போன பதிவிலே நான் எழுதின மாதிரி, அதுக்கு முன்னே என்னுடய 'சினிமெட்டோகிராபியும் நம் ஒளிப்பதிவாளர்களும்!'ங்கிற பதிவிலே பின்னோட்டம் போட்ட இலவசகொத்தனாரின் கண்ணோட்டத்தை கருதியும் இந்த பதிவு! தொழில்நுட்பத்தை கையாண்டு திறம்பட நாம் எடுக்கும் படங்கள், பல ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வந்தாலும், அதை எல்லாம் சொல்லி கொள்வது போல இருந்தாலும், நம்முடய கதைகள், அதன் ட்ரீட்மெண்ட், மற்றும் கதையமைப்பு, களம், போன்றவற்றில் நாம் இன்னும் பழய பஞ்சாங்கமாக இருப்பதால் நம்மால் முன்னேற முடியவில்லை. தொழில்நுட்பங்கள், பிரமாண்டமாக படம் பிடித்து வெளியிடுவது எப்படி என்பதை நாமும் கற்றுக்கொண்டு, இந்தியபடங்கள் வர துவங்கி உள்ளன சிறிது காலமாக! மேற்கொண்டு இந்த 'பாலிவுட்' எனக்குறிக்கும் இந்தியப் படங்களுக்கு அதிக ஆர்வம் வெளிநாட்டவரிடம் வர துவங்கி உள்ளது! ஆனால் அதை சரியாக நாம் உபயோகித்து வெற்றி வாகை சூடுகிறோமா என்றால் அது தான் இல்லை!
முன்பெல்லாம் மொழி தெரியவில்லை என்றாலும்,அந்த ஹாலிவுட் ஆங்கில படங்களை ரசித்து பார்த்து விடுவது நம்மிடையே தொன்று தொட்டு வரும் வழக்கம்! வியாபார நோக்கின் காரணமாக, 'wider audience reach'க்காக அந்த படங்கள் எல்லாம் நம் மொழிகளில் டப் செய்யப்பட்டு வரதுவங்கி உள்ளன இப்போது! தொடர்ந்து வெற்றிகரமாக ஓடுகின்றன நம் நாட்டில்! ஆனால் இன்று உலகம் முழுக்க வியாபித்திருக்கும் இந்தியர்களை கருத்தில் கொண்டு 'Crossover Cinema' என்ற ஒரு வகை படங்களை நம்மவர்கள் எடுத்து வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்தப் படங்களும் அதிகமாக இந்த வெளிநாடுகளில் ஓடினாலும், அப்படங்கள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை மட்டும் கவருகிறதா, இல்லை வெளிநாட்டவரையும் கவருகிறதா என்பதை பற்றி சற்று ஆராய்வோம்!
இதுக்கு முன்னே 70, 80 களில் 'parallel cinema' என்ற ஒரு கான்செப்ட் இருந்தது, அதாவது ஆர்ட் ஃப்லிம்ஸ், கமர்சியல் ஃப்லிம்ஸ்ன்னு ! சில படங்களை அப்போது பார்த்து விட்டு, அது கொஞ்சம் மெதுவா போனாலோ, இல்ல காட்சியை இழுத்தாலோ, சத்தமில்லாம, வசனமில்லாம காட்சிகள் நகர்ந்தாலோ, 'டேய் ஆர்ட் ஃபிலிம் மாதிரி எடுத்திருக்காண்டா' என்று தியேட்டரில் படம் பார்த்து விட்டு வரும் பொழுது நாம் கூக்குரல் இடுவதுண்டு. சத்யஜித் ரே, மிருணாள் சென்,ஆடூர் கோபலக்கிருஷ்ணன், அரவிந்தன் இப்படின்னு பல டைரக்டர்களை சொல்லிக்கிட்டே போகலாம், இந்த 'parallel cinema' எடுத்தவங்களை! சில முத்தான படங்களும் வந்தது! அதாவது அந்த காலத்திலே மரத்தை சுத்தி வெறும் பாட்டு படிச்சு, ஓடி திரிந்த மாதிரி எடுத்த படங்களின் மேல் கொண்ட வெறுப்பால், இந்த கமர்ஷியல் விஷயத்திலேருந்து கொஞ்சம் தள்ளி, உண்மை வாழ்க்கை முறை, யதார்த்தம், தத்துவங்களை சொல்லி படம் புடிக்க வந்த அந்த 'genre' படங்கள் தான் இந்த ஆர்ட் சினிமா, இல்லை 'parallel cinema' ன்னு சொல்ற ஒன்னு. இதை நம் அரசாங்கமே நிர்மாணித்து, அதுக்கு நிதி உதவி செஞ்சாங்க! அப்புறம் சினிமா கலைகளை கத்துக்குடுக்க ஃபிலிம் இன்ஸ்டிடுயூட் பூனாவிலேயும், பிறகு சென்னையிலும் ஆரம்பிச்சாங்க! அப்படி அந்த வகையிலே எடுத்து வந்த ஹிந்திப்படங்கள் எல்லாம் தனி ரகம், பெங்காலி, மலையாளப்படங்கள் பலவும் இந்த ஆர்ட் ஃபிலிம் ரேஞ்சுக்கு அதிகமா இருந்தது! இன்னும் விவரமா இதை பத்தி தெரிஞ்சுக்கணும்னா, இதோ சுட்டி!
இந்த மாதிரி தமிழ்லயும் அப்பொழுது வரத்தொடங்கிய படங்கள் நிறைய! ருத்ரையான்னு ஒரு டைரக்டர் எடுத்த சிலப்படங்கள், அதிலே 'அவள் அப்ப்டித்தான்' குறிப்பிட தக்க ஒன்னு! அப்புறம் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்டுயூட்லருந்து வந்த டைரக்டர்கள் பாலு மகேந்திராவிலருந்து கொஞ்சம் ஆர்ட்டையும் கமர்சியலையும் கலந்தடிச்சு, நல்ல கதைகளை விஷவலா தரத்துவங்கினாங்க! அப்பவும் அப்படங்களோட எல்லை தமிழ்நாடு தான், தமிழ் மக்கள் தான், அதை தாண்டி போறதில்லை! பிறகு மகேந்திரன், பாரதிராஜான்னு தமிழ் படத்தின் மாற்றங்கள் எல்லாம் கொஞ்சம் மாறி வந்த போதிலும் இந்த டிஸ்டிங்ட்டா, வித்தியாசம் ஆர்ட், கமர்ஷியல் படங்களுக்கு இருக்கத்தான் செஞ்சது!
