இந்த பதிவுகள் எழுத ஆரம்பிச்சு, அதை தமிழ்மண திரட்டி மூலம் வெளி கொண்டுவந்து உலக மக்களூக்கு நமது எழுத்து வல்லமையை எடுத்து சொல்ல, இந்த தொழில்நுட்பமும், இணையமும் எவ்வளவு ஒத்தாசையா இருக்குது பார்த்தீங்களா! அதுவும் தமிழ்ல மாட்லாடுவதுக்கு! இதெல்லாம் ஒரு அஞ்சு,ஆறு வருஷத்துக்கு முன்னே நினைச்சு பார்க்கிற காரியமில்லை! எல்லாமே நுட்ப வளர்ச்சி! யுனிக்கோடு, உன்கோடுன்னு அதன் தொழில்நுட்பங்களை தெரிஞ்சு வச்சிருப்பீங்கன்னு நினைக்கிறேன், இல்லையினா ஒரு எட்டு காசி போட்ட அந்த விளக்கத்தை எல்லாம் படிச்சி பார்த்துட்டு வாங்க! அப்புறம் செய்தி திரட்டின்னு இந்த 'RSS' இயங்கும் முறை, அதன் மூலம் எப்படி வலைப்பதிவு திரட்டிகள் வேலை செய்யுதுங்கிற விளக்கத்தை நிறைய பேரு எழுதிட்டாங்க! அப்புறம் இந்த வலைபதிவுகள்ல அதிகமா உறவாடும் நெஞ்சங்கள் எல்லாம் கம்ப்யூட்டர் துறையை சேர்ந்த ஜாம்பவான்கள், அதனால, இந்த விஞ்ஞான உண்மைகள் எல்லாம் பொதுவா தெரிஞ்சிருக்கும்! இல்லைன்னா அவங்க மாதிரி ஆளுங்களை ஃபிரண்டு புடிச்சு, விவரம் கேளுங்க, மத்த விஷயம் பேசறப்ப நிறைய கம்ப்யூட்டர் நண்பர்கள் கிடைச்சிடுவாங்க! ( பொதுவா விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதறவன் தான், இதிலே கொஞ்சம் நான் அடக்கியே வாசிக்கலாமுன்னு தான்!) அப்படி நம்ம பெருகி ஒரு கூட்டு குடும்பம் மாதிரி ஆயாச்சி! இப்ப உங்க முன்னே நான் வைக்கும் கேள்வி பொதுவா உங்களுக்கு எதிலே ஆர்வம், பின்னோட்டமிடுவதிலா, இல்லை புதுசு புதுசா பதிவுகள் சுட சுடப் போடுவதிலா?
இப்ப வர்ற பதிவுகளை வச்சு பார்க்கிறப்ப, சில பேருக்கு புதுசு புதுசா விஷயங்களை எழுதணும்னு தோன்றதாலே அப்ப அப்ப பதிவுகளை போட்டு கிட்டெ இருப்பாங்க, சில பேரு விஷயம் இருக்கோ, இல்லையோ சும்மா ஏதாச்சும் எழுதி பதிவு போட்டு, தமிழ்மணத்தில முதல்ல அப்ப அப்ப நம்ம பதிவுகள் நிக்கணும்னு ஆசை, ஏன்னா 'இந்த நிமிடம்' பக்கம் வந்து 'static'ஆ அப்படியே நின்னுறதில்லையே, அப்படியே ரோலோவர் ஆயிக்கிட்டே 'dynamic' கா இருக்குமே, படிக்க வரை ரொம்ப பேருக்கு இடுகைகள் tabஐ கிளிக் பண்ணி, விலாவாரியா ஒவ்வொன்னா மேஞ்சு கண்டுபிடிச்சு படிக்க பொறுமை இருக்காது! அதனால அப்ப அப்ப முழிச்சிக்கிற வரை, ஏன்னா 'இந்த நிமிடம்' 24 மணி நேரமும் ரோலோவர் ஆயி வேலை செய்யக்கூடியதே, ஏதாவது பதிவு போட்டு முதல்ல வர்ற மாதிரி பார்க்கிற ஆளாக்கூட இருக்கலாம் நீங்க! சிலப்பேரு சும்மானாலும் எதையாவது தொட்டுபுட்டு குசும்பா எதையாவது இழுத்துவிட்டு, பின்னோட்டத்திலே காலம் கழிக்கலாம்!
