போட்டுக்கிட்டு போற ஃபிராக், கவுன் அழகிகள் அதிகம்!

சிட்னில இருந்து புறப்பட்டு நேரே 'க்ரைஸ்ட்சர்ச்' போய் இறங்கியாச்சு! ஒரே குளிர்! ராத்திரி YMCAல தங்கிட்டு காலையிலே 'Brit' கடைக்கு போய் நம்ம கேம்பர் வேன்னை வாடகைக்கு எடுத்தாச்சு! வழக்கம்ப்போல எது வண்டில எங்க இருக்குன்னு சொல்லிக்கொடுக்க ஒரு பொண்ணு வந்தா, கேஸ் சிலண்டர் இருந்ததாலே சமச்சுக்கலாம், ஓவன் வச்ச சமயல் செய்ய குக்கிங் ரேஞ், பாத்ரூம் படுக்கை, சோபா எல்லாம் சொல்லி கொடுத்துட்டு கடைசிலே கீழே இறங்கி தண்ணி எப்படி ரொப்பரது, அப்புறம் சூவெஜ் எப்படி ட்ரைன் பண்றதுன்னு விலாவாரியா சொல்லிக் கொடுத்தா! எல்லாம் சரி, செஞ்சுப்புடலாம், ஆனா நம்ம கழிஞ்சதை, அதான் அந்த செப்டிக் டேங்க்கை எடுத்தி கழுவி அதிலே திருப்பி கெமிக்கலகலந்து திருப்பி மாட்ரது இருக்கே, உவ்வே! 'பீயள்ள போகிறார் சுஜாதா' ன்னு நம்ம முத்துக்குமரன் ஒரு பதிவு போட்டார்ல, அது மாதிரி நம்ம அனுபவத்தை இன்னொரு பதிவா போட்டாகணும்! எல்லாம் முடிச்சிட்டு, வண்டியை எடுத்திட்டு கிளம்பியாச்சு! இந்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவிலே எல்லாம், நம்ம ஊர் மாதிரி ரைட் ஹேண்ட் ட்ரைவ் தான், அதனாலே ஓட்ட சிரமமில்லை! மேற்கொண்டு இங்கே ஓட்ட நீங்க வச்சிருக்கிற இந்தியன் ட்ரைவின் லைசென்ஸ் போதும்!

இந்த க்ரைட்ஸ்சர்ச் இருக்கிறது தெற்கு தீவுல, அதாவது நியூசிலாந்து இரண்டு தீவுகள் கொண்டது, வடக்குத்தீவுல தான் வெலிங்டன், அதோட தலைநகரம், அப்புறம் அக்லேண்ட், எல்லாம், நீங்க கிரிக்கெட் பார்த்திருப்பீங்க இங்கெல்லாம் விளையாடி! நாங்க சுத்தினது தெற்கு தீவு முழுக்க! க்ரைஸ்ட்சர்ச் கிழக்கு கடற்கரையிலே இருக்கிற ஒரு அழகான நகரம், முதல்ல நாங்க அதை சுத்தி பார்க்கலை, நேரா கிளம்பியாச்சு கீழே தெக்க பார்க்க போய்ட்டோம்! குவுன்ஸ்டவுன்னு நம்ம ஊரு ஊட்டி மாதிரி, அப்புறம் அங்கிருந்து மில்ஃபோர்ட் சவுண்ட்ன்னு, அதாவது மலைகளின் நடுவே வியாபித்திருக்கும் கடல், இதையே ஃபிஜார்ட்ன்னு சொல்லுவாங்க! நார்வேயிலேயும் அதிகம்! அப்புறம் எங்க சுத்தினாலும் மலைகளும் ஏரிகளும் தான், இயற்கையை உண்மையிலே கண்டு களிக்குனும்னா போய் ஒரு எட்டு நியுசிலாந்து பார்த்திட்டு, அப்படியே நம்ம துளசியையும் பார்த்துட்டு வந்திடுங்க! அப்புறம் ஃபிரான்ஸ் ஜோஸப் கிளேசியர்னு நகரும் பனிப்பாறைகள் பார்த்திட்டு, அப்புறம் அழகா ஆங்கில படத்திலே வர்ற கண்னை பறிக்கும் காட்சிகள் கொண்ட இடங்கள் முக்கியமா 'The Lord of the Rings' ல வர்ற அத்தனை இடங்களையும் பார்த்திட்டு வந்தோம்! அதுக்குன்னே கூட்டிக்கிட்டு போக நிறைய டூர் இருக்குது! அப்பறம் பங்கி ஜம்பிங்ன்னு மேலேந்து கீழே குதிக்கிறது! என் பொண்ணு நான் குதிக்க போகணும் ஒரே குதி, ஆனா எங்களுக்கு கொஞ்சம் பயம், போகவிடலை, அப்பறம் கணவாய்கள், மலைக்குகைகள், மேற்கு கடற்கரை பகுதி மலைகளும், அழகிய பள்ளத்தாக்குகளும் கொண்ட பகுதி! இயற்கையை அணு அணுவா ரசிக்கனும்னா, நியூசிலாந்து போய் பார்த்துட்டு வாங்க! இப்படி சுத்தி முடிச்சி திருப்பி க்ரைஸ்ட்சர்ச் வந்து சேர்ந்தோம்!