பிறகு, கம்ப்யூட்டர், உலகமயமாக்கப்படல்ன்னு, உலகம் சுருங்கி, நம்ம எல்லாரும் இந்த அமெரிக்கா பக்கம் படை எடுக்க ஆரம்பிச்சோன, நல்ல சாஃப்ட்வேர் கம்பெனியிலே வேலை பார்த்தவங்களுக்கு, சினிமா படம் எடுக்கணும்னு ஆசை வந்து, இந்த ஊரு கலாச்சாரம், நம் இந்தியகுடி மக்கள் எப்படி இங்கே வாழ்றாங்கன்னு கதை சொல்லி எடுத்து வந்த படங்கள் தான் 'Crossover Cinema' சொல்ற அந்த வகையை சேர்ந்தது. அதுவும் வெளிநாடுகள்ல இருக்கிற இந்தியர்களை கவனம் வச்சி பிணைக்கப்பட்ட கதைகள். முதல்ல இந்த கெமிக்கல் இஞ்சினியர், நாகேஷ் கணுக்கர்ன்னு நம்ம ஆந்திராகாரரு, எடுத்து வந்த 'Hydrabad Blues' சும்மா பிச்சிக்கிட்டு ஓடிச்சி, அப்பறம் 'Bend it like beckham' லருந்து ஆரம்பச்சி, இதோ இப்ப 'Mistress of Spices' வரைக்கும் படங்கள் வந்த வண்ணம் இருக்கு! எல்லாமே இந்திய வழி அமெரிக்க குடிகளை கருத்தில் கொண்டு வியாபரம் செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் எடுத்தது! ஆனா வெளி நாட்டுக்காரங்களை அது எந்த பாதிப்பும் ஏற்படுத்திலே! நம் இந்திய நாட்ல இருக்கிற ஜனங்க, குறிப்பா, தமிழகத்தில உள்ளவங்க, இந்த படங்களை எல்லாம் பார்த்திருப்பீங்களான்னு தெரியாது, வாங்க, இந்த படங்கள் எல்லாம் என்னா, எப்படி களம் கொண்டு அமைக்கப்பட்டது அப்படின்னு பார்க்கலாம்!
அதுக்கு போறதுக்கு முன்னே, நம்ம கதைகளை ஏன் வித்தியாசமா சொல்றதில்லைன்னா, அந்த கால புராணத்திலருந்து ஆரம்பிக்கறது, 'கணவனே கண் கண்ட தெய்வம், 'மணாளனே மங்கையின் பாக்கியம்', 'மனைவி என்பவள் தனிப்பிறவி', கொடுமையான மாமியார் கடைசியில் திருந்தி மருமகளை ஏற்பது, 'தர்மமே வெல்லும்', நல்லது கெட்டதில் கடைசியில் நல்லதே ஜெயிக்கும், இப்படின்னு நம்மகிட்ட புதஞ்சு போன விஷயங்கள், அந்த கால இராமயண, மகாபாரத்திலேருந்து இருக்கு! மகா பாரதத்திலே பாஞ்சாலி அஞ்சுப்போரோட வாழ்ந்ததா சரித்திரம் வந்தாலும் அதை ஒத்துக்கொண்டு வித்தியாச கதை களம் அமைக்க வருவதில்லை யாரும்! கமலஹாசன் பாடின மாதிரி 'பாஞ்சாலி வாழ்ந்த பரிதாப வாழ்க்கை பாராட்ட யாரும் இல்லை'ன்னு அது மாதிரி தான் நம் மனோபாவம்! அதுக்குள்ள கதை சொல்லியாகணும், அதை கொஞ்சம் தாண்டினா, டைரக்டரும், புரடியூசரும், வியாபாரங்கிற ஒன்னை போட்டு தள்ளி விட்டுடுவாங்க! மாறி வரும் காலத்துக்கேற்ப இவங்க ஏன் மாறி கதை சொல்லமாட்டேங்கிறாங்கங்கிறது தான் புரியாத புதிர்!
இந்த சட்ட திட்டங்களுக்குள் படம் எடுக்கணும்னு நினைச்சா நம்ம எப்படி வெளிநாட்டவரை ரீச் ஆகிறது! இதுக்கு ஒரு நல்ல உதாரணம் இருக்கு! ஒருதடவை இந்த ஆஸ்கர் பட போட்டிக்கு நம்ம இந்தியாவின் பெருமைன்னு சொல்லிக்கிட்டு வந்த 'மதர் இண்டியா' படம் பார்த்துட்டு ஒரு அமெரிக்க விமரிசகர் சொன்னாராம், எனக்கு சரியா லாஜிக் புரியல, வாய்க்கும் ஓன்னும் கிடைக்காம பஞ்சம் பட்டினியோட இருக்கிறதோட, அந்தம்மா, அந்த நிலச்சுவாந்தாரோடு ஒரு ராத்திரி படுத்து தூங்கி தன் பசியை போக்கிக்க வேண்டியது தானே, அப்படி எதுக்கு இவ்வளவு கஷ்டப்படணும்னு கேட்டாராம்! இது தான் இந்த நாட்டவர்களின் கண்ணோட்டம்! இதை அழகா ஆங்கிலத்திலே சொன்னா இப்படி தான், 'This is a case of pseudo morals overtaking logic — a disease that plagues the majority of our films'. ஆனா நீங்க சொல்லுவீங்க நம்ம ஜனம் இதை எல்லாம் ஒத்துக்குமான்னு! ஏன் இப்பதான் டெலிவிஷன் தாக்கம் கிராமத்து வரைக்கும் போயிடுச்சே, எம்டிவி வரைக்கும்! ஆனா அந்த பழைய பஞ்சாங்க கதை ட்ராக்லருந்து நமது தயாரிப்பாளர்கள் மாற முடியல்லை! எல்லாமே மாறி போச்சு, ஆனா வாய்மையே வெல்லும், நல்லது கெட்டதை கொள்ளும்னு பழைய லாஜிக்லே போறது தான் கஷ்டம்! கதையை கொஞ்சம் மாத்தி அதை சொல்லும் விதத்திலே சொன்னா மக்கள் ஏன் ஏத்துக்க மாட்டங்கன்னு தெரியல்லை,ம்.. இது நம்ம மெயின்ஸ்ட்ரீம் சினிமா கதை, சரி 'Crossover Cinema' என்னா கதைன்னு பார்ப்போம்!
இந்த 'Crossover Cinema' எல்லாம் நகரத்திலே வசிக்கிற கும்பல கருத்தில் கொண்டு, அதுவும் டிஸ்கோத்தே, ஆட்டம் பாட்டுன்னு ஆடி திரியிற இளசுகளை கவனத்தில் கொண்டு எடுக்கப்பட்டதா, இல்லை 'cross clutural' படங்களா?, இல்லை பலமொழிகளில் எடுக்கப்படும் படங்களா?, இப்படின்னு நீங்கள் கேள்வி கேட்கலாம்! இதிலே முக்காவாசி உண்மை, ஆனா அதுவே முற்றிலும் உண்மை இல்லை! இந்த மெயின்ஸ்ட்ரீம் படங்களிலருந்து கொஞ்சம் மாறுபட்டு, பைத்திக்காரத்தனமா மரத்தை சுத்தி பாட்டு பாடாம, இல்லே பாட்டே இல்லாம, அப்புறம் சுவிட்சர்லாந்து, நியிசிலாந்துன்னு பறந்து போய் டூயட் எல்லாம் பாடாம, சில புதுமையா குளிர்ச்சியான கதை கண்ணோட்டத்திலே, புதுமுக நடிகர்கள், நம்ம தினசரி பார்க்கிற ஆளுங்க மாதிரி(ரொம்ப தடவை பவுடர் பூசன நம்ம நடிகை எல்லாம் பார்த்துட்டு பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருக்கான்னு டூப்பு உடுவோமே, அப்படி இல்லாத!), குறைந்த பட்ஜெட்ல எடுத்த படங்கள் வெறும் மல்டிபிளக்ஸ்ல மட்டும் நகரங்கள்ல ஓடி, ஆனா சந்திரமுகி மாதிரி 25 வாரமெல்லாம் ஓடற படங்கள் இல்லை இவைகள்! ஆனா சில சமயம் ஜீவன் உள்ள கதைகள், நல்ல படியா படமாக்கப்பட்டு வரக்கூடியவை!