இந்த பின்னோட்டமும் அப்படி தான், ஒரு அடிமை ஆக்கிடும்! 'அன்மையில் மறுமொழி செய்யப்பட்ட இடுகைகள்'னு வரக்கூடிய லிஸ்ட்ல அப்ப அப்ப பதிவு தலைப்பு வந்தா, ஹிட்டுக்கு சான்ஸ் இருக்குங்கிற வியாபார தந்திரம் மாதிரி கூட இருக்கலாம். அதுக்காக ஸ்பெஷலா 'அதிகம் பின்னோட்டம் பெறுவது எப்படி'ன்னு பதிவு போடறவங்க தரும் டிப்ஸ்ஸை வச்சி அதிகமா பின்னோட்டம் பெற்று பதிவு தலைப்பு அந்த 'அன்மையில் மறுமொழி செய்யப்பட்ட இடுகைகள்' பகுதியிலே வர்ற மாதிரியும் பார்த்துக்கலாம்! இல்லை சுவாரசியமா கருத்து பரிமாற்றங்கள் செஞ்சுக்கிட்டு, அது மூலம் விஷய ஞானம் வேணும்னு பின்னோட்டங்கள்ல அதிக ஈடுபாடு கொள்ளலாம்! இல்லை வெட்டியா சண்டை போட்டுகிட்டு திட்டி தீர்த்துக்கிட்டு பொழுதை கழிக்கிறதில்லை விருப்பம் கொண்டவராக் கூட இருக்கலாம்! இல்லை தனக்குன்னு சில குரூப்பா இருக்கிறவங்களோட மட்டும் இந்த சாட்டிங் செய்ற மாதிரி பின்னூட்டங்கள் போட்டுக்கிட்டு இருக்கலாம்! இல்ல எதிர்மறை கருத்துக்கள் சொல்றேன்னு குண்டக்க முண்டக்கன்னு பதில் கொடுத்து, பதில் வாங்கறதிலேயும் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம்!
ஆக மொத்ததிலே ரெண்டுமே ஒரு அடிக்ட் மாதிரி தான், தமிழ்மணம் பக்கம் வந்த நம்ம எல்லாருக்கும் இது தெரியும். அதுனால இந்த பதிவின் பின்னோட்டத்திலே நீங்க உங்க கருத்தை சொல்லலாம், உங்க ஆர்வம் எதில்லைன்னு பதிவுகள் இடுவதிலையா, இல்லை பின்னோட்டம் இடுவதிலையா? இல்ல இரண்டுத்திலயுமே வா! அதுக்கான காரணத்தையும் நீங்க விரும்புனீங்கனா எழுதுங்க! இல்லைன்னா விட்டு விடுங்க! அப்படியும் இல்லேன்னா உங்களுக்கு இதுவரைக்கும் ஏற்பட்ட அனுபவங்கள் ஏதேனும் புதுசா இருந்தா எழுதுங்க!
இது முற்றிலும் நகைச்சுவையா எல்லாரும் 'paraticipate' பண்றதுக்காக, என்னோட நட்சத்திர வாரத்திலே இது ஒன்னு புதுமையா இருக்கட்டுமேன்னு இந்த விளையாட்டு! ஆதலால் இதை ஸ்போர்டிவா எடுத்துக்கிட்டு பின்னோட்டம் போடுங்க, சும்மா விளையாடலாம்-:)
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
நமக்கு பின்னூட்டம் தானுங்க, ஏன்னா அதுல பல எண்ண ஒட்டத்த சின்னதா ஆக்கி சொல்ல ஒரு சந்தர்ப்பம்(?). அதே சமயத்துல எழுதறவங்க எவ்வளவோ கஷ்ட பட்டு எழுதறாங்க, அதுக்கு ஒரு சிறு பின்னூட்டம் எதிர் பார்க்கறது தான சரி!
சரி... சரி.... ஆரம்பிச்சு வெச்சுட்டேன், அடியா பாத்துட்டு மருக்கா வர்ரேன்.:-)
பதிவு போடுறதை விட பின்னூட்டம் போடுறதுதாங்க ஜாலியான விஷயம்.