பிறகு அங்கிருந்து வடக்கு தீவு போய், அங்க இருந்த கந்தக பூமியை பார்த்திட்டு வந்தோம்! இந்த பகுதிகள் எல்லாம் ஒரு காலத்திலே எரிமலைகளா இருந்த பகுதிகள், எல்லாம் சூடு தனிஞ்சு போச்சு இப்ப, இருந்தும் அங்கங்க நீராவி ஊற்று, கொதிக்கும் களிமண் எல்லாத்தையும் நீங்கப் பார்க்கலாம்! இந்த இடத்தக்கு பேரு 'ரோட்ருவொ'ன்னு! அப்படி சுத்தி முடிச்சு அந்த பக்கம் இருந்த பண்ணைங்க நிறைய பார்த்தோம். நம்ம ஊரு மாதிரி மாட்லருந்த பால் கையிலே கறக்கிரதெல்லாம் இல்லை! எல்லாமே மெசின்னு தான்! மாட்டு பால்காம்பை கப்புன்னு புடிச்சி அதுபாட்டுக்கு அமுத்தி எடுத்து பாலை குழாய்ல கொண்டு வந்து கடைசிலே ரெஃப்ரிஜிரேட்டட் டேங்க்ல சேகரிக்க எல்லாம் மெக்கனைஸ்ட் தான் போங்க! அப்படியே சுத்திட்டு வர்றப்ப தான் கடைசியா இந்த முடிவளர்ந்த கடா ஆடுங்களை பார்த்துட்டு அது தோல் உரிக்கிரது எல்லாம் பார்த்துட்டு வந்தோம். இந்த சின்னபுள்ளையிலே மிரட்டுவாங்களே, 'படவா தோலை உறிச்சுடுவேன்னு', அதே மாதிரி 'தோலுறுத்து காட்டுகிறார்'ங்கிற சொற்றொடர் வருமே, அதே மாதிரி தோல் உரிச்சு காம்பிச்சாங்க! உங்களுக்காக அந்த வீடியோ இங்கே!இப்படி நியுசிலாந்து முடிச்சிட்டு பிறகு வர்றப்ப திரும்ப ஆஸ்திரேலியாவுக்கு பயணம்! திரும்ப வந்தறங்கினது பிரிஸ்பென்! அங்கேந்திருந்து 100 கிமீ தூரத்திலே இருக்கிற 'Gold Coast' கடற்கரைக்கு போனோம்! இது ஒரு ஜாலியான விடுமுறை கழிக்கிற ஸ்தலம்! நீச்சல், ஸர்ஃப்பிங், பீச்சிலே வெட்டியா பொழுதை கழிக்க இந்த ஊரு! அப்புறம் ஃபுளோரிடால இருக்கிற ஓர்லோண்டோ மாதிரி ஒரே தீம் பார்க்குங்க! இங்கே வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவும் இருக்கு! என் விதியை பார்த்தீங்களா, 'எனை ஆண்ட அரிதாரம்' னு தொடர் எழுதி நான் சினிமால சேர துடிச்ச சோகக் கதையை சொன்னேன் இல்ல, ஆனா ஆஸ்திரேலியா வந்து நடிச்ச கதை, அதுவும் இந்த வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவிலே, இருக்கு! ரொம்ப ஆர்வமா நீங்க வேணும்னு கேட்டா அடுத்த பதிவிலே வீடியோ காட்டுறேன்!