நான் ஏற்கனவே சொன்னேன்னே அந்த 'parallel cinema' வோட கம்பேர் பண்ணலாமான்னா, அதுவும் இல்லை, அந்த காலத்திலே இந்த மாதிரி 'parallel cinema' படங்களை பார்க்க புத்திசாலித்தனம் வேணும்னு சப்பை கட்டு கட்டுவாங்க இல்லை, அப்படி இல்லாம, ஆனால் மெயின் ஸ்ட்ரீம்னு நாம் சொல்ற படங்களுக்கு எந்த ஆபத்து வராம அது பாட்டுக்கு வந்துக்கிட்டிருக்கும் படங்கள்னு சொல்ல முடியாது தான்! இருந்தாலும் மொத்தத்திலே சொன்னா ,காசு சம்பாரிக்க இன்னொரு வழி! இப்ப இருக்கிற இந்த 'Bollywood'ங்கிற கிரேஸ்ஸை யூஸ் பண்ணி சீக்கிரம் காசு பண்ண வரும் படங்கள், ஆனா இதுவும் வெளி நாட்டவர்களை அவ்வளவா பாதிப்பு ஏற்படுத்தவில்லை, ஆனா நம்ம ஊர் மக்கள், பரவலா இங்கே இருக்கிறவங்க கண்டு களிக்கும் படங்கள்! மேற்கொண்டு அங்கேயும் இங்கேயும் மாறி வருக் கதை களங்களை கொண்டு, ட்ரீமெண்ட் எல்லாம் வித்தியாசமாக செய்து எடுக்கப் பட்ட இந்த படங்கள் பார்ப்பது ஒரு தனி அனுபவம் தான்!
இப்பொழுது வரும் நிறைய ஹிந்திபடங்கள் நல்ல வகையில் எடுக்கப்பட்டு, வழிவழியாக கொண்டாடி வரும் காட்சி அமைப்புகளை மாற்றி அமைத்து எடுக்கப்படுகிறது! தமிழ்ல நம்ம கொஞ்சம் மந்தம் தான்! படக்கதைகள் சொல்லும் விதம், காட்சி அமைப்பு இது எல்லாத்திலேயும் சொல்லி கொள்கிற மாதிரி படங்கள் வருவதில்லை! வேணும்னா அந்த நல்ல காரியத்தை செஞ்சுக்கிட்டு வர்றது நம்ம செல்வராகவன் மாதிரி கோஷ்டி தான்! (பழைய பாரதிராஜா, பாக்கியராஜ், மகேந்திரன், மணிரத்னம், பாலு மகேந்திரான்னு இருந்தாலும், அவெங்க கதையில்லாம் நான் மேலே சொன்ன அந்த பிரின்சிபல் குள்ள தான் இருக்கும், அதுக்குள்ள எவ்வளவு வித்தியாசம் பண்ண முடியுமோ, அந்த காலக்கட்டங்கள்ல செஞ்சாங்க,ஆனா, இப்போ, நல்ல டைரக்டர்கள் இல்லவே இல்லை!)ஆனா ஹிந்தி படங்கள் நல்லதொரு மாற்றம், நீங்க எத்தனை பேரு படம் பார்ப்பீங்களோ எனக்குத் தெரியாது, பாஷை தெரியாதுங்கிற காரணமே வேணாம், வசனத்தை வச்சி காட்சி நகர்வுகளை புரிஞ்சிக்கிட்ட அந்த காலம் போயே போச்சு, எல்லாமே விஷவல்ஸ் தான்! அப்படி பண்ற கூட்டம் கரன் ஜொகர்லருந்து, நம்ம 'சிவா' படம் எடுத்தாரே ராம் கோபால் வர்மா, சஞ்சய் லீலா பன்சாலி, அப்படின்னு ஏகப்பட்ட பேர் நல்லா படம் எடுக்கிறாங்க!
பிறகு இப்ப இவெங்க எடுக்கும் படங்களின் கதை களங்கள் இந்த நாட்டை பேஸ் பண்ணி இருக்கும்! 'கல் ஹோ நா ஹோ'ன்னு ஒரு படம் எத்தனை பேரு பார்த்திருப்பீங்களோ, கொஞ்சம் இந்த ஊரு ஆடியன்ஸ அட்ராக் பண்ண காட்சிகள் கொஞ்சம் வந்தாலும், கடைசியிலே இதய நோய்ல செத்து போறதாலே காதலியை வேற ஒருத்தன் கிட்ட புடிச்சி கொடுக்கிற நம்மூரு 'வாழ்வே மாயம்', பயணங்கள் முடிவதில்லை மாதிரி கதை தான்! ஆனா அதை அசத்தலா எடுத்த விதம் ட்ரீட்மெண்ட் எல்லாம் கண்ணுக்கு விருந்து! இப்ப ஹிந்திலே இப்படி வெளிநாடுகள்ல வசிக்கும் இந்தியர்களை பேஸ் பண்ணி வரமாதிரி கதை அமைச்சு, ஊரு சுத்தி பாத்துட்டு படம் புடிச்சு வெளியிடுறாங்க! சமீபத்திலே வந்த 'சலாம் நமஸ்த்தே' அப்படி தான், நம்ம ஊரு எஸ்ஜே சூர்யா எடுத்த அ ஆ படக்கதை, ஆனா அதை நல்ல விதமா எடுத்திருந்தாங்க!
ஆக நான் மொத்தத்திலே என்ன சொல்ல வர்றேன்னா, இப்ப உலகமயமாக்கல்ன்னு எல்லாரும் எல்லா இடத்துக்கும் போக ஆரம்பிச்சி, எல்லா கல்ச்சரையும் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிட்டாங்க! உதாரணத்துக்கு, நம்ம ஊருக்கு சாஃப்ட்வேர் படிக்க வந்திருக்கும் வெளிநாட்டு பொண்ணுக்கும், கால்செண்டர்ல வேலை பார்க்கறவனுக்கும் வரும் காதல், அதனால் உண்டாகும் சிக்கல், பிணக்கம், அப்படின்னு கதை களம் அமைச்சிக்கிட்டு இரண்டு கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி படங்கள் எடுக்க முயற்சி பண்ணலாமே!(நான் சும்மா ஐடியா கந்தசாமி மாதிரி ஏதோ சொல்லிட்டேன், அப்படி படம் எடுத்து வந்தா சந்தோஷம் தான்!) ஆனா இந்த 'Crossover Cinema'ங்கிற படங்கள் மட்டும் 'wider audience'க்காக எடுக்கப்படுமான்னு தெரியல்லை, ஏன்னா எடுக்கப்படும் கதை களம், ட்ரீட்மெண்ட் எல்லாத்துக்கும் சில கட்டுபாடுகள் இருக்கு! ஆனா கொஞ்சம் போல படங்கள், இந்த டைட்டானிக், லார்ட் ஆஃப் த ரிங்ஸ், ஷோலே, லகான் மாதிரி எல்லாரையும் போய் சேரக்கூடிய படங்கள் எடுப்பது கஷ்டம்! ஆனா முயற்சின்னு ஒன்னு இருந்தா முடியாதது ஒன்னும் இல்லையே!