அந்தப் பின்னூட்டதுக்கு என்ன பதில் வந்திருக்குன்னு பாக்குறெதே ஒரு போதைதான்!
பின்னூட்டத்தைப் பத்தி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?
//பின்னூட்டத்தைப் பத்தி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?//
அதான!
வெளிகண்ட நாதர்,
நான் தமிழ்மணத்தில் இணைந்தது ஏப்பிரல் 2006. இது வரை ஒரு பதிவும் தமிழ்மணத்தில் ஏற்றவில்லை. பலர் நல்ல பல சங்கதிகளை எழுதும் போது அவர்களைப் பாராட்டி ஊக்குவிப்பதும் , அவர்கள் பதிவு பற்றிய என் கருத்துக்களையும் பின்னூட்டமாக இட்டு வருகிறேன்.புதுப்பதிவுகள் போடும் எண்ணமும் உண்டு.
நமக்கு இப்பல்லாம் பின்னூட்டறதுலதாங்க ஆர்வம் இருக்கு. காரணம் புது பதிவு போடறதுக்கு யோசிக்கனும்.. நிறைய டைப் அடிக்க நேரம் ஆகும்.
ஒரு விஷயம் கவனிச்சீங்களா.. பின்னூட்டம்கிறது காசி commentக்கு செஞ்ச முதல் தமிழாக்கம். ஆனா அவரே இப்போ 'மறுமொழி'ன்னு மாத்திட்டாலும் இன்னும் நாமெல்லாம் பின்னூட்டம்னுதான் சொல்லிட்டு இருக்கோம். அதுல இருக்கற 'ஊட்டம்' ரொம்ப புடிச்சிருக்கோ என்னவோ!
ஊட்ட சக்தி உடம்புக்கு நல்லது
புதுமொழி:-))
இப்போதைக்கு, எனக்கு பதிவு போடறதுல ஆர்வம் நிறைய இருக்கு, வலைக்கு வந்து இரண்டு மாதங்களே இருப்பதாலிருக்கலாம்.
பின்னூட்டங்கள் - என்று சொல்வதைவிட பின் ஊக்கிகள் என்று சொல்வதே சிறப்பு. அரட்டையாய் இடுவதைவிட, ஆக்கமாக விடுவதே என் விருப்பம்..
வெளிகண்டரே!
இதைக் குறித்து பதிவாய் போட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். சமீபத்தில் பினாத்தல் சுரேஷ், தமிழோவியம். காமில்
சிறப்பு ஆசிரியராய் பொறுப்பேற்று அமீரக பதிவாளர்கள் சிலரிடம் எழுப்பிய கேள்விக்கு என் பதில் கீழே!
பின்னூட்டங்கள் தரத்தின் அளவுகோலா? தேவைப்படும் போதையா? தேவையற்ற திசைதிருப்பல்களா?
ஆம், இல்லை :-) ஒரு அளவுக்கு தேவையே! ஆரம்பத்தில் பின்னுட்டம் பெறுவதில் இருக்கும் துடிப்பு, போதை நாளாவட்டத்தில் படைப்பாளிக்கு குறைந்துவிடும். விட வேண்டும், இல்லை என்றால் குழு மனப்பான்மையில் ஒரு வட்டத்தினுள்ளே சுழல வேண்டி வரும். நல்ல எழுத்துக்களும் பிறர் கண்ணில் படமால் போக நேரிடும்.
//ஊட்ட சக்தி உடம்புக்கு நல்லது//
ஊட்ட சக்தி உடம்புக்கு கெட்டது என்று கைப்புள்ள சொல்கிறார்.
"இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிப்புட்டாங்கப்பா.."