இதெல்லாம் சுத்திட்டு, அங்கிருந்து ஹாங்காங் போய் இரண்டு நாளு சுத்திப்பார்த்துட்டு, கடைசியா டில்லி வந்து சேர்ந்தோம்! ஆனா எங்களுக்கு இது ஒரு மறக்க முடியாத சுற்றுலா,ஒரு இன்ப உலா! நீங்களும் எப்பவாது எஙகேயாவது அப்படி சுத்தனும்னு வெளிநாடு போகனும்னா இந்த இரண்டு நாட்டுக்கும் போய் சுத்திட்டு வாங்க! மறக்க முடியது, முக்கியமா, நியுசிலாந்து போய்யிட்டு வாங்க! அப்படியே செடியக்காவை சந்திச்சு பதிவர் மாநாடு ஓன்னும் போட்டுட்டு போட்டோ புடிச்சி போடுங்க முடிஞ்சா!

32 comments:

said...

அடாடா.... இவ்வளோ அழகான நாட்டுலேயா 'நான்' இருக்கேன்?

நல்லாத்தான் எழுதுனீங்க போங்க, 'தோலை உரிச்சுப் பார்த்தோ'முன்னு(-:

அது வெறுமனே ரோமத்தை மட்டும் வெட்டுரதுங்க. நீங்கெல்லாம்
பார்பர் ஷாப்புலே போய் முடி வெட்டிக்கிறங்களே அது மாதிரி.
இல்லைன்னா கோவில்லே மொட்டை போட்டுக்கற மாதிரின்னும் சொல்லலாம்:-))))

ரெண்டு வருசம் முந்தியா? அடடா... தெரியாமப்போச்சே. இப்ப ஒரு ஒன்னேமுக்கால்
வருசம்தான் ஆச்சு, ப்லொக் தொடங்கி, தமிழ்மணத்துக்கு வந்து.

சொன்னா நம்பணும், இன்னிக்குப் போடப்போறே பதிவுக்காக இந்த ஆட்டுரோம மழிப்பு
எழுதி வச்சுருக்கேன். கொஞ்ச நேரம் கழிச்சு போஸ்ட் பண்ணிரலாம்.

said...

அந்த ரோமம் உரிக்கிறதே தோல் உரிக்கிர மாதிரி தான்! சரி உங்களுக்காக மாத்திட்டேன் 'ஆடு மொட்டை போட்டதை பார்த்துட்டு வந்தோம்'னு! இப்ப சரியா-:)

ஆமா உங்க பதிவிலே நம்ம பதிவுக்கு லிங்க் கொடுத்திடுங்க வீடியோ பார்க்கணும்னு ஆசை படறவங்க இங்கே போங்கன்னு!

ஆமா இதெல்லாம் பிளாக்கு, தமிழ்மணம் ஆரம்பிக்கிற முன்னே போய் வந்த உலா!

said...

//அதுவும் பொம்பளங்க மார்லருந்து கீழே நழுவி எப்ப விழும்ங்கிற மாதிரி போட்டுக்கிட்டு போற ஃபிராக், கவுன் அழகிகள் அதிகம்!//

என்னங்க. உங்க பதிவுல அழகான போட்டோ எதுவுமே காணும்?! ;-D

said...

சார்,

அருமையான பதிவு.

வீடியோ சூப்பர்.

படிக்கும் போதே சந்தோசமாகயிருக்கிறது..

மிக்க நன்றி.

said...

ஹலோ கொத்ஸ், போட்டோ போட்டுட்டா போச்சு!

said...

//ரொம்ப ஆர்வமா நீங்க வேணும்னு கேட்டா அடுத்த பதிவிலே வீடியோ காட்டுறேன்!// சிவ பாலன், இந்த வீடியோ ப்த்தி ஒன்னும் சொல்லலியே!

said...

சார்,

வீடியோவை பார்த்ததும் நிதி நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் தான் நியாபகம் வந்தது

வீடியோ நல்ல எடுத்திருக்கிரீங்க...