Subscribe to:
Post Comments (Atom)
32 comments:
//அதை கொஞ்சம் தாண்டினா, டைரக்டரும், புரடியூசரும், வியாபாரங்கிற ஒன்னை போட்டு தள்ளி விட்டுடுவாங்க!//
உண்மை தான்.
தன்னோட முந்தைய படத்தில விட்ட பணத்தைப் புடிக்கவும்,கஷ்டப்பட்டு வாங்கின பெரிய ஹீரோவோட கால்ஷீட்டுக்காவும் தான் இப்போ முக்காவாசிப் பேரு படம் எடுக்கறாங்கன்னு ககொ.ககொ. படத்தில மலேசியா வாசுதேவன் அஜீத் கிட்ட சொல்ற வசனம் எவ்ளோ உண்மை.
//மாறி வரும் காலத்துக்கேற்ப இவங்க ஏன் மாறி கதை சொல்லமாட்டேங்கிறாங்கங்கிறது தான் புரியாத புதிர்//
பெரும்பான்மையான இங்கத்த ஆளுங்களுக்கு சாம்பார்,ரசம்,பொறியல்,தயிர்,பாயாசம்,அப்பளம்னு தலைவாழை இலைல சாப்பாடு போட்டாத்தான் சந்தோசப்படுவாங்க.
என்ன தான் காலம் மாறினாலும்,பீட்சாவையும்,வெஜ் சலாடையும் விருந்தில ஒத்துக்கமாட்டாங்க. அது மாதிரி தான் இதுவும்னு தோணுது.
//நாகேஷ் கணுக்கர்ன்னு நம்ம ஆந்திராகாரரு//
அவரோட பேரு நாகேஷ் குக்குனூர்-னு படிச்ச ஞாபகம்.
//எல்லாமே விஷவல்ஸ் தான்! அப்படி பண்ற கூட்டம் கரன் ஜொகர்லருந்து, நம்ம 'சிவா' படம் எடுத்தாரே ராம் கோபால் வர்மா, சஞ்சய் லீலா பன்சாலி, //
ஆர்.ஜீ.வி,பன்சாலி ஓக்கே.ஆனா என்னைப் பொருத்தவரை கரன் ஜோகர் இந்த லிஸ்டில சேர்க்க முடியாது.குச் குச் ஹோத்தா ஹை,கே3ஜீ பார்த்த யாருமே அவர் விஷூவல்ஸ் மூலமா கதை சொல்றவர்னு ஒத்துக்க மாட்டாங்க.
அப்புறம் என்னோட ஆல்டைம் ஃபேவரட்டான "மான்சூன் வெட்டிங்" பட ஸ்டில்லை மட்டும் போட்டு என்னை ஏமாத்தீட்டீங்க.காந்தக் கண்ணழகி ஷெஃபாலி ஷாவோட பெங்களூர் ரசிகர் மன்றம் சார்பா இதைக் கடுமையா ஆட்சேபிக்கறேன் ;-)
ச்சும்மா சொல்லக்கூடது.கலக்கலா எழுதியிருக்கீங்க.
நாலுபாட்டு....
ரெண்டு பைட்டு...
வடிவேல் / விவேக் காமெடி போட்டு...
கொஞ்சம் அம்மா/தங்கச்சி சென்டி மெண்டு...
இது இல்லாத ரொம்பாது தயாரிப்பாளருக்கு துட்டு...
ஏங்க..சேரிட்டி பன்னறதுக்கா படம் எடுக்கறார் தயாரிப்பாளர்...அது ஒரு வியாபாரமுங்கோவ்...
அவ்வ்வ்வ்வ்.....
//
'Mistress of Species'
//
mistress of Spices...ஒரு வார்த்தையில நடாஷா ஹின்ஸ்ட்ரிட்ஜை ஞாபகப் படுத்திவிட்டீர்களே...நமது ஐஸ் ஐ மறந்துபோனேன்!!
//
நம் சினிமாக்கள் ஏன் உலகை வலம் வருவதில்லை?
//
சிம்பிள், நல்ல படம்னா வெள்ளைக்காரனைக் காப்பியடித்து எடுப்பது தான்...என்கிற அடிப்படை நம்பிக்கை.
நீங்கள் போஸ்டர் போட்டுள்ள சலாம் நமஸ்தே...Nine months என்கிற ஹாலிவுட் படத்தின் இந்தி காப்பி!!
சார்
அருமையான பதிவு.
நிச்சயம் நம்ம படங்களும் பேசப்படும் காலம் வரும்.
நம்பிக்கையோடு இருப்போம்.
நன்றி.
வணக்கம் வெளிகண்ட நாதர்!
உங்கள் அரிதாரம் பகுதியில் சொன்னது போல ஒன் லைனர் பிடித்துக்கொண்டு படம் எடுப்போர் தான் இங்கே அதிகம்.ஷூட்டிங்கில் போய் கேமராவை வைத்து விட்டு பின்னர் வசனம் காட்சிகளை தயார் செய்வார்கள் பின்னர் எப்படி தரமான கதை கிடைக்கும் படம் கிடைக்கும்!
தமிழகத்தில் தயாரிப்பாளரின் பங்கு ஒரு படத்தில் தயாரிப்பாளர் எனப் பெயர் போட்டுக்கொள்வது மட்டுமே! முன்னனி நட்சத்திரத்திடம் ஒரு புதிய இயக்குனர் போய் சோப் போட்டுக்கதை சொல்லி இடம்பிடிப்பார், அந்த கதானாயகன் ஒரு தயாரிப்பாளரை காட்டி இந்த இயக்குனரை அனுப்பி வைப்பார்.இங்கே தயாரிப்பாளர்கள் கதையையோ,இயக்குனரையோ தேர்வு செய்வதில்லை ,எல்லாம் வல்ல நாயகன் தான் தாயரிப்பாளர்,இயக்குனர், இசை அமைப்பாளர்,காமேரா மேன், டான்ஸ் மாஸ்டெர் என எல்லாம் தீர்மானிப்பார்.
போதாக்குறைக்கு அவரது மனைவி தான் காஸ்ட்யும் டிசைனர் ஆக இருக்க வேண்டும் என்று சொல்வார். அந்தம்மாவுக்கு என்ன தெரியும் ஏதாவது அவருக்கு பிடித்த நாயகன் நடித்த ஆங்கிலப்படம் பார்த்து அதில் உள்ள ஆடைகளை தம் கணவனுக்கு போட்டு அழகு பார்ப்பார் :-)) .
இதனால் தான் ஹீரோ சம்பந்தமே இல்லாமல் மே மாத வெயிலில் ரெய்ன் கோட் போட்டுகொண்டு வருவது போன்ற காமெடிகள் தமிழ் படத்தில் வரும்:-))
தயாரிப்பாளார் பூஜைப்போட்டு அதைக்காட்டி வட்டிக்கு ஃபைனான்சியரிடம் பணம் வாங்கி தான் படம் எடுக்க வேண்டும் , வட்டிக்கட்ட பயந்துக்கொண்டு 3 மாதத்தில் மொத்தபடமும் சுருட்டப்பட்டு திரை இடப்படும்.3 மாதத்திற்கு மேல் போனால் வட்டிக்கட்டியே தயாரிப்பாளர் போன்டி ஆகிவிடுவார்.அப்புரம் எங்கே இருந்து உலகத்தரப்படம்.