என்னைப்பொருத்த வரை பின்னூட்டங்கள் நமது பதிவு/படைப்பின் தாக்கத்தை அறிந்துகொள்ளும் பாரோ மீட்டர் என்பேன் ஆனால் பெரும்பாலும் ஒரு ஸ்டாண்டர்டு முறையில் பலர் பின்னூட்டங்கள் போட்டு அதன் நோக்கத்தை மாற்றுகிறார்கள்,
என் கதை ஒரு சில பதிவுகள் கொஞ்சம் விளக்கமான பின்னூட்டங்கள் தேவையான பதிவுகளுக்கு மட்டும் இடுவது என சீராக செல்கிறகு என் தமிழ்மணப்பயணம்.அதிக பின்னூட்டங்கள் வாங்க மறுமொழி இடப்பட்டவையில் அடிக்கடி வரவைப்பார்கள் என நீங்கள் சொல்லியுள்ளீர்கள்,எனது பதிவில் மறுமொழி இடப்பட்டவையில் காடுவதற்காண பதிவு பட்டையை கூட நிறுவவில்லை ஒரு முறை பதிவிடும் போது மட்டும் தமிழ் மணத்தில் தோன்றும் செகண்ட் ரிலீஸ் செய்வது இல்லை எனது படத்தை :-))
சில ஸ்டாண்டர்டு பின்னூட்டங்கள்.
1) :-)) (வெறும் சிரிப்பான் தான் பின்னுட்டம்)
2) தல கலக்கிட்டிங்க !(என்ன கலக்கினார்னு தெரிஞ்சுக்காமலே சும்மா குன்சா அடிச்சு விடுறது)
3) இன்னும் உங்கள் பதிவை படிக்கவில்லை ஆனால் நல்ல பதிவு( அது எப்படிங்க படிக்காமலே நல்லா இருக்குனு சொல்றது அந்த வித்தையை நமக்கும் சொல்லுங்கண்ணா!)
4) + குத்திட்டேன் ( நானும் கச்சேரில தலைய காட்டிட்டேன் அப்படி சொல்லிக்கிறது)
5) மறக்காம வந்து அட்டெண்டன்ஸ் போட்டேன் அப்படியே நம்ம பக்கம் வந்து பதில் மொய் எழுதுங்க (இப்படி நான் செய்ததிற்கு பதில் செய்னு கூசாம கேட்டு வாங்கிகொள்வது )
இன்னும் நிறைய வகையான ஸ்டாண்டர்டு பின்னூட்டங்கள் இருக்கு சில உதாரணங்கள் மட்டுமே இவை!
இப்படி பட்ட பின்னூட்டங்கள் அந்த பதிவின் கருத்தை எதிரொலிப்பதே இல்லை ,இது போன்ற பின்னுட்டங்கள் அதிகம் பெறுவது தான் அடிக்ட் வகை சேரும் வெளிகண்ட நாதர் :-))
//1) :-)) (வெறும் சிரிப்பான் தான் பின்னுட்டம்)
//
இந்தப் பதிவைப் படித்துவிட்டு நானும் சிரித்தேன்,(வேறொன்றும் சொல்வதற்கில்லை !?) என்பதைத்தான் ஒரு சிரிப்பான் மட்டும் போடும் பின்னூட்டம் விளக்கும்.
//இன்னும் உங்கள் பதிவை படிக்கவில்லை ஆனால் நல்ல பதிவு( அது எப்படிங்க படிக்காமலே நல்லா இருக்குனு சொல்றது அந்த வித்தையை நமக்கும் சொல்லுங்கண்ணா!)
//
இன்னும் உங்கள் பதிவை படிக்கவில்லை, பிறகு படித்துவிட்டு கருத்து சொல்கிறேன் என்று பொருள்.
ஆனாலும் நல்ல பதிவு என்று யாரும் சொன்னதாகத் தெரியவில்லை.
தனிமடல்.
உதயகுமார்,
உங்க சினிமா பதிவை 'தேசி பண்டிட்'லே லிங்க் செஞ்சிருக்கேன்.
http://www.desipundit.com/category/tamil/
பின்னூட்டத்தைப் பத்தி நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?