மற்ற வீடியோவையும் போடுங்க சார்...

said...

வெளிகண்ட நாதர்,
நல்லதொரு பயணக்கட்டுரை.

நன்றி.

அன்புடன்
வெற்றி

said...

சிவபாலன், அடுத்ததா போட்டுவிடுகிறேன், கவலைப்படாதீங்க!

said...

வாங்க வெற்றி, நீங்க இப்படி கேம்பர் வேன் மாதிரி, இந்த ஊர்ல அதுக்கு ஆர்வி ன்னு பேரு சுத்துனதுண்டா??

said...

க்ரைஸ்ட்சர்ச் பேர் வருதே துளசி பேர் கானோமேன்னு தேடினேன், பின்னூட்ட நாயகி முதல்லேயே வந்திட்டாங்க போல!

said...

நாதரே

இப்படி எங்களெ உடனே அங்கே போய் பாத்துட்டு வாங்கன்னு ஆசெயெ கிளப்பிட்டீங்களே.
ம்ம் இந்த துளசியக்காவும் தான் இருக்காங்க. ஒரு நாளாவது இந்த எடத்தையெல்லாம் சுத்தி காமிச்சாங்களா?

சரி, சரி. வந்து பாத்துட்டா போச்சு.
இன்னும் கொஞ்சம் பயண ஏற்பாடு விவரங்களை அனுப்பவும்.(url)

manjoorraja@gmail.com

said...

ஐயா, கொத்தனார் போட்டோ வேணுமா உமக்கு. வைக்கிறேன்யா வேட்டு ஹி ஹி ஹி

said...

அருமையான வர்ணனை, அழகான படங்கள்!
அலுவலகத்தில் வீடியோ வரமாட்டேனென்கிறது!
மாலையில் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன்.

மிக்க நன்றி!

said...

அருமையான வர்ணனை, அழகான படங்கள்!
அலுவலகத்தில் வீடியோ வரமாட்டேனென்கிறது!
மாலையில் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேன்.

மிக்க நன்றி!

said...

வெளிகண்ட நாதர்,

//வாங்க வெற்றி, நீங்க இப்படி கேம்பர் வேன் மாதிரி, இந்த ஊர்ல அதுக்கு ஆர்வி ன்னு பேரு சுத்துனதுண்டா??//

நீங்கள் குறிப்பிடும் மோட்டார் வண்டிகளில் சுத்தினதில்லை. ஆனால் கோடைகாலம் வந்தால், சாதாரான Car, Van போன்றவற்றில் camping போய் barbecue எல்லாம் போட்டுச் சாப்பிடும் பழக்கம் உண்டு. புகைப்படங்கள் இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது பதிகிறேன். அதைவிட என் பொழுதுபோக்கே உலகம் சுற்றுவது தான். Vacation க்கெல்லாம் , நாட்டை விட்டே ஓடிவிடுவேன்.

நன்றி,

அன்புடன்
வெற்றி

said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள். நியுசிலாந்து போனதில்லை. ஆனால் ஆஸி ஊர் சுற்றிப் பார்க்க நல்ல ஊர் என்பது எங்கள் அனுபவமும். சிட்னி, மெல்போர்ன் சென்ற கதையை முன்பு எழுதியிருக்கிறேன்.

ஆனாலும் வெளிநாட்டில் இருந்தே சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டுச் சென்று... RV எடுத்து ஓட்டி... பெரிய ஆள்தான் நீங்க.

said...

நல்ல பயணக்கட்டுரை வெளிகண்டநாதர். நீங்க போன ஊருக்கெல்லாம் நாங்களும் போகணும்ன்னு ஒரு ஆசையைக் கிளப்பிவிட்டுட்டீங்களே. :-)

said...

ஆட்டுக்கு முடியெடுக்கிறதைப் பார்த்தா தோலை உரிக்கிற மாதிரி தான் இருக்கு. ;-)

said...

தாணு, செடியக்கா, பின்னூட்ட நாயகி, இன்னும் எத்தனை பட்டபேரு அவங்களுக்கு???

said...