மணிரத்தனம்,ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு இத்தகைய நெருக்கடி எல்லாம் இல்லை ஆனாலும் அவர்களும் சொந்த கற்பனையை நம்புவதில்லை.மணிரத்தனத்தின் பெரும்பாலான படங்கள் ஆங்கில தழுவல்கள்.எனவே இந்தியர் அல்லாதோர் பார்த்தால் ஹெ ஹெ ஹெ என சிரிப்பார்கள். லகான் போன்ற படங்களில் இந்திய நேட்டிவிட்டி இருந்ததால் தான் அனைவராலும் உலக அளவில் ரசிக்கப்பட்டது .வெளிநாட்டினர் இந்திய திரைப்படங்களில் இந்தியாவின் ஆன்மாவை பார்க்க ஆசைப்படுகிறார்கள்,இரவல் ஆன்மாவை அல்ல.
//நாகேஷ் கணுக்கர்ன்னு நம்ம ஆந்திராகாரரு//
அவரோட பேரு நாகேஷ் குக்குனூர்-னு படிச்ச ஞாபகம்.
சுதர்சன், பேரை சரியா சொல்லி திருத்தினதுக்கு நன்றி!
//ஆர்.ஜீ.வி,பன்சாலி ஓக்கே.ஆனா என்னைப் பொருத்தவரை கரன் ஜோகர் இந்த லிஸ்டில சேர்க்க முடியாது.குச் குச் ஹோத்தா ஹை,கே3ஜீ பார்த்த யாருமே அவர் விஷூவல்ஸ் மூலமா கதை சொல்றவர்னு ஒத்துக்க மாட்டாங்க// நான் விஷுவல்லுக்காக சொல்லவில்லை, ட்ரீட்மெண்ட்காக, அதுவும் கல் ஹோ நா ஹோ வை வச்சு தான்! நீங்க சொன்ன பட்மெல்லாம், சராசரி படங்கள், ஸ்டார் காஸ்ட்டாலே தூக்கி நிறுத்தின ஒன்னு, அவ்வளவு தான்!
//ஏங்க..சேரிட்டி பன்னறதுக்கா படம் எடுக்கறார் தயாரிப்பாளர்...அது ஒரு வியாபாரமுங்கோவ்...// வியாபாரம் தான், இல்லேன்னு சொல்லலியே, ஆனா வேறே விதமா சிந்திச்சு படம் எடுத்து வியாபாரம் பண்ணலாமே, செந்தழல்!
ஷங்கர், எல்லாமே காப்பின்னு எடுத்துக்கிறதா, இல்லே இன்ஸ்பிரேஷன்னு எடுத்துக்கிறதா, அப்பட்டமா, கதையின் ஃபிரேம் பை ஃபிரேம்னா காப்பி, இல்லேன்னா இன்ஸ்பிரேஷன்!
இப்படி சொல்லி தட்டி கழிச்சிடுவாங்க!
அந்தக் காலம் எப்ப வருமோ சிவபாலன்????
வவ்வால், உங்க கருத்தை நான் முழுமையா ஏற்கிறேன்!
இப்படி பாலிடிக்ஸ் இல்லாம, ஹீரோவா பார்த்து செய்யாம படம் எடுத்து வரணும்னா, இந்த இண்டெஸ்ட்ரி மாறனும், ஒரு கார்ப்புரேட் மாதிரி செயல் படணும். ஆனா நம்ம ஃபிலிம் இண்டெஸ்ட்ரி இன்னும் 'குளோஸ் நிட் ' மாதிரி, ஹிந்தியிலே கொஞ்சம் மாறி அந்த நிலமைக்கு வர்றாங்க! ஆனா நம்ம தமிழகத்திலே மாத்தனும்னு வந்தவங்களும் ஜிவி மாதிரி பலி ஆயிட்டாங்க! இது மாறத வரைக்கும் ஒன்னும் மாறப்போதில்லை!
இங்கே பாருங்க ஹாலிவுட் காரன் எல்லா மார்க்கெட்ட்டையும் புடிச்சிட்டோம், அடுத்தது சைனா, பெரிய மார்க்கெட், அங்க புடிக்கணும்னா என்ன பண்ணனும்னு யோசிக்கிறான், நமக்கு அந்த அளவுக்கு இண்டெஸ்ட்ரி மாற்றம் கொண்டு வந்தால் ஒழிய ஒன்னும் ஆகப்போறதில்லை!
//வெளிநாட்டினர் இந்திய திரைப்படங்களில் இந்தியாவின் ஆன்மாவை பார்க்க ஆசைப்படுகிறார்கள்,இரவல் ஆன்மாவை அல்ல.// சரியா சொன்னீங்க!
வெளிநாட்டுப் படங்கள் யதார்த்தமா இருக்கு, முழு படமும் பாஸ்ட் பார்வர்ட் பண்ணாமல் பார்க்க முடியும்னு பின்னூட்டம் போட்டாலே, மொழித் துரோகின்னு பேச்சு வாங்கணும். இதிலே அதே மாதிரி படங்களா?
போனவாரம் நானும் என் மகளும் உட்கார்ந்து `Father of the Bride'ன்னு ஒரு படம் பார்த்தோம். தமிழ்ப் படம் எதுவுமே சேர்ந்து உக்கார்ந்து பார்க்க முடிவதில்லை என்பதுதான் நம்மூர் யதார்த்தம்
தமிழ்சினிமாவுக்கு நல்லா சூடு போட்டீங்க!
பிளாக்கில் வீடியோ கிளிப்பிங் எப்படிகொண்டுவர்றீங்க? விளக்கமுடியுமா!
வெளிகண்ட நாதர்,
//நம் சினிமாக்கள் ஏன் உலகை வலம் வருவதில்லை? //
இதற்கு தமிழ்த்திரை இரசிகர்களும் ஓர் காரணம் என்றே நான் நினைக்கிறேன். யாராவது யதார்த்தமாகப் படம் எடுத்தால் பெரும்பாலான தமிழ்த்திரை இரசிகர்கள் ஆதரிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, என் தாய்மண்ணின்[ஈழம்] கலைஞன் பாலுமகேந்திரா வீடு என்றொரு யதார்த்தமான படத்தை எடுத்தார். ஆனால் அப்படம் தோல்விப்படம் என்றறிந்தேன். ஆக அதிகமான தமிழ்த்திரை இரசிகர்கள் தொழிநுட்பத்துடன் கூடிய படங்களை எடுத்தாலும் ஆதரிப்பர்களா என்பது கேள்விகுரியது என்றே நான் நினைக்கிறேன்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
//தமிழ்ப் படம் எதுவுமே சேர்ந்து உக்கார்ந்து பார்க்க முடிவதில்லை என்பதுதான் நம்மூர் யதார்த்தம்//
தாணு,
என்ன கொடுமையா இருக்கு அப்போ எல்லா ஆங்கிலப்படமுமே குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிறாப்போல தான் இருக்கா :-)) எப்படி தேர்வு செய்து தான் ஆங்கில படம் பார்க்க முடியுதோ அப்படி தான் தமிழிலும் செலக்டிவ் ஆக பார்க்கணும்.இது தெரிஞ்சும் தெரியாத போல பொத்தம் பொதுவாக சொல்வது செலக்ட்டிவ் அம்னிசியா அல்லது ஆங்கில மோகம் ?