:-) :-)
எனக்கு இரண்டிலேயும் ஆர்வம் உண்டு பாபா ஐயா. பதிவுகள் போடுவதில் ஆர்வம் உண்டு. முதல் பக்கத்தில் எப்போதும் வர வேண்டும் என்பதால் இல்லை. எழுதுவதற்கு நிறைய சங்கதி தோன்றுகிறது. தோன்றத் தோன்ற எழுதுகிறேன். என் பதிவில் வரும் பின்னூட்டங்கள் எல்லா வகையிலும் அடங்கும் - வருகைப் பதிவு செய்யும் பின்னூட்டங்கள் (இதனைக் கேட்டுப் பெறுகிறேன்; யார் படித்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக), கருத்துள்ள பின்னூட்டங்கள், கருத்தே இல்லாமல் சும்மா விளையாட்டுக்காக வரும் பின்னூட்டங்கள். இவை எல்லாவற்றிற்குமே பதில் சொல்லுகிறேன். எதனையும் வேண்டாம் என்று சொல்வதில்லை. (அசிங்கப் பின்னூட்டங்களையும் முத்திரைக் குத்தல் பின்னூட்டங்களையும் தவிர). மற்றவர் பதிவுகளிலும் பின்னூட்டங்கள் இடுவது மிகவும் பிடிக்கும். அதிலும் கருத்துள்ள பின்னூட்டங்கள், விளையாட்டுப் பின்னூட்டங்கள் என்று போடுவதுண்டு.
உங்க பதிவைத் தொடர்ந்து படித்துப் பின்னூட்டம் இடுபவர்களில் நானும் ஒருவன் தானே. என்ன சிவபாலன் போல் எல்லார் பதிவையும் படித்துப் பின்னூட்டம் இட முடிவதில்லை. எப்படித் தான் அவருக்கு நேரம் கிடைக்கிறதோ? :-)
ஒரு நல்ல நடிகனுக்கு, ரசிகர்கள் எவ்வளவு தேவையோ, அதுபோலத்தான் பின்னூட்ட, மறுமொழி இடும், பின்னூக்கிகள்!
எல்லாரும் நடிகனாக முடியாது.
ஆனால், ரசிக்க முடியும்.
நான் இருவகைகளையும் விரும்புபவன்.
என்னவோ சொல்லறீங்க. இந்த சப்ஜெக்டே நமக்குப் புரியறது இல்லீங்க. எதுக்கும் வைத்தியரை ஒரு வார்த்தை கேட்டுட்டு கருத்து சொல்லறேன். :-)
சார்,
நமக்கு பின்னூடம் மட்டுமே. பதிவு போடுவதில் ஆர்வம் குறைவாகவே உள்ளது. விசய்மும் கம்மியாகதான் உள்ள்து.
ஆனாலும் இப்படி ஒரு பதிவு போட்டு ஒரு கல்க்கு கலக்கீடீங்க..
நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கருத்துப் பின்னூட்டமிடுவதும், சில நேரங்களில் 'டேக் இட் ஈசி' மக்களுடன் மனச ரிலக்ஸா வைச்சிகிறதுக்காக கலாய்கிறதுக்கும் இந்த பின்னூக்கிகள் (அடெ இது கூட நல்லாத்தான் இருக்கு) உதவுகின்றன.
குறிப்பாக 'சிபி" யோட ஒவ்வொரு ஊக்கியும் ஒரு சிரிப்பு மாத்திரை :-) எனக்கு...
தெகா.
குமரன் சார்,
நைசா என்னை ஓட்டரீங்களா..
இல்லைங்க இப்ப வேலை பளு அதிகமாகிவிட்டது.
போனா வாரம் நம்ம செல்வன் சார், இப்ப நம்ம வெளிகண்ட நாதர் சார். அதனால தான் இங்கே சுத்திட்டிருக்கேன்.
என்னுடை மேனேஜர் வேர கொஞ்சம் ரவுசு கெளப்பராரு.
உங்கள் பதிவுக்கு கூட அதிகமாக வரமுடியவில்லை. மன்னிக்கவும். (தமிழ் சொன்ன இதயத்தை மறக்கமுடியாது)
உதயகுமார்,
நானும் ஒரு பின்னூட்டக்காரி தான்.. (புதுப் பட்டம் ஹி ஹி).. பதிவு எழுதுவேன். ஆனா ரொம்ப ஆர்வமா எழுதறது இல்லை. ஆரம்பத்தில் வந்த புதுசுல ஒரு வாரத்துக்கு மூணு பதிவுன்னு எழுத நினைச்சேன். ஆனா, அதுல ஒண்ணும் சரக்கு இல்லாம போய்டுச்சு. ரெண்டு வாரம் தான். அப்புறம் சுதாரிச்சிட்டேன். படிக்கிறதுல இருக்கும் ஆர்வம் பதிவு எழுதுவதில் இல்லை எனக்கு.(மேட்டர் இருந்தாத் தானே?!)