வாங்க மஞ்சூர் ராசா! இந்த நியுசிலாந்து டுயூரிஸம்ன்னுபோட்டு வெப் சைட்ல தேடுங்க கிடைக்கும், அதுல ஏகப்பட்டது கிடைக்கும்!

said...

சிவா, பாவம் விட்டுடுங்க! காசில்லா கண்காட்சி தானே வேணும்கிறாரு கொத்ஸ்-:)

said...

வாங்க எஸ்கே, வீட்ல வீடியோ பார்த்திட்டு எழுதுங்க ஆட்டு ரோமம் உரிக்கிறது எப்படின்னு!

said...

பரவாயில்லை வெற்றி, ஊர் நிறைய சுத்துவீங்கன்னு சொல்லுங்க-:)

said...

வணக்கம் வெளிகண்ட நாதர்!

பிரயாணக்கட்டுரை நல்லா இருக்கு ஆனா ஆட்டுக்கு தோலுரிக்கிறது படம் காட்டி பயமுறுத்திட்டிங்க! அங்கே எல்லாம் மிருகவதை தடுப்பு இயக்கம், மேனகா காந்தி போன்றவங்க எல்லாம் இல்லியா இதை எல்லாம் தட்டிக்கேட்க ,நமக்கு ஷேவிங்க் கிரிம் எல்லாம் போட்டு ஷேவ் பண்ணும் போதே எரியும் இவன் ஆட்டுக்கு எதும் போடாம சுத்தமா மழிக்கிறான் ,ஆடு கத்தின சத்தம் எல்லாம் மியுசிக் போட்டு அமுக்கிட்டிங்களா :-))

said...

செல்வராஜ், உங்க சிட்னி, மெல்போர்ன் பயணக்குறிப்பை பார்த்தேன், நல்லா எழுதி இருக்கீங்க!

இந்த RV எடுத்திட்டு போறது பெரியவிஷயமே இல்லைங்கே! என்னா கொஞ்சம் பெரிசா போச்சினா, பஸ் லாரி ஓட்றமாதிரி-:)

said...

குமரன், அது இரண்டுமே கண்ணுக்கு குளிர்ச்சியான் பிரதேசம், ஒரு தடவை போய்ட்டு வாங்க! அப்படியே தோலை உரிக்கிறதைய்ய்ம் பார்த்துட்டு வாங்க-:)

said...

வெளிகண்ட நாதர்,
நான் இரண்டுநாள் வெளியூர் போயிருந்ததால் வலைப்பக்கமே வரவில்லை. உங்கள் வாரம் நன்றாகப் போய்கொண்டிருக்கிறது. இப்போதுதான் ஒவ்வொன்றாய் படித்துக் கொண்டு வருகிறேன்.
வீடியோ வுடனும் வரைபடங்களுடனும் அருமையான பதிவு. இனி அடுத்த விடுமுறை Down Underதான்.

said...

வாங்க மணியன், பராவாயில்லை மெதுவா எல்லாம் படிச்சிட்டு பின்னோட்டம் போடுங்க எல்லாம் எப்படின்னு!

கண்டிப்பா போய்ட்டு வாங்க, எல்லாமே பார்க்க வேண்டிய இடங்கள்!

said...

ஆஸ்திரேலியா வந்து நடிச்ச கதை, அதுவும் இந்த வார்னர் பிரதர்ஸ் ஸ்டூடியோவிலே, இருக்கு! ரொம்ப ஆர்வமா நீங்க வேணும்னு கேட்டா அடுத்த பதிவிலே வீடியோ காட்டுறேன்//

என்ன கேள்வி இது? We want video...(இதை மூன்று முறை echo effect-உடன் சொல்லிக்கொள்ளவும்..)

said...

நல்ல பயணக்கட்டுரை.
நியூசிலாந்தின் கந்தக பூமியை நானும் 1992-1993 இல் தரிசித்தேன்.
மட்பூல், சுடுதண்ணீர் ஊற்று எல்லாமே மறக்க முடியாதவை.

அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் மட்டுந்தான் பார்த்திருக்கிறேன்.
அடுத்தமுறை பிரிஸ்பேன் போகும் எண்ணும் உண்டு பார்ப்போம்.

said...

அருமையான பயணக் கட்டுரை.

வைசா