//தமிழ்ப் படம் எதுவுமே சேர்ந்து உக்கார்ந்து பார்க்க முடிவதில்லை என்பதுதான் நம்மூர் யதார்த்தம்//
தாணு,
என்ன கொடுமையா இருக்கு அப்போ எல்லா ஆங்கிலப்படமுமே குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிறாப்போல தான் இருக்கா :-)) எப்படி தேர்வு செய்து தான் ஆங்கில படம் பார்க்க முடியுதோ அப்படி தான் தமிழிலும் செலக்டிவ் ஆக பார்க்கணும்.இது தெரிஞ்சும் தெரியாத போல பொத்தம் பொதுவாக சொல்வது செலக்ட்டிவ் அம்னிசியா அல்லது ஆங்கில மோகம் ?
'வெற்றி' சொன்னது போல, எல்லாரையும் சாடிய நீங்கள், ரசிகர்களை விட்டுவிட்டது, கொஞ்சம் உறுத்தலாகத்தான் இருக்கிறது!
படம் எடுப்பவர், நடிப்பவர் யாரும் கலைக்காக செய்வதில்லை!
போட்ட பணத்துக்குக் கூட உத்திரவாதம் இல்லாத இந்த செல்லுலாயிட் உலகத்தில், ரசிகர்கள் ஆதரவின்றி இம்முயற்சிகள் வெற்றியடைய சான்ஸே இல்லை!
ஆனல், ஒரு நிஜமான மாறுதல் நடந்துகொண்டிருக்கிறது. அதையும் நீங்கள் சொல்ல விட்டுவிட்டீர்கள்!
2 தலைமுறை, அல்லது ஒருவனது முழு வாழ்க்கை போன்ற கதைகளை விட்டு, ஒரு நிகழ்வுக் கதைகளும் வர ஆரம்பித்துள்ளன. இது ஒரு ஆரோக்கியமான விஷயம்.
நல்ல பதிவு.
நாதரே, நீங்கள் உலகத் திரைப்படங்களை ஒரு முனையிலிருந்து பார்த்திருகிறீர்கள் எனத் தெரிகிறது. அமெரிக்க ஐரோப்பிய வாழ்க்கை முறையிலான கதைகளைச் சொல்லும் படங்கள் மட்டுமே திரைப்படங்கள் இல்லை. யதார்த்தமான நடிப்பும் நல்ல கதையும் கொண்ட அனைத்தும் சிறந்த திரைப்படங்களே. வியாபார ரீதியாக உலக அளவில் வெற்றி பெற வேண்டுமென்று நினைத்து நாம் ஏன் நம்முடைய தனித்தன்மையை இழக்க வேண்டும்?
//அந்தம்மா, அந்த நிலச்சுவாந்தாரோடு ஒரு ராத்திரி படுத்து தூங்கி தன் பசியை போக்கிக்க வேண்டியது தானே//
அவர்கள் சொல்வது போல் அமெரிக்கத் தனமான படம் எடுத்து அந்தம்மா, அந்த நிலச்சுவாந்தாரோடு படுத்துத் தூங்கினால் தான் நம்முடைய சினிமா உலகச் சந்தையில் பேசப்படுமானால் நாம் நம்முடைய மனைவியர்களை பணத்துக்காக வேறு யாருடனாவது அனுப்புவதற்குச் சமம்.
எங்கும் காப்பியடிக்கப் படாத கதை, வித்தியாசமான திரைக்கதை வேண்டும் என்று சொல்லுங்கள் ஒத்துக் கொள்கிறேன். உலகச் சந்தைக்காக நம்முடைய பாணியை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. நம்முடைய பாக்கியராஜ் படங்களின் பாடல்களை எடுத்துவிட்டுப் பார்த்தால் அவை உலகத் தரம் வாய்ந்ததுதான். வியாபரத்திற்காக பாடல்கள் சேர்க்கப்பட்டன. அவற்றில் பல நம் நெஞ்சை உருக்கும் என்றும் மறக்க முடியாத பாடல்கள்.
//நம்ம ஊருக்கு சாஃப்ட்வேர் படிக்க வந்திருக்கும் வெளிநாட்டு பொண்ணுக்கும், கால்செண்டர்ல வேலை பார்க்கறவனுக்கும் வரும் காதல், அதனால் உண்டாகும் சிக்கல், பிணக்கம், அப்படின்னு கதை களம் அமைச்சிக்கிட்டு இரண்டு கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி படங்கள் எடுக்க முயற்சி பண்ணலாமே//
சரி அப்படியே படம் எடுத்தாலும் கவர்சியாகவும் எடுக்க முடியாது. வெளிநாட்டில் வெயில் காலத்தில் வெளிநாட்டு பெண் சாதாரணமாக அணிந்து செல்லும் ஆடைகள் அணிந்து படம் யதார்த்தமாக எடுத்தால் கவர்ச்சி ஆபாசம் என்று முதலில் கூக்குரலிடுவது நீங்களாகத்தான் இருக்கும்.
ஏன் நம் பாய்ஸ் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். நம்ம சென்னையில் உள்ள வயசுப் பசங்கள் பேசிக்கொள்ளும் சாதாரணப் பேச்சுவார்தைகள் நம் மக்களுக்கு ஆபாசப் பேச்சாகத் தெரிந்ததே? அந்தப் படத்தில் சொன்ன டேட்டிங், பெற்றோரைப் பிரிந்து தனியே வாழ்வது போன்றவை வெளிநாட்டில் சாதாரணமாது தானே. ஆனால் நம் மக்களிடம் அது மிகுந்த எதிப்பைப் ஏற்படுத்தியதே? சொந்த நாட்டு மக்களிடம் எதிர்ப்பு என்கிற போது வெளிநாட்டு மக்களைத் திருப்திப்படுத்த எப்படிப் படமெடுக்க முடியும்?
//ஏன் இப்பதான் டெலிவிஷன் தாக்கம் கிராமத்து வரைக்கும் போயிடுச்சே, எம்டிவி வரைக்கும்! ஆனா அந்த பழைய பஞ்சாங்க கதை ட்ராக்லருந்து நமது தயாரிப்பாளர்கள் மாற முடியல்லை//
நம்முடைய கிராமத்தான் வேறு வழியில்லாமல்தான் எம்.டி வி பார்க்கிறானே தவிர, விருப்பப்பட்டு இல்லை.
நாம் வெளிநாட்டினரின் சிறந்த படங்களைப் பார்த்து அவர்களின் கலாச்சாரத்தைப் தெரிந்து கொள்கிறோம். ஆனால் நம்முடைய காலாச்சாரத்தைப் பார்த்து அவர்கள் கிண்டலடித்தால் அது அவர்களுகுத்தான் நஷ்டமே தவிர நமககல்ல.
உலகத்தரம் என்றால் என்ன என்று வரையறை செய்தீர்களானால் நாம் மேற்கொண்டு பேச வசதியாக இருக்கும்.