பொதுவா நான் போடும் பின்னூட்டங்கள் 4 வகைப் பட்டவை:
1. விஷயம் தெரிஞ்சிக்கிற ஆர்வம். கேள்வியா நிறைய பின்னூட்டம் போடுவேன். சமயத்துல ரொம்ப trivial-லா இருக்கும் :). அந்தக் கருத்துல எனக்குத் தெரிஞ்சதை உறுதிப் படுத்திக் கொள்ளும் கேள்வியாக் கூட இருக்கலாம்.
2. மாற்றுக் கருத்தோ ஒத்த கருத்தோ சொல்வதற்காக. இது கொஞ்சம் கம்மி தான். நமக்கு பல சப்ஜெக்ட்ல கருத்தே இருக்காது :). அப்புறம் பல சப்ஜெக்ட்ல, நம்மை யாரு கருத்து கேட்கப் போறாங்கன்னு தோணும் :)
3. இது தவிர பதிவர் ரொம்ப தெரிஞ்ச ஆளாவோ, எங்க சங்கத்து சிங்கமாவோ, இல்லைன்னா, பதிவு கொஞ்சம் காமெடி அனுமதிக்கிற பதிவாவோ இருந்தா நிச்சயம் ஒண்ணு ரெண்டு பின்னூட்டம் கிண்டல் பண்ணி போட்டிருப்பேன்.
4. சில சமயத்தில் ரொம்ப வெட்டியா இருக்கும் போது இந்த அரட்டை பின்னூட்டங்களும் போடுவது உண்டு. அதெல்லாம் இப்போ ரொம்ப குறைச்சிட்டேன்னு நினைக்கிறேன். தெரியலை.
அடுத்து, நீங்க இந்த மறுமொழியிடப் பட்ட இடுகைகள் பத்தி சொன்னதால, நான் எப்படி நான் படிக்கும் பதிவைத் தேர்ந்தெடுக்கிறேன்னு சொல்றேன்:
1. எல்லாரையும் போல நானும் ஒரு ஸ்டார் பதிவர் லிஸ்ட் வச்சிருக்கேன். ஆனா, நம்மளது கொஞ்சம் நீஈஈஈளம். கிட்டத் தட்ட 20-25 பதிவர்கள் இருப்பாங்க அதுல. நல்லவேளையா இவங்க போடும் எல்லாமும் படிக்க எனக்கு நேரம் கிடைக்குது.
2. தமிழ்மண முகப்பு மற்றும் மறுமொழி இடப்பட்ட இடுகைகள் - முன் பக்கத்தில் தான் இருக்கணும்னு எந்த கணக்கும் இல்லை. கூடியவரை ஒரு நாளில் மறுமொழி இடப்பட்ட எல்லா இடுகைகளையும் தேடிப் படிச்சிடுவேன்.
3. ஒரு பதிவைப் படிச்சு, பிடிச்சிருந்தா அந்த டிஸ்கஷனை ஊத்தி மூடும் வரை தொடரந்து படிப்பது என்னோட வழக்கம். இந்த மாதிரி பதிவுகள்ல பின்னூட்டம் போடுவேனா, மாட்டேனா என்பது உறுதியா சொல்ல முடியாது. ஆனா மத்தவங்க என்ன பேசறாங்க என்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பேன்.
4. பொதுவா ரொம்ப நீளமான பதிவெல்லாம் படிக்கிறது இல்லை. தலைப்பும், எழுத்தும் ஆர்வத்தைத் தூண்டினா மட்டும் தான் நீளமான பதிவு படிக்கிறதே. அந்தப் பதிவை எழுதினவர் என்னோட ஷார்ட் (லாங்?) லிஸ்ட்ல இருந்தாலும் சரிதான்.
சுருக்கமா, நான் ஒரு full time Thamizmanamite.. வேலை வெட்டி இல்லையான்னு யாரும் கேட்டுறாதீங்க.. எல்லாம் அதுவும் பார்ப்போம்.. கொஞ்சம் ஆர்வக் கோளாறு.. அவ்வளவு தான்.
(பதிவை விடப் பெரீசாப் போய்டுச்சோ?!! )
பதிவு போடுவது அப்போதைய நேரத்தைப் பொறுத்து; பின்னூட்டமிடுவது தெரிவு செய்யப்பட்ட பதிவுகளுக்கு மட்டும்; பின்னூட்டங்கள் அனைத்தையும் வாசிப்பது ரொம்ப பிடிச்சது. மனிதரில் இத்தனை நிறங்களான்னு வியக்க வைப்பவை பின்னூட்டங்களே!!
எல்லா பதிவுகளுக்கும் பின்னூட்டம் இடுவதில்லை,நிச்சயமாக பின்னுட்டம் இட வேண்டும் என்று படித்த பின் தோன்றினால் மட்டுமே பின்னூட்டம் இடுகிறேன்.
எழுதுவதற்கு கொஞ்சம் சரக்கு அதிகமாகவே இருக்கு அதைவிட நிறைய படங்கள்(photos) பதிவுகளில் வருவதற்கு காத்துகிடக்கிறது.ஆகையால் எழுதுவது இப்பொழுதைக்கு கொஞ்சம் முந்துகிறது.
//குறிப்பாக 'சிபி" யோட ஒவ்வொரு ஊக்கியும் ஒரு சிரிப்பு மாத்திரை :-) எனக்கு...
//
உள்ளம் உருகுதைய்யா! தெகா!
உன்னடி காண்கையிலே!
(அடி என்பது வரி என்னும் பொருள் தரும் இவ்விடத்தில்)
//உள்ளம் உருகுதைய்யா! தெகா!
உன்னடி காண்கையிலே! //
இப்படித்தாங்க வெ. நாதரே, பாருங்க வந்தாரு வெடியெ தூக்கி என் பாக்கெட்டுகுள்ளே போட்ட மாதிரி ஒண்ண கொளுத்தி போட்டுட்டு என்ன தாவவிட்டுட்டு போயிட்டாரு (சிரிக்க விட்டுட்டு என்பது பொருள் இங்க ;-))))).
இதான் இதான், சில நேரங்கள்ளெ கிடைக்கற்கரிய பழனி பஞ்சா... அடெ வுடுங்க பொன்ஸூ சொல்ல வந்ததெ சொல்லிப்புடறேன்... :-))
தெகா.
பதிவுகள் போடறதும், பின்னூட்டங்கள் வாங்கிறதும் பிடிக்குது'ங்க.
இந்த வார நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்! பின்னூட்டம் இடுவதற்காக மட்டுமே ஒரு பிளாக்கர் அக்கவுண்டு உருவாக்கியிருக்கும் சிலரில் பட்டியலில் நான் நேற்றுத் தான் சேர்ந்தேன் :-D அதுவும் உங்களைப் போன்றவர்கள் எங்களைப் போன்றவர்களை பிளாக்கர் கணக்கு இல்லாமல் பின்னூட்டமிட அனுமதிப்பதில்லை என்பதால் (அப்பாடா சொல்ல வந்தத சொல்லியாச்சு ;-)) முன்பெல்லாம் வலைப்பூக்கள் வாசிக்கவும் மாட்டேன், என்றாவது வாசித்தாலும் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஓடிவிடுவேன். இப்போதுதான் பின்னூட்டமிடும் ஆவல் வந்திருக்கிறது. என்றாவது வலைப்பூவில் பதிவுகள் இடும் ஆர்வம் வருமா... காலம் தான் சொல்லும்.
மனதை பாதிக்கும் விஷயங்களையோ, அல்லது பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களையே பதிவு செய்யத்தோன்றி செய்துவருகின்றேன்... மற்றபடி பதிவு எழுதவேண்டுமென்று கைநடுங்கும் நிலைக்கு வரவில்லை :-)
பின்னூட்டங்களைப்பொருத்தவரை... இடுவதில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை.., எனது ஆர்வமெல்லாம், புதிதாய் கருத்துக்களை தெரிந்து கொள்வது, பல கோணங்களில் இருந்து ஒரே விஷயத்தை ஆராய்வது என.. சுவாரசியமாய் தெரிந்து கொள்வதில்தான்.. மிகவும் பிடித்த கட்டுரையாய் இருந்தாலும் நிறைய முறை பின்னூட்டம் இட முடியா நிலமை எனக்கு, கருத்தை எதிர்க்கும் கட்டுரையாய் இருப்பின் முடிந்தவரை பின்னூட்டமிட்டுவிடுவேன்..