நாதரே, என் பின்னூட்டத்தை நான் மீண்டும் படித்த போது ஹைபிட்சில் பேசியது போல எனக்குத் தெரிகிறது எனவே ஒரு சிரிப்பான் :)
தாணு, பொதுவா, அது மாதிரி குடும்பத்தோட பார்க்கிற மாதிரி எல்லா படங்களும் இல்லைன்னு சொல்ல முடியாது! வவ்வால் சொன்ன மாதிரி எல்லாமே நம்ம கையிலே தான் செலக்ட் பண்ணி பர்க்கிறதுக்கு! அப்புறம் இந்த சென்சார் சர்டிபிக்கேஷன், அப்புறம் குடும்பத்தோட பார்க்க தகுதின்னு முத்திரை சான்றிதழ், இல்ல அறிவுப்புகள் நம்ம ஊர்ல அமர்க்களம் பண்ணி வெளியல தெரியற மாதிரி பப்ளிசிட்டி பண்றதில்லை! அதுவும் காரணமா இருக்கலாம். இங்கே PG(Paranetal Guidence) ன்னு முத்திரையோட DVDலயும் படங்கள் வெளி வரும் நம்ம ஊர்ல இதில்ல இல்லாத அயோக்கியத்த்னம் தான், வேறென்னௌமில்லை!
ஆமா என்னோட 'Sex and The City - Readers Discretion Advised!!' பதிவு படிச்சீங்களா, அதில இதப்பத்தி கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணி இருந்தேன்னே!
வெற்றி, முக்கியமா நம்ம தயாரிப்பாளர்கள் கொடுக்கிற சப்பைக்கட்டு இது! ரசிகர் எதை கேட்கிறாங்களோ அதை கொடுக்கிறோம்னு! நீங்க சொன்ன மாதிரி அந்த படங்கள் சரியா போய் சேராமல் இருந்தது உண்மை தான்! ஆனால் எப்பவுமே அது மாதிரி ஒரு கராணம் காட்டி, செய்யாம விடுறது அவ்வளவு சரியில்லை! எதையும் சொல்ல வேண்டிய முறையிலே சொன்ன கண்டிப்பா அது மக்களை போய் அடைஞ்சே தீரும்!
சித்தன், நீங்க வீடியே கிளிபிங் வச்சிருந்திங்கன்னா, அதை இலவசமா இணையத்திலே ஏத்தலாம். இதுக்குன்னு கூகுள், youTube,ன்னு வெப்சைட்ங்க இருக்கு. பிறகு அங்கே ஏத்துனோன்ன, அந்த சைட்லயே HTML Code கிடைக்கும் , அதை காப்பி பண்ணி உங்க பிளாக்ல ஒட்டிடுங்க, அவ்வளவு தான்!
எஸ்கே, வெற்றிக்கு சொன்ன பதிலு தான் உங்களுக்கு! முயற்சிகள் செய்தால் முடியாதது ஒன்றும் இல்லையே!
வெளிகண்ட நாதர்,
//வெற்றி, முக்கியமா நம்ம தயாரிப்பாளர்கள் கொடுக்கிற சப்பைக்கட்டு இது! ரசிகர் எதை கேட்கிறாங்களோ அதை கொடுக்கிறோம்னு!//
உண்மைதான். பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இப்படிச் சொல்லிக்கொண்டு பழைய பாணியையே பின்பற்றுகிறார்கள் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.
மகேஸ், பதிலு கொடுத்துக்கிட்டிருக்கப்ப, உங்க இன்னொரு பின்னோட்டம், ஹைபிட்சுன்னு, பராவாயில்லை சுமைலி போடாட்டாலும் போட்ட மாதிரி தான் எடுத்துக்குவேன். உங்க கேள்விக்கி வர்றேன் இப்ப!
//வியாபார ரீதியாக உலக அளவில் வெற்றி பெற வேண்டுமென்று நினைத்து நாம் ஏன் நம்முடைய தனித்தன்மையை இழக்க வேண்டும்?// நான் நம் தனித்தன்மையை இழக்க சொல்லவில்லை, ஆனால் அதை குறும் முறைகள், கதை அமைப்புகள் எல்லாம் உலக முழுக்க போக வழி என்னவோ அதை செய்வோம்னு சொல்றேன்!
அப்புறம் நம் பாணின்னு எதை சொல்றீங்க, நான் சொன்ன அந்த பழைய பஞ்சாங்க பாணியையா? இல்ல pseudo morals பத்தி சொல்றீங்களா? இன்னைய காலகட்டத்திலே வச்சு பேசுங்க! கதையிலே தாலி தாலின்னு சினிமாவிலே பேசுறவன், வெளியிலே சொந்த குடும்பத்திலே என்ன வேனும்னாலும் பண்ணக்கூடியவன்! எல்லாருமே ஒருவிதத்திலே ஹிப்போகிராட்ஸ்! வெளி நாட்டுக்காரன் எப்படின்னா, அந்த கஷ்டகாலத்திலே அப்படி ஒன்னும் இருக்கிறதிலே தப்பில்லைங்கிற லாஜிக் அவனுக்கு! அவ்வளவு தான்!
நம்ம எல்லாம் அதிகமா உணர்ச்சி வசப்படக்கூடியவங்க அதைத்தான் பாக்கியராஜ் கேஷ் பண்ணினாரு, அப்ப, ஆனா அதே பாக்கியராஜ், இப்போ ஒன்னும் பண்ணமுடியல்லையே, டுத்பெஸ்ட், பவுடர், கோக்கே கோலான்னு, செல்லு அப்படின்னு மாறி வரும் காலத்திலே அவரு டெக்னிக் ஒன்னும் ஓடலியே, இதத்தான் நான் சொல்றேன்! விஷயம் தெரிஞ்சு, உலக ஞானம் வளர்றப்ப, பழைய பஞ்சாங்கம் மக்கள் கிட்ட செல்லு படியாகுது, ஆனா வம்புகட்டி வலுக்கட்டாயமா நம்ம ஆளுங்க தொடர்ந்து அப்படி படம் எடுத்து வராங்க. உதாரணத்து இந்த திருப்பதி படம் எடுத்துக்கங்க, எல்லாம் மண்ணு! அந்த டைரக்டர் வெற்றி டைரக்டராம், ஏவிஎம் மாதிரி நிறுவனங்கள் போய் விழுது, இதை என்ன சொல்ல!
இந்த பாய்ஸ் கதை வேறே, சொல்ல வந்தக்கரு உண்மையாக இருக்கலாம், ஆனா ரொம்ப அட்வான்ஸா அவங்க போய்ட்டாங்க! வெளிநாட்ல அந்த மாதிரினாலும் நடைமுறையிலே நாம் இன்னும் அப்படி ஆகிடல!
இன்னோன்னு சொல்றேன் கலாச்சாரங்கள் மேன்மையாக நிற்பது நாம் எவ்வளவு பவர்புல்லா இருக்கிறோம் என்பதை பொறுத்து! வாஸ்த்த்வம் தான் அவன் கிண்டலடிப்பது, அதுவே அவனும் ஏத்து பின்பற்றும் நாட்கள் வராம போகபோவதில்லை! இதை பத்தி அடுத்த பதிவு ஒன்னு எழூதிக்கிட்டு இருக்கேன், அதை படிச்சிட்டு சொல்லுங்க அப்புறம்!
//அப்ப, ஆனா அதே பாக்கியராஜ், இப்போ ஒன்னும் பண்ணமுடியல்லையே, //
அப்படி இல்லீங்க. அவரு சின்ன டைரக்டராக மக்களோடு மக்களாக இருந்தபோது வெளிஉலகத்திலேருந்து நிறைய யதார்த்தமான கதைகளை எடுத்துக்கிட்டார்.
ஆனா பெரிய ஆளா வளந்ததுக்கு அப்புறம் அவர் சாதாரண மக்களிடம் இருந்து விலகிச் சென்றதால் சுவாரசியமான கதைகளை எடுக்க முடியவில்லை என்பதே காரணம்.