இந்த பின்னூட்டக்கூத்தில் பலருடைய நல்ல பதிவுகள் காணாமல் போய், வெட்டி அரட்டை பதிவுகளே முண்ணணியில் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது :-( , இதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.. பலரையும் போய்ச்சேர வேண்டும் என நினைத்த கட்டுரை யாரும் படிக்காமல், சும்மாய் இட்ட பதிவில் பின்னூட்டங்கள் குவிந்த கதையும் உண்டு...
மனதை பாதிக்கும் விஷயங்களையோ, அல்லது பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கும் விஷயங்களையே பதிவு செய்யத்தோன்றி செய்துவருகின்றேன்... மற்றபடி பதிவு எழுதவேண்டுமென்று கைநடுங்கும் நிலைக்கு வரவில்லை :-)
பின்னூட்டங்களைப்பொருத்தவரை... இடுவதில் அவ்வளவு ஆர்வம் இருந்ததில்லை.., எனது ஆர்வமெல்லாம், புதிதாய் கருத்துக்களை தெரிந்து கொள்வது, பல கோணங்களில் இருந்து ஒரே விஷயத்தை ஆராய்வது என.. சுவாரசியமாய் தெரிந்து கொள்வதில்தான்.. மிகவும் பிடித்த கட்டுரையாய் இருந்தாலும் நிறைய முறை பின்னூட்டம் இட முடியா நிலமை எனக்கு, கருத்தை எதிர்க்கும் கட்டுரையாய் இருப்பின் முடிந்தவரை பின்னூட்டமிட்டுவிடுவேன்..
இந்த பின்னூட்டக்கூத்தில் பலருடைய நல்ல பதிவுகள் காணாமல் போய், வெட்டி அரட்டை பதிவுகளே முண்ணணியில் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது :-( , இதில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்.. பலரையும் போய்ச்சேர வேண்டும் என நினைத்த கட்டுரை யாரும் படிக்காமல், சும்மாய் இட்ட பதிவில் பின்னூட்டங்கள் குவிந்த கதையும் உண்டு...
உங்களின் நட்சத்திர பதிவுகள் அனைத்தும் அருமை... திரைப்படம் சம்பந்தப்பட்ட பதிவில், மூன்று வகையான ஆடியன்ஸை பற்றி குறிப்பிடவில்லை, அவர்கள் எப்படி திரைப்படங்களின் வெற்றியை நிர்ணயிக்கின்றார்கள் என்றும் குறிப்பிடவில்லையே..!!!
பின்னூட்டத்தை பற்றி இட்ட பின்னூட்டத்துல இவ்வளவு repetition-ஆ.. மன்னிச்சிருங்க...!! என்ன ஆச்சுனே தெரியல :-(
பின்னூட்டம் இடுவது,
படிப்பதிலும்,பதிவு போடுவதிலும்,போட்டது வந்ததா என்று பார்ப்பது,வந்ததற்கு பதில் போடுவது எல்லாமே பிடிக்கிறது.எல்லொரும் என்னை விட மிகத் தெளீவான இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதினால் வேறு உலகத்தை எட்டிப் பார்க்கும் அனுபவம் தமிழ்மணத்தில் கிடைக்கிறது.
பாடுவது பிடிக்குமா, பாட்டு கேட்பது பிடிக்குமா என்பது போல இருக்கிறது. பாடுவதற்கு திறமை வேண்டும். கேட்பதற்கு இரசனை வேண்டும்.
நான் பதிவுகளை படிப்பதையே முதல் விருப்பமாக கொண்டுள்ளேன். நேரமிருந்தால் பின்னூட்டமிடுவேன்; பின்னூட்டமிட்ட பதிவுகளை பின்தொடர்வேன். நேரமும் விதயமும் கிடைத்தால் பதிவிடுவேன்.
Post a Comment