நானும் ஒத்துக்கிடறேன் நிறைய குப்பையான படங்கள் வருகின்றன. ஆனால் நல்ல படங்களே இல்லையென்பது மாதிரிச் சொன்னதால்தான் முதன் முதலா ஒரு பெரிய பின்னூட்டம் :))
அடுத்த பதிவை எதிர்பாக்குறேன்.
நல்ல அலசல் உதயகுமார்.
நடிகருக்காகன்னு கதை செய்யறதைக் கொஞ்சம் மாத்தினாலும் போதும். ஜனங்க கேட்டாங்கன்னு
சொல்லிக்கிட்டே நாலு ஃபைட், நாலு பாட்டு( அதுவும் நியூஸியிலே)ன்னு இருக்கறதை விட்டுருவாங்கன்னு
நினைக்கிறீங்களா?
//நானும் ஒத்துக்கிடறேன் நிறைய குப்பையான படங்கள் வருகின்றன. ஆனால் நல்ல படங்களே இல்லையென்பது மாதிரிச் சொன்னதால்தான் முதன் முதலா ஒரு பெரிய பின்னூட்டம் :))// மகேஷ், நான் அப்படி சொல்லவில்லை, நல்ல படங்கள் என்பது நமது எல்லைக்குள் தான், ஆனா, நான் சொல்ல வர்றது, அதையும் தாண்டி, உலக மக்களின் ரீச்சுக்கு போக!
வாங்க துளசி, நீங்க நம்ம வீட்டாளுங்க மாதிரி, இந்த நெருங்கிய சொந்தம் தான் தாலி கட்டற நேரத்துக்கு வரமாட்டாங்கங்கிற கதையா, ஏன் லேட்டு-:), உலக உஷ்ணத்தை பார்க்கலையா?
//ஜனங்க கேட்டாங்கன்னு
சொல்லிக்கிட்டே நாலு ஃபைட், நாலு பாட்டு( அதுவும் நியூஸியிலே)ன்னு இருக்கறதை விட்டுருவாங்கன்னு
நினைக்கிறீங்களா?// விடச் சொல்லல, அதையே தெவை இருந்து தரவேண்டிய விதத்திலே தந்தோ, எல்லா மக்களையும் அடையற மாதிரி, உலக முழுக்க பிஸ்னஸ் போற மாதிரி செஞ்சாங்கன்னா சரி!
//
ஷங்கர், எல்லாமே காப்பின்னு எடுத்துக்கிறதா, இல்லே இன்ஸ்பிரேஷன்னு எடுத்துக்கிறதா, அப்பட்டமா, கதையின் ஃபிரேம் பை ஃபிரேம்னா காப்பி, இல்லேன்னா இன்ஸ்பிரேஷன்!
இப்படி சொல்லி தட்டி கழிச்சிடுவாங்க!
//
வெ. நா,
தமிழ்நாட்டில் அல்லது இந்தியாவில் இவர்களை "இன்ஸ்பயர்" செய்வது போல் எதுவும் நடப்பதே இல்லையா?
..
இதை எண்ணிப்பார்க்கும் பொழுது...ஜப்பானிய தொழில்னுட்பக் கம்பெனிக்கள் நிலை தான் ஞாபகத்திற்கு வருகிறது...இரண்டாம் உலகப் போரின் பிறகு வந்த பல கம்பெனிக்கள் அமேரிக்க மற்றும் ஐரோப்ப தொழில்னுட்பத்தைக் காப்பியடித்து நிரய சீப் தொழில்னுட்பத்தை செய்துகொண்டிருந்தனர்...இன்று நிலை வேறு...அனேகமாக ஒரு Threshold தாண்டவேண்டும் என்று நினைக்கிறேன்...அது economic criteria வாகக் கூட இருக்கலாம்..
தயாரிப்பாளர்கள் தைரியமாக பணம் போடுவது மிகச் சிலரே கியாரெண்டி வேண்டும்...ஹாலிவுட்டில் அப்படி இல்லை இன்சூரன்ஸ் இருக்கும்...
மொத்தத்தில் மக்கள் எண்ணங்கள் மாற படத்தின் தரமும் மாறும்... (Mainstream movies!!, எனக்கு இந்த தனி Art film ல் நம்பிக்கை இல்லை..)
ஷங்கர், நீங்க சொல்றது ரொம்ப சரி, நம்ம இன்னும் அந்த Threshold வரை வரலை! ஒரு வேளை கொஞ்சம் காலம் கழித்து அந்த quality வரலாம்! ஆனா அதுக்கு நம்ம தமிழ் பட உலகம் தயாராயிட்டாங்களான்னு தெரியல்லை, எனக்கு தெரிஞ்சு ஹிந்தி படங்கள் சீக்கிரம் அந்த நிலையை எட்டிபிடிச்சிடும், ஏன்னா பாலிவொட்னா, வெளிநாட்டவருக்கு இப்ப எந்த வித்தியாசமும் தெரியல்லை, எல்லா இந்திய திரைப்படத்திலயும்! அந்த வித்தியாசம் சீக்கிரம் தெரிஞ்சுக்குவாங்க!
நல்ல அலசல். பின்னூட்டங்களும் பின்னி விட்டன :) நீங்கள் உலகத் தரம் பற்றி பேசுகிறீர்கள் என்றால் கான் போன்ற திரைவிழாக்களில் பரிசு வாங்குவது போன்றா அல்லது ரீச் என குறிப்பிடுகிற மேற்கத்திய பொதுஜன படங்களா ? இரண்டாவதென்றால் அவை மேற்கத்திய பொதுஜன இரசனைக்கு ஏற்றவாறு தானே எடுக்கப் பட வேண்டும். அப்போது நமது தனித்தன்மை இழக்கிறோமே. முதலாவது என்றால் நமது நல்ல சிலப் படங்கள் இந்திய அரசின் பாலிவுட் பயசினால் பரிந்துரைக்கப் படாமல் வெளிச்சத்திற்கு வரவில்லை.
தமிழ்ப்படத்தை பொறுத்தவரையில் மின்னலே, செல்லமே, காதல், செல்வராகவன் படங்கள் என பழைய தடத்திலிருந்து மாறுபட்ட கதையமைப்புடன் படங்கள் வந்து கொண்டுதானே இருக்கின்றன.
மணியன், நான் உலகத்தரம் என்பதி விழாக்களில் திரையிடும் படங்கள் மட்டும் என்ற கண்ணேட்டத்திலெ எழுதவில்லை, வெளி நாட்டு பொது ஜனத்தையும் தான் சேர்க்கிறேன்! நான் கூறுவது அனைத்தும் ஹொலிவுட் பணங்களுக்கு இணையாக நம் திரைப்படங்களுக்கு மார்க்கட் ஏற்படுத்துவது! நல்ல வியாபாரமாக, இது ஒரு வியாபாரம் என்று வரும் பொழுது சில தனி தன்மைகளை இழந்து தான் ஆக வேண்டும். ஏனென்றால் அடைய வேண்டிய தூரம் அதிகம்!
நீங்கள் கூரும் அந்த பாலிவுட் பயஸ்தான் எல்லாமே பாழாய் போவதற்கு காரணம். ஒரு முறை என் ஆஸ்கர் விருந்து பதிவு எழுதுகையில் இதைப்பற்றி கூறி இருந்தேன்!
Post a Comment